பூங்கதவே தாழ் திறவாய்-33

 


இதழ்-33

 

நாட்கள் வேகமாக நகர, தீக்சா தன் புகுந்த  வீட்டிற்கு வந்து மூன்று மாதங்கள் ஓடிவிட்டன...

தீக்சா திருமணம் முடித்து அபிநந்தன் வீட்டிற்கு வந்த அடுத்த வாரத்துலயே அபிநந்தன் தன் மகளுக்கு பெயர் சூட்டும் விழாவை பெரிதாக ஏற்பாடு பண்ணி அந்த விழாவின் மூலமாக தன் மனைவி மகளை அனைவருக்கும் அறிமுக படுத்தினான்...

தீக்சாவும் உள்ளுக்குள் மருகினாலும் வெளியில் சிரித்த படி அனைவரையும் வரவேற்று உபசரித்து அபிநந்தனின் மனைவியாக பொறுப்புடன் நடந்து கொண்டாள்...

எப்பொழுதும் தன்னை முறைத்து கொண்டே இருப்பவள் இன்று உதட்டில் மலர்ந்த புன்னகையுடன் அந்த விழாவில் வலம் வருவதை கண்டு மகிழ்ந்து போனான்...

அவன் பார்வை அடிக்கடி அவளையே சுற்றி வந்தது...பின் அனைவரும் ஒன்று கூடி தொட்டிலில் கிடந்த அந்த குட்டி தேவதைக்கு ஆதிரா என்று பெயர் சூட்டினர்...

தன் மகளை கையில் ஏந்தி கொண்டு தன் மனைவியை அணைத்தவாறு விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் நன்றி சொல்லி புன்னகையுடன் அனுப்பி வைத்தான்...

தீக்சாவின் அருகில் அதுவும் கொள்ளை அழகுடன் திகழும் தன் தேவதையுடன் இப்படி அருகில் நிற்பான் என்று கனவிலும் நினைத்திருக்கவில்லை அபிநந்தன்...

இப்படி ஒரு அதிர்ஷ்டம் கிடைத்ததே தன் வாழ்க்கையின் மிகப்பெரிய பொக்கிசமாகும் என்று எண்ணி மகிழ்ந்து போனான்...  

வாழ்க்கையும் அதன் பாட்டுக்கு நகர்ந்து  கொண்டிருந்தது ...

அபிநந்தன் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தான் தன் மகளை காண காண.... மூன்று  மாதம் அவளுக்கு முடிந்திருக்க மற்றவர் முகம் பார்த்து  சிரிக்க ஆரம்பித்து இருந்தாள் அவன் குட்டி இளவரசி..

அதுவும் தன்  தந்தையை கண்டால் மட்டுமே ஒரு தனி  சிரிப்பு  அவளுக்கு....

அவளை காணவே மாலை சீக்கிரம் அலுவலகத்தில் இருந்து  ஓடி வந்து விடுவான்...

அவன் வந்த பிறகு அவளை தூக்கி கொண்டு தன் அறைக்கு வந்துவிடுவான்...  தன் அருகில் அவளை வைத்து கொண்டே தான் மீதி இருக்கும்  தன் அலுவலக வேலையை தொடர்வான்...

வேலை இல்லாத நாட்களில் அவளை தூக்கி கொண்டு தோட்டத்திற்கு சென்று விடுவான்.. தன் மகளுடன் கதை பேசி கொண்டே காலார நடப்பான் அந்த தோட்டத்தை சுற்றி...

பரிமளம் தன்  மகள் வாழ்க்கை நேராகி விட்டது.. மாப்பிள்ளை எப்படியும் அவளை பார்த்து கொள்வார்..  என்று  பூரித்து இருந்தார்.

அதோடு தன் பேத்தியின் அழகில் மயங்கி  அவளை விட்டு செல்ல மனம் இல்லாமல் அங்கயே தங்கி விட்டார்...

இவர்கள் இருவரும் சந்தோசமாக இருக்க தீக்சா மட்டும் இன்னும் தன் பிடிவாதத்தை  விட்டு கொடுக்காமல் தன் கணவன் மீது இன்னும் அதே  வெறுப்புடன் இருந்து வருகிறாள்..

அபியும் எவ்வளவோ முறை விளக்கி சொல்லி விட்டான்...  கெஞ்சியும்  கொஞ்சியும் கூட  சொல்லி பார்த்து விட்டான்..

ஆனால் அவனை அவள் ஏற்று  கொள்வதாக இல்லை..

அவன் அவள் நந்தன் இல்லை என்று  சொல்லி முகத்தை திருப்பி கொண்டுதான் இருக்கிறாள் இன்று  வரை..

ன்று  மாலை பரிமளம் அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்றிருக்க, அலுவலகத்தில் எல்லா வேலையும் முடிந்திருக்க சீக்கிரம் வீடு  திரும்பி இருந்தான் அபிநந்தன்...

நேராக தன் மகள் இருக்கும் அறைக்கு சென்று  கதவை திறந்து  கொண்டு சென்றவன் அப்படியே திகைத்து நின்றான்....

தீக்சா தன் மகளை அள்ளி அணைத்து அவள் தலையை வருடியபடி அவளுக்கு பாலூட்டி கொண்டிருக்க அவள் முகத்தில் இருந்த தாய்மையும் பூரிப்பும் இலகிய நிலையும் அப்படியே அவளை அள்ளி அணைத்து கொள்ள துடித்தன  அவன் கரங்கள்...

இதுவரை தெரியாத அவன் கண்டு கொள்ளாத தன் மனைவியின் அழகு இப்பொழுது தெரிந்தது..

ஏற்கனவே தன்னை கட்டி இழுப்பவள்  இப்பொழுது குழந்தை பிறகு பரிமளத்தின் கவனிப்பில் இன்னும் மெருகேரி அழகு சிலையாக ஜொலித்தாள்..

அவளின் குன்டு கன்னங்களையே ஆசையாக பார்த்து கொண்ருந்தான்.. திடீரென்று  திரும்பியவள் அறை  வாயிலில்  நின்று தன்னையே ஒரு மாதிரி கிறங்கி பார்த்து கொண்டிருந்த தன் கணவனை கண்டதும் அவள் நிலை உணர்ந்து கன்னம் சிவக்க உடனே புடவையை இழுத்து விட்டு கொண்டாள்...

அதற்குள் அந்த குட்டி உறங்கியிருக்க எழுந்து அவன் அருகில் இருந்த  அவளின்  தொட்டிலில் தன் மகளை கிடத்தி விட்டு நிமிர, அடுத்த நொடி அவனின் இறுகிய அணைப்பில் இருந்தாள் தீக்சா...

அபி தான் அவளை  தன்னோடு சேர்த்து இறுக்கி அணைத்திருந்தான்....

அவனின் அந்த அணைப்பில் அவளும் மயங்கி கிறங்கி நிக்க,  அவள் முகத்தை கையில் ஏந்தி அவள் செவ்விதழை நோக்கி குனிந்தான் தாபத்தோடு...

அந்த நொடி விழித்து கொண்டாள் தீக்சா..

அவன் என்ன செய்ய வருகிறான் என்று  புரிய அனிச்சையாக அவள்  கையை உயர்த்தி ஓங்கி அறைந்திருந்தாள் அவன் கன்னத்தில்...

இதை எதிர்பாராதவன் ஒரு நொடி திகைத்து நின்றான்...

பினனர் தான் அவள் தன்னை அடித்தது நினைவு வர கோபத்தில் கொதித்தான்  கண்கள் சிவந்தன...

அவனைவிட கோபத்தில் கொதித்தாள் தீக்சா.... அவனை எரித்து விடும் பார்வை பார்த்தவள்

“லுக் மிஸ்டர் அபிநந்தன்.. நான் இங்க இருக்கிறது உங்க பொண்ணோட அம்மாவா மாட்டும்தான்.. என் அம்மாவுக்காக, இந்த  ஊருக்காக  நான் உங்க பொண்டாட்டினாலும் என்னை  பொருத்த வரை நீங்க என் ஹஸ்பன்ட் கிடையாது...

நான் வெறும் உங்க குழந்தைக்கு அம்மா மட்டும் தான்..

அந்த  எல்லையோட நின்னுக்கங்க.. மீறி பொண்டாட்டிங்கிற உரிமையில எல்லை  மீறினீங்க  தொலச்சுடுவேன்....” என்று  விரல் நீட்டி மிரட்டினாள் அவளும் கோபமாக...

அதை கேட்டு அவளை அடிக்க துடித்த தன் கரங்களை கட்டு படுத்தி கொண்டவன்

“சே... “ என்று  காலை தரையில்  உதைத்து வேகமாக அறை கதவை அறைந்து சாத்தி விட்டு மாடிக்கு வேகமாக  சென்றான் கோபத்துடன்...

கோவிலுக்கு சென்று  விட்டு திரும்பிய பரிமளத்திற்கு தன் மறுமகன் கோபமாக தன் அறையில் இருந்து வெளியேறுவதை கண்டு அவசரமாக உள்ளே வர, இங்க தீக்சா கண்ணீரோடு  நின்று  கொண்டிருந்தாள்..

தொட்டிலில் பேத்தி தூங்கி கொண்டிருக்க, ஓரளவுக்கு என்ன நடந்திருக்கும் என்று யோகிக்க முடிந்தது அவரால்....

கடந்த சில நாட்களாகவே மாப்பிள்ளையின் பார்வை தன் மனைவியை ஆசையோது  தழுவி செல்வதை அவரும் கவனித்து  வந்தார்...

தன் மகள் இன்னும் மனம் மாறாமல் தன் கணவனை தள்ளி வைத்திருப்பது அவருக்கும் வேதனையாகத்தான் இருந்தது... 

“இந்த  முட்டாள் பெண் ஏன் தான் இப்படி இருக்கிறாளோ.. “என்று  நொந்து கொண்டே உள்ளே வந்தவர்

“ தீக்சா...”  என்று  சத்தமாக அழைத்தவாறு உள்ளே வந்தார்.. அதற்குள் தன்னை சமாளித்து கொண்டவள் அவரை பார்த்து சிரித்தாள்..

“இதுக்கும் ஒன்னும் குறைச்சல் இல்லை.. பெத்த அம்மாகிட்டயே எதுவும் சொல்லாமல் போட்டு  அமுத்திக்கிறா.. ஆனால் புருசனை மட்டும் புரிஞ்சுக்க முடியலை.. “

என்று  உள்ளுக்குள் புலம்பியவாறு அவளிடம் கோவிலில் இருந்து கொண்டு வந்த   குங்குமத்தை  கொடுக்க அவளும் வாங்கி தன் வகிட்டில் வைத்து கொண்டு அவளுடைய மாங்கலயத்தை வெளியில் எடுத்து  அதன் மீதும் வைத்து கண்ணில் ஒற்றி கொண்டாள் தீக்சா...

அதை கண்டு மின்னல் வெட்டியது பரிமளத்திற்கு...எதையோ அவசரமாக யோசித்தார்...

 பின் தன் பேத்திக்கும் கொஞ்சமாக அந்த குங்குமத்தை வைத்து விட்டவர் மீண்டும் எதையோ யோசிக்க ஆரம்பித்தார்..

ன்று  இரவு உணவுக்கு அபி கீழிறங்கி வரவில்லை... பரிமளம் தீக்சாவை சென்று  அவனை அழைக்க சொல்ல அவளோ மறுத்து விட்டாள்....

பின் அவரே சென்று  அழைக்க, அதற்கு மேல் தன் மகளை பார்க்காமல்  இருக்க முடியாமல் அவனும் கீழிறந்கி வந்தான்...

தீக்சாவோ அவன் பக்கம் திரும்ப வில்லை..

அவனும் கண்டு கொள்ளாமல் தன் மகளை கொஞ்சியவாறு மடியில் வைத்து கொண்டு சாப்பிட்டு முடித்தான்..

பின் அவளை பரிமளத்திடம் கொடுத்தவன் தன் அறைக்கு சென்றான்...

தன் அறைக்கு சென்றவன் கட்டிலில் விழ, அவனுக்கு மாலையில் அவன் கண்ட தன் மனைவியின் அந்த  இலகிய நிலையும் தன்னை கண்டதும் ஒரு நொடி சிவந்த அந்த அவளின் சிவந்த முகமுமே கண் முன்னே வந்தன...

அதை கண்டதும் இத்தனை நாளாக அவனுள் உறங்கி கொண்டிருந்த கணவன் விழித்து கொள்ள, தன் மனைவியின் அருகாமையை தேடியது அவன் மனமும் உடலும்...

ஆனால் அவள் தான் இவனை கண்டாலே வேப்பங்காயாக கசந்து கடித்து துப்புகிறாளே.... எப்படிதான் அவனை புரிய வைக்க போகிறேனோ??

இவளுக்காகவே உலகத்தில் உள்ள எல்லா  நியூரோ ஸ்பெஷலிஸ்ட்  எல்லாரையும் கன்சல்ட் பண்ணி விட்டான் தன் பழைய நினைவுகளை திரும்ப கொண்டு வர

அட்லீட் அவளுடன் இருந்த  அந்த ஒரு வாரம் நினைவு வந்தால் மட்டும் போதும்.. எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை என்று  கேட்க ஆனால் அனைவருமே அது முடியாது  என்று விட்டனர்...

இவளோ அந்த நந்தன் திரும்ப வந்தால் மட்டுமே அவனை ஏற்று  கொள்வேன் என்று பிடிவாதமாக இருக்கிறாள்.. என்ன செய்வது??   என்று தன் தலையை பிடித்து கொண்டு  யோசித்தான்..

ஆனால் வழிதான் எதுவும் கிடைக்கவில்லை...

பின் எழுந்து பால்கனிக்கு சென்று  நடக்க ஆரம்பித்தான்....

கால் வலிக்க நடந்தவன் தன்னுள் எழுந்த புயல் கொஞ்சம் அடங்க பின் அறைக்கு வந்தான்...

அவன் மாடியில் உலாத்தியதை பரிமளமும் கண்டு கொண்டார்...

தான் எடுத்த முடிவை சீக்கிரம் செயல்  படுத்தணும். என்று  எண்ணிக் கொண்டார் பரிமளம்...! 

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!