பூங்கதவே தாழ் திறவாய்-24
இதழ்-24
அன்று வெள்ளிக்கிழமை... சென்ற சனிக்கிழமை அவளை அந்த இயற்கை சாட்சியாக மணம் முடித்தவன் அதன் பின்
தாமதிக்காமல் தங்கள் தாம்பத்திய வாழ்க்கையை ஆரம்பித்து விட, புது மண
தம்பதிகளுக்கே உரித்தான அத்தனை இன்பங்களையும் அனுபவித்தாள் தீக்சா...
இருவருமே
ஒருவரை ஒருவர் உருகி காதலித்து மணந்ததால் ஒவ்வொரு நாளுமே அவர்களுக்கு சொர்க்கமாக
கடந்து சென்றது...
கடந்த
ஐந்து நாட்களில் இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் நொடி கூட பிரியாமல் ஒருவரில்
ஒருவராக கலந்து அந்த சுகத்தை அனுஅனுவாக ரசித்து அனுபவித்து வந்தனர்...
தன்
கணவனின் அன்பு மழையிலும் காதல் மொழியிலும் கணவனின் தீண்டலிலும் திளைத்து முதல்
நாள் இரவு வெகு நேரம் கழித்து உறங்கியவள் மறுநாள் காலை தாமதமாகவே கண் விழித்தாள் தீக்சா....
எழுந்தவுடன்
தன் கணவனை ஒரு முறை பார்க்க அவனோ ஆழ்ந்து
உறங்கி கொண்டிருந்தான்....
அவனின்
நேற்றைய இரவு தீண்டல்கள் கண் முன்னே வர, மீண்டும் சிவந்து
போனாள்.. அவன் அருகில் இன்னும் ஒட்டி கொண்டு அவனை அணைத்து கொண்டே அவனை ரசித்து
கொண்டிருந்தாள்...
பின்
நேரம் ஆவதை உணர்ந்து மனமே இல்லாமல் எழுந்து வேகமாக குளியலறைக்குள் சென்று குளித்து
தயராகி வந்தவள் தன் கணவனை எழுப்ப அவனோ புரண்டு புரண்டு படுத்தான்....
“நந்தன்
.. எழுந்திருங்க... கான்ப்ரன்ஸ்க்கு லேட் ஆச்சு.. இன்னைக்கு முக்கியமான டாபிக்..
சீக்கிரம் போகணும் ... ஒழுங்கா எழுந்து கிளம்புங்க... “ என்று அவனை எழுப்ப அவனோ அசையாமல் படுத்திருந்தான்...
உங்களை
இப்படி எல்லாம் எழுப்பினால் போதாது..
இருங்க வர்ரேன்.. “ என்று அவன் அருகில் வந்து அவன் முதுகில் ஒரு அடி
அடிக்க வர, டக்குனு கண் விழித்தவன் தன் அருகில் இருந்த அவளின் மலர்ந்த முகத்தையும் அவள்
மீதிருந்து வந்த அந்த சோப் வாசனையும் அவனை இன்னும் சீண்ட அப்படியே அவளை இழுத்து தன்
மேல் போட்டு கொண்டான்.....
“ஐயோ..!!!
என்ன இது நந்தன் ??.. நான் இப்பதான் குளிச்சிட்டு ரெடியாகி இருக்கேன்... இப்படி என்னை அழுக்கு பண்ணாதிங்க.. டைம் ஆகுது... சீக்கிரம்
போகணும்.. “ என்றாள் குழைந்தவாறு...
“ஹா
ஹா ஹா... கான்ப்ரன்ஸ் எங்க போய்ட போகுது பொண்டாட்டி..
உன்னை
இப்படி பார்க்க எனக்கு என்னென்னவோ தோணுது தெரியுமா?? பேசாம கான்பிரன்ஸ் ஸ்கிப் பண்ணிட்டு
ரூம்லயே இருக்கலாமா?? “ என்றான் கண் சிமிட்டி...
“சீ..
புத்தி போகுது பார்... ஒரு நைட் உங்களை சமாளிக்கிறதே எனக்கு போதும் போதும் னு ஆய்டறது..
இதுல ஒரு நாள் புல்லா வா.... அம்மாடியோ.. என்னால் முடியாதுப்பா...
நல்ல
பையனா சீக்கிரம் கிளம்பி ரெடியாகி வாங்க... அப்படி இல்லைனா உங்கள விட்டுட்டு நான்
மட்டும் போய்டுவேன்... “ என்றாள் கை நீட்டி மிரட்டியவாறு....
அவன்
முதல் முதல் பார்த்த அந்த தீக்சாவுகும் இந்த தீக்சாவுக்கும் நிறைய வித்தியாசங்கள்.. நிறைய
மாறி விட்டாள்.. ஆம் தன் காதல் மழையால் அவளை முழுவதுமே மாற்றிவிட்டான் அவள்
கணவன்...
அவள்
முகத்தையே ஆசையுடன் பார்த்து கொண்டிருக்க,
“ஹலோ..
என்ன இங்க லுக்??..சீக்கிரம் எழுந்திருங்க.. இப்ப என்னை விடுங்க.. “ என்று கொஞ்சியவாறு அவன்
பிடியிலிருந்து வெளி வர திமிறினாள்....
ஆனாலும்
அவளை உடனே விடாமல் தன் மார்பில் கிடந்தவளின் முக வடிவை தன் கைகளால் அளந்து கொண்டே
“ஐம்
சோ ஹேப்பி.. ரதி பேபி... இந்த உலகத்துலயே
ரொம்ப சந்தோசமானவன் யார் னா அது நான்தான்.... தேங்க்யூ பார் எவ்ரிதிங்க்...
தேங்க்யூ பார் ஷோவிங் மீ டிப்ப்ரன்ட் வோர்ல்ட்....ஐ லவ் யூ மேட்லி... நீ எப்பவும்
என்கூடவே இருக்கணும்... ” என்று கண்ணில் காதலுடன் அவளை இன்னும் இறுக்கி அணைத்து கொண்டான்...
“ஹ்ம்ம்ம்
நானும்தான் நந்தன்... எனக்கும் அதே பீல்தான் நந்தன்.. ....ஐ டூ லவ் யூ மேட்லி.. “ என்று அவன் மார்பில் முத்தமிட்டாள்....
அதில்
இன்னும் கிறங்கியவன் அடுத்த கட்டத்திற்கு முன்னேற முயல, அதற்குள் அவன்
அலைபேசி ஒலித்தது....
அதில்
கலைந்தவன்
“சே...
யார் இந்த கரடி.. “ என்றவாறு அலைபேசியை எடுக்க, அதற்குள் தீக்சா அவனிடமிருந்து திமிறி வெளி வந்து எழுந்து நின்று கொண்டாள்...அவளை
பார்த்து முறைத்தவாறு அலைபேசியை காதில் வைத்து
“ஹ்ம்ம்
சொல்லுடா கரடி.... “ என்றான் அபி எரிச்சலுடன்...
மறுமுனையில்
இருந்த ஆனந்த் க்கு சந்தேகமாக இருந்தது... தான் சரியான எண்ணிற்கு தான் அழைத்தேனா
என்று மீண்டும் ஒரு முறை சரி பார்த்தவன்
“என்னடா
மச்சான்.. புது பேர் எல்லாம் வச்சு கூப்பிடற... என்னாச்சு?? “ என்றான் சிரித்தவாறு...
“ஹ்ம்ம்
குழந்தை அழுதுச்சாம்... “ என்றான் அபியும் சிரித்தவாறு...
“அடப்பாவி...
உனக்கு இன்னும் கல்யாணமே ஆகலை... அதுக்குள்ள குழந்தை வரைக்கும் போய்ட்ட... அவ்வளவு
பாஸ்ட் ஆ டா நீ.. “ என்று மறுமுனையில் வாரினான் ஆனந்த் ....
“யார்
சொன்னா எனக்கு கல்யாணம் ஆகலை னு??..
எனக்கு
கல்யாணம் ஆய்டுச்சு.. அதுக்கு அடுத்து பர்ஸ்ட்
நைட், செகன்ட்
நைட் , தேர்ட் நைட் கூட முடிஞ்சிருச்சுடா கரடி... “ என்று தன் அலைபேசியை கையால் மூடி கொண்டு மெதுவாக
தீக்சாவை பார்த்து கண் சிமிட்டி சொல்ல, அவளோ மீண்டும் சிவந்து போனாள்..
அவளின்
சிவந்த முகத்தை ஆசையோடு ரசித்தவன்
மறுமுனையில் ஆனந்த் எதுவோ கத்தி கொண்டிருக்க தன் கவனத்தை கஷ்டபட்டு திருப்பி அவன் சொல்வதை
கேட்டான்...
ஆனந்த்
அபியை ஏதேதோ திட்டி கடைசியில்
“டேய்..
நேரமாகுது சீக்கிரம் வா.. அந்த தீக்சாவும் வரலை இன்னும்.. இரண்டு பேரும் இல்லாம
எங்களுக்கு போர் அடிக்குது..
சீக்கிரம்
வந்து சேர்.. வரும்பொழுது அப்படியே தீக்சாவையும்
கூட்டிகிட்டு வந்திடு... “ என்று போன வைத்தான்
ஆனந்த்..
“கண்டிப்பா
மச்சான்.. என் ரதி பேபி இல்லாம நான் எங்கயும் போக மாட்டேன்.. “என்று மீண்டும் கண் சிமிட்டி போனை வைத்து படுக்கையில்
இருந்து எழுந்தவன் அருகில் நின்று கொண்டிருந்தவளையே மேலும் ஆசையாக பார்த்து கொண்டு
அவள் அருகில் செல்ல, அவளோ அவனை முறைத்து
“ஐயோ..
போய் முதல்ல குளிச்சிட்டு கிளம்புங்க நந்தன.... நான் என்ன ஓடியா போகப் போறேன்..
இன்னும் இரண்டு நாளைக்கு இங்க தான் இருக்க போறோம்..
என்னை
மெதுவா பார்த்துக்கலாம்.. “ என்றவள் அவன் முதுகில் கை வைத்து அவள் பலத்தை எல்லாம் திரட்டி
அவனை குளியல் அறை பக்கம் தள்ளி சென்றாள்...
அவனும்
அவளின் அந்த செய்கையை ரசித்தவாறு அடம் பிடித்து
அவளிடம் அடி வாங்கி உள்ளே சென்றான்...
ஆனாலும்
சோப் இல்லை டவல் இல்லை என்று இவளை ஒவ்வொன்றுக்கும்
பாத் ரூமிற்கு அழைக்க, அவள் ஒவ்வொரு முறை சென்ற பொழுதும்
அவளை இழுத்து அணைத்து இதழ் முத்தம் கொடுத்தே விடுவித்தான்...
அவள்
அணிந்திருந்த ஆடை எல்லாம் மீண்டும் நனைந்திருந்தது...
“சே..
இந்த நந்தன் ஐ சமாளிக்கவே முடியலையே.. அந்த நந்த கோபாலன் மாதிரி இந்த நந்தனும்
சரியான குறும்புக்காரன் தான்.... சரியான பிடிவாதக்காரன்.. “என்று திட்டி கொண்டே
உள்ளுக்குள் பூரித்து போயிருந்தாள் தீக்சா...
பின்
அறையில் கழைந்து கிடந்த ஆடைகளை எல்லாம்
அடுக்கி வைத்து விட்டு அவர்கள் கான்பிரன்ஸ் செல்வதற்கான பேக் மற்றும் அவன்
லேப்டாப் எல்லாம் எடுத்து தயாராக வைத்திருந்தாள்..
அவனும்
குளித்து முடித்து தன் ஆடையை அணிந்து கொண்டு அவள் முன்னே வந்தான்.. அங்கிருந்த கண்ணாடியில் அவன் உயரத்துக்கு குனிந்து தலை
முடியை வார, அவனையே இமைக்க மறந்து காதலோடு பார்த்து கொண்டிருந்தாள் தீக்சா...
எத்தனை
கம்பீரமானவன்..!!! எவ்வளவு பெரிய தொழில்
சாம்ராஜ்ஜியத்திற்கு தலைவன்...அவனை கண்டு மயங்கி நிக்காத பெண்கள் இல்லை... கான்பிரன்ஸ்ல
யே பார்த்தாள் தான்... எத்தனை பொண்ணுங்க
அவனிடம் வந்து வழிந்து நின்றதை...
ஆனால்
அவர்களை எல்லாம் ஒரு பார்வையில் தள்ளி நிறுத்தி வைத்தான்...
தன்னிடம்
மட்டும் இப்படி சிறு பிள்ளையாக நடந்து கொள்கிறானே...” என்ற பெருமையும் அவன் உயிர் நான் என்ற கர்வமும்
பூரித்திருக்க தன் கணவனையே காதலோடும் ஆசையோடும் பார்த்திருந்தாள் தீக்சா...
அவளின்
அந்த காதல் பார்வையை கண்ணாடியில் கண்டு
கொண்டவன்
“ஹோய்..பொண்டாட்டி...
இப்படி தெரியாம திருட்டு தனமா என்னை சைட்
அடிக்க தேவை இல்லை.. என் முன்னால வந்து தைர்யமா சைட் அடி பார்க்கலாம்... “ என்று
சிரித்தான்..
அவன்
தன்னை கண்டு கொண்டதை கண்டு கன்னம் சிவந்தவள் தன் உதட்டை கடித்துகொண்டாள்.... பின்
தன் வெக்கத்தை மறைத்து கொண்டு
“ஐய...
யார் உங்களை போய் சைட் அடிச்சாங்களாம்..
அந்த கண்ணாடி அழகா இருக்கேனு பார்த்துகிட்டிருந்தேன்... “ என்றாள் உதட்டை சுழித்து...
உடனேயே
அவன் கொடுத்த தண்டனை நினைவு வர, மீண்டும் கன்னம் சிவந்து உடனே தன் சுழிப்பை நிறுத்திக் கொண்டாள்...
அவனும்
அதை கண்டு கொண்டு
“ஹா
ஹா ஹா பரவாயில்லையே.. என் ட்ரீட்மென்ட் நல்லாதான் வேலை செய்யுது... “ என்று கண் சிமிட்டினான்..
அவளோ
செல்லமாக சிணுங்கி மீண்டும் நேரம் ஆவதை உணர்த்த, அவனும் மீண்டும் ஒரு முறை கண்ணாடியில்
தன்னை பார்த்து கொண்டு தன் பிரீப் கேசை எடுத்துக் கொண்டு கதவை நோக்கி நடந்தான்...
அவளும்
அவனுடன் இணைந்து நடக்க கதவு அருகில் சென்றவன் ஏதோ மனதில் தோன்ற, உடனே நின்றவன் தன்
அருகில் நின்றவளின் முகத்தை கையால் ஏந்தி முரட்டுதனமாக அவள் இதழில் முத்தமிட்டான்...
அழுந்த அழுந்த முத்தமிட்டான்...
ஏனோ
அது வித்தியாசமாக இருந்தது தீக்சாவுக்கு..
இதுவரை
எத்தனையோ முறை முத்தமிட்டிருக்கிறான்... அதில் எல்லாம் காதல் தான் கூடி
இருக்கும்... இந்த முத்தத்தில் ஏதோ அவளை
விட்டு விடாமல் தன்னுள் புதைத்து வைத்து கொள்ளும்
வெறி இருந்தது.....
அவள்
இதழை விட்டவன் தன்னோடு சேர்த்து இறுக்கி அணைத்து கொண்டான்... அந்த அணைப்பிலும் அதே
உணர்வுதான் அவளுக்கு....
அவன்
இறுகிய அணைப்பில் இருந்தவள் மெல்ல தலையை நிமிர்த்தி
“என்னாச்சு
நந்தன்??
“ என்றாள் அவன் உணர்வை புரிந்து கொண்டவளாக
தன்னை
ஒரு அணைப்பில் புரிந்து கொண்ட தன் மனைவியை
நினைத்து பெருமையாக இருந்தது அவனுக்கு...
“நத்திங்....
ரதி பேபி.. பட் சம்திங் கோயிங் டு கேப்பன்ட்...நீ என்னவோ என்னை விட்டு போகப்போகிற
மாதிரி ஒரு பீல் திடீர்னு... “ என்றான் தன் கண்ணை இறுக மூடி...
அவன்
வலி அவளுக்கு புரிந்தது...அவனின் இறுக்கி மூடிய இமைகளை தன் மெல்லிய கரங்களால்
வருடினாள்.... பின் அவன் பயத்தை கண்டு
சிரித்தவாறு
“ஐயோ..
நந்தன்... அப்படி எல்லாம் எதுவும் ஆகாது..
நான் எதுக்கு உங்களை விட்டு போக போறேன்?? உங்களுக்கு தோன்றுவது சும்மா.. அப்படி எல்லாம் எதுவும் ஆகாது... “ என்று சொல்லி முடிக்கு முன்னே அவள் அலைபேசி அலறியது...
உடனே
அவனும் அவளை விலக்க, தன் ஹேன்ட்பேக்கை திறந்து அந்த அலைபேசியை எடுத்து காதில் வைத்தவள் அதில் சொன்ன செய்தியை
கேட்டு கலவரமானாள் தீக்சா...!
Comments
Post a Comment