நிலவே என்னிடம் நெருங்காதே-63

 



இந்த நாவல் ஏற்கனவே ஆடியோ நாவலாக வெளிவந்துள்ளது. 

ஒலி வடிவில் கேட்டு மகிழ, கீழ உள்ள லிங் ஐ கிளிக் பண்ணுங்க...நன்றி!! அன்புடன் பத்மினி செல்வராஜ்.


நிலவே என்னிடம் நெருங்காதே..!


அத்தியாயம்-63

வாவ்.... இந்த போட்டோ செமயா இருக்கு அண்ணி...இல்ல... இது அதைவிட சூப்பரா இருக்கு.. “ என்று ஆர்பரித்தாள் யாழினி..

அடுத்த நாள் காலையில் மணி ஒன்பது அளவில் காலை வேலைகளை முடித்துவிட்டு வரவேற்பறையில் அமர்ந்து இருந்தாள் நிலா...

அவள் அருகில் நெருங்கி அமர்ந்து கொண்டு தன் கையில் இருந்த அலைபேசியில் இருந்த புகைப்படங்களை ஒவ்வொன்றாக பார்த்து ரசித்து கொண்டிருந்தாள் யாழினி..

மனோகரியும் பாரிஜாதமும் இன்னும் எழுந்திருக்கவில்லை..

நெடுமாறன் இப்பொழுதெல்லாம் அதிகாலை எழுந்து தோட்டத்தில் நடப்பதும் அங்கிருக்கும் செடிகளுக்கு நீர் பாய்ச்சுவதும் என்று காலை வேளை சுறுசுறுப்பாக சென்றது அவருக்கு..

இரு பெண்களும் அமர்ந்து இருக்க,  அவர்களுக்கு எதிர்பக்கமாக ஜமீன்தார் அமர்ந்து அன்றைய தினசரியை புரட்டி கொண்டிருந்தார்...

அதே நேரம் மாடியில் இருந்து அலுவலகம் செல்ல தயாராகி கீழ இறங்கி வந்து கொண்டிருந்தான் அதிரதன்..

நேற்று இரவு பல குழப்பங்களுடன் கண் அயர்ந்தவனுக்கு நிலாவின் மசாஜ் இதமாக இருக்க,  அப்படியே உறங்கி இருந்தவன் காலையில் கண் விழித்ததும் கொஞ்சம் தெளிவானது போல இருந்தது..

இன்னும் அவன் குழப்பத்திற்கு விடை தெரியாத போதும் அதை தள்ளிவைத்து பார்க்க சொல்லி அவள் சொல்லி இருந்த அறிவுரை நினைவு வர, அவனும் அதை பின்னுக்கு தள்ளி அந்த நாளை ஆரம்பித்தான்..

வழக்கம் போல தன் உடற்பயிற்சிகளை முடித்து குளித்து அலுவலகம் கிளம்ப,  கண்ணாடி  முன்னாடி  நிக்க,  அடுத்த நொடி அவன் முன்னால் வந்து சிரித்தாள் நிலா..

இரண்டு நாள் முன்பு அவன் அலுவலகம் கிளம்பும்பொழுது அவள் அடித்த லூட்டிகள் எல்லாம் கண் முன்னே வர, அவன் இதழ்களில் தானாக புன்னகை பூத்தது..

அவன் விழிகள் அவனையும் அறியாமல் வாயில் பக்கம் சென்றது.. இன்றும் அதே போல வருவாளா என்று அவன் மனம் ஆவலாக எதிர்பார்த்தது..

அவன் காதுகளோ அவளின் குறும்பு பேச்சை கேட்க தவம் இருந்தன.. உடனே தன் தலையை தட்டி கொண்டு கிளம்பி வந்திருந்தான்..

வெளியில் வந்ததுமே அவன் பார்வை அவளைத்தான் தேடியது.. அவனை ஏமாற்றாமல் வரவேற்பறையில் அமர்ந்து தன் தங்கையுடன் சிரித்து பேசி கொண்டிருந்தாள் அவன் மனையாள்..!  

நேற்று இரவு முகம் இறுகி,  உடல் விறைக்க நின்றிருந்தவள் இன்று அந்த கவலை சிறிதும் இல்லாமல்,  அன்றலர்ந்த மலர்போல... பௌர்ணமி நிலவாய்...  பொழிவுடன் மலர்ந்து சிரித்தவளையே...  ஒரு நொடி இமைக்க மறந்து ரசித்திருந்தான்..

“ராட்சஸி... என்னை குழப்பி விட்டுவிட்டு இப்படி ஜாலியாக சிரித்து கொண்டிருக்கிறாள்.. கடன்காரி. “என்று உள்ளுக்குள் செல்லமாக திட்டி கொண்டவனோ இன்னுமாய் அதிசயமாய் அவளை பார்த்தான்..

அவன் எடுக்க போகும் முடிவு அவள் வாழ்க்கையை எப்படி வேண்டுமானாலும் பாதிக்கலாம்... எனக்கு சாந்தினிதான் வேண்டும் என்று சொல்லி விட்டால் இவள் நிலை...?  ஜமீன் மருமகள் என்ற பதவி கௌரவம், சொகுசான வாழ்க்கை எல்லாத்தையும் அவள் இழக்கவேண்டும்..

ஆனால் அதை எல்லாம் துச்சமாக மதித்து,  அவன் சந்தோஷத்தை மட்டுமே பார்த்து,  அவனுக்காக அவன் சந்தோஷத்துக்காக அவனை விட்டு விலகவும் தயாராக இருப்பவளை எண்ணி வியந்துதான் போனான்..

எத்தனை பெண்கள் தங்கள் கணவன் தன்னை விட்டு சென்றுவிடாமல் இருக்க, தன் கைக்குள்ளயே இருக்க வேண்டும் என்று முந்தானையில் முடிந்து வைத்து கொள்ள முயல்கிறார்கள்..

இவளோ மனைவி என்ற அத்தனை உரிமை இருந்தும்,  தன் கணவனுக்காக யாரென்றே தெரியாத அந்த சாந்தினிக்காக இவள் பாவம் பார்த்து தன் வாழ்க்கையை இழக்க தயாராக இருக்கிறாளே என்று ஆச்சர்யமாக இருந்தது..

அவளை உள்ளுக்குள் வியந்தவனின் பார்வை அவள் எதிர்புறம் அமர்ந்து இருந்த அவன் தாத்தாவிடம் சென்றது..

இதுவரை அவரை ஒரு எதிரியாக பாவித்து வந்தவன்...  முதன் முதலாய் தன் பகையை தள்ளி வைத்து அவரை ஆராய்ந்தான்..

நெற்றியில் விபூதியும் அதன் நடுவில் வட்டவடிவத்தில் சந்தனமுமாய் கம்பீரமாக அமர்ந்து இருந்தார் ஜமீன்தார்..

இந்த வயதிலும் அவரின் சுறுசுறுப்பும் ஆழ்ந்து யோசித்து திட்டமிடும் சூட்சுமம் அவன் கண் முன்னே வந்தது.  

அப்பொழுதுதான் நிலா சொல்லி இருந்த அவனுக்காக அவர் செய்திருந்த உதவிகள் எல்லாம் மீண்டும் ஒரு முறை காதில் ஒலித்தது..

இந்த வீட்டில் கூட அவரின் பங்கு இருக்கிறது எனும்பொழுது அன்று அவன் அவரை மட்டம் தட்டி பேசிய பொழுதும்,  வாய் திறந்து இதில் என் பங்கும் இருக்குடா மடையா என்று சொல்லாமல் அமைதியாக அவன் அவமான படுத்தியதையும் தாங்கி கொண்டவரை நினைத்து இன்னுமாய் அதிசயமாக இருந்தது...

“இந்த சிறிய பங்களாவை வாங்கின உடனே  இது என்னுடையது என்ற தலைக்கனம், கர்வம் வந்துவீட்டது..

ஆனால் அவரோ எனக்காக அத்தனை உதவிகள் செய்திருந்த பொழுதும் கொஞ்சம் கூட அலட்டி கொள்ளாமல் அமைதியாக இருந்தது இன்னுமாய் ஆச்சர்யத்தை கொடுத்தது..

இதைத்தான் நிறை குடம் தழும்பாது என்று சொல்லி வைத்தார்கள் போல.. நான் ஒரு குறை குடம்.. அதுதான் ரொம்பவும் ஆடிவிட்டேன்...”  என்று மனதுக்குள் இடித்துரைக்க, தன் தாத்தாவையே ரசித்து பார்த்தான் நீண்ட நாட்களுக்கு பிறகு...

அதே நேரம் அவன் பார்வை உணர்ந்து ஜமீன்தாரும் மெல்ல விழிகளை உயர்த்தி மேலே பார்க்க அவர் பார்வையை கண்டதும் உடனே தன் பார்வையை வேறு பக்கமாக மாற்றி கொண்டான் பேரன்..!  

அதை கண்டு கொண்ட அவரும் உள்ளுக்குள் சிரித்தவாறு தன் மீசையை நீவி விட்டு கொண்டே தினசரியில் பார்வையை பதித்தார்...

“குட்மார்னிங் ணா.... ஒரு நிமிஷம் இங்க வாயேன்.. “ என்றாள் மலர்ந்து சிரித்த யாழினி..

“என்னடா குட்டிமா.. காலையிலயே இவ்வளவு ப்ரெஸ் ஆ இருக்க? என்ன ஸ்பெஷல் ? “என்றவாறு நிலாவை ஓரக்கண்ணால் பார்த்தவாறு இயல்பாக அவள் அருகில் சென்று அமர்ந்தான் அதிரதன்..

நிலாவுக்கோ திடீரென்று அவன் வந்து அவள் அருகில் அமரவும் படபடப்பாக இருந்தது...

இத்தனை நாட்கள் அவளாகத்தான் அவனை நெருங்கி வம்பு செய்திருக்கிறாள்... அதனால் பெரிதாக எதுவும் தெரியவில்லை.. இன்று அவனாக அவள் அருகில் அமரவும் உள்ளுக்குள் சிலிர்த்தது..

அதே நேரம்

இந்த சந்தோஷத்துக்கு ஆயுட்காலம் எவ்வளவு நாளோ.. ஒருவேளை அவன் தன் காதலில் உறுதியாக நின்றுவிட்டால் அவள் சொன்ன மாதிரி அவனை விட்டு விலக வேண்டும் என்று மனம் இடித்துரைக்க உடனே தன் உள்ளுக்குள் பொங்கிய வெள்ளத்திற்கு அணை போட்டு தடுத்தாள்..

தன்னை கட்டு படுத்தி கொண்டு இயல்பாக அவனை பார்த்து புன்னகைத்தாள்.. .அவனுமே புன்னகைத்தவன் தன் தங்கையை பார்க்க அவளோ தன் அலைபேசியை அவனிடம் காட்டி  

“அண்ணா,,, நீங்க கேரளாவுக்கு ஹனிமூன் சென்ற போட்டோஸ் எல்லாம் அந்த குட்ட கவுன் லியா இப்பதான் அனுப்பி இருக்காங்க.. வாட்ஸ்அப் ல நம்ம பேமலி க்ரூப் ல போட்டு இருக்காங்க... அதைத்தான் பார்த்து கொண்டிருக்கிறோம்..

நீயும் அண்ணியும் எவ்வளவு சூப்பரா இருக்கிங்க தெரியுமா? மேட் பார் ஈச் அதர்..சூர்யா ஜோ மாதிரி,  அஜித் சாலினி மாதிரி,  ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சன் மாதிரி ம்கூம் அவங்களைவிடவே உங்க பேர்தான் டாப்..

இந்த போட்டோல பார்... எவ்வளவு ரொமாண்டிக் ஆ இருக்கு.. “

என்று அவர்கள் இருவரும் இருந்த புகைப்படங்களை எல்லாம் காட்டினாள் யாழினி..

அதை எல்லாம் பார்த்த இருவருக்குமே அந்த நாட்கள் கண் முன்னே வந்தது...

அதுவும் அந்த படகில் ரம்மியமான சூழலில் அவன் வெற்று மார்புடன் நின்றிருக்க அவளோ தலைக்கு குளித்த முடியை லூசாக பறக்க விட்டிருந்தவள் அவன் மார்பில் சாய்ந்தபடி நின்றிருக்க அவன் கை அவளை மெல்ல தன்னோடு சேர்த்து அணைத்தபடி இருவருமே ஒரு வித மயக்கத்தில் ஏகாந்த நிலையில் சிரித்து கொண்டிருந்தனர்.. .

லியாவின் அந்த நவீன கேமரா அவர்களின் நிலையை அவர்களின் உணர்வுகளை துல்லியமாக படம் பிடித்திருக்க,  அதை பார்த்த இருவருக்குமே உள்ளுக்குள் சிலிர்த்து போனது..

இருவருமே அன்றிரவுக்கு சென்று வந்தனர்.. அதே மாதிரி மீண்டும் ஒரு சந்தர்ப்பம் அமையாதா என்று இருவருக்குள்ளேயும் ஏக்கம் பரவியது..

எதேச்சையாக இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள,  இருவர் கண்ணிலும் இருந்த அந்த ஏக்கம் மற்றவர்களுக்கு தெரிந்துவிட இருவருமே தங்களை கட்டு படுத்தி கொண்டு ஒரு அசட்டு சிரிப்பை சிரித்து சமாளித்தனர்...

அந்த படகில் இருந்த போட்டோவை உற்று பார்த்த யாழி

“அண்ணி... இங்க பாருங்க.. இந்த நிலா உங்களையே பொறாமையா பார்த்துகிட்டு இருக்கு... அதைவிட நீங்கதான் அழகு நிலாவா ஜொலிக்கறிங்க உங்களுக்கு நிலா னு சரியான பெயர்தான் வைத்திருக்கிறார்கள்..

ஆமா அண்ணி.. உங்களுக்கு யார் இந்த பெயரை வைத்தார்கள்? “ என்றாள் கண் சிமிட்டி ஆர்வமாக..

நிலாவும் மலர்ந்து சிரித்தவள்

“ஹ்ம்ம்ம் தெரியலையே யாழி குட்டி... நான் பிறந்த உடனே என் அம்மா இறந்துட்டாங்களாம்.. அவர் மேல் பாசமாக இருந்த என் அப்பா என் அம்மா நினைவாலயே என்னை கூட தூக்காமல் கொஞ்ச நாளிலயே இறந்துட்டாராம்...

என்னை வளர்த்ததெல்லாம் என் தாத்தா தான்.. அப்ப என் தாத்தாதான் இந்த பெயரை வைத்திருப்பார்..

ஆனால் தாத்தாவுக்கு இந்த மாதிரி வித்தியாசமாக பெயர் வைக்க தெரியாதே..!  அப்ப யார் வைத்திருப்பார்கள் ? “ என்று நிலாவும் கன்னத்தில் கை வைத்து யோசித்தவள் ஏதோ நினைவு வந்தவளாக எதிரில் அமர்ந்து இருந்த ஜமீன்தாரை பார்த்தவள்

“தாத்தா... உங்களுக்கு தெரியுமா? எனக்கு யார் இந்த பெயரை வைத்தது என்று? “ என்றாள் ஆர்வமாக..

தன் தினசரியில் இருந்து தலையை நிமிர்த்தியவர் தன் எதிரில் அமர்ந்து இருந்த தன் பேரனை ஒரு பார்வை பார்த்து சிரித்தவாறு

“எல்லாம் உன் புருஷன்தான் அம்மணி உனக்கு பெயர் வைத்தது... “ என்றார் தன் மீசையை நீவி விட்டு கொண்டே பெருமையாக...

அதை கேட்ட எதிரில் இருந்த மூவருமே அதிர்ந்து அதிசயித்தனர்.. யாழி முந்தி கொண்டு

“அண்ணனா தாத்தா? அண்ணனா அண்ணிக்கு நிலவினி னு பெயர் வைத்தது? எப்படி தாத்தா?  “ என்றாள் ஆர்வமாக

“ஆமான்டா யாழி குட்டி... உன் அண்ணி பிறந்த அன்று நானும் உன் அண்ணனும் என் நண்பன் மற்றும் உன் அண்ணியின்  தாத்தாவுமான ராமுவை பார்க்க சென்றோம்...

அப்பொழுது உன் அண்ணனும் என் கூட வந்திருந்தான்..

உன் அண்ணி பிறந்த பொழுதே கொலுகொலுவென்று வெள்ளை வெளேர் என்று பால் நிலாவாய் ஒளிர்ந்தாள்.. அதுவரை அவள் தாத்தாவின் கையில் சிணுங்கி கொண்டு இருந்தவள் உன் அண்ணனை பார்த்ததும் சிரிக்க ஆரம்பித்து விட்டாள்..

அவனும் உடனே குஷியாகி கொஞ்சம் கூட பயம் இல்லாமல் உன் அண்ணியை கையில் தூக்கி  கொண்டான்.

“தாத்தா.. இந்த பாப்பா ரொம்ப அழகா இருக்கா... என்ன பெயர் இவளுக்கு? என்று கேட்க,  என் நண்பனும்

“இன்னும் பேர் வைக்கலை சின்ன ஜமீன்தாரே... நீங்களே ஒரு பெயர் வைங்க. “  என்று சொல்ல இவனும் யோசிக்காமல்

“இந்த குட்டி பாப்பா நிலா மதிரியே இருக்கா.. அதனால் நிலா னு வைக்கலாம் தாத்தா... நிலா... கொஞ்சம் வித்தியாசமா நிலவினி னு வைக்கலாம்...

சரியா? “ என்று சிரிக்க அதே பெயரை என் நண்பனும் வைத்துவிட்டான்... இதுதான் உன் அண்ணிக்கு பெயர் வைத்த கதை...“ என்று கண் சிமிட்டி சிரித்தார்..

“வாவ்.. சூப்பர் ணா... உன் பொண்டாட்டிக்கு நீயே பெயர் வைத்த பாக்கியம் உனக்குத்தான் கிடைச்சிருக்கு போ.. அப்ப அப்பயே நீ அண்ணியை லவ் பண்ண ஆரம்பிச்சிட்டியா?

அதுக்காகத்தான் உன் கம்பெனிக்கு நிலா சாப்ட்வேர் னு பெயர் வச்சிருக்கியா... செம... இத சொல்லலையே.. “ என்று கண் சிமிட்டி சிரிக்க,

“ஏய் வாலு.... சும்மா இரு டி.. வயதுக்கு தகுந்த பேச்சு பேசு.. “ என்று தன் தங்கையின் காதை திருகினாலும் அவன் மனம் துள்ளி குதித்தது..

அவனுக்கு தாத்தா சொன்ன நிகழ்வு நியாபகம் வந்தது..

ஒரு மெலிந்த வயதான பெரியவரின் கையில் இருந்த அந்த குட்டி தேவதையை அள்ளி கொண்டது இன்னும் நினைவு இருந்தது..

அன்று நிலா என்று பெயர் வைத்ததும் அவன் வைத்த அந்த நிலா என்ற பெயரும் அவன் மனதில் பதிந்து போனது அன்றில் இருந்துதான்..

“அப்படி என்றால்?  என் மனதில் சிறுவயதில் இருந்தே பதிந்து இருப்பவள் இவள்தானா? “ என்ற புது குழப்பம் சேர்ந்து கொண்டது...

*****

தே நேரம் அவனை மேலும் குழப்ப விடாமல் அவன் நண்பன் அபி அவனை அலைபேசியில் அழைத்திருக்க, உடனே அன்றைய அலுவலக வேலை நியாபகம் வர அதற்குமேல் யோசிக்க முடியாமல் அவர்களிடம் விடை பெற்று தன் அலுவலகத்திற்கு கிளம்பி சென்றான் மனதில் உழற்றும் குழப்பங்களுடனேயே...!


Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!