தேடும் கண் பார்வை தவிக்க-12
அத்தியாயம்-12
பசியில் இருந்த ரோஜா அந்த உணவை அவசரமாக அள்ளி கொட்டி கொண்டு இருக்க, அவள் சாப்பிடும் அழகை ஓரக் கண்ணால்
ரசித்து பார்த்தான் ரிஷி...
சாப்பிட்டபின் அவள் இதழோரம்
ஒட்டியிருந்த சிறு உணவுத் துகளை உரிமையுடன் தட்டி விட்டான்.. அவள் சாப்பிட்டு முடித்த
அந்த உணவு பாக்சை எடுத்து பணிப்பெண்ணிடம் கொடுத்தான்..
அதன் பிறகு முன்னாலிருந்த அந்த டேபிளை மடக்கி
வைத்து விட்டு மீண்டும் அவள் பக்கமாக பார்த்து திரும்பி அமர்ந்தவன்
“ஹே ரோஜா... உன் பெயர் ரோஜா தானா? இல்லை வேறு ஏதேனும் எக்ஸ்ட்ராவா இருக்கா? “ என்று சிரித்தான் அவளிடம்
பேச்சை வளர்ப்பதற்காக...
அதைக்கேட்டு திகைத்து விழித்தவள்
சமாளித்து கொண்டு
“இல்ல... வெறும் ரோஜா மட்டும்தான்... “
என்றாள்..
அதைக் கேட்டதும் முன்பு அவளை “வெறும்
ரோஜா” என்று ஓட்டியது நினைவு வர,
இருவருமே அதை நினைத்து கொள்ள, இருவர் உதட்டிலும் புன்னகை தவழ்ந்தது...
அதன் பின் சிறிது நேரம் இருவரும்
பொதுவாக பேசிக்கொண்டிருந்தனர்.. அதிலும்
ரிஷி அவளை பற்றி அவளிடம் கேள்வி கேட்க, பொதுவாக அவளும் ஆமாம் இல்லை என்று ஒரு வாத்தையில்
விடையளி கேள்வியை போல ஒரு வார்த்தையில் பதில் சொன்னாள்...
ரிஷி அவளை பற்றியோ அவளுடைய குடும்பத்தை
பற்றியோ எதுவும் கேட்கவில்லை.. அவள்
எதுவும் தப்பாக எடுத்துக் கொள்வாள் என்று அவளைப் பற்றி விசாரிக்காமல் பொதுவாக பேச
ஆரம்பித்தான்..
சிறிது நேரத்தில் அந்த பணிப்பெண்
அனைவருக்கும் குடிக்க கொண்டுவந்தாள்.. அவர்கள் இருக்கையின் அருகில் வந்தவள் குடிப்பதற்கு என்ன வேண்டும் என்று ஆங்கிலத்தில்
கேட்க அவள் பேசும் ஸ்டைல் புரியாமல் திருதிருவென்று முழித்தாள் ரோஜா...
உடனே ரிஷி
“ஹே... உனக்கு என்ன ஜூஸ் வேண்டும்? ஆப்பிள் ஜூஸ் ஆர் ஆரஞ்சு
ஜூஸ்? “ என்றான் சிரித்தவாறு..
அவளோ அசட்டு சிரிப்பை சிரித்து “ஆப்பிள்
ஜூஸ்..” என்று சொல்ல அந்த பெண்ணும்
அவளுக்கு ஆப்பிள் ஜூஸை ஊற்றிக் கொடுத்தாள்..
அடுத்து ரிஷியிடம் கேட்க அவனும்
“எனக்கு ஒரு ஒயின்..” என்று சொன்னான்..
அதைக் கேட்ட ரோஜா முகத்தை சுளித்தாள்...
கூடவே அவனை ஒரு வில்லனை பார்ப்பதை போல பார்வையும்
பார்த்து வைத்தாள்..
ரிஷிக்கு அவளின் அந்த பார்வையின் அர்த்தம் புரியாமல் யோசனையாக அவளை பார்க்க அவளோ அவனை இன்னும் ஒரு கேவலமான லுக் ஐ கொடுத்து அவனை
முறைத்துவிட்டு மீண்டும் ஜன்னல் பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டாள்...
இதுவரை நன்றாகப் பேசிக் கொண்டிருந்தவள்
திடீரென்று அவனை முறைக்கவும் ஒரு மாதிரி
பார்த்து வைப்பதையும் யோசித்து கொண்டிருக்க, அதேநேரம்
அவன் முன்னே அவன் கேட்ட ஒயினை நீட்டினாள் பணிப்பெண்..
லேசாக அவன் புறம் திரும்பி பார்த்தவள்
அவன் அதை வாங்க கையை நீட்ட, மீண்டும் வெடுக்கென்று தலையை சிலுப்பிகொண்டு
அவனையும் அந்த ஒயினையும் ஒரு வெறித்த பார்வை பார்த்து
கண்களால் வேண்டாம் என்று கெஞ்சி மறுத்தாள்..
இப்பொழுது அவள் பார்வையின் அர்த்தத்தை
புரிந்து கொண்டான்..
அவளுக்கு இதை குடிப்பது பிடிக்கவில்லை
என்று புரிந்து கொண்டவன் உடனேயே
“இது வேண்டாம்.. எனக்கு ஒரு ஆப்பிள் ஜூஸ் கொடுங்க.. “ என்று அவளை ஓரக் கண்ணால் பார்த்தவாறே ஒயினை திருப்பிக்
கொடுக்க அதைக் கண்டு அவள் முகம் பூவாக
மலர்ந்தது...
அந்த பணிப்பெண் நகர்ந்து சென்றதும் அவன்
பக்கமாக கொஞ்சம் நெருங்கி வந்தவள்
“சார்.... நீங்க குடிப்பீங்களா? “ என்றாள் யோசனையாக..
“இது என்ன கேள்வி? எல்லாரும் தானே குடிக்கிறாங்க? ஏன் நீ கூடத்தான் இப்ப ஆப்பிள்
ஜூஸ் குடிக்கிற? “ என்றான் புரியாதவனாக..
அவனுக்கு தான் கேட்டதன் அர்த்தம்
புரியவில்லை என்று உணர்ந்து கொண்டவள் இன்னும் கொஞ்சம் அவன் அருகில் நெருங்கி வந்து
“ஐ மீன் சரக்கு அடிப்பீங்களா? “ என்றாள் கிசுகிசு
குரலில்...
அவனோ அதுவும் புரியாமல்
“சரக்கு அடிக்கறதுனா ? “ என்று புரியாமல் அவனும்
ரகசிய குரலில் கேட்டு கேள்வியாக அவன் புருவங்களை
உயர்த்தினான்..
அதைக் கேட்டு திகைத்து போனாள் ரோஜா...
“என்ன இவர்? குடிக்கிறது னா தெரியாதா? சரக்கு அடிக்கறதுனாலும் தெரியலங்கறார்.. வேற எப்படி சொல்றது? “ என்று யோசித்தவள்
“ஆங்... இப்ப கொஞ்சம் நேரம் முன்னாடி
நீங்க குடிக்க வாங்கினிங்களே... அது மாதிரி பீர், விஸ்கி, பிராண்டி இதெல்லாம் குடிப்பீங்களா? “ என்றாள் குழந்தைத்தனமாக கண்களை விரித்து...
அவள் கேட்கும் விதத்தையும் கண்களை அகல
விரித்து ரகசியமாக கேட்ட பாவனையையும் கண்டு ரசித்தவன்
“ஹ்ம்ம்ம் ஏதாவது பார்ட்டினா இதெல்லாம்
குடிக்கிறது வழக்கம்.. ஆனால் எப்பவும் லிமிட்டோட
இருப்பேன்.. “ என்று தோளை குலுக்கினான்..
“ஹ்ம்ம்ம் இந்த டிரிங்க்ஸ் எல்லாம்
குடிப்பதற்கு பேர்தான் சரக்கு அடிக்கிறது..”
என்று கண் சிமிட்டி குறும்பாக சிரித்தாள்..
அவளின் அந்த இயல்பான பேச்சையும்
குறும்புதனமான முக பாவனையும் கண்டவனுக்கோ அதுவரை கட்டு படுத்தி வைத்திருந்த அவன்
உணர்வுகள் மீண்டும் பொங்க அவளை அப்படியே அள்ளிக்கொள்ள தவித்தது அவன் உள்ளே..
அவளையே ரசித்து பார்க்க, அவளோ அவன் மனதில் ஓடும் எண்ணத்தை
அறியாமல்
“எனக்கு இந்த மாதிரி குடிக்கிறவங்கள
கண்டா பிடிக்காது சார்..ஆனா உங்கள முதல்ல பார்த்தா நல்லவர் மாதிரி தெரிஞ்சீங்க...
கடைசில பார்த்தா நீங்களும் குடிகாரனா மாறிட்டீங்க.. “ என்று செல்லமாக முறைத்து உதட்டை பிதுக்கினாள்..
அதைக் கேட்டவன் வாய்விட்டு சிரித்தான்...
“ஹே.. ரோஜா பொண்ணு... இதுக்கு எதுக்கு முறைக்கிற? இந்த ஒயின் அடிச்சா கிக் எல்லாம் ஏறாது... நீ சொன்ன பீர் விஸ்கி வேணும்னா
கிக் ஏறலாம்...
ஒயின் ஜஸ்ட் பாடிபெய்ன் போறதுக்காக குடிக்கிறது.. நீ குடிச்சியே ஆப்பிள்
ஜூஸ் அது மாதிரி இது க்ரேப் ஜூஸ்
அவ்வளவுதான்... உனக்கு பிடிக்கலைன்னா நான் இனிமேல் இதெல்லாம் குடிக்கல.. ஓகே வா? “ என்று கண்களால் சிரித்தான்...
அதைக் கேட்டவளோ திகைத்துப் போனாள்..
“ஆமா... நான் எதுக்கு இவர்கிட்ட
இதையெல்லாம் சொல்லிக்கிட்டு இருக்கேன்.. அவர் யாரோ? நான் யாரோ..? அவர் குடிச்சா எனக்கு என்ன? குடிக்காட்டா எனக்கு என்ன
வந்தது? நான்
ஏன் இப்படி சொல்லி வச்சேன்? நான் ஒரு சரியான லூசுதான்... “ என்று தனக்குத்தானே
கொட்டிக் கொண்டாள்..
பின் அவனைப் பார்த்து ஒரு அசட்டு
சிரிப்பு சிரித்தவள்
“சார்... குடி குடியை கெடுக்கும்
அப்படின்னு சொல்லுவாங்க... அதனாலதான் நீங்க அதை எடுக்கவும் பயந்துட்டேன்... நீங்க
எனக்கு ஒரு நல்ல ப்ரெண்ட் தான.. அந்த அக்கறையில சொல்லிட்டேன்..
நீங்க எதுவும் தப்பா
எடுத்துக்காதிங்க... " என்று அவசரமாக விளக்கம் சொன்னாள்...
“ஏ கமான் ரோஜா... நீ என்கிட்ட உரிமையோட
பேசலாம்.. என் கிட்ட உனக்கு எல்லா உரிமையும் இருக்கு... என்னை மிரட்டலாம், திட்டலாம்.. ஏன் அடிக்க கூட
செய்யலாம்... ஏன்னா நீ என் வைஃப்.. !“ என்று கண் சிமிட்டி சிரித்தான்..
அதைக் கேட்டவள் திடுக்கிட்டு
“என்னது வைஃப் ஆ? “ என்றாள் குழப்பமாக..
அப்பொழுதுதான் அவன் உளறியது உறைக்க, உடனே சமாளித்து கொண்டவன்
“ஹி ஹி ஹி வைஃப் ஆ? நான் ப்ரெண்ட் னு தான சொன்னேன்.. உனக்கு வைஃப் னு கேட்டுச்சா? “ என்று தன் புருவத்தை
உயர்த்தி கேலியாக பேசி சமாளித்தான்..
அதை கேட்டவள் திகைத்து
“அச்சோ.. அப்ப நாமதான் தப்பா கேட்டு விட்டமோ? “ என்று மீண்டும்
தனக்குள்ளே கொட்டிக் கொண்டவள் ஒரு அசட்டு சிரிப்பு சிரித்து
“இல்ல சார்... நீங்க ப்ரெண்ட் னு தான்
சொன்னிங்க... எனக்கும் அப்படித்தான் கேட்டுச்சு... “ என்று சொல்லி சமாளித்தாள்...
அதை கேட்டு அவனோ உள்ளுக்குள் குலுங்கி
குலுங்கி சிரித்தான்...பொங்கி வரும் சிரிப்பை அடக்கி கொண்டவன்
“ஹே..
என் பெயர் ஒன்னும் சார் இல்ல.. ரிஷி.. நீ என்னை ரிஷினே கூப்பிடு... “ என்று
கண்களால் சிரித்தான்..
“அச்சோ... அது நல்லா இருக்காது சார்.
நீங்க என்ன விட பெரியவங்க.. உங்கள போய் நான் எப்படி பேர் சொல்லி கூப்பிடறது? “ என்றாள் முகத்தை பாவமாக வைத்து கொண்டு..
“ஹ்ம்ம் வேணும்னா என்னை மாமா னு
கூப்பிடேன்... தூக்கத்துல என்னை மாமா னு தான் கூப்பிட்ட... “ என்று கண் சிமிட்டி குறும்பாக சிரித்தான்...
அதை கேட்டவள் திடுக்கிட்டு போக, முகமோ மீண்டும் அஷ்ட கோணலாகியது...
“ஐயயோ..! இப்படி எல்லாமா உளறி வைக்கிறது..? போச்சு.. மானம் போச்சு.. இன்னும் என்னெல்லாம்
உளறி வச்சேனோ? “ என்று தனக்குள்ளே திட்டி கொண்டவள்
“ஹீ ஹீ ஹீ சாரி சார்... நான் முன்னாடி
சொன்ன மாதிரி தூக்கத்துல ஏதோ உளறிட்டேன்.. அதெல்லாம் தப்பா எடுத்துக்காதிங்க... “
என்று அசட்டு சிரிப்பை சிரித்தாள்..
“ஹா ஹா ஹா நான் ஒன்னும் தப்பா
எடுத்துக்கலை பொண்டாட்டி.. இன்பேக்ட் நீ அப்படி கூப்டறதுதான் ரொம்ப புடிச்சது.. “
என்று உள்ளுக்குள் சொல்லி கொண்டவன்
“ஹா ஹா ஹா இட்ஸ் ஓகே ரோஜா.. நீ என்னை
சார் னு கூப்பிட்டாதான் தப்பா எடுத்துக்குவேன்.. நீதான சொன்ன நான் உன் ப்ரெண்ட்
னு.. நான் எப்படி உரிமையா உன்னை ரோஜா,
ரோஜா பொண்ணுனு ஒருமையில கூப்பிடறேன்..
நீயும் அதே போல ரிஷி னு கூப்பிடு..இல்லைனா மாமா னு கூப்பிடு... எனக்கு
டபுல் ஓகே.. “ என்று கண் சிமிட்டி
சிரித்தான்...
“அச்சோ.... நான் ரிஷினே கூப்ப்பிடறேன்
சார்... “ என்று அவசரமாக சொன்னாள்..
அதை கேட்டு மீண்டும் வாய்விட்டு
சிரித்தவன் சிரித்து முடித்ததும்
“ரோஜா... உனக்கு ஒன்னு தெரியுமா? என்னுடைய மாம் எப்பவுமே
என்னை கண்டிப்புடன் நடத்துவாங்க... நீ என்னை இப்படி உரிமையோடு அதை குடிக்க கூடாது
என்று சொன்னது அப்படியே என் மாம் ஐ நேரில் பார்த்த மாதிரி இருந்தது...
உன் சிரிப்பு கூட அழகா இருக்கு.. அப்படியே என் மாம் சிரிக்கிற மாதிரி இருக்கு...
“ என்று உணர்ந்து தழுதழுத்தவாறு சொன்னான்...
"ஓ... உங்களுக்கு உங்க அம்மா னா ரொம்ப பிடிக்குமா? எனக்கும் அப்படித்தான் சார்.. ரிஷி..... “ என்றவள் கண்கள் கலங்க ஆரம்பித்தன...
அதற்குள் தன் கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டு தன் உணர்வுகளை
கட்டுப் படுத்தி கொண்டாள்..
ரிஷிக்கு அவள் முகத்தில் வந்து போன மாற்றமும் அவள்
கண்ணில் தெரிந்த அந்த வலியையும் கண்டு கொண்டான்..
ஆனால் அவளாகவே அவளைப் பற்றி சொல்லுவாள்
என்று ஆர்வமாக பார்த்துக் கொண்டிருக்க அதற்குள் லண்டனை நெருங்க இன்னும் அரை மணி நேரம்
இருப்பதாக சொல்லி அனைவரும் சீட் பெல்ட்டை அணிய சொல்லினர்...
அதை கேட்டவன் உள்ளுக்குள் துள்ளி
குதித்தான்..
கூடவே விமானம் டேக் ஆப் ஆன பொழுது அவன் அவளுக்கு சீட் பெல்ட்
ஐ போட்டு விட்டதும் அதை தொடர்ந்து அவன் கைகள் அவளின் மெல்லிய இடையை ஸ்பரிசித்ததும்
நினைவு வர, அந்த ஸ்பரிசத்தில் இப்பொழுதும் அவன்
உடல் சிலிர்த்தது....
அப்பொழுது யார் என்றே தெரியாதவளை தொட்ட
பொழுதே சிலிர்த்தவனுக்கு இப்பொழுதோ அவள் அவன் மனைவி...மனைவியாகத்தான் பாவித்தான்..
இந்த முறை வேண்டும் என்றே அவள் இடை
தீண்ட ஆவலாக காத்து கொண்டிருந்தான் ஆசை கணவனாக...
எப்படியும் இந்த முறையும் அவள் தன்னை
சீட் பெல்ட் போட்டு விட சொல்லுவாள் என்று ஆசையாக அவளை ஓரக்கண்ணால் பார்த்து
கொண்டிருக்க, இந்த முறை தட்டு தடுமாரி அவளே போட்டு
கொண்டாள்..
அதை கண்டதும் பெரும் ஏமாற்றமானது
அவனுக்கு... ஆனாலும் உள்ளுக்குள் பெரும் மகிழ்ச்சி நிம்மதி..
அவன் சந்தித்த பெண்களை போல இவள் தன்னை
கண்டு வழிந்து நின்றோ மேல வந்து விழுந்தோ வைப்பவள் இல்லை..
அவன் தோற்றத்தையும் அவன் ஸ்டைலாக
பேசும் நுனி நாக்கு ஆங்கிலத்தையும் வைத்து
எப்படியும் அவன் பணக்காரன் என்று தெரிந்திருக்கும்...
அவன் செல்வ நிலையை கண்டோ , அவனுடைய அழகை கண்டோ அவனிடம் அவள் வழிந்து நிற்கவில்லை..
இவ்வளவு நெருக்கத்தில் அவன் அமர்ந்து
இருந்த பொழுது கூட அவள் உடல் அவன் மீது உரசாமல் தள்ளி அமர்ந்து கொண்ட விதமும்
அவனிடம் மற்ற பெண்கள் செய்வதை போல கண்களை
கொட்டி படபடத்து அவனை மயக்க முயல என்று எதுவும் செய்யவில்லை...
இதே மற்ற பெண்களாக இருந்திருந்தால்
இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி கொண்டு பெல்ட் ஐ போட வரவில்லை என்று சொல்லி அவனுடன்
ஒட்டி இழைந்திருப்பர்...
ஆனால் இந்த மான்குட்டி அவளாகவே
தடுமாறினாலும் தன்னிடம் கேட்ககூடாது என்று பிடிவாதமாக முயன்று அவளாகவே போட்டு
கொண்டாளே!
கூடவே அவனிடம் எந்த தயக்கமும் இல்லாமல்
இயல்பாக பேசிய விதமும் அவனை உரிமையோடு கண்டித்த விதமும் கண்டும் இன்னுமே கவிழ்ந்து
போனான்...
மொத்தத்தில் அவன் அன்னையை
போன்றவள்...அவன் மனைவியாவதற்கு எல்லா தகுதியும் நிறைந்தவள்..
அப்படி தகுதி இல்லை என்றாலும் அவளை
மணந்து கொண்டு பிறகு அவளை அவன் விரும்பும் படி மாற்றி விட வேண்டும் என்று மீண்டும்
உறுதி செய்து கொண்டான்..
“எப்படி இருந்தாலும் இனி இவள்தான் என்
மனைவி !! ஐ லவ் யூ குட்டி பொண்ணு... ஐ லவ் யூ ரோஜாபொண்ணு... ஐ லவ் யூ
மான்குட்டி... ஐ லவ் யூ டீ பொண்டாட்டி... “ என்று அவளை பார்த்து மானசீகமாக
குறும்பாக கண் சிமிட்டி உல்லாசமாக சிரித்து கொண்டான்...
இப்பொழுது விமானம் தரை இறங்குவதற்கு
தயாராக, ஜன்னலின் வழியாக வேடிக்கை பார்த்தாள் ரோஜா...
மேலிருந்து பார்க்க, இரவு நேர விளக்குகளின் வெளிச்சத்தில் அந்த லண்டன் மாநகரம்
சொர்க்கலோகமாக ஜொலித்தது...அதன் அழகை கண்டவள் கண்கள் வியப்பில் விரிந்தன...
சிறு குழந்தை போல துள்ளி குதித்து
வெளியில் பார்த்து ஆர்பரித்தவளையே அணுஅணுவாக ரசித்து கொண்டிருந்தான் ரிஷி...
மலர்ந்து சிரித்துகொண்டிருந்த அவள்
முகம் திடீரென்று மாற ஆரம்பித்தது...
அதுவரை சிரித்து கொண்டிருந்த அவள்
கண்களும் முகமும் திடீரென்று வேதனையை அப்பி கொண்டதை போல இருந்தது..
ரிஷிக்கு தான் காண்பது கனவா என்று தன்
கண்களை தேய்த்து விட்டு கொண்டு மீண்டும் அவளை பார்க்க,
இந்த முறை விமானம் வானில் இருந்து கொஞ்சம் கீழிறங்கி இருக்க,
அவளோ தலையை நிமிர்ந்து அந்த வானத்தையே
வலியுடன் பார்த்து கொண்டிருந்தாள்..
அவள் கண்களில் இப்பொழுது நீர்
திரண்டிருக்க, அதுவரை சிரித்து கொண்டும் குறும்பாக
பேசி கொண்டும் வந்தவள் திடீரென்று மேகம் சூழ்ந்த நிலவை போல அவள் முகம் வாடி கண்கள்
கலங்கி இருப்பதை கண்டவன் மனம் பதைத்தது...
அவள் வேதனை அவன் உயிர் வரை தாக்கி அவன்
இதயத்தை கசக்கி பிழிந்தது...
அவள் மகிழ்ச்சி மட்டும்தான் அவன் உயிரையும்
தாக்கும் என்பது மாறி அவளின் சிறு வலி வேதனை முக சுளிப்பு,
சிறு துளி கண்ணீர் கூட அவனுக்குள் தவிப்பை உண்டாக்குவதை உணர்ந்தவனுக்கு காதலின்
மகத்துவம் இன்னும் ஆழமாய் புரிந்தது...
இதுவரை எத்தனையோ பேர்களை கவலையிலும்
வேதனையிலும் பார்த்து இருக்கிறான்.. அப்ப எல்லாம் ஜஸ்ட் லைக் தட் என தோள்களை
குலுக்கி விட்டு சென்றிருக்கிறான்..
மனம் யாருக்காகவும் இப்படி அடித்து
கொள்ளவில்லை... அவர்கள் வேதனையை போக்கவேண்டும் என்று துடித்ததில்லை...
“ஆனால் இந்த மான்குட்டியின் சிறு
மாற்றமும் என்னுள்ளே பாதிக்கிறதே..!. பார்த்த சில மணி நேரத்திலா அவளை நான் இந்த
அளவுக்கு லவ் பண்ண ஆரம்பிச்சிட்டேன்? “
என்று தனக்குள்ளே கேட்டு கொண்டாலும்
அவன் கைகளோ அவள் கண்ணீரை துடைத்து அவள் வேதனையை போக்கி அவளை தன் மார்போடு சேர்த்து
அணைத்து கொள்ள தவித்தது....
அதற்குள் விமானம் தரை இறங்க
ஆரம்பிக்கவும் இப்பொழுது இன்னும் அவள் உடல் நடுங்குவதை போல இருந்தது.. கண்களில்
அவன் முன்பு கண்ட மிரட்சியும் பயமும் வந்து ஒட்டி கொண்டது..
அவள் காதுகள் அடைப்பதை போல இருக்க, தன் கைகளை எடுத்து காதுகளை பொத்தி கொண்டாள் ஜன்னல் பக்கமாக பார்த்து
கொண்டே...
ஆனால் சில நொடிகளில் அவள் உடல் இன்னும்
குலுங்க ஆரம்பிக்க, அதற்குமேல் பொறுக்க முடியாதவன் தன்
அருகில் இருந்த அவள் கையை மென்மையாக அழுத்தி
“என்னாச்சு டா? “
என்றான் கனிவுடன்...
அவ்வளவுதான்... அடுத்த நொடி அவளாகவே
அவன் அருகில் நெருங்கி அமர்ந்து அவன் தோளில் முகம் புதைத்து குலுங்க
ஆரம்பித்தாள்...
அவள் கேவல் வெளியில் வந்துவிடாமல்
புடவை முந்தானையை வாயில் வைத்து கொண்டு அவன் தோளில் முகம் புதைத்து அவன் கையை
இறுக்கி பிடித்து கொண்டு இன்னும் குலுங்க, அவள் கண்களில்
இருந்து இறங்கிய சூடான கண்ணீர் அவன் அணிந்திருந்த சட்டையை தாண்டி அவன் தோளில்
பட்டு அது அவன் இதயம் வரை சென்று நனைத்தது...
அவளிடம் எதுவும் கேட்காமல் அவள் தலையை
மெல்ல வாஞ்சையுடன் தடவி கொடுத்தான் ரிஷி...
அப்பொழுது விமானம் தரை இறங்கி தரையில் வேகமாக ஓட, அதில் இன்னும் அதிர்ந்தவள் அவன் கையை இன்னும் இறுக்கி பிடித்து
கொண்டாள்...
அந்த விமான பறவை சிறிது நேரம் ஓடி
முடித்து இதுவரை பறந்து வந்த களைப்பு தீர இப்பொழுது அமைதியானது...
அதற்குள் மெல்ல சுதாரித்து கொண்டவள்
அப்பொழுதுதான் தன் நிலை உணர, உடனே வேகமாக தன் முகத்தை அவன் தோளில்
இருந்து எடுத்து கொண்டவள் அவள் பிடித்திருந்த அவன் கையையும் தீச்சுட்டதை போல
விட்டு விட்டு தள்ளி அமர்ந்து கொண்டாள்..
சிறிது நேரம் அவளை ஆசுவாசபடுத்தி கொள்ள
விட்டவன் பின் அவள்புறம் பார்த்து
“என்னாச்சு மா? “
என்றான் கண்களில் கனிவுடன்...
அவளோ அவன் முகம் பார்க்காமல் மீண்டும்
ஜன்னல் வழியாக வெளியில் பார்த்தாள்.. அவள் கண்களில் இருந்த வலியும் வேதனையும்
இன்னுமாய் கூடி இருந்ததை போல இருந்தது...
அவளை இயல்பாக்க எண்ணியவன்
“ஓய் ரோஜா பொண்ணு.. கேட்கறேன் இல்ல..
பதில் சொல்லு... உனக்கு பயமா இருந்தா மட்டும்தான் இந்த மாமா கிட்ட வருவியா? “ என்று குறும்பாக சிரிக்க, அவன்
எதிர்பார்த்ததை போலவே மாமா என்றதும் விசுக்கென்று திரும்பி அவன் முகம்
பார்த்தாள்...
“ஹீ ஹீ ஹீ.. இவ்வளவு நேரம் என்
கையைத்தான பிடித்து கொண்டு இருந்த... இப்ப என்னாச்சு? “
என்றான் அதே குறும்புடன்...
கொஞ்சம் கொஞ்சமாக இயல்புக்கு வந்து
கொண்டிருந்தவள்
“சா சா....சாரி....சார்.....” என்றாள்
பாவமாக...
அந்த பாவமான லுக்கிலும் அழுமூஞ்சி
முகத்திலும் கூட அவள் தேவதையாக இருக்க, அதையும் தன்
மனதில் படம் பிடித்து கொண்டவன்
“என்னது?
மறுபடியும் சார் ஆ? ஒழுங்கா ரிஷி இல்லனா மாமா னு கூப்பிடு... “
என்று செல்லமாக மிரட்டியவன்
“அது சரி.. எதுக்கு அப்படி பயந்த? உனக்கு ப்ளைட்ல வர்றதுனா பயமா?
இதுதான் பர்ஸ்ட் டைம் மா ? “ என்றான் அக்கறையுடன்...
அதற்குள் தன் கண்களை துடைத்து கொண்டு
தன்னை இயல்பாக்கி கொண்டவள் ஆமாம் என்று தலையை மட்டும் ஆட்டி புன்னகைக்க
முயன்றாள்..
விமானம் தரை இறங்கி இப்பொழுது
முழுவதும் அணைந்திருக்க, பயணிகள் எல்லாரும் எழுந்து அவர்களுடைய உடைமைகளை எடுத்து கொள்ள, அந்த பணிப்பெண் வேகமாக அவன் அருகில் வந்து
“சார்.. நீங்க பிரிமியர் மெம்பர்
என்பதால் நீங்க வெளியில் செல்ல ஸ்பெஷலாக ஏற்பாடு செய்யறோம்.. இந்த க்யூவில் நிக்க
வேண்டாம் என்று சொல்ல, அவனுக்கோ ரோஜாவை விட்டு செல்ல மனம்
வரவில்லை...
மற்ற நேரமாக இருந்தால் அவனே அது மாதிரி
கேட்டு முதலாவதாக வெளியேறி இருப்பான்..
இன்று அவளை விட்டு செல்ல மனம் வராததால்
“இட்ஸ் ஓகே... நான் எல்லார் போலவே
செல்கிறேன்.. நத்திங் அர்ஜென்ட்.. “ என்று
புன்னகைக்க, அவளும் மீண்டும் இரு கோட்டுக்கும்
இழுத்து சிரித்து விட்டு சென்றாள்..
அதற்குள் முற்றிலும் இயல்பாகி இருந்த
ரோஜாவோ அவளையே ஆர்வமாக பார்த்து கொண்டிருந்தவள்
“சூப்பரா இருக்காங்க இல்ல
சா....ரிஷி... “ என்றாள் பளபளக்கும் கண்களுடன்..
ஒரு பெண்ணே மற்றொரு பெண்ணை புகழ்வதையும்
அதிசயத்துடன் பார்த்தவன் மேலும் சற்றுமுன் அப்படி பயந்தவள் விரைவில் தன்னை
இயல்பாக்கி கொண்டதையும் கண்டவன்
“இவள் கண்டிப்பாக வித்தியாசமானவள்..
விநோதமானவள் தான்... “ என்று எண்ணி சிரித்து கொண்டவன்
தன் ப்ரீப் கேஸ் ஐ எடுத்து கொண்டு அவள்
பையையும் எடுத்து அவளிடம் கொடுத்தவன் அவளை முன்னால் நடக்க விட்டு அவன் பின்னால்
தொடர்ந்தான்...
விமானத்தில் இருந்து வெளியேறுகையில்
அதன் வாயிலில் நின்று கொண்டு அனைவருக்கும் சிரித்தபடி விடை கொடுத்து கொண்டிருந்த ரஜிதா மீண்டும் ரிஷியின் கை பற்றி குலுக்கி
“சாரி ரிஷி.... எக்னாமிக் க்ளாஸ் ல
வந்தது ரொம்பவும் கஷ்டமா
இருந்திருக்கும்..அதுவும் உங்க ஹைட்டுக்கு காலை மடக்கி உட்கார்ந்து இருந்தது
இன்னும் கஷ்டமா இருந்திருக்கும்.... சாரி....
“ என்று வழிய
“நோ நோ ரஜிதா... ஐ என்ஜாய்ட் திஸ்
ட்ரிப்.. இன்பேக்ட் ஐ பவுன்ட் மை ட்ரெஸ்ஸர் இன் திஸ் ஜர்னி...டேக் ரெஸ்ட் அன்ட்
ஹேவ் எ குட் நைட்..” என்று குறும்பாக ஒற்றை கண் சிமிட்டி வழக்கம் போல அவள் கன்னம்
தட்டி செல்வதை போல கை உயர அதற்குள் அருகில் இருந்த ரோஜாவை கண்டவன் அவன் மனைவியாக
காண
அவளோ இடுப்பில் கை வைத்து அவனை
முறைப்பதை போல கற்பனை விரிய, உடனே உல்லாசமாக சிரித்து கொண்டு தன்
கைகளை இறக்கி கொண்டு புன்னகைத்து விடைபெற்று சென்றான்.........
Comments
Post a Comment