நிலவே என்னிடம் நெருங்காதே-62

 


அத்தியாயம்-62

தாத்தாவிடம் கோபித்து கொண்டு வெறும் கையுடன் சென்னைக்கு வந்து கொஞ்ச நாள் ஆகியும் எந்த ப்ராஜெக்ட் ம் கிடைக்காமல் நண்பர்களுக்கு பாரமாக இருக்க பிடிக்காமல் மனம் ஒடிந்து போன பொழுதுதானே அந்த வாடிக்கையாளர் தானாக அவனை அழைத்திருந்தார்..

அதுதான் அவனை இன்னுமாய் உயிர்த்தெழ வைத்தது... அந்த வாய்ப்பு அந்த வாடிக்கையாளர் ?   தாத்தா ஏற்பாடு செய்தவரா? “ என்று அதிர்ந்தவன்

வாட்? என்ன உளறர ? “ என்றான் அதிர்ச்சியாக

“யெஸ் ரதன்.. தாத்தா சொல்லிதான் அந்த கடைக்காரர் உங்களை அனுகியது...

ஆனால் தன்னை பற்றி சொல்ல வேண்டாம் என்று சொல்லிவிட்டார் தாத்தா..

கூடவே உங்க அலுவலகத்தை ஆரம்பிப்பதுக்கும் உங்கள் சார்பாக முதலீடு செய்தது அவரே..உங்கள் நண்பர்களிடம் பணத்தை கொடுத்தவர் அதையும் உங்களிடம் சொல்ல வேண்டாம் என்று மறைத்து விட்டார்...  

அவ்வளவு ஏன்.. எத்தனையோ ப்ராஜெக்ட்களை  உங்களிடம் பரிந்துரை செய்தவர் அவரே..

அப்புறம் இந்த பங்களா நான் வாங்கியது? என் பங்களா என்று மார் தட்டி கொள்கிறீர்களே ! இந்த பங்களாவின் மதிப்பு என்ன தெரியுமா? உங்களுக்கு இவ்வளவு கம்மி விலையில் யாராவது  தருவார்களா?

நீங்கள் கொடுத்த தொகைக்கு மேல் தாத்தா இந்த பங்களாவின் உரிமையாளரிடம் நேரடியாக கொடுத்திருக்கிறார்... ஆனால் அதை எல்லாம் வெளியில் காட்டி கொள்ளவில்லை..

இப்படி உங்க ஒவ்வொரு வளர்ச்சியிலும் அக்கறையாக இருப்பவர் உங்களுக்கு எதிராக சதி செய்து விடுவாரா?

உங்களுக்கு சாந்தினி சரியில்லை பொருத்தமில்லை என்றதால் மட்டுமே அவர் இப்படி குறுக்கு வழியை பின்பற்றினார்...

உங்களை திருமண பந்தத்தில் சிக்க வைத்திருந்தாலும் நீங்கள் அதை மனதார ஏற்று கொள்ள வேண்டும் என்றுதான் நெஞ்சு வலி என்று சொல்லி உங்களை ஜமீனுகு வரவழைத்ததும் நம்மை கேரளாவுக்கு அனுப்பி வைத்ததும்..

எல்லாம் உங்களுக்காக.. அவர் அருமை பேரன் வாழ்வு நல்ல படியாக அமையவேண்டும் என்ற அக்கறையினால் மட்டுமே... மற்ற படி அவர்தான் பெரியவர் அவர் சொல்வதுதான் எல்லாரும் கேட்க வேண்டும் என்ற தலைக்கனம் என்றைக்கும் அவருக்கு இல்லை..

அதனால் தாத்தா மீது இருக்கும் கோபத்தால் அவரை பழி வாங்க என்று உங்கள் வாழ்க்கையை திட்டமிடாதிர்கள்.. உங்க வாழ்க்கை நீங்கள் வாழ..

உங்க எதிர்காலத்தை உங்களுக்காக உங்க மனதுக்கு எது பிடிக்குதோ அதுக்காக திட்டமிடுங்கள்..   

முதலில் நன்றாக ஆழ்ந்து யோசியுங்கள்.. உங்களை நீங்களே  அலசி ஆராய்ந்து  பாருங்கள்.. உங்கள் மனம் அப்ப உங்களுக்கு புரியும். இப்ப படுத்து  தூங்குங்க..

இந்த நேரத்தில் யோசித்தால் தலைவலிதான் வரும். நாளைக்கு ப்ரெஸ் ஆன  மண்டைல யோசியுங்கள்.. இப்ப படுத்து தூங்குங்க.. குட் நைட்..   என்று புன்னகைத்தவள் கட்டிலில் ஏறி படுத்து கொண்டாள்...

அதிரதனுக்கு மண்டையை பிய்த்து கொள்ள வேண்டும் போல இருந்தது...

“நான் இதுவரை காதலிப்பதாக எண்ணி கொண்டிருந்ததை காதலே இல்லை என்கிறாள்.. சதுவிடம் இருப்பது வெறும் கவர்ச்சி மட்டுமே என்கிறாள்.. அது உண்மையா? இல்லை இவள் என்னை குழப்புகிறாளா?

சாந்தினியிடம் இருப்பது காதல் என்றால் அவள்தான் என்னவள் என்றால் இவளிடம் என் மனம் படர்வது ஏன்?

இவளின் ஒவ்வொரு செயலையும் என் மனம் என்னை அறியாமலயே ரசிப்பது ஏன்? இவளை கண்டதும் எனக்குள் எழும் வேகம் எதனால்?

இப்பொழுதெல்லாம் சாந்தினியிடம் அந்த உணர்வு தோன்றுவதில்லை.. இன்று கூட ஹோட்டலுக்கு சென்ற பொழுது அவள் நெருக்கமாக அவனுடன் இழைந்த பொழுது அவனுக்கு அருவருப்பாகவே இருந்தது...

முன்பெல்லாம் அவளை கண்டாலே துள்ளி குதிக்கும் மனம் இப்பொழுது அவளை கண்டாலே எரிச்சல் அடைவது ஏன்? அவள் மனம் வருத்த படக்கூடாது என்றுதான் இன்று ஹோட்டலுக்கு அழைத்து சென்றது..

டின்னர் முடித்து இரவு பார்ட்டிக்கு போகலாம்.. பழைய படி டான்ஸ் ஆடலாம் என்று அவள் கண்களை கொட்டி படபடவென்று அடித்து வளைந்து நெழிந்து விதவிதமாக போஸ் கொடுத்து அவனை இழுக்க முயன்ற பொழுதும் ஏனோ அவனுக்கு அப்பொழுது கூட அவன் மனையாள் முகமே நினைவில் ஆடியது...

அவனுள் எந்த ஒரு கிளர்ச்சியும் ஏற்படவில்லை.. அவள் அழைத்ததை மறுத்துவிட்டு அவள் ஆசை பட்டதை வாங்கி கொடுத்து அவளை அவள் வீட்டில் விட்டுவிட்டு வந்துவிட்டான்..

விடைபெறும்பொழுது கூட அவன் கழுத்தை கட்டி கொண்டு தொங்கியவளை கண்ணால் அவனுக்கு அழைப்பு விடுத்தவளை வலுக்கட்டாயமாக பிரித்து நிறுத்தி திருமணத்திற்கு முன் இப்படி நடந்து கொள்வது தவறு என்று அவளுக்கு அறிவுறுத்திவிட்டு வந்து விட்டான்...

அவன் தாத்தாவிடம் சபதம் இட்ட மாதிரி சாந்தினியுடன் சேர்ந்து வாழும் சந்தர்ப்பங்கள் அதுவாக அமைந்தாலும் அவனால் அதை ஏற்று கொள்ள முடியவில்லை. அது ஏன் ? “ என்று மண்டையை உடைத்து கொண்டான்...

“அப்ப நான் காதலிக்கவில்லையா? இது காதல் இல்லையா?”  என்று மீண்டும் அதே கேள்வியே திரும்ப திரும்ப காதுக்குள் ஒலித்து அவன் மண்டையை குடைந்து கொண்டிருந்தது..

ரு மணி நேரம் சென்ற பிறகு எதேச்சையாக திரும்பி படுத்த நிலா கட்டிலில் அமர்ந்து கொண்டு தன் தலையில் இருபக்கமும் கையை வைத்து கொண்டு அமர்ந்து இருந்த தன் கணவனை கண்டதும் மனம் உருகியது...

உடனே எழுந்து அமர்ந்தவள் அவன் அருகில் நகர்ந்து அமர்ந்து கொண்டவள்

“என்னாச்சு பா? தூக்கம் வரலையா? “ என்றாள் கனிவுடன்...

அவள் குரல் கேட்டு அவள் பக்கம் திரும்பியவன்

“எல்லாம் இவளால்தான்.. இவள் மட்டும் என் வாழ்வில் வராமல் இருந்திருந்தால்,  இந்த குழப்பமும் வலியும் வேதனையும் இல்லாமல் இருந்திருக்கும்..

காதல் இருக்கோ இல்லையோ அந்த சதுவையே கல்யாணம் பண்ணிகிட்டு வாழ்ந்திருப்பேன்..

இப்ப பார்... தண்ணிக்கும் போகாமால் மேட்டுலயும் நிக்காமல் இழுபடும் மாடு மாதிரி இங்கயா?  அங்கயா?  இவளா அவளா னு மண்டை காயுது... “ என்று மனதுக்குள் புலம்பியவன் அவளை பார்த்து முறைத்து முகத்தை திருப்பி கொண்டான்...

“ஓ.. சாரி.. என்னாலதான இந்த குழப்பம்..! வெல்.... எதையும் ரொம்ப போட்டு குழப்பிக்காதிங்க.. சில நேரம் ரொம்ப யோசிக்காம நடக்கறது நடக்கட்டும் னு விட்டுவிட்டால் காலமே ஒரு வழியை காட்டும்..

அதனால் அந்த காலத்திடம் உங்க குழப்பத்தை விட்டுவிட்டு இப்ப நிம்மதியா தூங்குங்க ஜமீன்தாரே...

“நான் வேணா நெற்றியை பிடித்துவிடவா? “ என்றவள் அவன் சம்மதத்திற்கு காத்திருக்காமல் நெருங்கி அமர்ந்து அவன் நெற்றியின் இரு பக்கமும் இதமாக பிடித்துவிட்டாள்..

அவளின் மென்கரம் பட்டதும் இதமாக இருந்தது அவனுக்கு...

பல குழப்பங்கள் உள்ளுக்குள் முண்டி அடித்தாலும்,  அவள் கை தொட்டதும் ஒரு வித இதம் உள்ளுக்குள் பரவி  அவனை அமைதி படுத்தியது...

அந்த இதத்தில்...  அது கொடுத்த சுகத்தில்... கொஞ்சமாய் சரிந்து அமர்ந்து அவள் தோளில் முகம் புதைத்து கொண்டான்....

அவளுமே ஒரு தோழியாய்...  தாயாய்...  வாஞ்சையுடன் அவன் தலை கோத அந்த சுகத்தில் அப்படியே கண் அயர்ந்தான் அதிரதன்..! 

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!