பூங்கதவே தாழ் திறவாய்-29

 


இதழ்-29

 

ப்படித்தான் தம்பி அவள் கல்யாண கதை நடந்தது...

நானும் என் மாப்பிள்ளையுடன் பேச முயற்சி செய்யறேன்.. ஆனால் ஒரு தரம் கூட பேச முடியலை...  ஏதாவது தடங்கள் வரும்..

இல்லை யென்றால்  அவள் ஆபிஸ் நேரத்தில் அவளுடன் அவர் பேசி விடுவதாக சொல்லி விடுவாள்...

அவர் வேலையில் பிசியாக இருப்பதால் போன்  பண்ண முடியவில்லை .. என்று  ஏதாவது ஒரு காரணம் சொல்லி விடுவாள்..

சரி.. குழந்தை பிறக்கறப்ப இல்ல பிறந்த பிறகாவது வந்து விடுவார் என்று  பார்த்தால் இன்னும் காணோம்..

இதையெல்லாம் பார்த்தால் எனக்கு என்னவோ பயமா இருக்கு...

இவள் சொல்ற இந்த மாப்பிள்ளையே ஒரு கற்பனையோ என்று... எதையோ என்கிட்ட மறைக்கிறானு நினைக்கிறேன்... " என்று  தழுதழுத்தார் பரிமளம்..

அதை  கண்ட அபிநந்தனுக்கு கஷ்டமாக இருந்தது..

ஓரளவுக்கு இந்த துபாய் ஹஸ்பன்ட் கதை அவன் எதிர்பார்த்ததுதான்..

ஆனால் ஏன் டெல்லியில் இருந்து தீக்சா பாதியில் கிளம்பி சென்றாள்  என்று தெரிந்து கொள்ளத்தான் அழைத்திருந்தான்..

 இப்பொழுது அவள் தந்தையின் மறைவுக்காக சென்றவள் அதன் பிறகு  ஏன் தன்னை தொடர்பு கொள்ளவில்லை??  என்று  யோசிக்க அவள் தந்தை இறந்த அதிர்ச்சியில் அவள் அலைபேசி காணாமல் போயிருக்கலாம்...  

இல்லை அவளுடைய அதிர்ச்சியில் என்னை அழைக்காமல் இருந்திருக்கலாம்...

ஆனால் அடுத்த நாள் என்னை  எப்படியாவது அழைத்திருப்பாள்.. ஆனால் இதெல்லாம் ஏன் எனக்கு நினைவில்லை...

ஒருவேளை  என்னை  ரீச் பண்ண முடியாமல் நான் அவளை ஏமாற்றி விட்டதாக  எண்ணிதான் என் மேல் வெறுப்பை வளர்த்து வைத்திருக்கிறாளோ..

ஆனால் எனக்கு என்ன ஆச்சு என்று ஒன்றும் தெரிய மாட்டேங்குதே...

என்னால் எத்தனை பேருக்கு கஷ்டம்??.. அப்படி என்னதான் நடந்திருக்கும் எனக்கு?? என்று  யோசிக்க தலை வலித்தது..

பரிமளம் இன்னும் லைனில் இருப்பதை உணர்ந்து, தன்னை சமாளித்து கொண்டவன் பரிமளத்திற்கு ஆறுதல் சொல்லி சீக்கிரம் தான் அவர் மறுமகனை கண்டு பிடித்து அழைத்து வருவதாக கூறவும் அவருக்கு மகிழ்ச்சியாகி போனது...

“தம்பி...  உங்களால முடியுமா?? என்றார் ஆர்வமாக

“கண்டிப்பா ஆன்ட்டி.. எனக்கு எல்லா பிசினஸ் சர்க்கில் லயும்  நிறைய பேர் தெரியும்.. அதை வச்சு கண்டு பிடிக்கலாம்..

இனிமேல் மாப்பிளையை பற்றி கேட்டு தீக்சாவை நீங்க எதுவும் தொந்தரவு  பண்ணாதிங்க... அப்புறம் என் பொண்ணு...” என்று  சொல்ல வந்தவன் பாதியில்  விழுங்கி கொண்டு

“குட்டி எப்படி இருக்கா??.. "என்றான் ஆர்வமாக...

தீக்சா தன் மனைவி அந்த குட்டி தேவதை தன் குழந்தை என உறுதியாகி விட, அவனுக்கு ஏனோ தன் மனைவி மகள்   இரண்டு பேரையும் இப்பொழுதே  பார்க்கணும் போல இருந்தது...

அவன் குழந்தையை பற்றி கேட்கவும்

“ஹ்ம்ம் நல்லா இருக்கா பா.. அவளை பார்த்துதான் நான் மனசை தேத்திக்கிறேன்...  " என்றார் தன் பேத்தியின் பூரிப்பில்..

“சரி ஆன்ட்டி...நீங்க கவலை படாதிங்க.. சீக்கிரம் நல்லது நடக்கும்.. "என்று சொல்லி தன் அலைபேசியை வைத்தவன் இப்பொழுது ஓரளவுக்கு தன் முடிச்சுகள் எல்லாம் ஒன்றாக இணைக்க அவனுக்கு இப்படிதான் நடந்திருக்கும் என்று புரிந்தது...

இன்னும்  புரியாமல் இருப்பது தனக்கு என்னாச்சு?? ஏன் எனக்கு எதுவும் நினைவு இல்லை என்பது தான்...

 அப்பொழுதுதான் தன் பெற்றோர்களின்  இறப்பும் நினைவு வந்தது.... அவன் பெற்றோர்கள் இறந்தது கூட அவனுக்கு நினைவில்லை...

தன் அத்தை காஞ்சனாதான் அவர்கள் விபத்தில் இறந்து  விட்டதாக  கூறினார்.

அப்ப அத்தைய புடிச்சு கேட்டால் எல்லா உண்மையும் தெரியும்.. இந்த  கான்பிரன்சிற்கு பிறகு என்ன  நடந்தது என்று அவருக்கு தெரிந்திருக்கும்.. “  என்றவன் உடனே அடுத்த  பிளைட்டில் ஆனந்த் ஐ  அழைத்து கொண்டு சென்னை வந்தான்...

னந்த் ஐ விட்டுவிட்டு நேராக தன் வீட்டிற்கு சென்றவன் தன் அத்தையை  தேடினான்.. அவரை கண்டு பிடித்து அவர் அருகில் சென்றவன்  

"அத்தை  என் அப்பா அம்மா எப்படி இறந்தாங்க?? " என்றான்

திடீரென்று  வந்தவன்  இப்படி கேட்கவும் காஞ்சனா முழித்தார்..

"ஹ்ம்ம் சொல்லுங்க அத்தை.. எப்படி இறந்தாங்க?? "என்றான் ஊடுருவும் விழிகளில்...

ஆ ஆக்சிடென்ட்.. மாப்பிள்ளை.." என்றார் தடுமாற்றத்துடன்...

என்னைக்கு??  என்றான் மீண்டும் இடுங்கிய கண்களுடன்..

அவர் மறைக்காமல் அவர்கள் இறந்த தேதியை சொல்ல அது தீக்சா டெல்லியில் இருந்து கிளம்பி வந்ததற்கு அடுத்த நாள்...

அன்றுதான் அவன் கான்பிரன்ஸ் முடிந்து அபி சென்னை வந்திருக்க வேண்டும்...

“எப்படி??  என்றான் மீண்டும் கண்கள் இடுங்க...

“அது வந்து.... என்று இழுத்தார் காஞ்சனா..

“சொல்லுங்க அத்தை.. எதையும் மறைக்காமல் சொல்லுங்க..”  என்று உருமினான்..

அவரும் அதற்கு மேல் மறைக்க முடியாமல்

“நீ   ஒரு மீட்டிங் க்காக டெல்லி போயிருந்த.... அப்ப நீ திரும்ப வர்ரப்ப  உன்னை பிக்கப் பண்றதுக்காக இரண்டு பேரும் போனாங்க. உன்னை கூட்டிகிட்டு வர்ரப்போ எப்படியோ ஆக்சிடென்ட் ஆகிடுச்சு...

அதுல அவங்க இரண்டு பேரும் அந்த இடத்துலயே இறந்திட்டாங்க... நீ மட்டும்தான் அடிபட்டு அரை உயிரா இருக்க யாரோ பார்த்து ஹாஸ்பிட்டல் சேத்தாங்க..

நல்ல வேளையா உனக்கு பெருசா அடி எதுவும் படலை...சின்ன அடியோட போய்டுச்சு...  " என்றார் பெருமூச்சு விட்டவாறு...

"எனக்கு எங்க அடிபட்டுச்சு அத்தை... “  என்றான்...

"த தலையில் கொஞ்சம் அடிபட்டிடுச்சு மாப்பிள்ளை...  நீ சுய நினைவில்லாமல் இரண்டு நாள் கிடந்த .. அப்புறம் தான் உனக்கு கொஞ்சம் நினைவு வந்தது...

ஆனால் கொஞ்சம் உனக்கு அப்ப பழசெல்லாம் மறந்திடுச்சு என்றார்... " தயக்கத்துடன்...

“இதை ஏன் என்கிட்ட நீங்க சொல்லலை  அத்தை?? என்றான்  அவரை எரித்து விடும் பார்வையுடன்..

"இல்லப்பா அபி.. நீ அப்பதான்  உடம்பு தேறி  வந்த.. உன்கிட்ட போய் விபத்தை பத்தியோ அப்பா அம்மா இறந்திட்டாங்க னு உனக்கு கொஞ்சம் நாட்கள் மட்டும் பழசெல்லாம் மறந்திடுச்சு னு சொன்னால் உன் மனசு கஷ்டபடும் இல்லையா.. அதான் சொல்லலை.... “ என்றார்

“என்ன சொல்லி என்ன  பண்ண.?? . போனவங்களை திருப்பி கூட்டிட்டு வர முடியுமா?? ..

உனக்கும் மாயாவுக்கும் அப்பதான் நிச்சயம் பண்ணி சீக்கிரம் கல்யாணம் பண்றதா இருந்தாங்க.. உங்க அம்மாவுக்கு கொள்ளை ஆசை மாயாவை மறுமகளாக்கிக்கணும்னு.. நீயும்தான் அவ மேல உயிரா இருந்த...

இந்த  டெல்லி மீட்டிங் போய்ட்டு வந்த பின்னாடி கல்யாண தேதி பிக்ஷ்  பண்றதா இருந்தது. .அதுக்குள்ள என்னென்ணவோ நடந்து போச்சு... " என்று  மூக்கை உறிஞ்சினார் காஞ்சனா அவனை ஓரக்கண்ணால் பார்த்தவாறு...

அதை கேட்டு இன்னும் குழம்பினான் அபி..

மாயா வை சின்ன  வயசுல இருந்தே தெரியும்...  அவள்  அவனுடைய ஒன்னுவிட்ட அத்தை  மகள் என்ற வகையில்.....

ஆனால் அவளை கல்யாணம் பண்ற அளவுக்கு  என்றுமே பேசியதில்லையே.. அவனுக்கு நினைவு தெரிந்த நாள் வரை சென்று யோசித்து  பார்க்க தன்  அன்னை  எப்பவும் அப்படி கூறியதில்லை என்பது நினைவு வந்தது ..

ஒருவேளை  தன் அன்னை  மனசு மாறி இந்த நிச்சயம் நடந்திருக்குமா??

அப்படி டெல்லி கான்பிரன்ஸ் முன்னயே நிச்சயம் நடந்திருந்தால்  கண்டிப்பா நான் தீக்சா வை மணந்து கொண்டுருக்க மாட்டேன்..

எல்லை தாண்டியும் நடந்திருக்க மாட்டேன்.. ஒருவேளை இவர் அத்தை  எதுவும் மாற்றி சொல்றாரோ?? .. " என்று  சந்தேக கண்ணுடன் அவரை ஆழ்ந்து பார்க்க அவரோ வேலை இருப்பதாக சொல்லி சமையல் அறைக்குள் புகுந்து கொண்டார்...

பின் அபிநந்தன் தான் அட்மிட் ஆகியிருந்த  ஹாஸ்பிட்டலுக்கு சென்று  விசாரிகக் அப்பொழுது தான் அவனுக்கு நடந்த விபத்தை பற்றி  டாக்டர் சொன்னார் ..

காஞ்னா சொல்லியது  எல்லாம் உண்மை  என்று புரிந்தது ..

தன் பெற்றோர்கள் இறந்தது கூட தெரியாமல் சுய நினைவில்லாமல் இருந்த  தன்னை  நினைத்து அவனுக்கே வெறுப்பாக இருநது..

அதை விட தன் மனைவி என்று காதலித்து  மணந்தவளை தெரியவில்லையே.. என்று இன்னும் வேதனையாக இருந்தது..

“டாக்டர்.. இதுக்கு எதுவும் ட்ரீட்மென்ட் இல்லையா?? எப்படி என்னுடைய பழைய நாட்களை திரும்ப நினைவுக்கு கொண்டு வருவது??  அந்த குறிப்பிட்ட நாட்களை  எப்படி மீண்டும் நினைவுக்கு  கொண்டு வருவது?? .. ஒரு வாரம் மட்டும்  நினைவு வந்தால் கூட போதும்..ப்ளீஸ் டாக்டர்... ஏதாவது செய்யுங்களேன்...  " என்றான் அவசரமாக

இதை கேட்ட அந்த ந்யூரோ  டாக்டர் சிரித்தார்..

“இது என்ன  உங்க பிசினஸ் டீலா அபிநந்தனன்?? .  வேணுங்கிறதை வச்சுகிட்டு  வேண்டாங்கிறதை  டெலிட் பண்ண...

விபத்தில் உங்கள் மூளையில் அடிபட்டதால் அந்த  நினைவு பகுதியில் சில அழிந்து விட்டன... ஒருவேளை அந்த  செல்கள் திரும்பவும் சரியானால் உங்களுக்கு நினைவு திரும்ப வாய்ப்பிருக்கு..

இதுக்குனு  தனியாக எதுவும் ட்ரீட்மென்ட் இல்லை...

இதுக்கெல்லாம் காரணம் நீங்கள் காரில் வரும்பொழுது சீட் பெல்ட் அணியாமல் வந்ததால் தான்.. கார் பலமாக எதன்மீதோ மோதியதால் உங்கள் தலை முன்னால் இருந்த ஸ்டியரிங்கில் பட்டு அடிபட்டிருக்கு... ஆனாலும் வேற எதுவுமே தாக்கியிருக்கு....

படிச்ச நீங்கள் இவ்வளவு கவனகுறைவா இருக்கலாமா?? “ என்றார் வருத்ததுடன்....

எப்பொழுதுமே சீட் பெல்ட் அணிந்துதான் காரை ஓட்டுவான்... அன்று என்னாச்சு?? ஏன் அணியவில்லை?? என்று யோசிக்க எதுவும் நினைவில் இல்லை...

“ஹ்ம்ம்ம் உங்களுக்கு அடிபட்ட நிலைக்கு இந்த அளவுக்காவது  உங்களுக்கு நினைவு இருக்கேனு  சந்தோசபடுங்க.. என்ன  வாழ்க்கையில் கொஞ்ச நாள் தானே...  அதை மறந்துட்டு மீதி இருக்கிற  நாட்களை  அனுபவிங்க..”  என்றார்...

“அந்த கொஞ்ச  நாட்கள் எனக்கு எவ்வளவு முக்கியமான நாட்கள் னு  எனக்கு தான் தெரியும் டாக்டர்..

அந்த ஒரு வாரம் தான் என் வாழ்க்கையின் எதிர்காலத்தை, மீதி இருக்கிற என் வாழ்க்கையை நிர்ணயித்தவை..

இப்ப அதுவே நினைவில்லை என்றால் என் எதிர்காலம் என்னவாகும்?? " என்று  மனதுக்குள் புலம்பியவன் பின் எழுந்து  அவருக்கு நன்றி  சொல்லி கிளம்பி சென்றான்...

ருத்துவமனையில் இருந்து வெளிவந்து காரை  ஓட்டி கொண்டிந்தான் அபிநந்தன்...  

அவன் அலைபேசி ஒலிக்க. அதை எடுத்து பார்க்க மாயா தான் அழைத்தாள்.. அவள் சாப்பிங் போக வேண்டும் என்றும்  அவளை  அழைத்து போக சொல்லி கொஞ்சினாள்....

அதை கேட்டு ஏனோ எரிச்சலாக வந்தது அவனுக்கு... அவளிடம் தனக்கு வேலை இருப்பதாக சொல்லி அவளையே சென்று  வர சொல்லி சிடுசிடுத்து போனை வைத்து விட்டான்..

அலைபேசியை வைத்தவனுக்கு மாயாவை பற்றி குழப்பமாக  இருந்தது...

“அத்தை  சொல்ற மாதிரி  அம்மா அப்பா இவளுடன் தனக்கு திருமணம் நிச்சயம் பண்ணியிருப்பார்களா??  அப்படி என்றால் ஒரு புகைபடம் கூட வீட்டில் இல்லையே " என்று குழம்பியவன்

உடனே தாமஸ் ன் நினைவு வர,

“கண்டிப்பா அவருக்கு எல்லாம் தெரிந்திருக்கும்... என் தந்தை எல்லாத்தையும் அவருடன் பகிர்ந்து கோள்வார்...

அதோடு அவனுடை வீட்டு விசேசம் எதுவானாலும் தாமஸ் மறக்காமல் கலந்து கொள்வார்.. அதனால் உடனே அவரை அழைத்தான்...

அவரிடம் நேரடியாக தனக்கு நிச்சயம் நடந்ததா?? என்று கேட்க அப்படி எதுவும் இல்லை என்றார்..

அதோடு கூடுதலாக

“அபி கண்ணா... நீ அந்த டெல்லி கான்ப்ரன்ஸ்லயே யாரோ ஒரு பொண்ணை பிடித்து போய் அவளை நீ விரும்புவதாகவும் அவளை தான் கல்யாணம் பண்ணிக்க போறதாக நீ உன் அம்மாகிட்ட சொன்னியாம்..

அதை  கேட்டு அவர்கள இரண்டு பேருக்கும் அப்படி ஒரு  சந்தோசம்... உன் அம்மா கூட அந்த பொண்ணு கிட்டபேசினாளாம்.. உன் அப்பா தான் என்கிட்ட சொன்னான்...

அதனால் தான் நீ டெல்லியில் இருந்து  வர்ரப்போ உன் கூட வரப்போற  மறுமகளையும் பார்க்க போறதா சொல்லிட்டு  உனக்கு சர்ப்ரைசா இருக்கட்டும் என்று இரண்டு பேரும் கிளம்பி ஏர்போர்ட் போயிருக்காங்க..

எனக்கு முதல் நாளே போன் பண்ணி சொல்லி இருந்தான்..

அன்று  இரவுதான் எனக்கும் அமெரிக்காவுக்கான ப்ளைட்ங்கிறதால் நானும் அடுத்த நாள் என்னாச்சுனு கேட்கலை.. .

இரண்டு நாள் கழித்து அமெரிக்காவில் லேன்ட் ஆனபிறகு தான் எனக்கு தகவல் கிடைத்தது அவர்கள் இருவரும் ஆக்சிடென்ட் ல் இறந்து விட்டதாக... " என்று கூறும்பொழுதே தழுதழுத்தார்.....

அதை கேட்டு அவனுக்கு சந்தோசபடுவதா இல்லை துக்க படுவதா என்று  தெரிய வில்லை...

தன் அனனை தீக்சாவிடம் பேசியிருக்கிறார்.. தான் திருமணம் செய்து  கொண்டது அவர்களுக்கும் தெரிந்திருக்கு..

அப்படி என்றால் தன் மகன் வாழ்வு நன்றாகி விட்டது என்ற சந்தோசத்துடன் நிம்மதியுடனும் தான் என்னை விட்டு சென்றிருப்பர்....

ஆனால் இந்த  அத்தை ஏன் மாற்றி சொன்னார்?  என்று  அவன்  பிசினஸ் மூளையை பயன்படுத்தி யோசிக்க ஓரளவுக்கு அவனுக்கு புரிந்தது அவருடைய திட்டம்.. ..

அவனுக்கு நினைவு இல்லை என்பது தெரிந்து கொண்டு, அதை பயன்படுத்தி மாயாவை திருமணம் செய்து கொடுக்கத்தான் இப்படி மாற்றி சொல்லி இருக்கிறார்..

நல்ல வேளை...  அவசரபட்டு அப்படி ஒரு முட்டாள் தனத்தை நான் செய்ய வில்லை.. நாட்களை தள்ளி போட்டது  நல்லதா போச்சு.. " என்று மகிழ்ந்தவன்  அப்படி என்றால் தீக்சா தன்னை  கண்டுபிடிக்க  முயன்றிருப்பாள்..

தன்  அலைபேசியும் தொலைந்திருக்க அவனை ரீச் ஆக முடியாமல் எப்படி தவித்து போயிருப்பாள் என் கண்மணி..

கண்டிப்பா  என்னை அலுவலகக்த்தில் தொடர்பு  கொள்ள முயற்சித்திருப்பாள்”   என்று  எண்ணி உடனே தன் அசிஸ்டென்ட் இடம் சென்ற வருட நாள்  சொல்லி ஏதாவது  தீக்சா என்ற பேரில் போன்  கால் வந்ததா என்று ட்ரேஸ் பண்ண சொன்னான்...

அவளும் செக் பண்ணி பின் அவனை அழைத்து அதே பெயரில் கால் வந்திருப்பதாக சொன்னாள்..  

ஆனால் அவன் சீக்கிரம் பேசி விட்டு வைத்து விட்டதாக தெரிந்தது....

மீண்டும் தன் அத்தையிடம் வந்து தீக்சா என்ற பெயரில்  வீட்டிற்கு யாராவது போன் பண்ணினார்களா  என்று  விசாரிக்க அவர் முதலில்  இல்லை என்று  சமாளிக்க பின் தீக்சா என்ற பெயரில் அழைப்பு வந்ததை  ஒத்து கொண்டார்...

அதை கேட்ட அபிநந்தன் அவரை  ஒரு  எரித்து விடும் பார்வை பார்த்துவிட்டு எழுந்து சென்றான்....

தன் அறைக்கு சென்றவன் கட்டிலில் தொப்பென்று  விழுந்தான்...

“தந்தையையும் இழந்து  கணவன் என்று  நம்பியவனையும் தொலைத்து என்  கண்மணி  எவ்வளவு கஷ்ட பட்டிருப்பாள்...

அதனால் தான் இறுகி போய் விட்டாள்...

என்னை முதலில்  கண்டதும் அவள் கண்ணில் தெரிந்த அந்த பார்வையின் அர்த்தம் இப்பொழுது புரிந்தது....

அது அவன் மேல் அவள் கொண்டிருந்த காதல், அவனை காணாத ஏக்கம், ஆசை என அத்தனையும் கலந்து தெரிந்தது அந்த பார்வையில்... இப்பொழுது அதை நினைத்தாலும்  அவனுக்குள்  இன்னும் சிலிர்க்க  வைத்தது..

பின் அதை தொடர்ந்து அவள் வெற்று வெறித்த பார்வையும் நினைவு வர அது  அவன் இதயத்தை  கிழித்தது ....

“எது எப்படியோ.. இப்பயாவது தெரிந்ததே... அவனை கண்டபொழுதாவது அவனிடம் உண்மையை சொல்லி இருந்திருக்கலாம்... எத்தனை முறை அவளை தேடி போனேன்....

ஒரு முறையாவது வாயை திறந்து நடந்ததை சொல்லி இருந்திருக்கலாம்....... ஹ்ம்ம் அவள் தான் வைராக்கிய காரி ஆச்சே.. அவளா என்னை  தேடி வந்திருக்க மாட்டாள்..உண்மையை சொல்லியும் இருக்க மாட்டாள்...

இப்பவும் நான் தான் அவளை  கண்டு பிடித்தேன்..  இல்லை என் பொண்ணு என்னை கொண்டு வந்து அவளிடம் சேர்த்து விட்டாள்...

 தன் மகளின் நினைவு வர, உடனே அவளை பார்க்க வேண்டும் போல இருந்தது....

வேகமாக எழுந்தவன் தன் காரை எடுத்து கொண்டு விரட்டினான் தன் மகளை காண..!


Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!