என்னுயிர் கருவாச்சி-45

 


அத்தியாயம்-45

 

காலையில் எழுந்தவன் முதல் வேலையாக டவுனுக்கு சென்று ஒரு மிக்ஸர்  கிரைண்டரை வாங்கி வந்துவிட்டான்  ராசய்யா.  

அதைக் கண்டவள்  அதிர்ந்து போய்

“என்ன  மாமா இது? “ என்றாள் அதிர்ச்சியொடு.

“நீதான டி...  அம்மி அரைக்க கை வலிக்கிதுனு  சொன்ன.  இனிமேல்  அந்த அம்மிய தூக்கி கடாசிட்டு,  இந்த மிக்ஸியில் அரச்சுக்கோ. என்னை தொந்தரவு பண்ணாத. அதுக்குத்தான் இந்த மிக்ஸி...”  என்றான்  புன்னகையோடு.

“தூக்கி கடாசிடறதா?  அதெல்லாம் முடியாது. இந்த அம்மிதான் நம்முடைய நினைவுச் சின்னம். இதனாலதான முதன்முதலா  என்னை கிஸ் பண்ணின...”  

என்று  கண்சிமிட்டி,  மையல் உடன் தலை சரித்து புன்னகையோடு சொல்ல, ராசய்யாவின் கண்கள் மின்னின.

அவனுக்கும்  நேற்றைய  அந்த நிமிடங்கள் மீண்டும் கண் முன்னே வர, அவன் உள்ளே சிலிர்த்தது.

மீண்டும் தன்னவளை தழுவிக்கொள்ள அவன் உள்ளே தவித்தது. ஆனாலும் முயன்று தன்னை சமனபடுத்திக்கொண்டவன்,  மெல்லமாய்  உதடு கடித்து வெட்கப்பட்டவன்

“ஹே    நீ பெரிய கேடி டி.. நல்லவனா இருந்த என்னை நேத்து நொடியில மயக்கி சாய்ச்சு புட்டியே... நல்ல வேளை...  என் மச்சான் வந்து  என் கற்பை காப்பாத்தினான்.  

தேங்க்ஸ்டா மச்சான்...” என்று புன்னகைக்க, பெண்ணவளோ அவனை முறைத்தாள்.

“ரொம்பத்தான் நீங்க மயங்கிட்டாலும்...” என்று கழுத்தை நொடித்தவள், அப்பொழுதுதான் அந்த மிக்சியின் விலையை பார்த்தாள்.

அதை பார்த்ததும்,

“ஆத்தி... இம்புட்டு விலையா? “ என்று அதிர்ந்து  நெஞ்சில் கை வைத்துக் கொண்டாள்.  

“எதுக்கு மாமா இம்புட்டு விலை போட்டு இதை  வாங்கி வந்திருக்கீங்க? இந்த அம்மில அரைக்கிறது எல்லாம் பெரியா வேலையா? நேத்து சும்மா உங்களை வம்பு இழுக்கறதுக்காக, கை வலிக்கிற மாதிரி நடிச்சேன்.

அதுக்குனு இப்படியா பொசுக்குனு போய் இம்புட்டு விலையை போட்டு வாங்கி வருவாங்க.

இந்த காசை நம்ம நிலத்துல போட்டு இருந்தா, டபுல் ஆகியிருக்கும்... இப்படி பொழைக்க தெரியாதவனா இருக்கிங்களே..”  என்று  கடிந்து கொள்ள

“ப்ச்... உனக்கு முன்னால இதெல்லாம் எனக்கு பெருசு இல்லைடி.  உனக்கு  கை நோகாம இருக்கணும்.  அது போதும்.  இந்த காசெல்லம் தூசு மாதிரி. நான் சீக்கிரம் இந்த காசை சம்பாதித்து விடுவேன்.

நீ ஒன்னும் கவலைப்படாதே. இனிமேல் கஷ்டப்படாமல்  வேலை செய். சரி.. நான் இப்ப வேலைக்கு கிளம்பறேன்...”  என்று கிளம்ப,  தன்னவனின் அன்பில் நெஞ்சுருகி போனாள் பெண்ணவள்.

“நான் லேசாக கை வலிக்குது என்று சொன்னதற்கே காலங்காத்தால போய் இதை வாங்கிட்டு வந்திட்டானே... என் மேல அவ்வளவு பாசமா ?

என்று சிலிர்த்தவள், வெளியில் செல்ல எத்தனித்தவன் கையை எட்டி பற்றி  நிறுத்தியவள்,  எக்கி அவன்  கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டாள்.  

அதில் கிறங்கி போனவன், கிறக்கத்துடன் அவன் கை அவள் இடையை தொட,    அடுத்த நொடி தலையை உலுக்கிக்கொண்டு, தன் கையை பின்னுக்கு இழுத்துக் கொண்டவன், மெல்ல புன்னகைத்து  அவள் கன்னத்தை செல்லமாக தட்டிவிட்டு கிளம்பி  சென்றான்.

*****  

சீக்கிரம் ஓட்டுங்க மாமா. படம் போட்டிருவாங்க. அதுக்குள்ள நாம போகணும். சீக்கிரம் ஓட்டுங்க..”  என்று தன் கணவனை விரட்டிக் கொண்டிருந்தாள் பூங்கொடி.

“அடியே... உங்கப்பன் வச்சிருக்கிறது ஹைதர் அலி காலத்து ஓட்ட வண்டி.  இதை இதற்குமேல் முறுக்கினா ஆக்ஸிலேட்டர் ஒயர் தான் பிஞ்சு போகும்.  

அப்புறம் நாம படத்துக்கு போகமாட்டோம். நேரா சொர்க்கத்துக்கு தான் போவோம்.  எப்படி வசதி? “  என்று நக்கலாக சிரித்தான் ராசய்யா.  

“என்னது?  ஹைதர் அலி காலத்து வண்டியா?  என் அப்பா இதை எப்படி புதுசு மாதிரி வச்சிருக்கார் தெரியுமா? “ என்று முறைக்க,  

“ஆமாமா...வண்டியை வெளியில  எடுத்து ஓட்டினா  தானே வண்டி பழசாகும்...! நானும் டிவிஎஸ் வச்சிருக்கேன்னு பெருமைக்காக இதை வாங்கி வீட்டுக்குள்ளேயே நிறுத்திப் பூட்டி வச்சுக்கிட்டா?  எப்படி பழசாகும். நீ சொல்றதும் கரெக்ட்தான்.  

ஏன் டி தெரியாம தான் கேட்கிறேன்.  இதை ஒரு தரமாவது உங்க அப்பா ஓட்டினாரா? இல்லையா? அவர் இந்த வண்டிய ஓட்டி நான் பாத்ததே இல்லையே...”  என்று நக்கலாக கேட்க

“ஹலோ...  அதெல்லாம் நிறைய தரம் ஓட்டியிருக்கிறார்.  என்ன? இப்பல்லாம் டவுனுக்கு அதிகம் போகறதில்லைன்றதால, அவர் ஓட்டுவதில்லை.  அதோட நானும் நிறைய தரம் இதை  ஓட்டி இருக்கேன்.  

ஆடத்தெரியாதவள் கூடம் கோணல் என்றாளாம்.  அது மாதிரி உங்களுக்கு ஓட்ட வரலைங்கிறதுக்காக, இந்த  வண்டியை மட்டம் தட்ட வேண்டாம். பேசாமல்  வேகமா ஓட்ட பாருங்க...”  என்ற அவன்  முதுகில் செல்லமாக அடித்தாள்.  

“ஹ்ம்ம்ம் இதுக்குத்தான் பஸ்ல போகலாம்னு சொன்னேன்.  கேட்டியா?  வண்டில போனா ஜாலியா இருக்கும். வண்டிலயே போலாம்னு  நீதான சொன்ன.  இந்த ஓட்ட வண்டியில  இதுக்கு மேல வேகமா போக முடியாது.

கொஞ்சம் பொறுமையா வாடி...”  என்று தன்னவளை  அதட்டினான்.  

“ஐய... நீயெல்லாம் சுத்த வேஸ்ட் மாமா... சரி... சரி வண்டிய என்கிட்ட கொடுத்துட்டு பின்னாடி உக்காரு.  அப்புறம் எப்படி பறக்குதுனு  பாரு...”  என்று சிலிர்த்துக் கொள்ள

“ஆமாமா... பறக்கும்..பறக்கும்...பள்ளத்துலதான் பறக்கும். நீ வண்டி ஓட்டி கீழ விழுந்து  வாரி வச்சதெல்லாம் நானும் தான் பார்த்திருக்கிறேனே...”  என்று சொல்லி கேலியாக சிரித்தான் ராசய்யா.  

*****

வள் அப்பா இந்த வண்டியை வாங்கி வந்ததும்,  முதலில் அவளிடம் ஓட்ட  கொடுக்க மறுத்துவிட்டார்.  

ஒருநாள் அவருக்கு தெரியாமல் சாவியை எடுத்து வந்து,   வண்டியை வீட்டிற்குள் இருந்து வெளியில் எடுத்து வந்தவள், முன்ன பின்ன பழகாமல், நேரடியாக எடுத்து  ஓட்ட, அதில் பேலன்ஸ் தவறி கீழே விழுந்து வைத்தாள்

அப்பொழுது ராசய்யா தான் ஓடிவந்து,  அவள் மேலே கிடந்த வண்டியை தூக்கி விட்டு  அவளையும் தூக்கி விட்டான்.

அவள் கையெல்லாம் சிராய்த்து,  ரத்தம் வருவதை கண்டு பதறி, அவன் கட்டியிருந்த கைலியை ஓரத்தில் கிழித்து,  அவளுக்கு  கட்டு  போட்டு விட்டான்.  

அதைத்தான் இப்பொழுது சொல்லிக்காட்டுகிறான் என்று புரிய, அதில் முகம் கன்றி சிவந்தவள்,

“ஐய... அப்ப நான் சின்ன புள்ள. முன்ன பின்ன இந்த வண்டிய ஓட்டி பழக்கம் இல்ல.  அதனாலதான் விழுந்து வைத்தேன்.  இப்பதான் நான் வளர்ந்து விட்டேனே.

இங்கே பாருங்க...  எனக்கு கல்யாணம் கூட ஆயிடுச்சு.  நானும் பெரிய மனுசிதான். அதனால் நல்லாவே ஓட்டுவேன்...”  என்று முறைக்க

“ஹா ஹா ஹா கல்யாணமாயிட்டா பெரிய மனுசியாக்கும்?”  என்றான் கிண்டலாக

“பின்ன இல்லையா? “  என்று முறைத்தாள்.

“சரி சரி ஒத்துக்கிறேன்.. நீயும் பெரிய மனுசிதான்...” என்று நக்கலாக சொல்ல, இருவரும் வழக்கடித்துக் கொண்டே அந்த திரையரங்கிற்கு வந்து சேர்ந்திருந்தனர்.  

****

முசிறியில் உள்ள பெரிய திரையரங்கு அது.

சுத்துபட்டு கிராமங்களில் இருந்தும், திரைப்படம் பார்க்க வேண்டும் என்றால் அங்குதான் வர வேண்டும் .  

அந்த  திரையரங்கில்  சூரியவம்சம் படம் போட்டிருந்தார்கள்.  

பூங்கொடியின் தோழிகள் எல்லாம் அந்த படத்தை பார்த்துவிட்டு வந்து கல்லூரியில் கதை சொல்லிக்கொண்டிருக்க, அவளுக்கும் அந்த படத்தை பார்க்க வேண்டும் என ஆசையாக இருந்தது.

அன்று சனிக்கிழமை கல்லூரி இல்லாததால், மேட்னி ஷோவிற்கு,  அடம் பிடித்து ராசய்யாவை அழைத்துக் கொண்டு வந்திருந்தாள் பூங்கொடி.  

அவனோ தனக்கு படம் பார்க்கும் பழக்கம் இல்லை என்று சமாளிக்க,  

“அதனால் என்ன?  இப்ப பழகிக்கங்க...”  என்று அடம்பிடித்து அவனை அழைத்து வந்திருந்தாள்.  

திரையரங்கை அடைந்ததும் வண்டியை பார்க்கிங்ல் நிறுத்திவிட்டு டிக்கெட் வாங்கிக்கொண்டு உள்ளே செல்ல,  அப்பொழுதுதான் படம் ஆரம்பித்திருந்தது.  

அதற்குள் இன்ட்ரோ முடிந்திருக்க, அதைக்கண்டு தன் கணவனை முறைத்தாள் பூங்கொடி.   

“போ  மாமா... எல்லாம் உன்னால தான்.. பாரு.. படம்  எப்பவோ  ஆரம்பிச்சுருச்சு... “  என்று  முறைக்க,  

“எழுத்து தான்டி போயிருக்கு. படம் இனிமேல்தான் ஆரம்பிக்க போறாங்க... புலம்பாம வா..”  திரும்பி அவளை முறைத்தான் ராசய்யா.  

இருட்டில் தடவியபடி சென்று, பின்னால் கடைசி வரிசையில் காலியாக இருந்த இரண்டு இருக்கையை கண்டுபிடித்து அமர்ந்தனர்.  

படம் ஆரம்பித்த சற்று நேரத்திலேயே அவனை ஒட்டி உரசியபடி அமர்ந்து கொண்டவள்,  அவன் கை விளாவுக்குள்   தன் கையை  விட்டுக்கொண்டு  அவன் தோளில்  சாய்ந்து கொண்டாள்.  

அவள் அனிச்சையாக செய்தாலும் அவனுக்குத்தான் அவளின் நெருக்கம் அவஸ்தையாக இருந்தது.  

“கொஞ்சம் தள்ளி உட்காரு டி...”  என்று நெளிந்தவாறு சொல்ல

“யோவ்...  அவனவன்  தள்ளிக்கிட்டு வந்தவ  கூட எல்லாம்  கொஞ்சம் கூட பயம் இல்லாமல் எப்படி சரசம் பண்றான்.

நீ என்னடான்னா ஊரறிய...  உலகம் அறிய...  முப்பத்து முக்கோடி தேவர்கள் சாட்சியா தாலி கட்டின பொண்டாட்டி,  கிட்ட வந்தா  தள்ளி உட்காரச் சொல்ற.  இது உனக்கே நியாயமா? “  காரமாக முறைத்தாள் அவன் மனையாள்.

“என்னடி சொல்ற?  தள்ளிகிட்டு   வந்தவங்களா? “ என்று அதிர்ச்சியோடு கேட்க

“ஆமாம்  மாமா....  முன்னாடி இரண்டு வரிசை  தள்ளி ஒரு ஜோடி உட்கார்ந்திருக்கு பாரு.  அது தள்ளிக்கிட்டு வந்த கேசுதான்...”

என்று கண்ணால் ஜாடை காட்ட, ராசய்யாவும் அவள் ஜாடை காட்டிய பக்கம் பார்க்க,  அங்கே அமர்ந்திருந்த ஒரு ஜோடி அவள் சொன்னது போல,  படத்தைப் பார்க்காமல் தங்களுக்குள்  காதல் லீலைகளை நடத்திக் கொண்டிருந்தனர்.

அந்த ஆளின் கை அத்து மீறி,  அருகில் அமர்ந்திருந்த பெண்ணின் அந்தரங்க பகுதியில் மேய்ந்து கொண்டிருக்க, அந்த பெண்ணும் அதற்கு இசைந்து கொடுக்க, அதைக்கண்ட ராசய்யாவுக்கு  அருவருப்பாக இருந்தது.  

நாலு சுவற்றுக்குள் நடக்கவேண்டியதை  எல்லாம் இப்படி நாலு பேர் பார்க்க பப்ளிக்காக நடத்திக்கொண்டிருந்த அந்த ஜோடியை ஓங்கி அறைய வேண்டும் போல இருந்தது.  

நரநரவென்று பல்லைக் கடித்தவன், தன் கைமுஷ்டியை இறுக்கியவன், அணிந்திருந்த முழுக்கை சட்டையை முட்டி வரைக்கும் இழுத்துவிட்டுக்கொண்டு வேகமாக இருக்கையில் இருந்து எழ எத்தனிக்க,

அவன் அவர்களை அடிக்க போகிறான் என்று கண்டு கொண்டவள், உடனே அவன் கை பற்றி இழுத்து இருக்கையில் அமர வைத்தவள்    சத்தமில்லாமல் விழுந்து விழுந்து சிரித்தாள்.

“ஏய்...எதுக்குடி என் கையை புடிச்சு இழுத்த... விடு.. அதுங்கள ரெண்டு வாங்கு வாங்கிட்டு வர்றேன்...” என்று  பல்லை கடித்தவன், மீண்டும் எழ முயல,

“யோவ் மாமா... நீ சரியான லூசு யா... இதெல்லாம் இங்க சகஜம் தான். நாமதான் கண்டுக்காம இருந்துக்கணும்...” என்று சிரிக்க,

“அதுக்குனு இப்படியா? சை.. கொஞ்சம்கூட விவஷ்தையே இல்ல.. .விடுடி... அடிக்கல... நாக்க புடுங்கிக்கற மாதிரி நாலு வார்த்தை தட்டி கேட்டுட்டு வர்றேன்...” என்று சிலிர்த்துக்கொண்டு எழ,

“ஆமா... நீ தட்டி கேட்கறதா இருந்தா, இந்த தியேட்டர்ல இருக்கிற முக்கால்வாசி பேசை தட்டி கேட்கணும்.

ஏன்னா இதுக மட்டும் இல்ல.. அங்க பார்...அக்கட சூடு... ” என்று இன்னும் சில ஜோடிகளை காட்ட, அவள் சொன்னதைப்போல அவர்களும் தங்களை மறந்து திரைப்படத்தை பார்ப்பதை விட்டு , அவர்களுக்குள் காம பாடத்தை நடத்தி கொண்டிருர்ந்தார்கள்.

சீ... என்று அருவருப்புடன் முகத்தை திருப்பிக்  கொண்டான் ராசய்யா.

அதைக் கண்டு இன்னும் பொங்கி சிரித்தாள்.

“ஹா ஹா ஹா உனக்குத்தான் தாலி கட்டின பொண்டாட்டி கூட உல்லாசமா சரசம் பண்ண தெரியல.  .. அவங்க  எல்லாம்  வாழ்க்கையை எவ்வளவு ஜாலியா என்ஜாய் பண்றாங்க.

அவங்களை போய் ஏன் டிஸ்டர்ப் பண்ற...விடு மாமா...ஜாலியா குஜாலா இருந்துட்டு போகட்டும்... ” என்று கண்சிமிட்டி சிரிக்க,      அவளை முறைத்தான் அந்த சாமியார்.  

“அது சரி....  எப்படி தள்ளிகிட்டு வந்தவங்கனு சொல்ற?”  என்று  சந்தேகத்துடன் கேட்க

“ஹா ஹா ஹா அதெல்லாம் என்னுடைய ஞானதிருஷ்டிக்கு தெரிந்து விடும்...”  என்று இல்லாத காலரை தூக்கிவிட்டுக் கொள்ள

“போதும் டி...ஓவர் பில்டப் வேண்டாம். மேட்டரை சொல்லு...” என்று நக்கலுடன் உதட்டோரம் லேசாக  சிரித்தபடி   சொல்ல,

“அதான..என்னை பத்தி கொஞ்சம் எடுத்துச் சொன்னா  பொறுக்காதே...” என்று மோவாயை இடித்தவள்,

“அந்த  லேடி கழுத்துல லைசன்ஸ் இல்ல.  அப்புறம் அந்த ஆளை  பார்த்தாலே தெரியுது.  கொடுத்த காசுக்கு நிமிஷமும் வேஸ்ட் பண்ணாம  அனுபவிக்கறத.  அதிலயே தெரியல...”  என்று கண் சிமிட்ட,

“சீ.. கருமம்... இதையெல்லாம பாத்து வைப்ப...ரொம்ப கெட்டு போய்ட்ட டி..ஒலுங்கா  படத்தை பாரு...” என்று அதட்டினான்.

அவனைக்கண்டு அவளுக்கோ ஆச்சர்யமாக இருந்தது.

ஒரு பெண் நடந்து போனாலே, நாக்கை தொங்க போட்டு சைட் அடிக்கும் ஆண்கள்... தன்  பொண்டாட்டி பக்கத்தில் இருக்கும் பொழுதே மற்ற பெண்களை துகில் உரித்து பார்க்கும் கணவன்கள்...

அலுவலகத்திலோ, தொழிற்சாலையிலோ வேலை செய்யும் பெண்கள்வேலை மும்முரத்தில் அவர்களின் ஆடை எப்பொழுது விலகும்...பார்த்து ரசிக்கலாம்..  

என்று காத்துகிடக்கும் கயவர்கள்...  நிறைந்த இந்த சமுதாயத்தில்,  அதை எல்லாம் வெறுக்கும் தன் கணவனின் கன்னியத்தை கண்டு பெருமையாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது.

திருமணத்திற்கு முன்பு கூட அவளுடன் அவன் வம்பு இழுத்து சீண்டி இருக்கிறான். ஆனால் தப்பாக ஒரு பார்வை பார்த்தது இல்லை.

“என் புருஷன் ஸ்ரீ ராமன்...”  என்று கர்வத்துடன் அவன் தோள் சாய்ந்து கொண்டாள்.

*****

தற்குப் பிறகும் அவனை  சும்மா விடவில்லை அவன் மனையாள்.  

அவன் தோளில் சாய்ந்து கொண்டவள், படத்தின் நடுவில் ரகசியம் பேசுகிறேன் என்று அவன் காதருகில் வந்து அவன் காது மடலை மெல்ல கடித்தாள்.

நெருக்கமான காதல் காட்சிகளில், தன் கீழ் உதட்டை கடித்துக்கொண்டு  , இருக்கையின், அடியில் இருந்த அவனின் காலை சுரண்டினாள். 

“அந்த ஹீரோ மீசை நல்லா இல்லை மாமா.  உன்  மீசை தான் சூப்பரா இருக்கு...”  என்று அவன் கன்னத்தை வருடி,  அவன் மீசையை முறுக்கி விட்டாள்.  

இடைவேளையின் பொழுது பஞ்சுமிட்டாய் வேண்டும்...பாப்கார்ன் வேண்டும்.. கடலை மிட்டாய், முறுக்கு வேண்டும்...  என்று சிறுபிள்ளையாய் அடம் பிடித்து கேட்க,  அவனும் அவளை முறைத்த படி அவள்  கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்தான்.

அவன் , முன்னால் அமர்ந்திருந்த ஜோடியின் காதல் மன்னன் ராசய்யாவின் கையில் மாட்டிவிட, அவ்வளவுதான்.

அவனை தனியாக தள்ளிகிட்டு போய் அவன் கன்னத்தில் பளார் என்று அறைந்து லெப்ட் அன்ட் ரைட் வாங்கிவிட்டான்.

அதன் பலன்? இடைவேளைக்கு பிறகு படம் ஆரம்பித்ததும், அந்த ஜொடி மிஸ்ஸிங்.

ராசய்யாவுக்கு பயந்து கொண்டு சீட்டை மாற்றி வேற எங்கோ ஒளிந்து கொண்டார்கள்.

அதைக்கண்டவள், கண்டிப்பாக தன் கணவன்தான் காரணம் என்று அவனை முறைத்து வைத்தாள்.

******

ண்ணே... அண்ணி சூப்பர் அண்ணே...நான்தான் அன்னைக்கே சொன்னேன் இல்ல...இவங்கதான் உனக்கு ஜோடினு. என்னை அன்னைக்கு முறச்ச... இப்ப பாத்தியா? என் வாக்கு பழிச்சிடுச்சு....” என்று சிரித்தான் பட்டறையில் வேலை செய்யும் பையன்.

திரையரங்கிள், தன்னவளுடைய சீண்டல்களையும், தீண்டல்களையும் சமாளித்து தன் கற்பை காப்பாற்றிக் கொண்டவன், எப்படியோ  அந்தப் படத்தை பார்த்து முடித்து விட்டு, வெளிவந்தவன், வண்டியை எடுத்து கிளம்ப, நேராக அவன் வழக்கமாக செல்லும் அந்த பட்டறைக்கு வந்திருந்தான்.

அவன் திருமணம் நடந்ததில் இருந்தே   இங்கு வர நேரமில்லாமல் போக,  இப்பொழுது தன் சகாக்களை பார்த்துவிட்டு செல்லலாம் என்று பட்டறைக்கு வந்திருந்தான்.

ராசய்யாவை கண்டதும் அங்கு வேலை செய்யும் பசங்க எல்லாருக்கும் முகத்தில் மகிழ்ச்சி. ஓடி வந்து கட்டிக்கொண்டார்கள்.

வந்த இருவரையும் அமர வைத்து டீ வாங்கி கொடுத்து ராசய்யாவை ஓட்டிக் கொண்டிருந்தார்கள்.

“டேய்.. தவக்களை... அன்னைக்கே உன் வாயை பினாயில் ஊத்தி கழுவி இருக்கணும்டா... உன் வாய் முகூர்த்தம் பலிச்சு, இந்த கேடிகிட்ட வந்து மாட்டிகிட்டனே...” என்று ராசய்யா நக்கலாக சிரிக்க,

“யோவ்.. நான் கேடியா? “ என்று அவன் தலையில் ஓங்கி கொட்டினாள்.

“ஆஹான்... என்ன அண்ணாத்தே...அண்ணி இந்த கொட்டு கொட்டறாங்க... பேசாம ஒரு ஹெல்மெட்டை எப்பவும் தலையில் போட்டுக்கங்க..” என்று சிரிக்க,

“ஹ்ம்ம்ம் அதுதான் டா செய்யணும்... இவ கொட்ட கொட்டியே இவ அப்பன் மாதிரி எனக்கும்  சீக்கிரம் சொட்டை ஆகிடும் போல இருக்கு...” என்று சிரித்தான்.

“அது சரி அண்ணாத்தே...எங்களுக்கு எல்லாம் கல்யாண ட்ரீட் இல்லையா? உன் கல்யாணத்துக்கு மூனு நாள் முன்னயே வந்து ஓசியில சாப்பிடலாம்னு நினைச்சிருந்தா, இப்படி யாருக்கும் சொல்லாம கொல்லாம  கல்யாணத்தை பண்ணிகிட்டியே.. சோறு போச்சே...” என்று தவக்களை கவலையாக சொல்ல,

“அதனால் என்னடா... இந்தா  காசு.. கடைக்கு போய் எல்லாரும் புடிச்சத வாங்கி சாப்பிடுங்கடா...” என்று பாக்கெட்டில் கையை விட்டு, கைக்கு வந்த ரூபாய் நோட்டுக்களை எடுத்து எண்ணி பார்க்காமல் அப்படியே கொடுத்தான்.

அந்த பசங்களும் அதை வாங்கி ஒரு நூறு ரூபாய் ஐ மட்டும் எடுத்துக் கொண்டு, மீதியை அவனிடமே திருப்பி கொடுத்து

“இது போதும்னே...எண்ணிக்கூட பார்க்காம அள்ளிக்கொடுக்கிற உனக்கு எந்த குறையும் வராதுனே... நீ அண்ணியோட சந்தோஷமா நூறு வருஷம் வாழணும்...” என்று மனம் நிறைந்து வாழ்த்தினர்.

*****  

தவன் தன் கடமையை முடித்து இளைப்பாற,  தரை இறங்கி கொண்டிருக்க, வெய்யில் மறைந்து இருட்ட ஆரம்பித்து இருந்தது.

அந்த அந்தி நேரத்தின் மங்கிய மஞ்சள் ஒளி மனதை வருட,   மெல்லிய மாலை நேரத்து குளுகுளு தென்றல் ஓடி வந்து இருவரையும் கட்டித்தழுவி கிச்கிச் மூட்ட,

அதை  அனுபவித்தபடி, தன் கணவனின் இடுப்பை கட்டிக்கொண்டு,  அவனின் பரந்த முதுகில் முகத்தை வைத்து அழுத்திக் கொண்டிருந்தாள் பூங்கொடி..!   

இருவரும் அந்த சிறிய இருசக்கர வாகனத்தில் தங்கள் ஊரை பார்த்து சென்று கொண்டிருந்தனர்.

திரைப்படத்தை பார்த்து முடித்ததும் , பட்டறைக்கு சென்று அவன் சகாக்களுடன் சற்று நேரம் அளவளாவி விட்டு, பின் இருவரும் கிளம்பினர்.

அதே நேரம் அவளுக்கு பசி வயிற்றை கிள்ளியது. திரையரங்கில் வாங்கி சாப்பிட்ட அத்தனை நொறுக்கு தீனிகளும் தன் கணவனுடன் செய்த சேட்டைகளில் ஜீரணமாகி இருக்க, இப்பொழுது பசி வயிற்றை கிள்ளியது.

அவள் வாயை திறந்து சொன்னால், உடனே அவளை ஹோட்டலுக்கு அழைத்து சென்று விடுவான் தான். அஅனால் ஏற்கனவே திரைப்படத்திற்கான டிக்கெட், மற்றும் அவன் வாங்கி கொடுத்த நொறுக்கு தீனிக்கான செலவு என நிறைய காசு செலவு செய்திருந்தான்.

இப்பொழுது ஹோட்டலுக்கு போனால் வீண் செலவுதான். பேசாமல் வீட்டிற்கு போய் ஒரு டம்ளர் அரிசி பொங்கி சாப்டுக்கலாம்   என்று எண்ணியவள், தன் பசியை மறைத்துக் கொண்டாள்.

அடுத்த நிமிடம் அவன் வாகனம் நின்ற இடத்தை பார்த்து அவள் கண்கள் பெரிதாக விரிந்தன.

பொற்கொடி வீட்டிற்கு சென்று திரும்பிய அன்று அவளை சாப்பிட அழைத்துச் சென்ற அதே உணவகம்.

“இங்க எதுக்கு மாமா? “ என்று கேள்வியோடு பார்க்க,

“ஹ்ம்ம்ம் தியேட்டர்ல என்கிட்ட ஓயாம வம்பு பண்ணிகிட்டு இருந்த இல்ல. அதுல நீ மத்தியானம் சாப்பிட்டது எல்லாம் செரிச்சு போயிருக்கும். வா... ஒரு புரோட்டா சாப்டிட்டு போலாம்...” என்று சிரிக்க, அவள் கண்களோ ஆனந்தத்தில் மின்னின.

அவள் வாய் திறந்து சொல்லாமலயே அவள் என்ன மாதிரி உணர்வாள்...அதுவும் அவள் பசித்து இருப்பதைக் கூட கண்டு கொண்டானே...

பொதுவாக பிள்ளையை பெற்ற அன்னைக்குத்தான் தன் பிள்ளை எப்ப பசித்து இருக்கும் என்று வாய்விட்டு சொல்லாமலயே புரிந்து விடுமாம். பிறந்த குழந்தை என்று இல்லாமல், அந்த குழந்தை வளர்ந்த பிறகும் கூட, எப்ப பசிக்கும் பசிக்காது என்று அறிந்து சாப்பாடு போடுவாள்.

அதே போல அவள் கணவன் அவள் பசியைக் கூட அறிந்து வைத்திருக்கிறானே என்று  அவள் மனம் பொங்கியது.

அந்த இடத்தில் அவனை தன் கணவனாக பார்க்காமல்,  அவளின் இன்னொரு தாயாகத்தான் கண்டாள் அந்த சேய்.

“என்னடி அப்படி பார்க்கற? உனக்கு பசிக்குதுதான... வா.. சாப்டிட்டு போலாம்..” என்று வண்டியை நிறுத்திவிட்டு கீழ இறங்கி நின்று அவளை அழைக்க,

“இல்ல மாமா... வந்து... எதுக்கு வீண் செலவு... ஏற்கனவே எனக்கு நிறைய செலவு பண்ணிட்ட... இப்ப வேற எதுக்கு...

எனக்கு ஒரு கடலை மிட்டாய் மட்டும் வாங்கி கொடு. அதை சாப்பிட்டால் பசி போய்டும். வீட்டுக்கு போய் சோறாக்கி சாப்டுக்கலாம்.. “ என்று தயக்கத்துடன்  இழுத்தாள்.

அதைக்கேட்டவனோ அவளை முறைத்தான்.

“ஏன்டி... தியேட்டர்ல வாங்கி சாப்ட நொறுக்கு தீனி எல்லாம் ஒரு செலவா? அதோட சாப்பிடறதுக்கெலலம் கணக்கு பார்க்க கூடாது. இறுக்கி புடிச்சு யாருக்கு சேத்து வைக்கணும்? அப்பப்ப சம்பாதிக்கிறத அப்பப்ப செலவு பண்ணனும்.

அதோட இதுவரைக்கும் நான் செலவு பண்ண என்று   யாரும் இல்லை எனக்கு. இப்பதான் நீ ஒருத்தி வந்திருக்க. உனக்கு செலவு பண்ணாம யாருக்கு செலவு பண்ண போறேன். அதோட புரோட்டா வாங்கி சாப்பிடறது எல்லாம் ஒரு செலவே இல்லை.

ஒருவேளை இந்த புரோட்டாவைக் கூட வாங்கித் தர வக்கில்லாதவன் னு என்னை நினைச்சிட்டியா? “ என்று அவளை முறைத்து பார்க்க,

“ஐயயோ.. அப்படி எல்லாம் இல்ல மாமா... “  என்றாள் பதற்றத்துடன்.

“என்ன நொப்படி இல்ல.. பாத்த இல்ல. பட்டறையில இருக்கிற பயலுகளுக்கே பாக்கெட்டில் இருந்த காசை அள்ளி கொடுத்தவன்... கட்டின பொண்டாட்டி உனக்கு செய்ய மாட்டனா.. பேசாம வாடி... “ என்று அவளின் கையை பிடித்து  இழுக்காத குறையாக உள்ளே இழுத்துச் சென்றான்.

அவன் பிடியில் இருந்தே அவன் கோபமாக இருக்கிறான் என்று புரிந்து,  அதற்கு மேல் எதுவும் பேசாமல் அமைதியாகிப் போனாள் பெண்.

******

ணவகத்திற்குள் சென்று காலியாக இருந்த ஒரு  மேஜையில் அமர்ந்ததும், அவளுக்கு பிடித்த புரோட்டாவையே இருவருக்கும் ஆர்டர் பண்ணினான்.

கடலை மிட்டாய் மட்டும் போதும் என்றவள் புரோட்டாவை பார்த்ததும் நாக்கில் நீர் சுரந்தது.

புரோட்டாவை கொண்டு வந்து வைத்தது தான் தாமதம்.

அடுத்த நொடி, அதை தன் இரு கையாலும்  பிச்சு போட்டு, மட்டன் குருமாவை அதில் ஊற்றி ஊற வைத்தவள், லேசாக ஊறிய புரோட்டாவை கொஞ்சமாக பிச்சு, கப்பில் மீதமிருந்த மட்டன் குருமாவில் குளிப்பாட்டி வாயில் போட்டவள் அதை ருசித்து சாப்பிட்டாள்.

அதைக் கண்டவனுக்கு சிரிப்பு பொங்கி வந்தது.

மனசுல இம்புட்டு ஆசையை வச்சுகிட்டு கடலை மிட்டாய் மட்டும் போதும்னாளே... ப்ராடு... “ என்று செல்லமாக திட்டியவன்,  அவள் சாப்பிடும் அழகை ரசித்தபடி, அவளுடன் வழக்கடித்துக் கொண்டே சாப்பிட்டு முடித்தான்.

பின் அவளின் வீட்டுக்கும் புரோட்டா பார்சல் கட்ட சொல்ல, பூங்கொடியோ வேண்டாம் என்று தலையை இருபக்கமும் உருட்டினாள்.

அவள் செலவுக்காக பார்க்கிறாள் என்று புரியவும்,  அவளை முறைத்துவிட்டு, பாக்கெட்டில் இருந்த 100 ரூபாய் நோட்டை எடுத்து கொடுத்துவிட்டு, பார்லை எடுத்துக்கொண்டு வெளியில் வந்து விட்டான்.

அவன் பின்னால் ஓடி வந்தவளோ ,

”எதுக்கு மாமா வீண் செலவு...” என்று இழுக்க,

“ஏன்டி...நீ மட்டும் மொக்கினா போதுமா?   பாவம் .. அந்த சின்ன புள்ளைகளும் வெளி சாப்பாடு சாப்பிட எம்புட்டு ஏங்கி கிடக்கும்? .

அன்னைக்கு வாங்கி கொடுத்த புரோட்டாவை பார்த்ததும் ரெண்டு புள்ளைக மூஞ்சும் எப்படி விரிஞ்சுது.

நாக்கை சப்பு கொட்டிகிட்டு எப்படி சாப்டுச்சுங்க... அதுகளுக்கு வாங்கி கொடுக்க எல்லாம் கணக்கு பார்க்க கூடாது...” என்று அதட்டினான்.

“ஹ்ம்ம்ம் பொண்டாட்டிக்கு வாங்கி கொடுக்க கணக்கு பார்க்க கூடாது... பொண்டாட்டி பொறந்த வூட்டுக்கு வாங்கி கொடுக்க கணக்கு பார்க்க க்ஊடாது..

யார் கடையிலயோ   வேலை செய்யற   நண்டு சிண்டுகளுக்கெலலம் வாங்கி கொடுக்கறதுலயும் கணக்கு பார்க்க கூடாது... அப்ப எதுலதான் யா  கணக்கு பார்க்கணும்? “ என்று தனக்குள்ளே  புலம்பினாலும்,  அவள் மனம் நிறைந்து இருந்தது.

காசு கணக்கு பார்க்காமல் அடுத்தவர்களின் வயிற்றை நிரப்பி,  அவர்களின் மனதை  குளிரச்செய்யும் தன் கணவனை எண்ணி பெருமையாக இருந்தது. அவன் மீதான அவளின் காதல் இன்னும் பெருகியது.

அந்த காதலினால்தான், முசிறியைத்தாண்டி கிராமத்து சாலையில் வண்டி சென்று கொண்டிருக்க, அதுவரை தன்னை கட்டுபடுத்திக்கொண்டு இருந்தவள் அதற்குமேல் முடியாமல் தன்னவனை பின்னால் இருந்து இடையோடு  இறுக்கி கட்டிக்கொண்டு அவன் முதுகில் தன் முகத்தை புதைத்துக்கொண்டு அவன் வாசம் பிடித்தாள்.

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!