என்னுயிர் கருவாச்சி-56(pre-final)

 


அத்தியாயம்-54

 

பூங்கொடிக்கு அவனின் தன் பிள்ளை மீதான பாசத்தை கண்டு பொறாமையாக இருந்தாலும்,  உள்ளம் பூரித்தது.

பிள்ளை பிறந்ததில் இருந்து இன்றுவரை அவளுக்கு ஒரு கஷ்டத்தையும்  கொடுக்காமல் அவனேதான் பார்த்துக் கொள்கிறான். .  

கணக்குக்கு  மூன்று மாதம் பிறந்த  வீட்டில் இருக்க வேண்டும் என்றதால், பூங்கொடி தன் பிறந்த வீட்டில் இருக்க, அவனும்  அங்கேயே தங்கிவிட்டான்.

புள்ளையை பாத்துக்க என்று சிலம்பாயி, மலர்க்கொடி, குட்டி மச்சான் அன்பரசன் பக்கத்து வீட்டு சரோஜா என்று அத்தனை பேர் இருந்தும், யாரிடமும் தன் மகளை கொடுக்காமல்   தன் மகளை முழு நேரமும் பார்த்துக் கொண்டது என்னவோ அவன் தான்.  

தமிழ் மாதத்திற்கு மூன்று மாதம் கணக்கு  முடிந்ததுமே,  தன் மனைவியையும் மகளையும் தன் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டான்.  

வேலைக்கு செல்லும் நேரம் போக மீதி நேரம் முழுவதும் அவன் மகளுடன் தான்.. அவளை தூங்க வைப்பதும் அவனுடைய தொழில்தான்.  

இதோ இப்பொழுது கூட தன் மகளை தோளில் போட்டு தட்டி கொடுத்தபடி உறங்க வைத்துத்தான்  தொட்டிலில் போட்டான்.

அதை நினைத்து சிரித்துக் கொண்டவள், தன் கணவன்  மஞ்சத்தில் இருந்த முடியை திருகியபடி

“ஏன் மாமா... என் பிரசவம் அன்னைக்கு அம்புட்டு டென்ஷனான... அன்னைக்கு பொம்பள மாதிரி பொசுக்குனு மயங்கி  விழுந்ததுதான் ஊருக்குள்ள இன்னைக்கு வரைக்கும் எல்லாரும் சொல்லி சொல்லி சிரிக்கிறாங்க...” என்று கேலியாக சிரித்தாள் பெண்ணவள்.

கூடவே அந்த சிரிப்பில் அம்புட்டு பெருமை அவளுக்கு...தன் கணவன் தனக்காக எவ்வளவு துடித்தான் என்று கர்வமாக கூட இருந்தது.  

“சிரிச்சா சிரிச்சுட்டு போகட்டும் டி.... போடி.. உனக்கு என்ன தெரியும்அன்னைக்கு  நான் பட்ட வேதனை?  

உனக்கு மட்டும் ஏதாவது ஆகியிருந்தால் நான் உயிரோடவே  இருந்திருக்க மாட்டேன் டி...”  என்று இப்பொழுதும் அந்த நொடியின் வலி,  அவன் உள்ளே பரவ, அவன் கண்களில் அப்படி ஒரு வலி, வேதனை.

வேதனையில் துடித்த அவன் இமைகளை மெல்ல நீவி விட்டவள்,  

“என் மேல அம்புட்டு ஆசையா?  இல்ல காதலா ? “  என்று தலை சரித்து மையலுடன் கேட்க, அவனோ மெல்ல புன்னகைத்தவன்,

“ரெண்டும் தான் டி... நீ  என் உசுருடி...அப்ப இந்த உசுரு போனால், இந்த உடல் மட்டும் எப்படி பொழைக்கும்... அடுத்த கணம் நானும் போய் சேர்ந்திருப்பேன்...”  என்று தழுதழுத்தவாறு தன் மஞ்சத்தில்  கிடந்தவளை இன்னுமே  இறுக்கி அணைத்துக் கொண்டான்.

அவளின் எலும்புகள்  நொருங்கி விடும் அளவுக்கு இறுக்கி அணைத்த அந்த அணைப்பிலயே அவள் மீதான அவனின் காதல் பெண்ணவளுக்கும் புரிந்தது தான்.

ஆனாலும் அவனை சீண்ட எண்ணி,

“இல்ல... நான்  நம்ப மாட்டேன்...நான்  உன்  உசுருனா, நீ  என்னை ஏன் கருவாச்சினு  கூப்பிடனும்...? என்னை ஏன் அப்படி கூப்பிட்டு வெறுப்பேத்தனும்?..நான் அவ்வளவு கருப்பாவா இருக்கேன்..? ”  என்று சிணுங்கினாள் அவன் மனையாள்

“ஹா ஹா ஹா அது சும்மா உன்னை சீண்டடி.. கருப்பா இருந்தாலும் எம்புட்டு கலையா இருக்க தெரியுமா? கருப்பழகி டி  நீ... உன் கலர்ல  தாண்டி நான் கவுந்தேன்...

நீ பொறந்தப்பவே கருகருனு இருந்தாலும்,  இந்த துருதுரு குண்டு  முழிதான்டி அப்பயே என்னை கவர்ந்து இழுத்தது.

நீ வளர்ந்த பொறவும், உன் மாநிறத்துக்கு, இந்த முழிய  நீ உருட்டி உருட்டி காட்டி என்னை மிரட்டறப்ப எல்லாம் எம்புட்டு  அம்சமா இருக்கும் தெரியுமா?

அதோட இல்லாம, நானும் கருப்புதான?  என் அம்மா சொன்ன மாதிரி என் கலருக்கு ஏத்தவ நீதான். இந்த கருவாயனுக்கு ஏத்த கருவாச்சி நீ தான் டி... என் ஆசை பொண்டாட்டி..” ,

என்று அவளை இறுக்க அணைத்துக் கொண்டு,  அவளின் நெற்றியில்  முத்தமிட, அதில் தன் நிறத்தை பற்றி இதுவரை இருந்த தாழ்வு மனப்பான்மை ஓடியே போனது பூங்கொடிக்கு.

யாராவது அவளை கருவாச்சி என்றாலே கோபம் பொங்கி வரும். நான் ஒன்னும் கருப்பு இல்ல.. மாநிறம்தான் என்று திருப்பி சொல்லி முறைத்தாலும் உள்ளுக்குள் பெரிய மனத்தாங்கலாக  இருக்கும்.

இன்று தன் கணவனே அவள் அழகிதான் என்று சொல்லிவிட, உள்ளம் பூரித்தது. ஆனாலும் அவனை இன்னும் சீண்ட எண்ணி, 

“ஐய... இதெல்லாம் செல்லாது...உனக்கு என்னை பிடிச்சிருக்குனா,  எனக்கு ஐ லவ் யூ சொல்லு...”  என்று இன்னுமாய் உதடு பிதுக்கி சிணுங்கினாள்.

அவளின் திரண்ட இதழை  தன் கட்டை விரலால்  அழுத்தி வருடியவன்

“ஏன் டி?  வாய் விட்டு சொன்னால் தான் என் காதல் உனக்கு தெரியுமா?  என் உயிரே நீதான் என்று புரியலையா? “  என்று அவளின் செவ்விதழை சுண்டி விட,  

“அதெல்லாம் எனக்கு புரியாது...  இப்போ எனக்கு ஐ லவ் யூ சொல்லு...”   என்று அவனை வம்பிழுக்க,  

“சரி டி.... ஐ லவ் யூ கருவாச்சி .... “  என்று ஹஸ்கி குரலில் சொன்னவன், தாபத்தோடு அவளின் கன்னத்தை செல்லமாக கடித்தான்.

அதில் அவளும் சொக்கித்தான் போனாள். அவனின் கடி கூட சுகமாக தித்தித்தது...  

“ஆமாம் மாமு... என்னை எப்ப இருந்து உனக்கு பிடிக்குமாம்? எப்ப இருந்து என்னை லவ் பண்ண ஆரம்பிச்ச ? “  அவனின் அடர்த்தியான சிகைக்குள்  கை விட்டு அலைந்தவாறு ஆர்வத்துடன் கேட்டாள்.  

“நீ பிறந்ததிலிருந்தே டி...”   என்று  சிரித்தான்.  

“என்னது?  நான் பிறந்ததில் இருந்தே வா? “  என்று தன் கண்களை பெரிதாக விரித்து ஆச்சர்யத்தோடு கேட்க, அவளின் குண்டான கன்னங்களுக்கு மேல குடை போல பெரிதாக விரிந்த அவளின் விழிகளுக்குள் முழுவதுமாக தொலைந்தே போனான்.  

விரிந்த அவளின் இமைகளை  தன் முரட்டு இதழ் கொண்டு மூடியவன்,

“ஆமான் டி... நம்ம பாப்பா பொறந்த  அதே  பெரிய ஆஸ்பத்திரியில் தான் நீயும் பொறந்த.  எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கு. அப்ப எனக்கு அஞ்சு வயது.  என் அம்மா கையை பிடிச்சுக்கிட்டு உன்னை பாக்க வந்தேன்.  

அத்தை பெட்டில படுத்திருக்க, அவர் பக்கத்தில் இருந்த தொட்டிலில் கருகருனு  நவாப்பழக் கலரில் இருந்த நீ...

உன்னை பாத்ததும் என்  அம்மா குனிஞ்சு உன்னை தூக்கி கொண்டு,

“வாடி கருவாச்சி... என் ஆசை மருமவளே...என் மவன் கலருக்கு பொருத்தமா அவன் கலர்லயே பொறந்திருக்கியே...” என்று சிரித்து உன்  கன்னத்துல முத்தமிட்டாங்க.

அதை ஆசையா பாத்துக்கிட்டு இருந்த என் கிட்ட குனிஞ்சு உன்னை காட்டி,

“நல்லா பாத்துக்கடா ராசா...  இந்த கருவாச்சி தான் உன் பொண்டாட்டி. நீ . இவளை நல்லா பாத்துக்கணும்...”  என்று என்கிட்ட காட்டினாங்க.

என் அம்மாவின் அந்த சிரித்த முகம் இன்னுமே என் கண்முன்னே நிக்குது...” என்றவனின் குரல் கரகரத்தது.

தன் அன்னையின் நினைவில் வேதனைப்படுகிறான் என புரியவும், மீண்டும் அவன் இமைகளை நீவி விட்டு, அவன் கையை அழுத்தி கொடுத்து அவனை இயல்பாக்கினாள்.

அவனும் ஒரு பெருமூச்சை எடுத்து விட்டவன்,  

“அம்மா என்கிட்ட உன்னை காட்டினதும் எனக்குள் அப்படி ஒரு பரவசம். அதுவும் அந்த நேரம் நீ என்னை பார்த்து சிரிக்கவும் எனக்கு அப்படி ஒரு சந்தோஷம்.

என் அம்மா பண்ணின மாதிரியே உன் கொழுகொழு கன்னத்துல மெல்லமா முத்தம் கொடுத்தேன்.... “ என்று புன்னகைத்தான்.

“என்னாது... யோவ் மாமு... அப்ப என்னை முன்னாடியே கிஸ் பண்ணினியா? “என்று செல்லமாக முறைக்க,

“ஹீ ஹீ ஹீ அப்ப மட்டும் இல்லடி... அத்தை உன்னை தூக்கிட்டு வீட்டுக்கு வந்ததும், தினமும் உன் வீட்டுக்கு  வந்துடுவேன். காலை நீட்டி  கீழ உட்கார்ந்துகிட்டு,  உன்னை தூக்கி மடியில வச்சுகிட்டு கொஞ்சுவேன்.

உன் கன்னத்தை இப்படித்தான் நிமிண்டுவேன்...”  என்று பிரசவத்திற்கு பிறகு இன்னுமாய் பொழிவு கூடியிருந்த  அவளின் குண்டு கன்னத்தை  அழுத்தமாக நிமிண்டினான்.

“உன் உதட்டை இப்படி தொட்டு பார்ப்பேன்...”  என்று அவளின் இதழை அழுத்தினான்.

அவன் அழுத்தியதில் அவளுக்கு வலித்தாலும்,  அது இன்பமான வலியாகத்தான் இருந்தது.

“ஸ்ஆஆஆஆ...”    என்று அவஷ்தையில் முனகினாள்.

அவனோ அதோடு நிறுத்தாமல்

“அப்புறம் உன் கை கால் எல்லாம்  தொட்டு பார்ப்பேன்...” என்றவன் அவளின் கை மீது ஊர்வலம் நடத்தி அவளின் வாழைத்தண்டை போன்ற கால்களை  அவன் கரத்தால் அழுந்த  வருடியவாறு,  கீழிருந்து மேலாக பயணம் செய்தவன் , மேலே வந்ததும் அவளின் இடைக்கு மாறி இருந்தான்.

மாராப்பு விலகி அவனின் பார்வைக்கு பளிச்சென்று  காட்சி அளித்த அவளின் வெற்றிடையில் கை வைத்து அழுத்தினான்.

அவளோ மீண்டும்

ஸ்ஆஆஆ ஆ என்று இன்ப அவஷ்தையில் முனகி,  தன் உடலையும் வில்லாக வளைத்தாள்.

அவளின் உணர்வுகள் கிளர்ந்து எழ, அவளின் கரமோ அவன் சிகையை அழுத்தி பிடித்துக்கொண்டது.

அவளின் கிளர்ந்த நிலையைக் கண்டவன், அவளின் இடையை கசக்கிய கரங்கள் மேலும் முன்னேறி  அவளின் பெண்மையை தீண்ட, அதில் தவித்து தான் போனாள் பெண்ணவள்.

ஆனாலும் அவன் கதை சொல்லிக்கொண்டிருக்கிறான் என்பது நினைவு வர, தன் உணர்வுகளை தற்காலிகமாக கட்டுபடுத்தியவள்,

“டேய்... இங்கயுமா தொட்ட? “ என்று வெட்கத்தோடு முறைக்க, அவள் எதை சொல்கிறாள் என்று ஒரு நொடி குழம்பியவன், பின் அவன் கரம் வருடிய இடத்தை உணர்ந்ததும் வெட்கத்தோடு சிரித்தான்.

“சீ... போடி... இதெல்லாம் அப்ப  எனக்கு தெரியாதே.. இல்லைனா என் பொண்டாட்டியை அப்பவே ரேப் பண்ணி இருப்பேன்... “ என்று கல்மிஷமாக சிரிக்க,

“கிழிச்சிருப்பிங்க... கல்யாணம் ஆகியே அஞ்சு மாசமா ஒன்னும் பண்ணாம தள்ளி தள்ளி போன மச்சான்... நான் சின்ன புள்ளையா இருக்கிறப்பயே என்னை ரேப் பண்ணி இருப்பாராம்... போய்யா...” என்று அவன் கன்னத்தை அழுத்தமாக கடித்தாள்.

“அடிப்பாவி... பாவம் சின்ன புள்ள.. நான் இறுக்கி புடிச்சா உன் எலும்பு முறிஞ்சி போய்டுமேனு பாவம் பாத்து வயித்துல ஈரத்துணியை கட்டிகிட்டு படுத்துகிடந்த நல்லவனைப் போய் இப்படி சொல்லிட்டியே...

உன்னையெல்லாம் கல்யாணமான  முத ராத்திரியே கசக்கி புரட்டி எடுத்திருக்கணும் டி.. “ என்று செல்லமாக முறைக்க,

“ஹீ ஹீ ஹீ என்னை கசக்கி புரட்டறது எல்லாம் உனக்கு வராது மாமு... நீதான் நான் கஷ்ட படுவனோனு பாத்து பாத்து பம்மி பம்மி இல்ல   பழகற..” என்று சீண்ட,

“அப்படியா...இன்னைக்கு பாருடி. உன்னை எப்படி கசக்குறேனு... “ என்று விஷமமாக கண் சிமிட்ட,

“அதையும் தான் பார்க்கலாம்... சரி.. இப்ப உன் கதையை மேல சொல்லு... “ என்று அவனின் அழுத்தமான இதழை கிள்ளினாள்.

அதுவரை தன் மனைவியின் சீண்டலிலும், அவனின் பால்ய நினைவுகளிலும் கனிந்து இலகிய நிலையில் இருந்தவன், இப்பொழுது உடல் விரைக்க, தாடை இறுக, முகத்தில் சொல்லொன்னா வேதனை வந்து போனது. 

“ப்ச்... அப்புறம்தான் என் வாழ்க்கையில சொல்லிக்கிற மாதிரி எதுவும் நடக்கலையே...

என்னை பெத்தவங்க ரெண்டு பேரும் என்னை அனாதையா தவிக்க விட்டுட்டு போய்ட்டாங்க... என் தாத்தன்... அவரு கொஞ்ச நாள் எனக்கு ஆதரவா இருந்தார்.

பொறவு அந்த மனுசனும் இனி உன் பாடுனு என்னை விட்டுபோட்டு போய் சேர்ந்துட்டார்.

விவரம் தெரியாத அந்த வயசுலயும்  எனக்கு இருந்த  ஒரே சந்தோசம் நீதான் டி...  

எங்க சுத்தினாலும் ஒரு நாளைக்கு ஒரு தரமாவது உன் வீட்டுக்கு  ஓடிவந்து உன்னை ஓடிப் போய் பாத்துடுவேன்.

உன் கன்னத்துல இப்படி ஆசையா முத்தம் கொடுத்துட்டு ஓடிப்போய்டுவேன்.

அப்புறம் பெரியவன்  ஆக, ஆக கொஞ்சம் கொஞ்சமா மத்தவங்க கிட்ட இருந்து ஒதுங்கினாலும்  உன்னிடம் மட்டும் உரிமையோடு சீண்டும் பழக்கம் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.  

மற்ற பெண்களிடம் இருந்து ஒதுங்கிச் செல்லும் நான் உன்னிடம் மட்டும்தான் உரிமை எடுத்துக் கொள்வது.  

அப்புறம் அது என்னமோ...  என்  அம்மா உன்னை கருவாச்சி என்றது அப்படியே என் மனதிலும் பதிந்து போச்சு

உன்னை கிண்டல் அடிப்பதற்காக அப்படி சொல்லி சீண்டினேன் டி. அப்ப எல்லாம் உன் மூஞ்சுல புசுபுசுனு கோபம் வரும். அதை பார்க்க அம்புட்டு அழகா இருக்கும்....”

அந்த நாள் நியாபகத்தில் ரசனையோடு சிரித்தான்.

அவன் கையில் நறுக்கென்று கிள்ளியவள் ,

ஏன் டா...நான் புசுபுசுனு கோபப்பட்டது உனக்கு அழகா, சந்தோஷமா இருக்கா...” என்று முறைக்க,

“ஆமான் டி.. என் கருவாச்சி... அப்படியே உன் மூக்கு குட மொளகா மாதிரி சிவந்து போய்...கண்ணு ரெண்டும் கோவைப் பழம் மாதிரி...இந்த கன்னம் ரெண்டு அப்பிள் போல இன்னும் திரண்டு  போய்,  பார்க்க அப்படியே கை கால் முளைத்த தக்காளி போல இருப்ப...

அப்படியே உன்னை கடிச்சு திங்கணும் போல வெறியா இருக்கும்... அதனாலயே உன்னை அடிக்கடி சீண்டுவேன்... “

என்று அவளின் பட்டு கூந்தலில் கை விட்டு அலைந்தவாறு,  அவள் கூந்தலில்  கிறக்கத்தோடு வாசம் புடித்தான்.

அவன் முகத்தில் இருந்த கிறக்கத்தை கண்டு அவள் உள்ளும் காதம் பொங்க, 

“ஏன் மாமா... உன்    மனசுல இம்புட்டு ஆசைய வச்சுக்கிட்டு ஏன் என்கிட்ட சொல்லல.. எப்படி உன்னால என்னை இன்னொருத்தனுக்கு கட்டிக் கொடுக்க மனசு வந்தது? “  என்று பொய்யாக கோபித்தாள் அவனவள்.  

“ஹ்ம்ம்ம் என் மனசுல நீ இருந்தாலும்,  என்னுடைய நிலை எனக்கு தெரியும் டி. நான் உனக்கு கொஞ்சமும் பொருத்தம் இல்லாதவன்.

என் ஆத்தா   சொன்னது போல உன்னை நான் நல்லா பாத்துக்கணும்னு மனசுல பதிஞ்சு இருந்தது.  

அது பொண்டாட்டியாதானு  இல்லை.  உனக்கு நல்ல மாப்பிள்ளையா பாத்து, உன்னை நல்ல இடத்தில் கட்டிக் கொடுத்து உன்னை பாத்துக்கணும்னு மனசை நானே தேத்திக்கிட்டேன்.  

ஒருவேளை  நான் நல்ல நிலைமையில் இருந்திருந்தா உன்னை விட்டுக் கொடுத்து இருக்கமாட்டேன்.  தறுதலையாக சுற்றிக் கொண்டிருந்த நான்  எப்படி உன்னை கட்டிக் கொடு மாமா என்று  உன் அப்பன் கிட்ட கேட்கறதாம்.

அப்படியே அவர் கட்டி  கொடுக்க முன் வந்தாலும்  என் மனசாட்சியே என்னை கொன்னிருக்கும்.

என்னால உனக்கு உடல் சுகத்தை தவிர வேற என்ன  சுகத்தை கொடுக்க முடியும்? நீயும் உன் ஆத்தா மாதிரி வேகாத வெய்யில என்னோட சேர்ந்து சேறு மிதிக்கணும்.

அதோட நீ வேற நல்லா படிச்ச, நல்ல கலரா அரவிந்தசாமி மாதிரி மாப்பிள்ளை வேணும்னியா...  

அதனால் தான் என் மனதை அடக்கிக்கொண்டு உனக்கு நல்ல இடத்தில் மாப்பிள்ளை பார்த்து கட்டி வைக்க இருந்தேன்.  

அதற்கு முன்னால் உன் படிப்பு முடியட்டும் என்று காத்து இருந்தேன். அதற்குள் என்னென்னவோ  நடந்து போச்சு.  

கெட்டதுலயும் ஒரு நல்லதுங்கிற மாதிரி, உன் கல்யாண பிரச்சனையில் எப்படியோ என்  அம்மா ஆசைப்பட்ட மாதிரி நீயே என் பொண்டாட்டியா வந்துட்ட.

உன் கழுத்துல தாலி  கட்டறப்ப  எனக்கு எம்புட்டு சந்தோசமா  இருந்துச்சு தெரியுமா? அப்படியே அந்த வானத்தையே எட்டி புடிச்ச மாதிரி...  ஆனால் உனக்கு என்னை பிடிக்குமானு  கொஞ்சம் பயமா இருந்துச்சு.

அதோட முடவன் கொம்பு தேனுக்கு ஆசப்படக்கூடாது னு என் ஆசையை அடக்கி கொண்டு , தாலி கட்டினாலும் அதை அறுத்துபுட்டு உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுக்கத்தான் ரெடியா இருந்தேன்.

வாயால அப்படி சொன்னாலும் உள்ளுக்குள் அப்படி ஒரு வலி இருக்கும்...

நீ எங்க சரினு சொல்லிடுவியோனு தவிப்பா இருக்கும். இன்னொரு மனசு, என் சுயநலத்துக்காக, உன்னையும் என்னோட சேர்த்து வருத்த போறேனு குத்திக்காட்டும்.

ரெண்டுக்கும் நடுவுல நான் மாட்டிகிட்டு பட்ட அவஸ்தை இருக்கே... அப்பப்பா... யாருக்கும் வரக்கூடாது அந்த கஷ்டம்.     

நானே ரெண்டுங்கெட்டான் நிலையில இருக்கிறப்ப, என் அவஷ்தை புரியாம  நீ வேற  என்கிட்ட ஒட்டி ஒட்டி வந்த...

முதலில் ஒன்னும் புரியலைனாலும் நீ என் கிட்ட வர வர, உன் மனசிலயும் என் மேல ஆசை இருக்குனு புரிஞ்சுகிட்டேன்.

அன்னைக்கு பண்ணையார் வீட்டுக்கு போயிட்டு வந்த பொறவு மண்டையில அடிக்கிற மாதிரி இனி நீதான் என் பொண்டாட்டினு அடிச்சு சொன்னியே...

அப்பதான் எனக்குள்  இருந்த பயம் விலகி,  இனி நீதான் எனக்கு பொண்டாட்டி.. நீ எனக்கு மட்டும்தான்... என்று  முடிவு செய்தேன்.

அதுக்கு பொறவுதான்  உனக்கு சமமா  என் நிலையை உசத்திக்கணும்னு தோணுச்சு... அப்பதான் என் கெட்டப்பை எல்லாம் மாத்திகிட்டு, நீ சொன்ன மாதிரி சொந்தமா விவசாயம் பண்ண ஆரம்பிச்சேன்.

இத்தனை நாள் விவசாயத்துல பெருசா என்ன சம்பாதிக்க முடியும்னு நினச்சிருந்த எனக்கு, அன்னைக்கு விவசாய ஆபிஸ்க்கு கூட்டிகிட்டு போய் பேச வச்சதுக்கு பொறவு நம்பிக்கை வந்திருச்சுடி.

விவசாயத்துலயும் நிறைய சம்பாரிச்சு, பெரிய வீடா கட்டி,  உன்னை ராணி மாதிரி வச்சு பாத்துக்க முடியும்னு நம்பிக்கை வந்துச்சு. ஆனாலும் உன்னை நெருங்க கொஞ்சம் தயக்கமா இருந்துச்சு.

அதான் சொன்னேனே... பரமசிவம் பொண்டாட்டி வள்ளி செத்து போனதும் எனக்கு அடுத்த பயம் வந்திருச்சு... அதான் முடிஞ்சவரைக்கும் உன்னை விட்டு தள்ளி இருந்தேன்.

அப்படியும் என்னை மயக்கி, என் கற்பை சூரையாடிட்ட டி ராட்சசி... “ என்று அவள் கழுத்தில் செல்லமாக கடித்தான்.

ஆனாலும் அவனின் கூர்மையான முன்பற்கள், சங்கு கழுத்தில் அழுந்த பட்டு வலித்தாலும்,  அதை இன்பமாய் தாங்கி கொண்டவள், அவள் கழுத்தை விட்டு விலக எத்தனித்தவன்

கழுத்தை வளைத்து மீண்டும் அவன் இதழை தன் கழுத்து வளைவில் வைத்துக்கொள்ள,  அவளின் ஆசையை கண்டு கொண்டவன் தன் முரட்டு இதழால் அவள் கழுத்தில் புதையலை தேடினான்.

தன் கணவனின் காதலிலும் கூடவே அவளிடம் உணர்த்திக் கொண்டிருக்கும் அவள் மீதான அவனின் மோகத்திலும் இன்னுமாய் கிளர்ந்துதான் போனாள்.

தன்னை பிறந்ததில் இருந்தே காதலிக்கும் ஒருவன் தனக்கு கணவனாக வாய்த்திருப்பது வரம் அல்லவா.. அந்த வரத்தை கொடுத்த தன் கணவன் மீது அவளுக்கும் எல்லையில்லா காதல் பெருகியது.

கழுத்து வளைவில் அவன் இதழ்கள் அதன் வேலையை செய்து கொண்டிருக்க, வெகு நெருக்கத்தில் இருந்த அவனின் சேவ் செய்யப்பட்ட பளிங்கு கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள்.

“ஐ லவ் யூ மாமு... உன் மனசுல இருக்கிற   காதலை புரிஞ்சுக்காம உன்னை  ரொம்பவும் திட்டிட்டேன்.  ஐ அம் சாரி..”  என்று வருத்தத்தோடு தன்னவனின் கன்னத்தை வருட,  அவளின் கையை எடுத்து,  தன் கன்னத்தோடு வைத்து அழுத்திக்  கொண்டவன்,  

“பரவாயில்ல டி... நம்ம கல்யாணத்துக்கு முன்ன, தறுதலையா சுத்திகிட்டு இருந்தப்ப, நீ என்னை அதட்டும் பொழுதெல்லாம்,  அப்படியே என் அம்மாவே நேரில் வந்து அதட்டுவதை போல இருக்கும்.  

அதனால் தான் நீ எவ்வளவு திட்டினாலும் உன்னிடம் முறைக்காமல் அடங்கி போயிடுவேன்... “ என்று காதலோடு  புன்னகைத்தான்.

அதில் இன்னும் பாகாய்  உருகியவள்  

“ஐ லவ் யூ டா... ஐ லவ் யூ என் செல்ல புருஷா.. க்யூட் ரௌடி...” என்று அவன் மஞ்சத்தை கடிக்க,  

லவ் யூ டி...பொண்டாட்டி..“ என்று அவனும் அவளின் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டான்.

அது சரி டி என்னை பாத்தாலே எட்டிக்காயை  சாப்பிட்டவளைப் போல முகத்தை சுளித்து,  அருவருப்புடன் திருப்பிக் கொண்டு போவியே..!  உனக்கு என் மீது எப்பொழுது காதல் வந்தது? “  என்று அவளின் பட்டு கன்னத்தை வருடியபடி ஆர்வமாக கேட்டான் ராசய்யா.  

என்னது?  காதலா?  நானா?  உங்க மேலயா?  அது எப்போ?  யார் சொன்னா? “  என்று அடக்கப்பட்ட சிரிப்புடன்,  அவனை சீண்ட

“ஆஹான்...  காதல் இல்லாமல்தான் ஐ லவ் யூ மாமானு  அடிக்கடி சொல்லி என்னை கட்டிக்கிட்டு ஒட்டிக்கிட்டியாக்கும்...”  என்று செல்லமாக முறைத்தவாறு அவள்  மூக்கை பிடித்து ஆட்ட,  

“ஹீ ஹீ ஹீ அதெல்லாம் சும்மா...”  என்று உதடு குவித்து அழகு காட்ட,  குவிந்த அவளின் இதழ் மீது குத்தி நின்றது அவன் பார்வை.  

அவளின் முகம் மாநிறமாக இருந்தாலும்,  எடுப்பான திரண்ட ஆரஞ்சு சுளை போல இருந்த அவளின் இதழை  தாபத்தோடு பார்த்தவன்,  நொடியும் தாமதிக்காமல் அதை கவ்விக்கொண்டு சுவைத்தான்.  

அவளும் தன்னவனின் இதழ் தழுவலில் மயங்கி இசைந்து கொடுத்தாள்.  

சற்று நேரம் அவளின் இதழில் இருந்த சாற்றை உறிஞ்சி எடுத்து, அவன்  தாகத்தை   தற்காலிகமாக  தீர்த்துக் கொண்டவன், மனமில்லாமல் , அவளின் இதழை விடுவித்தான்.

ஈரமாகியிருந்த தன் உதட்டை அவளின் முகத்தில் வைத்து தேய்த்து துடைத்தபடி,  

“உன் உதடு மட்டும் எப்படி டி செம டேஸ்டா இருக்கு? “  என்று கள்ளச்சிரிப்புடன், விஷமமாக புன்னகைக்க, அவனை  செல்லமாக முறைத்தாள்.  

“சரி... சரி..  நான் கேட்டதுக்கு பதில் சொல்.  எப்ப இருந்து என் மீது காதல் வந்தது? “  என்று மீண்டும் ஆர்வத்துடன் கேட்க,  இந்த முறை விளையாடாமல் ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டு  தன் மனதில் உள்ளதை சொன்னாள் பூங்கொடி.!

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தாழம்பூவே வாசம் வீசு!!!

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!