என்னுயிர் கருவாச்சி-51



அத்தியாயம்-51

 

திர், முசிறியின்  அருகில் இருக்கும் தொட்டியம் ஊரை  சேர்ந்தவன்...

இஞ்சினியரிங்  படித்துவிட்டு சென்னையில் சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்கிறான்.    

ராசய்யா போலவே வாட்ட சாட்டமாக, உயரமாக இருந்தான்.  நிறத்தில் ராசய்யாவை விடவும் கலராக  இருந்தவனை கோமதிக்கு பார்த்த உடனே பிடித்து போனது.

உடனே சம்மதம் சொல்லிவிட,  அடுத்து மாதம் முதல்  முகூர்த்தத்திலேயே திருமணத்தை குறித்து விட்டனர்.

அவளின் திருமணத்திற்குத் தான் இப்பொழுது இருவரும் கிளம்பி கொண்டிருந்தார்கள்.

கோமதி திருமணம் நிச்சயம் ஆனதும், அவளின் முகத்தில் தெரிந்த பூரிப்பை கண்டதும்தான்  பூங்கொடிக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.  

அதுவரை கோமதி வாழ்க்கையை பறித்துக்கொண்டோமோ என்று இருந்த குற்ற உணர்வு,  அவளுக்கு திருமணம் நிச்சயம் ஆனதிலிருந்து காணாமல் போயிருந்தது.  

இப்பொழுது   முகம் கொள்ளா சிரிப்புடன்  தன் தோழியின்  திருமணத்திற்கு தயாராகி கொண்டிருந்தாள் பூங்கொடி .

மயில் கழுத்து கலர் பட்டுப் புடவையில்,  தேவதையாய் ஜொலித்த தன்னவளை ரசித்தவாறே அவள் காட்டிய இடத்தில் அந்த ஊக்கை போட்டு விட்டான்.  

அவனின் உறுதியான விரல்கள் அவள் தோளில் பட்டுவிட, சிலிர்த்தது அவளின் தேகம்.

அடுத்து சென்ற வாரம் வாங்கி இருந்த அட்டிகையை   கொண்டு வந்து போட்டு விடச் சொன்னாள்.

விவசாயத்தை  தவிர மற்ற வேலையில்  அவன் சம்பாதித்த  காசில், அவளுக்காக முதன் முறையாக அந்த அட்டிகையை வாங்கிக் கொடுத்தான்.

கழுத்தை ஒட்டி அந்த அட்டிகையை  வைத்தவாறு வந்து நின்றவள், அதன்  கொக்கியை போட்டு விடும்படி சிணுங்கினாள்.

ராசய்யாவும் அவளை  செல்லமாக  முறைத்தபடி,  அதன் கொக்கியை போட்டுவிட,

“மாமா... நல்லா கடிச்சு விடு... இல்லைனா  கீழ எங்கேயாவது விழுந்துடும்...”  என்று அடக்கப்பட்ட சிரிப்புடன் சொல்ல,  

“சரியான   இம்சை டி நீ.  இப்படி படுத்துவனு  தெரிஞ்சிருந்தா,  நீளமான செயினை வாங்கி கொடுத்திருப்பேன்...”  

என்று செல்லமாக திட்டியபடி குனிந்து அந்த அட்டிகையின்  கொக்கியை கடித்துவிட, வெகு நெருக்கத்தில் நின்றிருந்தவன் மேனி,  அவள் மேனியில் உரச,  அவனின்  வெப்பமான மூச்சுக்காற்று பின்னங்கழுத்தில் பட்டு வைக்க,  அவளின் உணர்வுகள் கிளர்ந்து எழுந்தன.  

அவன் கொக்கியை கடிக்கும்பொழுது,  கழுத்து வளைவில் அவனின் அழுத்தமான இதழ்கள் உரச,  நெகிழ்ந்து போனாள் பெண்ணவள்.  

அவனுக்கும் அதே நிலைதான் போல.

அன்றைய மழை நாள்  சம்பவத்திற்கு பிறகு, ஒவ்வொரு முறை அவள் அவனை நெருங்கி வரும்பொழுதெல்லாம் அவனை கட்டுப்படுத்தவே படாத பாடு பட வேண்டி இருந்தது.

ருசி கண்ட பூனை மாதிரி அவன் உள்ளேயும் அவள் உடனான கூடலுக்கு தவித்ததுதான்.  

ஆனாலும் அவளின் நலன் கருதி  அவளை தள்ளி வைத்திருந்தான்.

அப்பப்ப  இப்படி ஏதாவது அவள் வம்பு பண்ணும்பொழுது     ரொம்பவும் தவித்து தான் போனான் காளையவன்.  

அதனாலேயே முடிந்த அளவு தள்ளி நின்று கொள்வான்.  

இப்பொழுது வேற  வழியில்லாமல் அவளிடம் மாட்டிக்கொள்ள,  அவளின் நெருக்கம் அவன் உள்ளேயும் புயல் அடித்தது.  

குனிந்து கொக்கியை பற்களால் கடித்து  போட்டு விட்டவன், பற்கள் அவள் கழுத்தில் பதிய, அதில் இன்னுமாய் உணர்ச்சியின் பிடியில் தத்தளித்தவள்,  தன் கீழ் உதட்டை அழுந்த கடித்துகோண்டு கண் மூடி அந்த இன்ப நொடிகளை அனுபவித்தாள் பெண்.

கொக்கியை போட்டவன் அடுத்த கணம் தன்னை மறந்து அவளின் பின்னங்கழுத்தில் அழுத்தமாக முத்தம் பதிக்க,  அவன் கையோ அவளின் இடையை  இறுக்கி பிடித்தது.  

அதில் தவித்தவள், இன்னுமாய்  தன் இதழ்களை அழுந்த கடித்துக்கொண்டு இலகி, குழைந்து கனிந்து அப்படியே தொய்ந்து  அவன் மார்பில் சாய்ந்து கொள்ள,  

அவனோ அவளின் வெற்றிடையைப் பற்றி இருந்தவன்  கரம் அப்படியே மேல உயர்ந்து,  அவளின்  பெண்மையை தீண்ட,  அதில் இன்னுமாய்  கிறங்கியவள் உதட்டை கடித்து கொண்டு,  பின்பக்கமாக கையை நீட்டி அவன் கழுத்தை வளைத்துக் கொண்டாள்.  

அவளின் அந்த உருகிய குழைந்த நிலையை கண்டு  தேன்குடித்த நரியை போல பித்தாகி  போனவன், அதற்கு மேல் தன்னை கட்டுபடுத்த முடியாமல்,  தன்னவளை முன்னே திருப்பி அவளின் கீழ் அதரத்தை வேட்கையோடு கவ்விக்கொண்டு இதழில் கதை எழுத ஆரம்பித்தான்.

இருவருமே திருமணத்திற்கு செல்ல வேண்டும் என்பதை மறந்து,  தங்கள் உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தனர்.

அதே நேரம் யக்கா என்று அழைத்தபடி காம்பவுண்ட் கேட்டை திறக்கும் சத்தம் கேட்க,  அதில் திடுக்கிட்டு விழித்து கொண்டவன்,  உடனே அவளின் அதரத்தை விடுவித்தவன், அவசரமாக அவளைவிட்டு விலகினான்.

நன்றாக சுவைத்து சாப்பிட்டுக்கொண்டிருந்த மிட்டாய் கீழ விழுந்து விட்டால் ஏமாந்து போகும் சிறு பிள்ளை போல, பூங்கொடியோ  ஏமாற்றமும் ஆசையும் தாபமுமாய் தன்னவனைப் பார்க்க,  அவனுக்கும் அதே நிலைதான்.

அவளை விட்டு விலக அவனுக்கும்  மனமே இல்லை...

அவன் கண்களில் இருந்த ஆசையை கண்டு கொண்டவள்,  கொஞ்சமும் யோசிக்காமல், உடனே அவன் சட்டையை பிடித்து இழுத்து,  கட்டி கொண்டவள், அவன் கழுத்தை வளைத்து அவனின் கீழ் உதட்டை கவ்விக் கொண்டாள்.

அவளின் செயலில் அவன் விதிர் விதிர்த்து போனான்..

“ஹே வுடுடி.... “ என்று ஹஸ்கி குரலில் சொல்ல, அவளோ

“மாட்டேன்...”  என்று தலை அசைத்து இன்னும் ஆழமாய் அழுத்தமாய் அவன் இதழை கடித்தாள்.

அதற்குள் அன்பரசன் வீட்டின் உள்ளே வந்தவன்,

“யக்கா ...ரெண்டு பேரும் ரெடி  ஆயிட்டீங்களா?  பொண்ணு வீட்டுல எல்லாரும் ரெடியாகி உங்களுக்காக காத்துகிட்டு இருக்காங்க... சீக்கிரம் வாங்க..” என்று அறைக்குள் வராமல் முற்றத்தில்  நின்றபடி  கத்திக் கொண்டிருந்தான்.

இங்க அவளோ தான் சுவைத்துக் கொண்டிருந்த தன்னவன் இதழை விடாமல் இன்னுமாய் தீண்ட, ராசய்யாவுக்குத்தான் பிபி ஏறியது.

எந்த நேரத்திலும் அவன் மச்சான் உள்ளே வந்து விடும் அபாயம் இருக்க, இந்த ரௌடி இப்படி பண்றாளே என்று உள்ளுக்குள் புலம்பியவாறு அவளின் இடையில் நறுக்கென்று கிள்ளினான்.

அதில் ஆஆஆ வென்று அலறி,  அவன் இதழை விட்டுவிட, தப்பித்தோம் பிழைத்தோம் என்று வேகமாக அந்த அறையை விட்டு வெளியில்  வந்தான் ராசய்யா.

அவன் தலை தெறிக்க ஓடுவதைக்கண்டு சத்தமில்லாமல் சிரித்துக் கொண்டவள்

“சரியான பயந்தாங்கொள்ளி .. அந்த சின்ன பயலுக்கு போய் இப்படி பயந்து ஓடறானே.. “ என்று சிரித்துக்கொண்டவள், தன் இதழை துடைத்தவள், முன்னால் கசங்கி இருந்த புடவையை சரி செய்தபடி வெளியில் வந்தாள் பூங்கொடி.

அங்கே நின்றிருந்த தன் தம்பியை பார்த்தவள்

“டேய் கரடி...உனக்கு மட்டும் எப்படிடா கரெக்ட்டா மூக்கு வேக்கும்... என் புருஷனோட சந்தோஷமா இருக்கிறப்ப கரெக்ட்டா கரடி மாதிரி வந்திடற... “ என்று  முறைக்க,

அவனோ ஒன்றும் புரியாமல் மலங்க மலங்க விழித்தான்.

“உன் புருஷனோட சந்தோஷமா இருக்கிறப்பனா? எப்பவும் தானே நீ உன் புருஷனோட சந்தோஷமா இருப்ப..” என்று சந்தேகமாக பார்க்க,

அவள் ஏதோ பதில் சொல்ல வர, அவள் வில்லங்கமாக ஏதோ சொல்லப் போகிறான் என்று உசாராணவன்

“ஹே...சும்மா இருடி... சின்னப்பையன் கிட்ட போய்... “ எதுவும் சொல்லாதே என்று கண்ணால் ஜாடை காட்டி அவளை அதட்டினான்.

அவளோ உதட்டை சுளித்து வவ்வே என்று பழிப்பு காட்டியவள்,

“ஏன் டா.. அவசரத்துக்கு பொறந்தவனே...  அதுதான் நாங்க  வந்துருவோமில்ல.  அதுக்குள்ள என்ன அவ்சரம்? இப்படி மூச்சு வாங்க இங்க வந்து நிக்கற.? “ என்று முறைக்க,

“இது என்னக்கா வம்பா போச்சு...  அங்க இருக்கறவங்க எல்லாம் நீங்க ரெண்டு பேர் மட்டும் இன்னும் வரலைன்னு போய் பாத்துட்டு வரச்சொல்லி என்னை விரட்டி விடறாங்க.

நீ என்னடான்னா ஏன்டா வந்தனு முறைக்கிற? நான் எந்த பக்கம் பாக்கறது...” என்று புலம்ப,

“ஹா ஹா ஹா  டேய் மச்சான்... கடைசி தம்பியா  பொறந்தா இப்படித்தான்  அல்லோல படணும். நீ வாங்கி வந்த வரம் அப்படி.  அனுபவி...” என்று ராசய்யா சிரிக்க,

“ஹ்ம்ம்  கரெக்டா சொன்ன மாமு... “ என்று ஆமோதித்தவன்,  எதேச்சையாக நிமிர்ந்து தன் மாமனை பார்க்க, அவன் உதட்டில் இருந்து லேசாக ரத்தம் கசிந்து கொண்டிருப்பதை கண்டவன் பதறி,

“ஐயோ மாமா... உங்க உதட்டுக்கு என்னாச்சு? ஓரமா ரத்தம் வருது ...” என்று விசாரிக்க, அதில் அதிர்ந்தவன், விரலால் தொட்டு பார்க்க, தன் மச்சான் சொன்னதைப் போல விரலில் பிசுபிசுத்தது.

சற்றுமுன் தன்னவள் செய்து வைத்த வேலையின் விபரீதம் என்று  புரிய, அருகில் நின்றவளை முறைத்து பார்க்க, அவளோ வெட்கப்பட்டு கண் சிமிட்டி  சிரித்து வைத்தாள்.

அவளை வெட்டவா குத்தவா என்று முறைத்தவன்,  தன் மச்சானுக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாம திருதிருக்க, அவனோ விடாமல் என்ன ஆச்சு மாமு? என்று நோண்டினான்.

“அதுவாடா... உன் மாமா கண்ணு தெரியாம கதவு நிலையில இடிச்சுகிட்டார்... “ என்று பூங்கொடி அடக்கப்பட்ட சிரிப்புடன் சொல்ல,

“ஓ...அன்னைக்கு நீ இடிச்சுகிட்டியே... அந்த மாதிரியா..?

“அதே..அதே... “ என்று மீண்டும் நமட்டு சிரிப்பை சிரிக்க, கை முஷ்டியை இறுக்கி அவள் தலையில் கொட்டுவதை போல ஆக்சன் பண்ணினான் ராசய்யா.

“ஓ... அது என்ன...ரெண்டு பேரும் சொல்லி வச்ச மாதிரி  வீட்டு நிலையிலயே இடிச்சுகிறீங்க... அதுவும் உதட்டிலயே அடிபடுது...” என்று முக்கியமான சந்தேகத்தை கேட்க,

“அதுதான் டா மச்சான் எனக்கும் தெரியல.. ஒருவேளை யாராவது சூன்யம் வச்சிருப்பாங்களோ..” என்று ராசய்யா முகத்தை சீர்யசாக வைத்துக்கொண்டு கேட்க,

“ஆமா..ஆமா... அப்படிக்கூட இருக்கும் மாமா... இல்லைனா ஏதாவது மோகிணி பிசாசு இந்த வூட்ல இருக்கும்..” என்று எக்ஸ்ட்ரா பில்டப் போட்டு சொல்ல,

“மோகிணி பிசாசா?... உன் அக்கா இருக்கிறப்ப அதெல்லாம் துண்டக்காணோம்,  துணியக்காணோம்னு ஓடிடாது... “ என்று நக்கலாக சிரிக்க, இப்பொழுது அவனை முறைப்பது அவள் முறையாயிற்று.

“சரி...அத விடு மாமு...  இந்த ட்ரெஸ்ல  நான் எப்படி இருக்கேன்? “  என்று தன் மாமனைப் போல தன் சட்டையை முட்டி  வரைக்கும் சுருட்டிவிட்டு, சட்டை  காலரை ஸ்டைலாக தூக்கி விட்டுக் கொண்டான் அன்பரசன்.  

அவன் இரண்டடி உயரத்திற்கு  ஜீன்ஸ் பேன்டும், முழுக்கை சட்டையும் போட்டு இருக்க, பெரிய மனுஷன் தோரணையோடு நின்றிருந்த தன் தம்பியை காண,  பூங்கொடியின் மனம் பூரித்தது.

இதுவரை அரைக்கால் ட்ராயர் மட்டும் போட்டிருந்தவன்... ராசய்யாதான் அந்த பேன்ட் சட்டையை வாங்கி கொடுத்திருந்தான்.

*****

கோமதி கல்யாணத்துக்காக நல்லதாக போட்டுக்க வேண்டும்  என்று அனைவரையும் முசிறிக்கு அழைத்து சென்று ஒவ்வொருவருக்கும் பிடித்த ட்ரெஸ் ஐ வாங்கி கொடுத்தான்.

அன்பரசன் கடைக்குள் சென்றதும் ஜீன்ஸ் பேன்ட், முழுக்கை சட்டையும் வேண்டும் என்று கேட்க, கொஞ்சமும் யோசிக்காம வாங்கி கொடுத்தான்.

இப்பொழுது  அதைப் போட்டுக்கொண்டு இந்த ஊர் முழுவதுமே காட்டி

“என் மாமா வாங்கி கொடுத்தது...” என்று  பெருமையாக பீத்திக்கொள்ள,

“யாருடா மாமா? உன் பெரிய மாமாவா? “  என்று சிலர் அவனை கிண்டல் அடிக்க,

“ஐய...அவர் ஒன்னும் என்  மாமா இல்லை.  அவர் என் அக்கா வூட்டுக்காரர் .  மாமானா அது என் ராசு மாமா தான்... “  என்று காலரை தூக்கிவிட்டுக் கொண்டான்.

அதைக் கேள்விப்பட்ட  பூங்கொடிக்கோ பெருமையாக இருந்தது.

இப்பொழுது  தன் தம்பியின் முகத்தில் தெரிந்த பூரிப்பையும் மகிழ்ச்சியையும் கண்டவள்,  தன் கணவனுக்கு கண்களால் நன்றி சொன்னாள்.  

அவனுக்கு மட்டுமல்ல மலர்க்கொடிக்கும் ஒரு டிசைனர் சுடிதாரை வாங்கி  கொடுத்திருந்தான்.

இன்னும் அந்த கிராமத்தில்    சுடிதார் அணியும்  பழக்கம் இல்லாத பொழுதும்,  சின்னப் பெண் தானே என்று அவளுக்கு அதை வாங்கி கொடுத்திருந்தான்.

அவளும் அதைப்  போட்டுக்கொண்டு எல்லாரிடமும் விரித்து காட்டி பெருமை அடித்துக்கொண்டாள்.

தம்பி,  தங்கை என்று இல்லாமல், அவளின் அப்பா..அம்மாவுக்கும் கட்டாயபடுத்தி புடவை,  வேஷ்டி எடுத்து கொடுத்தான்.

மாப்பிள்ளை கையால் எப்படி வாங்குவது என்று யோசிக்க,

“நான் உங்க மாப்பிள்ளை மட்டும் அல்ல மாமா.. சொந்த பந்தம் என்று யாருமில்லாத எனக்கு நீங்கதான சொந்தம். உங்க பையனா நினச்சு வாங்கிக்கங்க...” என்று சென்டிமென்ட்டாக பேச, அதில் நெகிழ்ந்தவர்கள் மறு பேச்சு பேசாமல் வாங்கி கொண்டனர்.

தனக்காக தன் குடும்பத்தையே தாங்கும் தன் கணவன் மீது எல்லையில்லா காதல் பெருகியது.  

அவனை அப்படியே கட்டி அணைத்து முத்தமிட துடிக்க, நடுவில் தன் தம்பி நந்தியாக நின்றிருக்க,   என்ன செய்வது என்று யோசித்தவள்,  

“டேய் அன்பு...  அங்க பாரேன் வெள்ளக்காக்கா பறக்குது..” என்று சொல்ல, அவனும் ஆர்வமாக மேல அண்ணாந்து வெள்ளைக் காக்காவை  தேட,  அதற்குள் அருகில் நின்றிருந்த  தன்னவனின் உதட்டில் அழுத்தமாக முத்தமிட, அதில் மீண்டும் விதிர்விதிர்த்து போனான் அவள் மணாளன். .

“அடிப்பாவி.. ராட்சசி.. சின்ன பையன பக்கத்தில் வச்சுகிட்டே இப்படி படுத்தறாளே..” என்று உள்ளுக்குள் புலம்ப, அவளோ நொடிப்பொழுதில் அவன் இதழில் தன் முத்திரையை  பதித்தவள், தன் இதழை பிரித்துக் கொண்டவள்,

குறும்பாக கண்சிமிட்டி எப்புடி என்று தன்  புருவத்தை   உயர்த்தி சிரித்தாள்...

“கேடி...ராட்சசி....ரௌடி...”  என்று முறைத்தவாறு அவன்  இதழ்கள் மெல்லமாக முனுமுனுக்க,  அதற்குள் அவன் தேடிய வெள்ளக்காக்காயை காணாதவன், ஏமாற்றத்துடன் திரும்பி

“எங்க அக்கா...வெள்ள காக்கா...காணோமே...”  என்று ஆர்வத்துடன் அன்பரசன் கேட்க,

“அது அப்பவே பறந்து யோயிருச்சுடா... இன்னொரு நாள் வந்தா காட்டறேன்..இப்ப வா.. நேரமாகுது.. எல்லாரும்   நமக்காக காத்துகிட்டு இருப்பாங்க...”

என்று அப்பொழுதுதான் எல்லாரும் அவர்களுக்காக காத்திருப்பது நியாபகம் வந்தவளாய்,  தன் தம்பியை  கைபிடித்து இழுத்துச் சென்றாள்.

*****

திருமண மண்டபத்தில் மணமக்களை விட, ராசய்யா பூங்கொடி ஜோடி தான் ஹைலைட்டாக இருந்தனர்.

மாப்பிள்ளைத் தோழனாக ராசய்யாவும், மணப்பெண் தோழியாக பூங்கொடியும் மணமேடையில் நின்றிருக்க, மணமக்களை விடுத்து  அவர்களைத்தான் எல்லாரும் ரசித்து பார்த்தனர்.  

அவன் பார்வை அவள் பக்கம் செல்லும் பொழுதெல்லாம் குறும்பாக   கண்சிமிட்டியும்,   நாக்கால் தன் உதட்டை ஈரமாக்கியும், அதற்கும் மேல போய் தன் இதழ்  குவித்து முத்தமிட்டும் சேட்டை பண்ணிக்கொண்டிருந்தாள் அந்த சில்வண்டு.

அவளின் அந்த சேட்டையை கண்டு ராசய்யாவுக்கு மானம் போனது என்றால், மற்றவர்களோ    அவளின் சேட்டையையும், குறும்பையும் கண்டு  ரசித்து சிரிக்கத்தான் செய்தனர்.

அதோடு அவள் கடித்ததால் அவன் உதட்டோரம்  இருந்த காயத்தை பார்த்து வேறு எல்லாரும் நமட்டு சிரிப்பை சிரித்து அவனை கலாய்த்து தள்ளினர்.

“என்ன மச்சான்... உன் வீட்ல மீனாட்சி ராஜ்ஜியம்தான் போல. அடி பலமா இருக்கும் போல... பாவம்...  தங்கச்சி உன் உதட்டை கூட விட்டு வைக்கலை போல...” என்று கிண்டல் அடிக்க, முத்துபாண்டியோ,

“இது சண்டையில வந்த காயமா? இல்ல அந்த நேரத்துல ரொமான்ஸ் பண்றப்ப வந்த காயமா?  

என் பொண்டாட்டிக்கும் புருஷன் கிட்ட எப்படி ரொமான்ஸ் பண்றதுனு கொஞ்சம் டிப்ஸ் சொல்லி கொடுக்க சொல்லுடா மச்சான்...அவ வர வர ரொம்ப போர் அடிக்கிறா... “ என்று முத்துபாண்டி ஆற்றாமையுடன் அவனை கலாய்க்க,

“அம்புட்டுதான மாப்பு... புருஷனை ரொமான்ஸ் பண்றது மட்டுமில்ல. எப்படி மொத்தறதுனும்  என் பொண்டாட்டி நிறைய டிப்ஸ் வச்சிருக்கா.. அதையும் தங்கச்சிக்கு சொல்லித் தர சொல்றேன். எப்படி வசதி..” என்று நக்கலாக சிரிக்க,

ஆத்தி... நீ நல்லா தேக்கு மரத்தை போல உடம்பை கிண்ணுனு வச்சிருக்கிற. உன் பொண்டாட்டி எத்தனை அடிச்சாலும் தாங்குவ.. நானெல்லாம் முருங்கை மரம் டா.. லேசா காத்து அடிச்சாலே உடஞ்சு வுழுந்திடும்... என் பொண்டாட்டி கையால அடி வாங்க முடியாது... “ என்று பதற,

“ஹ்ம்ம் தெரியுது இல்ல. அப்ப என்னைய கலாய்க்கிறத விட்டுபோட்டு,  மூடிகிட்டு வேலையை பாருடா வெண்ணை... “  என்று அவன் முன் நெற்றியில் அடித்து அங்கிருந்து  நழுவினான் அந்த ஆண் சிங்கம்.

பாண்டியை சமாளித்தாலும் அடுத்தடுத்து எல்லாரும் உதட்டுல என்னப்பா காயம் என்று விசாரிக்கும் பொழுதெல்லாம் அந்த ராட்சசி மீது கொலை வெறி  வந்தது.

அவளோ தன் கணவன் திருதிருவென்று  முழிப்பதை பார்க்கும் பொழுதெலலம் வாய் விட்டு சிரித்தாள்.

*****

வளின் சேட்டை அதோடு நின்று  விடவில்லை. 

ராசய்யா, பொறுப்பாக, திருமண மண்டபத்தில் ஓடியாடி வேலை செய்து கொண்டிருக்க, எங்கேயாவது  அவன் தனியாக மாட்டினான் என்றால் அடுத்த கணம் அவன் முன்னே நின்று இருப்பாள் அவன் மனையாள்...

எப்படித்தான் வருவாளோ... யாரும் இல்லாத இடம் என்றால் அவன் பின்னாலயே ஓடி வந்து  அவன் முன்னால்  வந்து நின்றாள். அடுத்த கணம்  எதுவும் யோசிக்காமல் அவன் கன்னத்திலோ, உதட்டிலோ அழுந்த முத்தமிட்டு சிட்டாக பறந்து விடுவாள்.

“ஹே.. ரௌடி... “ என்று கத்தியவன் இடவலமாக தன் தலையை ஆட்டி மெல்லமாய்   சிரித்துக் கொண்டான்.

பொதுவாக ஒரு ஆண் தன் இணையை தேடி தேடி சீண்டுவதை எல்லாம் பெண்ணாக அவள் செய்து கொண்டிருந்தாள்.

அவளின் சீண்டலில், சேட்டையில் கொஞ்சமே கொஞ்சம் கோபம் வந்தாலும் ,தன்னை மறந்து அவளின் சேட்டையை ரசிக்கத்தான் செய்தான்.

அதோடு இப்படி அவள் தனக்காக உருகுவாள்  என்று கனவிலும் நினைத்திருக்கவில்லை அவன்.

அவளின் பாசத்தில், எல்லையில்லா காதலில் தினறியவன்  

“என் கருவாச்சி....”  என்று மானசீகமாக  சொல்லி சிரித்துக்கொண்டான்  கருவாச்சியின்  கருவாயன். 

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!