பூங்கதவே தாழ் திறவாய்-27
இதழ்-27
இன்னும் இரண்டு நாட்கள் கடந்திருக்க, அடுத்த நாள் அவள் வேலைக்கு சேர வேண்டி
இருந்தது..
மீண்டும்
ஒரு முறை அவனுக்கு முயற்சி செய்யலாம் என்று நந்தன் அலுவலக எண்ணிற்கு அழைக்க, மறுமுறை ஒரு ஆண் குரல்
கம்பீரமாக ஒலித்தது....
“ஹலோ...
திஸ் ஈஸ் அபிநந்தன் ஸ்பீக்கிங்... “ என்ற
கம்பீரமான குரலை கேட்கவும் தீக்சா சந்தோசத்தில் துள்ளி குதித்தாள்....
“என்
நந்தன் நல்லா இருக்கான்... அவனுக்கு ஒன்னும் ஆகலை... “ என்ற நிம்மதியடைந்தாள்
....
அவனோ
மீண்டும் “ஹலோ...” என்று கத்தி கொண்டிருந்தான்...
அதற்குள்
தன்னை சமாளித்தவள்
“ஹலோ..
நந்தன் .. நான் ரதி பேசறேன்..” என்றாள் மெல்ல வார்த்தையை கோர்த்து ....
“ஹூ
ஈஸ் ரதி??... எனக்கு அப்படி யாரும் தெரியாது... பிசினஸ்
விசயமா இருந்தால் நேரடியா என்னுடைய அசிஸ்டென்ட்
ஐ பாருங்க.. அப்புறம் கால் மி அபிநந்தன்..”
என்று சிடுசிடுத்தவாறு போனை வைத்து விட்டான்...
தீக்சாவுக்கு
உள்ளுக்குள் மீண்டும் எரிமலையே வெடித்தது....
இதயத்தில் பெரிய பூகம்பமே ஆட்டுவித்தது...
ரதி
என்றால் உடனே தெரியும் என்று தான் அந்த பெயரை சொன்னாள்.. அவன் தெரிய வில்லை என்கிறானே..
இல்லை
தெரியாத மாதிரி காட்டிக் கொள்கிறானா?? “ என்று குழப்பம்...
அதே நேரம் அந்த பெண்மணி சொல்லியதும் நினைவு வந்தது...
“இல்லை..
அப்படி எல்லாம் இருக்காது.. “ என்று உருபோட்டவள் மீண்டும் அவன் எண்ணிற்கு அழைக்க, மீண்டும் அழைப்பை அவனே
ஏற்றான்....
“ஹலோ....
நந்த்... “ என்று சொல்ல வந்து நிறுத்தி கொண்டு
“அபிநந்தன்
.. நான் தீக்சா பேசறேன்.. என்னை ஞாபகம்
இருக்கா?? “ என்றாள் படபடப்புடன்..
அவள்
குரலை கண்டு கொண்டவன்
“ஏய்
பெண்ணே.. நீதான முன்பு போன் பண்ணி ரதி னு சொன்ன.. இப்ப தீக்சானு சொல்ற?? என்னோட விளையாடறியா?
உன்
கூட விளையாடற அளவுக்கு எனக்கு நேரம் இல்லை...ஐ ஹேவ் லாட் ஆப் வொர்க் டு கம்ளிட்..
வை போனை.. இடியட்.. “ என்று படபடவென்று பொரிந்தவன் அவளை திட்டியவாறு போனை அனைத்தான்...
அதை
கேட்டு இன்னும் அதிர்ந்து போனாள்.. தீக்சா என்று சொல்லியும் அவனுக்கு நினைவு வரவில்லையே...
நினைவு
வரவில்லையா இல்லை தெரியாத மாதிரி நடிக்கிறானா ?? “ என்று மீண்டும் குழம்பி போனாள் பெண்ணவள்...!
சரி
நேர்லயே பார்த்து பேசிவிட்டு வரலாம் என்று கிளம்பி நேராக அவனுடைய ஹெட் ஆபிஸ்க்கு சென்றாள்..
அபிநந்தனை சந்திக்க
வேண்டும் என்று சொல்லவும் அப்பாய்ன்ட் மென்ட் இல்லாமல் சந்திக்க முடியாது.. இன்று
முழுவதுமே அவர் பிசி செட்யூல் என்றனர்...
“நான்
ரதி... இல்லை தீக்சா வந்திருக்கேனு சொல்லுங்க.. கண்டிப்பா அவர் என்னை பார்ப்பார்.. “
“சாரி
மேடம்.. இதே மாதிரி இதுவரை 10 பொண்ணுங்க வந்துட்டாங்க.. பாஸ் எங்களை திட்டறார்..
சும்மா
அவர்கிட்ட கேட்டு நிக்க முடியாது... நீங்க வேணா நாளைக்கு அப்பாயின்ட்மென்ட்
வாங்கிட்டு வந்து பாருங்க.. அதுவும் உங்கள சார் செலக்ட் பண்ணினாதான் அப்பாய்ன்ட்மென்ட்
பிக்ஷ் ஆகும்..
எதுக்கும்
இந்த அப்பாய்ன்ட்மென்ட் பார்ம் ல் பில் பண்ணுங்க .. “ என்று ஒரு டேப்லட்டை அவள் முன்னே நீட்டினாள் அந்த ரிசப்னிஸ்ட்....
தீக்சாவுக்கு
கண்ணை கரித்து கொண்டு வந்தது...
“இவன்
இவ்வளவு பெரிய ஆளா?? யாரும் அவ்வளவு எளிதாக அணுக முடியாதவனா என்னையே சுற்றி சுற்றி வந்தான்....
இவனா
அந்த ஒரு வாரம் என்னை அன்பு மழையில் காதல்
மழையில் குளிப்பாட்டினான்?? “ என்று யோசித்து கொண்டே அந்த
டேபிலட்டை திருப்பி கொடுத்தவள் அருகில் இருந்த சோபாவில் அமர்ந்து கொண்டாள்...
அடுத்து
என்ன செய்வது?? என்று யோசிக்க அவளுக்கு ஒன்றும் புரியவில்லை..
அவன்
அவளை மணந்துள்ளான் என்று சொல்ல அவளிடம்
எந்த ஆதாரமும் இல்லை.. இருவரும் சேர்ந்து எடுத்துகொண்ட புகைபடங்கள் எல்லாம் அந்த அலைபேசியோடு சென்று விட்டன...
என்றவள்
கழுத்தில் கை வைக்க அவன் அணிவித்திருந்த அந்த செயின் ஞாபகம் வந்தது...
இதை
காட்டினாள் புரிந்து கொள்வானோ?? என்றவளுக்கு கொஞ்சம்
நம்பிக்கை வந்தது..
“யெஸ்..
இந்த செயின்தான் ஆதாரம்.. இதை போட்டுதான் அவளை மனைவியாக்கி கொண்டான்.. “என்று சொல்ல வேண்டும். என்று கொஞ்சம் தெளிந்தவள் அங்கயே அமர்ந்து
இருந்தாள்...
அந்த
ரிசப்னிஸ்ட் அவளை போக சொல்லி சொல்லியும்
அவள் நகராமல் அங்கயே அமர்ந்து இருந்தாள்..
அனைவரும்
உணவிற்காக எழுந்து சென்றும் பின் திரும்பி வந்தும் அவள் நகராமல் அங்கயே அமர்ந்து
இருக்க அந்த ரிசப்னிஸ்ட் மனம் இறங்கினாள்..
அவளுக்கு
டீ ஆர்டர் பண்ணி கொடுக்க, தீக்சா அதை மறுத்து விட்டாள்..
இவளுடைய
பிடிவாதத்தை குணத்தை கண்டு திகைத்தவள் மாலை 6 மணி அளவில் அவன் எல்லா அப்பாய்ன்ட் மென்ட்
முடிந்திருக்க, அவன் எழுந்து கிளம்பு நேரம் அந்த
ரிசப்னிஸ்ட் அவள் அருகில் வந்து
“மேடம்..
பாஸ் இப்ப வருவார்.. நீங்க வேணா இப்ப போய் வழில பார்க்கிற மாதிரி பாருங்க..
“நான்
தான் அனுப்பினேன் னு பாஸ்கிட்ட சொல்லிடாதிங்க..
என்னை திட்டுவார்.. நீங்களே எதேச்சையா போற மாதிரி போய்டுங்க..” என்று அனுப்பி வைத்தாள் யாருக்கும் தெரியாமல்..
அவளுக்கு
நன்றி சொல்லி எழுந்தவள் அவன் தன் அறையை
விட்டு வெளி வந்து தன் கோட்டை மாட்டிக் கொண்டு காரிடரில் நடந்து வர வேகமாக சென்று அவன் முன்னே நின்றாள் தீக்சா...
இரண்டு வாரங்களுக்கு பிறகு அதுவும் பெரிய போராட்டத்திற்கு
பிறகே அவனை காணவும் கண்கள் கரித்து கொண்டு வந்தது தீக்சாவிற்கு....
ஆறடி
உயரத்தில் தன் பேன்ட் பாக்கெட்டில் கை
விட்டு கொண்டு கம்பீரமாக நிக்கும் அவனையே இமைக்க மறந்து பார்த்தாள்.... கொஞ்சம் இளைத்திருந்தான்...
அப்படியே
ஓடி சென்று அவனை கட்டி கொண்டு அவன் மார்பில் சாய்ந்து கொண்டு இந்த இரண்டு
வாரங்களாக தான் அனுபவித்த வலி வேதனைகளை எல்லாம் அவனிடம் கொட்டி விட துடித்தது அவள்
மனம்...
அதுவும்
தன் தந்தையின் இழப்பு எவ்வளவு பெரிய இடி அவளுக்கு...தன் தாயின் முன்னால் அவள்
வேதனையை வாய் விட்டு சொல்ல முடியாமல் மனதுக்குள் பூட்டி வைத்திருக்கிறாள்...
அந்த
துயரத்தை எல்லாம் தன் கணவன் மார்பில் சாய்ந்து கொண்டு அவன் கை அணைப்பில் ஆற்றிவிட
துடித்தாள்...
ஆனால்
ஊடுவும் கண்களுடன் தன்னை ஆராய்ச்சி பார்வை பார்க்கும் அவனை கண்டதும் தொண்டை
அடைத்து கொள்ள, பேச நா எழவில்லை... கண்ணில் நீருடன் அவன் முன்னே நின்றவளை கண்டதும் முகம் இறுகி
“ஏய்
யார் நீ?? ஏன் என் முன்னாடி நிக்கற?? “ என்றான் சிடுசிடுத்த
குரலில்....
அதை
கேட்டவள் இன்னும் அதிர்ந்து போனாள்...ஆனாலும் தன்னை சமாளித்து கொண்டு
“ந
ந நந்தன்... என்னை தெரியலை?? நான் தான் உங்க ரதி... “ என்றாள் ஆவலுடன் கண்கள் படபடக்க ..
அதை
கேட்டதும் அவன் உதடுகள் ஏளனமாக வளைந்தன..
“ஓ..
நீதான் காலையில் போனில் பேசியவளா?? போனில் மயக்க முடியவில்லை என்றதும்
நேர்லயே வநதிட்டியோ?? .. உன்னை யார் இதுவரைக்கும் உள்ள விட்டது?? “ என்று சுற்றிலும் கண்களை சுழற்றினான்...
“நந்தன்
ப்ளீஸ்.. “ என்றாள் தடுமாற்றத்துடன்...
“ஹலோ...
கால் மி அபிநந்தன்... “ என்றான் அதே ஊடுருவும்
பார்வையுடன்..
“சா
சாரி அபிநந்தன்.... என்னை தெரியலை??.. நாம் இரண்டு பேரும் டெல்லியில மீட் பண்ணினமே... “ என்று அவள் முடிக்குமுன்னே
“இதோ
பார் பெண்ணே.. தினம் தினம் இதுமாதிரி நிறைய பொண்ணுங்க என்கிட்ட வந்து நிக்கறாங்க...
பத்தாதற்கு
நான் அவங்கள கல்யாணம் பண்ணிகிட்டேன் குழந்தை இருக்குனு எத்தனையோ பேர் என்கிட்ட
வந்து கொஞ்சறாளுங்க....
என்
மேல வந்து விழற பொண்ணுங்களை எல்லாம் நான் ஏத்துகிட்டிருந்தா இந்நேரம் என் வீடே ஒரு
ஊராயிருக்கும்...
லுக்..
உன்னோட இந்த நடிப்புக்கெ;லாம் அசறவன் இந்த அபிநந்தன் கிடையாது.. உன் நடிப்பை போய் வேற யார் கிட்டயாவது காட்டு..
உனக்கு கொஞ்சமாவது தேறும்..
இந்த
அபிநந்தன் கிட்ட எதுவும் நடக்காது.. வேணும்னா உனக்கு என்ன பிரச்சனைநு சொல்லி உதவி கேள்.. பணத்தை தூக்கி
போடறேன். .
அதை
விட்டு உன்னை தெரியும் என்னை தெரியும் னு என் முன்னாடி வந்து நிக்காத... மைன்ட் இட்..
டோண்ட் வேஸ்ட் மை டைம்.. இடியட்.. “ என்று
பொரிந்தவன் அவளை ஒரு வெறித்த ஏளன பார்வை
பார்த்து வேகமாக நடந்து சென்றான்...
அதை
கேட்டு தீக்சா கால்கள் தள்ளாட அருகில்
இருந்த தூணை பிடித்து கொண்டாள்...
அந்த
ரிசப்னிஸ்ட் பெண் ஓடி வந்து அவளை அருகில் இருந்த ஒரு அறைக்கு அழைத்து சென்று அமர வைத்தாள்...
தலையை
பித்தபடி அமர்ந்து இருந்தவளுக்கு ஒரு டீ வரவழைத்து கொடுத்தாள்...
அதை
குடித்ததும் கொஞ்சம் தெம்பாக இருந்தது தீக்சாவிற்கு.. ..
அவளை
பாவமாக பார்த்த அந்த ரிசப்னிஸ்ட்
“மேடம்.
உங்களை பார்த்தால் பாவமா இருக்கு... நான் தான் சொன்னேல் இல்ல. பாஸ் கிட்ட இப்படி எல்லாம்
போக முடியாதுனு.. அதோட உங்கள மாதிரி நிறைய பொண்ணுங்க வர்ராங்க...
அதனால்
நீங்க இவரை விட்டுட்டு வேற வேலையை
பாருங்க.. உங்க முகத்தை பார்த்தால்
நல்லவங்க மாதிரி தெரியுது... பாஸ் கிட்ட மோதி ஒன்னும் ஆகாது...அதனால அவரை பாலோ
பண்றதை விட்டுடுங்க... “ என்றாள் அக்கறையாக
அதை
கேட்டு ஒரு வெறித்த பார்வையை செலுத்தி விட்டு அவளுக்கு நன்றி சொல்லி எழுந்து சென்றாள் தீக்சா ..
அவள் எப்படி வீடு வந்து சேர்ந்தாள் என்பது அந்த ஆண்டவனுக்கே
வெளிச்சம்.
வீட்டிற்கு
வந்த தன் மகளை கண்டதும் பயந்து விட்டார் பரிமளம்..
முகம்
வெளிறி வெறித்து கண்களுடன் நடக்கவே சிரமபட்டு தள்ளாடியபடி வந்தவளை கண்டதும் திக் என்றது
பரிமளத்திற்கு....
இந்த
மாதிரி சோம்பி வாழ்க்கையை வெறித்த மாதிரி அவளை என்றும் பார்த்ததில்லை இதுவரை.... .
தன்
தந்தை இறந்த பொழுதும் தைர்யமாக இருந்தவள் இப்ப ஏன் இப்படி இருக்கிறாள்??
என்று
யோசித்தவர் வேகமாக எழுந்து வந்து தன் மகளை
சோபாவில் அமர வைத்து என்னாச்சு என்று விசாரிக்க
அப்பொழுதுதான்
அவள் நிலை புரிந்தது..
தன்
அன்னையை காக்க வேண்டும்.. ஏற்கனவே மனம் ஒடிஞ்சு போய்ருக்கார்.. மீண்டும் அவரை வருத்த கூடாது.. “ என்று தன்னை சமாளித்தவள் மெதுவாக சிரித்தாள்...
“ஒன்னும்
இல்லமா.. இலேசா தலைவலி...நான் மாத்திரை போட்டுட்டு தூங்கறேன்.... டின்னர் எதுவும்
வேண்டாம்...
நீங்க
சாப்டிட்டு படுங்க.. “ என்று சொல்லி அங்கு மேலும் நிக்காமல், நின்றால் தன் முகமே
தன்னை காட்டி கொடுத்து விடும் என்று அஞ்சி வேகமாக தன் அறைக்குள் சென்று அடைந்து கொண்டாள்...
பரிமளமும்
யோசனையுடனே மேலும் நோண்டாமல் விட்டுவிட்டார்...
அன்று
இரவு முழுவதும் கண்ணீர் கட்டாறாக அடித்து கொண்டு
வந்து தலையணை முழுவதும் நனைத்தது
தீக்சாவிற்கு....
மறுநாள் காலை பரிமளம் காபியோடு வந்து அவளை எழுப்ப, அவர் அறியாமல் கண்ணை துடைத்து கொண்டவள் எழுந்து குளியல் அறைக்கு சென்று முகத்தில் நீரை அடித்து கழுவினாள்...
கண்ணாடியில்
தன் தந்தையின் முகம் தெரிய திடுக்கிட்டாள்..
“என்னாச்சு
தீக்சா மா.. என் பொண்ணு எதுக்கும் துவண்டு
விட மாட்டாளே.. அப்படி நான் வளர்த்த அந்த தீக்சாவா
இது??
எந்த
பிரச்சனையும் தைர்யமாக நின்னு பேஸ் பண்ணனும்..
அப்பதான் நீ குட் கேர்ள்.. அப்பா எப்பவும் உன் கூடவே இருப்பேன்...எதற்கும்
கலங்காத... தைர்யமா அடுத்து என்ன என்று யோசி... “என்று சொல்லி சிரித்தார்...
“அப்பா..”
என்றவாறு ஆசையாக அவர் முகம் வருட செல்ல அதற்குள் கண்ணாடியில் இருந்து அவர் முகம்
மறைந்து இருந்தது..
அதை
கண்டதும் அவளுக்கு ஓரளவுக்கு தெளிவு வர
“நான்
ஏன் அழ வேண்டும்?? அவன் என்னை ஏமாற்றவில்லை.. அவனையே ஏமாற்றி கொண்டான்..
என்னை
ஏமாற்றியதால் அவனுக்கு தான் இழப்பு... இருக்கட்டும்... போகட்டும் அப்படியே
போய் தொலையட்டும்... ..
இனி
என் மனதில் என் வாழ்வில் அவனுக்கு இடம் இல்லை...அவனே என்னை தேடி வந்தாலும் இந்த
ரதி இனி அவனுக்கில்லை...
இனிமேல்
என் அம்மா மட்டும்தான் எனக்கு எல்லாம்.. “ என்றவள் தன் அன்னை
கொடுத்த காபியை குடித்து
விட்டு தலைக்கு குளித்து அவனை
தலைமுழுகியதாக எண்ணியவள் அலுவலகம் செல்ல தயாரானாள்...
தன்
மகளின் முகத்தில் தெரிந்த தெளிவை கண்டதும்
தான் நிம்மதியாக இருந்தது அந்த அன்னைக்கு...
ஆனால்
அவள் கண்ணில் இருந்த சிரிப்பும் குறும்பு தனமும் தொலைந்து போயிருந்தது...
என்னவோ
இவள் மனதை அறித்து கொண்டிருப்பது மட்டும் புரிந்தது
அந்த தாய்க்கு.. ஆனால் என்னவென்று தெரியவில்லை... அவளிடமும் கேட்கவில்லை..
அவளே
எதுவும் சொல்லாமல் இதுவரை அவளை எதுவும் கேட்டதில்லை என்பதால் இப்பவு எதுவும் கேட்கவில்லை..
தன்
அன்னையிடம் விடை பெற்று அவரை பத்திரமாக இருக்க சொல்லி, நேரத்துக்கு சாப்பிட
சொல்லி அலுவலகத்துக்கு கிளம்பினாள் தீக்சா..
தன்
ஸ்கூட்டியை எடுத்து தூசி தட்டி கிளம்பி சென்றாள்..
அந்த
ஸ்கூட்டியில் பறந்து கொண்டிருந்தவளின் முகத்தில் எதிர் காற்று மோத, கொஞ்சம் தெம்பாக
இருந்தது....
அடுத்த
நொடி அதே குளிர் காற்று முகத்தை தீண்டியது அவளுக்கு டெல்லியில் அந்த மலைமீது
நந்தனுடன் நெருங்கி நின்று அந்த குளிர் காற்றை அனுபவித்தது நினைவு வர, மற்ற நிக்ழ்வுகள்
எல்லாம் அழையா விருந்தாளியாக உடனே அவள்
கண் முண்ணே வந்தன....
அதை
கண்டதும் மனதை பிசைந்தது...
“எப்படி
நந்தன் உங்களால் இப்படி மாற முடிந்தது?? என்னையே உங்கள் உயிர் னு சொல்லிட்டு இப்ப அந்த உயிர் உங்களுக்கக உங்களை தேடி
அலைந்தது கூட கண்டுக்காமல் விட்டுட்டிங்களே....”
என்று
மீண்டும் கண்ணை கரித்து கொண்டு வர, அதற்குள் தன் தந்தையின் முகமும் அவரின் வார்த்தைகளும் நினைவு வர, தன் மனக்கதவை அறைந்து சாத்தினாள்....
“இனி
அவனை பற்றி நினைக்க கூடாது.. “ என்று உரு போட்டவள்
அதன் பின் எதையும் நினைக்காமல் நேராக தன் அலுவலகத்தை அடைந்தாள்..
தாமஸ் ம் வெளி நாட்டில் இருந்து திரும்பி
வந்திருந்தார்... அவள் தந்தையின் மறைவை அறிந்து அவளிடம் துக்கம் விசாரித்து பின்
அவளுக்கு ஆறுதல் கூறினார்....
பிற
ஆபிஸ் நண்பர்களும் அவளிடம் துக்க விசாரித்து ஆறுதல் சொல்ல அனைவருக்கும் ஒரு வெற்று
புன்னகையை பதில் அளித்தாள்..
இது
எல்லாருக்கும் புதிதாக இருந்தது..
தீக்சாவை
இந்த மாதிரி பார்த்ததில்லை அவர்கள்.
.எப்பவும் சிரிப்புடன் வளைய வருபவள் இறுகி போய் இருக்க, அவள் தந்தையின்
இழப்பால் அப்படி இருக்கிறாள் என்று எண்ணி கொண்டனர்...
ஆனால்
அவள் உள் மனம் மட்டுமே அறிந்தது அவள் இறுகி போய் இருப்பது தன்னை பார்த்த உடனே காதலித்து அவசர அவசரமாக மணந்து அவசர அவசரமாக எல்லாம்
முடிந்து அதே அவசரமாக தன்னை கை கழுவி விட்டு சென்ற தன் கணவனை நினைத்துத் தான் அவள்
இறுகி போய் இருக்கிறாள் என்று....
ஒரு
நீண்ட மூச்சை எடுத்து விட்டவள் இத்தனை நாளாக முடிக்காமல் தேங்கி இருந்த தன்
வேலையில் கவனம் செலுத்த கொஞ்சம் மனதை அடக்க முடிந்தது...
மதிய உணவு இடைவேளையின் பொழுது தன் அன்னையை அழைத்து அவரை உணண
சொல்லி தானும் ஒரு வாய் எடுத்து வாயில் வைக்க
மனம் மீண்டும் அந்த நந்தனிடம் சென்று நின்றது...
“நந்தன்..,, பேரை பார்.. அந்த கோபால நந்தனை போலவே இவனும் பல பெண்களிடம் கூத்தடித்திருப்பவன்
போல.. “ என்று எண்ணுகையிலையே அவன் அப்படி
இருக்க மாட்டான் தன்னிடம் அப்படி நட்நது கொள்ளவில்லையே.. “ என்று மீண்டும் கண்ணை கரித்தது...
உணண
முடியாமல் மூடி வைத்து விட்டு எழுந்து
வேகமாக வாஷ்ரூமை நோக்கி நடந்தாள்..அவளுடன்
இருந்த தோழி புவனா அவள் தந்தையின் நினைப்பில் தான் அழுகிறாள் என்று புரிந்து கொண்டு அவளும் எழுந்து பின்னே சென்றாள்.
அவள்
தோள் தொட்டு அணைத்து கொண்டாள் புவனா...
புவனா
வின் ஆதரவு அவளுள் இருந்த உறுதியையும் கலைத்து விட புவனா வின் தோளில் முகம் புதைத்து
குலுங்கினாள் தீக்சா .....
புவனாவும்
ஆதரவாக தட்டி கொடுத்து ஆறுதல் சொல்ல சில நிமிடங்கள் தன் வேதனையை கண்ணீரால்
கரைத்தவள் பின் தன்னை சுதாரித்து கொண்டு கண்ணை துடைத்து
கொண்டாள்...
“சாரி
புவனா.. உனக்கு சிரமம் கொடுத்திட்டேன்.. "என்றாள் வருத்தமாக
"அடடா
இதில என்ன இருக்கு தீக்சா.... ஆனால் உன்னை
இப்படி பார்க்க எனக்கே ஆச்சர்யமாக
இருக்கு.. எல்லாத்தையும் எவ்வளவு தைர்யமாக பேஸ் பண்றவ..
உன்
தந்தை மறைவுக்கு போய் இன்னும் இப்படி உன்னை வருத்தி கிட்டிருக்கியே..
அவர்
மறைவு உனக்கு பெரிய இழப்புதான்... உனக்கு கஷ்டமாதான் இருக்கும்... ஆனால் அதுக்காக அதையே நினைத்து அழுது கொண்டிருந்தால்
வாழ்க்கையை எப்படி ஓட்டுவது..
உன்னை
நம்பி உன் அன்னை இருக்கிறார் அல்லவா... அவருக்காக உன்னை தேற்றி கொள்..” என்று ஆறுதல் சொன்னாள்:...
அவள்
தன் தந்தைக்காக சொல்லிய ஆறுதல் அந்த நந்தனுக்கும் பொருந்தும்....
“இவள்
சொல்வது சரிதான்... அவனை நினைத்து நான் ஏன் உருக வேண்டும்... என்னை வேண்டாம் என்று மறந்து சென்றவன் எனக்கும்
வேண்டாம்...இனி அவன் இல்லை என் வாழ்வில்... "
என்று உறுதி கொண்டவள் முகத்தில் மீண்டும்
தண்ணீர் கொண்டு அடித்து கழுவி அழுந்த துடைத்தவள் முகம் கொஞ்சம் தெளிந்திருக்க மீண்டும்
தன் வேலைக்குள் தலையை நுழைத்து கொண்டாள்...
இதே
மாதிரி தொடர்ந்து முயன்று ஓரளவுக்கு தன்னை
தன் கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்திருந்தாள்... ஓரளவுக்கு இயல்பு நிலைக்கு திரும்ப
முயன்று கொண்டிருந்தாள்..
அவளின்
முயற்சி கொஞ்சம் பலன் அளிக்க பகல் நேரங்களில் அந்த ஏமாற்றுக்கார நந்தனின் நினைவு வர விடாமல் நிறைய
வேலையை இழுத்து போட்டு கொண்டு செய்தாள்..
மாலையிலு
சீக்கிரம் வந்து தன் அன்னையை வெளியில் அழைத்து செல்வது கோவிலுக்கு செல்வது என்று தன் நேரத்தை பிசியாக வைத்து கொண்டாள்...
அதெல்லாம்
பார்த்து தான் அவனை மறந்து விட்டதாக நினைத்தாலும் இரவு படுக்கையில் விழும் பொழுது
அவன் நினைவுகளும் தானாக வந்து கண் முன்னே குதிக்கும்..
அவன்
பேசிய காதல் பேச்சுக்களும், கொஞ்சிய
வார்த்தைகளும் அவளை தீண்டிய தீண்டல்கள் எல்லாம் அவள் கட்டுபாட்டையும் மீறி வெளி வந்து
பேயாட்டம் ஆடும்...
அதை
சமாளிக்க முடியாமல் துவண்டு போனாள்...
அப்ப
எல்லாம் தன் தந்தையின் புகைபடத்தை எடுத்து
வைத்து கொண்டு அவருடன் பேச ஆரம்பித்து விடுவாள்..
எப்படி
இருந்த என்னை இப்படி மாற்றி விட்டானே.. இந்த தீக்சா இப்படி ஒருவனுகாக உருகி தவிக்கிறாள்
என்று யாராவது சொல்லி இருந்தால் அவளை அறிந்தவர்கள் சிரித்திருப்பார்கள்...
அப்படி
இருந்த என்னை இப்படி மாற்றி விட்டானே என்று கண்ணோரம் மீண்டும் கரிக்க, உடனே தன் தந்தையின் சொல் நினைவு வந்தது..
“என்றும்
சுய பச்சாதாபம் கூடாது.. அதே போல கண்ணீர் பெண்களை மேலும் பலவீனமாக்கி கோழையாக்கும்
ஆயுதமாகும்..
இப்படி
ஆகிவிட்டதே என்று கண்ணீர் விட்டு வருந்தாமல்
அடுத்து என்ன?? என்று யோசித்து முன்னேறி செல்ல வேண்டும்.. "என்று அடிக்கடி சொல்வார்...
அதனால்
அவர் சொன்னது இப்பொழுது நினைவு வர, உடனே தன் கண்களை துடைத்து கொண்டாள்..
“இனிமேல்
இந்த தீக்சா எதுக்கும் அழ மாட்டாள்... அவன் பிரிவு என்னை ஒன்னும் செய்யாது.. "என்று மனதுக்குள் உருபோட ஆரம்பித்தாள்..
அவள்
அழுது தீர்த்திருந்தாலாவது அவள் மனம் இலகி இருக்கும்.. அதன் பிறகு எப்பொழுதும் அழாமல் தன் வலி வேதனையை தன்னுள்ளே வைத்து
புதைக்க,
அது கொஞ்சம் கொஞ்சமாக இறுகி அவன் மேல் வெறுபை பாறையாக வளர்த்து கொண்டாள்..
அதே
வெறுப்புதான் இன்று வரை தொடர்கிறது போலும்....
ஒரு
வழியாக அந்த நந்தனை மறந்து தன் இயல்பு வாழ்க்கைக்கு
திரும்பி கொண்டிருந்தாள் தீக்சா...
ஆனால் அவள் எப்படி அவ்வளவு சீக்கிரம் தன் காதல் கணவனை மறந்து விட முடியும் என்று கங்கனம் கட்டியதை போல நிகிழ்ந்தது அடுத்த நிகழ்வு..!
Comments
Post a Comment