என்னுயிர் கருவாச்சி-47

 


அத்தியாயம்-47

றுநாள் மதியம் அவர்களின் வயலை ஒட்டியிருந்த   வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்தாள்  பூங்கொடி.

தன் ஆடையை கலைந்து விட்டு, பாவாடையை தூக்கி நெஞ்சுக்கு மேல கட்டிக்கொண்டு குளித்துக் கொண்டிருந்தாள். கூடவே அவளுக்கு பிடித்த பாட்டையும் ஹம் பண்ணிக்கொண்டிருந்தாள்.

பொத்தி வச்ச மல்லிகை மொட்டு

பூத்திருச்சு வெக்கத்த விட்டு

பேசிப் பேசி ராசியானதே

மாமன் பேரைச் சொல்லிச் சொல்லி ஆளானதே.. 

 

மாலை இளங் காத்து அல்லியிருக்கு

தாலி செய்ய நேத்து சொல்லியிருக்கு

இது சாயங்காலமா மடி சாயும் காலமா

முல்லைப் பூச்சூடு மெல்லப் பாய் போடு

அட வாடைக் காத்து சூடு ஏத்துது..!

 

வயலுக்கு  நீர் பாய்ச்ச என்று காவிரி ஆற்றிலிருந்து சிறு கிளையாக பிரித்து  ஊருக்குள் கொண்டு வந்திருந்தனர். அங்கிருக்கும் எல்லா வயல்களுக்கும் அந்த வாய்க்காலில் இருந்துதான் நீர் பாயும்.

சலசலத்து ஓடும் அந்த வாய்க்காலில் ஒரு இடத்தில் மட்டும் குளிப்பதற்கான வசதி இருந்தது. அந்த இடத்தில் சேராக இல்லாமல் கூலாங்கற்கள் நிறைந்து இருக்க, குளிப்பதற்கு ஏற்றதாக இருக்கும்.

தனக்கு பிடித்த நாட்களில் பூங்கொடி இங்கு வந்துதான் குளிப்பாள்.

அதுவும் தலைக்கு சீயக்காய் தேய்த்து குளிக்கும் நாட்களில் , வீட்டில் இருக்கும் குளியல் அறையில் இருக்கும் தொட்டியில் இருந்து எவ்வளவுதான்  மொண்டு மொண்டு ஊற்றி குளித்தாலும்,  தலையில் இருக்கும் சீயக்காய் துகள்கள் முழுவதும் போகாது.

ஒரு தொட்டி  தண்ணி செலவு ஆவதுதான் மிச்சம்.

அதுவே சீயக்காயை தேய்த்துக்கொண்டு, ஓடும் நீரில் தலையை விட்டு அலசினால், சிறு துகல்கள் கூட இல்லாமல்,  சுத்தமாக அடித்து சென்று விடும்.

அதற்காகவே தலைக்கு குளிக்கும் நாட்களில் இந்த வாய்க்காலுக்கு வந்து விடுவாள்.

இன்று  வயலில் பெரிதாக வேலை இல்லாததால், ராசய்யாவும் பண்ணையார் வீட்டுக்கு சென்றிருந்தான்.

வீட்டில் இருந்தவள் போர் அடிக்க, சரி குளிக்கலாம் என்று இங்கு வந்திருந்தாள்.

தலைக்கு சீயக்காய் தேய்த்து முடித்து அதை ஓடும் நீரில்  அலசி முடித்தவள், அதை அப்படியே முதுகில் விரிய விட்டவாறு ஓடும் நீரில் ஓரமாக கரையில் அமர்ந்து கொண்டு   அவளின் உடலுக்கு மஞ்சளை தேய்த்தவாறு அந்த பாடலை ரசித்து பாடிக் கொண்டிருந்தாள்.

 

ஆத்துக்குள்ள நேத்து ஒன்ன நெனச்சேன்

மித்த நேரம் போக மஞ்சக் குளிச்சேன்

கொஞ்சம் மறைஞ்சு பாக்கவா...  இல்ல முதுகு தேய்க்கவா...

அது கூடாது இது தாங்காது

சின்னக் காம்புதான பூவத் தாங்குது...

 

என்று தன்னவனின் நினைவில் சிறு வெட்கத்தோடு பாடிக்கொண்டே குளித்துக் கொண்டிருந்தவள், எதேச்சையாக நிமிர்ந்து பார்க்க, அடுத்த கணம் அவளின் விழிகள் பெரிதாக விரிந்து கொள்ள அப்படியே உறைந்து நின்றாள்.

 

தன் மார்புக்கு குறுக்காக கைகளை கட்டிக்கொண்டு நின்றிருந்தான் அவள் நினைவின் நாயகன். அந்த பாடலுக்கு உரியவன்.

தான் நினைத்த நேரம் தன்னவன் அவள் கண் முன்னே நிற்க, அதை நம்ப முடியாதவளாய் இமைகளை கொட்டியும்,  படபடவென்று அடித்தும் உறுத்து விழித்தாள்.

அப்பவும் அவன் பிம்பம் மறையவில்லை.

கையில் இருந்த மஞ்சளை, ஓடும் நீரில் கழுவியவள், இப்பொழுது கண்களை தேய்த்து விட்டுக்கொண்டு உற்று பார்க்க, இப்பொழுதும் மறையவில்லை அவன் பிம்பம்.

அப்படி என்றால் ? அவனேதான் என்று உள்ளம் துள்ளி குதிக்க, கண்களில் காதலோடு அவனை பார்த்து வைக்க, வாய்க்கால் மேட்டில் நின்றிருந்தவன் தன்னவளை அந்த கோலத்தில் காண, ஒரு நொடி திகைத்து அப்படியே நின்று விட்டான்.

அவள் கண்ணை கசக்கிக் கொண்டு இப்பொழுது அவனை ஆழ்ந்து பார்க்க, அவள் பார்வையை எதிர் கொள்ள முடியாதவன்...

கூடவே தன்னவளை அந்தரங்கமாக பார்த்து ரசிக்க அவன் மனம் விளைந்தாலும், அறிவு அதுக்கு தடா போட்டு விட, அதன்  பலனாய்,  உடனே தன் பார்வையை அவளிடம் இருந்து பிரித்து எடுத்து, முகத்தையும் திருப்பிக் கொண்டான்.

“ஏன் டி... இங்க எதுக்கு வந்த குளிக்கிற? இது நாலு பேரு வந்து போற இடம்.  வீட்லதான் பாத்ரூம் இருக்கே..அங்கயே குளிக்க வேண்டியது தான..” என்று அவள் பக்கம் திரும்பாமல்  முகத்தைத் திருப்பிக் கொண்டே செல்லமாக  கண்டித்தான்.

அவன் பார்வை ஒரு கணம் தன் மீது மேய்ந்ததையும் , அதில் தடுமாறியவன் தன் முகத்தை கஷ்டபட்டு திருப்பிக்கொண்டதையும் கண்டு பெண்ணவளுக்கு சிரிப்பு வந்தது.

ஆனாலும் அதை அடக்கி கொண்டவள்,

“இந்த மாதிரி ஓடற தண்ணியில குளிக்கிறது  எவ்வளவு சுகம் தெரியுமா?  மாமா... நீயும் வா குளிக்கலாம்...”  என்று அவனையும் அழைக்க, அதில் ஜெர்க் ஆனான் காளையவன்.

“இம்புட்டு தூரம் தள்ளி நின்னு பாக்கிறப்பவே உடம்பு சூடேறுது. இன்னும் இந்த கருவாச்சி இருக்கிற கோலத்துல,  அவ பக்கம் போனா, அவ்வளவுதான்... ராசு... இப்படியே எஸ் ஆகிடு...”

என்று அவன்  மனஸ் அவனுக்கு அபாய சங்கை ஊத, அதில் விழித்துக் கொண்டவன்,

“நான்  காலையிலயே குளிச்சிட்டேன் டி. சரி சரி நீ சீக்கிரம் குளிச்சிட்டு வா. நான் வீட்டுக்கு  போறேன்...”  என்று சொல்லி கிளம்ப முயல,

“ஐயோ... மாமா...” என்று கத்தினாள் பூங்கொடி.

வீட்டை நோக்கி ஒரு எட்டு வைத்தவன் அவள் கத்தலில் அதிர்ந்து நின்று திரும்பி அவளை பார்த்து

“என்னடி? “ என்றான் பதற்றத்துடன்...  

“வந்து...வந்து... ஆங்... சோப்பு...சோப்பு  தண்ணிக்குள்ள விழுந்திரிச்சு....” என்றாள் பதற்றத்துடன்.

“சோப்பா ? “ என்று அவன் புருவத்தை உயர்த்த,

“ஆமாம் மாமா.. சோப்பேதான்...   உன்கிட்ட பேசிக்கிட்டே உடம்புக்கு சோப்பு போட்டேனா எப்படியோ கை நழுவி கீழ விழுந்துடுச்சு... ப்ளீஸ் எடுத்துக் கொடு மாமா...”

என்று உதட்டை பிதுக்கி சிறுபிள்ளையாய் கெஞ்சினாள்...

“சோப்பா? நான் வர்றப்ப  மஞ்சளை இல்ல பூசிக்கிட்டிருந்த..?” என்று சந்தேகமாக கேட்க,

“ஆஹான்... ஆனாலும் இந்த கருவாயன் இம்புட்டு புத்திசாலியா இருக்கபடாது.. இப்படி மடக்கிட்டானே... இவனே புத்திசாலினா இவன் பொண்டாட்டி அதி புத்திசாலினு காட்ட வேண்டாம்...” என்று நக்கலாக தனக்குள்ளே சிரித்தவள்,

“அது வந்து...ஆங்... மஞ்சளை போட்டு முடிச்சிட்டு,  நீ திரும்பறப்பதான் சோப்பை எடுத்தேன். எடுத்த வேகத்துல அப்படியே கீழ விழுந்திடுச்சு.. சீக்கிரம் வா மாமா.. இல்லைனா தண்ணியில அடிச்சுகிட்டு ரொம்ப தூரம் போய்டும்...” என்று மீண்டும் சிணுங்கினாள். .    

“அது போனா போகட்டும். வேற வாங்கிக்கலாம்...”  என்றான். அவளை சமாளிக்க.

“இல்ல மாமா... என்கிட்ட இருந்தது ஒன்னே ஒன்னு..கண்ணே கண்ணுனு அந்த ஒத்த சோப்பு மட்டும்தான். அதுவும் இன்னைக்குத் தான் புதுசா ஓபன் பண்ணினேன்.  எனக்கு அந்த சோப்பு வேணும்...  எடுத்துக் கொடு மாமா...”  என்று காலை உதைத்து சிணுங்க,

“சை..உன்கூட பெரிய இம்சையா இருக்குடி...” என்று சிடுசிடுத்தவன்,  

“சரி... இரு வர்றேன்..” என்று  அணிந்திருந்த சட்டையையும்  லுங்கியையும்  கழட்டி விட்டு, வெற்று மார்பும், ட்ராயருடன்  வாய்க்காலுக்குள்  இறங்கினான்.  

தண்ணீர் ஓடும் வழியிலயே சற்று தூரம் நடந்து காலால் தரையில் எங்கயாவது சோப்பு தேங்கி இருக்கிறதா என்று   தேடிப் பார்த்தான்.  

ம்கூம்...எங்கயோ ஒரு பக்கம் குளித்த  பெண்கள் தவறவிட்டு, நீரில் அடித்துக்கொண்டு வந்திருந்த  உள்ளாடை முதற்கொண்டு, ஏதேதோ அவன்  காலில் தட்டுபட்டது...  அவன் பொண்டாட்டி  தவற விட்ட சோப்பு மட்டும் கிடைக்கவே இல்லை.  

சற்று தூரம் அந்த நீர் ஓடும் பாதையிலேயே சென்று தேடியவன், திரும்பி வந்து

“காணோம் டி..தண்ணி போற வேகத்துல அடிச்சுகிட்டு போய்டுச்சு போல... ” என்று இதழை பிரித்து பாவமாக சொல்ல,

“ஹீ ஹீ ஹீ  தொலையாத சோப்பை தேடினால்,  எப்படி மாமா அது கிடைக்கும்....”  என்று கண் சிமிட்டி சொல்லி விட்டு,  கலகலவென்று வாய்விட்டு சிரித்தாள்.

அப்பொழுதுதான் அவள் தகிடுதத்தம் புரிந்தது. உடனே அவளை முறைத்தவன்

“கேடி..ப்ராடு... எதுக்குடி என்னை ஏமாத்தின? “  என்று செல்லமாக முறைக்க,

“ஹீ ஹீ ஹீ பின்ன குளிக்க  வாயானு நல்ல முறையில் கூப்பிட்டா  நீ வந்தியா?  உன்னை எப்படி வாய்க்காலுக்குள்  இறங்க வச்சேன் பாத்தியா.

அதுதான் ராசயய பொண்டாட்டி ... பூங்கொடி...”  என்று இல்லாத காலரை  தூக்கி விட்டுக் கொண்டவள்,  குனிந்து தண்ணீரை வாரி அவன் மீது இறைத்து அவனை  முழுவதும் நனைய வைத்தாள். .  

அவனோ அவளை வெட்டவா , குத்தவா என்று முறைக்க,  

“சரி சரி ரொம்ப முறைக்காத மாமு...ஏதோ சின்ன புள்ள ஆசைப்பட்டு வாய்க்காலில் ஒன்னா குளிக்கலாம்னு கேட்டுபுட்டேன்.  வந்ததும் வந்த... இந்த சோப்ப  அப்படியே என் முதுகுக்கு போட்டு விடேன்...ரொம்ப நாளாச்சு முதுகுக்கு சோப்பு போட்டு தேய்ச்சு குளிச்சு...

முன்னயாவது உன் மாமியாரோ, மலரோ தேய்ச்சு விடுவாங்க.. உன்னை கட்டிகிட்டதுக்கு பொறவு முதுகு தேய்க்கறதே விட்டுபுட்டேன்...போட்டு விடு மாமா... ” என்றாள் கொஞ்சலாக.

“என்னாது..? நான் போய் உனக்கு சோப்பு போடறதா... போடி....அதெல்லாம் முடியாது...” என்று மீண்டும் முறைக்க,

“முதுகு ரொம்ப அரிக்குது.. ப்ளீஸ் போட்டு தேய்ச்சு வுடு மாமா....” என்று மீண்டும் கெஞ்சி,  கொஞ்ச,

“அரிச்சா...அதான் பெருசு பெருசா நிறைய கல்லு இருக்குள்ள..அதை எடுத்து கை எட்டற இடத்தில் எல்லாம் சொறிஞ்சுக்க.. என்னை ஆளவிடு... “ என்று வாய்க்காலில் இருந்து மேல ஏற முயல,

“முடியாதா?  இப்ப பார்...உன்னை என்ன செய்யறேனு...”  என்று சூளுரைத்தவள்,  தண்ணீருக்குள் நின்று இருந்தவன் காலை தட்டி விட,  அதில்  தடுமாறி அப்படியே ஓரமாக அமர்ந்து இருந்தவள் மீது சரிந்தான்.  

அங்கிருந்த சிறிய மேட்டில் அமர்ந்தவாறு வாய்க்கால் நீரில் காலை விட்டு ஆட்டிக் கொண்டிருந்தவள், தன்னவன் அவள் மீது சரிந்ததில் அவளும் அப்படியே மல்லாந்து தரையில் விழ, அவளின் மீது படர்ந்து இருந்தான் அவளவன்.

தன் மீது சரிந்தவனை நொடியும் தாமதிக்காமல்,  தன்னோடு சேர்த்து இறுக்கி  கட்டிக்கொண்டவள்,  அவனின் இதழில்  அழுத்தமாக முத்தமிட,  அதில் தன்னைத் தொலைத்தவன்,  அவள் ஆரம்பித்த  முத்தத்தை அவன்  தொடர்ந்தான்.  

தண்ணீரால்  நனைந்திருந்த அவளின் முகத்தை தன் அழுத்தமான உதட்டால் உளர வைத்தான்.  .  

அப்பொழுத்தான் சீயக்காய் தேய்த்து அலசி இருந்த , அவளின் ஆறடி பட்டு கூந்தலில் கையை விட்டு அலைந்தவன் இன்னும் மோகம் கொண்டு வேட்கையோடு அவளை தழுவினான்.

அதில் பெண்ணவளோ உருகி குழைந்து கரைய, அவளின் செவ்விதழ்கள் உணர்ச்சி மிகுதியால் தவித்தன.

தன்னவளின் குண்டு கன்னத்தில் ஆரம்பித்த அவன்  இதழ்களின்  ஊர்வலம், அவளின்  கண் காது, மூக்கு என கடந்து, இதழை குறி வைத்தது.

ஈர உடையில், அவனின்  வெப்பமான மூச்சுக்காற்று பட்டு பெண்ணவளை இன்னும் சிலிர்க்க வைக்க, அதில் கிளர்ந்தவள், தன் உதடு துடிக்க, அந்த உதட்டை தன் நாவால் வருடி ஈர படுத்தியவள்,  தாபத்தோடு தன்னவன் இதழின் அணைப்புக்காக அவன்  இதழை பார்த்தாள்.

அவள் தன் இதழை ஈரமாக்கிய விதத்தில் இன்னும் மோகம் கொண்டவன், தன்னிலை முற்றிலும் இழந்தவன், தன்னவளை ஆட்கொள்ளும் வேட்கையுடன் அவளின் செவ்விதழை சிறை பிடித்தான்.

தனக்கு இணை கிடைத்துவிட்ட சந்தோஷத்தில், அவளின் இதழ்கள் இன்னுமாய் விரிந்து பூரிக்க, அதில் தேன் குடித்த  நரியாக போதையாகிப் போனவன் அவளின் இதழை ஆழமாக சுவைக்க  ஆரம்பித்தான்.

இருவருமே தங்களை மறந்து வேற உலகத்தில் சஞ்சரிக்க ஆரம்பித்தனர்.  

அதே நேரம்  அவர்களிலிருந்த இடத்தை நோக்கி யாரோ வரும் காலடி  ஓசை கேட்க,  யாரோ அந்தப் பக்கம் வருகிறார்கள் என்பது அறிவுக்கு உறைத்தாலும்,  மோகம் கொண்ட அவர்களின்  மனதுக்கும் உடலுக்கும் உறைக்கவில்லை.

இருவருமே மோகத்தின் பிடியில் , தாபத்தின் உச்சத்தில் ஒருவரை ஒருவர் ஆரத் தழுவிக் கொண்டிருக்க,   தாபத்துடன் ஒருவரை ஒருவர் ஆராதித்து, ஒருவருக்குள் ஒருவர் கரைந்து கலந்திட தவித்து கொண்டிருக்க,  அதை கலைக்கும் விதமாய் வந்தது அந்த காலடி ஓசை.

அந்த ஓசை இப்பொழுது வெகு அருகில் கேட்டது. ஓசை மட்டும்  இல்லை.

“டேய் மச்சான்..... “ என்ற குரலும் வெகு அருகில் கேட்க,  அதில் முதலில் திடுக்கிட்டு  விழித்துக் கொண்டான் ராசய்யா,  

அவள் மீது படர்ந்திருந்தவன், அவளை விட்டு எழுந்து இப்பொழுது கீழ கையை ஊன்றி எழ முயன்றான்.

தன்னவனின்  தீண்டலில் உருகி கரைந்து குழைந்து  கிடந்த  பெண்ணவளோ,  அவனை விலகி செல்ல விடவில்லை.

அவன் அவளை விட்டு செல்ல முடியாமல் அவன் கையை பற்றியவள், தாபத்துடன் அவனை இழுத்து தன் மீது போட்டுக்கொண்டு அவன் கழுத்தை இறுக்கி கட்டிக்கொண்டாள்.

அதில் இன்னும் மோகம் கொண்டாலும், சூழ்நிலை புத்தியில் உறைக்க, அதோடு யாராவது பார்த்துவிட்டால் என்ற அச்சமும் சேர்ந்து கொள்ள

“யாரோ வர்றாங்க டி...” என்று அவளின் காதில் கிசுகிசுத்தான்.

அவள் காது மடலில் அவனின் மீசை உரச, இன்னுமே சிலிர்த்தவள்

“ப்ளீஸ் .. போகாத மாமா... என்னை விட்டு விலகாத மாமா... எனக்கு நீ வேணும்... “ என்று காதலும் தவிப்புமாக இதழ் தவிக்க கேட்டு வைக்க, ராசய்யாவுக்கோ அவளை விட்டு விலகவே மனம் வரவில்லை.

“டேய் மச்சான்...எங்கடா இருக்க? நீ இந்த பக்கம் வந்ததை பார்த்தேனே... “ என்று இன்னும் சத்தம் போட்டு அழைத்தவாறு அங்கு வந்து கொண்டிருந்தான் முத்துபாண்டி.

அவன் அருகில் வந்து விட்டால், இந்த வாய்க்காலுக்குல் எட்டி பார்த்து விட்டால்...?

இருவரையும் இந்த கோலத்தில் பார்க்க நேர்ந்து விடுமே... என்னதான் கணவன் மனைவி என்றாலும் தாம்பத்யம் என்பது நாலு சுவற்றுக்குள் நடக்க வேண்டியது.

அதை வெளிச்சம் போட்டு காட்ட மனம் இல்லை அவனுக்கு.

தன்னவளின்  தவிப்பை ஒதுக்கியவன், அவளின் பிடியில் இருந்து திமிறி, அவளை விட்டு எழுந்தவன், வேகமாக மேல ஏறி சென்றுவிட்டான்.

சரியாக அதே நேரம் அங்கு வந்து நின்றான் முத்துபாண்டி.

அவனை மேலும் முன்னேறி செல்லாமல் வழி மறித்தபடி நின்றிருந்தான் ராசய்யா.

“ஏன் டா கரடி... எதுக்கு மச்சான் மச்சானு என்னை ஏலம் விட்டுகிட்டே வர்ற? “என்று முறைத்தான் ராசய்யா.

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பது போல, உதட்டுக்கு  எட்டியது அதுக்கு மேல எட்டாமல் போய்விட்டதே என்ற ஏக்கம் அவன் உள்ளே.

தன்னவளின் மென்மையான பட்டு மேனியின் மெண்மையை...அவளின் பெண்மையை இன்னும் கொஞ்சம் அனுபவிக்க முடியாமல் போய்விட்டதே தன்ற தாபத்துடனான தவிப்பு அவன் உள்ளே..

வட போச்சே பீலிங்ல் இருந்தவன், முத்துபாண்டியை கொலை பண்ணும் எரிச்சலோடு முறைத்தான் ராசய்யா.

அவனோ அதை கண்டு கொள்ளாமல், உடலிலிருந்து நீர் சொட்ட சொட்ட,  வெறும் ட்ராயருடன் வெளிவந்தவனைக்  கண்டதும்

என்னடா மச்சான்?  இந்நேரத்தில குளிக்கிற? “  என்று  அதி முக்கியமான சந்தேகத்தை கேட்டவாறு மேலும் கீழுமாய் ஆராய்ந்து பார்த்தான்  முத்துபாண்டி.  

“ஏன் டா...  குளிக்கிறதுக்கு கூடவா நேரம் காலம் இருக்கு? “  என்று ராசய்யாவும் முறைக்க,

“இல்ல... முன்னெல்லாம் குளிக்கிறதுக்கே நல்ல நாள் பாத்து...  நாலு நாளைக்கு ஒரு தரம்..அதுவும் யாராவது நீ கிட்ட வந்தா,  அடிக்கிற நாத்தத்துல மயக்கம் போட்டு வுழுந்தா தானே..போனா போகுதுனு  குளிக்க போவ.

அப்படிபட்ட  ஆள் நீ... . இந்நேரத்தில் குளிச்சியே... அதுதான் ஏன் ? “  என்று யோசனையாக வாய்க்காலுக்குள் எட்டி பார்க்க முயல, மீண்டும் அவனை மறைத்தபடி   நின்று கொண்டவன்,

“எனக்கு புழுக்கமா இருந்துச்சு. அதான்  குளிச்சேன்..” என்று ராசய்யா அவன் வாயை அடைக்க முயல,

“டேய் மச்சான்... வயல்ல வேர்த்து விறுவிறுத்து வேலை செய்யறவனுக்கு என்ன புழுக்கம்?  வியர்வை வழிஞ்சாதான்டா நல்லது. அவன்தான் விவசாயி..  மறுபடியும் சேத்துல கால வச்சா திரும்பவும் வேர்க்கத்தான் போகுது. அதுக்கு ஏன் இப்பயே குளிச்ச? “ என்று விடாமல் நோண்ட,  

“டேய் பாண்டி...  ஏதோ தெரியாத்தனமா குளிச்சிட்டேன் டா...அதுக்கு  ஏன் இப்படி பஞ்சாயத்த இழுக்கிற...சரி...சரி... சீக்கிரம்  நீ வந்த வேலையை சொல்லு...” என்று  எரிச்சலுடன் அவன் பேச்சை மாற்ற முயல,

“அதானே... நான்  எதுக்கு உன்னை பார்க்க வந்தேன்? “ என்று  முத்து பாண்டியும்  தலையில் தட்டி யோசிக்க, அதில் கடுப்பானவன் முத்துபாண்டியின் முதுகில் ஓங்கி மொத்தினான் ராசய்யா.

“போடா மண்டையா... எதுக்கு வந்தனே  தெரியாத அதிமுக்கிய வேலைக்குத்தான் மச்சான் மச்சானு ஏலம் போட்டு என்னை பாதியில தொந்தரவு பண்ணினியா? “ என்று முறைத்தபடி பாண்டியின் முதுகில் மீண்டும் மொத்த,

“என்னது? பாதியில தொந்தரவு பண்ணினேனா? எதைடா தொந்தரவு பண்ணினேன்?  என்னடா சொல்ற? “  என்று பாண்டி புரியாமல் தலையை சொறிய

தான் வாய்விட்டு உளறிதை  உணர்ந்தவன், மானசீகமாக தன் தலையில் கொட்டிக்கொண்டு தன் உதட்டையும் கடித்துக்கொண்டான்...

“அதான்...புழுக்கத்துக்கு குளிச்சுகிட்டு இருந்தேன் இல்ல.  அதைத்தான் சொன்னேன்... பாதி குளிக்கையிலயே நந்தி மாதிரி நீ  வந்துட்ட...”

“ஓ..நீ அதச்சொல்றியா? குளிக்கணும் ...  அம்புட்டு தானே... சரி சரி எனக்கும்  புழுக்கமா தான் இருக்கு. வாடா...  ரெண்டு பேரும் சேர்ந்து குளிக்கலாம்...”  என்று முன்னே நடக்க முயல, ராசய்யாவுக்கோ  திக்கென்றது.

எட்டி அவன் கையை பிடித்து  இழுத்து நிறுத்தியவன்,

“அதெல்லாம் ஒன்னும்  வேண்டாம்.  நான் குளிச்சு முடிச்சுட்டேன்...  நீ வந்த வேலையை சொல்லு...”  

“அது கிடக்குது கழுதை... அது என்ன அவசரம் மச்சான்?  இந்த வெயில்ல உன்னை இப்படி தண்ணி சொட்ட சொட்ட பாத்ததும் எனக்கும் குளிக்கணும்னு ஆசை வந்துருச்சு.  

ஒரு காக்கா குளியல் போட்டுட்டு வரலாம். வாடா...”  என்று வாய்க்காலுக்குள்  இறங்க முயல, மீண்டும் அவன் கையைப் பிடித்து இழுத்து நிறுத்தினான் ராசய்யா.

“இங்க வேணாம் டா பங்கு...  இன்னும் கொஞ்ச தூரம் தள்ளிப் போகலாம்...”  என்று அவனை தள்ளிக்கொண்டு செல்ல முயல,

“இல்லடா... இங்கதான் குளிக்க  நல்லா வசதியா இருக்கும்... “ என்று பாண்டி பிடிவாதம் பிடிக்க,

“இல்லடா பாண்டி..   கொஞ்ச தூரம் போனா குளிக்க நல்லா இருக்கும். இங்கன கீழ ஒரே  சேறும் சகதியுமா  இருக்கும்...”  என்று  ராசய்யா கட்டாய படுத்த,

விடாக்கண்டனுக்கு கொடாக்கண்டனாய் பாண்டியும் பிடிவாதம் பிடித்தான்.  

“அதெல்லாம் சேறும் சகதியுமா   இருக்காது.  நான் தினமும்  வேலைய முடிச்சுட்டு இங்கனதான் குளிச்சிட்டு போவேன்.  வளவளனு பேசாமா வா மச்சான்...”  என்று ராசய்யா கை பிடித்து இழுக்க, ராசய்யாவுக்கு பக் என்றது.

இவன் கீழ இறங்கினால், பூங்கொடி குளித்துக்கொண்டு இருப்பது தெரிந்துவிடும்.

அப்புறம் இருவரும் ஒன்றாக குளித்த விசயத்தை ஊர் பூராவும் தண்டோரா போட்டு விடுவான்...” என்று அஞ்சியவன், அவனை எப்படி தடுப்பது என்று கையை பிசைந்தான்.

“டேய் மச்சான்...உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? இப்ப அடிக்கடி இங்கன ஒரு பேய் நடமாடிகிட்டு இருக்காம். அதுவும் இந்த பக்கம்தான் அடிக்கடி உலாத்துதாம். அதனால நாம இங்க குளிக்க வேண்டாம் டா... “ தடுக்க முயல,

இதுவரை அவர்களின் உரையாடலை கேட்டுக்கொண்டு தள்ளிக்குள்ளயே இருந்த பூங்கொடிக்கு, முத்துபாண்டியை சமாளிக்க தன் கணவன் தினறுவதை கண்டு சிரிப்பு பொங்கி வந்தது.

இப்பொழுது ஒரு பேய்க்கதையை வேறு எடுத்துவிட, அதில்  தன்னை மறந்து   வாயை பொத்தி சிரித்துக் கொண்டிருந்தாள்.  

கொஞ்ச நேரத்துக்கு மேல் சிரிப்பை அடக்க முடியாமல் களுக் என்று சிரித்தாள் பூங்கொடி.

அதைக்கேட்டு அதிர்ந்த முத்து பாண்டி,

“டேய் மச்சான்... யாரோ சிரிக்கிற சத்தம் கேட்டதே...”  என்ற நாலா பக்கமும் தேடிப் பார்த்தான்

“ஹா ஹா ஹா நான் தான்டா சிரிச்சேன்...”  என்று ராசய்யா சமாளிக்க முயல,

“இல்லையே...  பொம்பள புள்ள சிரிச்ச மாதிரி இருந்ததே...”  என்று  மீண்டும் தேட,

“அப்படியா? அப்படீனா கண்டிப்பா  அது அந்த மோகினி பிசாசாதான்  இருக்கும். அதுவும்  மத்தியானம் உச்சி வெய்யில் 12 மணிக்கு தான் வெளில வந்து காத்தாட குளிக்குமாம்.

நிறைய பேர் இந்த பக்கம் பாத்ததா சொன்னாங்க. அப்ப கண்டிப்பா இது அதுவா தான் இருக்கும்...”  என்று அடக்கப்பட்ட சிரிப்புடன் சொல்ல,

“அப்படியா மச்சான்... எனக்கும் அந்த பேய் பிசாச பாக்கணும்னு ரொம்ப நாள் ஆசை. ஆனாலும் தனியா பாக்க பயம்.  இன்னைக்குத்தான் துணைக்கு கூட  நீ இருக்கியே.  அந்த பிசாசை ஒரு கை பாத்து விடலாம்...”  

என்று சட்டமாக  அங்கேயே நின்று கொள்ள, ராசய்யாவோ உள்ளுக்குள் பல்லை கடித்துக் கொண்டு,  தன் தலையில் அடித்துக் கொண்டான்.

முத்து பாண்டிக்கு பேய், பிசாசு என்றால் பயம் என்று அவனுக்கு தெரியும். அதனாலயே ஒரு பேய்க்கதையை எடுத்துவிட, அவனோ அவன் அடித்த பாலை அவனுக்கே திருப்பி விட்டான்.  

“ஏன் டா மச்சான்...  தலையில அடிச்சுக்கிற? “  என்று கேட்க

“ஹ்ம்ம்ம் மோகினி பிசாச பாக்குறதுக்கு முன்னாடி இப்படித்தான் தலையில அடிச்சுக்கணும்...”  என்று எரிச்சலுடன் சொல்ல,

“அப்படினா நானும் அடிச்சுக்கிறேன்...”  என்று முத்துபாண்டியும் வேகமாக தன் தலையில் அடித்துக் கொண்டான்.  

அதைக் கண்ட பூங்கொடி இன்னும் கலகலவென்று வாய்விட்டு சிரித்தாள்.  

“டேய் மச்சான்...  இப்ப சிரிப்பு சத்தம் வேகமா கேட்குதுடா...” பயந்தவன் கால்கள் லேசாக நடுங்க ஆரம்பிக்க,

“ஹ்ம்ம்ம் அதான் சொன்னேன் இல்ல.  நீ சின்ன பையன்டா.  மோகினி பிசாச பாத்தா  பயந்து போய்டுவ... வா ஓடிடலாம்..” என்று அவன் கையைப் பிடித்து இழுத்துச் செல்ல முயல,  

“இல்லடா மச்சான்... இன்னைக்கு அந்த மோகினி பிசாசை நான் பாத்தே ஆகணும்...”  என்று பாண்டியும்  உறுதியாக சொல்ல,  அதே நேரம் ஜல் ஜல் ஜல்  என்ற ஓசை அருகில் கேட்டது.  

பூங்கொடிதான் தன் காலில் அணிந்திருந்த கொலுசை வேகமாக ஆட்டி ஓசை எழுப்பினாள்.

அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய் என்பது போல, மோகிணி பிசாசு பயத்தில் இருந்தவன், சாதாரண கொலுசு ஒலி கூட பேயின் சலங்கை சத்தமாய் கேட்டது பாண்டிக்கு.  

ராசய்யாவோ திடுக்கிட்டான்..

“இந்த கருவாச்சி இப்ப எதுக்கு கொலுசை ஆட்டி காட்டறா... எங்கப்பன் குதிருக்குள்ள இல்லைனு இவளே காட்டி கொடுத்துடுவா போல..”

என்று உள்ளுக்குள் புலம்பியவன், முத்து பாண்டி அறியாமல் திரும்பி வாய்க்காலுக்குள் எட்டி பார்த்து  அவளை பார்த்து முறைத்து வைத்தான்.

“சும்மா இருடி...” என்று உதடு அசைத்து அவளை எச்சரிக்க, அவளோ நாக்கை வெளியில் துருத்தி வவ்வே என்று அவனுக்கு அழகு காட்டி குறும்பாக கண் சிமிட்டினாள்.

அதில் சிரிப்பு வந்தாலும், அதை வெளிக்காட்டாமல், முறைத்துவிட்டு, முத்துபாண்டி பக்கம் திரும்பியவன்

“டேய் பங்கு... பாத்தியா.. கொலுசு சத்தம் கேக்குது. அப்ப பக்கத்துல வந்துடுச்சு. வாடா ஓடிடலாம்...” என்று மீண்டும் அவனை பயமுறுத்த,  

அதே நேரம் பூங்கொடி அவள் அணிந்திருந்த கண்ணாடி வளையலை ஒன்றோடு ஒன்று உரசி ஓசை எழுப்ப,

“டேய் மச்சான்... கண்ணாடி வளையல் சத்தம் கேட்குதுடா.... “ என்று முத்து பாண்டி தந்தி அடிக்க,

அடுத்து அவளோ ஊஊஊஊஊஊ என்று வாயில் சத்தமிட, முத்துபாண்டி நடுநடுங்கி  போனான்.

ஆனாலும் ராசய்யா இருக்கிற தைர்யத்தில் கெத்தாக நின்று கொண்டிருந்தான்.

“ஏய்... கேட்டியா மச்சான்.  இதுதான் மோகிணி பிசாசோட சத்தம்.  அந்த சத்தத்தை வைத்தே இன்னைக்கு நிறைய பேர காவு வாங்க போகுது. யாரு முதல்ல மாட்டினாலும் செத்தான்... “ என்று இன்னும் எக்ஸ்ட்ரா  பில்டப்  கொடுத்து விவரிக்க,

“ஆமாமா... எனக்கும்  அப்படித்தான் தோணுது...”  என்று முத்துபாண்டியும் ஆமா சாமி போட,

“அப்புறம் எதுக்குடா இங்கயே இருக்கணும். வா..ஓடிடலாம்....”  என்று முத்து பாண்டியின் கையைப் பிடித்து இழுக்க,

“டேய் மச்சான். நான் பேயை பாத்து பயந்து ஓடுவதில்  அர்த்தம் உண்டு.  நீதான் பேய கூட தூக்கி போட்டு மிதிச்சு  பந்தாடறவன் ஆச்சே...நீ எதுக்குடா பயந்து  ஓடற..? “   என்று  ராசய்யாவை சந்தேகமாக பார்த்து வைக்க,   

“ஆஹான்.. பாய்ன்ட்டை புடிச்சிட்டானே... ஒருவேளை ஓவரா பெர்பாம் பண்ணிட்டமோ? “ என்று மானசீகமாக தலையில் கொட்டிக் கொண்டவன்,

“ஹீ ஹீ ஹீ  நான் ஒருத்தனா இருந்தா  சமாளித்து விடுவேன் தான் பங்கு. நீ வேற இருக்கியா.  என்னை வேணா நான் காப்பாத்திக்குவேன்.  உனக்காக எல்லாம் என்னால அதுகூட  சண்டை போட முடியாது.

இப்ப நான் தனிக்கட்டை  வேற இல்ல. எனக்குனு என் பொண்டாட்டி இருக்கா... அவளை கண்கலங்காம பாத்துக்கிற பொறுப்பு எனக்கு இருக்கு. அதான் சொல்றேன்...  வாடா ஓடிடலாம்...”  

என்று நகர முயல, அதுவரை ராசய்யா கூட இருக்கிறான் என்ற தைர்யத்தில் கெத்தாக இருந்தவன், இப்பொழுது ராசய்யா கையை விரித்து விட, அதில் நடுநடுங்கி போனான் முத்துபாண்டி.

“அடப்பாவி மச்சான்...இதை முதல்லயே சொல்லி தொலைய மாட்டியா? நீ இருக்கிற தைர்யத்துல தான் நான் இம்புட்டு நேரம் இங்க கெத்தா நின்னு கிட்டிருக்கேன்.

நீ உன்னை மட்டும் காப்பாத்திக்கும் சுயலநவாதினு தெரிஞ்சிருந்தால் எப்பவோ எஸ் ஆகி இருப்பேனே...” என்று அழாத குறையாக ஒப்பாரி வைக்க,

“இப்பவும் ஒன்னும் கெட்டு போய்டலடா... சீக்கிரம் வா ஓடிடலாம்... “ என்று அவசரபடுத்த, அதே நேரம் ஜல் ஜல் ஜல் சத்தம் வெகு அருகில் கேட்டது. அதோடு

“ஹா ஹா ஹா ஹா .... “ என்ற பேய் சிரிப்பும் வெகு அருகில் கேட்க, அனிச்சையாக திரும்பி பார்த்த இருவரும் ஆவென்று  வாயை பிளந்தவாறு அதிர்ந்து நின்றனர்.

பாவாடையை நெஞ்சு வரைக்கும் கட்டிக்கொண்டு, தன் ஆறடி கூந்தலை முகத்துக்கு முன்னால் விரித்து தொங்க விட்டிருக்க, சற்றாய் விலகி இருந்த கூந்தலின் வழியே ஆ வென்று வாயை பிளந்து இருக்க,

அதில் பக்கவாட்டில் இரண்டு கோரை பற்கள் வேறு கொடூரமாக துருத்தி கொண்டு நிக்க, இரண்டு கையையும் விரைத்து ஆட்டியவாறு இவர்களை நோக்கி அடி எடுத்து வைக்க, அவ்வளவுதான்.

குளிக்காமலயே முத்துபாண்டி அணிந்திருந்த ட்ராயர் நனைந்திருந்தது...

கால்கள் இரண்டும் தடதவென்று தரையில் நிக்காமல் நடுங்க,  காலோடு ஒன்னுக்கு  போயிருந்தான் முத்துபாண்டி.

அதோடு நிக்காமல், அந்த பேய் அவனை நோக்கி தலையை பேய் மாதிரி ஆட்டியபடி வாயையும் ஆ வென்று விரித்து வைத்தபடி வர, அவ்வளவுதான்.

அடுத்த கணம் வுடு ஜூட் என்று அதுவரை தன்னுடன் நின்றிருந்த மச்சானை மறந்து, பின்னங்கால் பிடறியில் தெறிக்க, துண்டக் காணோம், துணியக் காணோம் என்று வேகமாக ஓடி நெல்லங்காட்டுக்குள் விழுந்தடித்து ஓடி மறைந்தான் முத்துபாண்டி.

அவன் ஓடும் வேகத்தை கண்டு ஹா ஹா ஹா என்று வாய்விட்டு குலுங்கி குலுங்கி சிரித்தாள் பூங்கொடி.

ராசய்யாவும் அவள் உடன் இணைந்து சிரித்தவன்,  அவளின் அருகில் வந்து

“பாவம் டி... இப்படியா அவனை தலை தெறிக்க ஓட விடுவ...” என்று சிரித்தான்.

“யோவ் மாமு.. நான் ஒன்னும் உன் பொண்டாட்டி இல்ல. டி போட்டு பேச .. நான் மோகிணி பிசாசு... “ என்று முன்னால் இருந்த முடியை விலக்காமல் , வாயின் ஓரத்தில் இருந்த கோர பற்களை காட்டி அவனை மிரட்ட,

“ஒஹோ... இந்த மோகிணி பிசாசு இங்க எதுக்கு வந்துச்சாம்? “ என்று நக்கலாக கேட்க,

“இந்த ஊரிலயே வாட்ட சாட்டமா, பத்து பேரை தூக்கி போட்டு மிதிக்கும் மாவீரனாய் ஒரு கன்னிப்பையன் சுத்திகிட்டிருக்கானாம்...

ரதி மாதிரி பொண்டாட்டி பக்கத்துல இருந்தும், இன்னும் ஜெய் ஆஞ்சநேயானு சொல்லிகிட்டு பொண்டாட்டி பக்கமே வராம,  வயித்துல ஈரத்துண்டை இறுக்கி கட்டிகிட்டு, தலவாணியை எடுத்து காலுக்கு நடுவுல வச்சுகிட்டு  குப்புற படுத்திக்கிறானாம்...

அப்படிப்பட்ட கன்னிப்பையனத்தான் இத்தனை நாளா தேடிகிட்டிருந்தேன். இன்னைக்கு அவன் கற்பை சூறையாட வந்திருக்கேன்...” என்று மிரட்ட, அவள் பேசிய நீண்ட வசனத்தில் வாயின் ஓரத்தில் சொருகி வைத்திருந்த இரண்டு பொரி பறந்து போனது.

முத்துபாண்டியை ஏமாற்ற என்று வாய்க்காலில் அடித்துகொண்டு வந்திருந்த பொரியில் இரண்டை எடுத்து  கோரைப்பல்லை போல சொருகிக்கொண்டு அவனை மிரட்டி இருந்தாள்.

இப்பொழுது அது பறந்து போய்விட, அதைக்கண்டு சிரித்தவன்

“நீ சரியான கேடி டி... இந்த பொரிய வச்சே பாண்டிய தலை தெறிக்க ஓட வச்சுட்டியே...” என்று சிரிக்க,

“யோவ்... கேடி இல்ல.. மோகிணி பிசாசு...” என்று முன்னால் இருந்த தலைமுடி இருபக்கமும் ஆடுமாறு தலையை ஆட்டிக்காட்ட

“அப்படியா... நல்லா இருந்த என் பொண்டாட்டி மனசை கலைக்க வந்த மோகிணி பிசாசை இப்ப என்ன பண்றேன் பார்... “ என்றவன் அடுத்த கணம் அவளை தன் கையில் அள்ளிக்கொண்டான்.

அதில் திகைத்தவள், தன் கூந்தலை விலக்கி பின்னால் தள்ளியவள்,  அடுத்த நொடி, மையலுடன் அவன் கழுத்தை கட்டிக்கொண்டு வாகாக அவன் மஞ்சத்தில் சாய்ந்து கொண்டவள்,

“என்ன மாமு பண்ணப்போற? முன்பு விட்ட ஆட்டத்தை தொடரலாமா.. ? “ என்று தன் உதட்டை நாக்கால் வருடியவள், மையலுடன் அவன் இதழை பார்க்க,

“ஓ.. ஆடலாமே... “ என்றவன் குனிந்து அருகில் இருந்த நெல்லங்காட்டில் அவளை பொத்தென்று போட்டு உருட்டிவிட்டான்.

நன்றாக விளைந்திருந்த நெற்கதிர்களின் மொலங்கு, வெரும் பாவாடையை மட்டும் கட்டிக்கொண்டிருந்தவளின் மேனியெங்கும் பட்டு அரிக்க ஆரம்பித்தது.

“ஐயோ பிச்சுக்குது மாமா... தூக்கிவிடு...” என்று கத்த,

“நல்லா பிச்சுக்கட்டும் டி. அப்பதான் உன் தலையில் ஏறி இருக்கிற பித்தம் தெளியும். சும்மா சும்மா என்னை சீண்டற இல்ல. இன்னைக்கு புல்லா இப்படியே சொறிஞ்சுகிட்டே இரு.

எத்தனை மோகிணி பிசாசு வந்தாலும் இந்த ராசய்யாகிட்ட ஒன்னும் நடக்காது. அவனா மனசு வச்சாதான் உண்டு... வரட்டா பிசாசு...” என்று  கண் சிமிட்டி சிரித்தவன், தன் ஆடையை அணிந்து கொண்டு வேலையை பார்க்க சென்று விட்டான்..

“”டேய்..கருவாயா... யானைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கும் ஒரு காலம் வரும். அப்ப வச்சுக்கறேன் உன்னை... “

என்று பல்லை கடித்து, சிரித்துக்கொண்டே செல்லும் தன் கணவனின் முதுகை வெறித்தவள்,  சொறிந்து கொண்டே வயலில் உருண்டு, புரண்டு எழுந்து வந்தாள் பாவையவள்..!

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!