பூங்கதவே தாழ் திறவாய்-36(Final)
இதழ்-36
ஒரு வாரத்திற்கு பிறகு நந்தன் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு
வந்திருந்தான்...
இந்த
ஒரு வாரமும் தீக்சா அவனை விட்டு அகலாமல் அவன் பக்கத்தில் இருந்து அவனை கவனித்து கொண்டாள்...
பரிமளம்
தான் தன் பேத்தியை முழு நேரமும் கவனித்து கொண்டார்..
அவள்
பால் குடிக்கும் நேரம் மட்டும் அதுவும் அவரே தீக்சாவிற்கு நினைவு படுத்தி அவளை
பால் ஊட்ட வைத்து பின் தூக்கி கொண்டு சென்று விடுவார்...
என்னதான்
அவன் அருகில் இருந்தே அவனை கவனித்து கொண்டாளும், அவன் வாய் திறந்து அவளிடம் எதுவும் பேசவில்லை..
இவளோ ஒரு ஆயிரம் முறையாவது சாரி சொல்லி இருப்பாள்..
ஆனால்
அவனோ அதை எதுவும் கண்டு கொள்ளவில்லை..
அவளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை...
அதே
வெறித்த பார்வைதான்... அதை கண்டு இன்னும் கலங்கி போனாள்..
ஆனாலும்
தன்னை தேற்றி கொண்டு அவனை விட்டு பிரிய மனம் இல்லாமல் அவனுடனே தங்கி விட்டாள்...
ஒரு வாரத்திற்கு பிறகு தலையில் கட்டெல்லாம் பிரித்து அவன்
எப்பவும் போல எல்லா வேலையும் செய்யலாம்..
ஆனாலும்
ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ண வேண்டாம்.. “ என்று
சொல்லி அவனை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்....
வீட்டிற்கு
வந்தவனை பரிமளம் தன் மகள், மறுமகன், பேத்தி என மூன்று பேரையும் ஒன்றாக நிக்க வைத்து ஆரத்தி எடுத்து
உள்ளே அழைத்து சென்றார்....
“இதுவரை
இருந்த கெட்ட காலம் இன்றோடு போகட்டும்..இனிமேலாவது நீங்கள் இரண்டு பேரும் சந்தோசமா
இருங்க..” என்று வாழ்த்தினார்.....
அதை
கேட்டு நந்தன் முகத்தில் அதே வெறித்த பார்வை அவள் மேல் படர்ந்தது..அதை கண்ட
தீக்சாவிற்கு மனதை பிசைந்தது...
நந்தன்
தன் அறைக்கு சென்றவன் இந்த ஒரு வாரமாக தேங்கி இருந்த வேலைகளை கவனிக்கலானான்...
தீக்சா
மதியம் சமையலுக்கு தன் தாயுடன் உதவ
அவனுக்கு பிடித்த ஐட்டங்களாக பார்த்து பார்த்து
செய்தாள்....
மதிய
உணவை முடித்து அவன் திரும்பவும் மேல சென்று தன் வேலையை கவனிக்க ஆரம்பித்தான்..
மாலை கீழ் இறங்கி வந்தவன் தன் மகளை தூக்கி கொண்டு தோட்டத்திற்கு
சென்று அவளிடம் கொஞ்சி கொண்டே நடை
பயின்றான்...
சன்னல்
வழியாக அதை கண்டு ஏக்கமாக இருந்தது தீக்சாவிற்கு ...
“முன்பு
மாதிரி தன்னிடம் பேசமாட்டானா?? அவளை கொஞ்ச மாட்டானா?? என்று ஏக்கமாக இருந்தது..
எதேச்சையாக
திரும்பியவன் சன்னலில் தெரிந்த அவள் முகத்தில் தெரிந்த அந்த ஏக்க பார்வையை கண்டு
மீண்டும் ஒரு வெறித்த பார்வையுடன் தன் நடையை தொடர்ந்தான்....
தோட்டத்தில்
இருந்த அந்த தோட்டகார தாத்தாவுடன் சிரித்து பேசினான்... அவனின் அந்த வசீகர
சிரிப்பையே இமைக்க மறந்து பார்த்து கொண்டிருந்தாள்.....
அனைவரிடமும்
சிரித்து பேசுபவன் என்னிடம் மட்டும் ஏன் பாராமுகம் காட்டுகிறான்?? என்று நினைத்தவள்
“எல்லாம்
என்னால தான்.. என் முட்டாள் தனத்தால் தான்... அவன் என்னை தேடி வந்த பொழுதே அவனை எற்று கொண்டிருக்க வேண்டும்..
அவனை
வெறுத்த மாதிரி நடித்து அவனை விலக்கி வைக்க போய் அதையே இப்பொழுது அவன் தன்னிடம்
திருப்பி இருக்கிறான்....
எனக்கு
இப்பொழுது வலிக்கிறதை போலத்தான் நான் அவனை விரட்டிய பொழுது அவனுக்கும் வலித்திருக்கும்.... அந்த வலியிலும் என்னையே
சுத்தி வந்தானே...
அப்பயாவது
எனக்கு புரிந்திருக்கணும்...
வேண்டும்..
நான் செய்த தப்பிற்கு இந்த தண்டனை எனக்கு தேவைதான்..
“ என்று புலம்பினாள்....
இரவு உணவின் பொழுதும் தன் மாமியாரிடம் சிரித்து பேசியவன்
அவள் புறம் திரும்பவே இல்லை...
அவளும்
தலையை குனிந்து கொண்டு தன் கண்ணில் வழிந்த நீரை துடைத்துகொண்டாள்....
பின்
அவன் தன் மகளை தூக்கி கொண்டு மாடிக்கு சென்று
விட, அவளும் சிறிது நேரம் தோட்டத்திற்கு சென்று உலாவினாள் தன் வேதனை குறைய....
மீண்டும்
உள்ளே வந்தவள் பரிமளம் அழைத்து பால் டம்லரை
கையில் கொடுத்து மப்பிள்ளைக்கு கொடுக்க சென்னார்...
அதை
வாங்கி கொண்டவள் மாடியை நோக்கி சென்றாள்....
“சே...
எல்லாம் சரியாக இருந்திருந்தால் தன்
கணவனுடன் எப்படி ஒரு சந்தோசமான வாழ்க்கை
வாழ்ந்திருக்கலாம்.. என் முட்டாள் தனத்தால் எனக்கு கிடைத்த பொக்கிசத்தை தொலைத்து
விட்டேன்...
மீண்டும்
ஒரு முறை அவனிடம் பேசி பார்க்கலாம்... “ என்று முடிவு செய்து தங்கள் அறைக்குள் சென்றாள்...
ஆதிரா
உறங்கி இருக்க அவளை தொட்டிலில் கிடத்தி
இருந்தான்...
படுக்கையில்
ஒரு தலையணை எடுத்து முதுக்குக்கு பின்னால் வைத்து சாய்ந்து அமர்ந்து கொண்டு தன் அலைபேசியை நோண்டி கொண்டிருந்தான்...
அவனிடம்
தயங்கியபடி சென்றவள் பால் டம்ளரை நீட்ட அவனும் நிமிர்ந்து அவளை பார்க்காமல் அதை
வாங்கி பருகியபின் மீண்டும் அவளிடம் நீட்டினான்...
அதை
கொண்டு போய் வைத்தவள் மீண்டும் தயங்கியபடி
அவன் அருகில் வந்து நின்றாள்....
அவன்
திரும்பி பார்க்காமல் இன்னும் அலைபேசியிலயே பார்த்து கொண்டிருக்க,
“சாரி..
நந்தன்.... நான் பண்ணினது தப்புதான்... என்னை மன்னிக்கவே மாட்டீங்களா... ப்ளீஸ் என் கிட்ட பேசுங்க...
எனக்கு
ரொம்ப கஷ்டமா இருக்கு.. உங்களோட இந்த பாராமுகம் ரொம்ப வலிக்குது.....இப்பதான் தெரியுது..
நான் உங்களை எவ்வளவு ஹர்ட் பண்ணி இருக்கேனு...
அதோட
வலி நான் அனுபவிக்கும் பொழுது தான் உங்களோட வலியும் வேதனையும் புரிந்தது..
ஐம்
சாரி....ரியலி சாரி.... ப்ளீஸ்.. என்கிட்ட பேசுங்க.... ஐ லவ் யூ..... நீங்க.. என் நந்தன் எனக்கு வேணும்.....என்னை வெறுத்திடாதிங்க...ப்ளீஸ்
.... " என்று கையால் முகத்தை மூடி கொண்டு குலுங்கினாள் தீக்சா.....
"அந்த
இயற்கை சாட்சியாக, அந்த அருவி சாட்சியாக, அந்த ஆதவன் சாட்சியாக நான்
உன்னை மணந்தேன்....என் உயிரில் கலந்தவள்
நீ... உன்னை எப்படி என்னால் வெறுக்க முடியும் ரதி பேபி.....
" என்ற அவன் ஆழ்ந்த குரல் கேட்க திடுக்கிட்டு தலையை நிமிர்த்தினாள் தீக்சா....
தன்
மார்புக்கு குறுக்காக கைகளை கட்டி கொண்டு
இவளை பார்த்து குறும்பாக கண் சிமிட்டி சிரித்தான் நந்தன், அபிநந்தன்....
அதை
கண்டு அப்படியே திகைத்து நின்றாள்.. ஒரு வேளை இது கனவோ பிரம்மையோ என்று தன் கையை கிள்ளி பார்த்தாள்...
"ஹா
ஹா ஹா இது கனவு இல்லை .. நிஜம்தான் ரதி பேபி....நம்பிக்கை இல்லைனா என் அருகில்
வா... நிரூபித்து காண்பிக்கிறேன்... " என்று அவள் இதழ்களை ரசனையாக பார்த்து
குறும்பாக சிரித்தான்...
"ந...
நந்...... நந்தன்??? .... " என்றாள் திக்கி திணறி அவளால இன்னும்
நம்ப முடியவில்லை.....
"ஹ்ம்ம்ம்ம்
உன் நந்தன் தான்... உன்னை பார்த்த அன்றே
காதலித்து அடுத்த நாளே உன்னை மணந்து அன்று
இரவே நம் வாழ்க்கையை தொடங்கிய அதே அவசரக்கார பிடிவாதக்கார உன் நந்தன் தான்.... நந்தன் உன் நாதன்.....
" என்று மீண்டும் கண் சிமிட்டினான்.....
அதை
கேட்டதும் இன்ப அதிர்ச்சியில் திக்கு முக்காடி போனாள் தீக்சா..
இதுதான்..
இவனைத்தான், இந்த குறும்புக்கார நந்தனைத்தான் அவள் இத்தனை நாளாக தொலைத்து விட்டு தேடி கொண்டிருந்த
அவள் நாதன்.....
“என்
நந்தன்.. என் நாதன் கிடைத்துவிட்டான்...” என்று
ஆச்சர்யமாக பார்க்க அவனோ அவள் அருகில் நகர்ந்து அவள் கையை பிடித்து சுண்டி
இழுக்க,
அதை எதிர்பாராமல் தடுமாறி அவன் மார்பின் மீது சரிந்தாள்.....
தன்
மேல் விழுந்தவளை இறுக்கி அணைத்தவன் அவள் எழும்பு முறியும் அளவுக்கு இறுக்கி கொண்டான்....
அவளுமே
அவனை விலக்காமல் அவன் மார்பில் நிம்மதியாக முகம் புதைத்து கொண்டாள்....
அவன்
மார்பில் முகம் புதைத்து கொண்டவளுக்கோ,காடு மேடெல்லாம் அலைந்து திரிந்து பின் பத்திரமாக தன் கூட்டுக்குள் தஞ்சம் புகுந்ததை போல நிம்மதியாக, ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது ....
இருவருமே
நீண்ட நேரம் அந்த இறுகிய அணைப்பில்
இருந்து வெளி வர பிடிக்காமல் ஒருவருக்குள் ஒருவருவராக கலந்திட துடித்தனர்...
தீக்சா
தான் மெல்ல சமாளித்து கொண்டு, அவன் மார்பில்
சாய்ந்தவாறே தலையை நிமிர்த்தி அவன் முகம் பார்த்து
“நந்தன்...
உங்களுக்கு பழசெல்லாம்..?? " என்று இழுத்தாள்..
"ஹ்ம்ம்ம்
எல்லாம் நினைவு வந்து விட்டது ரதி பேபி...
முக்கியமாக
என் ரதியோடு நான் கலந்த அந்த நிமிடங்கள்
... உன்னோடு நான் கழித்த என் வாழ்க்கையின் பொக்கிசமான நினைவுகள் எனக்கு மீண்டும் திரும்ப
கிடைத்து விட்டன....
ஹப்பா.....
எத்தனை காதல் அந்த நந்தனிடம்.... இப்ப புரிகிறது. நீ ஏன் இந்த அபிநந்தனை விலக்கி நிறுத்தினாய் என்று ...
" என்று குறும்பாக கண் சிமிட்டினான்....
அதை
கண்டு அவள் கன்னங்கள் ரோஜாவை பூக்க வைக்க, அதில் கிளர்ந்தவன்
குனிந்து அவள் பட்டு கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான்....
அவளுமே
அதை அனுபவித்து ரசித்தாள்...
"என்
மேல உங்களுக்கு கோபம் இல்லையா நந்தன்?? .... உங்களை ரொம்ப கஷ்டபடுத்திட்டேன்...
"என்றாள் வருத்தத்துடன்....
"கோபம்..
இல்லை பேபி... ஆனால் வருத்தம்தான்... நந்தன் அபிநந்தன் இரண்டும் ஒன்னுதான் னு உன்னோட மரமண்டைக்கு புரிய மாட்டேங்குதே என்று...
" என்று சிரித்தான்...
அதை
கேட்டு அவள் செல்லமாக முறைக்க, அவள் மூக்கை பிடித்து ஆட்டியவன்
"ஹா
ஹா ஹா பழைய நினைவுகள் வந்த பிறகுதான் உன் நிலை எனக்கு புரிந்தது பொண்டாட்டி...
அப்படி
உன்னை உருகி உருகி காதலித்தவன் திடீரென்று வேறொருவனாக வந்து நின்றால் அது உனக்கு எவ்வளவு
கஷ்டம்னு இப்ப புரிந்து கொண்டேன் ரதி
பேபி...
நான்
தான் உன்னை ரொம்ப கஷ்ட படுத்திட்டேன்... என்னை மன்னித்து விடு கண்மணி....இனிமேல்
உனக்கு எந்த கஷ்டமும் நெருங்காமல் இந்த நந்தன் பார்த்து கொள்வான்...
இப்ப
என்னை ஏற்று கொள்வதில் உனக்கு எந்த கஷ்டமும் இல்லையே..” என்றான்....
அவளும்
இல்லையென்று தலை அசைத்தவள்...
“நான்
காதலித்து மணந்தது அந்த பிடிவாதக்கார, குறும்புக்கார நந்தனா இருந்தாலும் இப்ப பொண்டாட்டியிடம் கெஞ்சி கொஞ்சி
பொறுமையாக எடுத்து கூறி புரிய வைக்க முயன்ற இந்த ஸ்லோ அபிநந்தனும் எனக்கு பிடித்து போய்விட்டான்...”
நந்தன், நாதன் , அபிநந்தன் என்று எந்த அவதாரத்தில் வந்தாலும் இந்த ரதி அவனுக்காகத்தான் ஏங்கி கொண்டிருப்பாள்....
உங்களை
பிரிந்த அந்த நொடியில் இருந்தே புரிந்து கொண்டேன்.. நீங்கள் எப்படி வேணாலும்
மாறினாலும் மனசு ஒன்னுதான்....
இந்த
மனசைத்தான் நான் உயிரா காதலிக்கிறேன்.... " என்று அவன் இதயத்தில் கை வைத்து காட்ட,
அவள்
கையை இழுத்து அதில் அழுந்த முத்தமிட்டவன்
"ரொம்ப
தேங்க்ஸ் டா... ரதி பேபி... " என்றான் இலகிய நிலையுடன்..
“உங்களுக்கு
பழைய நினைவுகள் வந்து விட்ட பிறகும் ஏன் என்கிட்ட பாராமுகம் காட்டினீங்களாம்..
" என்றாள் சிணுங்களுடன்
“ஹா
ஹா ஹா . அது சும்மா உன்னை சீண்டி பார்க்க...
நீ
எப்படி தவிக்கறனு பார்க்க.. ஆனால் நீ
தவிக்கறப்ப எல்லாம் என்னால் தாங்க முடியவில்லை.. .உன்னை விட நான் தான் தவித்து
போய்ட்டேன்.. இந்த ஒரு வாரம் உன்கிட்ட பேசாமல் கல் மனதாக நடித்தது நரக வேதனை....
அப்பா...
அந்த வேதனை என் வாழ்வில் எப்பவும் வரக்கூடாது... நான்
எப்பவும் என் ரதி பேபியை கண் கலங்காமல்
பார்த்துக்கணும்....
இனி
என் வாழ்வில எல்லாம் வசந்த காலமே....” என்று நிம்மதி பெருமூச்சு விட்டான்..
“சரி
பொண்டாட்டி.... பேசினது போதும்..... இருவரும் நம்மை உணர்ந்து கொண்ட இந்த நாளை
கொண்டாடிடலாமா?? “ என்று குரும்பாக கண்
சிமிட்டினான்..
அவன்
சொல்வதின் அர்த்தம் புரிய அவள் முகம் செவ்வானமானது...
“என்
நந்தன் ஆக இருந்தால் இப்படி எல்லாம் என்னிடம் பெர்மிசன் கேட்டு கொண்டிருக்க
மாட்டான்.. “ என்றாள் வெக்கத்துடன்...
அதில்
இன்னும் கிறங்கியவன் அதற்குமேல்
தாமதிக்காமல் அவள் இதழை தன் வசபடுத்தி கொண்டான்.....
அதில்
இருந்த தேனை பருகினான் காதலுடன்...
அந்த
பூவையவளும் அந்த வண்டிடம் மயங்கி தன் பூங்கதவை முழுவதுமாக அவனுக்காக தாள் திறக்க , அவனும் காதல், ஆசை, மோகம்
மற்றும் அவளை வென்றுவிட்ட கர்வத்துடன்
அதில் நுழைந்து அவள் அளித்த விருந்தை உண்டு களித்தான்.....
ஒரு
வருடமாக பிரிந்திருந்த ஏக்கம் தீரும் வரைக்கும் அந்த பூவையவளை விட வில்லை...
அவளும்
தன் கணவன் கேட்டதை வாரி வழங்கி மீண்டும் அவனுள் ஒன்றாக கலந்தாள் அந்த நந்தனின் ரதி.....
இவர்கள்
இருவரும் இன்னும் பல ஜென்மங்கள் இதே அன்புடனும் காதலுடனும் இணைந்து களித்து இருக்க வாழ்த்தி விடைபெறுவோம்.....
நன்றி!!!
இந்த
கதையை பொறுமையாக வாசித்து ரசித்த அனைத்து வாசகர்
தோழமைகளுக்கும் என் மனமார்ந்த
நன்றிகள். இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை மறக்காமல் என்னுடன் பகிர்ந்து
கொள்ளுங்கள்.
*****சுபம்*****
Super story mam.
ReplyDeleteThanks pa!
DeleteVery nice and lovely mam
DeleteThanks pa!
Delete