நிலவே என்னிடம் நெருங்காதே-58

 


அத்தியாயம்-58

பொதுவாக நண்பர்கள் மூவரும் வெளியில் சுற்ற செல்லும்பொழுது அஸ்வின் வழியில் பார்க்கும் பெண்களை எல்லாம் ரசித்து தன் நண்பர்களிடம் கமெண்ட் செய்து கொண்டு வருவான்..

தப்பாக பார்க்காவிட்டாலும் சும்மா அவங்க ட்ரெஸ் மட்டும் பேச்சு சிரிப்பு என்று ஏதாவது கலாய்த்து பேசி கொண்டிருப்பான்.. அதிரதன் அதில் கலந்து கொள்ளாவிட்டாலும் அவனுமே கூட சேர்ந்து சிரித்து கொண்டிருப்பான்..

அபிதான் அஸ்வினுடன் சேர்ந்து கொண்டு இருவரும் ஏதாவது கலாய்த்து கொண்டிருப்பார்கள்.. அதே பழக்கத்தில் இங்கு இருந்த இந்த புது பொண்ணையும் வர்ணிக்க அதை கண்டு அதிரதன் கடுப்பானது ஏன் என்று தான் குழப்பமாக இருந்தது..

தன் நண்பனிடம் விளக்கம் கேட்க முயல, அவனோ அஸ்வினை பேச விடாமல் மீண்டும் தொழில் பேச்சுக்கு சென்றுவிட அஸ்வினும் தன் குழப்பத்தை மனதுக்குள் போட்டு கொண்டான்..

கொஞ்ச நேரம் எல்லாம் விளக்கி முடித்தவன் பின் நேரம் ஆவதை உணர்ந்து அஸ்வின் விடைபெற்று கிளம்பி சென்றான்..அவன் சென்றதும் தான்  

“அப்பாடா.. “ என்று நிம்மதி மூச்சு விட்டான் அதிரதன்...

அவனுக்கு மீண்டுமாய் அவள் பந்து விளையாடும் அழகை பார்க்க வேண்டும் போல இருக்க, அவசரமாக சென்று திரைச்சீலையை விலக்கி வெளியில் பார்க்க இப்பொழுது பலத்த அதிர்ச்சி...

அங்கே அஸ்வின் நின்று கொண்டு இரு பெண்களுடன் சிரித்து பேசி கொண்டிருந்தான்.. அதுவும் நிலாவிடம் அவன் பார்வை ஆர்வமாக செல்வது புரிந்தது..

அவள் இயல்பாக நட்புடன் சிரித்து பேசி கொண்டிருக்க அதை கண்ட அதிரதனுக்கு உடல் எல்லாம் பற்றி எரிந்தது...

“இடியட்.. கொஞ்சம் கூட அறிவே இல்லை.. அடுத்த ஆம்பளைகிட்ட எப்படி சிரிச்சு சிரிச்சு பேசறா பார்... அவன் அவளை ஆர்வமா பார்ப்பதை கூட கண்டு கொள்ளாத தத்தியா இருக்கா...

இவளை போய் பெரிய அறிவாளினு நினைச்சுகிட்டிருந்தேனே... முட்டாள்.. “ என்று மனதுக்குள் அர்ச்சனை பண்ணியவன் அந்த அறையில் குறுக்கும் நெடுக்குமாக நடக்க ஆரம்பித்தான்..

ன்று இரவு உணவை முடித்து தன் அறையில் அவளுக்காக காத்து கொண்டிருந்தான் அதிரதன்..

நிலாவும் தன் வேலையை முடித்து பால் டம்ளருடன் அவன் அறைக்குள் வந்து கதவை மூடி தாழிட்டு திரும்ப அடுத்த நொடி எரிமலையாக குமுறினான் அவள் கணவன்..

“ஏய்.. உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? “ என்றான் மொட்டையாக...

அதில் கடுப்பானவள் அவன் புறமாக திரும்பி நேராக உற்று பார்த்தவள்

“நான்தான் ஏற்கனவே சொல்லிட்டேனே... உங்க அளவுக்கு எனக்கு அறிவு இல்லைனு... அப்பப்ப உங்ககிட்டதான் கடன் வாங்கி யூஸ் பண்ணி கிட்டிருக்கேன்.. இப்ப அறிவு இல்லாம என்னத்த செய்துட்டனாம்.. அப்புறம் என் பேர் ஒன்னும் ஏய் இல்லை... “ என்று முறைத்தவாறு அவன் கையில் பால் டம்ளரை திணித்தாள் கோபமாக...

“ஹ்ம்ம்ம் பொண்ணுனா அடுத்தவன் தன்னை எப்படி பார்க்கறான் என்று தெரிந்து கொள்ளும் உள்ளுணர்வு இருக்கணும்.. அந்த அஸ்வின் உன்னை அப்படி ரசிச்சு பார்க்கறான்.. நீயும் அவன் முன்னாடி பல்லை இளிச்சுகிட்டு நிக்கற...

என்னைய பார்த்தா மட்டும் நல்லா முறைக்கற.. அவன் உன்னை ஆர்வமா பார்க்கிறப்பயே அவனை பார்த்து முறைச்சிருந்தா அடுத்த நொடி அப்படி பார்த்திருப்பானா? “ என்று பொரிந்தான்..

அப்பொழுதுதான் புரிந்தது அவளுக்கு..

அஸ்வின் வந்ததில் இருந்தே அதிரதன் அவளிடம் எரிந்து விழுந்ததுக்கான காரணம் அவனுள் வந்திருக்கும் பொறாமையே என்று..

ஒருவர் மீது அன்பிருந்தால் தான் அவருடன் வேற யாராவது பேசினால் பொறாமை வரும்.. தன் கணவனுக்கு அஸ்வின் மீது பொறாமை வருகிறது என்றால் ??  என்று அவசரமாக யோசித்தவள் உள்ளுக்குள் துள்ளி குதித்தாள்..

“யெஸ்..”  என்று தன் கையை மடக்கி பின்னால் இழுத்து உள்ளுக்குள் குத்தாட்டம் போட்டாள் நிலா...ஆனால் அவனிடம் எதையும் வெளிக்காட்டாமல் அமைதியாக நின்றாள்..  

அவள் அமைதியாக இருப்பதை கண்ட அதிரதன் இன்னும் கடுப்பாகி

“என்ன பேச்சை காணோம்? அதுசரி... கல்யாணம் ஆனா இந்த பொண்ணுங்க எல்லாம் நெற்றியில் குங்குமத்தை வச்சுக்குவாங்க இல்ல.. நீ ஏன் அப்படி வைக்கலை? இனிமேல் அப்படி வச்சுகிட்டு எல்லார் முன்னாடியும் வந்து நில்..அப்பயாவது உனக்கு கல்யாணம் ஆகிடுச்சுனு தெரியட்டும்..  

அந்த மடையன் உன் கழுத்துல கிடக்கிற தாலியை கூட கவனிக்காமல் உனக்கு கல்யாணம் ஆகிடுச்சுனு கூட தெரியாமல் அப்படி சைட் அடிக்கிறான்..

 

நீயும் கெக்க பெக்கனு சிரிச்சு சிரிச்சு பேசற.. “ என்று படபடவென்று பொரிந்தவாறு தன் கையில் இருந்த பாலை அருந்தி முடித்தவன் அவளை முறைத்தவாறு அந்த டம்ளரை நீட்டினான்..

அவளோ உள்ளுக்குள் சிரித்து கொண்டே அவன் கொடுத்த டம்ளரை வாங்கி வைத்து விட்டு எதுவும் பேசாமல் கட்டிலில் ஏறி அவன் அருகில் படுத்து கொள்ள

“ஏய் உன்னத்தான்.. இப்படி கத்திகிட்டிருக்கேன்.. நீ பாட்டுக்கு திமிரா இருக்க.. “ என்றான் இன்னுமாய் எரிச்சலுடன்..

அதுவரை அமைதியாய் இருந்தவள் இப்பொழுது அவன் புறம் திரும்பி ஒருக்களித்து படுத்து கொண்டு ஒரு கையை தன் தலைக்கு முட்டு கொடுத்தவாறு படுத்து கொண்டவள்

“அம்மாடியோவ்... என் புருஷனுக்கு எம்புட்டு கோபம் வருது..! கோவக்கார மச்சான்..பார்..  மீசை கூட கோபத்துல துடிக்கிது.. “ என்றவள் சிரித்தவாறு அவன் மீசையை பிடித்து இழுக்க முயல அவள் கையை பட்டென்று தட்டிவிட்டவன்

“ஏய்.. தொடாமல் பேசு... “ என்றான் முறைத்தவாறு..  

“ஹா ஹா ஹா என் புருஷனுக்கு அவர் பொண்டாட்டி நான் தொட்டா கூச்சமா இருக்காம்..என்ன ஜமீன்தாரே.. இப்படி நெளியறீங்க.. “

என்று அவன் இடுப்பில் கையை வைத்து குறுகுறுப்பு மூட்ட அவனோ தன் கோபத்தை மறந்து பொங்கி வந்த சிரிப்பை அடக்கி கொண்டு அவளை பார்த்து செல்லமாக முறைத்தவன் மீண்டும் அவள் கையை விலக்கி விட்டான்..  

“ஹ்ம்ம் அது சரி ஜமீன்தாரே.. உங்க க்ளோஸ் ப்ரெண்ட்.. அவர் என்னை கொஞ்சம் ஆர்வமா பார்த்தால் உங்களுக்கு ஏன் கோபம் வருதாம்? “ என்றாள் தலை சரித்து குறும்பாக பார்த்து கண் சிமிட்டி..

அதை கேட்டு தூக்கிவாரி போட்டது அதிரதனுக்கு..

“ஆமாம் இல்ல.. அஸ்வின் இது மாதிரி எத்தனையோ பெண்களை ஆர்வமா பார்த்து கமெண்ட் பண்ணி இருக்கான்.. அப்ப எல்லாம் வராத கோபம் இவளை அவன் கொஞ்சம் ஆர்வமாக பார்க்கவும் ஏன் வந்தது?

என்று அவசரமாக ஆராய, ஆராய்ச்சியின் முடிவு என்னவாக இருக்கும் என்று முன்கூட்டியே கொஞ்சம் மண்டையில் உறைக்க உடனே அதை பாதியில்  நிறுத்தி கொண்டான்..

தன்னை சமாளித்து கொண்டு

“ஹ்ம்ம் அது....வந்து.... ஆங்..  நீ நேற்று நைட் சொன்னியே.. நான் பொண்டாட்டியா ஏத்துக்கலைனாலும் ஊருக்கு நீ இந்த  அதிரதன் பொண்டாட்டி.. ஜமீனின் மருமகள் என்று.

அதனால் அப்படி இந்த ஜமீன் மருமகளை ஒருத்தன் ஆர்வமா பார்த்தால் பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள்..

அந்த எண்ணம் உனக்கு கொஞ்சம் கூட இல்லையே.. அவன்தான் அப்படி பார்க்கிறான் என்றால் அவனை தடுத்து நிறுத்தாமல் நீயும் அவனுடன் சேர்ந்து பல்லை காட்டிகிட்டு இருக்க.. “என்றான் எப்படியோ சமாளித்தவாறு..

“நல்லா சமாளிக்கிறாரே இந்த ஜமீன்தார்.. அப்பயும் அவர் மனசுல இருக்கறத ஒத்துக்க முடியலை.. தேவநாதன் ஜமீன்தார் பேரன் னா சும்மாவா? “ என்று உள்ளுக்குள் மெச்சி கொண்டவள்

“ஹ்ம்ம்ம் குட் பாய்ன்ட் ஜமீன்தாரே.. ஆனால் நீங்க ஒன்ன கவனிச்சிங்களா..?. பொறம் போக்கு நிலமா கடந்தா போறவன் வர்றவன் எல்லாம் நின்னு  திரும்பி ஆசையா பார்த்துட்டுதான் போவானுங்க..

அதுவே அந்த நிலத்துக்கு சொந்தக்காரன் நான் அப்படீனு ஒரு போர்ட் ஐ  போட்டு வச்சீங்கனு வைங்க, யாரும் திரும்பி பார்க்க மாட்டாங்க...அதை செய்யாமல் விட்டது உங்க தப்பு..

உங்க நண்பன் என்னை அப்படி பார்க்கறப்பயே அவர் தலையில் ஒரு குட்டு வைத்து

“டேய் மடையா.. அவ ஒன்னும் பொறம்போக்கு நிலம் அல்ல.. நின்னு ரசிச்சு பார்க்க... ஊரறிய அக்னி சாட்சியாய் அம்மி மிதித்து அருந்ததி பார்த்து எல்லாரும் அட்சதை தூவி வாழ்த்த நான் தொட்டு தாலி கட்டின என் பொண்டாட்டி டா.. மடையா...  “ என்று சொல்லி இருந்தால் அவர் ஏன் அப்படி பார்க்க போகிறாராம்...

அதை சொல்லாமல் விட்டுபோட்டு என் கிட்ட எகிறரார்..

லுக் ஜமீன்தாரே.. நான் ஒன்னும் ரோட்ல போறவன்கிட்ட நின்னு பல்லை காமிக்கல.. நீங்க உங்க க்ளோஸ் ப்ரெண்ட் னு நம்பி வீடுவரைக்கும் கூட்டிகிட்டு வந்த உங்க ப்ரெண்ட் கிட்டதான் பேசினேன்.. மைன்ட் இட்.. “ என்று தன் வாயை இரு கோட்டுக்கும் இழுத்து முறைத்து பழிப்பு காட்டியவள் மறுபக்கம் திரும்பி படுத்து கொண்டாள்...

படபடவென்று பட்டாசாய் பொரிந்தவளையே ஆச்சர்யத்தோடு பார்த்து கொண்டிருந்தான் ரதன்..

“அவள் சொல்வது உண்மைதானே.. அஸ்வின் இடம் இவள் என் மனைவி என்று அறிமுகபடுத்தி இருந்தால் உடனே அவளை சிஸ்டர் என்று சொல்லி இருப்பானே... ஏன் நான் அப்படி செய்யவில்லை.. “என்று யோசிக்க அவனை மேலும் யோசிக்க விடாமல் சிணுங்கியது அவன் அலைபேசி..

தன் யோசனையை அப்படியே விட்டவன் தன் அலைபேசியை எடுத்து பார்க்காமலயே அழைத்தது யாரென்று புரிய அடுத்த நொடி திடுக்கிட்டான்..

“எப்படி இவளை மறந்தேன்..? நேற்று சாந்தினி வீட்டில் இருந்து கிளம்பி வந்ததில் இருந்தே இன்னும் அழைத்து எதுவும் பேசி இருக்கவில்லை..

“காலையில் பிசியாகி விட அலுவலகத்திலும் வேலை பிழிந்து எடுக்க அவள் நினைவே வரவில்லை அவனுக்கு.. அதனால்தான் அவள் நியாபகம் வரவில்லை “ என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லி கொண்டான்..

“அப்படி என்றால் காரில் செல்லும் பொழுதும் அலுவலகத்தில் அந்த க்ளைன்ட் உடன் பேசிகொண்டிருந்த பொழுதும் உன் பொண்டாட்டி நினைப்பு வந்தது மட்டும் எப்படியாம்..?? என்று குறும்பாக கண் சிமிட்டி முறைத்து நக்கலாக சிரித்தது அவன் மனஸ்...

“ஷட் அப்..”  என்று அதை அடக்கியவன் தன் அலைபேசியை எடுத்து கொண்டு பால்கனிக்கு சென்றான்..

*****

முன்பெல்லாம் நிலாவை வெறுப்பேற்ற அவள் முன்னாடியே தன் நிலாபொண்ணுடன் கொஞ்சி பேசியவன் இப்பொழுது அப்படி பேச மனம் வராமல் பால்கனிக்கு சென்றான்...

திரும்பி படுத்து இருந்தாலும் நிலாவும் அவன் மாற்றத்தை எண்ணி உள்ளுக்குள் சிரித்து கொண்டாள்..

அழைப்பை ஏற்று காதில் வைத்ததும்

“ஹாய் பேபி... “ என்று கொஞ்சலுடன் ஆரம்பித்த சாந்தினியின் குரல் வழக்கம் போல அவனுக்கு உற்சாகத்தை தராமல் எரிச்சலை வரவழைத்தது...

“என்னாச்சு டார்லிங்..?  அமைதியா இருக்கிங்க? உடம்பு எதுவும் சரியில்லையா ? என்றாள் சாந்தினி அக்கறையுடன்..

ஆனால் முன்பு போல அவனால் அந்த அக்கறையில் நெகிழ்ந்து போக முடியவில்லை.. அவள் குரலில் வரவழைத்த கரிசனத்தை உணர முடிந்தது..

“இல்லை ஒருவேளை என் மனம்  அப்படி எண்ணுகிறதோ..?  அவள் அக்கறையுடன் தான் விசாரிக்கிறாள்.. “என்று தன் தலையை தட்டி கொண்டவன்

“ப்ச்.. ஒன்னும் இல்ல சது.. கொஞ்சம் ஆபிஸ் வொர்க் அதிகம்.. டயர்ட் ஆ இருக்கு... நாளைக்கு பேசலாமா? “ என்று அந்த உரையாடலை முடிக்க பார்த்தான்..

அதை கேட்டு திடுக்கிட்ட சாந்தினி

“பேபி... திஸ் இஸ் நாட் பேர்... உங்க குரலை கேட்க உங்க கூட பேச நான் எவ்வளவு ஆசையா காத்துகிட்டு இருக்கேன் தெரியுமா?

காலையில் எழுந்ததில் இருந்து உங்கள் நினைவாகவே இருக்கு.. உங்களுக்கு வேலை நேரத்தில் அழைத்தால் பிடிக்காது, தொந்தரவாக இருக்கும் னு சொன்னதால் நான் என்னை கட்டு படுத்தி கொண்டேன்..

இந்த நேரத்துக்காக நான் ரொம்பவும் காத்துகிட்டிருக்கேன்.. நீங்க பட்டுனு நாளைக்கு பேசலாம் ன்றிங்க.. என்னாச்சு அத்தூ... ? என்னை பிடிக்கலையா? நான் ஏதாவது தப்பு பண்ணிட்டனா?

நேற்று இரவு கூட உங்க ஆசைக்கு நான் சம்மதிச்சேன் தான... எப்படியும் நீங்கதான் என் கணவன் னுதான் என்னை தர  கூட தயாரா இருந்தேன்.

ஆனால் நீங்கதான் பாதியில் போய்ட்டிங்க? என் மேல எதுவும் கோபமா? ப்ளீஸ் என்கிட்ட பேசுங்க பேபி.. “ என்று உருகி கெஞ்சி கொஞ்சி பேச அதில் அப்படியே பாகாய் உருகி விட்டான் அதிரதன்...

“சே.. எனக்கு இருந்த குழப்பத்தில் இவளையும் வருத்தபட வைத்துவிட்டேனே... எனக்காகவே ஏங்கி கிட்டு இருப்பவள்..அவள் பெற்றோர்களையும் இழந்து தனியாக இருப்பவள்.. என்னை விட்டால் அவளுக்கு யார் இருக்கா?  எனக்குத்தான் அப்பப்ப அறிவு வேலை செய்ய மாட்டேங்குது..

அந்த சதிகாரியின் சூழ்ச்சிக்கு,  அவள் விரித்த வலையில் நானே போய் மாட்டிக்க பார்க்கிறேன்..பாவம் இவள்.. “ என்றவன்

“அச்சோ அப்படி எல்லாம் இல்ல மா... நிஜமாகவே இன்னைக்கு ஆபிஸ்ல கொஞ்சம் வேலை அதிகம்.. புதுசா ஒரு ப்ராஜெக்ட் கிடைச்சிருக்கு. அந்த வேலையில் பிசியா இருந்தேன் சது.. “ என்றான்..

உள்ளுக்குள் தன் ப்ராஜெக்ட் ஐ பற்றி கேட்பாள் என்று சிறு ஆர்வத்துடன் எதிர்பார்க்க அவளோ அதை கண்டு கொள்ளாமல் ஒரு வாழ்த்து கூட சொல்லாமல்

“இல்ல நீங்க பொய் சொல்றிங்க....உங்களுக்கு என்னை பிடிக்கலை  “ என்று இன்னும் கொஞ்சி கோபித்தாள்...

அதை கண்டு கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது அதிரதனுக்கு.. அவன் ப்ராஜெக்ட் ஐ பற்றி சொல்லியும் ஒரு வாழ்த்து கூட சொல்லாமல் அதை பற்றி ஆர்வமாக பேசாமல் போன அவளை நினைத்து கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது...

அதே நேரம் காலையில் அவனை ரெடி பண்ணி அனுப்பியதில் இருந்து இந்த ப்ராஜெக்ட் அவனுக்கே கிடைக்கவேண்டும் என்று வாழ்த்தி அனுப்பியதில் இருந்து அது கிடைத்ததும் அவள் உற்சாகமாய் வாழ்த்து சொல்லிய தன் மனையாள் கண் முன்னே வந்து நின்றாள்.

இருவரையும் அவசரமாக அவன் மனம் ஒப்பிட்டு பார்த்தது.. அதற்குள்

“ஹலோ பேபி.. லைன்ல இருக்கிங்களா? “ என்று கத்தினாள் சாந்தினி...

அவனும் தலையை உலுக்கி கொண்டு

“ஹ்ம்ம் சொல்லு சது.. “ என்றான் எங்கோ பார்த்து கொண்டு..

“அத்தூ.. நீங்க என்னை மறந்துட்டிங்கதான..? உங்களுக்கு இப்ப வேற ஒரு பொண்ணை புடிச்சிருச்சு... நான் வேண்டாதவ ஆய்ட்டேன் தான?  “ என்றாள் அழு குரலில் இப்பொழுது.

“ஹே சது.. அதெல்லாம் இல்ல மா.....ஏன் அப்படி சொல்ற? “ என்றான் கொஞ்சம் தவிப்புடன்..

“இல்ல.. அதுதான் உண்மை.. உங்களுக்கு வேற பொண்ணை புடிச்சிருக்கு.. இல்லைனா என்னை இப்படி சது னு கூப்பிட மாட்டிங்க.. நீங்க ஆசையா கூப்பிடற நிலா னு பேர் இன்னைக்கு உங்க வாயில வரவே இல்லை..

ஆரம்பத்துல நீங்க நிலா னு கூப்பிட்டப்ப எனக்கு அது பிடிக்கல.. பட்டிக்காடு மாதிரி இருக்குனு சது னு கூப்பிட சொன்னேன்... ஆனால் நீங்க அதை மறுத்துட்டு நிலா என்ற பெயர் சிறுவயதில் இருந்து பிடித்த பெயர்.. அதை சொல்லும்பொழுது மனதில் ஒரு இதம் பரவும்... என்று சொல்லி மறுத்துட்டிங்க..

ஆனால் இன்னைக்கு சது னு தான் கூப்பிடறீங்க.. இதுல இருந்தே தெரியுது உங்களுக்கு என்னை பிடிக்கலை... உங்களுக்கு வேற எந்த பொண்ணோட தொடர்பு இருக்கு.. “ என்று உளற

அப்பொழுதுதான் திடுக்கிட்டான்.. அவள் சொல்வது உண்மைதானே.. அவளை வாய் நிறைய அழைக்கும் நிலா என்ற பெயர் ஏன் இப்பொழுது வரவில்லை... அவளை நிலா என்று அழைக்க பிடிக்கவில்லை.. ஏன் என்று ஆராய அடுத்த நொடி கொஞ்சம் புரிந்தது..

நிலா என்று நினைத்தாலே இப்பொழுது அந்த சதிகாரியின் முகம் தான் கண் முன்னே வருகிறது.. அதனாலயே அந்த பெயரை அவன் பயன்படுத்துவது இல்லை...

“ஆனால் அதற்காக அவளை நினைத்து கொண்டு இருக்கிறேன் என்று  எப்படி இவள் சொல்லலாம்..?”   

கூடவே அவள் வேற பொண்ணோட தொடர்பு இருக்கு என்று சொல்லவும் அவனுக்கு கசந்தது..

“அது எப்படி அவள் பெயரை அழைக்கவில்லை என்றதுமே இப்படி எல்லாம் எண்ணுகிறாள்..?  நாளை அலுவலக வட்டாரத்தில் தொழில் தொடர்பாக யாராவது ஒரு பெண்ணுடன் பேசினால்  கூட இவளுக்கு தப்பாகத்தானே தோன்றும்...

அப்படி என்றால் என் மீது இவளுக்கு நம்பிக்கை இல்லையா? “ என்று எண்ணும்பொழுதே நேற்று அவன் மனையாள் சொன்ன அவன் மீதான நம்பிக்கை மீண்டுமாய் நினைவில் ஆடியது..

“என் புருஷனை பற்றி எனக்கு தெரியும்..”  என்று அவள் கர்வமாக கூறிய அந்த நம்பிக்கை,  அந்த திடம் இந்த சாந்தினியிடம் இல்லாதது நன்றாகவே தெரிந்தது...

அவன் எண்ணம் போகும் போக்கை கண்டு திடுக்கிட்டவன்

“இல்லை.. இவள் கொஞ்சம் வளர்ந்த குழந்தை.. எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க.. என் மீது இருக்கும் அதிக பாசத்தால்தான் சது என்னை தன் பக்கத்திலயே வச்சுக்கணும் னு நினைக்கிறா..

அதில் ஒன்றும் தப்பில்லை. “ என்று தன்னைத்தானே சமாதானம் படுத்தி கொண்டு மறுமுனையில் இருந்தவளுக்கு ஏதேதோ சமாதானம் சொல்லி அழைப்பை அனைத்தான்..

மீண்டும் கொஞ்ச நேரம் மார்புக்கு குறுக்காக கைகளை கட்டி கொண்டு அந்த பால்கனியில் நடந்தவன் பின் படுக்கைக்கு திரும்பி இருந்தான்...

கட்டிலின் மறுபக்கத்தில் ஏறி படுத்தவன் தலைக்கு கீழ் கைகளை மடித்து வைத்து கொண்டு விட்டத்தை பார்த்து எதையோ யோசித்து கொண்டிருந்தான்..

இன்று காலையில் இருந்து நடந்த நிகழ்ச்சிகளை அசைபோட அதிலும் நிலாவின் குறும்பு பேச்சும், அஸ்வின் அவளை ஆர்வமாக பார்த்தது, சற்றுமுன் ஒருக்களித்து படுத்தவாறு தன்னை சீண்டிய அவளின் சீண்டலும் கண் முன்னே வர, உள்ளே இருந்த அழுத்தம் கொஞ்சம் குறைவதாய் இருந்தது..

பார்வை தானாக அவள் புறம் செல்ல இன்னுமாய் சிலிர்த்து போனான்...

படுக்கையின் ஒரு பக்கமாக படுத்திருந்தவள் தூக்கத்தில் இப்பொழுது இவன் புறமாக திரும்பி படுத்திருக்க அவள்  இடையில் இருந்த புடவை நழுவி அவளின் வெண்ணிற இடை  இவன் பார்வைக்கு இப்பொழுது...

அதை கண்டதும் மாலையில் அவள் தோட்டத்தில் விளையாண்டபொழுது தெரிந்த அவள் இடையும் கணுக்காலும் கண் முன்னே வர அவன் அறியாமல் உள்ளே தகிக்க ஆரம்பித்தது..

பார்வை தானாக அவள் கால்களை தழுவ, புடவை கொஞ்சம் மேலாக ஏறி இருக்க அவன் பார்வைக்கு வந்த அவளின் தந்த கால்களை தொட்டு பார்க்க சொல்லி   அவனை சுண்டி இழுத்தது..

தன்னையே முறைத்து கொண்டவன் பார்வை அடங்காமல் அவள் இடைக்கு செல்ல இன்னுமாய் அவன் புறமாக நன்றாக திரும்பி படுத்திருந்தவள் அவனுக்குள் தீயை மூட்டினாள்..

அவள் சிற்றிடையை தழுவ துடித்த கரங்கள் அவன் கட்டளையையும் மீறி இப்பொழுது அவள் இடையை நோக்கி நீண்டிருக்க அவள் இடைதொடும் நேரம் தூக்கத்திலயே பட்டென்று தன் புடவையை இழுத்து விட்டு கொண்டாள்...

கூடவே திரும்பி மறுபக்கம் படுத்து கொண்டாள்..

அனிச்சையாக அவள் செய்ததுதான்.. ஆனாலும் அவன் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலை போல அவன் கரங்கள் அவனை பார்த்து முறைக்க, அவனோ முதுகு காட்டி படுத்திருந்தவளை பார்த்து முறைத்தான்..

“சே... இப்படி படுத்தறாளே..! மனுஷன உசுப்பேத்தி விடனே என் பக்கமாக படுத்திருந்தாள் போல..ஏன்டா அவளை இங்கே படுக்க சொன்னேன் என்று இருக்கிறது..

பேசாமல் இவள் தள்ளி இருப்பதுதான் எனக்கு சேப்.. நானே இந்த தலைவலியை இழுத்து விட்டு கிட்டேன்.. எனக்கு நல்லா வேணும்.. “ என்று புலம்பியவாறு கண்ணை இறுக்க மூடி கொண்டு உறங்க முயன்றான் ரதன்...


Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!