என்னுயிர் கருவாச்சி-56(pre-final)
அத்தியாயம்-54 பூ ங்கொடிக்கு அவனின் தன் பிள்ளை மீதான பாசத்தை கண்டு பொறாமையாக இருந்தாலும் , உள்ளம் பூரித்தது. பிள்ளை பிறந்ததில் இருந்து இன்றுவரை அவளுக்கு ஒரு கஷ்டத்தையும் கொடுக்காமல் அவனேதான் பார்த்துக் கொள்கிறான். . கணக்குக்கு மூன்று மாதம் பிறந்த வீட்டில் இருக்க வேண்டும் என்றதால் , பூங்கொடி தன் பிறந்த வீட்டில் இருக்க , அவனும் அங்கேயே தங்கிவிட்டான். புள்ளையை பாத்துக்க என்று சிலம்பாயி , மலர்க்கொடி , குட்டி மச்சான் அன்பரசன் பக்கத்து வீட்டு சரோஜா என்று அத்தனை பேர் இருந்தும் , யாரிடமும் தன் மகளை கொடுக்காமல் தன் மகளை முழு நேரமும் பார்த்துக் கொண்டது என்னவோ அவன் தான். தமிழ் மாதத்திற்கு மூன்று மாதம் கணக்கு முடிந்ததுமே , தன் மனைவியையும் மகளையும் தன் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டான். வேலைக்கு செல்லும் நேரம் போக மீதி நேரம் முழுவதும் அவன் மகளுடன் தான்.. அவளை தூங்க வைப்பதும் அவனுடைய தொழில்தான். இதோ இப்பொழுது கூட தன் மகளை தோளில் போட்டு தட்டி கொடுத்தபடி உறங்க வைத்துத்தான் தொட்டிலில் போட்டான். அத...