பூங்கதவே தாழ் திறவாய்-31
இதழ்-31
தன் மனைவியிடம் கத்தி விட்டு கதவை அடைந்து கதவை திறந்ததும்
அப்படியே அதிர்ச்சியில் உறைந்து நின்றான் அபிநந்தன்.....
வெளியில்
பரிமளம் காய்கறி கூடையுடன் நின்று கொண்டிருந்தார்...
வாயில்
கதவு லேசாக திறந்திருக்க, உள்ளே நடந்த வாக்கு வாதத்தை எல்லாம் ஒன்று விடாமல் கேட்டிருந்தார்...
அவரை
எதிர்பார்க்காதவன்
“ஆன்ட்டி...
" என்று அதிர்ச்சியாக பார்க்க அவரோ
எதுவும் பேசாமல் உள்ளே வந்தார்...
தீக்சாவுக்கும்
திக் என்றது...
அவளுமே
தவிப்புடன் தன் அன்னையை பார்க்க, அவரோ உள்ளே வந்து உறங்கி கொண்டிருக்கும் தன் பேத்தியையே உற்று
பார்த்தார்....
அபியும்
அவர் பின்னாலயே வந்து
"சாரி..
ஆன்ட்டி... " என்று ஏதோ சொல்ல வர
"போதும்
மாப்பிள்ளை.. நீங்க எதுவும் சொல்ல வேண்டாம்.. எல்லாத்தையும் நான் கேட்டுட்டேன்....
" என்றார் வெறித்த பார்வையோடு..
அதோடு
அவனை மாப்பிள்ளை என்று அழைக்க தீக்சாவுக்கு
திக் என்றது...
தன்
அன்னையின் அருகில் வந்தவள்
"மா....
வந்து... இவர் ஒன்னும் உங்க மாப்பிள்ளை
இல்... " என்று ஏதோ சொல்ல வர, எதிர்பாராத நேரத்தில் ஓங்கி அவள் கன்னத்தில் அறைந்திருந்தார் பரிமளம்...
அதை
எதிர்பார்க்காத அபியுமே அதிர்ந்து
"ஆன்ட்டி...
அவள எதுக்கு அடிக்கறீங்க.. தப்பு பண்ணியது
நான்.. நான் தான் அவளை கட்டாய கல்யாணம் பண்ணி ஏமாத்தி விட்டுட்டேன்.. ப்ளீஸ்.. தீக்சா மேல எந்த தப்பும் இல்லை..அவளை எதுவும்
சொல்லாதிங்க.... " என்றான் பதறியவாறு...
"இல்லை
மாப்பிள்ளை.... என் பொண்ணு எல்லாத்துலயும் சுயமா சிந்திச்சு நல்ல முடிவா எடுப்பா..
அவளால்
அவ வாழ்க்கையை நல்ல படியா அமைச்சுக்க முடியும் னு தான் சின்ன வயசுல இருந்தே
அவங்கப்பா அவளை அவ இஷ்டத்துக்கு வளர விட்டது..
இதுவரை
எல்லாத்துலயும் நல்ல படியாதான் இருந்திருக்கா.. ஆனா உங்க விசயத்துல மட்டும் ஏன்
இப்படி முட்டாளா இருக்கானு தெரியலை..
அதுக்குத்தான்
அப்பயே அடிச்சு வளர்த்திருக்கணும்.... அவ இஷ்டத்துக்கு விட்டோம் பார்.. அதான் இந்த அளவுக்கு வந்து நிக்குது....அடி முட்டாளா இருக்கா... " என்றார் வேதனையுடன்...
அதை
கேட்ட தீக்சா தன் தலையை சிலுப்பியவாறு
"மா..
நான் ஒன்னும் முட்டாள் இல்லை.... இவர தேடி போனேன்.... அப்ப என்னை எப்படி கேவலமா வெறுத்து
பார்த்தார் தெரியுமா ??
அங்கயே
செத்துட்டேன்.... அந்த வலி வேதனை எல்லாம் உனக்கு புரியாது... " என்றாள் கோபமாக
"அப்படி
என்னடி வலி வேதனை உனக்கு?? .. என்னை விடவா அந்த வலியையும் வேதனையையும் நீ அனுபவிச்சுட்ட...
புருசன்
செத்து இரண்டே மாசத்துல பொண்ணு உண்டாகி நிக்கறா...
அதுவும் ஊரறிய கல்யாணம் ஆகாமல், மாப்பிள்ளையும் யார் னு தெரியாமல்
ஒரு குழந்தையை சுமக்கறான அவளை பெத்த தாய்க்கு எப்படி வலி வேதனை இருக்கும்??
என்
புருசன் செத்த வலியை விட உன் வாழ்க்கையை பற்றிய வலிதான் எனக்கு அதிகமாயிடுச்சு..
இன்னை
வரைக்கும் படுத்தா தூக்கம் இல்லை....நான் வேண்டாத சாமி இல்லை உன்
வாழ்க்கை நல்லா அமையனும் என்று...
அப்படி
வேண்டிய சாமியில் ஏதோ ஒன்றுதான் மனசு இறங்கி இப்ப மாப்பிள்ளையை இங்க அனுப்பி வச்சிருக்கு...
நீ
வீணா பிடிவாதம் பிடிக்காத.... இனிமேலாவது மாப்பிள்ளை கூட சேர்ந்து வாழும் வழியை
பார்... “
“மா...
அதெல்லாம் முடியாது... உனக்கு என்ன தெரியும் என் காதலை பற்றி..
அப்படி
உருகி உருகி என்னை காதலித்தவர் இன்று என்னையே யாரென்று தெரியலைங்கிறப்போ அந்த காதல்
செத்து போச்சுமா...
அந்த
காதல் இல்லாமல் சும்மா கடமைக்காக இவர் கூட என்னால பொண்டாட்டியா வாழ முடியாது...”
என்று தன் முகத்தை பொத்தி கொண்டு அழுதாள்...
“ஹ்ம்ம்ம்
நானும் காதலித்து கல்யாணம் பண்ணினவ தான்.... அந்த காலத்துலயே இந்த காதலுக்காக என் குடும்பத்தையே
எதிர்த்து உங்கப்பா கையை புடிச்சேன்...
பழைய
ஞாபகங்கள் இல்லை னு மாப்பிள்ளையையே
வேண்டாம் னு சொல்ற காதல் என்ன காதல் டீ??
இதுவே
முறைப்படி கல்யாணம் ஆகி அவர் கூட வாழ்ந்து அப்ப
இந்த மாதிரி ஒரு ஆக்சிடென்ட் ஆகி
பழசை யெல்லாம் மறந்திட்டார்னா உடனே அவர
விட்டு விலகிடுவியா??
கஷ்டமோ
நஷ்டமோ புடிச்க்குதோ புடிக்கலையோ ஒரு பொண்ணு கழுத்துல தாலி ஏறுகிற வரைக்கும் தன் கணவனை வாழ்க்கை துணைவனை பற்றி அவள் எப்படி வேணா முடிவு செய்து தேர்ந்தெடுக்கலாம்.
ஆனால்
கழுத்துல தாலி ஏறின பிறகு அது அவளுக்கு தீர்மானித்த வாழ்க்கை...புருசன்
நல்லவனோ கெட்டவனோ அவ
புருசன் கூடத்தான் வாழணும்..
அந்த
வகையில் உனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு..
பத்தாதற்கு
உங்க அன்பின் அடையாளமா இதோ ஒரு புள்ளையும் வந்திருச்சு.. இப்ப போய் பழைய காதல்
இல்லை.. நான் கூட வாழமாட்டேன் னு எந்த
புத்தி உள்ள பொண்ணும் சொல்ல மாட்டா...
என்
பொண்ணு புத்திசாலி இந்த ஊரே மெச்சும் தைர்யசாலி..அப்படினு பெருமையா
நினைச்சுகிட்டிருந்தேன்...
அதில
மண்ணை அள்ளி போட்டுடாதா... புத்தி இருக்கிறவ இப்படி ஒரு முடிவை எடுக்க மாட்டா....
“ என்றார் பரிமளம்....
ஆனாலும்
ஏனோ தீக்சாவால் அதை ஏற்று கொள்ள
முடியவில்லை...
“அது
எப்படி என்னை தெரியாமல் போகும்?? அவர் புள்ளையை மட்டும் கண்டு கொள்ள தெரியுது... ஆனால் என்னை உணர
முடியலை...
அப்ப
அந்த காதலுக்கு என்ன அர்த்தம்?? என்று தான் பிடித்த முயலுக்கு 3 கால்
ங்கிற மாதிரி அவள் கருத்திலயே நின்றாள் தீக்சா..
பரிமளம்
சற்று நேரம் அவளிடம் விவாதித்த்தவர் அவள் எதற்கும் கேட்காமல் போகவும் வெறுத்து
போய்
“கடைசியா
என்ன தான் டி சொல்ற?? “ என்றார் தன் மகளை வெறுத்த
பார்வையுடன்...
“ஹ்ம்ம்ம்
என்னால இவர் கூட வாழ முடியாது...
நான்
இப்படியே இருந்திடறேன்.. வேணும்னா இவர் வந்து அவர் புள்ளையை பார்த்துட்டு
போகட்டும்.. எனக்கு இனி இவள் மட்டும்தான்... “ என்றாள் தீர்க்கமாக
அதை
கேட்டவர் தலையில் அடித்து கொண்டு அபியிடம் திரும்பி
“மாப்பிள்ளை..
மயிலே மயிலே னு கொஞ்சினா இறகு போடாது...
இவள் உளறுவதை எல்லாம் பெருசா
எடுத்துக்காதிங்க...
நல்ல
நாளா பாருங்க... அடுத்த முகூர்த்தத்திலயே அவளை ஊரறிய தாலி கட்டி
மனைவியா ஏத்துக்கங்க...
உங்க
பொண்டாட்டி புள்ளையும் உங்க வீட்டுக்கே கூட்டிகிட்டு போய்டுங்க... “ என்றார்...
அதை
கேட்டு அதிர்ந்த தீக்சா ஏதோ சொல்ல வர, அவளை நோக்கி கையை வேகமாக நீட்டியவர்
“நீ
என் வயித்துல பிறந்திருந்தா உண்மையிலயே அம்மா மேல பாசம் இருந்தா நான் சொல்றதை கேட்ப..இதுதான்
என் முடிவு.. இது கேட்டு நடக்கறதும் நடக்காததும் உன் இஷ்டம் தீக்சா...
மாப்பிள்ளை...
நீங்க அடுத்து நடக்க வேண்டியதை பாருங்க.. இந்த பேச்சு இதோட போதும்... “ என்றவாறு சமையல்
அறைக்குள் சென்றாள்..
தீக்சா
திக்கித்து நிக்க, அவனோ அவள் அருகில் வந்தவன்
“ஓகே
தீக்சா பேபி.. என் மாமியாரே நல்ல ஒரு தீர்ப்பா சொல்லிட்டாங்க... அவங்க சொல்றதையாவது
கேட்பனு நினைக்கிறேன்..
ரெடியா
இரு... சீக்கிரம் இந்த அபிநந்தனோட அரண்மனைக்கு ராணியா உள்ள வர.... பை பேபி.. “
என்று அவள் கன்னம் தட்ட, அவன் கையை தட்டிவிட்டு ஒரு அனல் கக்கும் பார்வையை அவள் மேல் வீசினாள்...
அவனோ
அதெக்கெல்லாம் அசராமல் குறும்பாக கண்
சிமிட்டி சிரித்து கொண்டே தொட்டிலில் உறங்கும் தன் மகளை ஆசையாக ஒரு முறை பார்த்து
விட்டு அவள் கன்னம் தொட்டு முத்தம் கொடுத்த பின் வெளியேறி சென்றான்...
Comments
Post a Comment