பூங்கதவே தாழ் திறவாய்-35(pre-final)

 


இதழ்-35

தீக்சா மீண்டும் கண் விழித்த பொழுது,  தன் அன்னை  கலங்கிய முகத்துடன் எதிரில் நின்று கொண்டிருப்பது தெரிந்தது...

என்னாச்சு எனக்கு ??  என்று  மூளையை கசக்கி அவசரமாக யோசிக்க, நேற்று இரவு நந்தன் வேகமாக வெளியில் சென்றதும் அதை தொடர்ந்து காலையில் கேட்ட செய்தியும் நினைவு வர, அவள் முகம் கலவரமானது....

தன் அருகில் இருந்த அன்னையிடம்

“மா.... ந... நந்..... நந்தனுக்கு என்னாச்சு மா?? இப்ப எப்படி இருக்கார்... எங்க இருக்கார்?? “ என்றாள் அவசரமாக......

அதைக் கேட்டு அவளை ஒரு எரித்து  விடும் பார்வை பார்த்தார் பரிமளம் எதையும் சொல்லாமல்....

“ப்ளீஸ் மா... அவருக்கு என்னாச்சு னு சொல்லு.... “ என்றாள் மீண்டும் கண்ணில் வழியும் நீருடன்....

அவளின் நிலையை கண்டு அவருக்குமே கஷ்டமாகத்தான்  இருந்தது..

ஆனாலும் மனதை  கல்லாக்கி கொண்டு

“நீ எதுக்கு அவரை பத்தி கேட்கற?? அதான் தினம் தினம் நீ உயிரோடு அவரை சாகடிச்சுகிட்டிக்கியே.. அவருக்கு என்ன ஆனால் உனக்கென்ன?? “ என்றார் வெறித்த பார்வையுடன்....

“ஐயோ... தப்புதான்... நான் பண்ணினது தப்புதான் மா.... எனக்கு இப்ப புரிஞ்சிடுச்சு.. ப்ளீஸ் மா.. இப்ப எங்க இருக்கிறார்னு  சொல்லுங்களேன்.... ப்ளீஸ்... “என்று கெஞ்சினாள்..

அப்பவும் பரிமளம் வாயை திறக்காமல் இருக்க, வேகமாக எழுந்து அமர்ந்தவள் கையில் இறங்கி கொண்டிருந்த ட்ரிப்சை நிறுத்தியவள் அதை  கழற்றி வீசிவிட்டு வேகமாக பெட்டில் இருந்து இறங்கினாள்..

அதைக் கண்டு பதறிய பரிமளம் அவள் அருகில் வர, அதற்குள் அவரை  தாண்டி அறையை விட்டு வெளியில் வேகமாக  வந்திருந்தாள்....

இங்கு சத்தம் கேட்டு அருகில் இருந்த நர்ஸ்  ஓடி வர, அவளை கண்டதும்

“சிஸ்டர்... என் ஹஸ்பன்ட் நந்தன்..  எங்க இருக்கார்னு சொல்லுங்களேன்... நான் அவரை  இப்பயே பார்க்கணும்.. “ என்றாள்  தீக்சா தவிப்புடன்

“நீங்க இப்படி நடக்க கூடாது மேடம்.. ரொம்ப வீக் ஆ இருக்கீங்க... திரும்பவும் மயங்கி விழுந்துடுவீங்க... கொஞ்ச நேரம் இங்கயே இருங்க... “ என்றாள் அந்த நர்ஸ்  

“ஐயோ... எனக்கு ஒன்னும் இல்லை சிஸ்டர்.. இது சாதாரண மயக்கம் தான்.. ஐம் ஆல்ரைட் நௌ.... ப்ளீஸ்... அவர்  ... என் ஹஸ்பன்ட்.... என்  நந்தன் எங்க இருக்கார்னு சொல்லுங்களேன்... நான் அவர இப்பயே பார்க்கணும்.. “ என்று அடம் பிடித்தாள்....

பின் அவளை சமாளிக்க முடியாமல் நந்தன் அட்மிட் ஆகி இருந்த அறையை சொல்ல வேகமாக அங்கு ஓடிசென்று அந்த அறைக்கு உள்ளே சென்றாள்...

கதவை திறந்ததும் சாக் ஆகி நின்றாள்...

தலையில் பெரிய கட்டுடன் கண் மூடி படுத்திருந்தான் நந்தன்...

அவனை சுற்றிலும் சில கருவிகள் இருக்க,  அவன் முகத்தில் வேதனையின் சாயல்...

அவனை கண்டதுமே வேகமாக அவன் அருகில் ஓடியவள்

“நந்தன்... “  என்று  அவன் மார்பில்  படுத்து கதறினாள்....

“எல்லாம்  என்னால் தான்... நான் உங்க கூட சண்டை போட்டிருக்க கூடாது...என்னால தான் உங்களுக்கு இப்படி ஆச்சு... நான் ஒரு பாவி...

உங்களை  சரியா புரிஞ்சுக்காம போய்ட்டேன்.. என்னோட  ஈகோவால முட்டாள்  தனத்தால உங்களை இழந்திருப்பேனே...

ப்ளீஸ் கண் முழிச்சுக்கங்க நந்தன்... நீங்க எனக்கு வேணும்.. நீங்க இல்லாம என்னால வாழ முடியாது..... ஐ லவ் யூ நந்தன்.... இது எனக்கு இப்பதான் புரிஞ்சுது....

ப்ளீஸ் ... எனக்காக நீங்க திரும்பி வரணும்... “ என்று கதறினாள்...

அவளின் கண்ணீர் அவன் மார்பை நனைக்க, மெல்ல கண் விழித்தான் அபிநந்தன்.... அதை கண்டவள் அக மகிழ்ந்து போய்

“நந்தன்..........” என்று மீண்டும் சந்தோச கூச்சலிட, அவனோ  ஒரு வெற்று வெறித்த பார்வையை அவள் மீது செலுத்தினான்....

அவனின் வெறித்த  பார்வைக்கான காரணம் புரிந்தது அவளுக்கு..

நேற்று இரவு அவனை கடுமையாக பேசியதால் தான் அவளை வெறித்து பார்ப்பது புரிந்தது....

“ப்ளீஸ்.. நந்தன்.. அப்படி பார்க்காதிங்க.... நான் பண்ணினது தப்புதான். உங்களை சரியா புரிஞ்சுக்காம விட்டுட்டேன்.. என்னோட  முட்டாள்  தனத்தால உங்களுக்குள்ளயே வேற ஒருவனை தேடிகிட்டிருந்திருக்கேன்...

இரண்டும் ஒன்னுதான் னு எனக்கு புரியாமல் முட்டாளா  இருந்திட்டேன்....ப்ளீஸ்... என்னை  வெறுத்திடாதிங்க... “ என்றாள் தன் கண்ணில் வழியும் நீருடன்...

அதை  கண்டதும் அவன் கைகள் துடித்தன் அவளை சமாதான படுத்த அவள் விழி நீரை துடைக்க....

ஆனால் ஏனோ தடுக்க,  இழுத்து கொண்டான் தன் கரங்களை...

மீண்டும் எதுவும் பேசாமல் ஒரு வெறித்த பார்வையுடன் கண் மூடி கொண்டான்...

அதை கண்டு திகைத்தவள்   மீண்டும் ஏதோ சொல்ல வர, அதற்குள் டாக்டர் அந்த கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தார்.....

அவளை பார்த்து புருவம் உயர்த்தவும்

“டாக்டர்... நான் தீக்சா.. நந்தனோட வைப்.... “ என்றாள் அவசரமாக

“ஓ.... “ என்று  புன்னகைத்தார்

“டாக்டர்.. அவருக்கு இப்ப எப்படி இருக்கு?? எதுவும் பிரச்சனை இல்லையே... “ என்றாள் அவசரமாக

“ஹ்ம்ம்ம்ம் பெரிய ஆக்சிடென்ட் தான் .. இவர் உயிர் பிழைச்சது உங்க தாலி பாக்கியம் தான் சொல்லுவேன்....

அபாய கட்டத்தை தாண்டிட்டார்... தலையில் நல்லா  அடிபட்டிருக்கு.. இன்னும் கொஞ்ச நாள் ரெஸ்ட் எடுக்கணும்.... “ என்றவர் நந்தனை பரிசோதித்து

“டேக் கேர் அபிநந்தன்.. “என்று   வெளியேறி சென்றார் அந்த மருத்துவர்....

அதற்குள் பரிமளம் உள்ளே  வந்திருந்தார்... கையில் பேத்தியுடன்...

தன் மகளை கண்டதும் அவன் முகத்தில் புன்னகை வந்தது.... அவளை வாங்க கை  நீட்டினான்.. அவளும் தந்தையின் முகம் பார்த்து  மலர்ந்து சிரித்து அவனிடம் தாவி சென்றாள்...

அவளை அணைத்து முத்தமிட்டவன் தன் மார்போடு சேர்த்து அணைத்து கொண்டான்....

தானாக நேற்று இரவு நடந்தது கண் முன்னே  வந்தது..

தீக்சாவிடம் சண்டை இட்டு வேகமாக கார் எடுத்து விரட்டியவன் ஒரு திருப்பத்தில் வேகமாக காரை ஓட்ட, எதிர் பாராமல் வந்த புறநகர் பேருந்தில் நேராக இடித்தது  கார்...

அவசரத்தில் சீட் பெல்ட் போடாமல் கார்  ஓட்டியிருக்க, அவன் தலை ஸ்டியரிங்கில் இடித்து அங்கயே மயங்கி சரிந்தான்..

நல்ல வேளையாக வளைவில் அந்த பேருந்து மெதுவாக வந்ததால் பெரும் ஆபத்தில் இருந்து தப்பித்தான்..

தலையில் மட்டும்  பெரிய காயத்துடன் இரத்தம் வழிய அந்த பேருந்தில் இருந்தவர்கள் உடனே அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர்_...

மயக்கத்தில் இருக்க அவனுக்கு முதலுதவி செய்து உடனடியாக சிகிச்சை செய்தனர்....காலையில் மயக்கம் தெளிந்த  பிறகுதான்  அவன் வீட்டு எண்ணை கேட்டு தீக்சாவை அழைத்து விவரம் சொல்லினர்....

ந்த ஆக்சிடென்ட் ஐ நினைக்க இப்பொழுதும் அவனுக்கு உடல் சிலிர்த்தது...

தனக்கு மட்டும் ஏதாவது ஆகியிருந்தால் தன் மகள் அப்பா இல்லாதவளாகியிருப்பாளே....

அப்படி ஒரு நிலை என் பிரின்சஸ்க்கு வந்திருக்கும்.. நல்ல வேளை.. “ என்று மனதுக்குள் சொல்லிகொண்டான்..

அதையே பரிமளம் சொல்லி புலம்பினார்...

“மாப்பிள்ளை.. உங்களுக்கு ஒன்னு ஆச்சுனா நாங்க என்னவாயிருப்போம்?? ... எங்களுக்குனு இருக்கிறது நீங்க மட்டும் தான்.... “ என்று  அதற்கு மேல்  வார்த்தை வராமல் தொண்டை அடைத்தது அவருக்கு...

கையால் வாயை பொத்தி கொண்டு குலுங்கினார்.... தீக்சாவுக்குமே அவர் சொல்வதை கேட்டு ஒரு நொடி உடல் நடுங்கியது...

“அவனுக்கு மட்டும் ஏதாவது ஆகியிருந்தால்?? கண்டிப்பா நானும் அவனுடனயே போய் சேர்ந்திருப்பேன்...

அவனுக்கு என்னை பற்றி நினைவு இல்லை என்றாலும் அவன் நன்றாக இருக்கிறான் என்று அறிந்தே அவளால் நிம்மதியாக இருக்க முடிந்தது...

அவன் இல்லை என்று வந்தால் ??? ஓ... மை காட்... நோ.... என் நந்தன் எனக்கு எப்பவும் வேண்டும்... அவனுக்கு என்னை பற்றி தெரியவில்லை என்றாலும் அவன் என் நந்தன் தான்.... ஆனால் இது முன்னரே தெரியாமல் போய்விட்டதே...

என்னையும் வருத்தி அவனையும் வருத்த பட வச்சுட்டனே....” என்று உள்ளுக்குள் புலம்பி கொண்டிருந்தாள் தீக்சா ...  

பரிமளம் அழுவதை கண்டு

“டோன்ட் வொர்ரி அத்தை... எனக்கு அப்படி எதுவும் ஆகாது....

என் பொண்டாட்டி கழுத்துல தொங்கறது பவர்புல்லான தாலியாக்கும்.....

ஒன்னுக்கு இரண்டு தரம் தாலி கட்டி இருக்கேன்... அவள் தாலியின் பவரால் தான்  இரண்டு முறையும் என் உயிர்க்கு எதுவும் ஆகலை...

என் உயிர் அவ கிட்ட இருக்கிறப்ப எனக்கு எதுவும் ஆகாது...நீங்க அழாதிங்க.. “  என்று  சிரித்தான்....

பரிமளத்திடம் இயல்பாக பேசினாலும் அவன் பார்வை தீக்சாவிடம் வந்த பொழுது மட்டும் அதே வெறித்த பார்வைதான்....

அதை கேட்டு கொஞ்சம் நிம்மதி அடைந்தாள் தீக்சா..

அவன் அவளை வெறித்து பார்த்தாலும் தன்னை பொண்டாட்டி என்று சொன்னதில் சிறு சந்தோசம் அவளுக்குள்..

“எப்படியோ என்னை  அவன் முழுவதும் வெறுக்க வில்லை... அது போதும் எனக்கு...” என்று  தன்னை தேற்றி கொண்டாள் தீக்சா...! 

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!