பூங்கதவே தாழ் திறவாய்-25

 


இதழ்-25

 

து வரை பௌர்ணமி நிலவாக சிரித்து கொண்டிருந்த தீக்சாவின் முகம்,  அலைபேசியில் சொன்ன செய்தியை கேட்டு  உடனே கிரகணம் மூடும் வானாமாக  இருண்டு விட்டது...

“ஓ... நான் இப்பவே கிளம்பி வர்ரேன்.. ப்ளீஸ் டேக் கேர் ஹிம்...ஐ நீட் ஹிம்... ப்ளீஸ் ப்ளீஸ்.... “ என்றாள் அவசரமாக....

பின் தன் அலைபேசியை மூடியவள், நந்தன் கேட்குமுன்னே

“நந்தன்... அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் ஆம் .. ஹாஸ்பிட்டல் ல அட்மிட் பண்ணி இருக்காங்களாம். பக்கத்து போர்சன் அங்கிள் தான் போன் பண்ணினார்.. அம்மா அழுதுகிடே இருககங்களாம்....

நான் இப்ப உடனே போகணும்.. ப்ளீஸ் ஏதாவது  செய்யுங்களேன்.. “ என்றாள் பதற்றத்துடன்..

அவள் முகத்தில் இருந்தே முன்பே ஓரளவுக்கு நடந்ததை  புரிந்து கொண்டவன்

“ஸ்யூர் .. ரதி... சென்னைக்கு ப்ளைட் அடிக்கடி இருக்கு.. நீ இன்னும் 3 ஹவர்ல அங்க இருக்கலாம்.. நான் உடனே நம்ம இரண்டு பேருக்கும் டிக்கட் போட சொல்றேன்... “  

“இல்ல நந்தன்.. நான்  மட்டும் போறேன்.. நீங்க இருந்து கான்பிரன்ஸ் ஐ முடிச்சிட்டு  வாங்க... “

“இல்ல மா.. எனக்கு அது  முக்கியம் இல்லை.. நீதான் எனக்கு முக்கியம்.. உன்னை என்னால தனியா அனுப்ப முடியாது....  நானே பத்திரமா கூட்டிகிட்டு பேறேன்..”

“ஐயோ...  நந்தன்..  நான் என்ன சின்ன குழந்தையா??.. வரும் பொழுது தனியாதான் வந்தேன்.. இப்பவும் தனியா போய்டுவேன்..

அதில்லாம அப்பாவுக்கு ட்ரீட்மென்ட் போய்கிட்டிருக்கு அதனால ஒன்னும் பிரச்சனை இருக்காது னு தான் அங்கிள் சொன்னார்...

அதோட உங்களுக்கு இன்னைக்கு ஈவ்னிங் தான் பெஸ்ட் பிசினஸ் மேன் அவார்ட் கொடுக்க போறாங்க.. அதை வாங்காம என் கூட வர வேண்டாம்...”

“உன்னை விட அந்த அவார்ட் ஒன்னும் எனக்கு பெரிசில்லை ரதி... “ என்றான் பிடிவாதமாக..

“ஹ்ம்ம் எனக்கு பெருசாக்கும்.. என் புருசன அவார்ட் வாங்கறது எனக்கு பெருமையாக்கும்.. அடம் பிடிக்காமல்  நான் சொல்றதை கேளுங்க நந்தன்...

நான் மட்டும் தனியா  போய்க்கிறேன்... நீங்க எனக்கு மட்டும்  டிக்கட் போட சொல்லுங்க.. “ என்றவள் தன் உடமைகளை அவசரமாக அடுக்க ஆரம்பித்தாள்..

அவன் மீண்டும் ஏதோ சொல்ல வர, அவள் அவனை திட்டி சம்மதிக்க வைத்து  பின் அவளுக்கு மட்டுமே அடுத்து இருக்கும் ப்ளைட்டிலயே டிக்கட் பதிவு செய்தான்...

தீக்சா பெட்டி ரெடியாக இருக்க, அந்த நிலையிலும் மறக்காமல் அவன்  தன்னை மணந்த பொழுது அணிந்திருந்த அவனுடைய  டீசர்ட்  ஐ எடுத்து கொண்டு வெளி வர, அதற்குள் நந்தன் டாக்சியை பிடித்து வைத்திருந்தான்...

அதில் அமர்ந்தவள் டாக்சி நகர ஆரம்பிக்க,  அதுவரை தெரியாத பயம் இப்பொழுது அவளை  சூழ்ந்து கொண்டது தன் தந்தையின் நிலையை எண்ணி.. கண்கள் கலங்க, திடீரென்று  உடல் குலுங்க ஆரம்பித்தாள்...

அவளின் உள்ளங்கையை எடுத்து தன் கைக்குள் வைத்து கொண்டு அவளை மெல்ல அணைத்தவாறு அவளுக்கு ஆறுதல் சொல்லி வந்தான்..

அந்த  டாக்சி ட்ரைவர் தமிழ் என்பதால் இவர்கள் தமிழ் பேசுவதை  கண்டு

“என்னாச்சு சார்... என்றான்.

அபி அவள் தந்தைக்கு உடல்நிலை சரியில்லைஎன சொல்லவும் அவனும் அவளுக்கு ஆறுதல் கூறி வேகமாக டாக்சியை ஓட்டினான்....

ஏர்போர்ட்  அடைந்ததும் அடுத்து 30 நிமிடத்தில் ப்ளைட் கிளம்புவதாக இருக்க, அவசரமாக  இறங்கியவன் 2000 ரூபாயை நீட்ட டாக்சி ட்ரைவரோ சேன்ச் இல்லை என்றான்....

அவனையே மீதியை வைத்து கொள்ள சொல்லி பெட்டியை எடுத்து கொண்டு அவளை இழுத்து கொண்டு உள்ளே ஓடினான் அபி...

செக் ன் குளோஸ்  ஆகிவிட்டதாக சொல்லி தீக்சா வை அனுப்ப  மறுக்க, உடனே அபி அந்த ஏர்லைன் MD ஐ பிடித்து உதவி கேட்க அதை கண்டு அடுத்த நொடி அந்த பணியாளர் எழுந்து நின்று அவன் வேண்டியதை  செய்து கொடுத்தாள்..

தீக்சாவும் செக் என் முடித்து உள்ளே செல்ல இருக்க , மீண்டும் அபி அவளை அணைத்து கவலைப்படாமல் இருக்க சொல்லி அவள் சென்ற  உடனே  அவனுக்கு அழைக்க சொல்லி இருந்தான்....

அவளும் கண்ணீருடனே விடை பெற்று சென்றாள்...

நீண்ட நேரம் அவள் சென்ற திசையையே பார்த்து கொண்டிருந்தவன் பின் மனமே இல்லாமல் கிளம்பி சென்றான்..

அந்த  கான்பிரன்ஸ் க்கு செல்ல அங்கு ஆனந்த் ம் அவன் நண்பர்கள் இவர்கள் இருவரும் வராததால் போர் அடிக்க வெளியே சுற்றி இருக்கும் பகுதிகளை  சுற்றி பார்க்க சென்று  விட்டனர்...

அபிக்கும் அந்த கான்பிரன்ஸ் அறைக்கு செல்ல மனம் இல்லாமல் வெளியில் சுற்றி கொண்டிருந்தான்...

 உடல் அங்கிருந்தாலும் மனம் எல்லாம் தீக்சாவை சுற்றியே இருந்தது.. இதோடு பலமுறை அழைத்து பேசி விட்டான் தான்..

ப்ளைட்  புறப்பட்டு செல்லும் வரை அவளுடன் அலைபேசியில் பேசி கொண்டிருந்தான்.. அதன் பிறகு சிக்னல் இல்லாமல் போக அவள் லேன்ட் ஆகி அவனை அழைப்பதற்காக காத்திருந்தான்..

நொடிக்கொரு தரம் தன் அலைபேசியையே பார்த்து கொண்டிருந்தான்...

அவளும் லேண்ட் ஆனதும் போன் பண்ண, அடுத்த நொடி அதை  ஏற்றவன்

“ஆர் யூ ஓகே பேபி?? “ என்றான்  தவிப்புடன்...

அதற்குள் ஒரளவுக்கு தன்னை சமாளித்திருந்தவள்

“ஐயோ.. நந்தன்.. நான் நல்லாதான் இருக்கேன்.. ஏன் இவ்வளவு டென்சனா இருக்கீங்க.. ஐ வில் மேனேஜ்... டோண்ட் வொர்ரி.. “என்றாள் சிரித்தவாறு..

அப்பொழுதுதான் அவனுக்கு நிம்மதியாக இருந்தது..

“ஓகே பேபி.. உனக்கு வெளியில் கேப் காத்துகிட்டிருக்கும்.. அதுலயே ஹாஸ்பிட்டல் போய்டு... போய்ட்டு எனக்கு உடனே கால் பண்ணு.. “ என்றான் இன்னும் பதட்டமாக

“ஸ்யூர்  நந்தன். நீங்க  ஒன்னும் கவலை படாதிங்க... இன்னைக்கு ஈவ்னிங் அவார்ட்  பங்சன் ல நீங்க அவார்ட்  வாங்கறது எனக்கு லைவ் ஆ  காட்ட சொல்லுங்க..

போட்டோ அனுப்புங்க... ஐ லவ் யூ நந்தன்...  மிஸ் யூ... “ என்று பேசி கொண்டே தன்   பெட்டியை பேக்கேஜ் கிளைமில் இருந்து எடுத்து கொண்டு வேகமாக வெளி வந்தாள்..

அவனும்

“மிஸ் யூ பேபி... லவ் யூ.. டேக் கேர் யூ அன்ட் அங்கிள்... “ என்றவாறு அலைபேசியை அனைத்தான்...

அதன் பிறகு கொஞ்சம் நிம்மதியுடன்  அந்த கான்பிரன்சில் பிசியாகி விட்டான்...

பின் வெளியில் காத்திருந்த கேப் ல் ஏறி அமர்ந்தவள் அந்த அங்கிள் சொன்ன  மருத்துவமனைக்கு வந்தவள் டாக்சியை  அனுப்பி விட்டு மருத்துவமனை  உள்ளே செல்ல, வெளியிலயே இவளுக்காக காத்து கொண்டிருந்த அவர் முகம் ஏனோ  சோகத்தை அப்பி இருந்தது..

அதை கண்டதுமே அவளுக்கு திக் என்றது... என்னவோ சரியில்லை  என்று  தோன்ற அவர் அருகில் சென்றவள்

“என்னாச்சு அங்கிள் ?? அப்பா இப்ப எப்படி இருக்கிறார்?? “ என்றாள் படபடக்கும் இதயத்துடன் ...

“உங்கப்பா நம்மளை எல்லாம் விட்டுட்டு போய்ட்டார் தீக்சா.. எவ்வளவு முயன்றும் அவரை  காப்பாற்ற  முடியலை... “ என்றார் சோகமாக..

அதை கேட்டதும் அவள் கையில் இருந்த அலைபேசி நழுவி கீழ விழுந்து சிதறியது....

“அப்பா.. “ என்று  அங்கயே கத்திவிட்டாள்...

தன் பிறகு எல்லாம் வேகமாக நடக்க தன் தந்தையின் உடலை எல்லா  பார்மாலிட்டிஸ்  ம் முடிந்து வீட்டிற்கு எடுத்து வந்தார்கள்...

அவள் பெற்றோர்கள் இருவரும் காதல் மணம் புரிந்தவர்கள் என்பதால் உறவினர் யாரும் ஒட்டவில்லை.. அதனால் தகவல் சொல்ல என்று  யாரும் இல்லை.....

நெருங்கிய நண்பர்கள் மற்றும் அந்த குடியிருப்பில் இருக்கும் தெரிந்தவர்கள் மட்டுமே அங்கு கூடி இருந்தனர்... 

ஒரே பெண் என்பதால அவளே தன் தந்தையின் இறுதி  காரியங்களை செய்ய வேண்டியதாயிருந்தது....

உட்கார்ந்து அழ கூட நேரமில்லாமல் அடுத்தடுத்து அவளிடம் செய்ய வேண்டிய சம்பிரதாயங்களை சொல்ல அவளும் இயந்திர தனமாக இயங்கினாள்... ஆனால் உள்ளுக்குள் இறுகி போனாள்..

அவள் தந்தை அவளை எப்படி வளர்த்தார்..

பெண்ணாக இருந்தாலும் அவளை ஒரு ஆணிற்கு இணையாக தைர்யமாக நேர்மையாக் எந்த  பிர்ச்சனையையும் எதிர் கொண்டு நோக்கும் திடத்துடன் அவளை வளர்த்து இருந்ததால அவளால் அவர் இழப்பையும் ஓரளவுக்கு தாங்கி கொள்ள முடிந்தது ...

உடலை அடக்கம் பண்ணி  அவளே முன் நின்று இறுதி சடங்கை  செய்தாள்... பின் அங்கு வந்திருந்தவர்கள் எல்லாம் கலைந்து செல்ல இறுயில்  தன் தாயும் அவளும் மட்டுமே தனித்து இருந்தனர் அந்த வீட்டில்....

ரவு எதையோ வெறித்து கொண்டிருந்தவள் மணியை பார்க்க அப்பொழுதுதான் அவளுக்கு ஞாபகம் வந்தது நந்தன்...

அவன்.. நந்தன்... 

“அவனை எப்படி மறந்து போனேன்??..

எனக்காக பார்த்து கொண்டிருப்பான்.. என் போனுக்காக காத்து கொண்டிருப்பானே... “ என்று  நினைவு வர எழுந்து சென்று தன் அலைபேசியை தேட  அது அங்கு இல்லை...

மருத்துவமனையில் கீழ விழுந்தது நினைவு வந்தது.. ஆனால் அதை எடுக்க கூட தோன்றாமல் தன் தந்தையை பார்க்க ஓடியது நினைவு வர,

“இப்ப எப்படி அவனை அழைப்பது??  என்று  யோசித்தாள்...

அதற்குள் ஹாலில் அமர்ந்திருந்த பரிமளம் எழ முயல் அது முடியாமல்   மயங்கி விழ,  உடனே ஓடி சென்று  அவரை தாங்கி கொண்டவள் அடுத்து அவரையும் மருத்துவமனையில் சேர்க்க வேண்டியதாயிற்று...

ன் கணவனை பிரிந்த துயரத்தில் இருந்து அவரால் வெளி வர முடியவில்லை....மயங்கி மயங்கி சரிந்தார்...

இரண்டு நாட்கள் ஆனது அவர் கண் விழித்து அவளை நன்றாக பார்க்க. அதுவரை  அவர் அருகிலயே இருந்து அவரை பார்த்து கொண்டாள்..

இந்த  கலேபரத்திலும் நந்தன் முகம் அப்பப வந்து போகும்....

அவனிடம் சொல்ல வில்லையே என்ற தவிப்பு இருக்கும்.. ஆனால் தாயை விட்டு செல்ல முடியாமல் அவன் எண்ணும் கையில் இல்லாமல் எப்படி என்று  யோசித்தாள் தீக்சா..! 


Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!