நிலவே என்னிடம் நெருங்காதே-68

 


அத்தியாயம்-68

மெல்ல இமைகளை திறந்து விழிக்க முயன்றாள் சாந்தினி.. ஆனால் அது என்னவோ பிரியாமல் அடம் பிடித்தது... தலையை அசைக்க முயல , தலையும் அசைக்க முடியாமல் ரொம்பவுமே பாரமாக இருந்தது...

அப்பொழுதுதான் அவள் படுத்திருப்பது எப்பொழுதும் அவள் உறங்கும் சொகுசு மெத்தை இல்லை என்பது உரைத்தது...

உடனே அவள் மூளை விழித்து கொள்ள ஆரம்பித்தது.. நான் எங்கே இருக்கிறேன் என்று அவசரமாக ஆராய இப்பொழுது அவள் இமைகளும் அவளுக்கு கட்டுபட்டு மெல்ல திறக்க ஆரம்பித்தன..

அதில் தெரிந்த கொஞ்சம் வெளிச்சத்தில் சுற்றுபுறத்தை ஆராய்ந்தாள்...

அப்பொழுதுதான் அவளை விட்டு சற்று தள்ளி ஒருவன் அமர்ந்திருப்பது தெரிந்தது... உடனே திக் என்றது பெண்ணவளுக்கு..

“யார் இவன்? என் பெட்ரூம் க்குள் என்ன பண்ணுகிறான்..? அதுவும் இவ்வளவு நெருக்கமாக அமர்ந்து இருக்கிறானே..! “ என்று திடுக்கிட்டவள் அவசரமாக அந்த கொஞ்ச வெளிச்சத்தில் அருகில் அமர்ந்து இருந்தவனை உற்று பார்த்தாள்..

அவன் முகத்தை கண்டதும் இன்னுமாய் அதிர்ந்து போனாள்...

அவள் உதடுகள் அவளையும் மீறி மெல்ல முனுமுனுத்தன... அர்ஜுன்.... !

“இவன் எப்படி இங்கே ? என்ன நடக்கிறது? “ என்று அவசரமாக ஆராய்ந்தாள்..

அதே நேரம் கடைசியாக அவள் அதிரதனை சந்தித்து பேசியது மெல்ல புரிந்தது..

அவனுக்கு திருமணம் ஆகிவிட்டது என்ற பெரிய இடியை இறக்கியதும் அதைவிட பெரிய இடியாக அவர்கள் இருவரும் காதலிக்கவே இல்லை என்று அணுகுண்டை தூக்கி போட்டதும் நினைவு வந்தது..

அத்தோடு இந்த அர்ஜுன் அவளை காதலிப்பதாக சொல்லி அவனை திருமணம் செய்து கொள்ள சொல்லி அறிவுறுத்த அவள் கோபமாக அவனை திட்டிவிட்டு அந்த ஹோட்டலை விட்டு வெளிவந்தது நினைவு வந்தது...

கோபத்தில் வெளிவந்தவள் அதே கோபத்தோடு சாலையை கடந்ததும் நினைவு வந்தது.. ஆனால் அதற்கு பிறகு எதுவும் நினைவு வரவில்லை..  அப்படி என்றால் எனக்கு என்னவோ ஆகிவிட்டதா?  என்று அவசரமாக யோசிக்க அப்பொழுதுதான் அவள் உடலில் இருந்த வலி புரிந்தது..

அவள் காலை அசைக்க முடியவில்லை.. கூடவே தலையிலும் பாரமாக எதையோ வைத்த அழுத்துவதை போல விண்ணென்று வலித்தது..  

அதற்குமேல் எதுவும் யோசிக்க முடியாமல் போக எதிரில் அமர்ந்திருந்தவனை ஓரக்கண்ணால் பார்த்தவாறு இருக்க அதேநேரம் அந்த கதவை திறந்துகொண்டு உள்ளே வந்தான்.. அவன்..  அதிரதன்..  

இத்தனை நாட்களாக யாரை காதலிப்பதாக எண்ணியிருந்தாளோ யாருடன் தன் எதிர்காலத்தை பிணைத்து கொள்ள திட்டமிட்டிருந்தாளோ அதே அதிரதன்..

அவனைக் கண்டதும் எப்பொழுதும் வரும் ஒரு உற்சாகம் துள்ளல் இப்பொழுது இல்லை.. அவன் இப்பொழுது வேற ஒருத்திக்கு  சொந்தமானவன்..  

வேற ஒருத்தியின் கணவன் என்பது உரைக்க ஒரு கசந்த புன்னகை அவள் இதழில் தவழ்ந்தது.. அவனைப் பார்க்காமல் பார்க்க பிடிக்காமல் இமைகளை மூடிக்கொண்டாள்..

அதேநேரம் மீண்டும் கதவு திறக்கும் ஓசையும் வேறு யாரோ உள்ளே வருவதும் புரிந்தது.. ஏனோ யாரையும் பார்க்க பிடிக்காமல் கண்ணை இறுக்க மூடிக் கொண்டாள்.. ஆனால் காதுகளை மட்டும் தீட்டி வைத்துக் கொண்டு அங்கே நடைபெறும் உரையாடலை கவனிக்க ஆரம்பித்தாள்..  

“இப்ப சதுவுக்கு எப்படி இருக்கிறது ப்ரோ..? ஏதாவது முன்னேற்றம் தெரிந்ததா? கண் விழித்தாளா? “ என்றது ஒரு இனிமையான பெண் குரல்...

அந்த குரலை இதுவரை அவள் கேட்டதில்லை... இப்பொழுது அவளையும் மீறி கொஞ்சமாய் ஆர்வம் வந்திருக்க, மெல்ல இமைகளை திறந்து அந்த பெண்ணவளை காண முயன்றாள்...

நல்ல உயரமாய் எந்த ஒரு ஒப்பனையும் இல்லாமல் ஆனால் பால்நிலா போல பளிச்சிட்ட முகமாய் கண்களில் ஒரு கனிவுடன் தோற்றத்தில் ஒரு நிமிர்வுடன்  நிற்பதில் கூட ஒரு ஆளுமையுடன் அதிரதன் அருகில் ஒட்டி நின்றிருந்தாள் அந்த குரலுக்கு சொந்தக்காரி...

அவளை பார்த்தவுடனே புரிந்து விட்டது இவள் தான்,  முன்பு தன் மனம் கவர்ந்தவனாக எண்ணி இருந்தவனின் மனம் கவர்ந்த காதல் மனைவி என்று...

அவசரமாக இருவரையும் ஒப்பிட்டு பார்த்தாள்..  

இருவருமே ஜாடிக்கேத்த மூடியாக அவ்வளவு பொருத்தமாக இருந்தனர்.. அந்த பெண்ணவள் இடத்தில் தன்னை வைத்துப் பார்க்க,  அப்பொழுதுதான் இருவருக்குமான வித்தியாசம் புரிந்தது..

அவன் சொன்னது போல் நான் அவனுக்கு பொருத்தமானவள் இல்லை.. அந்த ஜமீனுக்கு மருமகளாக தகுதி எனக்கில்லை.. “ என்று மீண்டுமாய் உள்ளுக்குள் கசந்து வழிந்தது..

அதே நேரம் நிலா விசாரித்ததும் அதற்கு அர்ஜுன் பதில் சொல்லிக் கொண்டிருந்தான்..

“இன்னும் இல்லை சிஸ்டர்.. எனக்கு ரொம்பவும் பயமாக இருக்கிறது.. அந்த ஆக்சிடென்ட் நடந்து இன்றோடு ஒரு வாரம் முடிந்து விட்டது.. இன்னும் கொஞ்சம் கூட நினைவு திரும்பாமல் இருக்கிறாள்.. எங்கே இப்படியே இருந்து விடுவாளோ என்று பயமாக இருக்கிறது.. “  என்றான் முகத்தில் கவலையுடனும் அதற்கு மேலாய் வேதனையுடனும்..

அவன் தோளைத் தொட்டு அழுத்திய அதிரதன்

“கவலைப்படாதீங்க அர்ஜுன்... சதுக்கு எதுவும் ஆகிவிடாது.. கண்டிப்பாக அவள் குணம் ஆகிவிடுவாள்..  எவ்வளவு பெரிய ஆக்சிடென்ட் அது.. அதிலிருந்து இவள் உயிர் தப்பியதே பெரிய விஷயம்.. அப்படியும்  தப்பி இருக்கிறாள்  என்றால் கண்டிப்பாக அவளுக்கு நீண்ட ஆயுள்தான்..  

கண்டிப்பாக சது மீண்டு வந்து உங்களுடன் சந்தோசமாக வாழ்வாள்..  

சே.. எல்லாம் என்னுடைய முட்டாள்தனத்தால் இவ்வளவு தூரம் ஆகிவிட்டது... அவள் கோபமாக வெளியில் செல்லவும் நானும் அவளை பின் தொடர்ந்து சென்றிருக்கவேண்டும்..

அவளை அப்படியே விடவும் என் மீது இருந்த கோபத்தில் சாலையில் வேகமாக வரும் வண்டிகளை கவனிக்காமல் கிராஸ் பண்ணி விட்டாள்..  அவள் க்ராஸ் பண்ணிய நேரம் வேகமாக வந்த கார் தூக்கி விசிறி விட்டது

நல்லவேளையாக நான் அங்கே இருந்ததாள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க முடிந்தது.. எல்லாம் என்னால் தான்..  ஆரம்பத்திலிருந்தே அவளுக்கு கஷ்டத்தை கொடுத்து விட்டேன்..”  என்று முகம் இறுக வேதனை பட்டான்..

அவன் வேதனையை கண்ட நிலாவோ அதை தாங்க முடியாமல்

“கவலைப்படாதீங்க ரதன்.. நடந்ததை மறந்து விடுங்கள்.. நடந்தது எதையும் மாற்ற முடியாது.. இனி நடப்பதை பார்க்கலாம்..  

நம்ம சதுக்கு எதுவும் ஆகாது.. அவளின் நல்ல மனதிற்கு குழந்தைத்தனமான குணத்திற்கு கண்டிப்பாக அவள் மீண்டு வந்து விடுவாள்.. “  

என்று தன் கணவனின் கையை பிடித்து அழுத்தி அவனுக்கு ஆறுதல் சொன்னாள் அவன் மனைவி..

இதையெல்லாம் ஓர விழியால் பார்த்துக்கொண்டிருந்தவள்  அந்த நிலையிலும் திகைத்துத்தான் போனாள்..

தன் கணவன் விரும்பியவள் என்று தெரிந்தும் என் மீது வெறுப்பை காட்டாமல் எனக்காக இவ்வளவு அக்கறையாக பேசுகிறாளே!  கூடவே அவள் கணவன் வருந்துவது பிடிக்காமல் அவனை சமாதானப்படுத்திய அவளின் அவன் மீதான நேசமும் புரிந்தது..

இதைத்தானே அதிரதன் சொன்னான்.. உண்மையான நேசம்..!  உண்மையான காதல்..!  என்று.. அப்படி என்றால் நான் காதலிக்கவே இல்லைதான் என்று மீண்டும் ஒரு கசந்த புன்னகையை தவழ விட்டாள் சாந்தினி...

“டாக்டர் வந்தாரா?  என்ன சொன்னார் ப்ரோ? “  என்று அர்ஜுனிடம் விசாரித்தாள் நிலா..

“சீக்கிரம் சரியாகி விடுவாள் என்றுதான் சொல்கிறார்கள் சிஸ்டர்.. ஆனால் பட்டாம்பூச்சியாய் சுற்றி வந்தவளை இப்படி படுக்கையில் துவண்ட கொடியாய் வாடிய மலராய் கிடப்பதை என்னால் காணமுடியவில்லை.. “ என தன் முகத்தை கையால் பொத்திக்கொண்டு குலுங்க ஆரம்பித்தான் அர்ஜுன்...  

உடனே அவன் அருகில் நெருங்கி வந்து அவனை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு அவன் முதுகை ஆதரவாக வருடிக் கொடுத்தான் அதிரதன்..  

“கவலைப்படாதீங்க அர்ஜுன்... நீங்கள் சது மேல வைத்திருக்கும் நேசம் உண்மையானது.. அந்த நேசமே அவளை காப்பாற்றி உங்களிடம் கொண்டு வந்து சேர்ந்து விடும்.

நீங்கள்தான் இப்பொழுது தைரியமாக இருக்க வேண்டும்... அப்புறம் சதுவுக்கு ஒரு கால் ரொம்பவும் அடிபட்டு விட்டதால் அதை எடுக்கும்படி ஆயிற்று.. இனிமேல் அவளால் நடக்க முடியாது என்று டாக்டர் சொல்லிவிட்டார்..

இந்த நிலையிலும் நீங்கள் அவளை நேசிக்கிறீர்களா?”   என்றான் அதிரதன் கவலையோடு..

“கண்டிப்பா அர்ஜுன்.. இப்பொழுதுதான்  நான் அவளை அதிகமாக நேசிக்கிறேன்.. அவளை நடக்கவிடாமல் என் கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொள்வேன்..

கிட்டதட்ட நான்கு வருடங்களாக அவளை நான் காதலித்து வருகிறேன்..  அவளுக்காகவே காத்துக்கொண்டிருக்கிறேன்.. அவள் என்னை திரும்பிப் பார்க்காவிட்டாலும் அவள் சந்தோசமாக இருக்கிறாள் என்று தூரத்திலிருந்து பார்த்து ரசித்திருக்கிறேன்..

அப்படிப்பட்ட எனக்கு அவளை பக்கத்திலேயே வைத்து பார்த்துக்கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தால் அதுவே நான் செய்த பாக்கியம் என்றான் மகிழ்ந்து போய்...  

அதைக்கேட்டதும் சாந்தினிக்கு அதிர்ச்சியாக இருந்தது..

முதலில் தனக்கு கால் இல்லை என்பதை அவளால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.. மெல்ல தன் காலை அசைத்து பார்க்க அப்பொழுதுதான் வித்தியாசம் தெரிந்தது.. ஒருகால் இல்லாதது புரிந்தது..

உடனே அவளுக்கு நெஞ்சை அடைத்தது.. எப்படி எல்லாம் நடனமாடியிருக்கிறாள்...எவ்வளவு ஒயிலாக நடந்திருக்கிறாள்..

இன்று அதில் ஒரு கால் இல்லை.. இனிமேல் முன்பு போல நடக்க முடியாது..ஆட முடியாது.. ஓட முடியாது என உரைக்க அவளுக்கு தொண்டையை அடைத்துக் கொண்டு வந்தது..

அதேநேரம் அர்ஜுன் பேசிய அந்த வார்த்தைகள் நினைவு வந்தது..

இந்த நிலையிலும் தன்னை நேசிப்பதாக சொல்லும் அவனை நினைத்து ஆச்சரியமாக இருந்தது..

மெல்ல இமை திறந்து மீண்டும் அவனை ஓரப் பார்வையால் பார்க்க,  ஒரு வாரமாக சரியாக உறக்கம் இல்லாமல் தலைமுடியெல்லாம் கலைந்து போய் முகத்தில் தாடியுடன் கண்கள் உள்ளே போய் ரொம்பவுமே வேதனைப்பட்டு அடிபட்டவனாய் அமர்ந்திருந்தான்..  

இவளின் நிலையை கண்டு அவன் ரொம்பவும் பாதிப்படைந்து இருப்பது புரிந்தது.. அதே நேரம் அதிரதனை பார்க்க அவனிடம் கவலை தெரிந்தாலும் அர்ஜுன் அளவுக்கு அவன்  உருகி விடவில்லை..

ஏதோ தெரிந்தவருக்கு அடிபட்டதை போல இயல்பாகத்தான் இருந்தான்..

“அப்படி என்றால் அர்ஜுன் தான் என்னை உண்மையாக காதலிக்கிறானா? “  என்று ஆராய பெங்களூரில் பணியாற்றிய பொழுது முதன்முதலாக அவன் தன்னிடம் தயங்கி தயங்கி வந்து அவனை அறிமுகப்படுத்திக் கொண்டதும் அடிக்கடி அவளருகில் வந்து ஏதோ பேச முயல்வதும் நினைவு வந்தது...

அதன்பின் அவள் சென்னைக்கு மாற்றல் ஆகி வந்த பிறகு அடுத்த மாதத்திலேயே அவனும் மாற்றலாகி வந்தது எல்லாம் நினைவு வந்தது..

ஆனால் அவள் தான் இவனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை..

ஒரு முறை கண்களில் வழியும் காதலுடன் ஒற்றை ரோஜாவை நீட்டி அவன் அவள் காதலை யாசித்த பொழுது அவளோ அவனை ஒரு கேவலமான பார்வை பார்த்து அதை நிராகரித்து விட்டாள்...

ஆனாலும் அவன் மனமுடைந்து போகாமல் அவளையேதான் பின்பற்றி கொண்டு இருந்தான் என்பதும் அவளுக்கும் தெரிந்து தான் இருந்தது..

அவள் எங்கு சென்றாலும் அவனும் வந்துவிடுவான்.. மறைமுகமாக அவளை பார்த்து ரசித்து கொண்டிருப்பான்... அதுவும் அவள் அதிரதன் உடன் சுற்றியதை எல்லாம் அவனும் பார்த்திருக்கிறான்..

“அப்படி இருக்க என்னை எப்படி இன்னும் காதலிக்கிறான்.. ? என்று ஆச்சர்யமாக இருந்தது..

அப்பொழுதுதான் உண்மை காதலின் மகத்துவம் அவளுக்கு புரிந்தது... காதல் மனதை பார்த்து வருவது.. அழகையோ செல்வ வளத்தையோ பார்த்து வருவதில்லை...

இன்று தன்னிடம் அழகும் இல்லை. அவன் உடன் இணையாக நிற்க கூட உடல் தகுதியும் இல்லை.. இந்த நிலையிலும் தனக்காக ஏங்கி தவிப்பனை, தன்னை காப்பாற்றி விட துடிப்பவனை  எண்ணுகையில் பெருமையாக இருந்தது...

இவனை ஏளனமாக துச்சமாக நினைத்து தள்ளி வைத்து விட்டமே என்று வேதனையாக இருந்தது..

அதே நேரம் அவள் பெற்றோர்களின் நினைவு வந்தது.. அவர்களும் காதல் திருமணம் செய்தவர்கள் தான்.. அவள் தந்தை அவள் அன்னையை முதிர் கன்னியாய் கண்டு காதல் கொண்டு கட்டாயபடுத்தி மணந்தார் என்பது அவளுக்கு தெரியும்...

அங்கே அழகை விட, உடல் கவர்ச்சியை விட மனம் விருப்பமும் இரு உள்ளங்களின் நேசம் மட்டுமே பிராதனமாய் இருந்தது இப்பொழுது புரிந்தது..  

அவள் அன்னை அடிக்கடி சொல்லும் வாக்கியம்..

“நாம் விரும்புவர்களை விட நம்மை விரும்புவர்களை ஏற்று கொண்டால் நம் வாழ்வு சிறப்பாக அமையும்..அப்படி பட்டவர்கள் நேசம் விலை மதிக்க முடியாது சது..

உன் அப்பா அதுபோலத்தான்..என்னை உயிராய் காதலித்தார்..நான் மறுத்தும் என்னையே தொடர்ந்து வந்து என் மனதை மாற்றி என்னை மணந்து கொண்டார்.. இன்று வரை என்னை மகாராணியாய் பார்த்து கொள்கிறார்..

உனக்கும் அதுமாதிரி ஒரு கணவன் வரவேண்டும்.. உன்னை மட்டுமாய் நேசிப்பவனாய் வரவேண்டும்..”  என்று அடிக்கடி சொல்வார்...

அது இப்பொழுது நினைவு வர கூடவே அதுவரை தெரியாத பெரிதாக கண்டு கொள்ளாத அவள் பெற்றோர்களின் மறைவு இப்பொழுது மனதில் அழுத்தி கொண்டு வர, அவளையும் மீறி கேவல் வெளிவந்துவிட்டது...

அதுவரை  நினைவு திரும்பி இருந்தாலும் கண்ணை மூடி கொண்டிருந்தவளுக்கு உள்ளே இருந்த அழுத்தத்தால் அது கேவலாக வெடித்து கொண்டு வெளி வந்திருக்க அந்த சத்தத்தில் திடுக்கிட்ட அர்ஜுன் வேகமாக எழுந்து அவள் அருகில் வந்தான்...

அதே நேரம் அவளும் கண் திறந்திருப்பதை கண்டுகொண்டவனுக்கு  கோடி கோடியாய் பூக்களை கொட்டியது போல முகம் மலர, அடுத்த நொடி அவள் முகத்தை அப்படியே கையில் ஏந்திக் கொண்டு அவள் முகம் எங்கும் முத்தமழை பொழிந்தான்..  

அவன் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்து அதில் இரண்டு சொட்டுகள் அவள் கன்னத்தில் விழுந்தது..  

அவர் தனக்காக தன் நிலை கண்டு எவ்வளவு வேதனைப் பட்டிருக்கிறான் என்பது அவன் கொடுத்த ஒவ்வொரு முத்தத்திலும் அவளுக்கு புரிந்தது..

அவனின் நேசத்தை அவன் பாசத்தை தன் மீது கொண்டிருக்கும் காதலை ஒவ்வொரு முத்தத்திலும் வெளிப்படுத்தினான்.. அவனின் கடல் அளவு காதலை அவன் கன்னத்தில் வழிந்த கண்ணீராய் அவளுக்கு படம் பிடித்து காட்டினான்..

பெண்ணவளோ ரொம்பவும் மகிழ்ந்து போய் தன் இமை மூடி அதை,அவன் நேசத்தை,  அவன் பாசத்தை,  அவன் காதலை, அவன் முத்தத்தை  ரசித்திருந்தாள்..

அவன் வேதனை எல்லாம் தீரும் வரை அவளை முத்தத்தால் குளிப்பாட்டி தீர்த்தவன் உள்ளே அடித்துக் கொண்டிருப்பது எல்லாம் வெளி வந்து விட, அப்பொழுதுதான் அவனுக்கு சூழ்நிலை புரிந்தது..

அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பதும் உரைக்க,  உடனே வேகமாக அவள் தலையை படுக்கையில் வைத்தவன் அவளை நேராக பார்க்க தயங்கி எங்கோ பார்த்தவன்  

“ஐ... ஐ.. ஐம் சாரி சது.... சா.. சாந்தினி..... ஏதோ உணர்ச்சி வசப்பட்டு ஒரு வேகத்தில்..... ஐம் சாரி... "என்றான் வேதனையுடன்...

அதுவரை இமை மூடி இருந்தவள் மெல்ல விழி திறந்து அவனை பார்த்தவள்  

"இட்ஸ் ஒகே... கட்டிக்க போற பொண்டாட்டிதான.. கிஸ் பண்ணினால் தப்பில்லை... " என்றாள் மெல்ல புன்னகைத்தவாறு..

அதை கேட்டு திகைத்தவன் அவள் சொன்னதன் அர்த்தம் புரிய பெரிதாக மகிழ்ந்து போய் அவளை ஆச்சர்யமாய் கேள்வியாக பார்க்க, அவளோ ஆமாம் என்று மெல்ல தன் இமை சாய்த்து சொன்னவள்

“நீங்கள் பேசி கொண்டிருந்ததை எல்லாம் நானும் கேட்டு கொண்டிருந்தேன்... உங்கள் நேசம் இப்பொழுது தான் புரிந்தது.. என்னை மன்னித்து விடுங்கள்.. உங்களின் உண்மையான அன்பை,  காதலை புரிந்து கொள்ளாமல் போய்விட்டேன்...

உங்கள் காதலை நிராகரித்து உங்களை ரொம்பவுமே காய படுத்திவிட்டேன்.. அத்தூவை காதலிப்பதாக நானே ஒரு மாயையை உருவாக்கி கொண்டேன்.. ஐம் சாரி அர்ஜுன்.. " என்றாள் குரம் கம்ம...  

“அச்சோ..என்னது இது சது...  நீ உன்னை அறியாமல்தான் செய்தாய் என்று  எனக்கும் தெரியும் மா.. அதனால்தான் உனக்கு தெளிவு வரும்வரை காத்திருந்தேன்.. அதற்குள் இப்படி ஆகிவிட்டது.. " என்றான் வேதனையுடன்..

அவளும் அவன் முன் உச்சி முடியை செல்லமாக கலைத்து

“இதுவும் நல்லதுக்குத்தான் அஜுன்.. இப்பொழுது தான் உண்மையான மனிதர்களை புரிந்து கொள்ள முடிந்தது..

பணத்தை கௌரவத்தை பெரிதாக எண்ணி இருந்த எனக்கு இந்த அடி தேவைதான்.. இப்பொழுதுதான் உண்மையான நேசத்தையும் அதன் வலிமையும் புரிந்து கொண்டேன்... " என்றவள் பார்வை இப்பொழுது ஜோடியாக அருகருகில் நின்றிருந்த அதிரதன் மற்றும் நிலாவின் பக்கம் சென்றது..

அவர்களை தன் பார்வையால் தன் அருகில் அழைத்தாள்..

அவர்களும் கொஞ்சம்  வேதனையும் அவள் விழித்து விட்டாள் என்ற சந்தோஷமுமாய் அவள் அருகில் வந்தனர்..

அவளோ நிலாவைப் பார்த்தவள்

“ரொம்ப தேங்க்ஸ் நிலா... உன் புருஷனை நன்றாக புரிந்து வைத்திருக்கிறாய்... கூடவே எங்களுக்குள் இருப்பது காதல் இல்லை என்பதையும் எங்களுக்கு புரிய வைத்து விட்டாய்..

எனக்கும் என் மனதை தெளிய வைத்து இருக்கிறாய்.. நீங்கள் இரண்டு பேரும் தான் பொருத்தமான ஜோடி.. கூடவே என் மீது இவ்வளவு அக்கறையாக இருப்பதற்கும் ரொம்ப நன்றி... “  என்று தழுதழுத்தாள் சாந்தினி..

நிலாவோ புன்னகைத்தவளாய் அவளை கட்டிக் கொண்டு அவளுக்கு ஆறுதல் சொன்னாள்.... 

(இன்னும் இரண்டு அத்தியாயத்தில் இந்த கதை நிறைவு பெறும்..! ) 

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!