நிலவே என்னிடம் நெருங்காதே-61

 


அத்தியாயம்-61

ன்று மாலையில் அதிரதன் தன் அலுவலக வேலையில் பிஸியாக இருக்க திடீரென்று சாந்தினி இடமிருந்து அழைப்பு வந்தது அவனுக்கு..

எப்பொழுதும் அவன் வேலை நேரத்தில் அழைத்திராதவள் இன்று அழைத்து இருக்கவும் அவன் திடுக்கிட்டு உடனே அந்த அழைப்பை ஏற்றிருந்தான்..  அவன் குரலைக் கேட்டதும் மறுமுனையில் இருந்தவளோ விசும்ப ஆரம்பித்தாள்..

அவளின் அழுகையை  கண்டு திடுக்கிட்டவன்

“என்னாச்சு சது? ஏன் அழற?”  என்று பதறி விசாரிக்க அவளோ

“உங்களை பார்க்காமல் என்னால் இருக்க முடியவில்லை அத்தூ...எனக்கு என்னவோ போல் இருக்கிறது.. நீங்கள் என்னை விட்டு விலகி செல்வதை போல இருக்கு.. உங்களை உடனே பார்க்க வேண்டும் போல இருக்கு.. “  என்று தேம்பி அழுவ ஆரம்பித்தாள்..

அதிரதனுக்கோ தர்ம சங்கடமாக போய்விட்டது..

இதுவரை அவளுடனே சுற்றி கொண்டிருந்தவன் திடீரென்று அவளுடன் சுற்றுவதை குறைத்திருக்க அதை கண்டு அவள் வேதனை படுகிறாள் என்று குற்ற உணர்வாக இருந்தது..

“என் மீது உயிராக இருப்பவள். அவளுக்கு என்னை விட்டால் யார் இருக்கா? என்னை பார்க்க வேண்டும் என்று ஆசை படுகிறாள்.. அவள் ஆசை படுவதிலும் தப்பில்லை... சிறுபிள்ளை அவள்.. அவளை கண் கலங்க விடக்கூடாது “ என்று அவசரமாக யோசித்தவன் அவளை சமாதானப்படுத்த முயன்றான்..

அவளோ சமாதானம் ஆகாமல் அவனை பார்க்க வேண்டும் என்று சிறுபிள்ளையாக அடம்பிடிக்க வேறு வழியில்லாமல்

“சரி.. சது..  நான் கிளம்பி வருகிறேன்.. இரண்டு பேரும் டின்னருக்கு வெளியில் போகலாம்.. நீ தயாராக இரு.. “ என்று சொல்லி வைத்தான்..

அதைக் கேட்டவள் துள்ளிக்குதித்து அலைபேசியிலயே முத்தத்தை வாரி வழங்கியவள் அவன் அவள் வீட்டிற்கு செல்லும் பொழுது தன்னை முழுவதும் அலங்கரித்துக்கொண்டு தயாராக இருந்தாள்...

அதிரதன் அவளை அழைத்துக் கொண்டு அந்த நட்சத்திர ஹோட்டலுக்கு சென்றிருந்தான்.. அதைத்தான் இவள் பார்த்திருக்கிறாள் என்று இப்பொழுது உரைத்தது..

அதனால்தான் தன்னிடம் பாராமுகமாக இருந்திருக்கிறாள் என்பதும் புரிந்தது.. அவனும் எதுவும் பேசாமல் இப்பொழுது அவனும் வெளியில் தெரிந்த அந்த நிலாவை வெறித்துக் கொண்டிருந்தான்..  

சிறிது நேரம் இருவரும் அமைதியாக இருக்க நிலா தான் அந்த அமைதியை கலைத்தாள்..

“சாரி...  ரதன்.. நான் கொஞ்சம் தப்பு கணக்கு போட்டுவிட்டேன்.. இந்த ஆட்டத்தில் நாம் இருவர் மட்டுமே என்று எண்ணி இந்த ஆட்டத்தில் இறங்கிவிட்டேன்..

இன்று மாலை சாந்தினியை உங்களுடன் சேர்த்து பார்த்த பொழுதுதான் எனக்கு உரைத்தது.. இந்த ஆட்டத்தில் நாமிருவர் மட்டும் அல்லாமல் இன்னொரு பொண்ணும் இருக்கிறாள் என்ற உண்மை இன்று தான் உரைத்தது...

நம் இருவர் வாழ்க்கை மட்டும் அல்லாமல் இன்னொரு பெண்ணின் வாழ்க்கையும் இந்த ஆட்டத்தில் பின்னிப் பிணைந்து இருப்பது இப்பொழுதுதான் புரிந்தது...

உங்களுக்கும் தாத்தாவுக்கும் நடக்கும் இந்த பனிப்போரில்  இரண்டு பெண்களின் வாழ்க்கை சிக்கியிருக்கிறது என்பது எனக்கு உரைக்கவில்லை.

இதுவரை என் வாழ்வை மட்டுமே பார்த்து அதில் எப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வுகள் வந்தாலும் சமாளித்துக் கொள்வேன்.. நீங்கள் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும் அது என்னை பெரிதாக பாதிக்காது..  அதற்கும் பழகிக்கொண்டு என்னை தயார் பண்ணிக் கொண்டுதான் தாத்தா சொன்னதுக்கு சம்மதித்தேன்...

ஆனால் இந்த ஆட்டத்தில் அந்த சாந்தினியின் வாழ்வும் பிணைந்து இருப்பதை அறியாமல் போனேன்.. இந்த ஆட்டத்தில் எப்படிப்பட்ட பாதிப்பு வந்தாலும் என்னால் தாங்கிக் கொள்ள முடியும்.. அதற்கான மன உறுதி என்னிடம் இருக்கிறது...

ஆனால் சாந்தினி??  அவளைப் பார்த்த பொழுது ரொம்பவுமே வெகுளியாக தெரிந்தாள்.. உங்களை ரொம்பவும் நேசிப்பாள் போல.. அப்படிப்பட்ட பெண்ணிற்கு நான் துரோகம் செய்வதை போல இருந்தது..

இந்த ஆட்டத்தில் நான் ஜெயித்தால் பாதிக்கப்படுவது அந்த பேதைப் பெண்.. அவளும் என்னை போலவே ஆதரிக்க ஆளில்லாத ஆதரவற்றவள்..  உங்களைத்தான் ஆதாரமாக எண்ணிக் கொண்டிருக்கிறாள்... அப்படிப்பட்டவள் ஆசையை நிராசை ஆக்கக்கூடாது..

அவள் வாழவேண்டிய வாழ்க்கையை நான் பறித்து கொள்ளக்கூடாது.. உங்களுக்கும் அவளைத் தானே பிடித்திருக்கிறது.. நடுவில் தாத்தாவும் நானும் வந்து உங்கள் வாழ்க்கையை குழப்பி விட்டோம்..  

இப்பொழுது தான் எனக்கு தெளிவானது.. அதனால்தான் இந்த ஆட்டத்தை இதோடு நிறுத்திக் கொள்ளலாம்.. இந்த ஆட்டத்தில் இருந்து நான் விலகிக் கொள்கிறேன்.

நீங்கள் ஆசைப்பட்ட மாதிரி உங்களை விட்டு சென்றுவிடுகிறேன்.. நீங்கள்அந்த சாந்தினியுடன் உங்கள் நிலா பொண்ணுடன் சந்தோஷமாக இருங்கள்... “  என்றாள் மீண்டும் தொண்டை அடைக்க குரல் தழுதழுக்க...

அதைக் கேட்ட அதிரதன் இன்னுமாய் அதிர்ந்து போனான்...

“என்ன பெண் இவள் !!  தன் கணவன் வேற ஒருத்தியுடன் நெருக்கமாக இருப்பதை பார்த்து கொதித்துப் போய் அவன் சட்டையைப் பிடித்து அவன் தனக்குத்தான் வேண்டும் என்று அழுது ஆர்ப்பாட்டம் செய்யாமல் அவன் மனதுக்கு பிடித்த வாழ்க்கையை வாழச் சொல்லி விலகிச் செல்கிறேன் என்கிறாளே..!

அப்படி சொல்ல எவ்வளவு நல்ல மனசு வேண்டும்? தனக்கு தாலி கட்டியவன் சந்தோஷத்தையும் யாரென்றே தெரியாத ஒரு பெண்ணின் சந்தோஷத்திற்காக,  அந்த பெண்ணின் வாழ்க்கைக்காகவும் தன் வாழ்க்கையை இழந்து விட தயாராக இருக்கிறாளே..

எப்படிப்பட்டவள்  இவள்.... “  என்று உள்ளுக்குள் பூரித்துப் போனான் அதிரதன்...  

ஆனால் அதேநேரம் அவள் தன்னைவிட்டு செல்கிறேன் என்றது அவனுக்கு அவன் அறியாமலேயே உயிர்வரை வலித்தது..

ஆரம்பத்தில் அவளை வேண்டாம் என்று ஒதுக்கிய அவன் இன்று அவளே அவனை விட்டு பிரிந்து செல்கிறேன் என்று சொல்லவும் மகிழ்ச்சி அடையாமல் அவன் மனதில் வேதனையை கூட்டியது..  

அவன் உடல் இறுக அந்த ஜன்னல் கம்பியை இறுக்கி பிடித்துக் கொண்டான்...அவளை விட்டுவிட அவனை விட்டு விலகி செல்ல சொல்ல அவனால் முடியவில்லை...

ஆனாலும் தன்னை வெளிபடுத்தி கொள்ளாமல் மறைத்தவன் அவளை நேராக பார்க்காமல் மீண்டுமாய் வெளியில் வெறித்தவன்

“அதெல்லாம் அவ்வளவு எளிதாக நீ சென்றுவிட முடியாது..  நீ சொன்ன மாதிரி நம்ம இருவர் மற்றும் சது வாழ்க்கை மட்டும் இதில் இல்லை.. இந்த ஜமீனின் பாரம்பரியம் கௌரவமும் இதில் இருக்கிறது..

ஜமீன் மருமகள் திருமணத்தை முறித்துக்கொண்டு சென்றுவிட்டாள் என்றால் அது இந்த ஜமீனுக்கு அவமானம்.. அப்படி ஒரு நிலை உன்னால் வந்துவிடக்கூடாது.. “  என்றான் அதே வெறித்த பார்வையுடன்

அதைக்கேட்டு இன்னுமே தளர்ந்து போனாள் நிலா..

ஒருவேளை அவள் சொல்லியதை கேட்டு அவனும் மனம் திறந்து உன்னைத் தான் விரும்புகிறேன்.. என்னை விட்டு போகாதே.. என்று சொல்லுவான் என்று சிறு நப்பாசை அவள் உள்ளே..

ஆனால் அவனோ ஜமீனின் கௌரவத்தை காட்டி அவளை போகக்கூடாது என்று சொல்லவும் கொஞ்சம் இருந்த எதிர்பார்ப்பும் அடங்கிப் போனது..

அவன் சொன்னதை கேட்டு அவன் புறமாய் திரும்பி ஒரு வெறித்த பார்வை செலுத்தியவள்  

“இல்லை ரதன்... இதை இனிமேலும் வளர விடக்கூடாது... அது சாந்தினிக்கு நான் செய்யும் துரோகம்... இப்பொழுது நீங்கள் ஒரு முடிவு எடுத்தாக வேண்டும்..

உங்களுக்கு உங்கள் காதல் தான் வேண்டும்.. நீங்கள் விரும்பிய சாந்தினி தான் வேண்டுமென்றால் நான் விலகிச் சென்று விடுகிறேன்.. நீங்கள் அவளையே திருமணம் செய்து கொள்ளுங்கள்..

இல்லை உங்களுக்கு ஜமீன் கௌரவம் தான் பெரியது.. நம்ம கலாச்சாரம் தான் முக்கியம் என்று எண்ணினால் உங்களுக்கு திருமணம் ஆனது பற்றி சாந்தினியிடம் சொல்லிவிடுங்கள்..

அவளுக்கு மேலும் ஆசையை காட்டி கடைசியில் மோசம் செய்ய வேண்டாம்.. இப்பொழுதே அவளிடம் எல்லாம் எடுத்து சொல்லி அவளை விலக்கி விடுங்கள்..

உங்களுக்கு திருமணமான அடுத்த நாளே நீங்கள் சாந்தினியிடம் சொல்லிருந்தால் அவள் இவ்வளவு தூரம் ஆசையை வளர்த்துக் கொண்டிருக்க மாட்டாள்..

அந்தப் பேதைப் பெண்ணை இதுக்கு மேலயும் ஏமாற்ற வேண்டாம்..

உங்களுக்கு உங்கள் காதலி நிலா வேண்டுமா? இல்லை ஜமீனின் கௌரவத்துக்காக,  நம்ம கலாச்சாரத்தை, இந்த திருமணத்தை மதிப்பதற்காக நீங்கள் தாலிகட்டிய இந்த மனைவி நிலா வேண்டுமா?  என்று முடிவு செய்யுங்கள்...

ஆனால் இரண்டில் ஒன்று நீங்கள் முடிவு செய்ய வேண்டும்.. இதற்கு மேலும் தண்ணிக்கும் மேட்டுக்குமாய் இழுபறி நிலை உங்களுக்கு வேண்டாம்..

நன்றாக யோசித்து முடிவு எடுங்கள்.. நீங்கள் என்ன முடிவு எடுத்தாலும் எனக்கு சம்மதமே..  தி பால் ஈஸ் இன் யுவர் கோர்ட் நௌ...இட்ஸ் யுவர் டேர்ன் நௌ...டிசைட் விச் சைட் யு வான்ட் டு கோ... " என்று தீர்க்கமாக அவனைப் பார்த்து சொல்லிவிட்டு பால்கனிக்கு சென்றுவிட்டாள்..  

அதிரதன் அவள் சொல்லியதை எல்லாம் கேட்டு அதிர்ந்து நின்றான்..

அவள் சொன்னவை எல்லாம் சத்தியமான வார்த்தைகள்தான்.. ஆனால் அவனால் தான் எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை..

கண்டதும் காதல் கொண்டு உன்னையே மணப்பேன் என்று வாக்குறுதி கொடுத்து நெருங்கி பழகிய காதலியா?   இல்லை அம்மி மிதித்து அருந்ததி பார்த்து ஆன்றோர்கள் சான்றோர்கள் வாழ்த்த அவன் கரங்களால்  தாலிகட்டிய மனைவியா?  என்று உள்ளுக்குள் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தான்..

இரண்டு பக்கமும் ஏற்ற தாழ்வுகள் நிறை குறைகள் என்று பெரிய பட்டியலாக நீண்டது.. ஆனால் எதுவுமே முடிவெடுக்க முடியாமல் தலையை பிடித்துக்கொண்டு அப்படியே கட்டிலில் அமர்ந்துவிட்டான்..  

மார்புக்கு குறுக்காக கைகளை கட்டி கொண்டு நடந்து கொண்டிருந்த நிலாவுக்கோ இன்னுமாய் வேதனையாக இருந்தது...

ஆரம்ப நாட்களாக இருந்தால் அவள் இந்த அளவுக்கு வேதனை பட்டிருக்க மாட்டாள்.. தன் மனதில் அவன் மீதான காதலை உணர்ந்த பிறகு அவனை விட்டு பிரிந்து செல்ல வேண்டுமே என்று வேதனையாக இருந்தது..

அவன் கேரளாவில் இருந்து வந்த பிறகு தாத்தாவிடம் கோபித்து கொண்டு சென்னை வந்துவிட்ட பிறகு நொடியும் அவனை பிரிய மனம் இல்லாமல்தான் குடும்பத்தையே அழைத்து கொண்டு சென்னை வந்துவிட்டாள்..

அவள் எண்ணம் தாத்தாவுக்கும் தெரிந்து விட்டதால் அவருமே சிரித்து கொண்டு அவளுக்கு உதவி செய்ய, சென்னையை சுற்றி பார்க்க என்று சொல்லி அவன் பக்கத்திலயே வந்து விட்டாள்..

ஆனால் அதெல்லாம் விழலுக்கு இறைத்த நீராய் பயனற்று போக போவதை அறிந்ததும் இன்னுமாய் வேதனையானது.. தன் மார்புக்கு குறுக்காக கைகளை இறுக்கி கட்டி கொண்டு நீண்ட நேரம் பால்கனியில் நடந்து கொண்டிருந்தாள் நிலா..

பின் கால் வலிக்க தன் நடையை நிறுத்தி மீண்டும் தயக்கத்துடன் அறைக்குள்ளே வந்தாள் நிலா..

அங்கே தன் தலையில் இருபக்கமும் கையை வைத்து அழுத்திப் பிடித்துக் கொண்டு முகத்தில் அவளுக்கும் மேல அதிக வலியும் வேதனையுமாய் அமர்ந்திருந்த தன் கணவனை பார்க்க அவளுக்குமே மனதைப் பிசைந்தது..

தன்னால்தான் அவனுக்கு இந்த மாதிரி ஒரு நிலை.. அன்றே திருமணத்திற்கு நான் ஒத்து கொண்டிருக்கக் கூடாது.. இல்லையா அவன் அவளை பிடிக்கவில்லை.. நீ என்னை விட்டு சென்றுவிடு என்று சொன்ன பிறகாவது அவனை விட்டு சென்றிருக்கவேண்டும்..

அதுவும் இல்லையா அடுத்த நாளே அவனை அந்த சாந்தினியிடம் இருந்து விலகியிருக்க சொல்லியிருக்க வேண்டும்.. அவனை கண்டிக்காமல் அவனாகவே திருந்தி விடுவான்  என்று விட போகத்தான் அந்த சாந்தினியின் மனதில் இன்னுமாய் ஆசையை வளர்த்துக் கொண்டாள்..

எல்லாம் என்னால்தான்... என்னால்தான் இப்ப இவர் ஒரு முடிவை எடுக்க முடியாமல் குழம்பித் தவிக்கிறார்.. “ என்று தன்னையே கடிந்து கொண்டாள்..

ஆனாலும் தன் வேதனையை உள்ளுக்குள் பூட்டி கொண்டு அங்கு டீப்பாயில் இருந்த ப்ளாஸ்க்கில் இருந்த காபியை ஊற்றிக் கொண்டு வந்து தன் கணவன் முன்னே நீட்டினாள் நிலா...

“ஐ அம் சாரி.. ரதன்.. என்னால்தான் உங்களுக்கு இந்த நிலை.. நான் அன்றே உங்களை விட்டு சென்றிருக்கவேண்டும்.. எனிவே பாஸ்ட் இஸ் பாஸ்ட்.. நடந்ததை யாராலும் மாற்ற முடியாது.. இனி நடப்பதையாவது நல்லபடியாக சரியாக திட்ட மிடலாம்..

இதை குடியுங்கள்..கொஞ்சம் தெளிவு கிடைக்கும்.. என்று அவன் முன்னே அந்த காபியை நீட்டினாள்.. அவனுக்குமே அது தேவையாக இருந்தது..

அவனும் மறுக்காமல் அதை வாங்கி பருகியவன் அதுவரை ஏதேதோ யோசித்து கொண்டிருந்தவன் தன் அருகில் நின்று கொண்டிருந்தவளை நிமிர்ந்து பார்த்தவன்

“ஆமாம்.. இப்ப இவ்வளவு தூரம் எனக்காக பார்ப்பவள்  எதற்காக இந்த திருமணத்திற்கு,  இந்த ஆட்டத்திற்கு ஒத்துக்கொண்டாய்.. உடனே செஞ்சோற்று கடன் என்று சொல்லி விடாதே..

என்னதான் செஞ்சோற்று கடனை தீர்ப்பதற்கு கர்ணன் தன் நண்பனுடன் இணைந்து போரிட்டு உயிரை விட்டாலும் அதுவே ஒரு காதலை முறிக்க வேண்டும் என்று சொல்லி இருந்தால் அவனுமே அதை ஒத்து கொண்டிருக்க மாட்டான்..

அது போல நீ ரொம்பவும் புத்திசாலி.. எல்லாத்தையும் அலசி ஆராய்ந்துதான் முடிவு எடுப்பாய்... அப்படி பட்டவள் செஞ்சோற்று கடனை தீர்ப்பதற்காக அடுத்தவன் காதலை பறிக்க மாட்டாய்..இன்னொரு பெண்ணின் வாழ்க்கையை அழிக்க உன்னால் முடியாது..  

அப்படி இருக்க, நான் வேறு ஒருத்தியை காதலிப்பது தெரிந்தும் இந்த ஆட்டத்திற்கு நீ ஏன் ஒத்துக்கொண்டாய்? அதோடு முதல் இரண்டு நாட்கள் என்னிடம் பயந்து இருந்தவள் பிறகு எப்படி என்னிடம் சகஜமாக பழக ஆரம்பித்தாய்.. “  என்றான் கண்கள் இடுங்க..

அவளோ அதைக் கேட்டதும் தன் உதட்டை பற்களால் அழுந்த கடித்துக்கொண்டவள் எதுவும் பேசாமல் தலை குனிந்து நின்றாள்..  

அதைக் கண்டவன் இன்னும் எரிச்சலானவன் வேகமாக கட்டிலில் இருந்து எழுந்தவன்

“சொல்லுடி.. எதுக்காக இந்த நாடகம் ஆடினாய்?  சில நேரம் நல்லவள் போல நடிக்கிறாய்.. என் மீது ரொம்ப அக்கறை போல காட்டி கொள்கிறாய்..

இதில் எது நிஜம்?  எது உன் நாடகம்?  எனக்கு தெரிந்து ஆகணும்..  உண்மையைச் சொல்.. எதுக்காக அன்னைக்கு இந்த திருமணத்திற்கு ஒத்துக் கொண்டாய்..?”  என்று கர்ஜித்து அவளை உறுத்து  விழித்தான்

அவளும் ஒரு நீண்ட மூச்சை எடுத்து விட்டு மெல்ல தன் இதழ் திறந்து பேச ஆரம்பித்தாள்..

“ரதன்... நான் சொல்வதை நீங்கள் கோபப்படாமல் கேட்க வேண்டும். அப்படி கேட்பதாக இருந்தால் சொல்கிறேன்.. “ என்றாள் வேதனையுடன்..

“இல்லை.. கோபமாக மாட்டேன்.. சொல்லு.. “ என்றான் மீண்டும் கர்ஜித்தவாறு...

“தாத்தா உங்களைப் பற்றியும் உங்கள் காதலைப் பற்றியும் சொல்லியே என்னை உங்களை மணக்கச் சொல்லி கேட்டார்.. அதைக்கேட்டதும் நானும் அதிர்ந்து தான் போனேன்..

வேற ஒருத்தியை காதலிப்பவரை எப்படி மணந்து கொள்ள முடியும் என்று முதலில் மறுத்தேன்..

ஆனால் அப்பொழுதுதான் தாத்தா சொன்னார் நீங்கள் அந்த சாந்தினியை காதலிக்கவே இல்லை என்று.. “ என்றாள் நிறுத்தி அவன் முகம் பார்த்தவாறு...

“வாட் நான்சென்ஸ்? நான் சதுவை லப் பண்றேன் னு சொல்லித்தானே அவளை கூட்டி வந்து ஜமீனில் எல்லாரிடமும் அறிமுக படுத்தினேன்.. அது அந்த ஜமீன்தாருக்கும் தெரியுமே.

அப்படி இருக்க உன்கிட்ட எப்படி மாற்றி சொல்லி இருக்கிறார் பார்.. இதுதான் அவருடையை குள்ளநரித்தனம்.. “ என்று பல்லை கடித்து கை முஷ்டியை இறுக்கினான்...

அவனை பார்த்து முறைத்தவள்

“ரதன்..ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு னு சொல்வாங்க.. அது உங்களுக்கு சரியா இருக்கு.. உங்ககிட்ட வேகம் இருக்கிற அளவுக்கு விவேகம் இல்லை.... நீங்க எப்படித்தான் சக்ஸஸ்புல்லா பிசினஸ் பண்றிங்களோ? “ என்றாள் அவனை முறைத்தவாறு...

“இடியட்..மைன்ட் யுவர் வோர்ட்ஸ்... விவேகம் இல்லாமலா என் சொந்த கால் ல நின்னு என் கம்பெனியை இந்த அளவுக்கு உயர்த்தி இருக்கேன்..? “ என்றான் முறைத்தவாறு..

“ஹ்ம்ம்ம் நிஜமாலுமே உங்க சொந்த கால் ல நின்னுதான் இவ்வளவு தூரம் முன்னேறுனீங்களா? “ என்றாள் புருவத்தை உயர்த்தி..

“அதில் என்ன சந்தேகம்? “ என்றான் மிடுக்காக..

ஹ்ம்ம்ம் அது சரி.. அந்த கதைக்கு அப்புறம் வரலாம்.. இப்ப உங்க காதல் கதையை முதலில் முடிக்கலாம்.

ரதன்...நீங்க தாத்தா மேல அதிகமா வெறுப்பை வளர்த்து வச்சிருக்கிங்க.. சின்ன வயதில் அவருடன் ஒட்டி உறவாடிய நீங்க அதுக்கு பிறகு எடுப்பார் கைப்பிள்ளையாய் ஆகிவிட, உங்கள் மனதில் நன்றாக நஞ்சை கலந்து தாத்தாவுக்கு எதிராக திருப்பி விட்டு விட்டனர்..

எந்த ஒன்னையும் நாம் எப்படி பார்க்கிறமோ அப்படியே தெரியுமாம்... தாத்தா கெட்டவர் னு நினைப்புலயே அவரை பார்க்க அவர் உங்க கண்ணுக்கு கெட்டவராகவே தெரிய ஆரம்பிச்சார்..

அவர் பண்ற  நல்லது எல்லாம் உங்க கருத்துக்கு வராமல் போனது தான் தவறாக போய்விட்டது...

தாத்தா உங்களை உங்க குடும்பத்தில் இருந்து பிரித்து ஊட்டி கான்வென்டில் சேர்த்துவிட்டார் என்றுதானே உங்களுக்கு முதன் முதலில் அவர் மீது கோபம் வந்தது..

ஆனால் அப்படி அவர் சேர்த்ததால் தானே நீங்களும் தைரியமாக நின்று எதையும் சமாளிக்கும் திறன் உள்ளவராக வளர முடிந்தது... மாமாவை போல நீங்க பயந்த சுபாவமாய் போய்விடக்கூடாது என்றுதான் தாத்தா உங்களை அப்பொழுது ஊட்டியில் சேர்த்தது...

ஆனால் அவர் பண்ணின தவறு அதை பற்றி உங்க கிட்ட விளக்கி கூறவில்லை.. நம்ம பேரன்தானே நம்மளை புரிஞ்சுப்பான் என்று மேம்போக்காக விட்டுவிட்டார்...

ஆனால் அந்த சின்ன விசயம் எப்படி பூதாகரமாக வளர்ந்து தாக்க போகிறது என்று அறியவில்லை அவர்..

அதே போல உங்கள் கல்லூரி படிப்பு, அம்மு கல்யாண விசயம் எல்லாம் உங்கள் நன்மைக்காகத்தானே பார்த்து பார்த்து செய்திருக்கிறார் தாத்தா..” என்று அவள் பேசி கொண்டிருக்க, அவள் முன்னே கையை நீட்டி  

“போதும் நிறுத்து... நீ  சொல்வது சரினாலும் ஒரு விஷயம் இடிக்குதே.. அம்முதான் தப்பானவனை விரும்பினாள்... அதை தடுக்க அவளுக்கு திருமணத்தை பண்ணி வைத்தார்..

ஆனால்  நான்? நான் என்ன தப்பு பண்ணினேன்? என் காதலை ஏன் பிரித்தார்.. நான் ஒருத்தியை காதலிப்பது தெரிந்தே எதுக்காக என்னை ஏமாற்றி உன் கழுத்தில் தாலி கட்ட வைத்தாராம்? .“ என்றான் அவளை முறைத்தவாறு...

“எல்லாத்துலயும் எல்லாருக்கும் நன்மை செய்யற ஜமீன்தார் அவருடைய செல்ல பேரன்,  அடுத்த ஜமீன் வாரிசு உங்களுக்கு போய் கெடுதல் பண்ணுவாரா?

அவர் ஒன்னும் காதலுக்கு எதிரி இல்லை ரதன்.. அப்படி இருந்தால் உங்க அப்பா அம்மா காதலை சேர்த்து வச்சிருக்க மாட்டார்... நீங்க உண்மையாகவே காதலித்து இருந்தால் கன்டிப்பாக தாத்தா உங்க காதலை சேர்த்து வச்சிருப்பார்... “ என்று நிறுத்தினாள் அவனை ஓரக்கண்ணால் பார்த்தவாறு..

அதை கேட்டு இன்னும் கடுப்பானவன்

“வாட் யூ மீன்? அப்ப என் காதல் பொய்யா? “ என்றான் கோப பார்வையுடன்...

“பொய் இல்லை ரதன்..அது காதலே இல்லை...  அப்படீனு தாத்தா சொன்னார்...

ப்ளீஸ்.. கோபப்படாமல் கொஞ்சம் ஆழ்ந்து யோசிச்சிங்கனா உங்களுக்கே தெரியும்...

என்னுடைய கணிப்பு சரியாக இருந்தால் நீங்க சாந்தினியை பார்த்த பொழுது கண்டதும் காதலுக்கு பதிலாக கண்டதும் தாத்தாவை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணமே முன்னால் வந்திருக்கும்...

தாத்தாவுக்காக தாத்தாவை ஜெயிக்கவேண்டும் என்பதற்காக அதுக்காக ஒரு கருவியாக சாந்தினியை தேர்ந்தெடுத்திங்க? நான் சொல்வது கரெக்ட் ஆ?”   என்றாள் அவனை ஊடுருவி ஆழ்ந்து பார்த்தவாறு..

அதை கேட்டு தூக்கி வாரிபோட்டது அதிரதனுக்கு.. அவசரமாக அவள் சொன்ன மாதிரி யோசித்து பார்த்தால் அவள் சொல்வது எல்லாம் உண்மையே..

அன்று சாந்தினியை பார்த்தபொழுது முதலில் கண் முன்னெ வந்தது  அவன் தாத்தாவின் முகமும் அவரிடம் அவன் செய்த சபதமும்தான்..

அவரை ஜெயிக்கவேண்டும் என்று எண்ணிதான் சாந்தினியை தேர்ந்தெடுத்தான்... அவள் அதை அப்படியே சொல்லவும் திடுக்கிட்டு போனான்..நிலாவும் அவன் முகத்தில் வந்த மாற்றத்தை குறித்து கொண்டு மேலும் தொடர்ந்தாள்..

“உங்க இரண்டு பேரையும் பார்த்ததுமே தாத்தா இதை கண்டு பிடிச்சிட்டார்..உங்க இரண்டு பேரிடமே காதல் இல்லை என்று கண்டு கொண்டார்.. காதல் என்று சொல்லி இருவருமே உங்களை ஏமாற்றுகிறீர்கள் என்று கண்டு கொண்டார்..

அதைத்தான் என்கிட்ட சொல்லி  இந்த திருமணத்திற்கு சம்மதிக்க சொல்லி கெஞ்சி கேட்டார்..

எனக்கும் வேற வழியில்லை.. ஒத்து கொண்டேன்.. ஆனாலும் எனக்குள் சிறு குற்ற உணர்வு.. உங்களை கட்டாயபடுத்தி இந்த பந்தத்தில் இணைய வைக்கிறேனே என்று.. அதனால்தான் திருமண்த்தன்றும் அடுத்த நாளும் எனக்குள் இருந்த குற்ற உணர்வால் உங்க முகம் பார்க்க முடியவில்லை..

ட்ரஸ்ட் மீ.. அடுத்த நாள் நான் வீட்டை விட்டு போக கிளம்பி விட்டேன்... “ என்று நிறுத்தினாள்..

அதை கேட்டு தன் கோபத்தை விட்டு ஆச்சர்யமானான் அதிரதன்..

அவளோ தொடர்ந்தாள்..

“அப்ப தாத்தா என்னை கண்டு கொண்டு என்னை அழைத்து அட்வைஸ் பண்ணினார்... அப்பொழுதுதான் அவர் அடிச்சு சொன்னார்.. நீங்கள் காதலிக்கவில்லை.. காதலிப்பதாக ஒரு மாயையை உருவாக்கி வச்சிருக்கிங்க..

சாந்தினியின் அழகில் தலை சுற்றி போய் விழுந்திட்டிங்க.. அது வெறும் அட்ராக்சன்... ஜஸ்ட் லஸ்ட் மட்டுமே..” என்று..

என்னை டெஸ்ட் பண்ணி பார்க்க சொன்னார்.. நானும் அன்று இரவே நீங்கள் சாந்தினியிடம் கொஞ்சி பேசும்பொழுது உங்களை கவனித்தேன்..  நீங்கள் உங்கள் காதலியிடம் கொஞ்சி பேசும்பொழுது உங்க கண்ணில் கொஞ்சமும் காதல் இல்லை...

மாறாக என்னை வெறுப்பேற்றணும் என்ற நோக்கம் மட்டுமே இருந்தது..அப்பயே எனக்கு கன்பார்ம் ஆகிடுச்சு.. தாத்தா சொன்னதுதான் உண்மை என்று..” என்று அதுவரை இறுக்கத்தில் இருந்தவள் கொஞ்சம் லேசாகி லேசாக இதழ் திறந்து புன்னகைத்தாள் நிலா..

அவள் சொல்வதை கேட்டு அதெல்லாம் இல்லை என்று அதிரதன் மறுத்து கூற வர

“ப்ளீஸ் ரதன்.. நான் சொல்லி முடிச்சிடறேன்..

அதெல்லாம் இல்லை.. இது உண்மையான காதல்தான்.. என்று சொல்லி நீங்களே உங்களை ஏமாத்திக்காதிங்க ரதன்...

நீங்கள் உண்மையாகவே சாந்தினியை காதலித்து இருந்தால் தாத்தா மிரட்டலுக்கு அடி பணிந்து என் கழுத்தில் தாலியை கட்டி இருக்க முடியாது..தாலியை வாங்கிய நொடி கூட உங்க காதல்தான் முக்கியம் என்று தூக்கி போட்டுவிட்டு சென்றிருக்கலாம்  

அடுத்து சாந்தினி உங்கள் மனதில் இருந்திருந்தால் என்னிடம் நீங்க நெருங்கி இருக்க முடியாது..

நடிப்புக்காக பழிவாங்க என்று சொல்லி நீங்கள்  என்னை அணைத்த அந்த முதல் அணைப்பில் ஒரு கணவனின் தேடலைத்தான் கண்டேன்.. அதற்கு பிறகும் சில சந்தர்ப்பங்களில் நீங்கள் மனம் தடுமாறி என்னிடம் நெருங்கினிங்க..

உங்க காதல் உண்மை என்றால் நீங்கள் சாந்தினியை காதலிப்பது உண்மை என்றால் சாந்தினி உங்கள் மனதில் இருக்கிறாள் என்றால் அது கட்டின மனைவியே என்றாலும் உங்கள் மனம் என்னை நாடி இருக்காது...

அப்படி நாடி இருக்கிறது என்றால் உங்கள் மனதில் சாந்தினி இல்லை.. ஆனால் நீங்கள் வறட்டு பிடிவாதத்திற்காக இல்லாத காதலை இருப்பதாக இழுத்து பிடித்து கொண்டு சுற்றி கொண்டிருக்கிங்க...

நீங்க மட்டும் அல்ல.. .சாந்தினிக்கும் அதே தான்.. அவளும் உங்களை மனதார காதலிக்கவில்லை... அவளுக்கு தேவை ஆடம்பரமான வாழ்க்கை ஜமீன் மருமகள் என்ற கௌரவம். அதுக்காகத்தான் உங்களை சுற்றி வந்து உங்களை கைக்குள் போட்டு கொள்ள முயல்கிறாள்..

அவளை சொல்லியும் தப்பில்லை.. இன்று நிறைய பெண்கள் அப்படித்தான் கனவு உலகில் மிதந்து கொண்டிருக்கினர்..

நீங்கள் எப்படி வேணாலும் டெஸ்ட் பண்ணி பாருங்க... அப்ப உங்களுக்கே புரியும்...

அஸ்திவாரம் ஸ்ட்ராங் ஆ இல்லாத  காதல் ரொம்ப நாளைக்கு நிலைக்காது ரதன்.. சாந்தினி மீது உங்களுக்கு இருப்பது காதல் இல்லை.. கவர்ச்சி. லஸ்ட்..

அவள் மீது இருக்கும் இந்த கவர்ச்சி,  லஸ்ட்,  ஒரு மோகம் தீர்ந்து விட்டால் அப்புறம் வாழ்க்கை கசக்க ஆரம்பிக்கும்.. ஏனென்றால் சாந்தினி உங்களுக்கு பொருத்தமானவள் இல்லை...

இதெல்லாம் தாத்தாவின் கணிப்பு.. அதனால்தான் உங்களை சுற்றி இருக்கிற அந்த மாய உலகத்தை விட்டு உங்களை வெளி கொண்டு வர இப்படி ஒரு அதிர்ச்சி வைத்தியம் செய்தார் தாத்தா....

ஆனால் அதையும் நீங்க தவறாகத்தான் புரிந்து கொண்டீர்கள்..நீங்கள் தாத்தாவை ஒதுக்கினாலும் அவர் உங்களை ஒதுக்கிவிடவில்லை..

உங்களை தொடர்ந்து பாலோ பண்ணி உங்களுக்கு வேண்டிய உதவியை மறைமுகமாக செய்து கொடுத்தவர்.. இன்னுமே செய்து கொடுத்து கொண்டிருப்பவர்...

உங்களுக்கு நினைவு இருக்கிறதா? உங்களுடய முதல் ப்ராஜெக்ட்..

அது தானாக உங்களை தேடி வந்த வாய்ப்பு இல்லை.. தாத்தா உங்களுக்காக உருவாக்கினது..” என்றாள் நிறுத்தி அவன் முகத்தை நேராக பார்த்து

அதை கேட்டவனோ அதிர்ந்து போனான்..! 

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!