என்னுயிர் கருவாச்சி-39
அத்தியாயம்-39
“மாமா... மாமா... வேண்டாம் மாமா... என்னை விட்டுடு...” என்று சிணுங்கினாள் பூங்கொடி.
“ம்ஹூம்....எனக்கு
வேணும். சீக்கிரம் வாடி...” என்று அவசரபடுத்தினான்
ராசய்யா.
“சொன்னா கேளு
மாமா... இதெல்லாம் வேண்டாம்... “ என்று மீண்டும் செல்லமாக சிணுங்க,
“நீயும் சொன்னா
கேளுடி... சின்ன புள்ள மாதிரி அடம் புடிக்காத.
எவ்வளவு நேரம் காத்திருக்கிறது... சீக்கிரம் வா. நேரமாகுது...” என்று அவளை அதட்ட,
இரண்டு லாங்
சைஸ் நோட்டு புத்தகத்தையும் , வட்ட வடிவிலான சில்வர் டிபன் பாக்ஸ் ஐயும் மார்போடு அணைத்தவாறு, தயக்கத்துடன் ராசய்யாவின் அருகில் வந்தாள் பூங்கொடி.
அந்த டிவிஎஸ்
பிப்டியை ஏற்கனவே ஸ்டார்ட் பண்ணி தயாராக வைத்திருந்தான் ராசய்யா.
அவள் வீட்டை
விட்டு வெளியில் வாயிலுக்கு வந்ததும்,
“சீக்கிரம்
உட்காருடி. பஸ் போயிரும்...” என்று அதட்ட, அவனை முறைத்தபடி அவன் பின்னால் ஏறி அமர்ந்தாள்
பெண்.
அதுவரை அவளை வேடிக்கை
பார்த்துக் கொண்டிருந்த அவளின் தம்பி
தங்கைகள் கை அசைத்து விடை கொடுத்தனர்.
அவளும் அவர்களை முறைத்தபடி
கையசைத்து வைத்தவள், தன் முகத்தை உர்ரென்று வைத்துக்
கொண்டாள்.
பின்பக்க
கண்ணாடி வழியாக அவள் முகத்தை பார்த்தவன்
“இப்ப எதுக்குடி..
மூஞ்ச தூக்கி வச்சுட்டு வர்ற?
கல்யாணமாகி
முதல் முதலா காலேஜ்க்கு போகப்போற. சிரிச்சுகிட்டு சந்தோஷமா போகாம இப்படியா மூஞ்சை
தூக்கி வச்சுகிட்டு போவ. கொஞ்சம் சிரிடி...” என்று ராசய்யா முறைத்தவாறு செல்லமாக கண்டிக்க,
“ஆமா.. இப்ப அது ஒன்னுதான் குறைச்சல்...” என்று
முகத்தை நொடித்தாள் பூங்கொடி
“ஓஹோ... அப்ப வேற இதுல குறைச்சலாம்? “ என்று குறும்பாக சிரிக்க,
“ஹ்ம்ம்ம் எல்லாத்துலயும் தான். கொஞ்சமாச்சும் கல்யாணம் ஆனவன் மாதிரியா நடந்துக்கிற நீ? அவனவன் எப்படா தாலி கட்டுவோம்... பொண்டாட்டி கூட குடும்பம் நடத்தி புள்ள குட்டிய பெத்துக்குவோம்னு
காத்துக்கிட்டு இருக்கானுங்க.
நீ என்னடான்னா கல்யாணமாகி மூனாவது நாளே என்னை காலேஜுக்கு துரத்தி விடற. இந்த கொடுமையை
எங்க போய் சொல்ல? “ என்று ஒப்பாரி வைப்பவளை போல இழுத்தாள் பூங்கொடி.
“இங்க பாரு பூவு....
வாழ்க்கைல கல்யாணம் பண்ணிக்கிறதும், குடும்பம் நடத்தி புள்ள குட்டிய பெத்துக்கறது எல்லாம் எப்ப வேணா வச்சுக்கலாம். ஆனால் படிப்பு அப்படியா?
காலாகாலத்தில்
படிக்கவேண்டியத படிச்சுக்கிடணும் இல்லையா.
அதுவும் நீ நல்லா படிக்கிற புள்ள. உன் படிப்பை பாதியிலேயே நிறுத்தக் கூடாது இல்லையா?
அதுக்காச்சும்
நீ காலேஜ்க்கு போகணும். எப்படியாவது நீ இந்த படிப்பை முடிச்சிடு...” என்று அக்கறையுடன் எடுத்துச் சொல்ல
“ஆமா...
படிப்பாம் .. படிப்பு... பெரிய பொல்லாத படிப்பு... நான் படிச்சு என்ன
கலெக்ட்டரா ஆகப்போறேன்...” என்று மீண்டும் கழுத்தை நொடித்தாள்
“ஏன் டி...
நீதான சொன்ன... நல்லா படிச்சு பெரிய வேலைக்கு போகணும்னு சொன்ன. இப்ப பிளேட்டையே மாத்தற? “ என்று கண்கள் இடுங்க அவளை ஊடுருவி பார்த்தான்
ராசய்யா.
“ஹ்ம்ம் அது
அப்ப சொன்னேன். படிச்சு வேலைக்கு போய் என்
குடும்பத்தை காப்பாத்தனும்...என் தம்பி, தங்கையை நல்லா படிக்க வைக்கணும்னு இருந்திச்சு
எப்ப என் குடும்பத்தில்
எல்லாரும் சுயநலக்காரர்களாக மாறிப்போனார்களோ, இனிமேல் அந்தக் குடும்பத்திற்கும் எனக்கும்
எந்த சம்பந்தமும் இல்ல. எனக்கு நீ
மட்டும் போதும் மாமா...
நீ சம்பாரிச்சு என்னை
காப்பாத்த மாட்டியா? நான் எதுக்கு படிக்கணும்? உனக்கு துணையா ஏதாவது ஹெல்ப் பண்றேன்.. “
என்றாள் முகத்தில் கசப்புடனும், குரலில் வலியுடனும்.
அதைக்கேட்ட
ராசய்யாவுக்கும் கஷ்டமாக இருந்தது.
அவள் இன்னும் அந்த சம்பவத்தை மறக்கவில்லை என்பது அவளின்
வேதனையான பேச்சிலிருந்தே தெரிந்தது.
ஆனாலும் அவளை
சமாதான படுத்த எண்ணியவன்,
“அப்படி இல்ல பூவு...
படிப்பு என்பது வெறும் சம்பாதிக்க மட்டுமல்ல. சம்பாதிக்கிறது எல்லாம் நான்
பாத்துக்கிறேன். படிப்பு என்பது வாழ்க்கைக்கு
எவ்வளவு அவசியம் என்பது படிக்காத என்னை விட படிச்ச புள்ள உனக்கு நல்லாவே
தெரியும்.
நான் தான் படிக்கல.
நீயாவது நல்லா படி. ஒரு பொம்பள புள்ள படிச்சா
அந்த குடும்பமே படிச்சதுக்கு சமம் னு சொல்லுவாங்க.
நீ நல்லா
படிச்சாதான் நாளைக்கு நமக்கு பொறக்க போகும்
புள்ளைகளுக்கு நீயாவது சொல்லிக் கொடுக்கலாம். அதுக்காகவாது காலேஜ்க்கு போய் இந்த
படிப்பை முடி பூங்கொடி...” என்று அவளை சமாதானப்படுத்தினான்.
முதலில் அவன்
சொன்னதை எல்லாம் கண்டு கொள்ளாதவள், இறுதியாக அவன் சொன்ன நம்ம புள்ளைகளுக்கு
என்றதை கேட்டதும் அவள் முகத்தில் 1000 வாட்ஸ் பல்ப் ஒளிர்ந்தது.
“அப்பாடா... இப்பயாவது என்னை அவன் பொண்டாட்டினு
ஓத்துக்கிட்டானே...” என்று நிம்மதியாக இருந்தது.
கடந்த நாட்களாக
அவளை விட்டு அவன் ஒதுங்கி செல்லவும், எங்கே அவனுக்கு என்னை பிடிக்கவில்லையோ என்று நெஞ்சுக்குள் சிறு சந்தேகம் நெருஞ்சி
முள்ளாக குத்திக்கொண்டே இருந்தது.
இப்பொழுதுதான் அவன்
வாயாலேயே நம்ம பிள்ளைகள் என்று சொன்னதை கேட்டதும் அவளுக்கு உச்சி குளிர்ந்து போனது.
பண்ணையார்
வீட்டிற்கு சென்று வந்ததில் இருந்தே இருவருக்குமே ஒரு தெளிவு வந்திருந்தது.
திட்டமிடாமல்
இருவரும் திருமணபந்தத்தில் இணைந்திருந்தாலும், இப்பொழுது இருவருமே அந்த திருமணத்தை மனதார ஏற்றுக்கொண்டனர். அவள் தன் மனைவி என்றும் அவனும், அவன் தான் அவள் கணவன் என்றும் அவளும் மனதார
ஏற்றுக்கொண்டனர்.
அதற்காக உடனேயே இருவரும்
கணவன் மனைவியாக தாம்பத்தியத்தில் இணைந்து
விடவில்லை.
அவள் அதற்கும் மனதளவிலும், உடல் அளவிலும் தயாராகத்தான் இருக்கிறாள். அவள் மனதை பலமுறை அவனிடம் கோடிட்டு காட்டியும்
விட்டாள்,
ஆனால் ராசய்யா தான் பிடிவாதமாக தள்ளியிருக்கிறான்.
முதலில் ஒரு நல்ல நிலைக்கு வர வேண்டும். அதன்பிறகுதான் மத்ததெல்லாம்
என்று ஸ்ட்ரிக்ட்டாக சொல்லி, அவளுக்கு தடா போட்டு விட்டான்.
அதோடு இன்று
காலை அவளை கல்லூரிக்கு செல்லும்படி கட்டாயப்படுத்தி இதோ அழைத்துக் கொண்டு சென்று
கொண்டிருக்கிறான்.
பூங்கொடிக்கு கல்லூரிக்கு
செல்ல இஷ்டம் இல்லை.
எப்படியும்
ராசய்யா அந்த ஊரில்தான் இருக்க போகிறான்.
அப்படி என்றால்
அவளும் அந்த ஊரில்தான் தங்க வேண்டும். அந்த ஊரில் தங்கவேண்டும் என்றால் எந்த வேலை கிடைக்க
போகிறது. அதோடு அவளுக்கு வேற ஒரு திட்டம் மனதில் இருந்தது.
அதற்கு அவள் கல்லூரிக்கு
போகவேண்டும் என்ற அவசியம் இல்லை. அதனாலயே கல்லூரி படிப்பை டிஸ்கன்டின்யு
பண்ணிடறேன் என்று சொல்ல, ராசய்யாவோ அவளை முறைத்து வைத்தான்.
அவள் படிப்பை
விடக்கூடாது. படித்துதான் ஆக வேண்டும் என்று கண்டிப்பாக சொல்லி விட்டான்.
அவள் கெஞ்சி, கொஞ்சி, அதட்டி, மிரட்டி கேட்டுவிட்டாள் . மற்ற
விஷயத்தில் அவள் சொல்வதை எல்லாம் கேட்பவன் அவள் படிப்பு விஷயத்தில் பிடிவாதமாக
மறுத்துவிட்டான்.
அவள்
படித்துதான் ஆகவேண்டும் என்று உறுதியாக சொல்லிவிட்டான்.
அவனுடைய
கட்டாயத்தின் பேரில் தான் இப்பொழுது கல்லூரிக்கு கிளம்பி செல்கிறாள்.
*****
எப்பொழுதும் தாவணி பாவாடையில் கல்லூரிக்கு
செல்பவள்... இன்று காட்டன் புடவையை கட்டி இருந்தாள்.
தன் நீண்ட கூந்தலை
பின்னி, ஜடையாக்கி தொங்க விட்டு, அதில் கொஞ்சமாக, அவள் தோட்டத்தில் பூத்திருந்த ஜாதிமல்லி
பூவை நெருக்கமாக கட்டி வைத்திருந்தாள்.
கழுத்தில்
பளபளக்கும் தாலி கயிறு... உச்சி வகுட்டில் கொஞ்சமாய் சிறு குங்குமம்...
கன்னங்களில் திருமணமான பெண்ணிற்கே உரிய பொழிவு.. பளபளப்பு... என வீட்டிற்குள் இருந்து வெளிவந்தவளை கண்டதும் ராசய்யாவுக்கு ஜிவ்வென்று இருந்தது.
இந்த
கருவாச்சிக்குள் இப்படி ஒரு பேரழகா என்று அசந்துதான் போனான் ராசய்யா..!
ஒரு நொடி இமைக்க
மறந்து பார்த்திருந்தவன், அடுத்த நொடி தன்னை உலுக்கி
சமனபடுத்திக்கொண்டவன், அவள் கல்லூரிக்கு வேண்டாம் என்று அடம்பிடிக்க, அவளை கட்டாயபடுத்தி அழைத்து செல்வதில் பிசியாகி போனான்.
வண்டியின்
பின்னால் அமர்ந்து இருந்தவள்,
“மா...மா.... “ என்று
அவன் முழங்கையை சுரண்ட, பின்பக்க கண்ணாடி வழியாக தன்னவளை பார்த்து சைட் அடித்து கொண்டே வந்தவன் , அவளின் சுரண்டலில் தன்னிலை பெற்றவன்,
“என்னடி? “ என்றான் ஒற்றை புருவத்தை உயர்த்தி.
“மாமா...காலேஜ்ல
எல்லாரும் கிண்டல் அடிப்பாங்க...” என்று சிணுங்கினாள்.
“கிண்டலைத் தானே அடிப்பாங்க. அடிச்சுட்டு போகட்டும். உனக்கு என்ன? “ என்று சிரிப்பை அடக்கிக்கொண்டு சொல்ல,
“ஜோக்கு.... ஈஈஈஈஈஈ
நல்லா சிரிச்சுட்டேன்...பாத்துக்கோங்க...”
என்று வாயை இருகோட்டுக்கும் இழுத்து, முப்பத்திரண்டு பல்லும் தெரியும் அளவுக்கு
சிரித்து வைக்க, அப்பொழுது எதிரில் வந்த பங்காளி ஒருவன்
“ஆத்தி...என்ன
பூங்கொடி...நீ சிரிக்கிறதுனா தனியா ரூமுக்குள்ள உன் புருஷனை உட்காரவச்சு
சிரிச்சுக்க தாயி...இப்படி நடு ரோட்ல உன் பல்லை காட்டினா, சின்ன பையன் பயந்துக்க மாட்டேனா? பாரு... இப்பவே எனக்கு குளிர் காய்ச்சல்
வர்ற மாதிரி இருக்கு...” என்று அவளை ஓட்ட,
“காய்ச்சல் தானே
மாமோய் ... அதுபாட்டுக்கு வந்துட்டு ஒரு ஓரமா தங்கிட்டு போகட்டுமே…இந்த வாலிப வயசுல, தம்மாத்துண்டு காய்ச்சலுக்கு யாராவது
பயப்படுவாங்களா?” என்று பூங்கொடி அவனை பார்த்து சிரிக்க,
“நான் காய்ச்சலை
பார்த்து பயப்படலை மா...உன்னை பாத்துத்தான்...உன் பல்லை பாத்துத்தான்...” என்று மீண்டும்
திருப்பி சொல்ல,
“யோவ்.. என்னை
பார்த்தால் என்ன திருஷ்டி பூசணிக்கா மாதிரியா இருக்கு... பாத்த உடனே பயந்துக்க? இறங்கி வந்தேன்... உன் சைக்கிள் ல காத்து
இருக்காது... அப்புறம் உன் ஓட்ட சைக்கிள உருட்டிகிட்டேதான் போகணும்...” என்று பூங்கொடி
எகிற,
“ஆஹான்...சும்மா
கிடந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆன்டி ன்ற மாதிரி, நான் பாட்டுக்கு செவனேனு போகாம, உன் கிட்ட வாய கொடுத்து மாட்டிக்கிட்டனே.. “ என்று புலம்ப,
“என்னாது? என்கிட்ட
வாய கொடுத்தியா? உன் வாய் உன்கிட்டதானே இருக்கு. இப்படி
பட்டப்பகல்லயே புழுகலாமா? “ என்று மீண்டும் முறைக்க, அவனோ வேகமாக தலையில் அடித்து கொண்டு
“டேய்
பங்கு...எப்படிடா இவளை சமாளிக்கிற...என்னால முழுசா ஒரு நிமிசம் நின்னு பேச
முடியல..” என்று ராசய்யாவை பாவமாக பார்க்க, அவனோ வாய் விட்டு சிரித்தான்.
“யோவ்... என்
புருஷன்கிட்ட என்ன பஞ்சாயத்து? . எதுனாலும் நேருக்கு நேர் பேசணும்... ஒத்தைக்கு ஒத்தை மோதணும்... நான் ரெடி..”
என்று தன் கையில் அணிந்திருந்த கண்ணாடி வளையல்களை ஸ்டைலாக மேல ஏத்திவிட,
“ஆத்தி...
இவகிட்ட பேசி என்னால ஜெயிக்க முடியாது. வுடு ஜூட்...” என்று தன் சைக்கிளை வேகமாக
மிதித்தான் பங்கு.
“ஹா ஹா ஹா... “
என்று வாய்விட்டு சிரித்த ராசய்யா
“எதுக்குடி அவன
இப்படி தல தெறிக்க அலறி அடிச்சு ஓட வச்ச? “ என்று செல்லமாக முறைக்க,
“பின்ன என்ன
மாமா... என் வாய்... என் பல்லு... என் புருஷன்... நான் சிரிச்சா அவனுக்கு என்னவாம்..
ரோட்டோரமா சைக்கிள உருட்டினமா? கம்முனு போனமானு இல்லாமா என்னமோ என்னை கலாய்க்கிறானாம். அதான் அவன் வீசிய
பாலை அவனுக்கே எப்புடி திருப்பி வுட்டேன். இனிமேல் என் பக்கம் வருவான்? “ என்று தன் இல்லாத காலரை தூக்கி விட்டு
கொண்டாள்.
“ஆமாமா.. .இதில்
எல்லாம் வீராதி வீரி, சூராதி சூரிதான். ஆனால் காலேஜ்க்கு போக சொன்னால் மட்டும், சின்ன புள்ள மாதிரி போக மாட்டேனு அடம்புடி...”
என்று செல்லமாக கண்டிக்க, இப்பொழுதுதான் அவளுடைய அடுத்த பிரச்சனை நினைவு வந்தது.
“மாமா...மாமா...
காலேஜ்ல எல்லாரும் என்னை கிண்டல் அடிப்பாங்க... கல்யாணம் ஆகி போனா எல்லாரும் என்னை
ஓட்டுவாங்க... அதனால காலேஜ்க்கு வேண்டாம் மாமா...” என்று மீண்டும் தன் கெஞ்சலை
தொடர்ந்தாள்
“பூங்கொடி..
சொல்றவங்க ஆயிரம் சொல்லுவாங்க. அதுக்கெல்லாம் நாம பயந்துகிட்டு வாழ முடியுமா? எத்தனையோ பேர் குழந்தை பெத்துகிட்டு கூட
காலெஜ் வந்து இருக்காங்க. அவங்களுக்கெல்லாம் படிக்கணும்ன்ற எண்ணம் மட்டும்தான்.
யார் என்ன
சொல்லுவாங்கனு பயந்துகிட்டு இருக்க தேவையில்லை. உன் ப்ரெண்ட்ஸ் சும்மா
ஜாலிக்காகத்தான கலாய்ப்பாங்க... அதை எல்லாம் பெருசா கண்டுக்காத.. நீ நல்லா படி. அடுத்து வரப் போகும் கோ-கோ மேட்சில் நல்லா
விளையாடு.“
என்று அட்வைஸ்
பண்ணியவன்,
அப்பொழுதுதான் சற்று தொலைவில் இருந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்து , முசிறி செல்லும் பேருந்து நகர்வது தெரிந்தது.
உடனே தன்
வண்டியை வேகமாக முறுக்கினான் ராசய்யா.
பூங்கொடி ஏதோ மறுத்து
சொல்ல வர, பின் அதை சொல்லாமலயே தன் மனதில்
வைத்துக்கொண்டாள்.
பேருந்து நிறுத்தத்தில்
இருந்து அப்பொழுதுதான் பேருந்தை ஸ்டார்ட்
பண்ணி இருந்தார் ஓட்டுநர்.
பின்னால்
இருந்து ராசய்யா கை காட்டவும், ஓட ஆரம்பித்த பேருந்தை நிறுத்தி விட்டார் ஓட்டுநர்.
பேருந்தை
அடைந்ததும் தன் வண்டியை ஓரமாக நிறுத்த, பின்னால் இருந்து இறங்கியவள். அவனை முறைத்தபடி நிக்க,
“சீக்கிரம் போய்
பஸ்ல ஏறு டி... சாயந்தரம் பார்க்கலாம்...” என்று புன்னகையோடு சொல்ல, அவளும் தன் உதட்டை சுளித்து வவ்வே... என்று பழிப்பு
காட்டிவிட்டு, விடுவிடுவென்று பேருந்து உள்ளே சென்று அவன் நின்றிருந்த பக்கமாக
இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.
ராசய்யா அவளுக்கு
கை அசைக்க, அவளோ அவனை காணாதவளை போல முகத்தை திருப்பிக்
கொண்டாள்.
இப்பொழுது
பேருந்து நகர ஆரம்பிக்க, சன்னல் ஓரமாக அமர்ந்திருந்த தன்னவளையே ஏக்கத்தோடு பார்த்திருந்தான் ராசய்யா.
*****
கல்லூரிக்கு வந்திருந்த பூங்கொடியின்
மனமோ கொஞ்சம் கூட பாடத்தில் பதியவில்லை.
அவளின் நினைவுகள் எல்லாம் தன்னவனை சுற்றியே சுழன்று
கொண்டிருந்தது.
கடந்த
மூன்று நாட்களாக அவனுடனேயே
சுற்றிக்கொண்டு இருந்ததாலோ... இல்லை இதுதான் மஞ்சக்கயிர் மேஜிக் என்பதோ? தெரியவில்லை பெண்ணவளுக்கு.
ஆனால் அவள் நினைவுகள் எல்லாம் அவன் முகமே...!
எப்பொழுது அவன் முகத்தை
பார்ப்போம்...மாமா என்று அவன் கழுத்தை கட்டிக்கொண்டு தொங்குவோம்... அவனை சீண்டி, வம்பு இழுத்து, சண்டைக்கு நின்னு, அவனை கட்டிக்கிறது என்று தவிப்பாக
இருந்தது.
அவளை நினைத்து அவளுக்கே
சிரிப்பு வந்தது.
மூணு
நாட்களுக்கு முன்னால் வரை அவளின் எதிரியாக
இருந்தவன்... அவன் முகத்தை கண்டாலே எரிச்சலுடன் முகத்தை திருப்பி கொண்டு
சென்றவள்...
இப்பொழுது அவனை
பிரிந்து ஒரு கணமும் இருக்க முடியாமல் , அவன் காலடியில் தலைக்குப்புற விழுந்து வைப்பாள் என்று கனவிலும் நினைத்திருக்கவில்லை.
ஆரம்பத்தில்
இருந்து அவனோட சண்டை போட்ட தருணங்கள் எல்லா நினைவில் வர, தனக்குத் தானே சிரித்துக் கொண்டாள் பூங்கொடி.
அப்பொழுது அவளின்
தொடையை நறுக்கென்று கிள்ளினாள் சங்கீதா,
“ஸ்ஆ ஆ ஆ வலிக்குது டி பிசாசு.. எதுக்குடி என்னை இப்படி கிள்ளி வைப்ப? “ என்று முறைக்க, அவளோ கண் ஜாடை காட்டி முன்னால் பார்க்க சொன்னாள்.
தன் தோழியை
முறைத்தபடி அவளின் பார்வை சென்ற திசையை அவளும் பார்க்க, அங்கே ஹிஸ்டரி பேராசிரியர் இடுப்பில்
கை வைத்து முறைத்தபடி அவளை ஏரிக்கும் பார்வை பார்த்துக் கொண்டிருந்தார்.
“என்ன பூங்கொடி...உன் நினைப்பெல்லாம் எங்க இருக்கு? “ என்று அதட்ட,
“எல்லாம் அவ
புருஷனை சுத்தி தான் சார்...” என்று வகுப்பில் இருந்த யாரோ ஒரு மாணவன் பதில்
கொடுக்க, அவர்களைப் பார்த்து முறைத்து வைத்தாள் பெண்.
“நான் என் தொண்டை தண்ணி வத்திப்போக கத்தி பாடம்
நடத்திக் கொண்டிருக்கிறேன். அதை கவனிக்காம நீ என்ன தானா சிரிச்சுகிட்டு இருக்க? “என்று மீண்டும் அதட்ட
“எல்லாம் நேத்து
ராத்திரி அவ புருஷன் சொல்லி கொடுத்த பாடத்தை நினைச்சுகிட்டு இருப்பா போல....” என்று மெல்லமாய் பூங்கொடியிடம்
கிசுகிசுத்தாள் சங்கீதா.
தன் கன்னங்கள் சிவந்தாலும், அதை மறைத்துக்கொண்டு தன் தோழியை முறைத்தாள்
பூங்கொடி.
“லுக்... கிளாஸ்ல
வந்தா பாடத்தை ஒழுங்கா கவனிக்கனும். மற்ற ட்ரீம் எல்லாம் வீட்டுக்கு போய்
வச்சுக்க... அன்டர்ஸ்டாண்ட்...” என்று
திட்டியவர் முன்புறம் திரும்பி பாடத்தை தொடர்ந்தார்.
அத்தனை பேர் முன்னாலயும்
தன்னை திட்டியது, பூங்கொடிக்கு சங்கடமாகிப்போனது.
அவள் முகத்தில்
தெரிந்த சங்கடத்தை கண்டு கொண்ட சங்கீதா
“அட விடுடி... இந்த
சிடுமூஞ்சி சொல்வதை எல்லாம் இந்த காதுல
வாங்கி அந்த காதுல விட்டுடணும். சில நேரம் வாங்கவே கூடாது.
அவர் பொண்டாட்டி
மேல இருக்கிற கோபத்தை எல்லாம் இப்படி க்ளாஸ்ல யார்கிட்டயாவது காட்டி திட்டி தீர்த்துடுவார்.
என்னைக்குத்தான் மனுசன் திட்டாம இருந்திருக்கார். இன்னைக்கு நீ பலியாடா
மாட்டிகிட்ட. அதான் உன் மேல காட்டிட்டார்.
சரி அத விடு...
அப்புறம் எப்படி இருக்கார் என் மாம்ஸ்? “ என்று கண்சிமிட்டி சிரிக்க,
“ஹலோ... அவர்
ஒன்னும் உன் மாம்ஸ் இல்லடி. என் மாம்ஸ்
மட்டும்தான். இனிமேல் உனக்கு அவர் அண்ணா...”
என்று முறைக்க,
“இதோடா... மூணு
நாள் முன்னாடி வரைக்கும் இதெல்லாம் சைட் அடிக்கிற மூஞ்சியா? ரௌடி...முரடன் ...அது இது னு சொன்ன புள்ள, இப்ப கதையவே மாத்திட்டியே...எப்படி டி? “ என்று
ஆச்சரியத்தோடு கேட்க,
“அப்படித்தான்...
எல்லா தாலி செய்யும் மாயம்... இல்லையா பூவு? “ என்று மறுபக்கம் அமர்ந்து இருந்த மற்றொரு தோழி மீனா எடுத்துக்கொடுக்க,
பூங்கொடியோ
வெட்கப்பட்டு சிரித்தவாறு தன் கீழ் உதட்டை
கடித்து கொண்டாள்.
அதை பார்த்த மற்ற தோழிகள் இருவரும்
அதிர்ச்சியில் நெஞ்சில் கை வைத்து
கொண்டனர்.
“ஹே பூவு...
நீயா இப்படி வெட்கப்பட்டு சிரிக்கிறது...? லைட்டா நெஞ்சு வலி வர்றதைப் போல
இருக்குடி...நல்ல பெரியா ஆஸ்பத்திரியா பாத்து சேர்த்துடு டி... “ என்று
சிரிக்க, அவர்கள்
இருவரின் தொடைகளை இரு கையால் நறுக்கென்று கிள்ளி வைத்தாள் பூங்கொடி.
*****
அன்று முழுவதுமே அவள் வகுப்பில் எல்லாரும் அவளை
கலாய்த்து தள்ளி விட்டனர்.
எப்படா மணி
அடிக்கும் என்று காத்திருந்தவள், மாலை வகுப்பு முடிந்ததும், மணி அடிக்க கூட காத்திருக்காமல், தன் நோட்டு புத்தகத்தையும், டிபன் பாக்ஸ்ஐயும் தூக்கி கொண்டு பேருந்து நிலையத்திற்கு விரைந்தாள்
பூங்கொடி.
கல்லூரி
முடிந்ததும் , எப்பொழுதும் தன் தோழிகளுடன் அரட்டை அடித்துக்கொண்டு வருபவள்... இன்று
அவர்களுக்கெல்லாம் காத்திருக்காமல் அவசரமாக
பேருந்தை பிடிக்க என்று ஓடி வந்து இருந்தாள்.
கல்லூரி வாசலை
விட்டு வெளியில் வந்தவள் அப்படியே
இன்பமாய் அதிர்ந்து போனாள்.
****
கல்லூரி வாயிலின் ஓரமாக, ஸ்கை ப்ளு கலரில் இருந்த ஸ்ப்லெண்டர் பைக்கை
வைத்துக்கொண்டு, அதன் மீது ஒற்றை காலை மறுபக்கம் போட்டு, இன்னொரு காலை கீழே ஊன்றியாவாறு அமர்ந்திருந்தான் அவள் கணவன்.
அவளுக்கோ நம்ப
முடியவில்லை.
ஒருவேளை காலையிலிருந்து
அவனையே நினைத்துக் கொண்டிருப்பதால், இப்படி ஒரு மாயை தோற்றமோ? என்று தன் கண்களை கசக்கி
விட்டுக்கொண்டு மீண்டும் உற்றுப் பார்க்க, அவனே தான்.
தொடை வரைக்கும் ஏறி
இருந்த வேட்டியும், முழங்கை வரைக்கும் மடித்து விடப்பட்ட
கட்டம் போட்ட சட்டை... பரட்டை தலை...கொசுறாக இருந்த தாடி மீசை என அவன் அவள் கணவனே
என்று அடித்து சொல்லியது.
கூடவே அவளை
கண்டதும், அதுவரை இறுகியிருந்த அவனின் அழுத்தமான இதழ்கள் , மெல்லிய புன்னகையை சிந்த, அவ்வளவுதான்.
முகம் விகாசிக்க,
தன்னை மறந்து, புடவையை ஒரு கையால் தூக்கி
பிடித்துக்கொண்டு, அவன் அருகில் ஓடிச் சென்றாள்.
“மாமா... நீயா? “ என்று சந்தோஷத்தில் ஆர்ப்பரிக்க, அவனோ இன்னுமாய் புன்னகைத்தான்.
அவன் கையை நறுக்
கென்று கிள்ளி வைக்க, அவனும் ஸ்ஆஆஆ என்று அலறியவன்
“எதுக்குடி
கிள்ளின? “ என்று முறைக்க,
“உனக்கு
வலிக்குது...! அப்ப இது கனவல்ல நிஜம் தான். மாமா நீயேதான்? “ என்று சந்தோஷத்தில் குதித்தாள்.
அவளின்
முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியையும், அவனை கண்டதும் தாமரையாய் மலர்ந்த
அவள் முகத்தையும் கண்டவனுக்கு இப்பொழுதுதான் நிம்மதியாக இருந்தது.
அதுவரை அவன்
மனதை அழுத்தி வந்த பாரம் விலகி மனம் லேசானது.
அவள் மறுக்க
மறுக்க அவளை கல்லூரிக்கு அனுப்பி வைத்தவனுக்கோ அதன் பிறகு மனசே இல்லை. வேலை
எதுலயும் கவனத்தை செலுத்த முடியவில்லை.
கண் முன்னே அவளின் சிரித்த முகமும், சில நேரம் மாமா என்றும், பல நேரம் யோவ் என்றும் அவனை அதட்டி
உருட்டி மிரட்டிக் கொண்டிருக்கும் அந்த
சில்வண்டின் நினைவுதான்.
இன்று பண்ணையார்
வயலுக்கு உழுவதற்காக சென்றிருந்தவன்… வேலையை சரியாகவே செய்ய முடியவில்லை. நேராக உழுவதற்கு
பதிலாக குறுக்காக உழுதான்.
அவனின் செய்கையை
பாத்து அங்கு வேலை செய்து கொண்டிருந்த பெருசுகள், அவனின் மனநிலை புரிய
“என்ன ராசு...
பொண்டாட்டி நினைப்பாவே இருக்காக்கும்....பேசாம வேலைய இப்படியே விட்டுபோட்டு போய்
பொண்டாட்டி கூட இருய்யா... கல்யாணம் ஆகி மூனே நாள் ல அந்த புள்ளைய காலேஜ்க்கு
துரத்திட்டு, நீ ஏன் இப்படி கஷ்டபடணும்.
போ.. போய் அந்த
புள்ளைய பாரு... மீதி வேலைய நாளைக்கு பாத்துக்கலாம்...” என்று நமட்டு சிரிப்புடன்
சொல்ல, அதற்குமேல் அவனாலும் தாக்கு பிடிக்க
முடியவில்லை.
ட்ராக்டரை
விட்டுவிட்டு, வீட்டிற்கு வந்தவன், குளித்து வேற ஆடையை போட்டுக் கொண்டு, பக்கத்து தெருவில் இருக்கும் முரளியிடம்
இந்த ஸ்ப்லெண்டரை வாங்கி கொண்டு அவளின் கல்லூரிக்கு வந்து விட்டான்.
அவள் கல்லூரி
முடிந்து வீடு வந்து சேரும் வரைக்கும் அவனுக்கு பொறுமை இல்லை.
இப்பவே அந்த
கருவாச்சியை பார்க்க வேண்டும் போல இருக்க, உடனே கிளம்பி வந்துவிட்டான்.
அவனைப்போலவே
அவளுக்கும் அவனை பிரிந்து கஷ்டமாக இருந்தது என்று அவனை கண்டதும் மலர்ந்த அவளின்
முகத்தில் இருந்தே கண்டு கொண்டான்.
சிறு கர்வம்
எட்டி பார்த்தது. ஆனாலும் தன்னை மறைத்துக்
கொண்டவன்
“ஹே.. பூவு..
இப்ப எதுக்குடி இம்புட்டு ஷாக் ஆகுற. இங்க டவுன்ல எனக்கு கொஞ்சம் வேலை இருந்தது.
அதான் அப்படியே உன்னையும் கூட்டிட்டு போலாம்னு வந்தேன்...” என்றான் உண்மையை மறைத்து.
“நிஜமாகவா மாமா...
சோ ஸ்வீட் ஆஃப் யூ... தேங்க்யூ சோ மச்...”
என்று அவன் தாடையைப் பிடித்து செல்லமாக ஆட்டி வைத்தாள்.
“ஹலோ...ஹீரோ சார்...நாங்களும் இங்கதான் இருக்கோம். உங்க கொஞ்சல்ஸ், ரொமாண்ஸ் எல்லாம் அடக்கி வாசிங்க...
இது பப்ளிக்...” என்றபடி அங்கு வந்து நின்றனர்
சங்கீதாவும், மீனாவும்.
அவர்களைப்
பார்த்து இருவரும் அசட்டு சிரிப்பை சிரித்து வைக்க,
“என்ன மாம்ஸ்...
கொஞ்ச நேரம் கூட பொண்டாட்டியை பார்க்காம இருக்க முடியலையாக்கும்? காலேஜ்க்கே தேடி வந்திட்டிங்க...” என்று
குறும்பாக கண் சிமிட்டி சிரிக்க,
“ஹீ ஹீ ஹீ அது இல்லம்மா. இங்கே ஒரு வேலையாக வந்தேன். அப்படியே இவளையும் கூட்டிக்கிட்டு போலாம்னு வந்தேன்..” என்று
சிறு வெட்கத்துடன் சொல்ல
“ஹ்ம்ம்ம் நம்பிட்டோம்
நம்பிட்டோம். ஆமா இந்த வேலை தானா வந்ததா? இல்ல நீங்களா உருவாக்குனிங்களா? “ மீண்டும் கண் சிமிட்டி சிரித்து வைக்க, இப்பொழுதுதான் பூங்கொடிக்கும் அது உரைத்தது.
இன்ப அதிர்ச்சியோடு தன் கணவன் முகத்தை ஆசையாக பார்க்க, அவனோ தன் குட்டு வெளிப்பட்டுவிட்டதை எண்ணி முகத்தில் வெட்கம் படர, அசட்டு சிரிப்பை சிரித்து வைத்தான்.
“ப்பா.. மாம்ஸ்
செமயா வெட்க படறார் டி. பூவு... வீட்டுக்கு போனதும், முதல்ல உன் புருஷனுக்கு சுத்திப்போடு... “ என்று சங்கீதா சிரிக்க,
“கண்டிப்பா டி.
பின்ன...உங்க ரெண்டு பேரோட கண்ணுமே கொள்ளிக் கண்ணாக்கும்...” என்று சிரித்தாள் பூங்கொடி.
“ஹ்ம்ம் எல்லாம்
எங்க நேரம் டி..” என்று கழுத்தை நொடித்தாள் சங்கீதா.
“அப்புறம்
மாம்ஸ்... இங்கயும் அப்படித்தான். ஒரு
நிமிஷம் கூட உங்களை இவ நினைக்காம இல்ல....” என்று விஷமாக சிரிக்க, பூங்கொடியோ பதற்றத்துடன்
“ஹே
சொல்லாதடி... “ என்று அவள் வாயை
பொத்தினாள் பூங்கொடி.
அவளின் கையை
விலக்கியவள்
“ஹீ ஹீ ஹீ அது
எப்படி சொல்லாம விடுவதாம்... “ என்று கண்ணடித்தவள்,
“ஆமாம்
மாம்ஸ்... அம்மையார் பூதவுடல் மட்டும்தான் பி.ஏ ஃபர்ஸ்ட் இயர் க்ளாஸ் ரூம்ல இருந்தது. ஆனால்
அவ மனசு பூராவும் அவ புருஷன் கிட்டயே சுத்திக்கிட்டு இருந்துச்சு.
இன்னைக்கு
லெக்சர் நடத்தியதில் ஒரு எழுத்து கூட அவ மண்டையில நுழையலை.. வேணும்னா
மேடம் கிட்ட கேட்டு பாருங்க... “ என்று நக்கலாக சிரிக்க,
“சும்மா
இருங்கடி...” என்று தோழிகளின் கையை செல்லமாக கிள்ளினாள்.
பின் இருவரும்
அவர்களிடம் விடை பெற்று கிளம்பி சென்றனர் .
*****
ராசய்யா அந்த பைக்கை ஓட்ட, அவன் பின்னால் அமர்ந்திருந்தவளுக்கோ வானத்தில்
பறப்பதை போல இருந்தது.
தன் கணவன் தன்னைத்
தேடி வந்திருக்கிறான் என்று அவளால்
நம்பவே முடியவில்லை.
அவன் பின்னால்
ஒட்டி அமர்ந்து செல்வதே சொர்க்கமாக இருக்க, ஒருவித மாயலோகத்தில் சஞ்சரித்தாள் பெண்ணவள். .
திடீரென்று பைக்
ப்ரேக் இட்டு நிக்கவும், லேசாக அதிர்ந்து மெல்ல கண் விழித்தாள்
பூங்கொடி.
அவன்
நின்றிருந்த இடத்தை பார்த்ததும், அதுவரைக்கும் இருந்த ஒரு மயக்கம் கிறக்கம், இலகுதன்மை எல்லாம் பறந்தோடி சென்றது.
அவள் உடல் விறைக்க, கை முஷ்டி இறுக, தாடை விடைக்க, ராசய்யாவின் தோளை அழுத்தமாக பற்றிக் கொண்டாள் பூங்கொடி.
Comments
Post a Comment