தேடும் கண் பார்வை தவிக்க-10

 


அத்தியாயம்-10

சென்னையின் பிரபலமான வி.ஐ.பி க்களுக்கான அந்த திருமண மண்டபம் வண்ண விளக்குகளாலும், அலங்கார தோரணங்களாலும் ஜொலித்து கொண்டிருந்தது...

பார்க்கிங் ல் நின்றிருந்த விதவிதமான,  கோடியை தொடும் பல வெளிநாட்டிலிருந்து  இறக்குமதியான கார்களே எடுத்து காட்டியது அந்த திருமண விழாவின் நாயகன் செல்வாக்கை..

மண்டபத்தின் வெளியிலும் மண்டபத்திற்கு வரும் வழியிலும் வர்மா குரூப் ஆப் கம்பெனிஸ் தங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற திருமண வரவேற்பு பலகைகள்  ஆங்கிலத்தில் அழகாக எழுதபட்டு ஆங்காங்கே வைக்க பட்டிருந்தன.. 

மண்டபத்தின் உள்ளேயும்  எங்கு திரும்பினாலும் அழகழகான பெண்கள் வண்ண வண்ண பட்டுபுடவையும் இன்றைய ட்ரென்டில் டிசைனர் சாரிகளும் அதற்கு பொருத்தமாக தங்க வைர  அணிகலன்களும் அணிந்து ஜொலித்தனர்.

எல்லார் முகத்திலும் திருமணத்திற்கே உரித்தான  மகிழ்ச்சி நிறைந்து இருந்தது..

மணமேடையும் அழகாக அலங்கரிக்கபட்டு, மணமகனின் செல்வ செழிப்பை பறை சாற்றி கொண்டிருந்தது....

அந்த அழகான மணமேடையில் அந்த விழாவின் நாயகன் ரிஷி வர்மா கம்பீரமாக அமர்ந்து கொண்டு ஐயர் சொல்லும் மந்திரங்களை சொல்லி கொண்டிருந்தான்...

இதுவரை கட்டி பழக்கமிராத பட்டு வேஷ்டியை எப்படியோ இழுத்து கட்டி கொண்டும் பட்டு சட்டையும்  அதற்கு மேல் ஒரு துண்டு என மாப்பிள்ளை கோலத்தில் இன்னும் கம்பீரமாக அமர்ந்து இருந்தான்...

முகத்தில் அத்தனை அத்தனையாய் பூரிப்பும் பெருமையும் குடி கொண்டிருந்தது...

அவன் மனம் விரும்பியவளையே கை பிடிக்க போகிறான் என்ற பூரிப்பே அவன் மனதில் நிறைந்திருக்க, அது அவன் முகத்திலும் விரவி கிடக்க, சிரித்த முகமாக அந்த ஐயர் சொல்லும் மந்திரங்களை திருப்பி சொல்லி கொண்டிருந்தான்...

வாய் ஐயர் சொல்லும் மந்திரத்தை சொல்லி கொண்டிருந்தாலும்  அவன் கண்கள் என்னவோ மணமகள் அறையை நோக்கியே இருந்தது....

“பொண்ணை அழைச்சிட்டு வாங்க... “ என்ற ஐயரின் அழைப்பு அவன்  காதில்  தேனாக பாய்ந்தது.... அவன் உள்ளே  நெஞ்சு படபடக்க ஆரம்பித்தது...

தன்னை நினைத்து அவனுக்கே உள்ளுக்குள் வெட்கமாகவும் சிரிப்பாகவும் இருந்தது...

ஆனாலும் இதெல்லாம் வாழ்வின் பொன்னான தருணங்கள் என தோன்ற, ஒவ்வொரு  நொடியையும் அந்த நொடி தரும் தவிப்பையும் தவிப்பினால் அவன் உள்ளே நிகழும்  புதுவிதமான உணர்வுகளையும் அணுஅணுவாக ரசித்தான் ரிஷி...

அவன் பார்வை மணமகள் அறையை நோக்கி தவம் இருக்க, அவனை மேலும் சோதிக்காமல் மணமகள் அறை கதவு திறக்கபட, அவன் எதிர்பார்த்து காத்து கிடந்த அவனவள் அவனுக்கு தரிசனம் கொடுத்தாள்....

பொன் மஞ்சள் நிற பட்டுடுத்தி அதற்கு பொருத்தமான ஆபரணங்களை அணிந்திருந்தாள் மணப்பெண்.

எந்த ஒரு அலங்காரமும் இல்லாமலே ஜொலிப்பவள்  இன்று அந்த ஆபரணங்களின் அழகில் அழகுக்கு அழகு சேர்த்ததை போல  இன்னுமே ஜொலித்தாள் அந்த மஞ்சள் ரோஜா....

வெளியே வந்தவளையே இமைக்க மறந்து பார்த்திருந்தான் ரிஷி...

எத்தனை பேர் தன்னை கண்டு கிண்டல் அடித்து சிரித்தாலும்  பரவாயில்லை.. இந்த மாதிரி ஒரு அற்புதமான  தருணம் மீண்டும் தனக்கு கிடைக்காது என்று  எண்ணியவன் தன்னவள் தங்க தேராக நடந்து வரும் அழகையே இமைக்க மறந்து ரசித்தான்.....

தலையை குனிந்த படியே வந்த ரோஜா ஏதோ உந்த மெல்ல தலையை நிமிர்ந்து பார்க்க, இன்னும் சற்று நேரத்தில் தன் கணவனாகப்போகிறவன் கண்களில் மின்னிய காதலும் அவளை இமைக்க மறந்து நோக்கும் மையல் கொண்ட பார்வையும் கண்டவள் கன்னங்கள் தானாக சிவந்தன...

உடனே வேகமாக தன் தலையை தாழ்த்தி கொண்டாள்...

அவளிடமிருந்து வந்த அந்த நொடி பார்வையும் தன்னை கண்டதும் சிவந்த அவளின் செந்நிற கன்னங்களையும் கண்டவன் இன்னுமே கிறங்கி போனான்... 

மணமேடையை நோக்கி வந்தவள், மேடைக்கு அருகில் வரவும் அவளின் வாசம் அவளுக்கு முன்னே வந்து அவன் நாசியை தீண்டியது...

அவளுக்கு  என்றே இருக்கும் பிரத்தியேக மணம் அது...அந்த அவளின் வாசம் ஒன்றே அவனை கட்டி இழுக்க போதுமானதாக இருந்தது...  

பட்டு புடவை சரசரக்க வந்து தன் அருகில் அமர்ந்தவளை அப்படியே கடித்து தின்பவனை போல  ஆசையுடன் பார்த்தவன் சற்று இடைவெளி விட்டு அமர்ந்து இருந்தவளின் அருகில் இன்னுமாய் நெருங்கி அமர்ந்து கொண்டவன் 

“வாவ்...!! செமயா இருக்க ரோஜா பொண்ணு.... இந்த மந்திரம் எல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டு இப்பயே தாலிய கட்டிடவா? “ என்று  காதலுடன் கிசுகிசுத்தான்...

அதை கேட்டவள்  அழகாக வெட்கபட்டு அவனை ஓரகண்ணால பார்த்து முறைக்க அந்த முறைப்பில் வளைந்த இதழ்களையே தாபத்துடன் நோக்கினான் ரிஷி.....

அது பொது இடம்... பல பேர் தங்களை பார்த்து கொண்டிருக்கிறார்கள்.. பத்தாதற்கு பல கோணங்களில் இருந்தும் கேமராக்கள், வீடியோக்கள் வளைத்து  வளைத்து ஒவ்வொரு நொடியையும் தவற விடாமல் பதிவு செய்து கொண்டிருக்க, அவனின் இந்த விழுங்கும் பார்வையும் தன்னோடு ஒட்டி இழையும் அவன் நெருக்கமும் அவளுக்குள் கூச்சத்தை தர, மெல்ல நெளிந்தாள் ரோஜா....

அவளின் நிலையை புரிந்து கொண்டவன் குறும்பாக புன்னகைத்து  மெல்ல விலகி அமர்ந்து கொண்டாலும் ஓரக்கண்ணால் அவளையே மீண்டும் பருகி கொண்டிருந்தான்..

ஐயர் மணமக்களுக்கான மந்திரத்தை  சொல்லி முடித்து  கெட்டி மேளம் கெட்டி மேளம் என சத்தமிட, மங்கள வாத்தியங்கள் உச்ச கட்டத்தில் முழங்க, அந்த பொன் தாலி கயிற்றை எடுத்து மனம் கொள்ளா மகிழ்ச்சி மற்றும் நிறைவுடன் அந்த தாலியை ரோஜாவின் கழுத்தில் கட்டி அவளை தன்னவளாக்கி கொண்டான் ரிஷி....

இத்தனை வருடங்களில் எத்தனையோ வெற்றிகளை அள்ளி குவித்திருக்கிறான்... இந்த சிறு வயதிலயே பல விதமான துறைகளிலும் தன் தொழிலை விரிவு படுத்தி அதை நிலை நாட்டவும் செய்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்த பொழுது கூட அவன் மனம் இப்படி சந்தோஷத்தில் ஆர்பரித்தது இல்லை....

இதோ.. இந்த ஐந்தடி மட்டுமே இருக்கும் அவன் கழுத்துக்கு கூட இல்லாத மெல்லியலான இந்த மான்குட்டியை அவன் ரோஜா பொண்ணை தன்னவளாக்கி கொண்ட இந்த தருணம் அவன் வாழ்வின்  எல்லையை, அந்த வானத்தையே தொட்டு விட்டதை போல ஒரு மகிழ்ச்சி,  நிறைவு,  ஒரு பரவசம் என விவரிக்க முடியாத ஏதோ ஒன்று அவனுள்ளே பரவியது....

பல நூறு கோடி லாபம்,  தரமுடியாத ஒரு திருப்தியை மன நிறைவை அவளை தன்னவளாக்கி கொண்ட அந்த நொடி அவனுக்கு தந்தது....

அந்த மனநிறைவில், முகத்தில் பூரிப்புடன் அடுத்து ஐயர் நீட்டிய குங்குமத்தை எடுத்து அவள் மார்பில் தொங்கிய அவன் அணிவித்த அந்த புத்தம் புது மாங்கல்யத்துக்கு பொட்டு வைத்த பொழுது இன்னும் சிலிர்த்து போனான்...

அடுத்து அதே குங்குமத்தை கையில் எடுத்து ஐயர் சொன்ன படி அவள் கழுத்தை சுற்றி வந்து தன் மார்போடு அவளை மெல்ல அணைத்த படி அவளின் முன் உச்சி நெற்றியில் குங்குமத்தை வைத்ததும் அவன் விரல் தீண்டிய முதல் ஸ்பரிசம்,  தன் மார்பின் மீது மெல்ல சாய்ந்தவாறு இருந்த தன்னவளின் அந்த முதல் ஸ்பரிசத்தில்  மின்சாரம் பாய்ந்ததை போல அவன் உடல் எங்கும் சிலிர்த்தது...

அடுத்த நொடி தன்னையும் மறந்து அந்த ஐயர் சொல்லாமலயே வைத்தான் அவன் முதல் முத்தத்தை அவளின் முன் உச்சி நெற்றியில்....

திடீரென்று அவன் எல்லார் முன்னிலையிலும் முத்தமிட்டு வைத்திருக்க, அதில்  திகைத்து தடுமாறியவள் அவசரமாக தன் குவளை மலர் போன்ற கண்களை மேலே நிமிர்த்தி அவன் முகம் நோக்க, அவன் இதழ்களோ அடுத்து படபடக்கும் அவளின் அந்த மருண்ட விழி இமைகளை அணைக்க சொல்லி தவித்தது....

அதற்குள் தன் நிலை உணர்ந்தவன் தன் மனதை அடக்கியவன் தன்னையே வியந்து நோக்குபவளை பார்த்து குறும்பாக ஒற்றை கண் சிமிட்டி உதடு குவித்து முத்த மிட, அவளோ இன்னும் சிவந்து போனாள்..

உடனே இமைகளை தாழ்த்தி தலையை குனிந்து கொண்டாள்...

அதை கண்டவன் மனதினில் உல்லாசமாக விசில் அடித்து சிரித்து கொண்டான்.. 

அதன் பின் மாலை மாற்றும் பொழுதும் தன்னவள் கரம் பிடித்து  அக்னியை வலம் வரும் பொழுதும் அவனுள்ளே ஆயிரம் ஆயிரம் பூக்கள் மலர்ந்தன..

அவனுள்ளே பொங்கிய சந்தோஷ அலையில் பனிச்சாரலில் அடுத்து ரோஜா பொண்ணு அம்மி மிதித்து நிற்க அவளின் மெல்லிய பாதத்தை எடுத்து மெட்டியை அணிவிக்க, இன்னுமே சிலிர்த்து போனான்...

மெட்டியை அணிவித்த அடுத்த நொடி அவனையும் மறந்து மீண்டும் வைத்தான் அவன் அடுத்த முத்தத்தை அவள் காலில் ஜொலித்தபடி அவனை பார்த்து கண் சிமிட்டி சிரித்து அவனை வம்புக்கு இழுத்து சீண்டிய  அந்த மெட்டிக்கு....

அதில் திடுக்கிட்டு தடுமாறி போனவள் வேகமாக தன் கால்களை இழுத்து கொள்ள அவனோ மீண்டும் ஒரு மந்தகாச புன்னகையுடன், வெற்றி கழிப்புடன் நிமிர்ந்தவன் மிண்டும் குறும்பாக கண் சிமிட்டி கண்களால் சிரித்தான்...

அடுத்து இருவரும் இணைந்து நின்று பல பேர்களின் வாழ்த்துக்களை பெற்று கொண்டனர்.. பல முக்கிய பிரமுகர்கள் தொழில் அதிபர்கள் ரிஷியை வாழ்த்தி விட்டு இருவரும் மேட் பார் ஈச் அதர் என்று புகழ்ந்து செல்ல அதை கேட்டவனுக்கோ பெருமையாகவும் கர்வமாகவும் இருந்தது.....

ன்று இரவு தன்னவளை தனிமையில் சந்திக்க, தன் அறையில் காத்து கொண்டிருந்தான் ரிஷி...

மார்புக்கு குறுக்காக கைகளை கட்டி கொண்டு முன்னும் பின்னும் நடை பயின்றான்..

அவளுக்காக காத்திருக்கும் அந்த ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு யுகங்களாக கடந்து சென்றது...

கடிகாரத்தை நொடிக்கொரு தரம் பார்த்து  நகத்தை கடித்து துப்பி கொண்டிருந்தான்.. அவனை நீண்ட நேரம் தவிக்கவிட்டே வந்தாள் பெண்ணவள்...

கதவை மெல்ல திறக்க, அவளை முந்தி கொண்டு வந்த அவளின் வாசமே அவள்  வருகையை உணர்த்த வேகமாக தலையை நிமிர்த்தி வாயிலை பார்த்தவன் அசந்து போனான்...

மெல்லிய அலங்காரத்தில் மருண்ட விழிகளுடன் தயக்கத்துடன் மெல்ல அடி எடுத்து வைத்து உள்ளே வந்தவளை கண்டதும் அவன் உடலின் அனைத்து அணுக்களும் உற்சாகத்தில் துள்ளி குதித்தன....

தலையை குனிந்த படியே கண்களால் அவனை துலாவியபடி தயக்கத்துடன் அடி எடுத்து வைத்து வந்தவளையே இமைக்க மறந்து ரசித்து கொண்டிருந்தான் ரிஷி...

ஒரு சில அடிகள் எடுத்து வைத்து வந்தவள் தயக்கத்துடன் தலையை நிமிர்ந்து அவனை தேட, அதற்குமேல் அவளை தவிக்க விடாமல் ஒரே எட்டில் அவளை அடைந்தவன் அவள் கையை பிடித்து அழைத்து சென்று கட்டிலில் அமர வைத்தான்....

அவள் அருகில் நெருங்கி அமர்ந்தவன் அவள் கூந்தலில் சூடி இருந்த மல்லிகையின் வாசத்தை முகர்ந்து வாசம் இழுத்தவன் அது இன்னும் கிறக்கத்தை கூட்ட, அவள் கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்து கொண்டு பல கதைகளை பேசினான்...

அவளிடம் காதல் வயப்பட்ட தருணத்தை  சிறு வெட்கத்துடனும் கண்ணில் மின்னும் காதலுடன் விவரித்து கொண்டிருந்தான்... அவளை கண்டதுமே இல்லை இல்லை பார்ப்பதற்கு முன்னரே அவளின் வாசத்தை உணர்ந்தே அவளிடம் காதல் வசப்பட்டதை அனுபவித்து கூற, அதை கேட்ட பெண்ணவள் கண்களை அகல விரித்து ஆச்சர்யத்துடன் அவனை நோக்கினாள்...

அவளின் அந்த மருண்ட விழிகளில் முதன் முறையாக பயத்தை விடுத்து வியப்பை ஆச்சர்யத்தை காண,  அதற்குமேல் பேச்சிழந்து போனான் ரிஷி...

அவளின் குடை போல விரிந்திருந்த இமைகளை தன் முரட்டு இதழ்களால் மூட, அதில் திகைத்து தடுமாறியவள் அந்த அணைப்பில் இன்னும் கரைய, அடுத்து அவள் இதழ்களும் அதன் இணையின் அணைப்பை வேண்டி தவித்தன..

லேசாக நடுங்கி தவித்து கொண்டிருந்த அவளின் இதழ்களை கண்டவன்   அதில் இன்னும் கிறங்கியவன் செர்ரி பழத்தை போல சிவந்து திரண்டிருந்த தன்னவளின் இதழ்களை நோக்கி குனிந்தான் தாபத்துடன்...... 

அப்பொழுது சம்பந்தமே இல்லாமல்

“எக்ஸ்க்யூஸ் மீ சார்..டு யூ வான்ட் எனி ட்ரிங்க்? “ என்ற குரல் வெகு அருகில் கேட்டது... 

தன்னவளின் அருகாமையில் கிறங்கி அவளுடன் கலந்து விட துடித்து கொண்டிருந்த அந்த மோன நிலைக்கு துளியும் சம்பந்தம் இல்லாமல் கீச்சிட்ட அந்த குரலில் எரிச்சலடைந்தவன் அவசரமாக திடுக்கிட்டு விழித்து வேகமாக கண்களை சுழற்றினான் தன்னவளை தேடி...

ஆனால் அதற்குள் மாயமாக மறைந்து விட்டாள் அவள்.....

அதில் திடுக்கிடவன் கண்களை தேய்த்து கொண்டு மீண்டும் உற்று பார்க்க, இப்பொழுதும் இல்லை அவள்.. அதற்கு பதிலாக அந்த விமான பணிப்பெண் அவன் அருகில் வெகு நெருக்கத்தில் குனிந்து கொண்டு அவனிடம் எதையோ கேட்டு குழைந்து கொண்டிருந்தாள்... 

அவள் என்ன கேட்டாள் என்றெல்லாம் உறைக்கவில்லை அவன்  மூளைக்கு.. தன்னவளை காணாத அந்த தவிப்பு எரிச்சலாக மாற அந்த பணிப்பெண் மீது எரிந்து விழுந்தான்...

“டோன்ட் யு ஹேவ் மேனர்ஸ்? இப்படித்தான் வந்து டிஸ்டர்ப் பண்ணுவிங்களா? ஐ டோன்ட் நீட் எனிதிங்.. டோன்ட் டிஸ்டர்ப் மீ.. கெட் லாஸ்ட்..” என்று சுள்ளென்று எரிந்து விழுந்தவன் இருக்கையின் பின்னால் சாய்ந்து கொண்டு கண்களை  மூடிக் கொண்டான்...

“சற்று முன் கண்டதெல்லாம் வெறும் கனவா? இல்லையே அப்படியே நேரில் நடந்த மாதிரியே இருந்ததே..!!  நான் அவளுக்கு தாலி கட்டியது கூட அப்படியே மனதில் பதிந்து விட்டதே...

தாலி கட்டியது மட்டும் இல்லை.. என் திருமணத்தின் ஒவ்வொரு நொடியும்,  நான் ரசித்து அனுபவித்த அந்த நொடிகள் எப்படி கனவாகும்...

இல்லை அது கனவில்லை.. இப்ப இருக்கிறதுதான் கனவு .. கனவில்தான் நான் விமானத்தில் போய்கொண்டிருக்கிறேன்... “ என்று தனக்குள்ளே புலம்பினான்....

மீண்டும் சந்தேகம் வர, தன் கையை கிள்ளி பார்க்க, சுர் ரென்று வலித்தது...

“ஓ... இது கனவல்ல,  நிஜம்.. அப்படி என்றால் ? என் திருமணம் ? என்னவள்? என் மனைவி ? அதெல்லாம் வெறும் கனவா? கற்பனையா? இல்ல்ல்ல்ல்லைலைலைலை... என்று உரக்க கத்தினான் மனதுக்குள்..

“இல்லை.. அதெல்லாம் கனவில்லை... எல்லாமே நிஜம்.... என் திருமணம் நிஜம்... என் ரோஜா நிஜம்... என் மான்குட்டி நிஜம்....அவளின் வாசம் நிஜம்.. அவள் மீதிருக்கும் என் காதல் நிஜம்.... எதுவும் கனவில்லை.. எதுவும் கற்பனை இல்லை.... “ என்று தனக்குள்ளே கத்தினான்...

வெகு நேரம் தனக்குள்ளே உழன்றவன் தன்னவளின் முகத்தை கண் முன்னே கொண்டு வர, பளிச்சென்று அவன் முன்னே வந்து சிரித்தாள் ரோஜா...

“அப்படி என்றால் அவள் கற்பனை அல்ல..!!  அவளை நான் நேரில் பார்த்திருக்கிறேன் !! எங்கே சந்தித்தேன் ?  என்று அவசரமாக யோசிக்க, அதுவரை வேலை நிறுத்தம் செய்திருந்த அவன் மூளை இப்பொழுது வேலை செய்ய ஆரம்பித்தது

கொஞ்சம் கொஞ்சமாக அவனை சுற்றி இருந்த மாய உலகம் விலகி நிஜ உலகம் கண் முன்னே தெரிய ஆரம்பித்தது..

அடுத்து சில நொடிகளில் அவன் அமர்ந்திருக்கும் விமானமும் அவன் முன்னே அமர்ந்து இருந்த சக பயணிகள் என்று எல்லாம் அறிவுக்கு உறைத்தன...

“அவளை எங்கே கண்டேன் ?  “ என்று மீண்டும் ஆழ்ந்து யோசிக்க, அவன் அவளை கண்ட அந்த நொடி நினைவு வந்தது....

“இதே விமானத்தில்தான் பார்த்தேன்....!!

பார்த்த பொழுது மருண்ட விழிகளுடன் பயத்துடன் சுற்றிலும் பார்த்து கொண்டு வந்தாள்.. அப்புறம் என்னாச்சு என்று யோசிக்க, ஒவ்வொரு இருக்கையாக தாண்டி வந்தவள் கடைசியில் என் இருக்கையில் தான் வந்து அமர்ந்தாள்..

அதுவும் என் பக்கத்தில் தான் வந்து அமர்ந்தாள்...

என் பக்கத்தில்................... “ என்றவனுக்கு எதுவோ உறைக்க, வேகமாக திரும்பி தன் அருகில் மறுபக்கம் பார்த்தவன்

“ஓ... மை ....காட்...........” என்று உற்சாகத்தில் கூச்சலிட்டான்...

அவனின் கூச்சலை கேட்டு அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து இருந்தவர்கள் திரும்பி இவனை கேள்வியாக பார்க்க, அவனோ தன் தவறு புரிந்து நத்திங்... என்று அசட்டு சிரிப்பை சிரித்து வைத்தான்...

அவர்களும் அவனை ஒரு மாதிரி ஏற இறங்க பார்த்துவிட்டு திரும்பி கொள்ள, அவனோ உதட்டை தன் பற்களால் அழுந்த கடித்து கொண்டு சிறு வெட்கத்துடன் மீண்டும் தன் மறுபக்கத்தில் அருகில் பார்க்க, அவன் கையை தன்னோடு சேர்த்து பிடித்து கொண்டு அவன் தோள் மீது தன் முகத்தை புதைத்து கொண்டு குழந்தையாக உறங்கி கொண்டிருந்தாள் அவனவள்.. அந்த மான்குட்டி... அவன் ரோஜா பொண்ணு...

அவளை கண்டதும் சற்றுமுன் அவளை காணாமல்  நெஞ்சை பிசைந்த அந்த வலி வேதனை எல்லாம் உடனே ஓடிப்போனது...

இப்பொழுது அவனுக்கு ஒரளவுக்கு தெளிவு வந்திருக்க, அவன் கண்டது எல்லாம் கனவு என்று இப்பொழுது புரிந்தது...

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!