நிலவே என்னிடம் நெருங்காதே-69(Pre-Final)

 


அத்தியாயம்-69

ஒரு மாதத்திற்கு பிறகு:

அந்த திருமண மண்டபம் களை கட்டியிருந்தது..

அந்த மேடையில் மணமகனாய் முகம் நிறைந்த மகிழ்ச்சியுடன் நின்றிருந்தான் அர்ஜுன்..

அவனருகில் ஒரு ஊன்று கோலை வைத்துக் கொண்டு முகத்தில் புன்னகையுடன் மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் நின்றிருந்தாள் சாந்தினி..

அவள் கால் வலிக்கும்போதெல்லாம் அவளைத் தாங்கிக் கொண்டவன் அவ்வப்பொழுது அவளை இருக்கையில் அமர வைத்து சற்று ஓய்வு எடுத்த பிறகு அவளை மெல்ல பற்றி  எழுப்பி மீண்டும் நிற்க வைத்தான்..

அதை பார்த்த அதிரதனுக்கு ரொம்பவுமே சந்தோஷமாக இருந்தது..

தன்னால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் எதிர்காலம் நேர் ஆகிவிட்டது என்ற நிம்மதி வந்து சேர்ந்தது.. கூடவே அந்த நிம்மதியை கொடுத்த தன் மனையாளை அவன் கண்கள் தேடின..

அந்த மண்டபத்தில் சுறுசுறுப்பாக இங்குமங்கும் ஓடிக் கொண்டிருந்தாள் நிலா..

சாந்தினி விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் இருந்த பொழுது அர்ஜுன் உடன் இணைந்து அவளை கவனமாக பார்த்து கொண்டாள் நிலா..

அடுத்த வாரத்திலேயே டிஸ்சார்ஜ் ஆகி இருக்க அவளை கட்டாய படுத்தி தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டாள் நிலா..

ஒரு சகோதரியாய் தோழியாய் அன்னையாய் அவளை தாங்கினாள்..  சாந்தினிக்கே அவள் செய்வதை எல்லாம் பார்த்து மிகவும் கஷ்டமாக இருந்தது..

ஆனால் நிலா அவளிடம் ஏதேதோ பேசி அவள் மனதை அமைதிப்படுத்தினாள்..  

வீட்டிற்கு சென்ற அடுத்த நாளே அர்ஜுன் தன் பெற்றோர்களிடம் வந்து சாந்தினியை முறைப்படி பெண் கேட்டான்..  

இப்பொழுது அவள் நிலாவின் தயவில் இருப்பதால் நிலா மற்றும் அதிரதன் இருவரும் சாந்தினியின் பக்கமாக நின்று அந்த திருமணத்தை பேசி முடித்தனர்.

கூடவே அவள் நிலாவின் தயவால் இருப்பதால் அடுத்த மாதமே அவளை தன்னவளாக்கி தன்னோடு அழைத்துச் சென்று விட வேண்டும் என்று அர்ஜுன் கெஞ்சி கேட்க அவர்களும் ஒத்துக் கொண்டனர்..

திருமண வேலையெல்லாம் நிலாவே முன்னின்று செய்த்ய் இதோ அவர்களை மணமக்களாய் மேடையும் ஏற்றிவிட்டாள்..  

காலையில் திருமணம் முடித்து மாலையில் வரவேற்பிற்காக அனைவரின் ஆசி வேண்டி நின்றுகொண்டிருந்தனர் மணமக்கள்..

இருவர் முகத்திலும் பெரிய புன்னகையை கண்டு நிலாவுக்கும் மனம் நிறைந்து போனது..

அதிரதன் குடும்பத்தில் அனைவருமே அந்த திருமணத்திற்கு வந்திருந்தனர்..  எல்லாரும் மேடை ஏறி சாந்தினியை வாழ்த்த,  தேவநாதன் அவளை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு

“உனக்கு யாரும் இல்லை என்று கவலைப்படாதே அம்மணி.. நீயும் என் பேத்திகளில் ஒருத்திதான்.. இந்த தாத்தா மற்றும் இந்த குடும்பமே உன்னுடையது தான்..

எப்பொழுது வேண்டுமானாலும் நீ ஜமீனுக்கு வரலாம்.. நீயும் அதில் ஒரு இளவரசி தான்.. “ என்று அவள் தலையில் கை வைத்து ஆசீர்வதித்து அவளுக்கு பெரிய வைர அட்டிகையை பரிசளித்தார்...

அவளுக்கோ கண்கள் நிறைந்து விட்டன.. அவரின் அன்பில் பூரித்தவள் குனிந்து அவர் காலில் விழுந்து வணங்கி எழுந்தவள் அவர் மார்பில் புதைந்து கொண்டாள்..

தேவநாதன் அவர் தலையை ஆதரவுடன் வருடிக் கொடுத்தார்.. மனோகரி மற்றும் நெடுமாறன் என்று அனைவருமே அவளை வாழ்த்திச் சென்றனர்..

அத்தோடு இல்லாமல் நிலா சாந்தினி உடைய உறவுகளையும் ஒன்று சேர்ந்திருந்தாள்..  

அவளுடைய தாத்தா பாட்டி மாமா சித்தி மற்றும் அவர்கள் குடும்பங்கள் என அனைவரையும் அழைத்து வந்திருந்தாள்..  உறவுகளின் அருமையை  புரிந்து கொண்டவள்  அவர்களை பாசத்தோடு ஏற்றுக்கொண்டு அவர்களின் ஆசியை பெற்றுக் கொண்டாள் சாந்தினி..

ஒருவழியாக வரவேற்பு முடிந்ததும் சாந்தினியை அப்படியே விட்டு விடாமல் அதிரதன் குடும்பம் கிளம்பி மாப்பிள்ளை வீட்டிற்கு சென்று அவளை விட்டு விட்டு வந்தனர்..

சாந்தினியை அலங்கரித்து அவளை முதல் இரவு அறைக்குள் விட்டுவிட்டு மீண்டும் ஒருமுறை அவளை வாழ்த்தி விட்டு தங்கள் வீட்டிற்கு திரும்பினர்... 

(அடுத்த அத்தியாயத்துடன் இந்த கதை நிறைவு பெறும்..! ) 

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!