என்னுயிர் கருவாச்சி-57(final)

 


அத்தியாயம்-57

 

நீ சொன்ன மாதிரி என்னை நீ கருவாச்சினு  கூப்பிட்டு என்னை சீண்டறப்ப எல்லாம் எனக்கு ஆத்திரம் ஆத்திரமா வரும்.  

அப்படியே அம்மிக்கல்லை தூக்கி உன் தலையில போடணும் போல கொல வெறியா இருக்கும்.  

இந்த உலகத்திலயே நான் வெறுத்த முதலும் கடைசியுமான ஆள் நீதான் என்று அடிக்கடி நான் நினச்சுக்குவேன். அம்புட்டு வெறுப்பு உன் மேல.

அதீத வெறுப்பு தான் விரைவில் காதலாக மாறும் என்று  ஏதோ கதையில் படித்தது உன்  விஷயத்தில்  உண்மையாகிப் போனது.

உன் மீது அதீத வெறுப்புடன் இருந்த எனக்கும் உன் காதல் வந்தது எப்ப தெரியுமா?

ஆன்றோர்,  சான்றோர்,  பெரியோர்கள் பலரும் நிறைந்த சபையில்,  நடுநாயகமாக நின்றிருந்த பாஞ்சாலியை,  துச்சாதனன் துகில் உரிக்க வரும் பொழுது,  யாருமே அந்த சபையில் அவளை காக்க முன்வரவில்லை.

எல்லாரும் கைவிடப்பட்ட கையறுநிலையில் நின்றிருந்த பாஞ்சாலியை காக்க வந்த அந்த கருநீல கண்ணனாய் எனை காக்க நீ வந்த அந்த நொடி...

திருமண மண்டபத்தில் அந்த பொறுக்கி ராஜேந்திரன் என்னை நிறுத்தி வைத்துக் கொண்டு,  பேரம் பேசிய பொழுது என் சொந்த அக்கா முதற்கொண்டு எல்லாருமே கை விட்டு விட்டார்கள்.  

அந்த பாஞ்சாலியை போல நானும் எனக்காக...எனை அந்த கயவனிடம் இருந்து காக்க, யாரும் இல்லையா என்று உள்ளுக்குள் புலம்பிய பொழுது,  நான் இருக்கிறேன்... அவளுக்காக நான் இருக்கிறேன்... பூங்கொடிக்காக நான்  இருக்கிறேன்...   என்று  உன்  குரல் கேட்ட அந்த நொடி...!  

நீ, எனக்காக என் அப்பா அம்மா செய்த வியாபாரத்தை தட்டிக்கேட்ட அந்த நொடி...  

என் முகத்தில் திருமணத்திற்கான மகிழ்ச்சி சுத்தமும் இல்லை என்று நீ கண்டு கொண்டு,  என் அப்பாவை குடைந்த அந்த நொடி...  

எனக்காக கொஞ்சமும் யோசிக்காமல்,  உன்னுடைய பொண்டாட்டியைப்  போல பொத்தி பொத்தி பாதுகாத்து வைத்திருந்த,  லட்ச ரூபாய் புல்லட்டை தூக்கி கொடுத்த அந்த நொடி...  

அந்த நொடி தான் உன் மீது எனக்கு காதல் வந்தது மாமா...  

காதல் என்பது சினிமாவில் காட்டுவதைப்போல, ஒரு  அழகான பெண்ணையோ ஆணையோ பாத்ததும் , அவர்கள் கண்ணோடு கண் நோக்கியதும் மலர்வது அல்ல.  

கற்பனை கதைகளில் வருவதைப்போல, நாயகி கால் இடறி கீழே விழும்போது, அவளின்  இடையோடு பற்றி நிறுத்திய உடனே பொங்கி  வருவதில்லை காதல்...!

அதீத அழகான பெண்ணுக்கும், ஹேன்ட்சமான ஆணுக்கும் மட்டும் தான் காதல் மலரும், என்றால் இந்த உலகில் முக்கால்வாசி பேர் காதல் இல்லாமல் தான் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும்.  

காதல் என்பது வெளித்தோற்றத்தை..புற அழகை பார்த்து வருவதில்லை... அக அழகை பார்த்து வருவது... இதை நான் தாமதமாகத்தான் புரிந்து கொண்டேன்.  

எனக்குத் தெரிந்து ஒரு ஆள்... அவனைப்போல மூன்று மடங்கு குண்டான ஒரு பெண்ணை காதலித்துப் மணந்திருக்கிறான்.  அதேபோல நிறத்திலும் வெள்ளை வெளேரென்று பொண்ணும்,  அவள் கலருக்கு முற்றிலும் ஆப்போசிட் ஆன,  கருப்பான ஒருத்தனை காதலித்து மணந்திருக்கிறாள்.

அப்பொழுது எல்லாம் எனக்கு ஆச்சரியமாக இருக்கும்

வெளித்தோற்றத்தில் கொஞ்சமும் பொருத்தமில்லாதவர்கள் எப்படி காதலித்தார்கள் என்று

ஆனால் அதை நானே உணர்ந்த பொழுது தான் காதலின் மகத்துவம் புரிந்தது

காதல் என்பது அழகை பார்த்து வருவதில்லை.  அதன் அடிப்படையே நம்பிக்கை...  ஒருவர் மற்றவர் மீது கொண்ட நம்பிக்கை...  

தன்னை  எந்த நிலையிலும் கை விடாமல் காத்து நிற்பார்கள்...  இன்பத்திலும் துன்பத்திலும் துணை நின்று கரை சேர்ப்பார்கள் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையை   தன் இணையிடம்  கண்டுகொள்வதே காதல்

அதோடு தன் இணை மீது காட்டும் அன்பு..அக்கறை... அவளோ அவனோ மட்டும் அல்லாமல் தன் இணையின் குடும்பத்தையும் தன் குடும்பமாக பாவித்து நேரிக்கும் நேசம்தான் காதல் என்று புரிந்து கொண்டேன்.

அப்படிப் பார்த்தால் நீ அந்த மண்டபத்தில் வாதாடிய ஒவ்வொரு நொடியும் எனக்காக... என்னை காப்பாற்றுவதற்காக என்று புரிந்தது

அதோடு எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து,  நீ என்னுடன் பழகியது எல்லாம் நினைத்துப் பார்த்தேன்.  

என்னை கருவாச்சி என்று சீண்டினாலும் ஒவ்வொரு தருணத்திலும் நீ எனக்காக பாத்து பாத்து செய்திருக்கிற.

நான் சைக்கிள் பழ்கும்பொழுது கீழ விழுந்த அடுத்த நொடியே ஓடி வ்அந்து தூக்கி விட்டு, என் காயத்தை கண்டு பதறியது....டி.வி.எஸ் ஓட்டும்பொழுது வாரி விழுந்து வைத்த போது பதறி தவித்தது.

அந்த ராஜேந்திரன் கிட்ட மாட்டிகிட்டு முழித்த பொழுது பறந்து வந்து என்னை காத்தது.

விளையாட்டுப் போட்டிக்கு அனுப்ப முடியாது என்று மறுத்த என் அப்பாவை என் விருப்பம் அறிந்து,  சம்மதிக்க வைத்து என்னை கூட்டிகிட்டு போனதும்...  அங்கே  நான் ஜெயிக்க,  எனக்காக நீ செய்த உதவியும் நினைவு வந்தது.  

அதுமட்டுமல்ல...  அந்த சந்தோஷ் உடன் நான் சிரித்து பேசுவதை கண்டு,  எங்கே நான் மனம் தடுமாறி அவன் பக்கம் சாய்ந்து விடுவேனோ... என்று அஞ்சி,  அவன் நல்லவன் இல்லை என்று எச்சரித்த உன்  அக்கறை அப்பதான்  எனக்கு புரிந்தது

இது மாதிரி ஒவ்வொரு தருணத்திலும் நீ எனக்காக என்னையறியாமலேயே என்கூட நின்றிருக்கிற மாமா...

அப்பதான் தெரிந்தது...  நீ என்னிடம் நேரடியாக உன் அன்பை சொல்லாவிட்டாலும், நீ செய்த ஒவ்வொன்றும் ,  கண்டிப்பாக அது என் மீதான அக்கறையினால்தான்.  

அதையும் தாண்டி என் மீதான காதலாகத்தான் இருக்கும் என்று யூகித்தேன்.

உன்னை கட்டிக்கிட்டா என் வாழ்க்கை சந்தோசமாக இருக்கும் என்று அந்த நொடி தான் எனக்கு நம்பிக்கை வந்தது.

அந்த நம்பிக்கைதான் அடுத்த நொடியே காதலாக மாறியது.  

அதுவரை நல்லா படித்த மாப்பிள்ளை வேண்டும்...அவனுக்கு  சொந்தமாக வீடு இருக்க வேண்டும்...  என் அக்காவை போல சொகுசாக வாழ வேண்டும் என்று எல்லா பெண்களையும் போல கனவு கண்டு கொண்டிருந்தேன் நான்.  

ஆனால் நான் காசுக்காக அலைந்து திரிந்த பொழுதுதான் காசு  இருப்பவர்களை பற்றி எனக்கு தெரிந்தது.  

அவர்களிடம் வசதி வாய்ப்பு இருக்கலாம். ஆனால்  அடுத்தவர்களுக்கு உதவும் குணம் சுத்தமாக இல்லை.  இப்படிப்பட்ட ஒருத்தனுடன்   இணைந்தால்,  எப்படி சந்தோசமாக இருக்க முடியும் என்று அந்த நொடியில் தான் புரிந்தது.

உன்னிடம் காசு பணம் இல்லை என்றாலும் அடுத்தவர்களுக்கு உதவும் தாராள குணமும், அதையும் தாண்டி, என் மீதான அன்பும் அக்கறையும் நிறையவே கொட்டிக்கிடந்தது.

அது போதும் எனக்கு...!   என்னை சொகுசாக வாழ வைக்கா விட்டாலும் உன்னோடு சேர்ந்து கஷ்டப்படுவதும்  சுகம் தான் என்று அந்த நொடிதான் புரிந்தது.

என் அம்மா அப்பாவை போல... அவர்கள்  இருவருமே பகலில் மாடாக வயலில் உழைத்தாலும்,  அந்த இரவுப் பொழுதில் இருவரும் காதலோடு ஒருவருக்கொருவர் சிரித்துப் பேசி, சீண்டி  மகிழும் அந்த வாழ்க்கையில் கிடைக்கும் சந்தோஷத்தை சொகுசாக வாழும் என் அக்கா மாமாவிடம் கூட கண்டதில்லை.

வாழ்க்கையில் எது சந்தோஷம்..எது நிம்மதி.. எது காதல்   என்று   அந்த நொடியில் அறிந்து கொண்டேன்.  

பார்க்கிறதுக்கு ரவுடியாகவும் காட்டான் மாதிரி இருந்தாலும் உன் மனசு ரொம்பவும் வெள்ளை... அது ரொம்பவும் அழகானது என்று புரிந்த அந்த நொடியே உன் மீது காதல் கொண்டேன்.  

காதல் கொண்ட  அடுத்த நொடி அதை தக்க வைத்துக் கொள்ளவும், உன்னையே கை பிடிக்கவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது, போன ஜென்மத்தில் நான் செய்த புண்ணியம்தான்.  

யாரோ ஒரு பெருசு உன்னை  என்னைய கல்யாணம் பண்ணிக்க சொன்ன,  அந்த நொடி எனக்கு அப்படியே வானத்தில் பறப்பதைப் போல இருந்தது.  அப்பயே உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு உன் பொண்டாட்டியா, உன் கைபிடித்து கம்பீரமா நடக்க வேண்டும் மனசு பரபரத்தது.

ஆனால் நீயோ  என்னை கட்டிக்க முடியாது என்று மறுக்க, அந்த நொடி  அப்படி கோபம் வந்தது.  

உன்னை இப்பொழுது விட்டு விட்டால் அதன் பிறகு உன்னை மணக்க முடியாது என்று முடிவு செய்து,  கோபத்துடன் வெளியே வந்து உன் கன்னத்தில் ஒரு அறை விட்டு இந்த தாலிய வாங்கிக்கிட்டேன்.  

சாரி மாமா...  அன்னைக்கு அத்தனை பேர் முன்னாலயும் உன்னை அடிச்சது தப்புதான்...  ஆனால் எனக்கு வேற வழியி தெரியலை.  

நீ சாதாரணமா சொன்னா கேட்க மாட்ட. உன்னை  அதட்டி மிரட்டி உருட்டினா தான் வழிக்கு வருவ னு தெரிஞ்சுதான்  அப்படி பண்ணினேன்... சாரி...”  என்று வருத்தத்துடன்  அவன்  கன்னத்தை வருடினாள் மனையாள்.

“அன்னைக்கு ரொம்ப வலிச்சுதா? “ என்று அக்கறையோடு  வருடிய அவளின்  கரத்தை  எடுத்து தன் கன்னத்தோடு வைத்து அழுத்தி கொண்டவன்,  இல்லை என்றதாய் தலை அசைத்து மேலே சொல்லும்படி அவளை ஊக்குவித்தான்.

“அப்புறம் என்ன? எப்படியோ  காதலித்தவனை அடுத்த நொடியே கல்யாணம் பண்ணிக்கிட்ட அதிர்ஷ்டசாலி நான்தானு குத்தாட்டம் போட்டது என் மனசு.

என் காதல் கைகூடின, அடுத்த நொடியே உன் மீது கொள்ளை   ஆசையும்   சேர்ந்து கொண்டது.  

அதுவரை உன்னை பார்க்கும் போதெல்லாம் பொங்காத என் உணர்வுகள்,  என் மனதில் காதல் வந்ததும்,  அப்படி கிளர்ந்து எழுந்தன.  

நமக்கான முதலிரவை ஆவலாக எதிர்பார்த்தேன்.  

உன்னிடம் நிறைய பேச வேண்டும்...  உன்னிடம்  என் காதலை சொல்லி,  இப்படி கட்டிக்கிட்டு,  உன் மீது தலை வைத்து படுத்துக்கணும்... என்று இன்னும் என்னென்னவோ ஆசைகள்...  

நான் எவ்வளவு ஆசையுடன் உனக்காக காத்திருந்தால்,  நீ போய் கோயில் திண்ணையில்,  கோயிலுக்கு நேர்ந்துவிட்ட காளைமாடு  மாதிரி படுத்து கிடக்க...  

எப்படியோ என் தம்பி உன்னை கண்டுபிடிச்சு கூட்டிகிட்டு வந்து முதலிரவு அறைக்குள் விட்டால், உள்ளே வந்ததும்,  புதுப் பொண்டாட்டியை ஆசையா கட்டிக்காம,  எனக்கு இன்னொரு புருஷனை பாத்து கட்டி வைக்கிறேன் னு  சொல்ற.  

எனக்கு வந்த கோபத்துக்கு...  அதுதான் விட்டேன் இன்னொரு அறை...”  இன்று இப்பொழுதும் தன் பல்லை நரநரத்து அவனை முறைத்தாள்.  

“ஹீ ஹீ ஹீ...சாரி செல்லம்... அப்ப உன் மனசு எனக்கு தெரியாதே...  உன் நல்லதுக்காக...  உனக்கு  ஒரு நல்ல வளமான வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்கனும் என்ற அக்கறையினால் தான் அப்படி பேசினேன்...”  என்று  வருத்தத்துடன் சொல்ல,

“நல்லா சொன்ன போ... உன் வாயிலிருந்து அந்த வார்த்தையை கேட்டதுமே பாதி செத்து போயிட்டேன்.  அப்பதான் நான் மட்டும்தான் உன்னை நேசிக்கிறேன்...  உனக்கு என்மீது கொஞ்சமும் விருப்பமில்லை...  

உன்னை கட்டாயப்படுத்தி நான் என் கழுத்துல தாலி கட்ட வச்சுட்டேன் என்ற உண்மை புரிந்தது.  

அதனால்தான்  என் காதலை...  உன் மீதான என் ஆசையை எல்லாம் என் மனசுக்குள்ள போட்டி பூட்டிக்கிட்டேன்.  

ஆனாலும் நீ இன்னொரு தரம் எனக்கு மாப்பிள்ளை பார்க்கிறேன் என்று  இறங்கி  விடக்கூடாது என்று தான் அன்றிரவு நமக்கு எல்லாம் நடந்து விட்டதை போல ட்ராமா பண்ணினேன்.  

ஆனால் அதையும் அடுத்த நாள் கண்டுபிடிச்சிட்டான்  என் புத்திசாலி புருஷன்...”  என்று அவன்  மீசையை பிடித்து இழுத்து, கருகருவென்று வளர்ந்திருந்த  அவன் மீசைக்கு ஒரு முத்தம் கொடுத்தாள்.  

அன்று பண்ணையார் வீட்டிற்கு சென்று திரும்பும் பொழுது தான், உன் மனைவியாய் உன் மனதிலும் நான்  இருக்கிறேன் என்று தெரிந்து கொண்டேன்.  

அந்த சுதாகர் என்னை பார்த்த பார்வையைக் கண்டு நீ  பொங்கியது எனக்கு அம்புட்டு சந்தோசத்தை கொடுத்தது.

நீயும் உன் மனசுக்குள்ள என் மீதான காதலை, ஆசையை மறைத்துக் கொண்டுதான் கெத்து காட்டுகிறாய் என்று  கண்டு கொண்டேன்.  

சரி...  நீயா  என் வழிக்கு வரட்டும் என்று விட்டு பிடித்து காத்திருந்தேன்.  

ஆனாலும் நீ சரியான அழுத்தக்காரன் யா... கடைசி வரைக்கும் என் பக்கம் வர,  ஒரு சிறு துரும்பை கூட அசைக்கல. என்னை விட்டு தள்ளித்தான் போன..

சரி..இது வேலைக்காகாது. மயிலே மயிலேனா இறகு போடாது....நாமளே பிச்சு எடுத்துக்க வேண்டியதுதான் என்று    உன்  கூட சேர,  என்னென்னவோ வழியில உன்னை மடக்க முயன்றாலும் கழுவுற மீனுல நழுவுற மீனா எஸ்கேப் ஆகிட்டே இருந்த.

எந்த சாமி புண்ணியமோ... கடைசியில் என் வலையில மாட்டின. இல்லைனா  இன்னும் ரெண்டு வருஷம் ஆனாலும், இந்த பூங்கொடி தணிகாசலம் பொண்ணாவே தான்  இருந்திருப்பேன்...”  என்று  செல்லமாக முறைக்க,  அவனோ  அசட்டு சிரிப்பை சிரித்தான்.  

ஆமா...ஆனா ஊனா  இப்படி ஒரு இளிப்பை இளிச்சுக்க... என்னை உனக்காக எம்புட்டு ஏங்க வச்ச தெரியுமா? “ என்று பொய்யாக சிணுங்கினாள்.

“சாரி டி.. அதான் சொன்னேனே... உன் மனசு தெரியாம..கூடவே என்னோட பயம்.... உன்னை காக்க வச்சதுக்குத்தான்  இப்ப வட்டியோட சேத்து தினமும் திருப்பி தர்ரேனே டி...

ஒரு நைட்டாவது நீயில்லாம  இருந்திருக்கேனா? “ என்று விஷமமாக கண் சிமிட்ட, பெண்ணவளோ குங்குமமாக சிவந்து போனாள்.

அவளின் சிவந்த முகத்தை ரசனையோடு பார்த்திருந்தவன், அப்பொழுது சன்னல் வழியாக ஓடிவந்த குளுகுளு தென்றலில், அவளின் முன்பகுதி கூந்தல் கலைந்து முகத்தில் மோத,

அதை தன் விரல்களால் விலக்கி அவளின் காதோரம் சொருகியவன்,  அவளின் செவி மடலை தன் முரட்டு இதழலால், மிருதுவாய் தீண்டினான்.

அவனின் மீசை பட்டு அவளுள் குறுகுறுத்தது...அவளின் உணர்வுகள் தழும்பின. தன் கால்களை ஒன்றோடு ஒன்று பின்னிக்கொண்டு, தன் கீழ் உதட்டையும் அழுந்த கடித்துக் கொண்டாள்

“ரொம்ப தேங்க்ஸ் டி... நீ  என் மேல இம்புட்டு காதலை வைத்திருப்பதற்கு... இத்தனை நாள்  எனக்காக யாருமில்லாமல்,  நான் பட்ட கஷ்டமெல்லாம்  ஊப்ப்ப்ப்ப் னு ஊதிவிட்ட மாதிரி ஆய்டுச்சு.

என்னை இந்த ரௌடியை... இந்த தறுதலையையும் ஒருத்தி உயிருக்கு உயிரா காதலிக்கிறா என்று நினைக்கும்பொழுது அப்படியே ஜிவ்வுனு ஆகுது.

செத்து கிடந்தால் கூட எட்டி பாக்க யாருமில்லாத இந்த அனாதைவெட்டி பயலுக்கு, காதலையும் கொடுத்து உன்னையும் கொடுத்து... 

இப்ப நான் கொஞ்சி களிக்க என் புள்ளையும் பெத்து குடுத்து...  எனக்குனும் ஒரு குடும்பத்தை உருவாக்கி கொடுத்த உனக்கு என்ன கைமாறு செய்யப்போறேனு தெரியல டி...” என்று தழுதழுத்தான்...

யோவ் மாமு... அதென்னை கைமாறு அது இதுனு பிதட்டற.. எங்கயாவது சாப்பாடு ஊட்டற கைக்கு,  வாய் நன்றி சொல்லுமா? நானும் நீயும் வேற வேற இல்ல யா...ஒன்னுக்குள்ள  ஒன்னு...  “ என்று ஹஸ்கி குரலில் காதலுடன் சொல்லி, அவன் கன்னத்தை செல்லமாக கடித்தாள்.

“ஐ லவ் யூ டி பொண்டாட்டி...இப்ப நான் எம்புட்டு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா? இந்த உலகத்துலயே ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கறது யாருனா அது நான் தானு கத்தி சொல்லனும் போல இருக்கு...

எல்லாம் உன்னாலதான் டி ...ஐ லவ் யூ என் செல்ல  ராட்சசி...என்னுயிர் கருவாச்சி... “   என்று நெகிழ்ந்தவாறு,  அவளின்  கன்னத்தில் அழுந்த முத்தமிட்டான்.

அதில் பூரித்து போனாலும் அவனை இன்னுமாய் சீண்டினாள் அந்த சில்வண்டு.

“ஐய...இதெல்லாம் செல்லாது... இது வெறும் சைவம் மாமு...தினைக்கும் நீ சைவமா போடற... எனக்கு இன்னைக்கு அசைவம் வேண்டும்...

செத்த முன்னால சொன்னியே என்ன கசக்கி, புரட்ட போறதா... அப்படி வேணும்...வேணும்னா நான் இப்ப டெமோ காட்டறேன் பார்...  “ என்று நாணத்தோடு சொன்னவள் ,  

மஞ்சத்தில் கிடந்தவள் முழுவதுமாக அவன் மீது ஏறி படுத்துக்கொண்டு அவனின் கீழ் அதரத்தை அழுந்த கடித்து சுவைக்க ஆரம்பித்தாள்.

தன் மனதில் இத்தனை நாள் போட்டு பூட்டி வைத்திருந்ததை எல்லாம் இருவரும் மனம் விட்டு கொட்டிவிட்ட நிம்மதியில் இருவரின் மனதிலுமே காதல் பொங்கி  பெருகியது.   

காதலின் வெளிப்பாடாய், அன்றைய கூடலை இருவருமே ஆர்வத்தோடு, ஆவலோடு, கூடுதல் தாபத்தோடு ரசித்து அனுபவித்தனர்.

அவளின் வேகத்தை ரசித்தவாறு தன் மேல கிடந்தவளை இறுக்கி அணைத்தவாறு  மல்லாந்து படுத்திருந்தான் அவளவன்.

அவளும் தன் ஆசை, காதலை, தன் கணவன் மீதான  தீரா மோகத்தை எல்லாம் கொட்டி,  அவன் இதழை ஒரு வழி பண்ணியவள், அடுத்து அவன் முகம் எங்கும் உதட்டால் ஊர்வலம் வந்தாள்.

அவனும் அந்த சில்வண்டின் சேட்டையை ரசித்தவாறு படுத்து கிடக்க, சற்று நேரத்தில் மூச்சு வாங்க தளர்ந்து ஊப்ப்ப்ப் என்று ஊதியவாறு அவன் மீது சரிய

“என்னடி...?  அவ்வளவுதானா உன் வேகம்.... நீ ஆரம்பித்த வேகத்தை  பார்த்தப்ப, இன்னைக்கு நான் காலினு நினச்சேன்...” என்று கல்மிஷமாக சிரிக்க, அவளோ நாணத்தோடு தன் முகத்தை கையால் மூடிக்கொண்டவள்,

“மீதிய நீ கன்டின்யூ பண்ணு மாமு... “ என்று தாபத்தோடு சொல்ல,

“அவ்வளவுதான...என் பொண்டாட்டி கேட்டு இல்லைனு சொல்லிடுவானா இந்த ராசய்யா...  இப்ப பார்... இந்த ராசய்யா யாருனு காட்டறேன்... “ என்றவன்  தன் மஞ்சத்தில் கிடந்தவளை பகக்வாட்டில் சரித்து,  அவள் மீது படர்ந்தவன் அவள் கொடுத்ததை எல்லாம் திருப்பி கொடுத்தான்.

*****

குழந்தை உருவான அந்த தருணம் மட்டுமே இருந்த அவர்களின் கூடல் அதற்கு பிறகு வந்த பிரச்சனையில் அவளை தள்ளியே வைத்திருந்தான்.

ஆனால் குழந்தை நல்லபடியாக பிறந்து அவள் வீடு வந்து சேர்ந்ததும் அவன் மனதை, ஆசையை கட்டிப்போட முடியவில்லை.

அவளுக்கு சுக பிரசவம் என்பதால் ஒரு மாதத்திலயே அவள் உடலும் தேறி விட, அதோடு பச்ச உடம்புக்காரி என்று சிலம்பாயி பாத்து பாத்து  செய்து கொடுத்த பத்திய சாப்பாடும், எண்ணைக் குளியலிலும் அவளுடைய தேகம்  இன்னுமாய் மெருகேறி இருந்தது.

பளபளவென்று டாலடிக்கும் தன்னவளின்  தேகத்தை பார்க்கும் பொழுதெல்லாம்  அவன் உள்ளே புயல் அடிக்கும்

எப்படியோ இரண்டு மாதம் தாக்கு பிடித்தவன், அப்பொழுது தமிழ் மாத கணக்குக்கு மூன்று மாதம் ஆகியிருக்க, தடாலடியாக தன்னவளை அழைத்துக் கொண்டு தன் வீட்டிற்கு வந்து விட்டான்.

தன் மகளை வீட்டிற்கு அழைத்து வந்த அன்றும் பெரும் புயல் மழைதான்.

ஆனாலும் அந்த மழையிலும் கொண்டு வந்து விட வந்தவர்களை எல்லாம் திருப்பி அனுப்பி விட்டு, அறைக்குள் வந்து கதவை அடைத்தவன், உறங்கிய மகளை தொட்டிலில் போட்டுவிட்டு,  தன்னவளை அப்படியே கரத்தில் அள்ளிக் கொண்டான்.

பூங்கொடியோ  இன்ப அதிர்ச்சியோடு தன் கண்களை அகல விரித்து அவனை பார்க்க, அவளை அள்ளிக்கொண்டு சென்று  கட்டிலில் சரிந்தவன்,  இத்தனை நாள்  தனக்குள்ளே போட்டு பூட்டி வைத்திருந்த  காதல், தவிப்பு, ஆசை  தாபம், பசி , காமம் என எல்லாத்தையும் கொட்டி அவளை  ஆட்கொண்டான்.

தன் கணவனின் அந்த வேகத்தில் பெண்ணவளோ திக்கு முக்காடி போனாள்.

ஆனால் அப்பொழுதும் காஞ்ச மாடு கம்புல புகுந்து துவைத்து எடுப்பதை போல அல்லாமல்,  அவளின் முகம் பார்த்து பதமாகத்தான் நடந்து கொண்டான்.

அன்றிலிருந்து ஒரு நாளும் அவளை நீங்கியதில்லை அவன்.

திருமணம் ஆனதிலிருது  அவளை   தள்ளி வைத்த ஒவ்வொரு நாளையும் இப்பொழுது சேர்த்து வச்சு கொண்டாடினான்.

அவள் வேண்டாம் என்று  மறுத்தாலும் கேட்பதில்லை அவன்.  

ஆனால் எப்பொழுதும் அவளை மென்மையாக தீண்டுபவன்,  இன்று அவளின் சீண்டலில், வெகுண்டு எழுந்தவன் அவளை வன்மையாக கையாள, ஆரம்பத்தில் அதை ரசித்தாலும் அவனின் திடகாத்திரமான உறுதியான தேகத்துக்கு அவனின் வேகத்தை அவளால் தாங்க முடியவில்லை.

அவள் முகம் லேசாக சுளித்து விட, அதையும் தன் லேசர் பார்வையில் கண்டு கொண்டவன்,  உடனே தன் வேகத்தை குறைத்துக்கொண்டு மென்மையாக தொடர்ந்தான்.

அவளோ கேள்வியோடு அவனை பார்க்க,

“ஹீ ஹீ ஹீ நீ பச்ச உடம்புக்காரிடி.. என் வேகத்தை  உன்னால தாங்க முடியாது. இப்போதைக்கு இந்த சிக்கன் பிரியாணி மட்டும் போதும்.

உனக்கு அசைவம் வேணும்னா, நீ நல்லா உடம்ப தேத்தின பொறவு மட்டன் பிரியாணி சாப்பிடலாம்... “ என்று  கண் சிமிட்ட,

“சீ...  போ மாமு... “ என்று  வெட்கப்பட்டாலும் அவள் உள்ளே பூரித்துத்தான் போனாள்.

அவளுக்காக அவன் ஆசையை கூட கட்டுபடுத்தி அளவோடு காட்டும் தன் கணவன் மீது,   மீண்டும் எல்லையில்லா காதல் பொங்க, அவன் முகத்தை இழுத்து  தன்  மார்போடு சேர்த்து அழுத்திக்கொண்டவள்,

“ஐ லவ் யூ மாமு...” என்று தழுதழுக்க,

“ஐ லவ் யூ டி... என்னுயிர் கருவாச்சி.... “  என்று இறுக்கி அணைத்தவன், பாதியில் விட்ட ஆட்டத்தை மீண்டும் தொடர்ந்தான்  அந்த கருவாச்சியின்   கருவாயன்.    

இதற்குமேல் நமக்கு அங்கே வேலை இல்லை ப்ரெண்ட்ஸ்...

அதனால் இருவரும் இதே போல் என்றும் காதலும், ஆசையும், தாபமும்  குறையாது, ஓர் உடல் ஓர் உயிராய் வாழ்ந்திட வாழ்த்தி விடைபெறுவோம் நன்றி..!!! வணக்கம்...!!!

*****சுபம்*****

 

இந்த கதையை பொறுமையாக வாசித்து ரசித்த அனைத்து வாசகர்   தோழமைகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை மறக்காமல் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். 

 

Comments

Post a Comment

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!