என்னுயிர் கருவாச்சி-46



 அத்தியாயம்-46

ற்று தூரம் சென்றதும், ஏதோ நினைவு வந்தவளாக,

“ஏன் மாமா?  அந்த படத்துல வந்த மாதிரி நாமளும் ஒரே பாட்டுல  பணக்காரர்கள் ஆகிட்டா எப்படி இருக்கும்? “  என்ற கண்களை கொட்டி,    பளபளக்க கேட்க,

“ம்க்க்க்கும்...அதெல்லாம் கதைக்கும், கற்பனைக்கும் தான்டி சரி வரும்.   அதுக்குத்தான் நான்  இந்த சினிமாவை எல்லாம் பார்க்க மாட்டேன்.  யாரும் எதார்த்தத்தை எடுத்து சொல்வது இல்லை...”  

“அது ஏன் அப்படி சொல்லணும்? கால்வாசி எதார்த்தம் இல்லைனாலும், முக்கால்வாசி நாட்டுல நடக்கறைத்தான் சொல்லுவாங்க...படமா எடுக்கறாங்க.

முயற்சி செய்தால்  நாமும் பெரிய ஆளாகி காட்டலாம் தான். பேசாம அந்த ஹீரோ ஓட்டின மாதிரி,  பழைய பஸ் வாங்கி ஓட்டலாமா? “  என்று ஐடியா கொடுக்க, அதைக் கேட்டவனுக்கு   சிரிப்புதான் வந்தது

“அதுக்கெல்லாம் நிறைய முதலீடு  வேணும் டி. பல லட்சம் வேணும்.  அதெல்லாம்  நமக்கு  செட்டாகாது...”  

“ஹ்ம்ம்ம் சரி...  உனக்குத்தான் மெக்கானிக் வேலை தெரியும் இல்ல.  நம்ம ஊர்லயே ஒரு மெக்கானிக் செட் ஆரம்பிக்கலாமா?  எல்லாரும் ஏதாவது ரிப்பேர்னா, இங்கே டவுனுக்குத்தான்  வரவேண்டியதா  இருக்கு...”  என்றாள் யோசனையுடன்.

“சரிதான்...கிழிஞ்சது போ... நம்ம ஊர்ல செட்  போட்டா நாலே  நாள்ல  இழுத்து மூடிட்டு தான் போகணும்.  

இங்க இருக்கிறவனுங்க  எல்லாரும் கஞ்சப்பசங்க... மாமா,  மச்சான்,  பங்காளினு சொல்லிகிட்டு, ரிப்பேர் பண்ணிட்டு  காசு எதுவும் கொடுக்க மாட்டானுங்க... எனக்கும் அதட்டி கேட்கவும்  வராது..!  

அதனால்  அது  செட் ஆகாது..!” என்றான் உதட்டை பிதுக்கியவாறு.

“ஹ்ம்ம்ம் நீ சொல்றதும்  சரிதான் மாமா. நீ பாக்கறதுக்குத்தான் பெரிய ரவுடி.. ஆனால் யாராவது கஷ்டம்னு  சொன்னா,  உடனே பாக்கெட்ல இருக்கிறத தூக்கி கொடுத்து விட வேண்டியது...  

நான்தான்  பார்த்தேனே...எங்கப்பா காசுக்கு என்ன பண்ணனு கையை பிசைஞ்சுகிட்டு இருந்தப்ப,    கொஞ்சமும் யோசிக்காம லட்ச ரூபா புல்லட்ஐ  தூக்கி கொடுத்த  வள்ளலலாச்சே...”  என்று கிண்டலடிக்க,  

“அதனாலதான் எனக்கு லட்டு மாதிரி பொண்டாட்டி கிடைச்சிருக்கா...  தர்மம் தலைகாக்கும் டி.  நாம ஒருத்தருக்கு உதவி செஞ்சா,  அந்த உதவி வேற வழியா திரும்ப கிடைச்சுடும்.  

அதனால்தான் நீ எனக்கு கிடைச்சிருக்க...”  என்று பக்கவாட்டில்  திரும்பி,  கண்கள் பளபளக்க கண் சிமிட்டி சொல்ல,  அதைக் கேட்டதும் பெண்ணவளின்  மனம் நெகிழ்ந்து போனது

“நிஜமாகவா...  மாமா...  நான் உனக்கு கிடைச்சது அதிர்ஷ்டமா? “  என்று கண்கள் பளிச்சிட, ஆர்வமாக கேட்க,   

“ஆமான் டி... நீ வந்ததுக்கு அப்புறம் தான்,  வறண்டு கிடந்த என் வாழ்க்கையில வசந்தம் வீசுது.  யாருமில்லாத அனாதையாய் இருந்த  எனக்கு குடும்பம்னு ஒரு  அமைப்பை கொடுத்தது நீதானே.

என்னை வெட்டிபய...ரௌடினு  திட்டின பயலுக எல்லாம் இப்ப என்னை மரியாதையா பாக்கறானுக..!  

இதற்கெல்லாம் யார் காரணம்?  நீ என் வாழ்க்கைல வந்த பொறவுதானே... ஏதோ வாழணுமேனு கால் போன போக்கில் சுத்திகிட்டுருந்த  எனக்கு வாழ்க்கையில ஒரு பிடிப்பை கொண்டு வந்தது நீதான் டி..  கருவாச்சி...” என்று நெகிழ்ந்து சொல்ல,  அடுத்த நொடி  பின்னாளில் இருந்து தன்னவனை இறுக்கிக் கட்டிக் கொண்டவள்,  

“ரொம்ப தேங்க்ஸ் மாமு...”  என்று அவன்  முதுகில் அழுந்த முத்தமிட்டாள் மங்கை.

அதில் அவன் முதுகு தண்டி சில்லிட்டு போனது.

அவன் முதுகின் மீது உரசிய அவளின் மெல்லிய தேகம் அவனுக்குள் சூடேற்ற, தலையை உலுக்கி சமனபடுத்தியவன்

“இது என்னடி மாமு னு புதுசா கூப்பிடற? “   என்று  சிரித்தபடி கேட்க,  

“ஏன்?  உன் மச்சான் மட்டும்  உன்னை  மாமுனு கூப்பிடறான்.  உன் பொண்டாட்டி நான் அப்படி கூப்பிடக் கூடாதா? எனக்கு எப்படி தோணுதோ அப்படித்தான்  கூப்பிடுவேன். என் புருஷனை செல்லம் கொஞ்சுவேன்...”  என்று கண் சிமிட்டினாள்

“சரி... சரி... நாலு சுவத்துக்குள்ள என்னை எப்படி வேணா   கூப்பிட்டுக்கோ. ஆனால் நாலு பேரு முன்னாடி மட்டும் வாடா போடானு கூப்பிட்டுடாத டி.    என் மானம் போகும்...”  என்று சிரிக்க

“ஹ்ம்ம்ம் பாக்கலாம் பாக்கலாம்..”  என்று அவளும் சிரித்தாள்  

“அப்புறம் பூவு... அந்த படத்தில் வந்த ஹீரோயின் மாதிரி நீயும் ஏன் கலெக்டருக்கு படிக்கக் கூடாது...”  என்று யோசனையோடு கேட்க, பின்னால் அமர்ந்து இருந்தவளுக்கோ புரையேறியது.

தன் தலையை தட்டிக்கொண்டவள்,   

“கலெக்டருக்கு படிக்கிறதெல்லாம்  சாதாரணமானது இல்லை மாமா.  நான் படிக்கிறது பி.ஏ டிகிரி.  நான் காலேஜ் போறத வச்சி நான் படிப்ஸ்... சூப்பரா படிக்கிறவனு  தப்பு கணக்கு போட்டுடாத மாமு.  

நானெல்லாம் ஆவரேஜ் ஸ்டூடன்ட் தான்.  வீட்ல இருந்தா அந்த சிலம்பு எனக்கு ஏதாவது வேலை வச்சுக்கிட்டே இருக்கும்.  அதுதான் அதுக்கிட்ட இருந்து எஸ் ஆக காலேஜ் ஓடிப் போயிடறது...” என்று கண் சிமிட்டி சிரித்தாள்.

“அடிப்பாவி... நான்கூட புள்ள நல்லா படிக்குனு இல்ல நினச்சுகிட்டு இருந்தேன்..” என்று செல்லமாக முறைக்க,

“ஹீ ஹீ ஹீ நீ அப்படி நினச்சுகிட்டா அதுக்கு நான் பொறுப்பா...? நான்தான் அன்னைக்கே சொன்னேனே.. எனக்கு பெருசா படிச்சு சாதிக்கணும்னு எல்லாம் ஆசை இல்லை...”   

“ஓ.. அப்ப  உன் லட்சியம்தான் என்னடி? “  என்றான் யோசனையுடன்.  

“இதுவரைக்கும் லட்சியம் னு பெருசா எதுவும் இல்லை. ஆனால் இப்ப இருக்கு. அதான் அன்னைக்கே சொன்னேனே...”

“என்னனு சொன்ன? “  

“ஹ்ம்ம்ம்  உன் கூட குடும்பம் நடத்தி, முதல் புள்ளை... கருகருனு குட்டி கருவாச்சிய பெத்து,  உன் கையில கொடுத்து, உன் முகம் போற போக்கை பாக்கணும்.

அப்புறம் எனக்காக வெள்ளை வெளேர்னு ஒரு குட்டி ராஜகுமாரனை பெத்துக்கணும். இப்போதைக்கு ரெண்டு போதும்...” என்று கண் சிமிட்ட,

“அடிங்... அன்னைக்கே சொன்னேன் இல்ல. என் ராசாத்திய யாராவது கருவாச்சினு சொன்னா, அவ்வளவுதான். உன்னையும் சேர்த்துதான் டி. அவள நான் எப்படி வளத்துவேன் பாரு..” என்று கண்கள் பளபளக்க சொல்ல,

“மனசுல இம்புட்டு ஆசையை வச்சுக்கிட்டு அப்புறம் ஏன் மாமா தள்ளி நிக்கற? “ என்று ராசய்யாவின் கழுத்தை கட்டிக்கொண்டு அவன் கழுத்தில் அழுந்த முத்தமிட்டாள்.  

அதில் தடுமாறியவன்,  வண்டியை தவற விட, அதுவோ ரோட்டோரம் ஓடி, பள்ளத்தில் விழ இருந்தது.

கடைசி நொடியில்  சுதாரித்து வண்டியை நொடித்து திருப்பியவன்,  பின்னால் திரும்பி அவளை முறைத்தான்.

“ஹீ ஹீ ஹீ கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன்  மாமு...” என்று அசட்டு சிரிப்பை சிரித்தாள்.

“நல்லா  பட்ட போ. இந்நேரம் ரெண்டு பேரும் இடுப்பை உடச்சுகிட்டுதான் வீட்டுக்கு போயிருக்கணும்...” என்று முறைத்தான்.

“அதெல்லாம் ஒன்னும் ஆகாது மாமா. அது சரி... பிறக்காத பிள்ளைக்கு  ஜாதகம் பார்த்த மாதிரி இது என்ன   என் மேல  ஆசை  இல்லைனு  சொல்லிட்டு  உள்ளுக்குள்ள இம்புட்டு கற்பனையா? “  என்று கேலியாக சிரித்தாள்.

அவனும் லேசாக வெட்கப்பட்டு தன் பின்னந்தலையை கோதிக்கொள்ள,   

“மா..மு.... “ என்று தாபத்துடன் அழைத்தவள்,

“வேணும்னா இன்னைக்கே பிள்ளையார் சுழி போட்டுடலாமா...” என்று கன்னம் சிவக்க, வெட்கத்துடன்  கேட்டாள்.

அதில் ஜெர்க்காகி போனவன்,   

“ஆஹான்... இடத்தைக் கொடுத்தால், மடத்தை பிடிச்சிடுவியே...அதெல்லாம் கிடையாது.  நீ உன் படிப்பை முடிக்கணும்...  நானும் ஒரு நல்ல நிலைக்கு வரணும்... அதுவரைக்கும்... “ என்று   அதே பாட்டை திரும்ப பாட,

உடனே எட்டி அவன் வாயை பொத்தியவள்,

“ஷப்பா.... திரும்ப ஆரம்பிச்சிட்டியா?... போதும் யா... கேட்டு கேட்டு காது புளிச்சு போச்சு...” என்று சலித்துக் கொண்டாள்  பூங்கொடி.  

காலையில் எழுந்ததும், வீட்டுக்கு வெளியில் நின்றவாறு  பல் துலக்கிக் கொண்டிருந்தான் ராசய்யா.  

“மாமா....”   என்ற பூங்கொடியின்  அலறல் சத்தம் கேட்டு,  வேகமாக உள்ளே ஓடிவந்தான் ராசய்யா.

அறை வாசலில் கால் வைத்ததும்,  உள்ளே பார்த்தவன்  அப்படியே உறைந்து போய் நின்று விட்டான்  

பாவாடையும் ஜாக்கெட்டும் மட்டும் அணிந்திருந்தவள், புடவை கீழே கிடக்க,  பதட்டத்தோடு கை காலை உதறியபடி நின்று இருந்தாள்.  

உள்ளே காலடி வைத்தவன், அவள் நின்ற கோலத்தை கண்டு முதலில் தடுமாறினாலும் பின்   ஒரு நொடி அவளை ஆழ்ந்து பார்த்துவி ட்டு,  பின் தன் முகத்தை வேற பக்கம் திருப்பிக் கொண்டான்.  

“என்னடி ஆச்சு? எதுக்கு கத்தின? “ என்றான் வரவழைத்த எரிச்சலுடன்.  

“பல்லி... மாமா... பல்லி  மேல  விழுந்துடுச்சு...”  என்றாள் தன் கீழ் உதட்டை கடித்துக்கொண்டு அடக்கப்பட்ட சிரிப்புடன்.  

அதற்குள்  சுதாரித்துக் கொண்டவன்,  

“அடியே... புலியவே முறத்தால விரட்டுன வீரத்தமிழச்சி பரம்பரையில வந்த,  வீர தமிழச்சினு பீத்திக்க்குவ. நீ போய்  பல்லிய பாத்து பயப்படுற?  நீ தான் பாயும் புலியாச்சே... அந்தப் பல்லி  வேணா  உன்னை பாத்து பயந்து போய் எங்கேயாவது ஒளிஞ்சிருக்கும்.  

உன்னுடைய  தகிடுதத்தம் எல்லாம் என்கிட்ட வேலைக்கு ஆகாது. 

ஒழுங்கா சேலைய  கட்டிகிட்டு வேலையப் பாரு...”  என்று நக்கலாக சிரித்தான்.

“இல்ல மாமா... நிஜமா தான்...”  என்று சிணுங்க,

“ஏன் டி... நேத்து பாத்த படத்துல வர சீன,  நீ  காப்பியடிச்சா எனக்கு தெரியாதாக்கும். நானும்  தான அந்த படத்தை பாத்தேன்.  கொஞ்சமாச்சும் உனக்கு அறிவு இருக்கா?  

வேற எதையாவது மாத்தி யோசிக்க வேண்டியது தானே...”  என்று வாய் விட்டு சிரித்து விட்டு   வெளியே சென்று விட்டான்.  

“மா....மு....”  என்று   காலை தரையில் உதைத்து சிணுங்கினாள் பெண்ணவள்.  

அவனும்  தன் தலையை இடவலமாக ஆட்டி சிரித்துக் கொண்டே சென்றான்.

*****  

தன் பிறகு அவளும் என்ன என்னென்னவோ செய்து பார்த்து விட்டாள் அவனை தன் வழிக்கு கொண்டு வருவதற்காக.

அவனை பார்க்கும்பொழுதெல்லாம் , ஏதாவது ஒரு திரைப்பட பாடலை சத்தமாக முனுமுனுத்துக் கொண்டாள்.  

சலக்கு சலக்கு சரிக சேல சலக்கு சலக்கு
வெலக்கு வெலக்கு வெக்கம் வந்தா வெலக்கு வெலக்கு
உனக்குக் குளுருன்னா என்ன எடுத்துப் போத்திக்கோ
மாமன் தோளிலே மச்சம் போல ஒட்டிக்கோ

அடடா அல்வாத்துண்டு இடுப்பு ன் இடுப்பு
அழகா பத்திகிச்சு நெருப்பு தூள் கெளப்பு... .

என்று அவனைப் பார்த்து கண் சிமிட்டி மையலுடன் சிரிக்க, அவனோ உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாலும் வெளியில் அவனை முறைத்து வைத்தான்.

இரவில் அவன் சாப்பிட அமரும்பொழுது , பாடிக் கொண்டே சாப்பாட்டை எடுத்து வந்து வைத்து பரிமாறுவாள்.

 

மெதுவா தந்தி அடிச்சானே எம் மச்சானே
எதையோ சொல்லத் துடிச்சானே  கை வச்சானே

கில்லாடி நீ அடியே கொஞ்சம் நில்லு
என்னான்னு தான் தெரிஞ்சா அதச் சொல்லு
தாங்காது அய்யா கண்ணு சாமி
நான் தேடும் சொர்க்கம் எங்கே காமி..!

என்று ஆண் குரல், பெண் குரல் இரண்டுக்குமே அவளே குரல் கொடுத்து மையலுடன் பாட, ராசய்யாவுக்கோ இன்னுமாய் சிரிப்பு பொங்கி வரும்.

இரவு சாப்பிட்டு முடித்ததும் காத்தோட்டமாக காலை நீட்டி கட்டிலில் படுத்திருந்தவன்,  கட்டிலில் வந்து அமர்ந்து கொண்டு அவன் மீது உல்லாசமாக  சாய்ந்து கொண்டு

இஸ் ஆஆ நான் ஆளான தாமரை

ரொம்ப நாளாக தூங்கல...

அம்மி மிதிச்சும் நேக்கு எதுவுமில்ல

அந்த கவல நோக்கு புரியவில்ல

நான் தொட்டா  என்ன சுட்டா விடும் வாங்கோ..

அட கிட்டே வந்து முத்தம் ஒன்னு தாங்கோ ..

அட தாங்கோ மாமா...!

 

என்று தன் கீழ் உதட்டை,  ஒரு மார்க்கமாக கடித்துக்கொண்டு, கண்களால் அவனுக்கு அழைப்பு விட, அவளின் அந்த செய்கையில் மனம் தடுமாறத்தான் செய்தது.

ஆனாலும் தன் மனதை அடக்கியவன், தன் மீது முதுகு காட்டி சாய்ந்திருந்தவன் ஜடையை கையில் எடுத்து அதில் இருந்த முடியை பிரித்து விட்டவனால் அவள் கூந்தலின் வாசம் பிடித்தான்.

அது இன்னும் அவனை கிறங்க வைத்தது. அவளை அப்படியே இழுத்து தன் மீது போட்டுக்கொண்டு இறுக்கி அணைத்து அவளின் தாபத்தை, ஏக்கத்தை தீர்த்து வைக்க தவிக்கத்தான் செய்தது.

ஆனாலும்...... அதே அபாயக்குரல் மீண்டும் அவனை விழிக்க வைத்து எச்சரிக்க, அதில் தன்னை  சமனபடுத்திக்கொண்டான்.

அதற்குள் அவள் அடுத்த பாட்டுக்கு தாவி இருந்தாள்...

சின்ன  ராசாவே  சித்தெறும்பு  என்ன  கடிக்குது...  

உன்ன  சேரம  அடிக்கடி  ராத்திரி  துடிக்குது  

வாங்கின  பூவும்  பத்தாது...   வீசுற  கத்தும்  நிக்காது

அட  மூச்சுக்கு  மூச்சுக்கு...  ராவெல்லாம்  பேச்சுக்கு

ராசாவே...ராசாவே ..ராசாவே

சித்தெறும்பு என்ன கடிக்குது

உன்ன சேரம அடிக்கடி ராத்திரி துடிக்குது...

 

என்று தன் மாராப்பில் கை வைத்து அந்த பாட்டில் வரும் நடிகையை போலவே மையல் பார்வையுடன் குலுங்கி ஆடியும் வைத்தாள்.

ஆனால் அவனோ அதற்கெல்லாம் மயங்கி போனவனாக தெரியவில்லை...

அவன் மயங்கி, கிறங்கித்தான் போனான் அவள் செய்கையில். ஆனால் அதை வெளிக்காட்டாமல் கெத்தாக கட்டிலில் படுத்து இருந்தான்.

அதைக் கண்டவளுக்கோ தாபம் மறைந்து கோபம் பொங்கி வந்தது.

“சே...சரியான சாமியார்...இல்ல விஷ்வாமித்திரருக்கு அண்ணனா இருப்பான் போல. அவரைக்கூட ஒரே பாட்ல அந்த மேனகா சாச்சுபுட்டா..

இந்த சாமியார்... நான் இத்தன ஹாட் சாங்க்ஸ் பாடியும் ஒரு ரியாக்சனும் காணோமே...

இல்ல..  இல்ல.. உள்ள சூடு ஏறினாலும் அதை வெளிக்காட்டிக்காம கெத்தா இருக்கான். சரியான அழுத்தக்காரன்...சமியார்... “

என்று மனதுக்குள் தன் கணவனை தாளித்து கொண்டிருந்தாள்.

அவள் மனதில் இருக்கும் குமுறலை அறியாதவனோ, வாய்விட்டு சிரித்தவன்,   

“எங்க இருந்து டி இந்த மாதிரி பாட்டெல்லாம் புடிக்கிற? “ என்று கேலி செய்ய, தன் கோபத்தை தணித்து,

“ஏன் மாமா...  நல்லா இருக்குதானே... எல்லா பாட்டும் செம ஹாட்...” என்று மார்க்கமாக அவனை பார்த்து கண்ணடிக்க,

“ஹாட் னா? “ என்று புரியாமல் அவளை கேட்க,

ஐயோ…ஹாட் னா என்னானு தெரியலைங்கிறானே...எந்த காலத்துல இருக்கான் இந்த சாமியார்....” என்று மானசீகமாக தன் தலையில் அடித்து கொண்டவள் ,

“ஹீ ஹீ ஹீ ஹாட் னா சூடா இருக்குனு அர்த்தம். இந்த பாட்டை எல்லாம் கேட்கறப்போ உங்களுக்குள்ள அப்படியே சூடேறுமே? “ என்று ஆர்வமாக கேட்க,

“இல்லையே... இதை எல்லாம் கேட்கறப்போ பக்கத்துல மேய்ஞ்சுகிட்டிருக்கிற கழுதைங்க எங்க நம்ம வூட்டுக்கு ஓடி வந்திடுமோனு கொஞ்சம் திக்குனு இருக்குடி.

ஒன்னு வந்தா சமாளிடலாம். நிறைய கழுதைங்க திபுதிபுனு ஓடிவந்தா, வீட்டு கேட் கூட தாங்காது. அதான் யோசனையா இருக்கு...” என்று சீரியசாக சொல்ல, அவ்வளவுதான்.

புஸ் புஸ் என்று பெரிய பெரிய மூச்சுகளாக எடுத்து விட்டவள், அவன் மீது சாய்ந்திருந்தவள் வெடுக்கென்று எழுந்து சென்று, அருகில் இருந்த குடத்தில் இருந்த நீரை எடுத்து வந்து ,  அப்படியே அவன் தலையில் கொட்டினாள்.

*****   

ப்படி மயக்கற மாதிரி பாட்டு பாடி அவனை கவுக்க முடியாது என்று அடுத்த யுக்தியை கையில் எடுத்தாள்.

அடுத்த நாள் இடுப்பு புடுச்சுகிச்சு என்று அவனை நீவி விடச் சொன்னாள்.

அவனோ அடுத்த இரண்டாவது நிமிடம் சுளுக்கு எடுக்கும் சுப்பமாவை கூட்டி வந்து விட, அந்த சுப்பமா இடுப்பில் விளக்கெண்ணெய் ஐ போட்டு நீவின நீவில், வராத சுளுக்கு தானா வந்து சேர்ந்தது.

அடுத்த இரண்டு நாளைக்கு அவளுக்கு இடுப்பை அசைக்க கூட முடியவில்லை.

கொஞ்சம் சரியானதும், வலது கையில் வெட்டிகிட்டேன் என்று பெரிய துணியாக சுத்திக்கொண்டு அவனிடம் சாப்பாட்டை ஊட்ட சொல்லி கட்டாயபடுத்தினாள்.

அவன்,  கிட்ட இருந்து ஊட்டும்பொழுது, அப்படி இப்படி ரொமான்ஸ் பண்ணி அவனை தன் வலையில் விழ வைக்கவண்டும்  என்று திட்டமிட்டிருந்தாள்.

அவனோ அவள் தங்கை மலர்க்கொடியை அழைத்து வந்து விட்டான்.

பூங்கொடிக்கு சமையலுக்கு உதவவும், அவளுக்கு சாதத்தை பிசைந்து  அவளுக்கு ஊட்ட என மலரே தன் அக்காவை கவனித்துக் கொண்டாள்.

அதிலும் அவள் திட்டம் சொதப்பி  விட, அவனை முறைத்து பார்த்து தன் பல்லை கடித்தாள்.

இரண்டு நாட்கள் அவள் சொன்ன பொய்யை மெய்யாக்குபவளாய் கையில் கட்டுடன் சுற்றி வந்தவள், இரண்டாவது நாள்  கை சரியாகி விட்டது என்று கட்டை பிரித்து விட்டு தன் தங்கையை வீட்டுக்கு அனுப்பி விட்டாள்.

அடுத்து  விதவிதமான போஸ்களில் அவளின் வரிவடிவம் அவன் பார்வைக்கு வரும்படி நின்று, குனிந்து, நிமிர்ந்து என எல்லா விதத்திலும் முயன்று பார்த்து விட்டாள்.

நல்ல கருங்கல் பாறை மீது முட்டிக்கொண்ட உணர்வுதான்.

எப்படி முயற்சி செய்தாலும் கொஞ்சம் கூட அசைந்து கொடுக்காமல் நங்கூரம் இட்ட கப்பல் போல  பெரிய கருங்கல் பாறை போல...  திடமாக உறுதியாக நின்று விட்டான் .

பூங்கொடிக்குத் தான் ஏமாற்றமாக இருந்தது.

டேய் கருவாயா...நல்லவனா இருக்கலாம்...ஆனால் இவ்வளவு நல்லவனா இருக்கப்படாது...நாடு தாங்காது...” என்று தனக்குள்ளே சிரித்துக்கொண்டவள், விக்ரமாதித்யன் மாதிரி அசந்து விடாமல்  தன் முயற்சியை  தொடர்ந்து கொண்டுதான் இருந்தாள்.

*****

முதல் ஆண்டு இரண்டாவது செமஸ்டர் முடிந்து விடுமுறையில் இருந்தாள் பூங்கொடி.

பூங்கொடி முன்பு அவள்  திட்டமிட்டதை போல வீட்டைச் சுற்றியும்,  கீரை, காய்கறி தோட்டம் என போட்டிருந்தாள். அது இப்பொழுது அறுவடைக்கு வந்து நல்ல விளைச்சலை கொடுத்தது.  

அவர்கள் முதன்முதலாக விதைத்திருந்த நெல்லும் அந்த போகம் நல்ல விளைச்சல் கண்டிருந்தது.

செயற்கை உரத்தை பயன்படுத்தாமல் இயற்கை உரத்தை அவர்களாகவே தயாரித்து  பயன்படுத்தியிருக்க,  மற்றவர்களைவிட அவர்கள் வயலில் அதிகமாகவே விளைச்சல் தெரிந்தது.  

அன்று மாலை தன் கணவனோடு வயலை சுற்றிப்பார்க்க சென்றிருந்தாள் பூங்கொடி.  

அவர்கள் நட்டு வைத்த நாத்து  வளர்ந்து,  இன்று நெற்கதிராக,     அறுவடைக்காக காத்திருந்தது.

ஒரு நெல்மணியில்  இருந்து முளைத்த நாத்து, தன்னை வளர்த்ததற்கு நன்றிக்கடனாய் இப்பொழுது  ஒரு கை அளவு நெல்மணியை திருப்பி கொடுப்பதை போல, நெற்கதிர் முழுவதும் முற்றிய நெல்மணிகள்.

பிரசவத்தின் இறுதி கட்டத்தில் இருக்கும் தாயவளை போல, தான் சுமக்கும் நெல்மணிகளின் பாரம் தாங்காமல் சில நெற்கதிர்கள் சாய்ந்து இருந்தன.

பச்சை பசேல் என்ற வயலில், பொன்னிற நெற்கதிர்கள் விளைந்து கிடப்பதை காண   இருவருக்குமே மனம் பூரித்தது.

அதுவும் ராசய்யாவுக்கு சொல்லவே வேண்டாம்.

முதன்முறையாக தன் உழைப்பில் விளைந்தவை. இதுவரை அவனுடைய உழைப்பின் பயனை  இப்படி நேரடியாக பார்த்ததில்லை. இன்றோ அந்த வயலை பார்க்கும்பொழுது அவன் சிந்திய வியர்வையின் பயனை அடைந்து விட்டதை போல மனம் பூரித்தது.

அதுவும் ஒரு தாய்,  தன் குழந்தை கருவில் உருவானதில் இருந்து, பாத்து பாத்து வளர்த்து அதை பெற்று எடுப்பதை போல,  அவனும் அந்த நாத்தை நட்டதில் இருந்து, ஒவ்வொரு நிலையிலும் பாத்து பாத்து வளர்த்தான்.

தினமும் காலையில் எழுந்ததும், வேப்பங்குச்சியை ஒடித்து வாயில் வைத்து பல்லை துலக்கி கொண்டே அந்த வாயிலை சுற்றி வருவான்.

ஆங்காங்கே நின்று, செழித்து வளர்ந்த பயிர்களை தொட்டு தடவி பார்த்து மகிழ்ந்து போவான்.  

ஏதாவது ஒரு நெல்கதிர் சோம்பி இருந்தாலும், அதுக்கு என்ன செய்வது என்று தணிகாசலத்திடம் கலந்து ஆலோச்சித்து,  அதற்கான ஊட்ட சத்தை,   அந்த பகுதிக்கு மட்டும் போட்டு வைத்து தொடர்ந்து கண்கானிப்பான்.

அப்படி   பாத்து பாத்து வளர்த்து வந்தான். அந்த நெல்கதிர்களும் ராசய்யாவின் கவனிப்பில் போஷாக்காகவே வளர்ந்து,  கொலுகொலுவென்று அவனை பார்த்து சிரித்தது.

******

ரப்பில் நடந்து கொண்டிருந்தவன், குனிந்து வரப்பின் மீது தலை சாய்ந்திருந்த நெற்கதிரை குழந்தையை வருடுவதை போல மென்மையாய் வருடிவிட்டான்.

அவன் உள்ளே அப்படி ஒரு சிலிர்ப்பு.

என் குழந்தை என்று பெருமையாக சொல்வதைப்போல என் வயல்.. என் நெல்.. என் உழைப்பு என்று அவன் மனம் பெருமையில் விம்மியது.

அவனின் இளகிய நிலையை கண்டு பெண்ணவளும் இளகிப் போனாள்.

கொஞ்ச நாட்களுக்கு முன்வரை  , ஆங்காங்கே கிழிஞ்சு தொங்கும் லுங்கியும், முகத்தில் கடினத்துடன்,  அழுக்கேறிய சட்டையின் முழுக்கையை  முட்டிவரை சுருட்டி விட்டுக்கொண்டு, அதன் காலரை ஒரு பக்கமாய் தூக்கி விட்டுக்கொண்டு நானும் ரௌடிதான் என்ற ரேஞ்சில் சுத்திக்கொண்டு இருந்தவன்.

இப்பொழுதோ தன் அடையாளத்தை முற்றிலுமாக மாற்றிக்கொண்டான்.

பூங்கொடி துவைத்து மடித்து வைக்கும் சுத்தமான லுங்கியும், அரக்கை சட்டை, படிய வாரிய சிகை, நேர்த்தியாக கத்தரிக்கப்பட்ட மீசை ...என ஆளே மாறிப்போயிருந்தான்.

அதுவும் லுங்கியை மடித்துக்கொண்டு , கையில்லாத முண்டாசு பனியனுடன், அருவாளை பிடித்த கையில்  மண்வெட்டியை பிடித்துக்கொண்டு நிக்கும்பொழுது அவன் முழு விவசாயியாகவே மாறிவிட்டான் என்பதை காண பெண்ணவளுக்கும் பெருமையாக இருந்தது.

இன்றும் மடித்து கட்டிய கைலியும், வெள்ளை நிறத்திலான, அவன் உடலை இறுக்க பிடித்திருந்த வெறும் முண்டாசு பனியனுமாய் தனக்கு முன்னால் வரப்பில் நடந்து கொண்டிருந்தவனை காண அவள் மனம் ததும்பியது.

அதே நேரம் அவனை கொஞ்சம்  சீண்டி பார்க்க  எண்ணியவள்,

“ஹ்ம்ம்ம் நான்   நட்டு வச்சு நாத்து.... அது கூட வளர்ந்து,  குமரியாகி,  கல்யாணம் முடிச்சு, புள்ளையும் சுமந்து,  இப்ப டெலிவரிக்காக காத்து இருக்குது.  

ஆனால் இதுக்கு முன்னால கல்யாணம் ஆன  இந்த பூங்கொடி மட்டும் இன்னும் அப்படியே கன்னியாவே இருக்கேன்.

நானும் எப்ப கன்னி கழிஞ்சு, இப்படி என் புள்ளைய சுமக்கிறதாம்? “  என்று ஏக்க பெருமூச்சு விட்டவள், வாய் விட்டு புலம்பினாள் கேட்க வேண்டியவனுக்கு கேட்க வேண்டுமே என்று. 

அதைக் கேட்டவன் கண்கள் மின்னின.

அவனுக்கான அவளின் அழைப்பும், ஏக்கமும் அவனுக்கு புரியாமல் இல்லை.    

இப்பொழுதெல்லாம் அவனுக்குமே அவளை தள்ளி வைக்க முடியவில்லை. அதுவும் அவள் போஸ் கொடுத்து நிக்கும் சமயங்களில் அவளின் அபாயகரமான வளைவுகள் அவனை தன்னுள் இழுத்து கொள்ளும் தான்.

அதிலிருந்து வெளிவர ரொம்பவும் தவித்து போவான்.

ஆனாலும் அவளை நெருங்க, ஏதோ ஒன்று தடையாக இருந்தது. அது என்ன அது என்று இன்னும் புடிபடவில்லை.

இப்பொழுதும் அவள் விட்ட ஏக்க பெருமூச்சு,  அவள் அருகில் முன்னால்  சென்று கொண்டிருந்தவன் கழுத்தின் மீது பட்டு அனலாக தகித்தது.

அவளின் அந்த வெப்பமான தாப பெருமூச்சில் தடுமாறியவன், முயன்று தன்னை நிலைப்படுத்திக் கொண்டவன்

“இன்னும்  கொஞ்ச நாள்....”  என்று ஆரம்பிக்க, அவன் என்ன சொல்ல வருகிறான் என்று  புரிந்து கொண்டவள், முன்னால் சென்றவனை லாவகமாக தாண்டி அவன் முன்னே சென்று நின்றவள், அவன் முன்னே கையை நீட்டி  

“போதும் மாமா...  இப்படியே கொஞ்ச நாள்,  கொஞ்ச நாள்னு சொல்லிகிட்டிருந்த, அப்புறம் நமக்கு அறுபதாவது கல்யாணத்துலதான் பர்ஸ்ட் நைட் நடக்கும்.

அது வரைக்கும் எல்லாம் என்னால காத்திருக்க முடியாது. சீக்கிரம் எனக்கு ஒரு நல்ல முடிவை சொல். இல்லைனா அந்த மேட்டருக்கு நீ சரிபட்டு வரமாட்டேனு, உன்னை நான் ரேப் பண்ண வேண்டி இருக்கும்.  இப்பயே சொல்லிட்டேன்...”  

என்று முறைக்க,  அவளின் மிரட்டலில் ஹா ஹா ஹா என்று வாய் விட்டு சிரித்துக் கொண்டான் அவளவன்..!

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!