என்னுயிர் கருவாச்சி-50



Hi Friends,
எனது மற்ற  நாவல்களை   ஆடியோ நாவலாக  பதிவு பண்ண, சிறந்த குரல் தேவைப்படுகிறது.  உங்களுக்கு விருப்பம் இருந்தால்  9945076179 எண்ணில்  வாட்ஸ்அப்பில் தொடர்பு கொள்ளுங்கள்..நன்றி.!

 அத்தியாயம்-50

 

இரண்டு மாதங்களுக்கு பிறகு:


மாமா... இந்த ஊக்க  போட முடியல...கொஞ்சம் போட்டு விடேன்...”  என்றவாறு தன்   புடவை முந்தானையை  ஜாக்கெட்டோடு சேர்த்து வைத்து பிடித்தபடி ராசய்யா முன்னே வந்து நின்றாள் பூங்கொடி.  

அவனும் அப்பொழுதுதான் தன் சட்டையை போட்டுக் கொண்டு  இருந்தவன், சட்டையின்  கையை முழங்கை வரை மடித்து விட்டுக் கொண்டே நிமிர்ந்து அவளைப் பார்க்க,  பட்டு வேஷ்டி சட்டையில் கம்பீரமாக  நின்றிருந்த தன் கணவனை பார்த்ததும் அப்படியே ஸ்தம்பித்து நின்றாள்.  

அவள் கண்களில் வழிந்த காதலை கண்டு கொண்டவன் முகத்தில் சிறு கர்வம் மிளிற,

“என்னடி பாக்கற? “  என்றான்  சிறு வெட்கத்துடன்.  

“எப்படி மாமா?  வர வர நீ ரொம்ப அழகாயிட்டே  வர? செம ஹேன்ட்ஸமா இருக்க...! முன்னாடி இருந்த கருப்பெல்லாம் கூட கொட்டி போய்டுச்சு... அப்படியே பளபளனு  ஹீரோ மாதிரி இருக்க...”  

என்று அன்றுதான் சேவ் செய்ய்பட்டிருந்த அவனின் பளிங்கு கன்னத்தை ஆசையாக வருடினாள்  பூங்கொடி.

அதில் வெட்கப்பட்டு மென்னகை புரிந்தவன்,

“நீ மட்டும் என்னவாம்?  இப்பல்லாம் உன்னை கருவாச்சினு  கூப்பிட முடியல டி.  பாரு...உன்  கன்னமெல்லாம் மினுமினு னு டாலடிக்குது.

உன்  உடம்பிலிருந்த கருப்பு எல்லாம் கூட உதிர்ந்து போய்டுச்சு. அப்படியே தகதகன்னு மின்றடி கருவாச்சி...”  என்று அவளை இடையோடு சேர்த்து இழுத்து,  தன்னோடு சேர்த்து இறுக்க அணைத்துக் கொண்டவன்,  அவளின் குண்டு கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான்.  

அதில் கிளர்ந்தவள், தன்னவன் கொடுத்த முத்தத்தில்  பூரித்தவள்...ஆனாலும் தன்னை மறைத்துக்கொண்டு

“ஆமாமா.. வெறும்  பேச்சு மட்டும்தான்.  இல்லைனா இப்படி  கன்னத்துல உப்பு சப்பில்லாத இந்த முத்தத்தை கொடுத்துடறது.  

ஒரு தரம் மட்டும் உன் வீர தீர பராக்கிரமத்தை காட்டிட்டு, மறுபடியும் என்னை இப்படி தள்ளி வைக்கலாமா?  இது உனக்கே நியாயமா? “  என்று செல்லமாக முறைத்து சிணுங்கினாள்.

அவள் முகமோ அவன் மஞ்சத்தில் ஒன்றிக்கொள்ள, அவள் விரல்களோ தன்னவன் சட்டை பொத்தானை திருகிக்கொண்டு இருந்தது.

*****

ன்று இயற்கையோடு ஒன்றி, அந்த கொட்டும் மழையில், சேற்றுக்குள், அனிச்சையாய் நடந்தேறிய அவர்களின் தாம்பத்தியம்... அதற்குப் பிறகு தொடரவில்லை.  

தொடர சம்மதிக்க வில்லை ராசய்யா.

அவள் ஆசையாக நெருங்கி வரும்பொழுதெல்லாம் ரெண்டு எட்டி பின்னால் எடுத்து வைத்து தள்ளி நின்று கொள்வான்.

“வேணான் டி.  அன்னைக்குத்தான் என்னை எப்படியோ மயக்கி சாய்ச்சுபுட்ட.  இனிமேல் மயங்க மாட்டான் இந்த  ராசய்யா.  

முதல்ல சொன்னதுதான் இப்பவும் எப்பவும். உன் படிப்பை முடி...” என்று  பழைய பாட்டை பாட ஆரம்பித்து விடுவான்.  

அவளோ தலையில் அடித்துக்கொண்டு அவனிடம் கெஞ்சி பார்த்தாள்...  தாடையை பிடித்துக்கொண்டு செல்லம் கொஞ்சி பார்த்தாள்.

அவன் கட்டிலில் உறங்கும்பொழுது வந்து அவன் மீது ஏறி படுத்துக்கொண்டு அவன் முகத்தில் முத்த மழை பொழிந்தாள்.

அவனோ வீராப்பாய் முறுக்கி கொண்டான். தன் பிடிவாதத்திலயே நின்றிருந்தான். ஒரு கட்டத்தில் அவனை  அதட்டி உருட்டி மிரட்டி கூட பார்த்து விட்டாள்.

அவனோ எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. எவ்வளவு புயல் மழை வெள்ளம் அடித்தாலும் உறுதியாக நிற்கும் பனைமரத்தை போல தன் முடிவில் உறுதியாக இருந்தான் அவள் கணவன்.

இத்தனைக்கும் இப்பொழுது எல்லாம் அவன் மீதே தான் உறங்குகிறாள். அவனும்   அவளை கட்டி அணைத்த படி தன் மஞ்சத்தில் புதைத்துக் கொண்டாலும்,  அதற்குமேல் முன்னேற மட்டும் அனுமதிக்கவில்லை.

இரண்டு  மாதம் சென்றிருந்த பொழுதும், தன்  பிடிவாதத்தில் உறுதியாக நின்று விட்டான்.

இப்பொழுது அவளின் கல்லூரி படிப்பு முதல் வருடத்திற்கான  பரிட்சை இன்னும் ஒரு வாரத்தில் துவங்க இருந்தது.  

அவளை எந்த வேலையும் செய்ய விடாமல், நல்ல படியாக  படிக்க சொல்லி கட்டாயப்படுத்தினான்.  

“கல்லூரி படிப்பெல்லாம்  ஒரு படிப்பே  இல்லை. இத படிச்சிட்டு நான் என்ன செய்யப்போறேன். அதோட பரிட்சையில் பாஸ் பண்றதெல்லாம் ஈசிதான்... “  என்று எத்தனையோ முறை  சொல்லி பார்த்து விட்டாள்.  

“அதெல்லாம் எனக்கு தெரியாது டி. நீ படிச்சு ஒரு டிகிரி வாங்க வேண்டும்...”  என்று முறைத்தபடி சொல்லி  விட,  அவளால் மானசீகமாக தலையில் அடித்துக் கொள்ளத்தான்  முடிந்தது.

தன் கணவன் இப்படி முறுக்கி கொண்டு போக, அடுத்த தலைவலி கோமதியால் வந்தது.

 ****

கோமதி, பூங்கொடியை பார்க்கும்பொழுதெல்லாம் அடிபட்ட கோப பார்வை பார்த்து முகத்தை திருப்பி கொண்டு போனாள்.

அவளை பார்க்கும் பொழுதெல்லாம் பூங்கொடிக்கு கொஞ்சம் குற்ற உணர்வாக இருக்கும். இதுக்கும் தன் கணவன் அவளை விரும்பியிருக்க வில்லை.

அவளாகத்தான் அவன் மீது ஆசையை வளர்த்துக்கொண்டாள் என்று புரிந்தாலும் ஏனோ அவளுக்கு கிடைக்க வேண்டிய வாழ்க்கையை அவள் தட்டி பறித்த மாதிரி ஒரு குற்ற உணர்வு.

ராசய்யாவின்  நினைப்பில் அவள் இன்னும் உருகுவது புரிய, அதற்குமேல் அவளால் தாங்க முடியாமல் தன் கணவனிடம் சொல்லி விட்டாள்.

ருநாள் இரவு, இரவு உணவை முடித்து விட்டு, வழக்கம் போல வெட்ட வெளியில் கட்டிலை போட்டு படுத்திருக்க, அடுப்படியில் எல்லாம் ஒலுங்குபடுத்திவிட்டு வந்தவள், கட்டிலில் ஏறி படுத்துக்கொண்டு அவன் மஞ்சத்தில் தலை வைத்துக் கொண்டாள்.

அவனும் அவள் தலையை வருடி கொடுக்க, அவளுக்கோ எப்படி கேட்பது என்று தயக்காமாக இருந்தது

எப்படித்தான் கண்டு கொண்டானோ? அவள் தயங்குவதை கண்டவன்

“ஹ்ம்ம் சொல்லுடி .. என்ன கேட்கணும்? இந்த  குட்டி மண்டைக்குள் என்ன குடையுது? “ என்று அவள் தலையை செல்லமாக ஆட்ட, தான் சொல்லாமலயே தன்னை புரிந்து கொண்ட கணவனை எண்ணி பூரித்தவள், எக்கி அவன் கன்னத்தில் முத்தம் இட்டாள்.

பின் அவன் மார்பில் கோலமிட்டவாறு

“மாமா...வந்து...வந்து... “ என்று இழுத்தாள்.

அதைக்கண்ட ராசய்யாவுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

எப்பொழுதும் எதற்கும் தயங்காமல் படபடவென்று மனதில் பட்டதை கொட்டுபவள் இன்று தயங்கி நிக்க,

“அதான் கிட்ட வந்துட்டியே டி... இப்படி  என் மேலயும் ஒட்டிகிட்டுத்தான் கிடக்கிற.. இன்னும்  என்ன வரணும்? சொல்ல வந்ததை சொல்லு..” என்று நக்கலாக சிரிக்க,

“எல்லாம் என் நேரம்... என்னை நீ ரொம்பவும் கெடுத்து வச்சுட்ட மாமா...” என்று செல்லமாக சிணுங்கினாள்.

“கெடுத்து வச்சுட்டனா? நானா? இது உனக்கே அடுக்குமா? “ என்று சிரிக்க,

“ஆமாம்... நீதான்... எப்பபார் உன்னையே சுத்தி வர்ற மாதிரி ஏதோ வசியம் பண்ணி வச்சிருக்க... இப்பல்லாம் உன்னை பாக்காம, உன் மேல படுக்காம தூக்கமே வரமாட்டேங்குது...

எல்லாம் உன்னால்தான்... நல்ல புள்ளையா இருந்த என்னை  இப்படி புருஷன் தாசியா மாத்திட்ட... “ என்று அவன் மீசையை பிடித்து இழுத்து சிணுங்கினாள்.

“ஹா ஹா ஹா அதை நான் சொல்லணும் டி... யாருக்கும் அடங்காத காங்கேயம் காளை மாதிரி சுத்திகிட்டு இருந்தவனை, என் கெட்டப்புல இருந்து,  எல்லாத்தையும் மாத்த வச்சவ நீ.

முன்னெல்லாம் கோயில் திண்ணையில படுத்தா அடுத்த நிமிஷம் நித்ராதேவி  தானா வந்து என்னை கட்டிக்குவா..  ஆனா  இப்பல்லாம் நீ பக்கத்துல இல்லாம தூக்கமே வரமாட்டேங்குது..

அதுவும் நீ இப்படி காலை தூக்கி போட்டாதான் தூக்கமே கிட்ட வருது...” என்றவாறு அவள் காலை இழுத்து நன்றாக அவன் மீது போட்டுக்கொண்டான்.

மறு கரமோ அவளின் இதழை வருடிக்கொடுத்தது.

அவன் சொன்னதில் கண்கள் மின்ன, பூரித்தவள்

“என் மாமு... என் செல்ல புருஷன்...” என்று மீண்டும் எக்கி அவன் கன்னத்தில் முத்தம் கொடுத்தாள்.

“ஹே...கேடி.. வேணாம் டி.. நீ இன்னைக்கு சரியில்ல... கிட்ட வந்ததில் இருந்து முத்தமா கொடுத்துகிட்டு இருக்க... என்னை உசுப்பேத்தாத... “ என்று செல்லமாக முறைத்தான்.

“ஆமா.. நான் உசுப்பேத்தினாலும் அப்படியே பொங்கி எழுந்துடுவியாக்கும்... போ மாமு.. நீ காத்து போன ட்யூப்னு எனக்கு தெரியும்..” என்று ஓரக் கண்ணால் அவனை பார்த்துக்கொண்டே அவன் ஆண்மையை சீண்ட, அவளின் தந்திரத்தை  புரிந்து கொண்டவன்

“ஹா ஹா ஹா உன் தந்திரம் எனக்கு தெரியும் டி. நீ என்னதான் உசுப்பேத்தினாலும் இந்த ராசய்யா மடங்க மாட்டான்... நான் காத்து போன ட்யூப் ஆவே இருந்துட்டு போறேன். அதை எப்ப ரொப்பி, வண்டி ஓட்டணும்னு எனக்கு தெரியும்.

நீ சொல்ல வந்த மேட்டரை சொல்லுடி... “ என்றவாறு அவளின் செவ்விதழை சுண்டி விட்டான்.

“ஸ்ஆ ஆ ஆ ஆ ..  வலிக்குது மாமா... “ என்று சிணுங்க,

“ஓ அப்படியா... அப்பனா நீ என்னை விட்டு தள்ளிப்படு... இனிமேல் இப்படி செய்ய மாட்டேன்..” என்று போக்கு காட்ட,

“ஹீ ஹீ ஹீ இல்ல.. இப்ப வலிக்கல.. முன்ன பண்ணுன மாதிரியே பண்ணு...” என்று அவன் கையை எடுத்து அவளின் இதழில் வைத்துக்கொண்டாள்.

“ஹா ஹா  ஹா சரியான கேடி டி நீ...” என்று அவளின் இதழ் ஓரம் செல்லமாக கிள்ளியவன், அவள் கன்னத்தில் செல்லமாக கடித்தான்.

அதில் பெண்ணவளின் உணர்வுகள் கிளர்ந்தாலும், அவன் பிடிவாதத்தின் முன்னால் தனக்கு எதுவும் கிடைக்காது என்று க்க பெருமூச்சு விட்டாள்.

அவளின் முகத்தில் கோலமிட்டவன்

“பூவு... எப்ப டி உன் படிப்பு முடியும்...? ” என்று கரகரத்த குரலில் கேட்க, உடனே அவள் கண்கள் மின்னின.

அப்படினா? அவனுக்கும் அவளை போலவேதான் அவஷ்தையாக இருக்குமோ? “ என்று யோசித்தவள், ஆமாம் என்று அவனின் உடல் விறைத்து நின்றதிலயே தெரிந்து போனது.

“மாமு...நான் எத்தனையோ தரம் சொல்லிட்டேன். நான் படிக்கிற பி.ஏ டிகிரி எல்லாம் ஒரு மேட்டரே இல்ல. கரெஸ்ல யே இந்த டிகிரிய வாங்கிக்கலாம்... இதுக்காக ஏன் நம்ம சந்தோஷத்தை தொலச்சுட்டு காத்திருக்கணும்..

அது பாட்டுக்கு ஒரு பக்கம் போகட்டும். இது பாட்டுக்கு ஒரு பக்கம் போகட்டும்...” என்று ஏக்கமாக சொல்ல,

“எது அது? எது இது? “ என்றான் அடக்கப்பட்ட சிரிப்புடன்.

அவன் தன்னை சீண்டுகிறான் என்று கண்டு கொண்டவள்

“அதுனா அதுதான் அது..இதுனா அதான் இது... “ என்று அடக்கப்பட்ட சிரிப்புடன் அவளும் சொல்ல,

“ஹா ஹா ஹா வாயாடி.. நல்லா சமாளிக்கிற டி..” என்று அவள் காதை பிடித்து திருக,

“ஹீ ஹீ ஹீ ராசய்யா பொண்டாட்டியாக்கும்...” என்று தன் இல்லாத மீசையை முறுக்கி விட்டு கொள்ள,

“என் கருவாச்சி... “ என்று தன்னோடு சேர்த்து இறுக்கி அணைத்து கொண்டான்.

இப்படியாக இருவரும் செல்லம் கொஞ்சி கொண்டிருக்க, பூங்கொடி சொல்ல வந்ததையே சொல்ல மறந்து போனாள்.

*****

ந்த நிலவொளியின் ஏகாந்தத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் சீண்டிக் கொண்டே நேரம் கழிய, அப்பொழுதுதான் மீண்டும் கோமதி மேட்டர் நினைவு வந்தது பூங்கொடிக்கு.

“அச்சோ... நான் சொல்ல வந்ததையே மறந்துட்டேன் மாமு... “ என்று மீண்டும் ஆரம்பிக்க,

“சொல்லு டி.. என்ன சொல்ல வந்த? “  என்று ஆர்வமாக கேட்க,

“வந்து... நீ என்ன பண்ணுவியோ..ஏது பண்ணுவியோ எனக்கு தெரியாது... இன்னும் ஒரு மாசத்தில் அந்த கோமதி புள்ளைக்கு கல்யாணம் நடக்கணும் . “என்று மொட்டையாக ஆரம்பிக்க,

அதைக்கேட்டு ஜெர்க் ஆனான் ராசய்யா.

“என்னடி சொல்ற? எதுக்காக என்னை அந்த புள்ளைய கட்டிக்க சொல்ற? “ என்று முறைக்க, அதைக்கேட்டு ஜெர்க் ஆனது பூங்கொடி முறையாயிற்று...

“டேய்  கருவாயா... உனக்கு அப்படி கூட ஒரு நெனப்பு இருக்கா? ஒரு பொண்டாட்டி கூடவே உன்னால ஒழுங்கா குடும்பம் நடத்த முடியல. இதுல இன்னொரு பொண்டாட்டி வேணுமாக்கும்..ஆளுதான் பார்க்க முரட்டு ஆள்... ஆனால் அந்த மேட்டர்ல சுத்த வேஸ்ட்...

இதுதான் பில்டிங் ஸ்ட்ராங்.. பேஸ்மென்ட் வீக் னு சொல்றது... .” என்று சந்தடி சாக்கில் அவனை போட்டு தாக்கினாள் அந்த சில்வண்டு.

“ஆஹான்...சான்ஸ் கிடச்சா போதுமே...என்னை போட்டுத்தாக்க...நீதான்டி சொன்ன.. இன்னும் ஒரு மாசத்தில் அந்த கோமதி புள்ளைக்கு கல்யாணம் நடக்கணும் னு...” என்று செல்லமாக முறைக்க,

“அவளுக்கு கல்யாணம் நடக்கணும் னு தான சொன்னேன்.. உன்னையவா கட்டிக்க சொன்னேன்...” என்று முறைக்க,

“ஐயோ... குழப்பாத டி. தெளிவா சொல்லு...” என்று அவனும் முறைக்க,

“அதாவது...கோமதி இன்னுமே உன் நினைப்பாவே இருக்கிறா போல. என்னை பாக்கிறப்ப எல்லாம் இன்னுமே முறச்சுகிட்டே இருக்கா... வர்ற மாப்பிள்ளை எல்லாம் ஏதாவது காரணத்தை சொல்லி தட்டி கழிச்சிடறாளாம்... அவ ஆத்தா என்கிட்ட சொல்லி புலம்பினாங்க.

அதனால  நீதான் அவகிட்ட பேசி, அவளை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கணும்.  ஒரு நல்ல மாப்பிள்ளையா கூட்டிகிட்டு  வந்து அவளுக்கு கட்டி வைக்கணும்.. புரிஞ்சுதா? “ என்று அவன் தலையை பிடித்து ஆட்ட,

தன் தாடையை தடவியபடியே சற்று நேரம் யோசித்தவன்

“சரி டி.. நீ கேட்டு நான் இல்லைனு சொல்ல முடியுமா... “ என்று சிரித்தான்.

****

றுநாள் கோமதியை கோவிலில் சந்தித்தவன்,  அவளை தனியாக அழைத்து சென்று நன்றாக டோஸ் விட்டான்.

“என்ன கோமதி... என் பொண்டாட்டி என்னென்னவோ சொல்றா? அதெலலம் உண்மையா? “ என்று நேரடியாக கேட்க, அவளோ அதிர்ந்து போனாள்.

“அது வந்து மாமா... “ என்று  தலை குனிந்தவாறு தடுமாற,

“தலையை தொங்க போடாமா நேரா என்னை பாத்து பேசு...  என் கண்ணை பாத்து பேசு... பொட்ட புள்ளையினாலும் யார் முன்னாலயும் தலை குனிந்து நிக்க கூடாது. தைர்யமா நிமிர்ந்து நிக்கணும். என்ன புரிஞ்சுதா..” என்று அதட்ட, அவளும் திடுக்கிட்டு நிமிர்ந்து அவனை  பார்த்தாள்.

அவள் கண்ணை ஊருவி பார்த்தவன்

“என்ன லவ்வா? “ என்று அவக் கண்ணுக்குள் ஊடுருவி பார்த்தவாறு கேட்க, அவளை மறந்து அவள் தலை ஆமாம் என்று  தானாக ஆடியது.

அதைக்கேட்டு தன் கை முஷ்டியை இறுக்கியவன்,

“அடிச்சனா பல்லு கழன்றும்...  இந்த வயசுல  வருவதெல்லாம் காதலே இல்லை... அது ஒரு கவர்ச்சி...ஈர்ப்பு. வயசு கோளாறு...  அவ்வளவுதான்.  எல்லாம் இந்த வீணாப்போன  சினிமா  படத்தை பாத்து கேட்டுபோறது.

இந்த வயசுல, வாட்ட சாட்டமா இருக்கிற யாரை பாத்தாலும் மனசு தடுமாறும்தான். அதைப்போய் காதல் னு நினச்சுகிட்டு, இப்ப உனக்கு  காதல் தோல்வினு  சோக கீதம் பாடாத.  உனக்கு என்னைவிட நல்ல  மாப்பிள்ளை கிடைப்பான்.  

உன்னை நல்லா பாத்துக்குவான்... அப்படி ஒரு மாப்பிள்ளையை கொண்டு வந்து நிறுத்துவது என் பொறுப்பு.. ஒழுங்கா அவன கல்யாணம்  பண்ணிக்கிட்டு குடும்பம் நடத்து.

இன்னொரு தரம் உன் மூஞ்சிய தொங்க போட்டுகிட்டு பாத்தேன்.. அவ்வளவுதான்... எனன புரிஞ்சுதா? “   

என்று அதட்டலுடனே எடுத்துச் சொல்ல, அவன் அதட்டலில் மிரண்டவள்  ஒரு வழியாக சம்மதித்து சரி யென்று  தலையை ஆட்டி வைத்தாள்.  

அடுத்து ராசய்யா சில பேரிடம் மாப்பிள்ளை இருந்தால் சொல்லச் சொல்லி,  சொல்லி வச்சிருக்க,  அப்படி வந்ததுதான் கதிரின் ஜாதகம்.

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!