நிலவே என்னிடம் நெருங்காதே-56

 


அத்தியாயம்-56

லுவலக அறைக்கு சென்ற அதிரதன்,  அங்கிருந்த இருக்கையில் அமர்ந்தவன்,  அவன் எதிரில் இருந்த இருக்கையை காட்டி

“ம்..” என்றான் பார்வையால் நிலாவை அமரும்படி சைகை செய்து..

அவளும் இயல்பாக அந்த இருக்கையை நகர்த்தி அவனுக்கு எதிரில் அமர்ந்தவள், அவனை நேராக பார்க்க

“ஏய் பட்டிக்காடு... இந்த தொழிலை பற்றி உனக்கு என்ன தெரியும்? அவர்தான் அறிவு இல்லாமல் உன்னை இந்த தொழிலில் இறங்க சொல்கிறார் என்றால் நீயாவது மறுத்து சொல்ல வேண்டாமா? “ என்றான் அவளை பார்த்து முறைத்தவாறு..

“எனக்கும் மறுத்து சொல்ல ஆசைதான் ஜமீன்தாரே...!  நான் பாட்டுக்கு எந்த தொல்லையும் பொறுப்பும் இல்லாமல் ஹாயா யாழி குட்டி கூட கதை அடிச்சுகிட்டு ஜாலியா விளையாண்டுகிட்டு பொழுது போக்க ஆசைதான்...

அதை விட்டுட்டு இப்படி என்னேரமும் டென்ஷனோடு இருக்கற இந்த பிசினஸ் பொறுப்பை யாராவது ஏற்பார்களா?

ஆனால் நான் இதை,  இந்த பொறுப்பை ஏற்றுகொள்ளவில்லை என்றால் தேவநாதன் தாத்தா தான் இதை பார்த்துக்கணும்..

துள்ளி குதிக்கும் இரத்தம் பாயும் இந்த இளம் வயதில் நமக்கு இந்த டென்ஷன் எல்லாம் ஏற்றி கொள்ள பிடிக்கவில்லை என்றால் கொள்ளு பேரன் பேத்தியுடன் விளையாடும் வயதில் அவர் தலைமீது இவ்வளவு பெரிய சுமையை ஏற்றி வைக்கலாமா?

அதனால்தான்,  அவர் கஷ்டபடறதை தாங்காமல்தான் அவர் கேட்ட பொழுது நானும் ஒத்துக்கொண்டேன்...உங்களுக்கு வேணா தாத்தாவை பற்றி அக்கறை இல்லாமல் இருக்கலாம்.

ஆனால் நான் அப்படி இல்லை.. செஞ்சோற்று கடனுக்காக அவரை அக்கறையாக பார்த்துக்கணும்.. அவர் கேட்ட உதவியையும் செஞ்சுதான் ஆகணும்..  

இப்ப சொல்லுங்க..நீங்க இந்த பொறுப்பை ஏத்துக்கறீங்களா? நான் இப்பவே இதில் இருந்து விலகிக்கறேன்.. “ என்று கண் சிமிட்டி தலை சரித்து சிரித்தவாறு செக் வைத்தாள் அந்த அழுத்தகாரனுக்கு...

“ஆங்.. அங்க சுத்தி இங்க சுத்தி அடி மடிலயே கை வைக்கிறாளே...!  வாழைபழத்தில் ஊசி ஏற்றுவது போல எவ்வளவு நாசுக்காக என்னை அந்த தாத்தா விரித்த வலையில் சிக்க வைக்க பார்க்கிறாள்.. கெட்டிக்காரிதான்.. “ என்று உள்ளுக்குள் மெச்சி கொண்டான் அதிரதன்..!  

ஆனாலும் தன் பிடிவாதத்தை விட்டு கொடுக்காமல்

“நான் அன்று சொன்னதுதான் இன்றும்.. எனக்கும் அந்த ஜமீனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. என் பெற்றவரை பெற்ற பாவத்துக்கு அந்த ஜமின்தாரை இந்த வீட்டில் சேர்த்திருக்கிறேன்..

மற்றபடி அவர் மீது எனக்கு இருக்கிற கோபம் அப்படியேதான் இருக்கிறது... அது ஒரு போதும் மறையாது.. உன்மீதும் தான்.. அதனால் அந்த தொழிலை என்னால் ஏற்று கொள்ள முடியாது..

நீயே அந்த தலைவலியை அனுபவி “ என்று உதட்டை ஏளனமாக வளைத்து நக்கலாக சிரித்தான்..

“ஓகே டன் ஜமீன்தாரே.. எப்படியோ களத்துல இறங்கறதுனு ஆய்டுச்சு... இதையும்தான் பார்த்துடலாம்..எத்தனையோ தலைவலியை பார்த்தாச்சு.. இந்த புது தலைவலியையும்தான் அனுபவிச்சு பார்க்கலாமே..  சரி நீங்க ஆரம்பிங்க.. “ என்றாள் குறுநகையுடன்...

அதை கேட்டு கொஞ்சமாய் திகைத்தாலும் கொஞ்சமாய் அவளை முறைத்துவிட்டு

“சரி  இந்த தொழிலை பற்றி உனக்கு என்ன தெரியும்? தெரிஞ்சதை சொல்லு பார்க்கலாம்.. “ என்றான் அவளை சோதித்து பார்க்க எண்ணி

“உங்க அளவுக்கு பெருசா தெரியாது ஜமீன்தாரே... கொஞ்சமா தாத்தா இந்த தொழிலில் என்ன பண்றார் னு தெரியும். “ என்று ஆரம்பித்தவள்

அவர் அந்த பிசினஸ் ஐ எப்படி ஆரம்பித்தார்,  இந்த தொழிலில் என்னென்ன பிரிவுகள் இருக்கின்றன? எந்த மாதிரியான ஆடைகள் ஏற்றுமதி செய்கிறார்கள் எங்கெங்கு கிளைகள் இருக்கின்றன, யாரெல்லாம் முக்கியமான வாடிக்கையாளர்கள் என்று குறுகிய நேரத்தில் அனைத்தையும் பட்டியலிட அதை கேட்டு கண்களை பெரிதாக விரித்து ஆச்சர்யத்தில் வாயை பிளந்தான் அதிரதன்..

இவள் சொல்லுவதெல்லாம் அத்தனையும் சரியே. இதையெல்லாம் அவன் தெரிந்து கொள்ள, கற்று கொள்ள மூன்று வருடங்கள் ஆனது..

அப்பொழுதுமே ஒவ்வொரு பிரிவில் இருக்கும் நெளிவு சுழிவுகளை தெரிந்து கொள்ள மேலும் இரண்டு வருடங்கள் ஆனது.. அதன் பின் தான் அவனால் எந்த ஒரு முடிவையும் அவனாக எடுக்க முடிந்தது

அப்பவுமே அதில் ஆயிரத்தெட்டு சந்தேகங்கள் இருக்கும். அதையெல்லாம் தாத்தாவிடம் கேட்டு தெளிவுபடுத்தி கொண்டுதான் அடி எடுத்து வைத்தான்.. அப்படி இருக்க, அந்த தொழிலை பற்றி இவள் அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து விளக்கமாக சொல்ல அதிசயித்து போனான்...

“என்ன ஜமீன்தாரே! இப்படி பெரிய சாஸர் மாதிரி கண்ணை திறக்கறீங்க.. நானே உள்ள போய்டுவேன் போல.. ஆனாலும் இந்த முழி உங்களுக்கு க்யூட் ஆ இருக்கு பா.. “ என்று கண் சிமிட்டி குறும்பாக சிரித்தாள் நிலா..

அவனோ தன் தலையை உலுக்கி கொண்டு அவளை செல்லமாக முறைத்தாலும் மனதுக்குள் சிறு குறுகுறுப்பு அவள் தன்னை ரசித்து பார்த்து அவன் முழியை பற்றி ரசித்து சொன்னது..

மீண்டுமாய் தன் தலையை தட்டி கொண்டவன் அவளை மட்டம் தட்ட எண்ணி

“ஹா ஹா ஹா இதெல்லாம் தான் எங்க வெப்சைட்ல யே இருக்குமே.. அதை படிச்சுட்டு எல்லாம் தெரிஞ்ச மாதிரி பீத்திக்காத.... சரி.. இப்ப அவசரமா இன்னைக்கு செய்ய வேண்டிய வேலையை சொல்றேன்.. அதை ஒழுங்கா சரியா செய்.. ஆமா உன்கிட்ட லேப்டாப் இருக்கா?

“ஓ.. யெஸ்..  இருக்கே.. தாத்தா போனவாரமே வாங்கி கொடுத்துட்டார்.. “ என்றாள் உற்சாகமாய்..

“இந்த ஜமீன்தார் ஒரு முடிவோடதான் இருக்கார் போல... முன்கூட்டியே இவளை இந்த கிணத்துல இறக்க எல்லா ஏற்பாட்டையும் பண்ணி வச்சிருக்காரோ.. ? எப்படியோ போய் தொலையட்டும்.. “ என்று உள்ளுக்குள் கருவியவன் மீண்டுமாய் அவளை பார்த்தவன் அன்று அவள் செய்ய வேண்டிய வேலைகளை  பட்டியலிட்டான்..

கூடவே அவன் நிறுவனங்களை பற்றிய தகவல்களை ஆன்லைன் லயே நிறுவனத்தின் இணைய தளத்திளயே தெரிந்து கொள்ளவும் அவனே வடிவமைத்து வைத்திருந்த ஒவ்வொரு அப்ளிகேசனையும் எப்படி பயன்படுத்துவது என்று சொல்லி விளக்க நிலாவும் சிரத்தையாக அதை தன் குறிப்பேட்டில் கவனமாக குறித்து கொண்டாள்..

அடுத்த ஒரு மணி நேரத்தில் எல்லாம் விளக்கிவிட அவளும் தன் குறும்புதனத்தை விடுத்து சில சந்தேகங்களை கேட்டு தெளிவு படுத்தி கொண்டாள்..

அப்பொழுது மணியை பார்த்தவன் அவன் அலுவலகத்துக்கு செல்ல நேரம் ஆகவும்

“சரி... இன்னைக்கு இது மட்டும் போதும்... நான் சொன்ன வேலையை செய். உனக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் எனக்கு கால் பண்ணு.. இல்லைனா உன் கூட்டு களவானி அந்த ஜமீன்தார்கிட்டயே கேட்டுக்க.. பி கேர்புல்.. “ என்றான்...

“யெஸ் பாஸ்... “ என்று அவளும் எழுந்து விறைப்பாக  நின்று ஒரு சல்யூட் ஐ வைக்க அவனையும் மீறி பொங்கி சிரித்தான் ரதன்...

அவன் சிரிப்பையே ஒரு நொடி இமைக்க மறந்து ரசித்தாள் அவன் மனையாள்..

“எவ்வளவு கம்பீரமாக இருக்கு இவன் சிரிப்பு... இப்படி வாய் விட்டு சிரித்தால் எவ்வளவு நல்லா இருக்கும்... அதை விடுத்து எப்ப பார் சிடுசிடுனு எரிஞ்சு விழுந்து கிட்டே இருக்கானே.. ! “ என்று எண்ணி கொண்டிருக்க

“ஏய்... என்னை சைட் அடிச்சது போதும்.. வேற ஏதாவது சந்தேகம் இருக்கா? “ என்றான் குறும்பாக சிரித்தவாறு...

அவன் தன்னை கண்டு கொண்டதை எண்ணி அவளும் லேசாக கன்னம் சிவந்து மானசீகமாக தன் தலையில் ஒரு குட்டு வைத்தவள்

“சந்தேகம் இல்லை பாஸ்.. ஒரு சின்ன ரிக்வெஸ்ட்... “ என்றாள் தயக்கத்துடன் இழுத்தவாறு...

“என்ன? “ என்று அவன் புருவத்தை உயர்த்தி கேட்க

“வந்து... நீங்க இப்படி சிரிச்சா எவ்வளவு கம்பீரமா செமயா க்யூட் ஆ இருக்கு தெரியுமா? ... இப்படி வாய் விட்டு சிரித்தால் எவ்வளவு நல்லா இருக்கும்...

உங்க ஆபிஸ்ல எல்லா பொண்ணுங்களும் உங்களை சைட் அடிச்சுகிட்டே இன்னும் ஆர்வமா வேலை பார்ப்பாங்க.. அதை விடுத்து எப்ப பார் சிடுசிடுனு சிடுமூஞ்சி மாதிரி எரிஞ்சு விழுந்து கிட்டே இருந்தா நல்லாவே இல்ல... இந்த மாதிரி அப்பப்ப கொஞ்ஞ்ஞ்ஞ்சம் சிரிரிரிரிங்க பாஸ்.. “ என்று ராகமாய் இழுத்து கண் சிமிட்டி சிரிக்க

“அடிங்க.. “ என்று அவன் கையை ஓங்கியவாறு அவள் அருகில் வர

“நிலா... சிங்கம் எழுந்திருச்சிருச்சு... விடு ஜூட்... “என்று தன் லேப்டாப் ஐ மடக்கி மார்போடு அணைத்தவாறு சிரித்தவாறு சிட்டாக ஓடி மறைந்தாள்..

அவளின் அந்த சிறுபிள்ளைதனமான குறும்பை ரசித்து வாய்விட்டு சிரித்து கொண்டே இடம் வலமாக தலையை ஆட்டி கொண்டு தன் முன்புறம் இருந்த கேசத்தை கோதி விட்டவாறு உதட்டில் உறைந்த புன்னகையுடன் தன் அறைக்கு சென்று அலுவலகத்துக்கு கிளம்பினான் ரதன்..

சிறிது நேரத்தில் அவன் அறைக் கதவை தட்டும் ஓசை கேட்க

“யெஸ் கம் இன்.. “ என்றான் மிடுக்கான குரலில்...

கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தாள் நிலா...

“ஏய்... நீ எதுக்கு இப்ப இங்க வந்த? நான்தான் நீ செய்ய வேண்டிய வேலை எல்லாம் சொல்லிட்டனே.. போய் அதை செய்.. “ என்று விரட்டினான்..

“அத விடுங்க ஜமீன்தாரே.. அதெல்லாம் ஜுஜுபி... ஒரு மணி நேரத்துல முடிச்சிடுவேன்.. இப்ப உங்களை கவனிக்க சொல்லி அத்தை என்னை மேல துரத்தி விட்டுட்டாங்க.. அதான் நானும் வந்தேன்... எனி ஹெல்ப்? “ என்றாள் சிரித்தவாறு

“நீ ஒரு ஆணியையும் புடுங்க வேண்டாம்.. இங்க நீ புடுங்கறமாதிரி எந்த ஆணியும் இல்ல.. அதனால நீ முதல்ல கீழ போ.. “ என்றான் எரிச்சலுடன்..

“ஹ்ம்ம்ம் ஆணி இல்லனா என்ன பாஸ்.. அதை அடிச்சுட்டு அப்புறம் புடுங்கறேன்.. எப்பூடி? “ என்று தலை சரித்து குறும்பாக சிரித்தாள்..

“ஏய்... என்னை டென்ஷன் படுத்தணும்னு நீ ஒரு முடிவோடதான் வந்திருக்க..”

“நோ.. நோ.. நோ... நான் நீங்க கிளம்பறதுக்காக உங்களுக்கு உதவி செய்ய வந்திருக்கேன்..” என்றாள் பாவமாக முகத்தை வைத்து கொண்டு..

“நான் என்ன ஸ்கூல் போற  பையனா?  எனக்கு யூனிபார்ம் ஐ போட்டு இன் பண்ணி விட்டு ஷு மாட்டிவிட நீ வந்திருக்க? “ என்று முறைத்தான்.. அதை கேட்டு அவளோ

களுக் என்று கிளுக்கி சிரித்தாள்...அதை கண்டு கடுப்பானவன்

“ஏய். இப்ப எதுக்கு சிரிக்கிற? நான் என்ன ஜோக் ஆ சொன்னேன்? “ என்றான் அதே சிடுசிடுப்புடன்...

“ஹா ஹா ஹா.. ஜோக்கேதான் ஜமீன்தாரே..!  நீங்க சொன்ன மாதிரி உங்களுக்கு ஒரு அரைக்கால் ட்ராயர் ஐ போட்டு சட்டையை இன் பண்ணி கழுத்துல டை கட்டி முதுகுல ஒரு ஸ்கூல் பேக் ஐ மாட்டி நீங்க ஸ்கூலுக்கு போனா எப்படி இருக்கும்னு கற்பனை பண்ணி பார்த்தேன்...

சிரிப்பு வந்திடுச்சு.. ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது.. அந்த ஸ்கூல் ட்ரெஸ்லயும் க்யூட் ஆ இருந்திங்க ஜமீன்தாரே..அதுவும் மீசை வச்ச ஸ்கூல் பையன் கெட்டப் ல செமயா இருந்திங்க...  “ என்றாள் மீண்டும் கலகலவென்று சிரித்தவாறு...

அதை கேட்டு அவனுக்குமே அவனையும் மீறி சிரிப்பு வந்தது.. மெல்ல புன்னகைத்து கொண்டவன் தன் சிரிப்பை மறைக்க வேற பக்கம் திரும்பி கொண்டான்...

“சிரிச்சது போதும்... நீ முதல் ல கீழ போ.. “ என்று மீண்டும் விரட்டினான்..

ஏனோ அவளை அருகில் வைத்திருக்க அவனுக்கு ஒரு மாதிரி இருந்தது..

இரவில் அவள் அருகில் இருந்தாலும் ஒன்றும் தெரிவதில்லை. ஆனால் பகலில் தனி அறையில் இப்படி பக்கத்தில் அவளை வைத்துகொண்டு அதுவும் அவன் ட்ரெஸ் பண்ணுவது என்னவோ போல இருந்தது..

அதனாலயே அவளை விரட்டிவிட முயன்று கொண்டிருந்தான்..

“ஐயோ ஜமீன்தாரே..! நம்ம ரெண்டு பேரையும் ஆதர்ஷ தம்பதிகளா பார்க்கணும்னு என் மாமியார் அதான் உங்க அம்மா ஆசைபடறாங்க.

புருஷன் ஆபிஸ்க்கு கிளம்பினா பொண்டாட்டி கூடவே இருந்து எல்லாம் எடுத்து கொடுத்து உதவி செய்யணுமாம்.. அதுதான் ஒரு நல்ல பொண்டாட்டியோட கடமையாம்...

அதனால் என்னை இங்க துரத்தி விட்டுட்டாங்க.. நான் மட்டும் தனியா  இப்ப திரும்பி போனா என் மாமியார் மனசு கஷ்டபடும்.. அதனால் நான் இப்படி ஓரமா உட்கார்ந்துக்கறேன்.. நீங்க பாட்டுக்கு கிளம்புங்க.. நீங்க ரெடியானதும் உங்க கூடவே நானும் வந்திடறேன்..

அப்ப பெரியவங்களும் ஹேப்பி.. அத பார்த்து இந்த நிலாவுக்கும் ஹேப்பி.. எப்பூடி? “ என்று சிரித்தவாறு அருகில் இருந்த சோபாவில் காலை மடக்கி வைத்து சட்டமாக அமர்ந்து கொண்டு அவனை பார்த்தவள் உடனே முகம் சுளித்தாள்..

“ஐய. என்ன ஜமீன்தாரே.. இப்படி ட்ரெஸ் பண்ணி இருக்கிங்க..? கொஞ்சம் கூட மேட்ச் ஏ ஆகலை.. “ என்றாள் முகம் சுளித்தவாறு..

“ஏய்.. இதுக்கு என்ன? எல்லாம் நல்லாதான் செட் ஆகுது.. “ என்றான் தன்னை மேலிருந்து கீழாக பார்த்தவாறு..

“ம்ஹூம்... இந்த பேண்ட்க்கு இப்படி அடிக்கற கலர் ல ஷர்ட் சுத்தமா செட் ஆகலை.. உங்களுக்கு கொஞ்சம் கூட ட்ரெஸ்ஸிங் சென்சே இல்லை.. “

என்று முகத்தை சுளித்தவாறு சோபாவில் இருந்து எழுந்தவள் நேராக அவன் வாட்ரோட் க்கு சென்று அங்கே தொங்கி கொண்டிருந்த அவனுடைய ஆடைகளில் தேடி அழகான லைட் ப்ளு கலர் ஷர்ட் ஐ எடுத்தாள்...

“பாஸ்.. இந்த ஷர்ட் ம் இந்த ப்ளேசரும் போடுங்க.. சூப்பரா இருக்கும்.. கூடவே இன்னைக்கு உங்க ஆபிஸ்க்கு க்ளைன்ட் விசிட்க்கு வர்ற அந்த நகைக்கடை பார்ட்டிக்கு லைட் ப்ளூனா ரொம்ப புடிக்குமாம்..

அதனால இப்படி கண்ணை பறிக்கிற ஆளை அடிக்கிற கலர்ல போடாம இந்த லைட் ப்ளூ ஷர்ட் ஐ போடுங்க... அப்படியே உங்களை பார்த்து மயங்கிட போறார்..

இந்த ப்ராஜெக்ட் ஐ உங்களுக்கே கொடுத்துடுவார்.. “ என்று கண் சிமிட்டி அவள் எடுத்திருந்த அந்த ஷர்ட் ஐ அவன் கையில் திணித்தாள்..

அவனோ ஆச்சர்யத்தில் இன்னுமாய் திகைத்து கண்களை அகல விரித்திருந்தான்..

அவனின் அந்த அகன்ற விழிகளை,  ஆச்சர்ய பார்வையை ஓரக்கண்ணால் கண்டு  ரசித்தவள்

“ஐய.. போதும் பாஸ்.. என்னை சைட் அடிச்சது.. இப்ப ஆபிஸ்க்கு நேரம் ஆச்சு.. அந்த நகைக்கடை பார்ட்டிக்கு பஞ்சுவாலிட்டி ரொம்ப முக்கியம்.. சொன்னா சொன்ன நேரத்துக்கு வந்திடுவார்.. சீக்கிரம் கிளம்புங்க..

அப்புறம் நீங்க இப்படி முழிக்கிறது க்யூட் ஆ இருக்குனு சொன்னதால அடிக்கடி இப்படி முழிக்காதிங்க பாஸ்.. சின்ன புள்ள தலை சுத்தி உங்களிடம் மயங்கி போய் விழுந்துட போறேன். “ என்று கண் சிமிட்டி சிரிக்க அவனோ தன்னை சமாளித்து கொண்டு

“வர வர உனக்கு ரொம்ப வாய் ஜாஸ்தி ஆய்டுச்சு பட்டிக்காடு.. “ என்று அவள் தலையில் செல்லமாக குட்டு வைத்தான்...

“அவுச்.... ஆ வலிக்குது ஜமீன்தாரே..! வளர்ற புள்ளைய இப்படி தலையில கொட்டுனா அப்புறம் நான் வளராம போய்டுவேன்..உங்க ஹைட் க்கு பொருத்தம் இல்லாம போய்டுவேன்.. “ என்று தலையை தேய்த்தவாறு கண்களை சுருக்கி செல்லமாக சிணுங்கினாள்..

“ஹா ஹா ஹா.. நீ இவ்வளவு வளர்ந்தது போதும்.. இப்பவே என் தோளுக்கு இருக்க.. இதுக்கு மேல வளர்ந்திடாத தாயே.. “ என்று கிண்டலாக சொல்ல

“அப்படியா..?  இருங்க பார்க்கிறேன்.. “ என்று அவன் அருகில் நெருங்கி நின்றவள் அவள் தோளை அவன் தோளோடு ஒட்டி வைத்து இருவருக்கும் உயரத்தில் வித்தியாசம் பார்த்தவள்

“ப்ச்.. இல்ல ஜமீன்தாரே... ஒரு இன்ச் உங்க தோளுக்கு கீழதான் இருக்கேன்... எப்படியாவது உங்க தோளுக்கு மேட்ச் ஆ வந்திடணும்.. “ என்று கிளுக்கி சிரிக்க அவனுக்கோ உள்ளே எகிற ஆரம்பித்தது...

அவ்வளவு அருகாமையில் திடீர் என்று கிட்ட வந்து ஒட்டி நின்றவளின் மென்மையான பட்டு மேனி அவன் மீது உரச அவன் உள்ளே மின்சாரம் பாய்ந்ததை போல திடீர் ஷாக்...

உடல் எல்லாம் இனம் புரியாத பரவசம் பரவ, அதற்குள் தன்னை கட்டுபடுத்தி கொண்டவன்

“ஏய்.. தள்ளி நில்.. “      என்று முறைத்து அவளை விட்டு ஒரு அடி தள்ளி நின்று கொண்டான்...

“இதோடா... என் புருஷனுக்கு வெட்கம் கூட வருது... என்ன ஜமீன்தாரே பொம்பள புள்ளை மாதிரி இப்படி நெளியறீங்க.. “ என்று சிரித்தாள் நிலா..

“ஏய்... நீ முதல்ல வெளில போ.. வளவளனு பேசிகிட்டே இருந்தால் நான் எப்படி கிளம்பறது..?  எனக்கு நேரம் ஆச்சு..நான் சீக்கிரம் கிளம்பணும்.. “ என்று சிடுசிடுத்தான்.

“ஒகே டன் பாஸ்.. இனிமேல் வாயே பேசமாட்டேன்.. நீங்க கிளம்புங்க.. “ என்றவள் தன் வாய் மீது கை வைத்து பொத்தி கொண்டு மறுபக்கம் திரும்பி நின்று கொண்டாள்..

அவனுமே அவளின் அந்த செய்கையில் வாய் விட்டு சிரித்தவாறு அவன் முன்பு அணிந்திருந்த ஷர்ட் ஐ கழட்டிவிட்டு அவள் எடுத்து கொடுத்த ட்ரெஸ் ஐ அணிந்து கொண்டு மற்ற பார்மாலிட்டிஸ் ஐ முடித்து அந்த ப்ளேசரை அணிந்து பார்க்க அவனுக்கே வித்தியாசம் தெரிந்தது...

அந்த ட்ரெஸ் பெர்பெக்ட் மேட்ச் ஆக இருந்தது...

அடுத்து டையை எடுத்து கட்டி கொண்டு கையில் இருந்த பட்டனை போட்டவாறு

“இப்ப ஓகே வா? “ என்றான்..

அவன் குரல் கேட்டு அவளும் திரும்பியவள் அப்படியே அசந்து நின்றாள்.. அவ்வளவு கம்பீரமாக நின்றிருந்தான் அவளவன்... அப்படியே அவனை இறுக்கி கட்டி கொள்ள துடித்தது பெண் உள்ளே..

ஆனாலும் தன்னை கட்டுபடுத்தியவள் அவனை ஏற இறங்க பார்த்து

“வாவ்.. செமயா இருக்கிங்க ஜமீன்தாரே.. இன்னைக்கு உங்க ஆபிஸ்ல இருக்கிற பொண்ணுங்க எல்லாம் க்ளீன் போல்ட்.. எத்தனை பேர் வந்து ப்ரபோஸ் பண்ண போறாங்களோ..? “ என்றாள் கண் சிமிட்டி சிரித்தவாறு..

அவனும் மெல்ல வெட்கபட்டு புன்னகைத்தாலும் தன்னை மறைத்து கொண்டவன்

“ஆமா... அந்த க்ளைன்ட் விசிட் பற்றி உனக்கு எப்படி தெரியும்? “ என்றான் ஆர்வமாக..

“ஹ்ம்ம்ம் அதெல்லாம் எப்படியோ தெரிஞ்சுகிட்டேன்.. இப்ப அதுவா முக்கியம்?

அப்புறம் ஜமீன்தாரே..! ஒரு சின்ன சஜஷன்.. என்னதான் நீங்க திறமையானவர்.. உங்ககிட்ட நல்ல திறமையான எம்ளாய்ஸ் இருந்தாலும் இந்த மாதிரி பெரிய க்ளைன்ட் ஓட ப்ராஜெக்ட் ஐ வேற ஒரு பெரிய நிறுவனத்திடம்  இருந்து நம்ம நிறுவனத்திற்கு மாத்தறாங்கனா அது கிடைக்கவும் தக்க வச்சுக்கவும் ரொம்பவுமே கவனமா இருக்கணும்....

இங்லூடிங் ட்ரெஸ்ஸிங்...உங்க பாடி லாங்குவேஜ் ஏன் உங்க ஸ்மைல் கூட அந்த க்ளைன்ட் ஐ இம்ப்ரெஸ் பண்ணனும்.. இந்த மாதிரி பெரிய பெரிய ஆளுங்க எல்லாம் சின்ன சின்ன விசயத்தில் தான் அதிகமா ஆழ்ந்து பார்ப்பாங்க.. அதனால் கொஞ்சம் கவனமா இருங்க..

முக்கியமா இந்த மாதிரி வாடிக்கையாளரை பற்றி கொஞ்சம் பெர்சனலாவும் தெரிஞ்சுக்கங்க.. அவருக்கு என்ன பிடிக்கும் பிடிக்காது இப்படி ஒரு குட்டி ஸ்டடி பண்ணிகிட்டால் அவரிடம் பேச உங்களுக்கு ஈஸியா இருக்கும்..

அந்த நகைக்கடை பார்ட்டி பற்றிய டீடெய்ல்ஸை உங்க வாட்ஸ்அப் க்கு அனுப்பி வச்சிருக்கேன்.. ஒரு க்ளான்ஸ் பார்த்துக்குங்க.. “ என்றாள் புன்னகைத்தவாறு

அதை கேட்டு இன்னுமாய் ஆச்சர்யமானான் ரதன்.. அவள் சொல்வது எல்லாம் 200% கரெக்ட் தான்.. அவனுமே ஆரம்பத்தில் அதை எல்லாம் பயன்படுத்தியவன்.. இப்பொழுது கொஞ்சம் வளர்ந்து விடவும் அவனுக்குள்ளே சிறு அலட்சியம் வந்து விட்டதோ..

தனக்கு எல்லாம் தெரியும். தன்னிடம் திறமை இருக்கிறது.. எல்லாரும் தன் திறமையை தேடி தானாக வருவார்கள் என்ற ஒரு அலட்சியம் வந்துவிட்டதோ என்று அப்பொழுதுதான் உறைத்தது...

அவனும் மெல்ல புன்னகைத்து

“ஸ்யூர்.. பாய்ன்ட்ஸ் நோட்டட் ஜமீன்தாரினி அம்மையாரே... “ என்றான் அவனும் கண் சிமிட்டி...

அதில் ஒரு நொடி திகைத்தாலும் தன்னை மறைத்து கொண்டவள்

“ஐய.. இந்த பட்டம் எனக்கு வேண்டாம் பா...என்னவோ பழைய பஞ்சாங்கம் மாதிரி இருக்கு.. நானெல்லாம் யூத் பா...“ என்று கிளுக்கி சிரித்தவள்

“சரி... நேரமாச்சு..  இப்ப கிளம்புங்க.. ஆல் தி பெஸ்ட்.. “ என்று கை நீட்ட அவனுமே அவள் கைபிடித்து குலுக்கினான்...

அவளின் மென் கரம் தந்த அந்த அழுத்தத்தில் அவனுக்குள் அப்படி ஒரு உத்வேகம்.. உற்சாகம், புதுவெள்ளம் பாய்ந்ததை போல இருந்தது..

உதட்டில் தானாய் ஒரு மென்னகை இன்னுமாய் வந்து ஒட்டி கொண்டது..அதை ரசித்த படி வாயிலை நோக்கி செல்ல முயல,

“கொஞ்சம் இருங்க பாஸ்... டை மட்டும் கொஞ்சம் கோணலாக இருக்கு.. “ என்றவள் அவன் அருகில் வந்து அவன் கழுத்தில் இருந்த டையை சரி பண்ணி விட,

அவ்வளவு நெருக்கத்தில் பெண்ணவள் அவனை ஒட்டி நின்றதில் அவள் சிற்றிடை  அவன் கை விரல் தொடும் நெருக்கத்தில் இருக்க மீண்டும் அவன் உள்ளே புயல் அடிக்க அவள் இடை தழுவ அவன் கரம் பரபரத்தது..

முயன்று கஷ்டபட்டு தன் கரங்களை கட்டு படுத்தியவன் அதை தன் பேண்ட் பாக்கெட்டில் விட்டு பத்திரபடுத்தி கொண்டான்...

அவளும் அந்த டையை சரி பண்ணிமுடித்து கொஞ்சம் தள்ளி நின்று இடுப்பில் கை வைத்தவாறு அவனை ஏற இறங்க பார்த்தவள்

“ஹ்ம்ம்ம் இப்ப இன்னும் பெர்பெக்ட்.. சூப்பர்.. அப்படியே ஹீரோ மாதிரி இருக்கீங்க.. என் புருஷன் எம்புட்டு அழகு..! “ என்று அவனுக்கு நெட்டி முறித்தாள்..

அதை கண்டு முறைத்தாலும் உள்ளுக்குள் தானாய் பரவியது இன்னுமாய் ஒரு இதமும் உற்சாகமும்.. ..

இருவரும் முகத்தில் புன்னகையுடன் படி இறங்கி வர, அதை கண்ட பெரியவர்களுக்கு கண் குளிர்ந்து போனது..

ஜாடிக்கு ஏத்த மூடியாய் இருவரும் அவ்வளவு பொருத்தமாக இருக்க இருவரும் சிரித்தபடி இறங்கி வர,  அப்படியே பார்த்து கொண்டு இருக்கவேண்டும் போல இருந்தது...

தன் பேரனுடன் சிரித்த படி இறங்கி வந்த நிலாவை கண்ட ஜமீன்தார் புன்னகையுடன் கண் சிமிட்டி தன் கட்டை விரலை உயர்த்தி காட்ட,  நிலாவும் சிரித்தபடி அவரை போலவே கண் சிமிட்டி கை உயர்த்தி கட்டி சிரித்தாள் அதிரனுக்கு தெரியாமல்...

அதிரதன் கீழ இறங்கி வந்ததும் தன் பெற்றோர்களிடம் ஏதோ பேசி கொண்டிருக்க, அதற்குள் குடுகுடுவென்று பூஜை அறைக்கு ஓடிச்சென்று அங்கிருந்த விபூதி தட்டை எடுத்து வந்தாள் நிலா...

அவன் பேசி முடித்துவிட்டு வாயில் புறம் நகர முயல,

“ரதன்..... ஒரு நிமிஷம்..... “ என்று நிறுத்தினாள் நிலா...

அவளின் ரதன் என்ற அழைப்பில் ஒரு நொடி திகைத்து மறு நொடி முறைத்து அவள் புறம் திரும்ப, அவன் எதிர்பாராத நேரத்தில் அந்த தட்டில் இருந்த குங்குமத்தை தன் மோதிர விரலால் கொஞ்சமாக எடுத்து எக்கி அவன் நெற்றியில் சிறு கீற்றாய் வைத்து விட்டாள்...

“இந்த ப்ராஜெக்ட் உங்களுக்கே கிடைக்க வாழ்த்துக்கள்... ஆல் தி பெஸ்ட். “ என்றாள் கன்னம் குழிய சிரித்தவாறு..

அவனுக்கு இந்த மாதிரி நெற்றியில் வைத்து கொள்வது எல்லாம் பிடிக்காது... அதுவும் க்ளைன்ட் விசிட் வர்றப்ப பட்டிக்காடு மாதிரி இதென்ன நெற்றியில் பட்டையை போட்டுகொண்டு போவது என்று எரிச்சல் அடைந்தவன்

“இடியட்.. என்று மெல்ல முனுமுனுத்தவாறு அவள் வைத்ததை அழிக்க கையை உயர்த்த

“ப்ளீஸ்... ரதன்... இன்னைக்கு மட்டும்..... அழிச்சிடாதிங்க... “ என்றாள் கெஞ்சல் பார்வையில் அதே முனுமுனுப்புடன்...

இதுவரை அவள் எதற்கும் அவனிடம் கெஞ்சி இறஞ்சி நின்றதில்லை,, எப்பொழுதும் மிடுக்குடனும், குறும்புடனும் ஒரு நிமிர்வுடனும் சில நேரம் கோபமாக கூட அவளை பார்த்திருக்கிறான்..

ஆனால் இப்படி ஒரு பாவமான லுக் ஐ பார்த்ததில்லை... என்ன செய்ததோ அந்த சதிகாரியின் அந்த பாவமான லுக்....

உயர்த்திய கையை அப்படியே இறக்கி கொண்டான்...ஆனாலும் முறைக்க மட்டும் தவறவில்லை...

உடனே அவள் துள்ளி குதித்து

“தேங்க்ஸ்.... “ என்று கண் சிமிட்டி சிரித்தாள்..

அவனும் முறைத்து மெல்ல புன்னகைத்தவாறு அனைவரிடமும் தலை அசைத்து விட்டு வாயிலை நோக்கி செல்ல,  நிலாவும் அந்த தட்டை அங்கயே வைத்துவிட்டு அவனுடன் இணைந்து நடந்தாள்...

அவனும் எதுவும் சொல்ல வில்லை... அவளுடன் இணைந்து நடப்பது அவனுக்குமே மனதுக்குள் ஒரு உற்சாகத்தை கொடுக்க,  ஏதோ பேசியபடியே இருவரும் நடந்தனர்..

அவள் வாயிலில் நின்று கொள்ள, அவன் தன் கார் நிறுத்தி இருந்த ஷெட்டிற்கு சென்று காரை எடுத்து கொண்டு சுற்றி வர, அவள் இன்னுமே வாயிலில் நின்று கொண்டு அவனையே பார்த்து கொண்டு இருந்தாள்..

அவன் பார்வை அவளிடம் செல்ல,  உடனே அதை கண்டு கொண்டவள் கை அசைத்து வழி அனுப்ப அவனுமே மெல்ல தலை அசைத்து இதழில் புன்னகையை தவழவிட்டு கிளம்பி சென்றான்...! 

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!