பூங்கதவே தாழ் திறவாய்-34

 


இதழ்-34

 

டுத்த நாள் காலை உணவை முடித்து அபி அலுவலகம்  செல்ல கிளம்பியவனிடம்

“மாப்பிள்ளை... இன்னைக்கு நான் என் வீட்டுக்கு போகிறேன்... தீக்சா மட்டும் தனியா இருப்பா... மாலை கொஞ்சம்  சீக்கிரம் வந்திடுங்க.. “ என்றார்..

அதை கேட்டு இருவரும் அதிர்ந்து அவரை  பார்க்க

தீக்சாதான் முந்தி  கொண்டு

“அம்மா.. எதுக்கு இப்ப திடீர்னு கிளம்பற?? “ என்றாள் சந்தேகமாக

“திடீர் னு இல்ல மா.. எனக்கு உன் அப்பா ஞாபகம் வந்திருச்சு...  அவருடன்  வாழ்ந்த அந்த  வீட்டை போய் பார்க்கணும் போல இருக்கு.. மூனு மாசம் அப்படியே போட்டுட்டு வந்தாச்சி...

இப்பதான் நீ பாப்பா வை நல்லா பார்த்துக்குற இல்லை.. நான் போய் ஒரு மாசம் அந்த வீடல இருந்துட்டு வர்ரேன்.. “என்றார்..

“மா.. என்னால இவள தனியா பார்த்துக்க முடியாது.. “  என்று சிணுங்கினாள் தீக்சா..

“தனியா ஏன் பார்த்துக்கற?? .. அதான் மாப்பிள்ளை இருக்கிறார் இல்லை... இனிமேல் நீ மேல அவர் ரூம்க்கே போய்டு...

ஆதிரா குட்டியை  நைட் அவர் பார்த்துக்குவார்.. நீ பகல்ல மட்டும் பார்த்துக்கோ.. “ என்றார்...

அப்பொழுது தான்  அவளுக்கு உறைத்தது.... நேற்று இவன் ஆடிய நாடகம் எப்படியோ தன் அன்னைக்கு தெரிந்து விட்டது... அதனால் தான் இன்று  கிளம்பி விட்டார் என்று....

எல்லாம் இவனால்தான் என்று  திரும்பி அவனை முறைக்க அவனோ இவளை கண்டு கொள்ளாமல்

“அத்தை.. இன்னும் கொஞ்சம் நாள் இங்கயே இருங்க.. அதுக்குள்ள எதுக்கு போகணும்... “ என்று  சமாதானம்  படுத்த முயன்றான்..

அதை கண்ட தீக்சா  கடுப்பாகி

“ஆஹா... என்னமா நடிக்கிறான் பார்... பிள்ளையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விட்ட கதை மாதிரி இவன் நேற்று என் ரூம்குள்ள வந்து கலாட்டா பண்ணதால தான் அம்மா கிளம்பிட்டாங்க..

இப்ப அவங்களையே போக வேண்டாம்னு சமாதானம் படுத்துவாராம்.. “ என்று உள்ளுக்குள் பொருமினாள்...

பரிமளமோ

“இல்ல மாப்பிள்ளை... இங்க பக்கதுலதான இருக்கேன்.. அப்படி எதுனா  உடனே வந்திடறேன்..

ஒரு  மாசம் எனக்கும் கொஞ்சம் ரிலாக்சா இருக்கும்.... இனிமேல் உங்க வாழ்க்கையை நீங்க பாருங்க.. “ என்று பிடிவாதமாக மறுத்தார்...

அதன் பிறகு அவரை கார் வைத்து அவர் வீட்டிற்கு அனுப்பி வைத்தான்...

மாலை  சீக்கிரம் திரும்பி வந்தவன் தன் மகளை அள்ளி கொண்டு தோட்டத்திற்கு சென்று  விட்டான்... தீக்சாவும் தன் அலைபேசிய நோண்டி கொண்டிருந்தாள்..

பின் சிறிது நேரத்தில் திரும்பி வந்தவன் ஆதிரா உறங்கி இருக்க அவளை  தொட்டிலில்  போட்டு விட்டு

“தீக்சா... குட்டி திங்க்ஷ் எல்லாம் எடு... நாம மேல நம் ரூம்க்கு போய்டலாம் . “ என்றான்..

அதை கேட்டு திக் என்றது...

“உங்க ரூம்க்கு எதுக்கு? நான் இங்கயே இருந்துக்கறேன்.. “ என்றாள் அவனை முறைத்தவாறு

“நைட் உன்னால தனியா  பார்த்துக்க முடியாது.. அவள் அழுதால் நான் எழுந்து பார்த்துக்கறேன்..

அதோடு இவ்வளவு நாள் அத்தை இங்க இருந்தாங்க.. அதனால் நீ இங்க இருந்த... இனிமேல் நீ இங்க  இருக்கிறது சரி இல்லை..

நீ என்னை  ஏத்துக்கலைனாலும் இந்த  வீட்டு வேலைக்காரங்களுக்கு நீ  என் பொண்டாட்டி தான்.

அப்படி இருக்க இரண்டு பேரும் தனித்தனி  ரூம் ல இருந்தா  நல்லா  இருக்காது... கொஞ்சம் திங்க்ஷ் மட்டும் இப்ப  எடுத்துகிட்டு  என் ரூம்க்கு வா... “ என்றான்..

“இல்ல.. அங்கெல்லாம் வரமுடியாது.. “ என ஏதோ சொல்ல வர  அவளை முறைத்தவன்

“சரி.. நான்  என் பொண்ணை தூக்கிட்டு போறேன்.. நீ வருவதும்  வராததும் உன் இஷ்டம்.. “  என்றவன் தன் மகளை மேல தன் அறைக்கு தூக்கி சென்று  படுக்கையில் கிடத்தியவன் கீழ வந்து அவள் பொருட்களை எல்லாம் மேல  கொண்டு சென்றான்....

தீக்சாவும் வீம்பாக அந்த அறையிலயே இருக்க, சிறிது நேரத்திலயே தன் மகளை  விட்டு இருக்க முடியவில்லை...

கால்கள தானாக மாடியை நோக்கி சென்றன...

இதுவரை  அவன் அறைக்கு சென்றதில்லை அவள்.. மற்ற எல்லா அறைக்கும் சென்றிருக்கிறாள்.. ஆனால் அவன்  அறைக்குள் செல்ல கால் வரவில்லை..

முதல் முறையாக நடுங்கும் கால்களுடன் உள்ளே அடி எடுத்து வைத்து செல்ல அவனோ  தொட்டிலை ஆட்டியபடி தன் லேப்டாப்பில் மூழ்கி இருந்தான்....

உள்ளே வந்தவளை கண்டதும்

“அடடா...  என்  பொண்டாட்டிக்கு இப்பதான் இந்த  புருசனோட ரூம்க்கு வரணும் னு தோணியிருக்கே.. “ என்றான் குரும்பாக கண் சிமிட்டி

“நான் ஒன்னும் உங்க பொண்டாட்டியா வரலை... என் பொண்ணுக்கு அம்மாவா வந்திரூக்கேன்...

நான் அப்ப சொன்னது தான் இப்பவும்.. ஒரே ரூம் ல இருக்கறோம்னு என் கிட்ட எதுவும் வாலாட்ட நினைச்சிங்க, தொலச்சுடுவேன்.. “ என்று  மிரட்டினாள்...

“ஹ்ம்ம் ஹ்ம்ம் நான் ரெடி பேபி.. உன்கிட்ட அறை வாங்க... அப்படியாவது  உன் கரங்கள் என் கன்னத்தை  தழுவட்டும்... “ என்று மீண்டும் குறும்பாக சிரித்தான்..

அவனை முறைத்தவள் அந்த பெரிய படுக்கையில் ஒரு ஓரமாக சென்று  படுத்து கொண்டாள்....

அவனும் தன் லேப்டாப் ஐ மூடிவிட்டு கட்டிலின் மறுபக்கம் படுத்து கொண்டான்...

ஆனால் அவனுக்குத்தான் தூக்கம் வரவில்லை...

நீண்ட நேரம் புரண்டு புரண்டு  படுத்தவன் மறு பக்கம் படுத்திருக்கும் தன் மனைவியையே ஆசையோடு பார்த்தவாறு  உறங்கி போனான்..

ன்னும் ஒரு வாரம் ஓடியிருந்தது...

தீக்சா தன் கணவன் அறையில் உறங்கினாலும் அவனை தன்னை நெருங்க விடவில்லை...

தன் ஒரு பார்வையால் அவனை தள்ளி நிறுத்தி வைத்துவிட்டாள்... அவனும் அவளை ஏக்கத்தோடு பார்த்து கொண்டே இரவுகளை கழித்து வந்தான்...

முன்பாவது அவள் வேற அறையில் இருந்தாள்... அவளை பிரிந்து இருப்பது பெரிதாக தெரிந்து கொள்ளவில்லை...

ஆனால் இப்பொழுது தன் மனைவி தன்  அருகிலயே இருந்தும் அவளை தள்ளி வைத்து பார்ப்பது பெரும் சத்திய சோதனையாக இருந்தது அவனுக்கு....

தன்னை முயன்று கட்டு படுத்தி வந்தான்....

தீக்சாவுக்குமே தன் மீது ஆவலாக படியும் தன் கணவன் பார்வையை கண்டு உள்ளுக்குள் படபடக்கும்....

ஆனால் ஏனோ அவனை தன் அருகில் நெருங்கி வர அனுமதிக்க  அவளுக்கு பிடிக்கவில்லை...  

ன்று  இரவு திடீரென்று ஆதிரா  அழுதாள்....

அபியும் தீக்சாவும் மாறி மாறி  எவ்வளவோ சமாதான படுத்தியும் அடங்காமல் அழ, தன் மகளை  தோள்  மீது போட்டு கொண்டு அந்த  அறையில் நடந்தான்...

பின் தனக்கு தெரிந்த தாலாட்டை பாட இலேசாக உறங்க ஆரம்பித்தாள்...

அதை தொடர்ந்து காரில் வரும்பொழுது அவன் கேட்டு ரசித்த பாடலை தீக்சாவை பார்த்து கொண்டே உருகி பாடினான்...

பூங்கதவே தாழ்  திறவாய் பூவாய் பெண் பாவாய்
பொன் மாலை சூடிடும் பூவாய் பெண் பாவாய்

நீரோட்டம் போலோடும் ஆசைக் கனவுகள் ஊர்கோலம்
ஆஹாஹா ஆனந்தம் ஆடும் நினைவுகள் பூவாகும்
காதல் தெய்வம் தான் வாழ்த்தும்
காதலில் ஊறிய ராகம்...

திருத் தேகம்..  எனக்காகும் தேனில் நனைந்தது என் உள்ளம்
பொன்னாரம் பூவாழை ஆடும் தோரணம் எங்கெங்கும்
மாலை சூடும் அன்னேரம்
மங்கல வாழ்த்தொலி கீதம்...

பூங்கதவே தாழ்  திறவாய் !!!  பூவாய் பெண் பாவாய் !!!

 

அவன் கம்பீரக் குரலுக்கு  ஆசை , காதல், ஏக்கம் எல்லாம் கலந்து அந்த குரலில் ஒலிக்க தீக்சாவே சில நொடிகள் அவன் குரலுக்கு மயங்கி விட்டாள்....

உறங்கிய தன் மகளை தொட்டிலில் கிடத்தியவன் இலகிய நிலையில்  கட்டிலின்  அருகில் நின்றிருந்தவளிடம் சென்று  அவள் எதிர்பாராத  நேரம் அவள் முகத்தை தன் கையில் ஏந்தி அவள் செவ்விதழில முரட்டுதனமாக அழுந்த முத்தமிட்டான்...

நீண்ட சில நிமிடங்களுக்கு பிறகு அவள் இதழை விட்டவன்

“யூ ஆர் மேக்கிங் மீ  க்ரேசி பேபி.. ஐ லவ் யூ... ஐ  நீட் யூ மேட்லி.. “ என்றவாறு அவளை இறுக்க அணைத்தான் ...

திடீரென்று அவன் கொடுத்த இதழ் முத்தத்திலயே தலை சுற்றி போனவள்  அவன் இறுக்கி அணைத்ததில் கிறங்கி, குழைந்து, உருகி நிக்க, அவனோ அதை அவளின் சம்மதமாக எடுத்து கொண்டு மேலும் முன்னேற திடீரென்று  விழித்து கொண்டாள் தீக்சா...

கண்ணில் போதையுடன் அவளையே அள்ளி பருகி கொண்டு  இருந்த அபிநந்தன் வேற மாதிரி தெரிந்தான் அவள் கண்ணுக்கு...

அவள் கண்கள் அந்த நந்தனை, தன் காதலனை தேட இந்த அபிநந்தன்   வேற மாதிரி இருந்தான்..

அவள்  நந்தனுடைய தீண்டல்கள் கொஞ்சல்கள் வேறாக இருக்க, இப்ப இருப்பவனின்  தீண்டல் வேறாக இருக்க என்னவோ வேற ஒருவன் தன்னை  தொடுவதை  போல இருந்தது  அவளுக்கு.....

அவ்வளவுதான்...  அடுத்த  நொடி துள்ளி குதித்து அவனை பிடித்து தள்ளினாள்.. இதை எதிர்பாராதவன் கட்டிலின் மீது விழப்போய் பின்  சுதாரித்து நின்று கொண்டு வெறி கொண்டவனை போல அவளை பிடித்து அணைக்க முயல, அவளோ அருகில் இருந்த  கத்தியை எடுத்து கையில் வைத்து கொண்டாள்...

“என் கிட்ட வராதிங்க....மீறி என்கிட்ட வந்தால்  என்னை  நனே கொன்னுக்குவேன்....” என்றாள் கண்ணில் நெருப்புடன்....

அவளின் இந்த திடீர் செயலால் சாக் ஆகி நின்றான் அபி... தன் முத்தத்திற்கும் அணைப்பிற்கும் முதலில் இலகியவள் நொடியில் ஏன் மாறிப்போனாள் என்று  குழம்பினான்....

“தீக்சா... ப்ளீஸ்... நான் உன் ஹஸ்பன்ட்... உன்னை தொட எனக்கு எல்லா  உரிமையும் இருக்கு.. என்னை ஏன் இப்படி விலக்கி வைக்கிற?? “ என்றான் அடிபட்டவனாக...

“இல்லை... நீங்க என் ஹஸ்பன்ட் இல்லை... என் பொண்ணுக்கு அப்பா மட்டும்தான்... நீங்க என் நந்தன் இல்லை...

நீங்க என்னை  தொடறது எனக்கு பிடிக்கலை.. எனக்கு என் நந்தன் தான் வேணும்... அவன் தொட்ட இந்த உடல் வேற யாருக்கும் இல்லை... என்னால் உங்களை இந்த அபிநந்தனை ஏத்துக்க முடியலை ... “ என்று  முகத்தை பொத்தி குலுங்கி குலுங்கி அழுதாள்....

அதை கேட்டு கடுப்பானவன்

“நந்தன்...  நந்தன்... நந்தன்.. அந்த  இடியட் அப்படி என்ன தான் டி பண்ணி தொலச்சான்??... ஏன் டி இப்படி என்னை படுத்தற ??... எனக்கு நினைவு வராத அந்த நந்தனை திரும்ப கொண்டு வா னு சொன்னா நான் என்ன  பண்ணுவேன்..

நரக வேதனையா இருக்கு..

இதுக்கு பேசாம உன்னுடன் வாழ்ந்த அந்த  என் நினைவுகள் தொலைந்து போன  மாதிரி நானும் அன்றே செத்து போயிருந்திருக்கலாம்.. இந்த  அளவுக்கு வலி வேதனை அனுபவிக்க வேண்டி இருந்திருக்காது...

சே.. நரகம் மாதிரி  இருக்கு.. எல்லாம் இருந்தும் ஆனால் இல்லாத மாதிரி.. இதெல்லாம் ஒரு வாழ்க்கையா?? என்றவன் தரையை காலால் எட்டி உதைத்து பின்  வேகமாக வெளியேறி  சென்றான்...

தீக்சாவோ  முகத்தை மூடி கொண்டு இன்னும் அழுது கொண்டிருந்தாள்...

பின் வேகமாக எழுந்து சன்னல் திரையை  விலக்கி பார்க்க அபி  காரை எடுத்து கொண்டு வேகமாக கிளம்பி சென்றான்..

அதை கண்டதும் திக் என்றது அவளுக்கு...

அவன் எப்பவும் காரை வேகமாக  ஓட்டுபவன்.. இன்று வேறு கோபத்தில்  வேகமாக போகிறானே.. “ என்று  மனது அடித்து கொண்டது..

“அவன் எப்படி போனால் எனக்கென்ன?? “ என்று வீம்பாக இருந்தாள் சிறிது நேரம்... மேலும் சில மணி நேரம் ஆகியும் அவன் இன்னும் வீடு  திரும்பி வராமல் இருக்க, மேலும் கொஞ்சம் பயம் பரவ  ஆரம்பித்தது.....

மனதின்  அறிப்பு தாங்க முடியாமல் தன் அலைபேசியை எடுத்து அவன் எண்ணிற்கு அழைத்தாள்...ஆனால் அது அணைக்க பட்டிருந்தது....

அதை  கண்டதும் இன்னும் அதிர்ந்து போனாள்...

“அவன் ஒரு நாளும் அலைபேசியை அனைத்து வைத்திருக்க மாட்டானே !! இன்று என்னாச்சு?? “ என்று  மீண்டும் உள் மனம் அடித்து கொண்டது....

வேற வழி இலலாமல் கொட்ட கொட்ட விழித்து கொண்டிருந்தாள் அந்த இரவு முழுவதும்..

மனதிற்குள் அனைத்து தெய்வங்களையும் வேண்டி கொண்டு....

திகாலை ஒலித்த அலைபேசியின் அழைப்பில அப்பொழுதுதான் கண் அயர்ந்தவள்  திடுக்கிட்டு விழித்தாள் தீக்சா...வேகமாக சென்று  அதை எடுத்து காதில் வைக்க, அதில் சொன்ன செய்தியை கேட்டதும்

“நந்தன்................” என்று  அலறியவாறு மயங்கி சரிந்தாள் தீக்சா...

(இன்னும் இரண்டு அத்தியாயத்துடன் இந்த பயணம் நிறைவு பெறும்...! ) 

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!