தேடும் கண் பார்வை தவிக்க-11

 


அத்தியாயம்-11

சிறிது நேரத்திற்கு முன் ரோஜா அவன் தோளில் சாய்ந்து உறங்கி கொண்டிருக்க, அவளை பார்த்து ரசித்தவாறு இருக்கையின் பின்னால் சாய்ந்து கண்ணயர்ந்தவன் கனவில் அவளை திருமணம் செய்து மனைவியாக்கி கொண்டது நினைவு வந்தது....

இன்னுமே அது வெறும் கனவுதான் என்று அவனால் நம்ப முடியவில்லை..

வழக்கமாக அவன் உறங்கும்பொழுது கனவென்று எதுவும் பெரிதாக வந்ததில்லை..

அப்படியே வந்தாலும் அது விழித்தெழும்பொழுது அது அவனுக்கு நினைவில் நிக்காது..

“ஆனால் இது? ..இந்த கனவு?? . என் திருமணம் !!  அதில் வந்த ஒவ்வொரு சடங்கு எல்லாமே அப்படியே என் நினைவில் இருக்கிறதே !! அப்படி என்றால் அது எப்படி கனவாகும்?

அது கனவல்ல.. என் திருமணம் உண்மை.. இவள் என்னவள் , என் மனைவி என்பது உண்மை... “  என்று அவனுக்குள்ளேயே வாதித்து கொண்டான்...

இறுதியாக

“டேய்.. மடையா !! நீ நம்பினாலும் நம்பாட்டாலும் அது கனவுதான்... அவள் யாரோ ஊர் தெரியாத புள்ளை... இன்னும் உனக்கு கல்யாணம் ஆகலை... “ என்று அவன் மண்டையில் அடித்து உரைத்தது அவன் மனஸ்....

“வில் யூ ப்ளீஸ் ஷட் அப்... எனக்கு மேரேஜ் ஆகிடுச்சு... இவள்தான் என் மனைவி... இனி இதை யாராலும் மாற்ற முடியாது...ஏன் அவளே நினைத்தாலும் தான்... ” என்று முறைத்தவன் மீண்டும் ஓரக்கண்ணால் தன் தோளில் சாய்ந்திருந்தவளை பார்த்தான்...

அப்பொழுது எதற்காகவோ  தூக்கத்திலயே புன்னகைத்தவள்

“சீ.....  போடா.. மாமா... “ என்று செல்லமாக சிணுங்கியவள் அவன் அருகில் இன்னும் நெருங்கி ஒட்டி அமர்ந்து கொண்டு அவன் கையை இன்னும் தன் பக்கமாக இழுத்து இறுக்கி பிடித்து கொண்டு அவன் தோளில் இன்னுமாய்  முகத்தை புதைத்து கொண்டாள்...

அதை கண்டு திகைத்து போனான் ரிஷி...

அவளின் அந்த செல்ல சிணுங்கல் இன்னும் இன்னுமாய் பிடித்து போக, அவளின் அந்த சிணுங்கல் அவன் உயிர் வரை சென்று இனித்தது...

கூடவே அவள் என்ன சொல்லி அழைத்தாள்?? என்று யோசிக்க அவள் மாமா என்று சொன்னது நினைவு வர, உடனே மாமா என்றால் என்ன அர்த்தம்  என்று கூகுளில் தேடி பார்த்தான்...

அதில் பல அர்த்தங்கள் இருந்தாலும் அதில் ஒன்றாக தமிழ்நாட்டு பெண்கள் தங்கள் கணவனை மாமா என்று அழைப்பது வழக்கம் என இருக்க, அதை கண்டு துள்ளி குதித்தான் ரிஷி....

அவனை போலவே அவளுக்கும் தன்னை கண்டதும் பிடித்து விட்டதாக எண்ணி குதூகலமடைந்தான்...

“அப்படி என்றால் எனக்கு வந்த கனவை போலவே அவளுக்கும்  கனவு வந்திருக்குமோ?  அதில் இருவருக்கும் மேரேஜ் ஆகி இருக்கும்.. அதனால்தான் என்னை அவள் செல்லமாக மாமா என்று அழைத்திருக்கிறாள்..

என்னை இப்படி உரிமையோடு கட்டி கொண்டு என் தோளில் சாய்ந்திருக்கிறாள்....  “ என்று தன் கற்பனை குதிரையை பறக்க விட்டான் ரிஷி...

அது அவனை விட நாலு கால் பாய்ச்சலில் பாய்ந்து சென்றது....

இப்பொழுது அவனுக்கு உண்மையிலயே கல்யாணம் ஆனதை போல எண்ண ஆரம்பித்தவன் கற்பனை மீண்டும் விரிந்தது....

அவனுக்கும் அவன் மனம் விரும்பிய அந்த மான்குட்டிக்கும் திருமணம் முடிந்து இதோ ஹனிமூன் சென்று கொண்டிருக்கிறார்கள்....

அவன் மனைவி அவன் தோளில் முகம் புதைத்து உறங்கி கொண்டிருக்கிறாள் என்று உணர,  அவனுக்குள் நிஜத்தில் சிலிர்த்தது...

அவள் கழுத்தில் புத்தம் புது மஞ்சள் வாசம் மறையாத அவன் அணிவித்த தாலி சரடு அவள் வெண்ணிற கழுத்துக்கு இன்னும் அழகு சேர்க்க, அந்த தாலிக்கயிற்றுக்கு அவள் கழுத்தோடு சேர்த்து முத்தமிட துடித்தது அவன் உள்ளே...

கூடவே அவள் கூந்தலில் சூடியிருந்த மல்லிகையின் மணம் வேறு அவன் நாசியை தீண்டி அவனுள் இன்னும் மயக்கத்தை தூண்டி அவனை இம்சித்தது...

அவள் புறமாக மெல்ல சாய்ந்தவன் அவள் கூந்தலில் இருந்த அந்த மல்லியின் வாசத்தை இன்னுமாய் ஆழ்ந்து முகர்ந்து ரசித்தான்...   

குழந்தையாக உறங்குபவளை இப்பொழுது முற்றிலும் தன் மனைவியாக  காண, உள்ளே படபடக்க, மெல்ல குனிந்து தன் மீது சாய்ந்திருவளின் நெற்றியில் அவள் விழித்து விடாமல் மெல்ல இதழ் பதித்தான்...

அவளோ சிறு முக சுளிப்புடன் இன்னும் அவனுடன் ஒன்றி கொள்ள , அதில் இன்னுமாய் கிளர்ந்தவன் அவள் புறமாக இருந்த அவன் கையில் அவள் கையை மெல்ல  பிடித்து  நுழைத்து கொண்டான்...

அவன் கைக்குள் அவள் கையை வைத்து பார்க்க மிகவும் குட்டியாக இருந்தது.. வெண்டையை போன்ற நீண்ட மெல்லிய மிருதுவான விரல்கள்..அவன் விரலுடன் வைத்து பார்க்க அவன் விரலில் பாதிதான் இருந்தது...

இப்படி எல்லாம் ஒரு பெண்ணை இவ்வளவு அருகில் பார்த்ததில்லை அவன்... அவன் பெற்றோருக்கு ஒரே மகன் என்பதால் அக்கா தங்கை என்றும் யாரும் இல்லை...

பெண்களின் விரல்கள் இவ்வளவு மெல்லியதாக மிருதுவாக இருக்கும் என்று இப்பொழுதுதான் உணர்ந்தான்...

சிறிது நேரம் அவள் கை விரல்களில் மெல்ல அழைந்து விளையாடியவன் அவள் விழித்து விடாமல் மெல்ல அவன் பிடித்திருந்த அவள் கையை உயர்த்தி அதில் மிருதுவாக இதழ் பதித்தான்...

அவளின் அந்த மெல்லிய மிருதுவான விரல்கள் அவன் இதழ்களில் பட, அதன் மென்மையில் இன்னுமே சிலிர்த்து போனான்...

துவரை கடிவாளம் இட்ட குதிரை போல தொழிலில் ஜெயிக்கவேண்டும் என்ற வெறியும் குறிக்கோள் மட்டும் வகுத்து கொண்டு இலக்கை நோடி ஓடிகொண்டு இருந்ததால் மற்ற இன்பத்தில் அவன் கவனம் சிதறவில்லை..

இத்தனைக்கும் அவன் சிறு வயதில் இருந்தே தனித்து விடப்பட்டவன்... பள்ளி பருவத்திலயே மேல் நிலை படிப்புக்காக லண்டன் வந்து விட்டவன்...

தடம் மாறி செல்ல பல வாய்ப்புகள் இருந்தும் அவன் அன்னை கஸ்தூரி முன்பே அதை பற்றி எல்லாம் சொல்லி அவனை எச்சரித்து வைத்திருந்தார்...

“எவ்வளவு சம்பாதிச்சாலும் கோடி கோடியாக  சேர்த்தாலும் தனி மனிதனுக்கு ஒழுக்கம் ரொம்பவுமே முக்கியம்...

அதுவும் தமிழ் கலாச்சாரத்தை,  குறிப்பாக ஒருவனுக்கு ஒருத்தி என்பதையும் திருமணத்திற்கு முன்பே பெண்களை போல ஆண்களும் ஒழுக்கமாக இருக்கவேண்டும்...தனக்கு உரிமை இல்லாத எந்த பெண்ணையும்  தவறாக பார்க்க கூட கூடாது...

அந்த காலத்துலயே மகாத்மா காந்தி அவர்கள் சட்டம் படிப்பதற்காக லண்டன் சென்றார்..அப்பொழுது அவருடைய தாயாருக்கு மூன்று வாக்குறுதிகள் கொடுத்தாராம்..

மது அருந்த மாட்டேன்.. மாமிசம் உண்ண மாட்டேன்.. அடுத்த பெண்ணை ஏறெடுத்தும் பார்க்க மாட்டேன் என்று...

லண்டனில் படிக்கும்பொழுது அவரை மாமிசம் உண்ண சொல்லியும் மது அருந்த சொல்லியும் பல நெருக்கடிகள் வந்த பொழுதும் காந்தி அவர்கள்  அதை எல்லாம் சமாளித்து ஒழுக்கத்தை கடைபிடித்து சத்யவானாக தன் அன்னைக்கு செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்றினார்...”

என்று இன்னும் பல கதைகளை எடுத்து கூறினார் கஸ்தூரி...

“அது போல கண்ணா... நீயும் எப்பொழுதும் எங்கிருந்தாலும் எப்படிபட்ட சூழ்நிலையாக இருந்தாலும் நெறி தவறாமல் ஒழுக்கத்தை கடைபிடித்து நம் கலாச்சாரத்தை பின்பற்றுவது ரொம்ப ரொம்ப முக்கியம்... “  என்று சிறுவயதிலயே சொல்லி சொல்லி அவன் மனதில் உருவேற்றியிருந்தார்...

அதனாலயே அவனுடைய லண்டன் நண்பர்கள் தீய பழக்கங்களூக்கு பழக வற்புறுத்த அவனால் அதிலிருந்து விலகி நிற்க முடிந்தது...

அவர்கள் எல்லாம் அடிக்கடி ஜாலியாக ஊரை சுத்த, இவனும் சில நேரம் அவர்களுடன் செல்வான்... ஆனால் அவனுக்கு பொருந்தாத பட்சத்தில் அதில் இருந்து விலகி  ஒரு புத்தகத்தை எடுத்து வைத்து கொண்டு அமர்ந்து விடுவான்..

இல்லை என்றால் மூன்று மாதத்திற்கு ஒரு முறை தன் அன்னையை காண இந்தியாவுக்கு ஓடி வந்து விடுவான்... அவன் வர முடியாத நாட்களில் அவன் அன்னை கஸ்தூரி அங்கே சென்றுவிடுவார்....

ள்ளி படிப்பு முடிந்து கல்லூரி செல்ல ஆரம்பித்ததும் அடுத்த பிரச்சனை ஆரம்பித்தது...

அவனுடைய அறிவுத்திறமையையும் ஆறடிக்கும் மேலான உயரத்தில்,  முறுக்கேறிய வலிய கட்டான உடலும் எப்பொழுதும் குறும்பு மின்னும் கண்களும் சிரித்த முகத்துடன் வளைய வரும் அவன் கம்பீரத்தையும், எல்லா விளையாட்டிலும் அவன் காட்டிய ஈடுபாடு என்று எல்லாவற்றிலும் முதலாவதாக வந்து நிற்கும் அவனை கண்டதும் பல பெண்கள் அவன் பின்னால் சுத்தினர்...

நிறைய பெண்கள் அவனிடம் வந்து வழிந்து நின்றும்  நேரடியாக அவனை டேட்டிங் அழைக்க, அவனோ சிறு புன்னகையுடன் அதை எல்லாம் தவிர்த்து விட்டான்...

முடிந்தவரை அந்த மாதிரி பெண்கள் இருக்கும் பக்கமே செல்ல மாட்டான்...

அந்த கல்லூரி சூழலில் அவன் பார்த்தவரை எல்லாம் வெறும் உடற்கவர்ச்சியாகவும் ஹார்மோன்களின் குடைச்சலில் உடல் தேவைக்காக  ஆணும் பெண்ணும் பழகுவதாக தோன்றும்...

காதல் என்று ஒருவருக்கொருவர் கசிந்து உருகி யாரும் சுற்றி திரிந்தமாதிரி யாரையும் பார்த்ததில்லை அவன்.. அவனுக்கும் அப்படி யாரிடமும் தோனவும் இல்லை...

அதனாலயே கல்லூரி   காலத்தில்  காதலை பற்றியெல்லாம் தெரியாமலயே போய் விட்டது.. 

அடுத்து கல்லூரி முடித்த உடனேயே மாஸ்டர் ம் லண்டன் பல்கலைக்கழகத்திலயே  சேர்ந்து கொண்டு அப்பொழுதே சொந்தமாக தொழில் தொடங்க ஏற்பாடு பண்ணி கொண்டிருந்தான்....

அதன் பிறகு தொழிலை ஆரம்பித்த உடன் அதை வளர்ப்பதில் மட்டுமே அவன் கவனம் சென்றது..

எப்பொழுதும் தேனி மாதிரி சுறுசுறுப்பாக சுத்தி கொண்டிருப்பான். ஒரு இடத்தில் ஓய்ந்து அமர்ந்ததில்லை...

இந்த மாதிரி விமான பயணத்தில் கூட தன் ஐபேட் ஐ எடுத்து வைத்து கொண்டு ஏதாவது நோண்டி கொண்டே வருவான்...

அதனால் தொழிலை தாண்டி வாழ்க்கையில் வேற எதையும் அனுபவித்ததில்லை..

அப்படி இருந்தவனுக்கு இன்று அவளை கண்டதும் ஒரு ஆண்மகனுக்கு இயற்கையாக இருக்கும் ஆணின் உணர்வுகள்: விழித்து கொள்ள, இதுவரை பார்த்திராத அனுபவித்திராத புது உலகத்தில் நுழைந்த மாதிரி இருந்தது ரிஷிக்கு...

புத்தகங்களில் படித்தும் செவி வழி கேட்டும் திரைப்படங்களில் பார்த்தும்  இருந்த காதல் என்ற உணர்வு அவனுக்குள்ளேயும் மொட்டு விட்டு மலர்ந்ததை போல இருந்தது...

“ஒரு பெண்ணை பார்த்ததும் உள்ளுக்குள் பிறள்வதைத்தான் காதல் என்கிறார்களா? அவளை காணாத நொடிப்பொழுதும் கலங்கி தவித்ததுக்கு பெயர்தான் காதலா?

அப்படி என்றால் நானும் காதலிக்கிறேன்...

யெஸ்...  ஐ ஃபால் இன் லவ்.. பட் வித்தியாசமா என் வைஃப் ஐ காதலிக்கிறேன்..

யெஸ். எனக்கு மேரேஜ் ஆகிடுச்சு.. ஷி இஸ் மை லவ். ஷி இஸ் மை வைஃப்..” என்று புன்னகைத்து மீண்டும் அவள் விரலில் இதழ் பதித்தவன் ஓரக்கண்ணால் தன் மனைவியை,  மனைவியாக எண்ணி கொண்டவளை காதலுடன் நோக்கினான்....  

அவனுக்கு வெகு அருகில் இருந்த அவளின் முகத்தை ஆழ்ந்து கவனித்தான்...

கள்ளம் கபடமற்ற குழந்தை தனமான முகம்... பிறை போன்ற நெற்றி..வில்லாக வளைந்திருந்த அழகான புருவங்கள்.. கூரான எடுப்பான் நாசி... கொழுகொழுவென்றிருந்த கன்னங்கள்.. எல்லாவற்றையும் விட அவளின் அந்த திரண்ட இதழ்கள்....

அவளின் இதழ்களை கண்டதும் சற்று முன் அவன் கண்ட கனவு,  கற்பனை மீண்டும் கண் முன்னே வந்தது..

முதலிரவு அறையில் அவளை கைப்பிடித்து அழைத்து வந்ததும் அவள் அருகில் அமர்ந்து கொண்டு கதை பேசியது கடைசியாக அவள்  இதழை நோக்கி தாபத்துடன் குனிந்ததும் நினைவு வர அவன் உள்ளே மீண்டும் சிலிர்த்தது...

தன்னை அவள் கணவனாக எண்ணி கொண்டவன் ஆசை மனைவி இதழை வருட தவிக்கும் காதல் கணவனாக அவன் கைகள் பரபரத்தன..

அதற்கு மேல் அவனை கட்டுப்படுத்த முடியாமல் ஒரு கையில் அவள் கைகளை பிடித்து கொண்டிருக்க, மறுபுறம் இருந்த அவன் கையை எடுத்து அவள் இதழ்களை மெல்ல வருடினான் அவள் விழித்து  கொள்ளாமல்...

ரொம்பவுமே மிருதுவாக இருந்தது அவள் பட்டு இதழ்கள்...அவளின் அந்த பட்டு இதழ்களின் மென்மை அவனுக்குள்ளே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது...  

அந்த நொடியே அவளை,  தன் மனைவியை அப்படியே இழுத்து அணைத்து அவள் திரண்ட இதழ்களில் அழுந்த முத்தமிட தவித்தது அவன் உள்ளே...

எவ்வளவு முயன்றும் அவனை கட்டு படுத்த முடியாமல் அவன் உள்ளே தீயாக தகிக்க, அடுத்த நொடி  எதுவும் யோசிக்காமல் அவள் இதழ் நோக்கி குனிந்திருந்தான்....

இது தவறு..  அவள் இன்னும் உன் மனைவி இல்லை.. ஒரு பெண் அவனுக்கு மனைவியாக, அவனுக்கு  உரிமையானவளாக ஆகும் முன்னே இப்படி நடந்து கொள்வது தவறு என்று அவன் அறிவு அபாய மணியை அடித்து அவனை பிடித்து வைக்க முயன்றது...

ஆனால் அவன் மனமோ அதை ஏற்க மறுத்தது...

“இல்லை...இவள் என் மனைவி..மை வைஃப்..!  நான் ஏற்கனவே அவளை மணந்து கொண்டேன்.. இவள் எனக்கானவள்..!  என்னவள்..!!  இவள் எனக்கு சொந்தமானவள்..

இவளிடம் எனக்கு எல்லா உரிமையும் உண்டு.. “  என்று தன் அறிவை அடக்கியவன் உள்ளே இருந்த கணவனின் உணர்வு கொடுத்த குடைச்சலில் மீண்டும் அவள் இதழ் நோக்கி குனிந்தான் தாபத்துடன் ஆசை கணவனாக

அவன் இதழ்கள் தன் இலக்கை அடையும் நொடி  திடீரென்று அந்த விமானம் குலுங்க ஆரம்பித்தது..

உடனே அனைவரையும் சீட் பெல்ட் அணிய சொல்லி கேப்டன் ஒலிபெருக்கியில் அறிவிக்க அந்த சத்தத்திலும் விமானத்தின் குலுக்கலிலும் திடுக்கிட்டு விழித்தாள் ரோஜா....  

திடுக்கிட்டு விழித்தவள் திருதிருவென்று மலங்க மலங்க முழித்தாள்..

அப்பொழுதுதான் அவள் தன் அருகில் இருப்பவன் தோளில் சாய்ந்திருப்பதை உணர்ந்தவள் உடனே வேகமாக அவன் தோளிலிருந்து முகத்தை எடுத்துக் கொண்டாள்..  

கூடவே அவனிடமிருந்த அவள் கையையும் விசுக்கென்று உருவிக் கொண்டாள்.. வேகமாக அவனிடமிருந்து தள்ளி ஜன்னலை ஒட்டி அமர்ந்துகொண்டாள்..

அதை கண்டவன் திடுக்கிட்டு திகைத்தான்..

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத ஏமாற்றத்தில் இருந்தவன் மெல்ல மெல்ல தன் நிலைக்கு வந்தான்...

இதுவரை அவளை தன் மனைவியாக பாவித்து வந்தவனுக்கு   அவளை தன் மனைவியாகவே  எண்ணியிருந்தவன் அவன் தோளில் உரிமையுடன் சாய்ந்து கொண்டிருந்த அவன் மனைவி திடீரென்று அவனை விலக்கி  கொண்டதை போல இருக்க அவள் புறம் பார்த்தவன்

“என்னாச்சுடா ? என்று தன் மனைவியிடம் அக்கறையாக விசாரித்தான்...  

அவளோ  இவனை  பார்த்து தன் வாயை இருபக்கமும் இழுத்து  முறைத்துவிட்டு மீண்டும் ஜன்னல் பக்கம் பார்த்து அமர்ந்து கொண்டாள்...

அவளின் அந்த முறைப்பையும் தன்னிடமிருந்து விலகி அமர்ந்து ஜன்னலின் பக்கம் முகத்தை திருப்பி கொண்டதையும் கண்டவனுக்கு அப்பொழுதுதான் உண்மை உறைத்தது...

கொஞ்சம் கொஞ்சமாக நிஜம் புரிய ஆரம்பிக்க கனவில் கற்பனையில்தான் அவள் தன் மனைவி ஆகி இருக்கிறாள்..இன்னும் நிஜத்தில் அவள் அவன் மனைவி ஆகவில்லை என்று மீண்டும் அறிவு அவனுக்கு எடுத்துரைக்க இந்த முறை அறிவு சொன்னதை  கேட்க வேண்டியதாயிற்று...

அதற்குள்  ஓரளவுக்கு தன்னை சமாளித்துக் கொண்டவன் அவள் தன் மனைவி ரோஜா இல்லை..

இந்த விமானத்தில் பயணிக்கும் ஒரு பயணி என்பதை மீண்டும் நினைவுபடுத்திக் கொண்டு அதற்கு தகுந்த மாதிரி எப்படி அவளுடன் பேச வேண்டும் பழக வேண்டும் என்று அவசரமாக யோசித்து கொண்டான்...

ஆனாலும் உள்ளுக்குள் இவள்தான் என் மனைவி என்று ஆணித்தரமாக பதிந்து கொண்டான்..  

“என் உள்ளே  இருக்கும் என் காதல் இப்போது அவளுக்கு தெரிய வேண்டாம்.. அவளை பற்றி தெரிந்து  கொள்ள வேண்டும்..  அதற்கு பிறகு அவளிடம் தன் மனதை சொல்ல வேண்டும்.. “  என்று அவசரமாக திட்டமிட்டவன் அடுத்து அவளிடம் எப்படி பேச வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு அவளை பார்த்து நட்புடன் புன்னகைத்து

“ஹே ரோஜா...இப்ப எதுக்காக என்ன பார்த்து முறைக்கிற? “ என்றான் இதழ்களில் புன்னகை இழையோட..

அவளோ முகத்தை திருப்பாமல் இன்னும் ஜன்னல் பக்கமே பார்த்துக் கொண்டிருக்க அவனும் விடாமல்

“ஓய்... வெறும் ரோஜா...  சொல்லு...  எதுக்காக என்ன பாத்து முறைச்ச? என்றான் குறும்பாக சிரித்தவாறு...

அவள் பெயரை அவன் கிண்டலாக அழைப்பதை கேட்டவள் இந்த முறை திரும்பி அவனைப் பார்த்து

“ஹலோ மிஸ்டர்.... என் பெயர் ஒன்னும் வெறும் ரோஜா இல்ல.. ரோரோரோரோஜாஜாஜாஜா... “ என்று இழுத்து சொன்னவள்

“ஆமா....நான் தூங்கறப்ப எதுக்காக என் கையை புடிச்சுகிட்டு இருந்தீங்க? என்று மீண்டும் முறைத்தாள்..

அவளின் அந்த முறைப்பையே இமைக்க மறந்து தனக்குள் ரசித்து பத்திரபடுத்தி கொண்டவன்

“வாட்? நான் உன் கைய புடிச்சனா? இது என்ன வம்பா இருக்கு? என்று  உள்ளுக்குள் சிரித்தவாறு அவளை சீண்டினான்..

“பின்ன?  என் கை எப்படி உங்க கைக்குள்ள வந்தது? என்று முகத்தை நொடித்தாள்...

“ஹா ஹா ஹா அதை நீ தான் சொல்லணும்... ஆக்சுவலி நீதான் என் கைய புடிச்சு உன் கைக்குள்ள வச்சுக்கிட்ட.. “ என்று உள்ளுக்குள் பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு இயல்பாக பேச முயன்றான் ரிஷி...  

அதை  கேட்டவள்  நம்பாமல்

“இல்ல...  நீங்க பொய் சொல்றீங்க... நான் ஒன்னும் அப்படி எல்லாம் செஞ்சு இருக்கமாட்டேன்... “  என்று கோபமாக பேச ஆரம்பித்தவள் முடிக்கும் பொழுது சந்தேகமாக இழுத்தாள்...

“ஒருவேளை நாமதான் அப்படி செஞ்சு இருப்போமோ? என்று சந்தேகம் வர ஆரம்பித்தது...

அதை புரிந்து கொண்டவன் அவளை அதையே உண்மையாக எண்ண வைக்க,

“யெஸ் ரோஜா..  காட் ப்ராமிஸ்...  நீயாதான் வந்து என் கைய புடிச்சிகிட்ட..  நீயே பாரு..  நான் எங்க உட்கார்ந்து இருக்கேன்..உன் சீட் அங்க இருக்கு...    தூக்கத்துல திடீர்னு நீயே என்கிட்ட வந்து என் பக்கத்துல உட்கார்ந்து கிட்ட..

அப்புறம் அதே தூக்கத்தில என் தோளில் நீயேதான் சாஞ்சுகிட்டா... நீ சாயாமல் நானா எப்படி உன்னை என் தோளில் சாய்ச்சுக்க முடியும்?” என்று புருவங்களை உயர்த்தி கேள்வியாக நோக்கினான் உள்ளுக்குள் சிரித்தவாறு...

“ஹ்ம்ம்ம் நீயேதான் தூக்கத்துல என் பக்கத்துல வந்து உட்கார்ந்துகிட்டு என் தோளில சாஞ்சுகிட்டு அப்புறம் என் கையையும் புடிச்சிகிட்ட.. சரி என் பொண்டாட்டி தானே.. “  என்று சொல்ல வந்தவன் பாதியில் நிறுத்தி நாக்கை கடித்து கொண்டு

“சரி...  நம்ம ஃபிரண்டு தானே... சாய்ஞ்சுக்கட்டும் என்று நானும் என் தோளை கொடுத்தேன்... என் தோளில் சாய்ந்த கொஞ்ச நேரத்தில என் கையையும் புடிச்சிகிட்ட..

சரி தோளை  கொடுத்தாச்சு..  கைய கொடுத்தா என்ன குறைஞ்சா  போய்விடும்..என்று என் கையை கொடுத்துட்டு நானும் கம்முனு உட்கார்ந்து கிட்டேன்...

இப்ப சொல்லு..  என்மேல ஏதாவது தப்பு இருக்கா? என்றான் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு உள்ளுக்குள் பொங்கி சிரித்தபடி...

அதைக் கேட்டவள்  முகமோ  அஷ்ட கோணலாக மாறியது...

“ஐயையோ.. !! இவர் சொல்ற மாதிரி நானேதான் இப்படி பண்ணினா? சே  இந்த தூக்கம் வந்தா நான் என்ன பண்றேன்னு எனக்கே தெரிய மாட்டேங்குது ! “  என்று உள்ளுக்குள் தன் தலையை குட்டி கொண்டவள்  அவனை  பார்த்து

“சாரி...  நீங்க எதுவும் தப்பா எடுத்துக்காதீங்க..  எனக்கு தூக்கத்துல என்ன செய்யறேன் னு  எனக்கே தெரியாது.. “  என்றாள்  அசட்டு சிரிப்பு சிரித்து வைத்து...

அதை கேட்டவன் திகைத்து

“ஆகா..  இது நல்ல வசதியா போய்ருந்திருக்குமே...!!  இன்னும் கொஞ்ச நேரம் இந்த மான்குட்டிய தூங்க விட்டு இருந்திருக்கலாமே !! தூக்கத்துலதான் என்னை  மாமா னு  கொஞ்சினாளா?

இன்னும் ஏதாவது சொல்லி இருப்பாள்... அதுக்குள்ள முழிச்சுகிட்டாளே...என் அதிர்ஷ்டம் அவ்வளவுதான் போல...  “ என்று பெருமுச்சு விட்டு உள்ளுக்குள்  சிரித்துக் கொண்டவன்

இட்ஸ் ஓகே ரோஜா...  நான் ஒன்னும் தப்பா எடுத்துக்கல.. இப்ப கூட என் தோள் ல சாய்ஞ்சுக்கறதுனா சாய்ஞ்சுக்க... " என்று குறும்பாக சிரித்தான்...

“ஹீ ஹீ ஹீ அதெல்லாம் வேண்டாம்..  எனக்கு இப்ப தூக்கம் போயிடுச்சு.. “  என்றவள் மீண்டும் முகத்தை ஜன்னல் பக்கம் திருப்பிக் கொண்டாள்...

அவளின் அந்த பக்கவாட்டு தோற்றமும் மனதை அள்ள அவளையே மீண்டும் சைட் அடித்து கொண்டிருந்தான் ஓரக்கண்ணால்...

சிறிது நேரம் அமைதியாக இருந்தவள் பின் ஏதோ ஞாபகம் வர அவன் புறம் திரும்பியவள்

“சார்..... இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு லண்டன் போவதற்கு? என்று வினவினாள்..  

அவனும் முன்னால்  இருந்த அந்த  சின்ன திரையில் டைம் டு ரீச் டெஸ்டினேசன் என்று இருந்ததை பார்த்து

“இன்னும் மூன்று மணி நேரம் ஆகும்... “ என்றான்..

அதைக்கேட்டதும் அவள் முகம் சுருங்கியது.. அதைக்கண்டு கொண்டவன்

“என்னாச்சு ரோஜா?  எனி ப்ராப்ளம்? என்று அக்கறையாக விசாரித்தான் ரிஷி..

“வந்து...எனக்கு பசிக்குது சார்... இன்னும் மூன்று மணி நேரம் வரைக்கும் எப்படி பசி தாங்குவது என்று தான் யோசித்துக் கொண்டிருந்தேன்.. “  என்றாள் மறைக்காமல்..

அதைக் கேட்டவன்

“அவ்வளவுதான... ப்ளைட்லயும் சாப்பிட கொடுப்பாங்க.. நீ தூங்கிட்டதால்  உன் பாக்சை நான் வாங்கி வைத்தேன்.. ஆனால் அது இப்பொழுது ஆறியிருக்கும்...

ஒரு நிமிஷம் இரு.. வேறு ஒன்றை சூடாக கொண்டு வரச் சொல்கிறேன்.. “ 

“இல்ல சார்.. இதுவே பரவால்ல.. இதையே நான் சாப்பிட்டுக்கிறேன்... “

“நோ நோ.. ஒரு மல்ட்டி மில்லினரோட வைஃப் இந்த ஆறிப்போன புட் ஐ சாப்பிடறதா? “ என்று தனக்குள்ளே சொல்லி கொண்டவன்

“இரு ரோஜா.. நான் வேற கொண்டு வரச்சொல்றேன்.. “ என்று அவளை அடக்கியவன் அங்கிருந்த பணிப்பெண்களை அழைப்பதற்கான பட்டனை அழுத்த,  முன்பு வந்து அவனிடம் வழிந்து கொண்டிருந்த அந்த பணிப்பெண் வேகமாக ஓடி வந்தாள்..

“எஸ் சார்... ஹௌவ் கேன் ஐ ஹெல்ப் யூ? என்று மீண்டும் இரு கோட்டுக்கும் சிரித்து வழிந்து நிற்க அவனும் ரோஜாவை கைகாட்டி

“இவ.... இவங்க சாப்பிட சூடா  ஏதாவது இருந்தா கொடுங்க..”  என்று ஆங்கிலத்தில் சொல்ல அந்த பெண்ணும் சரி என்று தலையசைத்து முன்பு கொடுத்த உணவை வாங்கிக் கொண்டு சென்றாள்..  

சிறிது நேரத்திலேயே வேறு ஒரு உணவை கொண்டு வந்து கொடுக்க ரிஷி அதை வாங்கி கொண்டவன் அவள் முன்னால் இருந்த இருக்கையில் இருந்த ட்ரேயை இழுத்து வைத்து அதன் மீது அவள் உணவை வைத்து அவள் உண்ணுவதற்கு உதவி செய்தான்..

அவளுக்கு,  தன் மனைவிக்கு ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து  அக்கறையாக செய்து தருவது அவனுக்குள் ஏதோ ஒரு புதுவித உற்சாகத்தை வர வைத்தது...

வாழ்வின் ஒரு கட்டத்தில் எல்லோரும் ஏன் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்பதன் அர்த்தம் இந்த நொடியில் புரிந்தது ரிஷிக்கு..

அந்த நொடியில் என்னதான் வாழ்க்கையில் ஓடி ஓடி சம்பாதிச்சாலும் கோடி கோடியாய் சொத்து சேர்த்து வச்சாலும் தனக்கென்று ஒருத்தி தனக்கென்று ஒரு குழந்தை தனக்கென்று ஒரு குடும்பம் இல்லாமல் போனால் அந்த வாழ்க்கை நிறைவு பெறாத வாழ்க்கையாக இருந்துவிடும்..  

ஒருவன் வீட்டுக்கு வெளியே எவ்வளவுதான் சுத்தினாலும் கஷ்டபட்டு சம்பாதித்தாலும் வீட்டிற்கு திரும்பி வந்ததும் தன் சந்தோஷத்தையும் துக்கத்தையும் பகிர்ந்து கொள்ள அவனுக்கு என்று ஒரு துணை வேண்டும்..

அந்த துணை,  அவனின் இணை அவனில் பாதியாக இருக்க வேண்டும்...

தன் இணையின் சிறுசிறு அசைவுகளும் சிறுசிறு சந்தோஷம் துக்கம் அவனுக்குள்ளும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற வாழ்வியல் உண்மையை அந்த நொடியில் புரிந்து கொண்டான் ரிஷி...

இதுவரை திருமணத்தைப் பற்றியும் தனக்கென்று ஒரு குடும்பத்தை உருவாக்கிக் கொள்வது பற்றியும் எண்ணியிராத அந்த தொழிலதிபனுக்கு அந்த நொடியில் குடும்பத்தின் முக்கியத்துவம் புரிந்தது..  

பார்த்து சில மணி நேரங்களே ஆகி இருந்தாலும் தன் அருகில் இருப்பவளுக்காக அவன் இதயம் துடிப்பதும் அவளின் சிறு கோபம் சிறு  சிணுங்களும் அவன் உள்ளே பாதிப்பை ஏற்படுத்துவதை உணர்ந்து கொண்டவன்

“இவள் தான் என்னவள்... எனக்கானவள்..  என் மீதி  இருக்கும் வாழ்வில் என்னுடன் துணை வருபவள்... மை வைஃப்.. மை பெட்டர் ஹாப்... “  என்று மீண்டும் தனக்குள்ளே ஆணித்தரமாக சொல்லிக் கொண்டான்...

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!