நிலவே என்னிடம் நெருங்காதே-70(Final)

 


அனைவருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்..!  

என்னுடைய புதிய ஆடியோ நாவல் நம்ம சேனலில் வெளியாகி உள்ளது. கேட்டு மகிழுங்கள் தோழமைகளே..! 

உங்களுக்கு  இந்த சேனலில் உங்கள் குரலை பதிவு பண்ண  விருப்பம் இருந்தால் 9945076179 எண்ணிற்கு  வாட்ஸ்அப்பில் தொடர்பு கொள்ளுங்கள்..நன்றி.!!





அத்தியாயம்-70

கையில் பால் டம்ளருடன் தங்கள் அறைக்குள் வந்தாள் நிலா..

அதிரதன் படுக்கையில் படுத்தவாறு தன் அலைபேசியை நோண்டி கொண்டிருந்தான்..

அவளோ உள்ளுக்குள் படபடக்க அந்த டம்ளரை கொண்டு சென்று அவனிடம் நீட்ட அவனோ ஒரு மந்தகாச புன்னகையை செலுத்தி

“ரொம்ப தேங்க்ஸ் நிலா... “ என்றான் நெகிழ்ந்தவாறு..

அவளோ

எதுக்கு ஜமீன்தாரே? “ என்றாள் தலை சரித்து குறும்பாக கேட்டவாறு...

“ஹ்ம்ம் எல்லாத்துக்கும் தான்.. குறிப்பா நீ சதுவுக்கு உதவியதற்கு..அவளுடைய திருமணத்தை முன்னின்று நல்ல படியாக நடத்தி அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய உதவியதற்கு... இப்பொழுதுதான் எனக்கு நிம்மதியாக இருக்கிறது.. “ என்றான் நிம்மதி பெருமூச்சு விட்டு...

“இட்ஸ் மை ட்யூட்டி ஜமீன்தாரே.. உங்களுக்கு ஒரு கஷ்டத்தை,  மன வருத்தத்தை வேதனையை கொடுக்க விட்டுவிடுவேனா..! “ என்றாள் கன்னம் குழிய சிரித்தவாறு...

“ஹ்ம்ம் ரொம்ப தேங்க்ஸ் நிவி....ஆமா... ஃபர்ஸ்ட் நைட் அரேஞ்மென்ட் எல்லாம் புது ஜோடிக்கு மட்டும்தானா?  பழைய ஜோடியாக இருந்தாலும் இன்னுமே புது ஜோடியாய் இருப்பவர்களுக்கு  இல்லையா? என்றான்  தன் கையில் வைத்திருந்த டம்ளரில் தன் நீண்ட விரல்களால் தாளமிட்டவாறு மந்தகாச புன்னகையுடன்...

அவனின் கேள்விக்கும் சீண்டல் பார்வைக்கும் அவள் உள்ளே  ஏதோ புரண்டது... கன்னங்கள் செம்மையுற ஆரம்பிக்க, அதை அவனுக்கு காட்டாமல் மறைக்கும் விதமாக தன் கால் கட்டை விரலை தரையில் அழுந்த அழுத்தி கொண்டாள்..

தன் உதடுகளையும் மடித்து அழுந்த கடித்துக்  கொண்டவள்

“பழைய ஜோடி பட் இன்னுமே புது ஜோடியா? அது யார் ஜமீன்தாரே? “ என்றாள் தலை சரித்து குறும்பாக சிரித்து கேட்டவாறு...

“ஹ்ம்ம்ம்ம் அது யாரென்று தெரிந்து கொண்டே கேட்பவளிடம் என்ன சொல்வதாம்...? “ என்று அவனும் உல்லாசமாக புன்னகைத்து கண் சிமிட்டி சிரித்தவன்

“சரி... சரி...உன் கண்ணை மூடு.. உனக்கு ஒன்று காட்டுகிறேன்.. “ என்று எழுந்து அவள் அருகில் வந்தவன் அவள் கண்களை அவன் இரு கரம் கொண்டு பொத்தினான்..

அவளுக்கோ தன் கணவனின் அந்த தீண்டல் உள்ளுக்குள் இன்னுமாய் படபடப்பை கூட்டியது.. உதட்டை தன் பற்களால இன்னும் அழுந்த கடித்து கொண்டு நிக்க

“ஹ்ம்ம்ம் மெல்ல நட நிவி... “ என்று அவளை கண்ணை மூடியவாறே அழைத்து சென்றான்.. அவளும் என்னதாக இருக்கும் என்று யோசித்தவாறு நடக்க சிறிது தூரம் சென்றதும்

“இப்ப கண்ணை திற.. “ என்றான் அவன் கைகளை விலக்கி கொண்டு...

அவள் கண்ணை திறக்கவும் அவள் முகத்தில் பெரிதாய் பூத்தது ஒரு ஆச்சர்யம்..

அவள் நின்று இருந்தது ஒரு பெரிய விசாலமான அறை...அழகான கலைப் பொருட்கள் ஆங்காங்கே வீற்றிருக்க ஒரு ஓரத்தில் பெரிய ட்ரெஸ்ஸிங் டேபில்.. அவளுக்கென்றதாய் வார்ட்ரோப். மேலும் அவள் அமர்ந்து வேலை செய்ய வசதியாக ஆபிஸ் சேர் மற்றும் டேபில்..அதன் மீது சில பைல்கள் என்று அடிக்க வைக்க பட்டிருந்தன..

அதை கண்டவள் கண்கள் பெரிதாக விரிய

“என்னது இது ரதன்? எதுக்கு எவ்வளவு பெரிய அறை? “ என்றாள் யோசனையாக

“ஹா ஹா ஹா.. இந்த வீட்டை கட்டியவர் ரொம்பவுமே ரொமாண்ஸ் பேர்வழி போல நிவி.. அந்த மாஸ்டர் பெட்ரூமை ஒட்டியே அவருடைய் ராணிக்காய் இந்த அந்தபுரத்தையும்  கட்டி இருக்கிறார்..

இந்த அறை மாஸ்டர் பெட்ரூமை ஒட்டி இருக்கும் அறைதான்.. இதுவரை இதற்கு வேலை இல்லாததால் இதை மூடி வைத்திருந்தேன்..இனிமேல் இந்த அறைக்கு மட்டும்தான் வேலை அதிகமாக இருக்க போகிறது... “ என்று கண் சிமிட்டி மந்தகாச புன்னகையுடன் சிரித்தான்..

அவளோ வெட்கபட்டு

“உங்கள்  பெட்ரூமே அவ்வளவு பெரிதாக இருக்கிறது.. நான் அதிலயே தங்கி கொள்வேன்.. தேவை இல்லாமல் இது எதுக்கு? “ என்று செல்லமாக சிணுங்கினாள்..

“இருக்கடுட்ம் நிவி.. இது உன்னுடைய அறை.. உனக்கும் பெர்சனல்  ஸ்பேஸ் வேணும்.. அதோடு உன் பிசினஸ் வேலைகளை இங்கே இருந்து பார்த்து கொள்ளலாம்.. இல்லை கீழ இருக்கும் அலுவலக அறைக்கு வருவது என்றாலும் சரிதான்..

ஆனால் எவ்வளவு வேலையாக இருந்தாலும் எல்லாம் நான் இந்த அறைக்குள் வரும்வரை மட்டும்தான்..

இந்த அதிரதன் மகாராஜா இந்த அந்தபுரத்திற்கு வந்துவிட்டால் இந்த நிலா மகாராணி எல்லா வேலையும் மூட்டை கட்டி வைத்துவிட்டு என்னிடம் வந்து விட வேண்டும்.. என்ன புரிஞ்சுதுதானே.. “ என்றான் ஒரு மார்க்கமாய் சிரித்தவாறு...

“ஐய... ரொம்பத்தான்.. “ என்று சிரித்தவாறு கழுத்தை நொடித்தாள்.. அதில் இன்னுமே கிறங்கியவன்

“ஹே பட்டிகாடு... அறையில் ஒரு பக்கம் மட்டுமே பார்த்தியே.. அந்த பக்கம் பார்த்தாயா? “ என்று பார்வையால் மறுபக்கத்தை காட்ட அவளும் அவன் பார்வை காட்டிய பக்கம் பார்க்க அப்படியே விக்கித்து நின்றாள்..

அங்கு நடுநாயகமாக வீற்றிருந்தது அந்த படுக்கை... அது முழுவதும் மலர்களால் அலங்காரம் செய்திருக்க அதன் அருகில் வைத்திருந்த ஊதுபத்தியின் மணம் அந்த அறையை நிறைத்து இன்னுமே ரம்மியத்தை கொடுத்தது...

அந்த செட்டப் ஐ கண்டதும் கன்னம் சிவந்தவள் அதை மறைக்க அவனை பார்த்து செல்லமாக முறைத்தவள்

“என்ன இது ? ரதன்... நமக்கு என்னவோ இப்பதான் கல்யாணம் ஆன மாதிரி இதெல்லாம் எதுக்கு? “ என்று செல்லமாக சிணுங்கினாள்..

“ஹா ஹா ஹா நான்தான் சொன்னேனெ.. நமக்கு எப்பவோ திருமணம் நடந்து இருந்தாலும் இன்னும் நாம் இருவரும் புது ஜோடிதான்... “ என்று கண் சிமிட்ட அவளோ நாணத்தால் இன்னுமாய் கன்னம் சிவக்க அதை மறைக்க தன் கைகளால் முகத்தை மூடி கொண்டாள்...

அதில் இன்னுமே கிறங்கியவன் வேகமாக அவள் அருகில் வந்தவன் அவளை தன்னோடு சேர்த்து அணைத்து கொண்டவன்

“ரொம்ப தேங்க்ஸ் நிவி... என்னை மாற்றி எனக்கு சரியான வழியை காட்டி என் வாழ்வை நேராக்கிய உனக்கு கோடி நன்றிகள்.. “ என்றான் தழுதழுத்தவாறு...

“ஐய.. நன்றியை எந்த ஹஸ்பன்ட் ஆவது  இப்படி சொல்வார்களா? “ என்று  அவன் மார்பில் கோலமிட்டாள் சிவந்தவளாய்...

“ஹா ஹா ஹா வேற மாதிரியும் சொல்லலாம்தான்... ஆனால் இந்த ஜமீன்தாரினி நான் அத்து மீறுவதாக என்னை அடித்துவிட்டால்? அதுதான் கொஞ்சம் பயமாக இருக்கு.. “ என்று அவளை சீண்டினான்....

“அடித்தால் தான் இரண்டு அடி வாங்கிக் கொள்ளுங்களேன்.. அடிக்கிற கைதான் இப்படி அணைத்தும் கொள்ளுமாம்.. “  என்று தன் கணவன் கழுத்தில் கையை மாலையாக போட்டுக்கொண்டு மையலுடன் சிரித்தாள்..

அவனவள் இடமிருந்து கிடைத்து விட்ட கிரீன் சிக்னலை கண்டு கொண்டவன் இன்னுமே கிறங்கியவன் அவளை இன்னுமாய் இழுத்து தன்னோடு சேர்த்து அணைத்து கொண்டவன் அவள் முன் உச்சி நெற்றியில் முத்தமிட்டவன்

“தேங்க்யூ நிவி.. தேங்க்யூ மை நிலா.. தேங்க்யூ பார் எவ்ரிதிங் மை டியர் ஸ்வீட் பொண்டாட்டி... “ என்று நெகிழ்ந்தவன் அடுத்ததாய் அவள் கன்னத்தில் முத்தமிட்டான்..

பெண்ணவளும் அதில் இன்னுமாய் உருகி போனவள்  

“ஐய.. வெறும் நன்றி மட்டும் தானா? என்றாள் அவன் மனதை முழுவதுமாக அவளிடம் காட்ட வேண்டும் என்று சீண்டியவளாய்..

“ஹா ஹா ஹா இதுதான் அவசரக்குடுக்கை என்பது மை டியர் பட்டிக்காடு..  ஒவ்வொன்றாகத்தான் வந்து கொண்டிருக்கும்..  என்றவன் அவளை பின்னாலிருந்து இறுக அணைத்து அவளின் கழுத்தில் முத்தமிட்டவன்

பின்  அவள் முன் ஒற்றைக்காலை மடக்கி மண்டியிட்டு அவள் வலது கரத்தை பிடித்து தன் பாக்கெட்டில் இருந்த மோதிரத்தை எடுத்து அவளுக்கு அணிவித்தவன் அதன் மீது தன் இதழ்களால் இதழ் பதித்தவன்  

“ஐ லவ் யூ நிலா...  ஐ லவ் யூ சோ மச்.. வில் யூ லவ் மீ? வில்  யூ பி மை பெட்டர் ஹாஃப் எவர்? என்று ஏக்கமாய் ஆர்வமாய் காதலாய் தன்னவள்  முகம் பார்த்தான்...

தன் முன்னே மண்டியிட்டிருந்த கணவனை கண்டதும் பெண்ணவளுக்கு இன்னுமே பூரித்துப் போனது.. இந்த பிறவியின் பயனை அடைந்துவிட்டது  போல உள்ளம் குளிர்ந்து விட உடனே அவனை தன் இடையோடு கட்டிக்கொண்டவள்  அவன் முன் உச்சி சிகையை கைகளால் விலக்கி அவன் நெற்றியில் இதழ் பதித்தவள்

“எஸ் எஸ் எஸ் ஐ வில் பி வித் யூ எவர் ரதன்... “   என்று கன்னம் குழிய சிரித்தாள்...

அவளின் அந்த மலர்ந்த சிரிப்பை,  பௌர்ணமி நிலவாய் ஒளிர்ந்தவளை கண்டதும் அவனுக்குள் கரைபுரண்டது காதல் அலை...

வேகமாக எழுந்தவன் அவளை அப்படியே தன் கரங்களில் அள்ளிக் கொண்டு படுக்கையை அடைந்தான்.. அதில் தன்னவளை அமர வைத்தவன் அவளை நெருங்கி அமர்ந்து கொண்டு அவள் கையை எடுத்து தன் கைக்குள் வைத்துக்கொண்டு அவளை இமைக்க மறந்து பார்த்திருந்தான்..  

பெண்ணவளோ அவன் பார்வையின் வீச்சை தாங்காமல் நாணத்தால் முகம் சிவந்தாள்.. ஆனால் அவள் மனதில் இருக்கும் ஒரு வினாவை தெளிவு படுத்திக்கொள்ள அவன் முகம் பார்த்தவள்

“எப்ப இருந்து என்னை பிடிக்க ஆரம்பித்தது ரதன்.. “ என்றாள் ஆர்வமாக..  

அவனும் மெல்ல ரசனையுடன் புன்னகைத்தவன்

“தெரியலையே பொண்டாட்டி.. நீ எங்க எப்ப எப்படி என் மனதுக்குள் வந்தாய் என்று இன்றுமே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது..

ஆனால் ஆழ்ந்து யோசித்தால் உன்னை முதன் முதலாக குட்டி நிலவாய் நீ பிறந்த பொழுதே உன் முகம் பார்த்த அன்றே என் மனதுக்குள் வந்திருப்பாய் என்றுதான் தோன்றுகிறது..

என்னையும் அறியாமல் உன் நிலா முகம் என் மனதுள் பதிந்திருக்கும்..  அதனால்தான் எனக்கு நிலா என்றால் கொள்ளை பிரியம் ஆகிவிட்டது..  கூடவே உன்னை நம் திருமணத்திற்கு பிறகு பார்த்த பொழுது எனக்கு புதிய வளாக தெரியவில்லை..  

என்னுடன் என்றும் இருப்பவளை போலவே தான் பீல் ஆனது.. ஆனால் என் முட்டாள் தனத்தால் தாத்தாவின் மீது இருந்த வெறுப்பால் உன்னை அடையாளம் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டேன்.. “ என்றான் வருத்தமாக..

உடனே அவன் வருத்தத்தை தாளாதவளோ கரம் நீட்டி அவன் இமைகளை நீவி விட்டவள்

“இட்ஸ் ஓகே ரதன்...நடந்தது எல்லாம் நன்மைக்கே.. இனி நடப்பதும் நன்மைக்கே என்று நம்புவோம்.. “  என்றாள் சிரித்தவாறே..

அதற்குள் அவனும் தன்னை சமாளித்துக் கொண்டவன் அவன் பற்றியிருந்த அவள் கையில் இதழ் பதித்தவன்

“இப்படி என்னை புரிந்து கொண்டு எனக்காக ஒவ்வொரு நிமிடமும் பார்த்து பார்த்து செய்யும் ஒரு வாழ்க்கைத் துணை கிடைத்தது எவ்வளவு பெரிய பாக்கியம்.. ஐ அம் சோ லக்கி அன்ட் கிப்டெட்..” என்று தழுதழுத்தான்..  

அவன் நெற்றியில் தவழ்ந்த முடியை செல்லமாக கலைத்து

“பல குடும்பங்களை காக்கும் தேவநாதன் ஜமீன்தாரின் பேரன் இந்த சின்ன ஜமீன்தார் எப்பவும் லக்கியாதான் இருக்கணும்... நோ பீலிங்ஸ்.. சியர் அப்.” என்று குறும்பாக சிரித்து கண் சிமிட்டினாள்..

அவனும் இணைந்து நகைத்தவன்

“சரி..  நீ சொல்லு நிலா.. உனக்கு எப்பொழுது இருந்து என்னை பிடிக்க ஆரம்பித்தது?  என்றான் ஆர்வமாக..

“ஹா ஹா ஹா இது என்ன புது கதை ஜமீன்தாரே?  நான் எங்கே உங்களை காதலித்தேன்?  நான் உங்களுக்கு மனைவி மட்டும்தான் காதலி இல்லை..”   என்றாள் குறும்பாக சிரித்தவாறு..

“ஆங்... நம்பிட்டேன்..  நீ சொல்லுவதை அப்படியே நம்பிட்டேன் ஜமீன்தாரினி..

காதல் இல்லாமல் தான் மணமேடையில் அமர்ந்திருந்த பொழுது முன்னால் அமர்ந்திருந்த என்னை பார்க்க உன் கண்கள் தவித்தனவோ? மணமேடையில் சடங்குகள் நடக்கும் பொழுது உன் கண்கள் ஆர்வமாய் என்னையே அடிக்கடி தழுவின..  அது காதல் இல்லாமல் தானா?

என்னை பார்க்கும்போதெல்லாம் உன் கண்கள் பளபளக்கும்.. உன் முகத்தில் அந்த பௌர்ணமி நிலா ஓடி வந்து ஒட்டி கொள்ளுமே.. அதெல்லாம் காதல் இல்லாமல்தானா..!

அவ்வளவு ஏன்.. எனக்கு விபத்து என்றதும் பதறித் துடித்து கதறி ஓடி வந்தாயே !  அது காதல் இல்லாமலா? சொல்லு டி..  இதற்கு எல்லாம் பெயர் என்ன? என்றான் மந்தகாசப் புன்னகையுடன் சிரித்தவாறு..

“அச்சோ கண்டு கொண்டானே.. ! “ என்று கன்னங்கள் சிவந்தன பெண்ணவளுக்கு.. ஒரு அசட்டு சிரிப்பை சிரித்தவள்

“ஹ்ம்ம்ம் எனக்கும் தெரியலை ரதன்... உங்களைப் போலவே நானும் ஆழ்ந்து யோசித்து பார்த்தால் நம் திருமணத்திற்கு முன்பே நான் உங்களை விரும்ப ஆரம்பித்து விட்டேன் என்று தான் புரிகிறது.. “ என்றாள் நாணத்துடன்..

அதை கேட்டு திகைத்தவன்

“வாட்? என்னை முன்பே உனக்கு தெரியுமா? என்னை பார்த்திருக்கிறாயா? உன்னை நான் குழந்தையாக பார்த்தது மட்டும்தான்.. அதன் பிறகு நான் ஊட்டிக்கு சென்றுவிட்டேன்.. அதற்கு பிறகு உன்னை பார்த்ததாக நியாபகம் இல்லையே.. “ என்றான் ஆச்சர்யமாய்....

“ஹ்ம்ம்ம் நளன் மகாராஜாவின் பெருமைகளை கேள்விப்பட்டு அவர் மீது காதல் கொண்ட தமயந்தியை போல அர்ஜுனனின் வீரத்தையும் வில்வித்தையையும் கேள்விப்பட்டு அவன் மீது காதல் கொண்டு அவனையே மணக்க வேண்டும் என்று நின்ற திரௌபதியை போல என் தாத்தா அடிக்கடி உங்களைப் பற்றி பேசுவார்..

நீங்கள் உங்கள் தாத்தாவை போல திறமையானவர்.. வல்லவர்.. நல்லவர். நடக்கும்பொழுது அப்படியே அவர் நண்பர் தேவநாதன் ஜமீன்தாரே நடந்து வருவது போல இருக்கும்..

என்று தினமும் மூன்று முறையாவது உங்கள் புராணம் என் வீட்டில் ஓடும்....

ஒருவேளை அதைக்கேட்டு என் மனதில் என்னை அறியாமல் உங்கள் உருவம் பதிந்துவிட்டதாக்கும்.. அதனால்தான் தேவநாதன் தாத்தா உங்களை மணக்க சொல்லி கேட்டதும் முதலில் உள்ளுக்குள் மகிழ்ந்து போனேன்..  

ஆனால் அதன் பிறகு நீங்கள் வேறு ஒருத்தியை விரும்புவதாக சொன்னதும் கஷ்டம் ஆகிப்போனது.. ஆனாலும் தாத்தா அது காதல் இல்லை என்று சொல்லவும் எனக்குள் ஒரு நம்பிக்கை..

நீங்கள் எப்படியும்  என்னிடம் வந்து விடுவீர்கள் என்றும்  உங்களை இழந்து விடக்கூடாது என்ற ஒரு அசட்டு நம்பிக்கை...அதனால் தான் திருமணத்திற்கு சம்மதித்தேன்..   

ஆனாலும்   உள்ளுக்குள் சிறு கலக்கம் இருந்துகொண்டேதான் இருந்தது..

எங்கே நீங்கள் சாந்தினியை உண்மையாக காதலித்து விடுவீர்களோ என்ற சிறு அச்சம் இருந்து கொண்டேதான் இருந்தது.. அப்படி நீங்கள் உண்மையாக சதுவை காதலித்தால் உங்களை விட்டு விலகிவிடவும் என் மனதை தயார் படுத்தி வைத்திருந்தேன்.

எப்படியோ அந்த முருகன் தயவால் நல்லவேளையாக நீங்கள் என்னிடமே வந்துவிட்டீர்கள்... நான்தான் ரொம்ப லக்கி.. என் மனம் கவர்ந்தவனையே மணந்து கொள்ளும் பாக்கியம் கிடைத்தவள்..”  என்று கிளுக்கி சிரித்தவள்  

“ஐ லவ் யூ ரதன்... ஐ லவ் யூ ஜமீன்தாரே.. ஐ லவ் யூ என் கோபக்கார  புருஷா... “  என்று கொஞ்சியவள் அவன் எதிர்பாராதவாறு அவன் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள் நிலா...

தன் மனைவியிடம் இருந்து கிடைத்த முதல் பரிசு அவனுக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த அவனையே கிறக்கத்துடன் பார்த்திருந்தான் அவள் மனதில் இருப்பதை எல்லாம் சொல்லி முடிக்கட்டும் என்று காத்திருந்தான்...

தன்னவன் முகம் பார்த்தவள்

“ஆமா.. அது ஏன் என்னை பார்த்தால் உங்களுக்கு ஒரு நிலா போல தெரிந்தது? எதற்காக இந்த பெயரை வைத்தீர்கள் ?   என்றாள் மையலுடன் தலை சரித்து பார்த்தவாறு....

“ஹா ஹா ஹா ஒரு நிலா மட்டுமல்ல ஹனி.. இப்பொழுது பார்த்தால் உன்னிடம் பலவிதமான நிலாக்கள் தெரிகின்றன.. உன் நெற்றி ஒரு பிறை நிலா..  உன்னுடைய இந்த இரண்டு குண்டு கன்னங்களும் முழு நிலாவை வெட்டி இரண்டு பக்கமும் வைத்ததை போன்ற அரை நிலாக்கள்..

உன் இதழ்கள் இருக்கிறதே அவை துண்டாக வெட்டிய நிலா துண்டு..” என்று அவளின் பட்டு இதழ்களை கைகளால் வருடியவன்  

“உன் முகம் ஒரு பௌர்ணமி நிலா.. மொத்தத்தில் உன் உடலின் ஒவ்வொரு பாகமும் ஒருவிதமான நிலா தான்.. நீயும் முழுவதுமாய் என்னுடைய பௌர்ணமி நிலா..  இந்த நிலவை  என்னிடம் நெருங்காதே என்று இத்தனை நாட்களாக தள்ளி வைத்த மடையன்,  முட்டாள் நான்..

இனிமேல் இந்த நிலாவை என்றும் என்னை விட்டு பிரியாமல் என்னுடனே புதைத்துக் கொள்வேன்.. “  என்று கண்சிமிட்டி மந்தகாசமாய் மோகத்துடன் சிரித்தவன்

அதற்குமேல் வேறு பேச்சுக்கு இடம் கொடாமல் தன்னவளை இழுத்து தன்மீது போட்டு கொண்டவன் அப்படியே படுக்கையில் சரிந்து அவள் முகமெங்கும் முத்தமழை பொழிந்தான்...  

நீண்ட நாட்களாக அவனை சீண்டி வந்த அவளின் செவ்விதழை தாபத்தோடு சிறைப்பிடித்தான்..

தன் கணவனின் அணைப்புக்காக ஏங்கி இருந்த பெண்ணவளும் இன்னுமாய் உருகி தன்  வளைகரங்களால் அவனை தன்னோடு சேர்த்து அணைத்து கொண்டவள் அவன் பரந்த முதுகில் தன் கரங்களை படரவிட்டு நெகிழ்ந்தாள்..  

இதழ்களில் ஆரம்பித்த அவன் தேடல் தன் மனையாள் மேனி முழுவதும் அவன் கரங்களும் இதழ்களும் ஊர்வலம் வர,  அழகாய் ஆரம்பமானது அவர்களின் தாம்பத்ய வாழ்க்கை..

முறைத்துக் கொண்டிருந்த இரு இதயங்களும் இணைய,  விறைத்துக் கொண்டிருந்த இரு உடல்களும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து ஒருவருக்குள் ஒருவராய் கலந்து களித்தனர்..

அவர்களின் இனிய கூடலை கண்ட அந்த வெண்ணிலாவும் வெட்கப்பட்டு தன் மேக காதலனின் மார்பில் தஞ்சம் புகுந்து கொண்டாள்.. அந்த மேக காதலனும் தன் காதலி வெண்ணிலவை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு நிம்மதியாய் துயில் கொண்டான்..  

இவர்களின் இல்லறம் நல்லறமாய் இந்த ஜென்மம் இல்லாமல் இனி வரும் ஜென்மங்களிலும் தொடர வாழ்த்தி விடை பெறுவோம்... நன்றி !!!

********* சுபம் ***********

இந்த கதையை பொறுமையாக வாசித்து ரசித்த அனைத்து வாசகர்   தோழமைகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை மறக்காமல் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 

மீண்டும் ஒரு புதிய கதையுடன் விரைவில் உங்களை சந்திக்கிறேன்...நன்றி!!!- அன்புடன் பத்மினி செல்வராஜ்.


Comments

Post a Comment

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!