பூங்கதவே தாழ் திறவாய்-26

 



இதழ்-26

ரு வழியாக ஒரு வாரம் கழித்து பரிமளம் ஓரளவுக்கு  பழைய நிலைக்கு வந்திருந்தார்..

அவளும் வேற ஒரு அலைபேசி வாங்கி புது எண்ணும் வாங்கி அவன் எண்ணை இணையத்தில் தேடினாள்..

அபி குரூப் ஆப் கம்பெனிஸ்  அபிநந்தனின் அபீசியல் எண் எளிதாகவே கிடைத்தது  இணையத்தில்..

நிம்மதியுடன் அந்த  எண்ணிற்கு அழைக்க அவனுடைய் அசிஸ்டென்ட் தான் எடுத்திருப்பாள் போல..

“பாஸ் ஊரில் இல்லை.. “என்று உடனே வைத்து விட்டாள்..

“ஊரில் இல்லையா?? இந்நேரம் டெல்லியில் இருந்து வந்திருக்கணுமே .. “ என்று யோசித்தவள் மீண்டும் அழைத்து அவனை பற்றி விவரம்  கேட்க அந்த உதவியாளரோ சொல்ல மறுத்து விட்டாள்...

அது ரகசியம் அவனை பற்றி எதுவும்  வெளியில் தெரிந்தாலும் அது மீடியாவுக்கு தப்பாக போகும்.. நான் எதுவும் அவரை  பற்றி சொல்ல முடியாது... நீங்கள் இரண்டு நாள் கழித்து போன் பண்ணுங்க.. “ என்று  வைத்து விட்டாள்..

தீக்சாவால் அடுத்து எந்த வேலையும் செய்ய முடியவில்லை..

மூளை வேலை நிறுத்தம் செய்துவிட்டது... பரிமளம் தன் மகளையே பார்த்து இருக்க,  தன் அன்னைக்காக தன்னை சமாளித்து கொண்டவள் இயல்பாக இருப்பதாக காட்டி கொண்டு தன் தாயிடம் சிரித்து பேசினாள் அவரை சமாளிப்பதற்காக...

அவரோ தன் அன்பு கணவன் பிரிவை தாங்க முடியாமல் தளர்ந்து போய் வாழ்க்கை  வெறுத்து உண்ண மறுத்து இருக்க  தீக்சா தான் அவரிடம் போராடி ஓரளவுக்கு பழைய படி கொண்டு வந்திருந்தாள்..

இப்பொழுது தன் தாயிடம் சென்று  தன் கவலையை பற்றி கூற கூடாது.. “என்று முடிவு செய்தாள்...

நந்தனை பற்றி எப்படி தெரிந்து கொள்வது ? என்று  யோசித்தவள் உடனே அவன் முதல் நாள் சொன்ன தாமஸ் சார் அவன் தந்தையின் பிரண்ட் என்பது நினைவு வர அவர் எண்ணிற்கு அழைத்தாள்...

ஆனால் அவர் தன் மகளை  பார்க்க வெளிநாடு சென்றிருக்க அவர் அலைபேசி எடுக்கவில்லை.. வாட்ஸ்அப் மெஸேஜ் மட்டும் அவருக்கு அனுப்பி விட்டு  கவலையோடு நாட்களை கடத்தினாள்..

மீண்டும் இரண்டு நாள் ஓடியிருக்க அன்றோடு 10 நாள் முடிந்து விட்டது.... ஆனால் நந்தனை பற்றி எந்த தகவலும் இல்லை.. அவன் சென்னையிலும் இல்லை  என்கிறார்கள்..

“அப்ப அவனுக்கு எதுவும் ஆகியிருக்குமோ?? “  என்று நினைக்கையிலயே நெஞ்சம் பதைத்தது..

“இறைவா  அப்படி எதுவும் ஆகியிருக்க கூடாது... என் நந்தன் நல்லபடியா 100 வருசம் இருக்கணும்.. “ என்று வேண்டி கொண்டாள்..

மீண்டும் இணையத்தில் குடைய ஒரு வழியாக அவனுடய பெர்சனல் நம்பரும் வீட்டு லேன்ட் லைன் நம்பரும் கிடைத்தது...

இந்த பெர்சனல் நம்பர்தான் அவளிடம் இருந்திருக்கும்.. என்று  எண்ணியவள் மகிழ்ச்சியுடன் அவனை அழைக்க பெருத்த ஏமாற்றம்...  அந்த  எண்ணும் ஸ்விட்ச் ஆப் ஆகியிருந்தது...

தன் ஏமாற்றத்தை மறைத்து கொண்டு மீண்டும் விடா முயற்சியாக அவன் வீட்டிற்கு அழைத்தாள்..

இரண்டு முறை ரிங் போகி ஆப் ஆகி இருக்க, மீண்டும் தன் முயற்சியை விடாமல் திரும்பவும் அழைத்தாள்..

அடுத்த முறை தொலைபேசி எடுக்க பட்டது... உடனே குசியாகி

“ஹலோ.. நந்தன் இருக்காரா?? “ என்றாள் ஆவலுடன் தீக்சா..

மறுமுனையில் எடுத்தவரோ ஒரு நடுத்தர வயது பெண்மணியாக இருக்கும்.. குரல் கொஞ்சம் தடிமனாக இருந்தது...

“நந்தனா அப்படி யாரும் இல்லையே.. “ என்றார்..

அப்பொழுதுதான் அவன் முழு பெயர் ஞாபகம் வர

“சாரி...  அபிநந்தன்... அபிநந்தன் இருக்காரா?? நான் அவர்கிட்ட கொஞ்சம் அவசரமா பேசணுமே.?? “ என்றாள் படபடப்புடன்...

சிறிது நேரம் அமைதியாக அவர் இருக்க

“ஹலோ.. இருக்கீங்களா?? அவர்கிட்ட கொஞ்சம் போன் கொடுக்கறீங்களா?? நான் தீக்சா பேசறேன் னு சொல்லுங்க..  அவருக்கு தெரியும்.. “ என்றாள்

அந்த பெயரை கேட்டதும் அவருக்கு என்ன தோணிச்சோ.. முகம் இறுகியது.... பல்லை கடித்தார்....

“இங்க பார் பொண்ணே... அபி இப்ப யாரையும் பார்க்க மாட்டான்.. அவன் பிசியா இருக்கான்.. வேணும்னா அவனை போய் ஆபிஸ் ல பார்த்துக்கோ.. “ என்றார் அதிகார குரலில்....

“இல்லை.. ப்ளீஸ்.. நான் இப்பவே  பேசனும்... அவரை பார்க்கணும்.. “ என்றாள்

“சே.. இந்த பயனோட இதே தொல்லையா போச்சு... போற இடத்துல எல்லாம் ஒரு பொண்ண புடிச்சிட வேண்டியது.. அப்புறம் கழற்றி விட்டுட வேண்டியது..

அவளுங்களும் பெரிய வீட்டு பையன் கிடைச்சவுடனே அவ்ன் கிட்ட மயங்கி  உடனே கட்டிலுக்கு போய்டறாளுங்க..

அப்புறம் அவன் மயக்கம் தீர்ந்த பிறகு அவனும் அடுத்த மலருக்கு தாவிடறான்.. இவளுங்களும்  விடாமல் அவனை தொல்லை பண்றது..

இதோட 10 பேருக்கு மேல போன் பண்ணிட்டாளுங்க.. இவளுங்க போனை எடுக்கறதே எனக்கு வேலையா போச்சு...

இந்த லட்சணத்துல இவனுக்கு நிச்ச்யம் ஆகி அடுத்த வாரம் கல்யாணம் நடக்க போகுது..

பாவம் அந்த  பெண். இவனை வச்சு எப்படி சமாளிக்க போறாளோ..

கயாணத்துக்கு பிறகாவது திருந்தி  ஒழுங்கா இருப்பானா பார்க்கலாம்.. “என்று  பெருமூச்சு விட்டவாறு தன்  தொலைபேசியை வைத்தார்..

அதை கேட்டு தீக்சா தலையில் இடி விழுந்ததை போல விழித்தாள்...

“இவர் என்ன சொல்றார்?? நந்தன்...  என் நந்தன் ஒரு வுமனிஸ்ட் ஆ?? என்னை ஏமாற்றிவிட்டானா?? இல்லை..

இந்தம்மா ஏதோ தப்பா சொல்றாங்க.. அவன் அப்படி எல்லாம் இல்லை.. என் மேல அவ்வளவு உயிரா இருந்தவன்.. இருக்கிறவன்...

அவன் ஒருநாளும் தப்பாக மாட்டான்... “ என்று  மீண்டும் அந்த  எண்ணிற்கு அழைக்க அந்த  அம்மாவோ மீண்டும் அவளை கண்டபடி திட்டி போனை வைத்தார்...

தீக்சா மீண்டும் முயற்சிக்க அவர் எடுத்து மீண்டும் திட்டி விட்டு வைத்து விட்டாள்...

தீக்சாவிற்கு தலையே சுற்றியது...

 “எப்படி எல்லாம் தப்பாக மாறும் ?? நந்தன்,  அவன் காதல்,  கல்யாணம் எல்லாம் பொய்யா?? கடைசிவரை என்னை சென்னைக்கு  அனுப்பி விட்டு தவிப்போடு  இருந்தானே... அவன் எப்படி பொய்யாவான்??

அப்படி என்றால் ஏன் என்னை வந்து பார்க்கவில்லை?? என் எண்தான் இல்லையே அப்புறம் எப்படி வருவான்? என்றது மற்றொரு மனம்..

என் அலைபேசி எண்ணை வைத்து முகவரி கண்டுபிடிக்க எத்தனையோ வழிகள் இறுக்கின்றன.. நந்தன் ஒரு பெரிய பிசினஸ்மேன்.. என்னை கண்டுபிடிக்க நினைத்திருந்தால் ஒரு மணி நேரத்துலயே கண்டு பிடித்திருக்கலாம்...

ஏன் தாமஸ் அலுவலகத்திலயே என் முகவரி இருக்கே.. அங்கு கேட்டிருந்தால் கூட உடனே கிடைத்திருக்கும்...

அப்படி என்றால் அவன் என்னை  கண்டு பிடிக்க முயற்சி செய்யவில்லை...

நான் அவனுக்கு வேண்டாதவளாக ஆகி விட்டேனோ.. அந்த  அம்மா சொன்ன  மாதிரி  என்னை அனுபவித்து தூக்கி ஏறிந்து விட்டானா?? “ என்று  நினைக்கையில் அவளுக்கு கண்ணை கரித்தது...

தன் அன்னை அறியாமல் அறைக்குள் சென்று  அழுது தீர்த்தாள்...

அவன் நல்லவனா கெட்டவனா என்று அவளுக்குள் பட்டிமன்றம் நடத்தினாள்..

அவன் கெட்டவன் என்ற கண்ணோட்டத்தில் பார்க்க எல்லாமே கெட்டவனாக காட்டியது..

முதல் நாள் பார்த்த  உடனே காதல் என்று  வந்தது.. அடுத்த நாளே கல்யாணம் என்று முடித்து  அன்றே தன்னை  கட்டு படுத்த முடியாமல் பர்ஸ்ட்  நைட் ம் முடிந்து அதற்கு பிறகும் அவள் மேல் பைத்தியமாக இருந்தானே..

ஒரு வேளை  அதெல்லாம் நடிப்போ?? அவனுக்கு தேவை என் உடல் மட்டும் தானா?

இல்லை அவனோட பிரன்ட்ஸ் ?? அவன்  அம்மா...?? அதெல்லாம் கூட செட்டப் ஆக இருககலாம்... அவன்  பிரண்ட்ஸ் கிட்ட சொல்லி கூட இதெல்லாம் செஞ்சிருக்கலாம்...

அவன் அம்மா தான் என்று  எப்படி தெரியும்?? ... வேறு  யாரிடமாவது கொடுத்து கூட பேசி இருக்கலாம்.... “ என்று  எல்லாத்தையும் சந்தேகமாக  பார்த்தாள்...

காமாலை கண்ணுக்கு பார்க்கறது எல்லாம் மஞ்சள் ஆவே தெரியும்  என்பது போல அவனை கெட்டவன் என்று தப்பாக பார்க்க அவன் கெட்டவன் தான்  என்று  சொல்லியது  ஒரு மனம்..

மற்றொரு மனமோ அவனுக்காக வாதாட, தலையை பிடித்து கொண்டு அமர்ந்தாள் தீக்சா...!

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!