என்னுயிர் கருவாச்சி-48

 


அத்தியாயம்-48

சொந்தபந்தங்களின் வரவால்  நிரம்பி வழிந்தது தணிகாசலத்தின் வீடு.  

பச்சை தென்னை மட்டையில் கீத்து முடைந்து, தெருவை அடைத்து  பந்தல் போடப்பட்டு இருக்க, பந்தலின் வாயிலில் இரண்டு பெரிய வாழை மரங்கள்  கட்டி வைக்கப்பட்டு அனைவரையும் வரவேற்றுக் கொண்டிருந்தது.  

தணிகாசலத்தின் கடைக்குட்டி மலர்க்கொடி ஆளாகி இருந்தாள்.  

அவளுக்கு சடங்கு செய்யும் நாள் இன்று.  

சிலம்பாயி க்கு உடன் பிறந்த சகோதரர்கள் யாரும் இல்லாததால்,  தாய் மாமன் சீர்  செய்ய ராசய்யா முன்வந்தான்.  

முதல் இரண்டு மகள்களுக்கு சிலம்பாயின்  ஒன்று விட்ட அண்ணன் பொறுப்பேற்றுக் கொள்ள,  இந்த முறை மலர்க்கொடி க்கு நான் தான் செய்வேன் என்று கட்டாயப்படுத்தி அவனே  பொறுப்பை ஏற்றுக் கொண்டான்.

அதன்படி வீட்டின்  தாள்வாரத்தில் நடுநாயகமாக வைக்கப்பட்டிருந்த சீர் தட்டுகளில் முதலாவதாக வீற்றிருந்தது மாமனின் சீர்.

மஞ்சள் நிறத்தில அழகிய காஞ்சிபுர  பட்டு புடவை...  மூன்று பவுனில் டாலர் வைத்த செயின். மற்றும் சோப்பு, சீப்பு, கண்ணாடி என்று வழக்கமான பொருட்கள் அடங்கியிருந்த தட்டுதான் எல்லார் கவனத்தையும் ஈர்த்தது.  

மூத்த அக்காவாக பொற்கொடியும், தன்  குடும்பத்துடன் அந்த விழாவிற்கு வந்திருந்தாலும்,  பட்டும் படாமலும் ஒட்டியும் ஒட்டாமலும் தள்ளி நின்று கொண்டாள்.  

தன் தங்கைக்காக பட்டுப்பாவாடை தாவணி மட்டுமே வாங்கி வந்திருந்தாள்.  

அதைக் கண்ட எல்லாருக்குமே மனம் நெருடியதுதான்.  

மூத்த மகள் நன்றாக வசதியாக வாழ வேண்டும் என்று மற்ற பிள்ளைகளை விட அவளுக்கு  அதிகம் செலவு செய்து திருமணத்தை நடத்தி வைத்திருக்க,  அவளோ  அவர்கள் செய்ததில் கொஞ்சமாவது பிறந்த வீட்டிற்கு  திருப்பி செய்ய வேண்டும் என்ற இங்கிதம் தெரியாதவளாய் இருந்தாள்.  

அந்த மகளின் இந்த குணத்தை கண்டு பெரியவர்களுக்கும் கஷ்டமாகத்தான்  இருந்தது.  

ஆனாலும் தன் மூத்த மகளிடம் அதை காட்டிக் கொள்ளவில்லை.  இன் முகத்துடனே மூத்த சம்பந்தி வீட்டாரே வரவேற்று உபசரித்தனர்.  

பூங்கொடிக்கு தன் கணவனை நினைத்து பெருமையாக இருந்தது.  

அவன் செய்யும் சீர்  அவன் கைக்கு மீறியது தான்.

சென்ற வாரம்தான் அவர்கள் முதன்முதலாக விவசாயம் செய்திருந்த நெல்  அறுவடைக்கு வந்திருக்க,  அதை விற்ற காசு வந்திருந்தது.  

அதை மூலதனமாக வைத்து மீண்டும் விவசாயத்திற்கு முட்டுவலி  போட வேண்டும்.  அதுபோக கொஞ்சம் தான் மிஞ்சியது.  

ஆனாலும் காசை பற்றி யோசிக்காமல் அவளின் தங்கைக்காக பார்த்து பார்த்து செய்தது கண்டு அவளுக்கு பூரிப்பாக இருந்தது.  

அவன் தாய்மாமன் சீர்  செய்வது மட்டுமல்லாமல் விழாவுக்கான எல்லா வேலைகளையும் அவன்தான் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து கொண்டிருந்தான்.  

தணிகாசலத்திற்கும் உடல் தளர்ந்து விட,  எல்லா பொறுப்பையும் தன் சின்ன மருமகனிடம் கொடுத்துவிட்டு தளர்ந்து அமர்ந்து கொண்டார்.  

தொடை வரைக்கும் மடித்து கட்டிய தும்பை பூ போன்ற வெள்ளை வேஷ்டியும்,  முழங்கை வரை மடித்து விடப்பட்ட அரக்கு கலர் சட்டையில் கம்பீரமாக வலம் வந்த  தன் கணவனையே இமைக்க மறந்து பார்த்திருந்தாள்  பூங்கொடி.  

அவளும் அவன் சட்டைக்கு பொருத்தமாக,  மாம்பள நிறத்தில் ,  அரக்கு கலர் பார்டர் வைத்த பட்டு புடவையை கட்டி இருக்க,  சடங்குக்கு வந்தவர்கள் எல்லாரும் அவர்கள் இருவரையும் தான் பாராட்டினர்.  

அதுவும் இப்பொழுது ராசய்யா தன் தோற்றத்தை மாற்றி இருக்க,  படிய வாரிய தலையும், சவரம் செய்யப்பட்ட பளிங்கு தாடையும், ட்ரிம் செய்யப்பட்ட மீசையுமாய்  இன்னும் கம்பீரமாய் தெரிந்தான் ராசய்யா.

நம்ம ராசுவா இது என்று எல்லாரும் மோவாயில் கை வைத்து வேளிப்படையாகவே அதிசயித்தனர்.

“ஆனாலும் சும்மா சொல்லப்படாது...பூங்கொடி கெட்டிக்காரிதான். தறுதலையா சுத்திக்கிட்டு இருந்தவனையும் இப்படி பட்டை தீட்டி வைரமாக்கி புட்டாளே... கெட்டிக்காரிதான்...”

என்று அங்கலாய்க்க, அவனும் மெல்லிய புன்னகையுடன் தன்னவளை  நோக்க, அவன் பார்வைக்காகவே காத்துக் கொண்டிருந்தவள்

“எப்புடி? “ என்று  தன் ஒற்றை புருவத்தை உயர்த்தி பெருமையுடன் சிரித்தாள் அவன் மனையாள்.

அவனோ செல்லமாக முறைத்துவிட்டு பார்வையை அவளிடம் இருந்து விலக்கி கொண்டு, தன் பின்னந்தலையை  கோதியவாறு மற்ற வேலையை பார்க்க சென்றான்.

****

ன் தங்கைக்கு அலங்காரம் பண்ணி,  அழைத்து வந்து மனையில் உட்கார வைத்த பூங்கொடி,  ஓரமாக நின்று கொண்டு  தன் கணவனையே ரசித்து பார்த்து கொண்டிருக்க, யாரிடமோ பேசிக்கொண்டிருந்தவன்  எதேச்சையாக திரும்பியவன் அவளின் காதலான பார்வையை எதிர்கொண்டான்.  

அந்தப் பார்வையில் இருந்த ஏதோ ஒன்று   அவனை  கட்டி இழுத்தது.  

தளைய தளைய கட்டிய பட்டுப் புடவையில், மெல்லிய சிற்றிடையில், நீண்ட பின்னலிட்டு, இருபக்கமும் மல்லிகைப்பூவை சில சரங்களாக மடித்து தொங்க விட்டு வைத்திருக்க, அது வலுக்கி கொண்டு தோள்வழியாக முன்னால் வந்து விழுந்திருக்க, கன்னங்குழியை சிரித்தபடி , அழகிய கொடி போன்று நின்றவளை அவனும் ரசனையுடன்  பார்த்து வைத்தான்.  

தன் கணவனின் ரசனையான பார்வையை கண்டு கொண்டவளுக்கு கன்னங்கள்  தானாக சிவந்து போனது.  

அவனை ஒரு மார்க்கமாக பார்த்து, தன் உதடுகளை நாக்கால் சுழற்றி  ஈரமாக்கி,  மையலுடன் கண் சிமிட்ட,  அதைக் கண்டவனுக்கோ திக் என்றது.

அத்தனை பேர்  அந்த சபையில் கூடியிருக்க,  கொஞ்சமும்  வெட்கமில்லாமல் அவனைப் பார்த்து கண்ணடித்தவளை கண்டு அவன் தான் மிரண்டு போனான்.  

“சரியான கேடி இவ... இத்தனை பேர் இருக்காங்கன்னு கொஞ்சமாவது பயம் இருக்கா? என்று உள்ளுக்குள் செல்லமாக கடிந்து கொண்டவன்,  

“சும்மா இருடி... “  என்று கண்களால் ஜாடை சொல்ல,  அவளோ உதடு குவித்து அவனுக்கு காற்றில் முத்தமிட்டவள் மீண்டும் கண்ணடிக்க,  அவன் அருகில் இருந்த பெருசு  ஒன்று,

“ஏய்யா ராசு...  உன் பொண்டாட்டிக்கு கண்ணுல தூசு  ஏதோ விழுந்திரிச்சு போல.  அடிக்கடி  கண்ணை சிமிட்டுது.  போய் பாத்துட்டு வாயா...”  என்று நமட்டு சிரிப்புடன் சிரிக்க,  அதைக்கேட்டு கொல்லென்று மற்றவர்களும் சிரித்தனர்.  

“ஆமாம் மச்சான் ...  நானும் வந்ததில் இருந்து பாத்துக்கிட்டுதான் இருக்கேன். மாமா சொல்ற மாதிரி பூங்கொடி கண்ணை அடிக்கடி சிமிட்டுதுதான்.  பெரிய  தூசியா தான் இருக்கும் போல.  போய் சீக்கிரம் எடுத்துட்டு வந்துருய்யா...  

இல்லைனா துசி கண்ணு வழியா உள்ள போய்ட போகுது. அப்புறம் அத எடுக்க நீ ரொம்பவுமே கஷ்டப்படணும்...”  என்று நக்கலாக சிரித்தான் முத்துபாண்டி.  

“டேய் பங்கு...அதெல்லாம் எனக்கு தெரியும். நீ கொஞ்சம் அடங்குடா... பட்டப்பகல்ல  பேயைப் பாத்ததும், காலோட  ஒன்னுக்கு விட்டவன்  நீ . நீ எல்லாம் என்னை கலாய்க்கிற? என்று முறைத்தான்  ராசய்யா.  

அதைக்கேட்டு அதிர்ந்து போன முத்தப்பாண்டி, எக்கி ராசய்யாவின்  கழுத்தில் கையை போட்டுக்கொண்டவன்

“அத மட்டும்  வெளியில சொல்லிடாத மச்சான். அதுவும் குறிப்பா என் பொண்டாட்டி காதுக்கு  போய்டவே கூடாது. ஏதோ நான் வீராதி வீரன்...சூராதி சூரன் னு அவ கிட்ட கொஞ்சம் பில்டப் காட்டி மிரட்டி வச்சிருக்கேன்.

 

இந்த பேய் மேட்டர் மட்டும் அவ காதுக்கு போச்சு, அம்புட்டுதான். என்னை செல்லாக்காசை போல தள்ளி வச்சிடுவா... நானும் நீயும் அப்படியா பழகினோம். இந்த மேட்டரை  இதோட விட்டுடு...”  என்று காதோரம் கிசுகிசுத்து பாவமாக கெஞ்ச,

“ஹ்ம்ம்  அது...  அந்த பயம் இருக்கட்டும்... இனிமேல் என்னை கலாய்ச்சினா,  பேய் மேட்டர் நேரா தங்கச்சி காதுக்கு போய்டும்...” என்று  அடக்கப்பட்ட சிரிப்புடன் சொல்ல, அவனும் வாயில் கையை வைத்து பொத்திக்கொண்டு பவ்யமாக தலை குனிந்து சரி என்று தலையை ஆட்டினான்...

அவர்கள் இருவரும் குசுகுசுவென்று ரகசியம் பேசினதை,  காதை தீட்டி வைத்துக்கொண்டு கேட்டுக்கொண்டு இருந்த மற்றொரு பெரியவர்,

“என்ன மாப்பிள்ளைங்களா? பொட்டச்சிங்க மாதிரி குசுகுசுனு ரகசியம் பேசறீங்க..?  என்கிட்டயும் சொல்லலாமில்ல... “  என்று ஆர்வமாக கேட்க, ராசய்யா ஏதோ சொல்ல வர, கண்ணால் சொல்ல வேண்டாம் என்று கெஞ்சியவன் ராசய்யாவை முந்தி கொண்டு,

“அது ஒன்னுமில்ல மாமா... வயசு பசங்க.. நாங்க பேச ஆயிரம் விஷயம் இருக்கும். அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு...” என்று முறைத்தபடி சமாளிக்க,

“வயசு பசங்க பேச்சா? நான் பேசாத பேச்சா? ஆடாத ஆட்டமா? ஆனா நீங்க பேசினது அந்த மாதிரி தெரியலையே.. ஏதோ பேய்...பிசாசுனு இல்ல மெதுவா கேட்டுது...” 

என்று சந்தேகத்துடன் பார்க்க, ராசய்யாவோ சிரிப்பை அடக்கி கொண்டு,  முத்துபாண்டியை பார்க்க, அவனோ உள்ளுக்குள் பல்லை கடித்தான்.

“இந்த பெருசுக்கு எல்லாம் ரிப்பேர் ஆனாலும் காது மட்டும் நல்லா தெளிவா கேக்குது...” என்று உள்ளுக்குள் புலம்பியவன்

“அதுவா மாமா... பகத்து ஊர் பாப்பமா இருக்கா இல்ல.. அவளுக்கு பேய் புடிச்சிருக்காம். அது தெரியாம நம்ம ஊர் பெரிய மனுஷன் ஒருத்தன் அடிக்கடி அந்த புள்ள வீட்டுக்கு போய்ட்டு வர்றானாம்.

அந்த புள்ளைய புடிச்சிருக்கிற பேய் எப்ப அந்த ஆள் குரவலையை கடிக்க போகுதோணு பேசிகிட்டிருந்தோம்...” என்று  அவனும் அடக்கப்பட்ட சிரிப்புடன் சீரியஸாக சொல்ல, அதைக்கேட்டு திடுக்கிட்டு போனார் அந்த பெரியவர்.

“நிஜமாலுமாய்யா சொல்ற? “ என்று அதிர்ச்சியோடு கேட்க,

“அட.. உன் மேல சத்தியம் மாமா....” என்று அவர் தலையில் கை வைத்து சத்தியம் செய்ய, அவரோ எச்சிலை கூட்டி விழுங்கினார்.

“ஆமாம்... மாமா... ஏன் உன் மூஞ்சி இப்படி வேத்து வடியுது? “ என்று  நக்கலாக கேட்க,

“ஹீ ஹீ ஹீ  புழுக்கமா இருக்கா... அதான்... நீங்க வயசு பசங்க... பேசுங்க...” என்று அவசரமாக அங்கிருந்து நழுவினார் அந்த பெரியவர்.

அவர் சென்றதும் அடக்கி வைத்திருந்த சிரிப்பை மற்றவர்கள் பார்க்காதவாறு மெல்லமாக சிரித்து  வைத்தனர் இருவரும் .

“டேய் பங்கு.. உனக்கு குசும்பு கொஞ்சம் ஓவர்தான் டா.இப்படியா மாமன தலை தெறிக்க ஓட விடுவ? “ என்று அவன் முதுகில் செல்லமாக தட்டினான் ராசய்யா.

பின்ன என்ன மச்சான்? . இந்த ஆள் வயசு என்ன? அம்பதுக்கு மேல ஆச்சு. இன்னும் இந்த ஆள்க்கு தன் பொண்டாட்டி பத்தலையாம். அடிக்கடி அந்த பாப்பம்மா வூட்டுக்கு போய்ட்டு வர்றான்.

ஊருக்குள்ள பெரிய மனுஷன் னு பேர். இவனுக்கெல்லாம். இப்படி ஒரு ஷாக் கொடுத்தாதான் அடங்குவான்...” என்று எரிச்சலுடன் பல்லை கடித்தான் முத்துபாண்டி.

ஹா ஹா ஹா அவருக்கு அம்பது வயசிலயும் பல்லு ஸ்ட்ராங்கா இருக்கு. பக்கோடா சாப்பிடறார். உனக்கு ஏன்டா பொறாமை....” என்று  ராசய்யா கிண்டல் செய்ய,

“ஹ்ம்ம் எல்லாம் ஒரு ஆற்றாமைதான்...அதானா..உன்கிட்ட போய் சொன்னேனே...நீயெல்லாம் ராத்திரி ஷோ , மேட்னி ஷோ  அது பத்தாதுனு மாலை ஷோ னு படம் ஓட்டறவன்.

மூனு நேரமும் பக்கோடா சாப்பிடும் அளவுக்கு பல்லு ஸ்ட்ராங்கா இருக்கிறவன்... உன் கிட்ட போய் சொன்னேனே...    சரி சரி... வா... போய் பந்தி பரிமாற எல்லாம் ரெடி பண்ணலாம் என்று ராசய்யாவை தள்ளிச் சென்றான் முத்துபாண்டி.

****

தன் பிறகு கிண்டலும்  கேலியுமாக அந்த விழா இனிதே முடிந்தது.

எல்லாரையும் அனுப்பி வைத்து விட்டு தங்கள் வீட்டிற்கு திரும்பி வந்திருந்தனர் ராசய்யாவும் பூங்கொடியும்.

தன் சட்டையை கழட்டியவாறு உள்ளே வந்தவனை, முன்னால் ஓடி வந்து   இறுக்க கட்டிக் கொண்டாள்  அவன் மனையாள்.  

பின் எக்கி அவன் கழுத்தை பிடித்து வளைத்து தன்னை நோக்கி இழுத்தவள் அவன்  முகமெங்கும் முத்தமழை  பொழிந்தாள்.

அவளின் இந்த அதிரடி  ஆக்சனில்  திக்குமுக்காடி போனவன் ,

“ஹே... இருடி...புது சட்டை  கசங்கிட  போகுது...” என்று அவளை  விலக்க முயல,  அவளோ  இன்னுமாய் இறுக்கக் கட்டியணைத்து

“ஐ லவ் யூ மாமா... ஐ லவ் யூ என் செல்ல புருஷா..! ஐ லவ் யூ என் க்யூட்  கருவாயா...”  என்று  காதலுடன் அவனின் கன்னத்தில் ஆசையாக அழுந்த முத்த மிட்டாள்.  

அவனோ அதில் கிறங்கி போனவன்,  வெட்கத்துடன் புன்னகைத்து,  

“என்னடி...திடீர்னு  ரொம்பவும் காதல் மழையா பொழியற... “ என்று புன்னகையோடு  பாதி சட்டையை கழட்டி இருந்தவன், மீதி சட்டையும் கழட்டி அருகில் இருந்த கட்டிலில் போட்டவன், அவனை இறுக்கமாக கட்டி அணைத்தபடி நின்றிருந்தவளின்  கொடி இடையை பற்றி தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

சட்டை இல்லாத தன்னவனின்  திண்ணிய மார்பில் முகம் புதைத்து கொண்டவள்,

“நான் ரொம்ப ரொம்ப சந்தோஷமா   இருக்கேன் மாமு...  இன்னைக்கு வந்தவங்க எல்லாரும் உங்களைத் தான் பெருமையா பேசிக்கிட்டாங்க.

ஊர் கண்ணெல்லாம் உங்க மேல தான்...அதுவும் நம்ம ஊர் பொட்டச்சிங்க  கண்ணெல்லாம் உன் மேலதான்.

அதுவும் அந்த கோதி இருக்காளே...உன்னையவே உத்து உத்து பாத்துகிட்டு இருந்தா...பக்கத்து தெரு பாப்பாத்தி உன்னை கடிச்சு திங்கறவ மாதிரி வெறச்சு வெறச்சு பார்த்துகிட்டு இருந்தா...

கல்யாணம் ஆகி ரெண்டு புள்ளைய பெத்த சரசக்கா கூட உன்னை அப்படி ஆசையா பாத்துகிட்டு இருந்தா...

கொஞ்சம்கூட நீ கல்யாணம் ஆனவன்ற இங்கிதம் இல்லாம அப்படி சைட் அடிக்கிறாளுக.... இவளுங்க கண்ணெல்லாம் கொள்ளிக்கண்ணு... இருங்க முதல்ல சுத்தி போடுறேன்...”  

என்றவள் வேகமாக சமையல் அறைக்கு ஓடியவள், அடுப்படியிலிருந்த உப்பையும், மிளகாய் ஐயும்  கொண்டு வந்து, அவன் தலையை மூன்று முறை சுற்றியவள், அவனை அதில் துப்ப சொல்லி,  பின் அடுப்பில் கொண்டு போய் போட்டு வந்தாள்...

அவளின் செயலைக்கண்டு அவனுக்கு சிரிப்புதான் வந்தது. கூடவே பெருமையாகவும் இருந்தது.

இதுவரை இந்த மாதிரி அவனை யாரும் கொண்டாடியதில்லை. இந்த விழாவில் செய்ததை விட பலமடங்கு வேலை செய்திருக்கிறான்.

அப்பொழுதெல்லாம் அதை கண்டு கொள்ள யாருமில்லை. தன்னவளின் தன் மீதான் அக்கறை அவனுக்கு கர்வத்தை கொடுத்தது.

“என் பொண்டாட்டி...” என்று பெருமையாக உள்ளுக்குள் சொல்லிக் கொண்டவன், சின்ன புன்னகையுடன்,

“என்னடி இதெல்லாம்...?  சின்ன புள்ளத்தனமா இருக்கு.... “ என்று செல்லமாக முறைத்தான்.    

“நீ சும்மா இரு மாமா...உனக்கு ஒன்னும் தெரியாது. சடங்குக்கு வந்த அம்புட்டு பேரும் உன்னத்தான் பெருமையா பேசிக்கிட்டாங்க.  

மூத்த மருமகன்  இருக்க, நீங்க எல்லாம் இழுத்து போட்டு  செஞ்சது தான் ஹைலைட். எங்கப்பா,  அம்மா முகத்துல அப்படி ஒரு சந்தோஷம்...  எனக்காக பாத்து பாத்து இவ்வளவு செஞ்ச உங்களுக்கு கைமாறா நான் என்ன செய்யப் போறேன்னு தெரியல?  

என்னை இப்பவே எடுத்துக்க மாமு...  என்கிட்ட இருக்கிறது இந்த பெண்மை மட்டும் தான். ப்ளீஸ் அதையாவது எடுத்துக்க ...”  என்று அவனை இறுக்கி  கட்டிக் கொள்ள

“ஹே லூசு... எப்ப உன் கழுத்துல மூனு முடிச்சு போட்டனோ அப்பயில இருந்து  நான் வேற நீ வேற  இல்லடி. உன் தங்கச்சிக்கு முன்னால் நின்னு  நீ செய்ய வேண்டியதைத்தான் நான் செஞ்சேன்.  

இதுக்கு போய் இம்புட்டு  உணர்ச்சிவசப்படற..? என்று அவள் நெற்றியை முட்டினான்.

“ஆனாலும் நீ  இம்புட்டு  நல்லவனா  இருக்கக்கூடாது மாமு.  எனக்கு இப்பயே உன் கூட வாழணும்... உடலால் ஒன்னு சேரனும்.  உனக்கு திகட்டத் திகட்ட சுகத்தை கொடுக்கணும்  போல இருக்கு.  என்னை எடுத்துக்க மாமா...”

என்றவள் எதையும் யோசிக்காமல், தன்  புடவையை கழட்டிப் போட்டுவிட்டு, அவனை மீண்டும்  இறுக்க கட்டிக், கொள்ள, அந்த காளையவனோ சித்தம் தடுமாறித்தான் போனான்.  

ஆனாலும் தன்னை சமாளித்துக் கொண்டவன், அவள் தலையை ஆதரவாக வருடியவாறு,

“ஏய் கருவாச்சி...கிணத்து தண்ணியை வெள்ளம் வந்தா கொண்டு போயிடப் போகுது?  நான் தான் கொஞ்சம் நாள் பொறுக்க  சொல்லி இருக்கேன் இல்ல.  அதுக்குள்ள என்ன டி  அவசரம்?

என்று செல்லமாக  கண்டித்தவன், கீழே கிடந்த புடவையை எடுத்து அவள் மேலே போட்டுவிட, அதில் பொங்கி வந்த அவள் உணர்வுகள் எல்லாம் அப்படியே அடங்கி போனது.

தன் கணவனை எண்ணி பெருமையாகவும் இருந்தது. ஆனாலும் அவனை சீண்ட எண்ணியவள்,

“நீ எல்லாம் சாமியாரா போயிருக்க வேண்டியவன் யா... தெரியாத்தனமா உன்னப்போய் கட்டிக்கிட்டு உனக்கு வாழ்க்கை கொடுத்தேன் பாரு...என்னை  அடிச்சுக்கணும்...”  என்று அவனை முறைத்தவாறு தன்  ஜாக்கெட்டின் ஹூக்கை கழட்ட ஆரம்பித்தாள்.  

“இது தான்டி கலிகாலம் ங்கிறது. பாவம் புள்ள படிக்கிறாளே... அவளுக்கு தொந்தரவு கொடுக்கக் கூடாது... ஏற்கனவே காத்தடிச்சா ஒடிஞ்சு வுழுந்திடற மாதிரி ஒல்லியா இருக்கிற கருவாச்சி...  

என் புள்ளைய எப்படி சுமப்பானு கொஞ்சம் டைம் கொடுத்தா.. ரொம்பத்தான் பேசற டி...”  என்று அவளின் நீண்ட கிளி  மூக்கை பிடித்து செல்லமாக ஆட்டினான் ராசய்யா...

“ஐயோ மாமா... அதெல்லாம் ஒரு மேட்டரே இல்ல....”

“எதெல்லாம்? “ என்றான் புருவம்  உயர்த்தி..

“அதான் மாமா... புள்ளைய சுமக்கிறது... என் அம்மாவை பார்த்த இல்ல.  கல்யாணத்தப்ப என்னை விட ஒல்லியா இருக்குமாம்.  அதெல்லாம்  நாலு  புள்ளைய அசால்ட்டா பெத்துக்கலயா?  

அதெல்லாம் நான் சமாளிச்சிடுவேன் மாமா... என் கிட்ட வாயேன்... “  என்று அவன் கைபிடித்து அவள் அருகில் இழுத்து மீண்டும் அவனை இறுக்கி கட்டிக் கொண்டாள்.

தன்னவளின் கண்ணில் தெரிந்த ஏக்கமும், அவனுக்கான அழைப்பும், அவனை ஒட்டி கட்டிகிட்டு நின்றவளின் மேனியில் தெரிந்த கதகதப்பும் இன்னுமாய் அவனை பித்தம் கொள்ள வைத்து தடுமாற செய்தது.

தன் பிடிவாதத்தை விட்டுவிடலாமா? என்று ஒரு கணம் யோசித்தான்.

ஆனாலும் அவசரப்படாதே என்று அவன் உள்ளே அபாயக்குரல் மீண்டும் ஒலிக்க, அதில் விழித்துக் கொண்டவன் தன் தலையை உலுக்கி தன்னை சமனபடுத்திக்கொண்டவன்,  

“போதும் டி. இதுதான்  இடத்த கொடுத்தா மடத்த புடிக்கிறதாம்...நீ என்னதான் என்னை மயக்க முயன்றாலும், எவ்வளவுதான் குட்டிக்கரணம் போட்டாலும் ,  நான்  சொன்னா சொன்னதுதான்.

உன் படிப்பு முடியட்டும்... அப்புறம்தான் மத்ததெல்லாம்... “  என்று உறுதியாக மறுத்தவன், தன்னை அட்டை போல ஒட்டிக் கொண்டிருந்தவளையும் தன்னிடம் இருந்து பிரித்து விலக்கி நிறுத்தினான்.

பெண்ணவளுக்கோ அவன் செய்கையில் ஏமாற்றமாக இருந்தாலும் தன்னவனை நினைத்து நெஞ்சம் பூரித்தது.

அவனுடைய ஆசையை அடக்கி கொண்டு,  தனக்காக இவ்வளவு யோசிக்கிறானே என்று எண்ணும்பொழுது அவள் கண்ணில் குளம் கட்டியது.

ஆனாலும் அதை உள்ளிழுத்துக் கொண்டவள்,

“மாமு... திஸ் இஸ் நாட் ஃபேர்.... இது சரியில்ல...இப்படியே போன, கண்டிப்பா  நான் உன்னை ரேப் பண்ணத்தான்  போறேன்...பாத்துகிட்டே  இரு...”  என்று சிணுங்கியவாறு மையலுடன் கண் சிமிட்டி சொல்ல,

“போடி வாலு... நீ அதையும் செஞ்சாலும் செய்வ... எதுக்கும் உன் கிட்ட ஜாக்கிரதையாகவே இருந்துக்கிறேன். என் கற்பை காப்பாத்திக்கணும்...” என்று சிரிக்க, அவனின் அந்த மந்தகாசமான சிரிப்பில் மயங்கித்தான் போனாள்  மங்கையவள்.

“ஐ லவ் யூ மாமா...”  என்று எக்கி, மீண்டும் அவன் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள். .

அதில் அவன் உணர்வுகள் கிளர்ந்து எழுந்தாலும், அவள் மீதான ஆசை பொங்கி பெருகினாலும், தன் ஆசைக்கு அணை போட்டு தடுத்தவன்,  

“போடி லூசு....படுத்து தூங்கு...” என்று அவளின் கன்னத்தை செல்லமாக  தட்டிவிட்டு அந்த அறையில் இருந்து வெளியேறி சென்றுவிட்டான் அவள் மணாளன்...

பாவம்...  அவன் உறுதி ரொம்ப நாளைக்கு நிலைக்காது என்று அறிந்திருக்கவில்லை அந்த பிடிவாதக்காரன்..!


Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!