பூங்கதவே தாழ் திறவாய்-30

 


இதழ்-30

 

வீல் என்ற தன் மகளின் அலறலை கேட்டு திடுக்கிட்டாள் தீக்சா...

அவள் உறங்கிவிட்டாள் என்று  அவளை  அப்படியே தொட்டிலில்  விட்டுவிட்டு குளிக்க வந்திருந்தாள்... அப்பொழுதுதான் குளிக்க ஆரம்பித்து  இருந்தாள்..

அவள் குளியல் அறைக்குள்  வந்து 5 நிமிடம் கூட ஆகி இருக்காது.. அதற்குள் அவள் எழுந்து வீல் என்று  அலரவும் திடுக்கிட்டாள்...

அவளுக்கு சுக பிரசவம் என்பதால் அடுத்த  நாளே டாக்டர் அவளை டிஸ்சார்ஜ்  ஆகி வீட்டுக்கு  செல்ல சொல்லிவிட அன்று மாலையே வீட்டிற்கு வந்து விட்டனர்...

மருத்துவமனையில் அடுத்த நாள் தன் குழந்தையை காண வந்த அபிநந்தனை  திட்டி அனுப்பி விட அவனும் அதற்கு பிறகு வரவில்லை..

அதை கண்டு ஒரு பக்கம் நிம்மதியாக இருந்தாலும் இதயத்தின் ஒரு மூலையில் சிறு ஏமாற்றம் அவளையும் அறியாமல்...

ஆனால் அதை அப்படியே போட்டு புதைத்து கொண்டாள்..

“போதும்...  அவனால் நான் பட்ட  வலியும் வேதனையும்.. இதற்குமேல் அவனால் பட ஒன்றுமில்லை.. “ என்று தன்னையே  கல்லாக்கி கொண்டாள்...

இங்கு வந்து  இரண்டு  நாட்கள் ஓடிவிட்டன.. ஓரளவுக்கு தன் மகளை பார்த்து கொள்ள பழகியிருந்தாள் தீக்சா..

அதனால் பரிமளம் தன் பேத்தியை அவளிடம்  விட்டு விட்டு காய்கறி வாங்க மார்க்கெட்டிற்கு சென்றிருந்தார்....

அபிநந்தன் அவளுக்கு பரிசளித்திருந்த தொட்டிலில் தான் தன் மகளை  போட்டு ஆட்டி உறங்க வைத்தாள்..

அந்த  தொட்டிலை முதலில்  எடுக்க மாட்டேன் என்று மறுத்தாள் தீக்சா..   பரிமளம்தான் அவர் ஆசையா வாங்கிட்டு வந்தது.. அதை  ஏன் போடக் கூடாது என்று காரணம் கேட்க என்ன காரணத்தை சொல்ல முடியும்??

“ அவன் தான் என்னை ஏமாற்றி சென்று விட்ட உன் மறுமகன்.. அவனை எனக்கு பிடிக்கவில்லை அதனால் அந்த  தொட்டிலை போட வேண்டாம்  என்று எப்படி சொல்வதாம்.?? . அதனால் அமைதியாக இருந்து விட்டாள்...

அந்த தொட்டிலில் போட்டு ஆட்ட நன்றாக உறங்க ஆரம்பித்து இருந்தாள்.. அதனால் அதற்குள் குளித்து விட்டு வந்துவிடலாம் என்று  குளியல் அறைக்குள் வந்தவள் குளிக்க ஆரம்பிக்க அப்பொழுது வீல் என்று அலறினாள் அந்த குட்டி....

பாதி குளியலில் இருந்தவள் கதைவை இலேசாக திறந்து வைத்து கொண்டு தன் மகளை சமாதானம் செய்ய முயன்றாள்...

“அம்மா வந்திட்டேன் டா குட்டிமா... ஒரு இரண்டு நிமிசம் பொருத்துக்கோ.. குளிச்சிட்டு வந்திடறேன்...”  என்று பேச்சு கொடுத்தவாறு குளியலை தொடர, அந்த குட்டியோ அதற்கெல்லாம் அசராமல்  மேலும் தன் குரலை அதிக படுத்தினாள்..

அதில் கடுப்பானவள்

“ஏய்... எதுக்கு டி இப்படி கத்தற ?? .. நான் தான் வர்ரேனு சொல்றேன் இல்லை...அதுக்குள்ள என்ன அவசரம்??  அப்படியே அப்பனை மாதிரி தப்பாம பிறந்திருக்கா...

உருவத்துல தான் அப்பனை மாதிரினா  குணத்துலயும் அப்படியே அப்பனை உரிச்சு வச்சிருக்கா... பிடிவாதம்...சரியான பிடிவாதம்...” என்று திட்டி கொண்டிருந்தாள்....

அவளின் திட்டலுக்கும் கத்தலுக்கும் பயந்து போயோ என்னவோ அழுகையை நிறுத்தி கொண்டாள் அந்த குட்டி...

உடனே தீக்சாவுக்கு சந்தேகம் வர, அவசரமாக தன் உடலில் ஒரு டவலை சுற்றி  கொண்டு கதவை திறந்து கொண்டு வெளியில் வர, அப்படியே சாக்காகி நின்றாள்...

அந்த குழந்தையை தொட்டிலில்  இருந்து தூக்கி தன் கைகளில்  வைத்து கொண்டு இருந்தான் அபிநந்தன்...

அதனால்தான் அவள் அழுகையை அடக்கி இருக்கிறாள்...

அந்த குட்டியும் அவன் முகத்தையே ஆர்வமாக பார்த்து கை காலை ஆட்டி கொண்டிருந்தாள்..

தீக்சாவோ  இனிமேல் வரமாட்டான் என்று எண்ணி இருந்தவனை மீண்டும் அவனை கண்டதும் அப்படியே ப்ரீஸ்  ஆகி நின்று விட, அபியோ அரைகுறையாக வந்து நின்றவளை கண்டதும் இன்னும் உறைந்து விட்டான்...

இத்தனை நாள் அவள் வேறொருவன் மனைவி என்று தன்னை அடக்கி கொண்டிருந்தவன் இன்றோ அவள் தன் மனைவி அதுவும் அவன் காதலித்து கரம் பிடித்த காதல் மனைவி என்று  தெரிந்திருக்க, அவளையே ரசனையுடன்  இமைக்க மறந்து அனு அனுவாக பார்த்து ரசித்தான்...

அவன் பார்வையை கண்டு கொண்டவள் உடனே கன்னம் சிவக்க, குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்..

அவள்  இதயம் படபடவென்று அடித்து கொண்டது....

இத்தனை நாள் அவன் பார்வை அவள்மீது  எல்லை  மீறியதில்லை.. அவள் வயிற்றில் இருந்த  குழந்தையின் மீது தான் எப்பொழுதும் ஒரு ஏக்க பார்வை படும்தான்.. ஆனால் அவள் மீது அவன் பார்வை கண்ணியத்துடன் என்றும் தப்பாக படிந்ததில்லை...

ஆனால் இன்று  அவன் பார்வையில் இருந்த மாற்றத்தை கண்டு கொண்டவளுக்கு படபடவென்று அடித்து கொண்டது...

ஆனாலும் தன்னை  சமாளித்து கொண்டு அவள் எடுத்து சென்றிருந்த  நைட்டியை போட்டு கொண்டு ஹாலுக்கு வேகமாக வந்தாள்....

அதற்குள் அபி தன் மகளை கையில் இலாவகமாக வைத்து கொண்டு அவளிடம் கொஞ்சி கொண்டிருந்தான்..

அவளின் பட்டு கைகளை தொட்டு பார்த்தும் அவள் காலை ஆசையாக வருடியும் அவளுடன் கதை பேசிக் கொண்டிருந்தான்...

அந்த குட்டியும் அவனையே ஆர்வமாக பார்த்து கொண்டிருந்தாள்...

“பாரேன்... சரியான  திருடி... இவ்வளவு  நேரம் வால் வால் னு  கத்திகிட்டிருந்தா.. இப்ப அவ அப்பனை பார்த்ததும்  எப்படி அமைதியா இருக்கா பார்.. “ என்று  மனதுக்குள் திட்டி கொண்டவள் அவன் அருகில் வந்து

“ஹலோ மிஸ்டர் அபிநந்தன்... இப்ப எதுக்கு இங்க வந்திருக்கிங்க?? .. நான் தான் அன்னைக்கே நீங்க பண்ணின உதவிக்கு நன்றி  சொல்லி இனிமேல் இங்க வராதிங்கனு சொல்லிட்டனே.. திரும்பவும் எதுக்கு இங்க வர்ரீங்க?? “ என்று பொரிந்தாள்...

அவள் பொரிவதையே அமைதியாக பார்த்தவன் , எதுவும் சொல்லாமல் மீண்டும் தன் மகளிடம் கதை பேச

“ஹலோ.. உங்களைத்தான் சொல்றேன்... என்னையே ஏன் இப்படி விடாமல் சுத்தி வந்து தொல்லை பண்றீங்க.... “ என்று  அவன் முன்னே கையை நீட்டி   சொடக்கு போட்டாள்...

கோபத்தில் சிவந்திருந்த அவள் முகத்தையே ரசனயுடன் பார்த்தவன்

“நான் ஏன் திரும்ப திரும்ப உன்னையே சுத்தி வர்ரேனு உனக்கே தெரியும் தீக்சா.. “என்றான் அவளை  ஆழமாக பார்த்து...

அதை கேட்டு திடுக்கிட்டவள்             

“ஏன் னு எனக்கு தெரியலை...  எதுவும் தெரியவும் வேண்டாம்.. நீங்க முதல்ல இங்க இருந்து போங்க..

ஒரு  MD தன் எம்ளாய் வீட்டுக்கு காரணமில்லாம அடிக்கடி வந்தால் தப்பா பேசுவாங்க... அதனால் தயவு செய்து வெளில  போங்க.. “  என்று விரட்டினாள்..

“யார் தப்பா பேசுவா?? ஓ.. உன் ஹச்பன்ட் தப்பா பேசுவானா??

சரி உன் ஹச்பன்ட் கிட்ட போன் பண்ணி கொடு...நானே அவன் கிட்ட பேசறேன்...என்ன போன் பண்றியா??  “ என்றான  குறும்பாக சிரித்தவாறு...

“அது... அது.. அவர் கிட்ட  எதுக்கு??... என் பெர்சனல் ல  நீங்க தலையிடாதிங்க.. “ என்றாள்

“ஹா ஹா ஹா உன் பெர்சனலா?? நோ பேபி... அது நம் பெர்சனல்..”  என்றான் மீண்டும் குறும்பாக சிரித்தவாறு..

இந்த சிரிப்பும் புதிதாக இருந்தது அவளுக்கு...

அவனை தேடி அவன் அலுவலகம் சென்றபொழுது எரிந்து விழுந்தவன் அதன் பிறகு அலுவலகத்தில் சந்தித்த பொழுதும் வேற மாதிரியாக இருந்தான்...   

அவளிடம் இது மாதிரி  எப்பொழுதும் சிரித்து  பேசியதில்லை அவன்.. ஒரு எல்லையோடு தான் இருப்பான்...

ஆனால் இன்று உல்லாசமாக அதுவும் குறும்பாக சிரிப்பதை கண்டு ஆச்சர்யமாக இருந்தது....அவனின் குறும்பு சிரிப்பை தன்னையும் மீறி ரசிக்கத்தான் செய்தாள்...

ஆனாலும் தன் தலையை சிலுப்பி கொண்டவள்

“என்ன  உளறீங்க?? ... எப்படி அது நம் பெர்சனல் ஆகும்? “ என்றாள் அவனை  முறைத்தவாறு.....

“ நீங்க முதல்ல கிளம்புங்க.. இங்க இருக்காதிங்க.. “  என்று  அவளை விரட்டுவதிலயே குறியாக இருந்தாள்...

“ஏன் தீக்சா என்னை  இப்படி விரட்டற?? “  என்றான் பாவமாக

அதை  கண்டு அவளுக்கே சில நொடிகள் கஷ்டமாகி போனது..

ஆனால் அடுத்த நொடி அவன் அவளை கேவலமாக ஏளனமாக பார்த்த பார்வையும் அதோடு தன்னை யாரென்று தெரியவில்லை என்று விரட்டி அடித்ததும் நினைவு வர உடனே இறுகி போனாள்...

“ப்ளீஸ்.. நாங்க எல்லாம் உங்கள மாதிரி  பெரும்  பணக்காரங்க இல்லை..நீங்க எப்படி வேணா இருக்கலாம்...நாங்க அப்படி இருக்க முடியாது...  

இப்படி அடிக்கடி வந்து போனா  யாராவது தப்பா பேசுவாஙக... அதனால கிளம்புங்க.. “என்றாள்..

“என் பொண்டாட்டி புள்ளையை  பார்க்க வந்தா யார் தப்பா பேசுவாங்களாம்??.. அவங்களை முதல்ல காமி.. “  என்றான் அவளை ஒரு ஆழ்ந்த  பார்வை பார்த்து

அவன் சொன்ன  பொண்டாட்டி புள்ளை யில் ஒரு நொடி திகைத்து தான்  போனாள்.. ஆனாலும் சமாளித்து கொண்டு

“இது என்ன புது கதை?? “ என்றாள் நக்கலாக

“ஹா ஹா ஹா புது கதை இல்லை பேபி.. இதுதான் பழைய கதை.. நான்  மறந்திருந்த கதை.... “ என்றான் கண் சிமிட்டி...

“மறந்திருந்த கதையை இப்ப யார் ஞாபக படுத்தினாங்கங்களாம்.... இத்தனை நாள் பொண்டாட்டி புள்ளையை கண்டுக்காதவருக்கு  இப்ப எப்படி ஞாபகம் வந்துச்சாம்?? “ என்றாள் அதே நக்கலுடன்

“ஹ்ம்ம்ம்ம்ம் எல்லாம் என் பொண்ணுதான் எனக்கு ஞாபகம் படுத்தினா ... மை பிரின்சஸ்... இவதான் நான் தொலைக்க இருந்த என் பொக்கிசத்தை கை காட்டி கொடுத்தாள்...

இவளை உன் வயிற்றில பார்த்ததில் இருந்தே எனக்குள் மாற்றம் ..

ஏதோ இவளுக்கும் எனக்கும் ஒரு நெருங்கிய சொந்தம் இருக்கிற மாதிரி  பீல் இருந்துகிட்டே இருந்தது..

அதனால்தான் அவளையே சுத்தி சுத்தி வந்தேன்...இப்பதான் எல்லாம் தெரிந்தது.. “ என்றான்..

“போதும் உளறினது... அவ ஒன்னும் உங்க பொண்ணு இல்லை... “ என்றாள் எரித்து விடும் பார்வை பார்த்து...

ஆமாம்.. அவ என் பொண்ணு இல்லை.. ஆனால் அவ உன் துபாய்  ஹச்பன்ட் ஓட பொண்ணு... உன் துபாய்  ஹஸ்பன்ட் நான்... இந்த கணக்கு  கரெக்டா ஆ?? “ என்றான்  மீண்டும் குறும்பாக சிரித்தவாறு...

“போதும் நிறுத்துங்க.. உளறாதிங்க.. “ என்றாள் மீண்டும் அவனை எரித்தவாறு..

“நான் ஒன்னும் உளறலை.. உண்மையைத்தான் சொல்றேன்”...

என்ன உண்மை??

“நீ என் மனைவி ... இவள் என் மகள் என்ற உண்மை ..” என்றான் ஆழ்ந்த பார்வையுடன்.

“இது ஒன்னும் உண்மையில்லை.. நான் தான் உங்க மனைவி னு சொல்ல  என்ன  ஆதாரம் இருக்கிறது?? நான் உங்களை முன்ன பார்த்தது இல்லை... “

“அப்படியா?? அப்ப இதுக்கு என்ன அர்த்தம்?? “ என்று தன் அலைபேசியில் இருந்து புகைபடத்தை காட்டினான்..

அந்த கான்பிரன்சில் எடுத்த படம் அது....

அதில் தீக்சா  அவன் அருகில் நெருங்கி நின்று கொண்டிருந்தாள்..  இன்னும் சூம் பண்ணி காட்ட அதில் அவன் அவளை கையை பிடித்து கொண்டு நிற்பது  தெரிந்தது....

இருவர் முகத்திலும் அப்படி ஒரு மகிழ்ச்சி... பூரிப்பு...

அதை பார்த்தவள் கண்கள் விரிந்தாலும் உடனே  அதை  அடக்கி கொண்டு

“இந்த போட்டோவை  காட்டினாள் நான் உங்க மனைவி ஆகிடுவேனா??  இந்த  கான்பிரன்ஸ்  ல்  நிறைய பேர் ம் தான் ஜோடியா நிக்கறாங்க..அதனால அவங்க எல்லாரும் கணவன் மனைவி ஆகிடுவாங்களா??  “ என்றாள் வெறுத்த பார்வையுடன்....

“சரி விடு...உன் கழுத்துல போட்டிருக்கியே செயின்... அது நான் போட்ட செயின்.. அதில் இருக்கும் லாக்கெட்டை திறந்து பார்.. அதில் என் புகைபடம் இருக்கும்... இப்பயாவது ஒத்துக்கோ... “

“கிரேட் ஜோக்.. இது நான் கடையில் இருந்து வாங்கினதாக்கும்... உலகத்துல உங்க செயின் மட்டும்தான் ஸ்பெஷல் கிடையாது ...  அதே மாதிரி இதையும் செஞ்சிருக்கலாம்... “ என்றாள் அதே ஏளன பார்வையுடன்...

“இப்ப என்னதான் சொல்ற ?? “  என்றான் அவளின் எண்ணத்தை புரிந்து கொள்ள...

“ஹ்ம்ம்ம் நீங்க யாரோ.. எனக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. நீங்கள் போகலாம்.. “ என்றாள் சுவற்றை வெறித்தவாறு

“தீக்சா.. என் கண்ணை  பார்த்து சொல்.. எனக்கும் உனக்கும் எந்த  சம்பந்தமும் இல்லை?? “ என்றான் அடிபட்ட பார்வையுடன்

அவளும் வெறித்த பார்வையுடன்

“இல்லை..  என்றாள் வேற எங்கோ பார்த்து

“அப்ப இந்த குழந்தைக்கும் எனக்கும்  எந்த சம்பந்தமும் இல்லை... அப்படி தான??

“ஆ ஆ ஆமாம்.. “ என்றாள் சிறு தடுமாற்றத்துடன்...

“கிரேட் ஜோக்... அவள் முகத்தை  பார்.. அப்படியே என்னை  உரிச்சு வச்சிருக்கா .. இப்ப கூடவா சொல்ற எனக்கும் இவளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைனு....” என்றான் அவளை தீர்க்கமாக பார்த்தவாறு...

அவள் பதில் சொல்ல முடியாமல் தரையை  பார்த்தாள்...கண்ணில் ஓரம் கரித்து கொண்டு வந்தது....

“சொல்லுடி.. “ என்று மீண்டும் உருமினான் அபிநந்தன்...

அவள் பதில் எதுவும் பேசாமல் தலையை குனிந்து கொண்டாள் தன் கண்ணீரை மறைக்க.....

“பதில் சொல்ல முடியலை இல்லை... இனிமேல் உன் கிட்ட கெஞ்சிகிட்டிருக்க மாட்டேன்..

லுக்... நீ ஒத்துகிட்டாலும் ஒத்துக்காட்டாலும் அதான் உண்மை.....

நீ என் மனைவி.. இவ என் குழந்தை.. இனிமேல்  இவள் என் கூடதான்  இருக்க போறா.. நீயும் தான் .. “  என்றான் உறுதியாக ..

அதை கேட்டு

“நோ... என்று கத்தினாள் தீக்சா..

அவளின் கத்தலை கேட்டு அதிர்ந்தவன்

“ஏன் தீக்சா?? .. என்னை ஏன் உனக்கு பிடிக்கலை?? என்னை ஏன் வெறுக்குற?? “ என்றான் அடிபட்டவனாக....

“ஏனா....நீங்கள்  என் நந்தன் இல்லை... என்னை  உருக உருக காதலித்து என் கை பிடித்த  என் நந்தன் நீங்க இல்லை....

என் நந்தன் என்னை  விட்டு பிரிந்து இருந்திருக்க மாட்டார்....என்னை ஏளனமாக பார்த்து என்னை யாரென்றே தெரியாதுனு என்னை விரட்டி இருக்க மாட்டார்...  

கிட்ட தட்ட ஒரு வருடம்.... என் நந்தன் என்னை விட்டு போயாச்சு....  “ என்றாள் வேதனையான முகத்துடன்.....

“ப்ளீஸ் தீக்சா... எனக்கு என்ன நடந்ததுனு தெரியாம பேசாத... நீ கிளம்பி வந்த அடுத்த நாளே காலையில் நானும் சென்னைக்கு கிளம்பிட்டேன்..

ஆனால் ஏர்போர்ட் ல இருந்து திரும்பும் பொழுது கார் ஆக்சிடென்ட் ஆகி... அப்பா அம்மா இரண்டு பேறுமே அங்கயே என்னை  விட்டு  போய்ட்டாங்க... என் தலை அடிபட்டு நான் மட்டும்தான் பிழைத்தது..

அப்ப அடிபட்டதால எனக்கு கொஞ்ச நாள் ஞாபகங்கள் அழிந்து  விட்டன.. அதில் அந்த  டெல்லி கான்பிரன்ஸ் பத்தி  எந்த நினைவும்  இல்லை... அதான் உன்னை  தேடி வர முடியலை....

ஆனால் உன்னை பார்த்த உடனேயே எனக்குள் சிறு அதிர்வு...

எனக்கு ரொம்ப வேண்டியவ நெருக்கமான வனு  தோணுச்சு.. அதை விட உன் வயித்துல வளர குழந்தைய முதல்ல டச் பண்ணினப்போ அப்படி ஒரு பீல்..

ஆனால் நீ ஏற்கனவே திருமணம் ஆனவ...  உன் ஹச்பன்ட் துபாய் ல இருக்கிறார் னு நீ புவனா கிட்ட சொன்னப்போ எனக்குள் ஏதோ உடைந்து விட்டதை போல இருந்தது...

பெரிய பொக்கிசம் கை நழுவி போன மாதிரி இருந்தது...

அப்பதான்  என்னை  கட்டு படுத்திக்க முயன்றேன்.... ஆனாலும்  அப்ப எவ்வளவு வலி வேதனை தெரியுமா??

உன்ணை ஆசையாக பார்க்க கூடாது  என்று  கட்டுபடுத்திய என் மனதை  இந்த குட்டியை பார்க்காமல் இருக்கணும் என்பது மட்டும் முடியவில்லை...

ஒவ்வொரு முறையும் உன் வயிற்றில் அவளை  பார்க்கும் பொழுதும் அவளை திரும்ப திரும்ப தொட்டு தடவி  கொஞ்சி பார்க்கணும் போல இருந்தது...

அதனாலயே வேலையே இல்லை என்றாலும் நீ இருக்கும் ஆபிஸ்க்கு தினமும் காலை வந்து சென்றேன்... அட்லீஸ்ட் இவளை பார்த்துட்டு செல்லலாம்... என்று...

இப்ப புரியுதா நான் ஏன்  உன்னை  தேடி வரலைனு?? “ என்றான் ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டு....

“அப்படி இருக்கிறவர்  ஏன் நிச்சயம் வரைக்கும் போனிங்களாம்..?? ” என்றாள் இன்னும் அதே வெறித்த பார்வையோடு...

“அதெல்லாம் என்  அத்தையின் ட்ராமா.. எனக்கு பழைய நினைவு கொஞ்சம் இல்லை என்பதை பயன்படுத்தி எனக்கு  ஏற்கனவே நிச்சயம் ஆகிவிட்டதாக சொல்லி என்னை  நம்ப வைத்து விட்டனர்...

அப்பவுமே எனக்கு மாயா மேல எந்த ஒரு ஈடுபாடும் இல்லை...

அதனால்தான் அவர்கள் கல்யாணத்திற்கு அவசர படுத்திய பொழுதெல்லாம் ஏதோ ஒரு காரணத்தை  சொல்லி    தள்ளி வந்தேன்...

கண்டிப்பா  உன்னை பார்க்காமல் இருந்திருந்தால் கூட மாயா வை நான்  திருமணம் செய்திருக்க மாட்டேன்... என் மனதில் அப்படி ஒரு எண்ணம் இல்லை...”

ப்ளீஸ்.. இப்பயாவது என்னை  புரிஞ்சுக்கோ தீக்சா.. நான் மனசறிந்து எந்த தப்பும் பண்ணலை.. உன்னை  கை விடணும்னு எண்ணமும் எனக்கில்லை...

என் நேரம்.... என்னால்  அந்த நாட்களை மட்டும் நினைவில்  கொண்டு வர முடியவில்லை.... “ என்றான் வேதனையோடு...

அவன் வார்த்தைக்கு வார்த்தை தீக்சா.. என்று சொல்லுவதே அவள் வலியை அதிகபடுத்தியது...

அவளை நந்தன் அழைக்கும் அந்த ரதி என்ற சொல் அவன் வாயிலிருந்து வராதா என்று எதிர்பார்த்தவள்  அவனுக்கு தீக்சா தான் தெரிகிறாள்.. அவன் ரதி தெரியவில்லை என்று புரிந்தது....

அதனை உணர்ந்ததும் இன்னும் வேதனை அடைந்தவள்

“இல்லை..உங்களை  என்னால் ஏற்று கொள்ள முடியாது.. நான் வாழ்ந்தது என் நந்தன் கூட .. இப்ப இருக்கிற   அபிநந்தன் கூட இல்லை ... “ என்று அதே பாட்டை திரும்ப பாடினாள்..

“ஐயோ.. இரண்டும் நானே  தாண் டி.. புரிஞ்சுக்கோ..” என்று தலையில் அடித்து கொண்டான்....

ஆனால் அதை அவள் ஏற்றுகொள்வதாக இல்லை.... அவள் மறுத்து  மீண்டும் வாக்குவாதம் செய்ய அதில் கடுப்பானவன் தன் பொறுமையை காற்றில் பறக்க விட்டு

“சரி.. இப்ப என்ன தான் சொல்ற?? “ என்றான்...

“என்னை விட்டுடுங்க.. நான் இப்படியே இருந்துக்கறேன்.. நீங்க  வேற ஒரு பொண்ணை  இல்ல அந்த  மாயாவையே கல்யாணம் பண்ணிக்கங்க...”  என்றாள் கண்ணில் வழியும் நீருடன்....

“ஏய்...”  என்று கையை ஓங்கியவன் மறுகையில் உறங்கி கொண்டிருக்கும்  தன் மகளை கண்டதும் ஓங்கிய கையை உடனே இறக்கி, குரலை தாழ்த்தி கொண்டு

“சே... உனக்கு எப்படி சொல்லி புரிய வைப்பது?? “ என்று தலையை ஒரு கையால் பிடித்து யோசித்தவன், ஒரு முடிவுக்கு வந்தவனாக

“லுக் தீக்சா... நீ என்னதான் சொன்னாலும் இவ என் குழந்தை.... இனிமேல் என்னால் இவளை  விட்டு இருக்க முடியாது... நாளைக்கு வந்து நான் இவளை அழைச்சிட்டு போக போறேன்...

என் மனைவியா உனக்கு என் கூட வர பிடிக்கலைனா அட்லீஸ்ட் இந்த குழந்தைக்கு அம்மா ஆ என் கூட வா.. இல்ல அதுவும் முடியலைனா நான் மட்டுமே இவளை வளர்த்துக்கறேன்.. உனக்கு எப்படி பிடிக்குதோ அப்படியே இருந்துக்கோ.... "

“ஹலோ... உங்களுக்கும் இந்த குழந்தைக்கு,ம் எந்த சம்பந்தமும்  இல்லை...நீங்க யார் அவளை தூக்கிட்டு போக?? “ என்று சீறினாள் தீக்சா..

“சம்பந்தம் இருக்கா இல்லையானு அவள் முகத்தை  பார்த்தாலே தெரியும்.. அப்படியும் நீ ஒத்துக்கலைனா ஒரு டிஎன்ஏ டெஸ்ட் போதும்.. இவள் என் குழந்தை என் இரத்தம் என்  உயிர். என்று நிரூபிக்க....

என்னை  அந்த அளவுக் கெல்லாம் போக வச்சிடாத... நாளைக்கு வருவேன்.. தயாரா இரு... " என்றவன் தன் கையில் இருந்த  குழந்தைக்கு ஒரு முத்தமிட்டு அவளை தொட்டிலில் போட்டுவிட்டு மீண்டும் தீக்சாவை ஒரு உஷ்ண பார்வை பார்த்து விட்டு கதவை நோக்கி நடந்தான்....

கதவை திறந்ததும் அப்படியே அதிர்ச்சியில் உறைந்து நின்றான் அபிநந்தன்..! 

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!