பூங்கதவே தாழ் திறவாய்-32

 


இதழ்-32

 

தற்கு மேல் நடந்த தெல்லாம் தீக்சாவின் கை மீறி போய் விட்டது...

அடுத்த வாரமே நல்ல முகூர்த்தம் இருக்க, அபி உடனே திருமண வேலையை ஆரம்பித்து விட்டான்...

கோவிலில் வைத்து சிம்பிளாக திருமணத்தை நடத்தி அதை  ரெஜிஸ்டர் பண்ணி விடுவதாக திட்ட மிட்டிருந்தனர்..

அதன் படி இன்று அதிகாலையில் கோவிலில் அனைவரும் கூடி இருக்க, பட்டு வேஷ்டி சட்டையில் கம்பீரமாக அமர்ந்து மணமகனுக்கான சடங்குகளை  செய்து கொண்டிருந்தான் அபிநந்தன்....

அவன் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி...அவன் மனம் கவர்ந்தவளையே சிறிது காலம் தொலைத்து விட்டு அவளுக்காக ஏங்கி தவித்து இன்று முறைப்படி தனக்கு உரியவளாக்கி கொள்ள போகிறான்...

அதே பூரிப்பில் சிரித்த முகமாக அமர்ந்து ஐயர் சொல்வதை செய்து கொண்டிருந்தான்...   

பரிமளம் தன் பேத்தியை கையில் வைத்து கொண்டு மணமேடை அருகில் பூரிப்புடன்  நின்றிருந்தார்..  

அவன் அத்தை காஞ்சனாவையும் மாயாவையும் திட்டி அவர் கையில் கொஞ்சம் பணத்தை கொடுத்து  அவர் சொந்த ஊருக்கே அனுப்பி வைத்திருந்தான்...

 அவன் குடும்பம் சார்பாக தாமஸ்ம் வந்திருந்தார்....அவருக்கு தீக்சா தான் அபியின் மனைவி என்று அறிந்ததும் மிகவும் சந்தோசபட்டார்....

ஆனந்த் மற்றும் அவன் நண்பர்கள் மற்றும் அபி டிசைன்ஸ் ல்  வேலை செய்யும் அலுவலகத்தில் இருந்து புவனா மற்றும் சில நெருங்கிய நண்பர்கள் மட்டும் வந்திருந்தனர்....

அவர்களுக்கு தீக்சா அபிநந்தனின் மனைவி என்று தெரிந்ததும் ஆச்சர்யபட்டனர்... 

அதோடு இவ்வளவு வசதி படைத்தவனை மணந்தும் தீக்சா அதை வெளியில் சொல்லாமல் மறைத்து வந்ததை நினைத்து வியந்தனர்... 

ஜெசியும் வந்திருந்தாள்... வந்த உடன் தீக்சாவை தனியாக சந்தித்தவள்

“சாரி தீக்சா.... நீ சார் ஓட வொய்ப் னு தெரியாம.... அன்னைக்கு ட்ராமா பண்ணிட்டேன்... சார்க்கு எதுவும் தெரியாது.. நான்தான் அவர் மேல வேணும்னு தடுக்கி விழுந்தேன்..

அதே மாதிரி அறையை விட்டு வெளியில் வரும்பொழுதும் உன்னை நம்ப வைப்பதற்காகத்தான் அப்படி நடிச்சேன்.. மற்றபடி சார் க்கு அதுல எந்த பங்கும் இல்ல...

என்னை மன்னிச்சிடு... இனிமேல் இந்த மாதிரி ஒரு கேவலமான செயலை செய்ய மாட்டேன்.... “ என்றாள் கண்ணீர் மல்க....

தீக்சாவும் அவளை பார்த்து புன்னகைத்து

“இட்ஸ்  ஓகே ஜெசி....நீங்க பண்ணினது தப்புனு உணர்ந்திட்டாலே போதும்... மன்னிப்பெல்லாம் அவசியமில்லை...டேக் கேர்... “ என்று  சிரித்தாள்...

ஜெசிக்கே ஆச்சர்யம்.. இவளுக்கு இப்படி எல்லாம் கூட சிரிக்க வருமா என்று...  

அப்பொழுது பெண்ணை அழைத்து வர சொல்ல, பட்டு சேலை சரசரக்க, தலையை குனிந்த படி வந்தாள் தீக்சா.. புவனாதான் அவளை கை பிடித்து அழைத்து வந்தாள்...

வெகு எளிமையாக மணப்பெண் அலங்காரத்தில் இருந்தவளை விழி அகற்றாமல் அள்ளி பருகினான் அபிநந்தன்...

அவன் அருகில் வந்தவள் கீழ அமரவும் எதேச்சையாக அவன் முகம் நோக்கியவள் அவன் குறும்பாக கண் சிமிட்ட, அவளோ  எரித்து விடும் பார்வை பார்த்தாள்...

அதை கண்டு கொள்ளாமல் ஐயர் சொன்ன  மந்திரங்களை சொல்ல பின்  அவன் கையில் அந்த  மங்கள நாணை கொடுத்து  கட்ட சொன்னார்..

அவனும் மனம் முழுவதும் காதலும் அன்பும் நிறைந்து நிக்க, அவள் முகம் பார்த்து குறும்பாக மீண்டும் கண் சிமிட்டி அந்த மாங்கல்யத்தை அணிவித்து அவளை முறைப்படி மனைவியாக்கி கொண்டான்....

அனைவரும் அட்சதையை தூவி அவர்களை ஆசிர்வதித்தனர்....

பின் அனைவரும் தங்கள்  பரிசுகளை கொடுக்க,

ஆனந்த் அருகில் வந்து

“மச்சான் .. யூ ஆர் கிரேட் டா... பொண்ணுங்க பக்கமே போகாமல் இருந்தவன் இவ்வளவு பாஸ்ட் ஆ வேலை செய்திருக்க...

ரொம்ப சந்தோசம் டா.. எப்படியோ எங்களுக்கு முன்னாடி நீ சம்சார கடல்ல குதிச்சிட்ட... வெற்றி கரமா நீந்தி வா..

தீக்சா.. மச்சான நல்லா பார்த்துக்கோ... எங்க கண்ணையே உன்கிட்ட கொடுக்கறோம்..

அதுல ஆனந்த கண்ணீர் மட்டும்தான் வரணும்.. “ என்று  சிவாஜி ஸ்டைலில் இழுத்து பேசி தன் கண்ணில் இருந்த நீரை துடைப்பதை போல ஆக்சன் செய்ய, அதை கேட்டு தீக்சாவே சிரித்து விட்டாள்...

அவளின் அந்த  மலர்ந்த சிரிப்பையே ரசனையுடன் பார்த்தான் அபி...

“ம்ஹூம் பாஸ்... நாங்க இன்னும் இங்கதான் இருக்கோம்.. அதுக்குள்ள உங்க பொண்டாட்டி கூட டூயட் பாட போய்டாதிங்க.. “ என்று சிரித்தாள் புவனா...

அபியும் அசட்டு சிரிப்பை சிரித்தான்.... பின் தீக்சாவிடம் திரும்பியவள்

“வாழ்த்துக்கள் தீக்சா.. வாழ்த்துக்கள் சார்.... நீங்க இரண்டு பேரும் பெர்பெக்ட் மேட்ச்...

நீங்க அடிக்கடி தீக்சாவை சைட் அடிக்கிறப்பவே எனக்கு டவுட் தான்.. ஆனாலும் இந்த அழுத்தக்காரி வாய திறந்து உங்களை பற்றி எதுவுமே மூச்சே விடலியே...

எப்படியோ கலக்கிட்டிங்க சார்.....

இந்த அழுத்தக்காரி ,  கல் நெஞ்சுக்காரி தீக்சாவையே கரச்சுட்டிங்களே.. “ என்று  சிரித்தாள் புவனா..

“தேங்க்ஸ்  சிஸ்டர்.. “ என்று சிரித்தான் அபி..

தீக்சா அவளை முறைக்க அதன் பின் அனைவரும் கிளம்பி அருகில் இருந்த உணவகத்தில் உணவை முடித்து  மீண்டும் ஒரு முறை அவர்களை  வாழ்த்தி  விடை பெற்று  சென்றனர்..

மணமக்கள் இருவரும் ரெஜிஸ்டர் ஆபிஸ் சென்று சட்டபடி தங்கள் திருமணத்தை  பதிவு செய்தனர்..

பின் கார் கிளம்பி அபியின் வீட்டை அடைந்தது...

லது காலை எடுத்து வைத்து உள்ளே வந்தாள் தீக்சா... பூஜை அறையில் விளக்கேற்றி பால்  பழம் கொடுக்க அவளோ அவனை முறைத்து கொண்டே கடனே என்று  ஏதோ செய்து வைத்தாள்...

ஹாலில் மாட்டியிருந்த அபியின் பெற்றோர்கள் பக்கம் சென்றது அவள் பார்வை.. அதில் மூவரும் சிரித்து கொண்டிருந்தனர்....

அபி அவ்வளவு அழகாக இருந்தான் அதில்..  அதை  தொடர்ந்து அன்று அவன் அம்மா போனில்  பேசியது நினைவு வர, அதை  தொடர்ந்து அவன் அவளை  சீண்டியதும் நினைவு வர, விழியோரம் கரித்தது....

தன்னிடம் அன்பாக பேசிய அவன் அம்மாவும் இல்லை... தன்னை கொண்டாடிய அந்த நந்தனும் இல்லை என்று எண்ண மீண்டும் விழியோரம் நீர் திரண்டு நின்றது...

தன் பெற்றோர்களின் புகைபடத்தை பார்த்து கொண்டே தழுதழுத்த நிலையில் இருந்தவளை கண்டதும் அவளுக்கு அவள் தன் அன்னையிடம் பேசியது நினைவு வந்திருக்கும்...

அதான் கண் கலங்குகிறாள் என்று புரிந்து கொண்டான்.. அதை மாற்ற எண்ணி,

“நோ எமோசனல் தீக்சா பேபி.... இன்னைக்கு புல்லா நீ ஹேப்பியா, சந்தோசமா சிரிச்சுகிட்டே இருக்கணும்...  “ என்று  அவள் காதருகில் கிசுகிசுத்தான்...

அவளோ அவனை பார்த்து எரித்து விடும் பார்வை பார்த்தாள்..

பின் வரவேற்பறையை ஒட்டிய அறையை பரிமளத்திற்கு ஏற்பாடு செய்திருந்தான்...

தன் பேத்தியை கொஞ்ச நாள் கூட இருந்து பார்த்து கொள்வதாக சொல்லி அவரும் அபியின் வீட்டிலயே  தங்குவதாக ஒத்து கொண்டிருந்தார்....

அவருக்கு அந்த அறையை காட்டி 

“அத்தை நீங்க இந்த அறையில் தங்கிக்கங்க.. “  என்றான் அபி..

தீக்சாவின் வீட்டில் இருந்து கொண்டு வந்திருந்த அவள்  உடைகள் அங்கயே இருக்க, அதை எடுத்து கொண்டு தன் அறைக்கு செல்ல முயன்றான்...

அதை கண்டு திடுக்கிட்டவள்

இவன் அறையில் எப்படி ஒன்றாக தங்குவது?? என்னதான் தன் அன்னை சொன்னதுக்காக அவனை ஏற்று கொண்டாலும் மனதார அவனை தன் கணவனாக அவளால் ஏற்று கொள்ள முடியவில்லை...

அதனால் அவன் கூட தங்க அஞ்சியவள், 

“நானும் கொஞ்ச நாள் இங்கயே தங்கிக்கறேன்... பாப்பா நைட் ல அழுதா அம்மா பார்த்துப்பாங்க... அதனால் கொஞ்ச நாள் அம்மா  கூடவே இருக்கேன் .. “ என்றாள் தரையை பார்த்தவாறு...

பரிமளம் ம்  அதையே சொல்ல, சரி என்று சொல்லி அவளை அங்கயே தங்க  வைத்தான்....

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!