தேடும் கண் பார்வை தவிக்க-13
அத்தியாயம்-13
தன் புல்லட்டை
ஸ்டார்ட் பண்ணி வைத்துக்கொண்டு வீட்டு வாசலில் காத்திருந்தான் தங்கராசு..
அடர் நீல நிற டிராயரும்
அதற்கு மேல் ஸ்கை ப்ளூ கலர் சட்டையும் அணிந்து சட்டையை இன் பண்ணி பெல்ட் ஐ
இடுப்பில் சுற்றி ட்ராயர் கழண்டு விடாமல் இறுக்கமாக இழுத்து மாட்டிக்கொண்டு முதுகுக்கு
பின்னால் ஸ்கூல் பேக்கை சுமந்து கொண்டு தன் அன்னையின் கையை பிடித்துகொண்டு வாயிலை நோக்கி மெல்ல மெல்ல நடந்து வந்து கொண்டு இருந்தான் நளன்...
ஆனால் அவன்
முகம் மட்டும் கவலையால் வாடிப்போய் கிடந்தது...
"கண்ணு...
அப்பா ரொம்ப நேரமா வாசல்ல காத்துகிட்டு இருக்காங்க... மெதுவா நடந்தன திட்ட ஆரம்பிச்சிடுவார்...
சீக்கிரம் வா கண்ணு.. “ என்று அவன் கையை பிடித்து இழுத்தபடி வேகமாக நடந்து வந்தாள்
கண்ணம்மா..
புல்லட்டின்
அருகில் வந்ததும் தன் மகனின் தொங்கிப் போன முகத்தை கண்ட தங்கராசு
"ஏன் டா..
உன் மூஞ்சி இப்படி சொங்கி போய் இருக்கு..
புது
பள்ளிக்கூடம் போகணும்னு பயமா இருக்கா? “ என்றான் தங்கராசு அக்கறையாக..
“இல்லை........
“ என்று இருபக்கமும் தலையை ஆட்டினான் நளன்
அதே வாடிய முகத்தை வைத்துக் கொண்டு
“பின்ன
எதுக்குடா மூஞ்ச இப்படி தூக்கி வச்சிகிட்டு இருக்க? ஆம்பள பசங்க எப்பவும் கெத்தா நெஞ்ச
நிமித்திகிட்டு இருக்கோணும்... பொம்பள புள்ளைங்க மாதிரி எதுக்கு இப்போ மூஞ்ச
தூக்கி வச்சிருக்க.. சிரிச்ச மாதிரி பள்ளிக்கூடம் போவோணும்... என்ன புரிஞ்சுதா? “ என்று தன் மகனை லேசாக அதட்டினான் தங்கராசு...
அதைக் கேட்ட
கண்ணம்மா
“அது ஒன்னும்
இல்லீங்க மாமா... நம்ம மருமவ தமயந்தி
குட்டிய பிரிஞ்சு வேற பள்ளிக்கூடம் போவோணுமில்ல...அதுக்குத்தான் துரை
மூஞ்சை தூக்கி வச்சிருக்கார்... " என்று சிரித்தாள் கண்ணம்மா...
அதை கேட்டு
உள்ளுக்குள் மகிழ்ந்து போனான் தங்கராசு..
தன்னைப் போலவே
தன் மகனுக்கும் அவன் அத்தை மேலயும் அத்தை மவ தமயந்தி மேலயும் பாசம் இருப்பது
தங்கராசுக்கும் தெரியும் தான்... அத்தை மகளை பிரிஞ்சு போவதை எண்ணி விசனப்படறான்
என்றால் நல்லதுக்குத் தான்...
“இவன் மனசுல
பாசம் இருந்தாதான் என் தங்கச்சி கேட்டுகிட்ட மாதிரி தமா குட்டிய இந்த வீட்டு
மருமகளாக்கிக்க முடியும்... “ என்று அவசரமாக யோசித்தவன் அதுவரை கடுகடுவென்று இருந்த முகம் மாறிப்போய்
கனிந்த முகத்துடன்
“அட கழுத !! இவ்வளவுதானா விசயம்? இதுக்கு போய்
ஏன் டா இப்படி மூஞ்ச தொங்க போட்டு கிட்டு வர்ற..?
நீ என்ன
வெளிநாட்டுக்கா படிக்க போற ? இதோ இங்கன இருக்குற
பொள்ளாச்சிக்குத்தான் படிக்க போற... அதுவும் சாயந்தரம் வீட்டுக்கு வந்திட போற... அதுக்கப்பொறவு போய் உன் அத்த மவள பாரு...
மூணு வருஷம்
தான் டா.. அப்புறம் தமா குட்டியும் அந்த பள்ளிக்கூடத்துக்குத்தான் வரப் போறா.. ரெண்டு பேரும் ஒன்னாவே பள்ளிக்கூடம்
போயிட்டு வரலாம்... அதுக்கு எதுக்கு இப்படி
மூஞ்ச தூக்கி வச்சிருக்க? கொஞ்சம் சிரிடா... “
என அவன் வயிற்றில் கிச்சு கிச்சு மூட்ட அதில்
கொஞ்சம் மலர்ந்து சிரித்தான் நளன்..
அவன் தந்தை
சொல்லியதை கேட்டதும் கொஞ்சம் சமாதானம்
ஆனவன் புல்லட்டில் ஏறி அவர் பின்னால் அமர, அதே நேரம்
அவர்கள் அருகில் மற்றொரு புல்லட் வந்து நின்றது...
அதிலிருந்து
தங்கம் எட்டி குதித்து இறங்கினாள்.. கூடவே தன் முன்னால் அமர வைத்திருந்த தமயந்தி
குட்டியையும் இறக்கி விட்டு சிங்காரமும் கீழ இறங்கி புல்லட் ஐ ஸ்டான்ட் போட்டு
நிறுத்தினான்..
சிங்காரம் தங்கராசுவை
பார்த்து
"நல்லா
இருக்கீங்களா மச்சான்? எப்படி இருக்கீங்க அக்கா... " என்று
கண்ணம்மாவையும் நலம் விசாரித்தான்..
தங்கராசும் புன்னகைத்து
அவனை நலம் விசாரிக்க தங்கராசு புல்லட்டில் அமர்ந்து இருந்த நளன் ஐ பார்த்து
"என்னடா
மாப்பிள்ளை !! இப்பதான் பொறந்த மாதிரி இருந்த.. அதுக்குள்ள ஹை ஸ்கூல் போய் படிக்கற
அளவுக்கு வளர்ந்திட்டியா? " என்று அவன் கன்னத்தை பிடித்து கிள்ளினான்..
நளன்
சிரித்தாலும் அவன் பார்வை தன் அத்தையை ஒட்டி நின்று கொண்டு இவனையே குறுகுறுவென்று
பார்த்து கொண்டு நின்று கொண்டிருந்த தமயந்தியிடம் சென்றது...
உடனே
புல்லட்டில் இருந்து எட்டி குதித்தவன்
தமயந்தி அருகில் சென்று நின்று கொண்டு யாருக்கும் தெரியாமல் அவள் ஜடையை பிடித்து இழுத்து கண் சிமிட்டி சிரித்தான்...
அவளோ அவனை
முறைக்க அதை கண்டுகொள்ளாமல் அவனும் சிரித்து கொண்டிருந்தான்.. திடீரென்று வந்து நின்ற
தன் தங்கச்சியை கண்டதும் ஆச்சர்யமாகி விட, அவளை பார்த்து
"என்ன
மா... தங்கம்... இந்த நேரத்துல மாப்பிள்ளைய கூட்டிகிட்டு இப்படி அரக்க பறக்க
வந்திருக்க? " என்றான் யோசனையாக..
"அத ஏன்
கேட்கறீங்க மச்சான்...! இந்த குட்டி
மாப்பிள்ளை ஆறாம் வகுப்பு படிக்க டவுனுக்கு போறான் இல்லையா.. அவனை வந்து பார்த்து
வாழ்த்தோணும் னு எந்திரிச்சதுல இருந்து ஒரே புலம்பல்..
ஒரு வழியா எல்லா
வேலையும் முடிச்சிபோட்டு அப்படியே கோயிலுக்கு போய்ட்டு மாப்பிள்ளை பேருக்கு ஒரு
அர்ச்சனை பண்ணிபோட்டு வந்தா..
கூடவே எங்க
ரெண்டு பேரையும் வேற சேர்த்து இழுத்துகிட்டு வந்திட்டா... " என்று சிரிக்க
தங்கம் தன் கணவனை முறைத்தவாறு தன் முந்தானையில் முடிஞ்சிருந்த கோவில் திருநீற்றை
எடுத்து அருகில் நின்ற நளன் நெற்றியில் வைத்தவள்
"நளன்
கண்ணா.. பெரிய பள்ளிக்கூடம் போற.. மத்த பசங்களோட சேர்ந்து கெட்டு போகாம நல்லா
படிக்கோணும்.. நீ பெரிய ஆளா வரோணும்..அப்பதான் இந்த அத்தைக்கு பெருமையா
இருக்கும்... செய்வியா? " என்று ஆர்வமாக கேட்டாள்..
"அப்பதான்
என் மாமியார் கிட்ட நான் எதிர்த்து பேசி தமா வை உனக்கு கட்டி வைக்க முடியும்...
" என்பதை மட்டும் தனக்குள் சொல்லி கொண்டாள்..
தன் அத்தை தன்
மீது வைத்திருக்கும் பாசத்தை கண்டு உருகி போன நளன்
“கண்டிப்பா
அத்தை.. நான் நல்லா படிச்சு பெரியா ஆளா வந்து காட்டுவேன்.. " என்று கண்களில்
உறுதியுடன் உரைத்தான்...
“அப்படி
சொல்லுடா என் ஆசை மருமவனே !! அதற்காகத்தான் இந்த அத்த தினமும் அந்த முருகன் கிட்ட வேண்டிகிட்டு
இருக்கறேன்.. “ என்று சொல்லி அவன் கன்னம் வருடி கன்னத்தில் முத்தமிட்டாள்...
அந்த சிறுவனும் மலர்ந்து
சிரிக்க பின் நேரமாவதை உணர்ந்து தன் மகனை வண்டியில் ஏறச் சொன்னான் தங்கராசு...
உடனே தன் அத்தையை
பார்த்து
“அத்த... என்
பொண்டாட்டிய பத்திரமா ஸ்கூலுக்கு கூட்டிப்போய் விட்டுட்டு நீங்களே சாயந்தரம் போய் கூட்டிக்கிட்டு வாங்க...
யார் கூடவும் அனுப்பாதீங்க... அவள் பத்திரமா
இருக்கோணும்..
அவளை பிரிந்து நான் வேற பள்ளிக்கூடம் போறது எனக்கு கஷ்டமா இருக்கு... நான் போயிட்டா யார் அவள ஸ்கூல் ல இருந்து கூட்டிகிட்டு வந்து விடறது.. “
என்று மீண்டும் சோகமாக முகத்தை வைத்துக் கொண்டான்..
அதைக் கேட்ட தமயந்தியோ
“டேய் நல்லி
எலும்பு மாமா... நீ வேற பள்ளிக்கூடம் போறதுல சந்தோச படற முதல் ஆள் நான்தான்... இனிமே உன்
தொல்லை இல்லாமல் என் பிரெண்ட்ஸ் கூட ஜாலியா ஸ்கூலுக்கு போயிட்டு ஸ்கூல்
முடிஞ்சதும் வெளில சுத்தி ஆட்டம் போட்டுகிட்டே வருவேன்..
நீ என்னடான்னா
என் ஆத்தாவையே கூட்டிக்கிட்டு போய்ட்டு வரச் சொல்றியே...அது கூட வந்தா நான்
எப்படி ஜாலியா வெளில சுத்த முடியும்..
நீ நல்லா
இருப்பியா? நீ வேற பள்ளிக்கூடம் போனாலும் இப்படி
என்னை மாட்டி விட பார்க்கறியே.. !! " என்று உள்ளுக்குள் தன் மாமனுக்கு அர்ச்சனை பண்ணினாள்
தமயந்தி..
கூடவே இடுப்பில்
கை வைத்து அவனை பார்த்து முறைத்தாள்..
அவள் மன ஓட்டத்தை
புரிந்து கொண்டவன்
“எப்படி மாட்டி
விட்டேன் பார்த்தியா? “ என்று கண் சிமிட்டி குறும்பாக
சிரித்தான்..
அவளோ தன் வாயை
இரு கோட்டுக்கும் இழுத்து உதட்டை சுளித்து அவனை முறைத்தாள்..
பின்
பெரியவர்களுக்கு கை அசைத்து விடைபெற்று தன் புது பள்ளிக்கூடத்தை நோக்கி சென்றான்
நளன்...
நளன் ஐந்தாம்
வகுப்பு முடித்து ஆறாம் வகுப்பில் ஆர்வத்துடன் அடி எடுத்து வைத்தாலும் அவன் கிராமத்தில்
இருந்தது ஆரம்ப பள்ளிக்கூடம் மட்டுமே..
ஐந்தாம் வகுப்பு
வரைக்குமே அங்கிருந்தது.. மேல படிக்க, அருகில்
இருக்கும் பொள்ளாச்சிக்கு செல்லவேண்டும்..
ஆறாம் வகுப்பு உயர்நிலை
பள்ளிக்கூடம் பொள்ளாச்சியில் இருப்பதால் தன் அத்தை மகளை பிரிந்து செல்லவேண்டுமே
என்று அவனுக்கு வருத்தமாக இருந்தது..
அதனாலயே முதல்
நாளன்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு சோகமாக பள்ளிக்கு சென்றான்..
ஆனால் பள்ளிக்கு
சென்றதும் அந்த புது சூழ்நிலையும் புது நண்பர்களை சந்திக்கவும் கொஞ்சம் கொஞ்சமாக அந்த
பள்ளிக்கூடம் பிடிக்க ஆரம்பித்தது..
அதிலும் ஒரு
சந்தோஷம் அந்த பள்ளியின் அருகிலேயே இருந்த பெட்டிக்கடைதான்..
அதில் விதவிதமான
தின்பண்டங்களும் சாக்லேட்களும் அடுக்கி
வைத்திருந்தனர்.. அந்த சாக்லேட்களை கண்டதும் அவன் கண்கள் பெரிதாக விரிந்தன....
அன்று பள்ளி
மதிய இடைவேளையில் அந்த கடைக்கு சென்று அவன் சேர்த்து வைத்திருந்த பாக்கெட் மணியில்
இருந்து விதவிதமான இரண்டு சாக்லெட்களை வாங்கி தன் சட்டை பைக்குள் போட்டு கொண்டான்..
அவன் சாக்லெட்
வாங்கவும் அவன் உடன் வந்திருந்த புது நண்பன் நாக்கை சப்பினான்..
எப்படியும்
அவனுக்கு ஒன்று தருவான் என்று ஆர்வமாக பார்த்து கொண்டிருக்க, அதை வாங்கியவனோ அதை சாப்பிடாமல் பாக்கெட்டில் போட்டு கொள்ள,
காற்று போன பலூனாய் அந்த நண்பனின் முகம் வாடி விட்டது...
“டேய் நல்லி
எலும்பு.. எதுக்குடா இப்படி சாக்லேட் வாங்கி அதை சாப்பிடாமல் சோப்புக்குள்ள போட்டுகிட்ட.. " என்று முறைத்தவாறு கேட்டான்..
“ஹீ ஹீ ஹீ இது
என் அத்த பொண்ணு தயாவுக்கு டா.. அவளுக்குத்தான் சாக்லேட் னா ரொம்ப புடிக்கும்..
அதான் அவளுக்காக வாங்கி கிட்டு போறேன்...”
என்று சொல்லி
சிரித்தவன் மணி அடிக்கவும் மீண்டும் வகுப்பிற்கு ஓடி விட்டனர்..
மாலை பள்ளியில்
இருந்து வீடு திரும்பியதும் வேறு சட்டைக்கு மாறியவன் அவன் அன்னை கொடுத்த
சிற்றுண்டியை கூட மறுத்துவிட்டு வேகமாக தன் அத்தை வீட்டை நோக்கி ஓடினான்...
அவன்
எதிர்பார்த்த மாதிரியே அந்த தெருவின்
கடைசியில் தமயந்தி விளையான்டு
கொண்டிருந்தாள்.. அவளை கண்டதும் மலர்ந்த முகத்துடன் அவளை நோக்கிச் சென்றான்
நளன்..
இவனை பார்த்ததும்
திடுக்கிட்டாள் தமயந்தி..
“ஐயோ... இந்த
நல்லி எலும்பு மாமன் இங்க எதுக்கு வந்தான்..? "
என்று முறைத்தவாறு விளையாட்டை பாதியில் நிறுத்திவிட்டு அவனை நோக்கி ஓடி வந்தாள்
“டேய் மாமா.... இங்கன எதுக்கு வந்த? என் அப்பத்தா உன்னை பார்த்தால் அப்புறம் தெரியும்...
சீக்கிரம் இங்கிருந்து போயிடு.. “ என்று
எச்சரித்து அவனை விரட்டினாள்..
“ஹோய்
பொண்டாட்டி... உன் அப்பத்தா என்ன புலியா? அது வந்தா
எனக்கென்ன பயமா? உன் அப்பத்தா வந்த உடனே பெருசா துப்பாக்கிய எடுத்து என்ன டுப் டுப்
னு சுட்டுபுடுமாக்கும்... போடி... “ என்றவன் தன் சட்டை பாக்கெட்டில் கையை விட்டு
அவன் வாங்கி வந்திருந்த சாக்லெட்டை
எடுத்து அவள் முன்னே காட்டியவன்
“இதை கொடுக்கத்தான்
வந்தேன்.. நீ என்னமோ முறுக்கிக்கற? வேணாம் னா போ.. " என்று இவனும் முறுக்கி கொண்டான்..
அவன் கையில்
இருந்த சாக்லேட்டை பார்த்ததும் தமயந்தியின் கண்கள் பெரிதாக விரிந்தன...நாக்கில்
எச்சில் ஊற உடனே எட்டி அவன் கையிலிருந்த சாக்லெட்டை வெடுக்கென்று பிடுங்கிக்
கொண்டாள்...
“டேய் மாமா... இதே
மாதிரி எனக்கு டெய்லியும் சாக்லெட் வாங்கி
தருவியா? “ என்று கண்கள் பளபளக்க ஆர்வத்துடன் கேட்டாள்..
“ஹ்ம்ம்ம் கண்டிப்பா
பொண்டாட்டி... நீ நான் சொல்ற பேச்சை
கேட்டால் தினமும் உனக்கு சாக்லேட் வாங்கி தர்றேன்... “ என்று சிரித்தான்..
அவளும் சிரித்த
படி சரியென்று தலையாட்ட, அதிலிருந்து தினமும் அவளுக்கு ஒரு
சாக்லேட் ஆவது வாங்கிச் சென்று கொடுத்து விடுவான்..
தினமும் அவளை
பார்த்து அவள் சிரிப்பை ரசித்து விட்டு தன் வீட்டுக்கு ஓடி வந்து விடுவான்...
வருடங்கள்
உருண்டோட, தமயந்தி இப்பொழுது ஐந்தாம் வகுப்பு முடித்து
ஆறாம் வகுப்புக்கு செல்ல இருந்தாள்..
தங்கத்தின்
கவனிப்பில் பன்னிரண்டு வயதிலயே பெரிய பெண்ணாக தெரிந்தாள்...தங்கத்திற்குத்தான் தன்
மகளை அப்படி காண பூரிப்பாக இருந்தது...
“இவள் சீக்கிரம்
பெரியவள் ஆகிவிட்டால் பதினெட்டு வயது முடிந்ததும் தன் அண்ணியிடம் அவளை ஒப்படைத்து
விட்டால் போதும்.. “என்று பெருமூச்சு விட்டு கொள்வாள்...
நளன் இப்பொழுது
பத்தாம் வகுப்பில் நுழைந்திருந்தான்..
தினமும்
பள்ளிக்கூடம் சென்று வந்ததும் தன் அத்தை மகளை பார்த்து விட்டு வீட்டிற்கு வந்ததும்
பாட புத்தகத்தை எடுத்து வைத்து கொண்டு அமர்ந்து விடுவான்..
தங்கம் அவனை
நன்றாக படிக்க சொல்லி இருந்ததால் தமயந்தியை மணக்கவேண்டும் என்பதற்காகவே கண்ணும்
கருத்துமாக படித்தான்...
விடுமுறை
நாட்களில் தன் தந்தைக்கு உதவியாக வயலுக்கு சென்று விடுவான்...
அவன் பன்னிரண்டு
வயதிலயே வயலில் இறங்கி சிறுசிறு வேலைகளை செய்ய ஆரம்பித்தான்..
தங்கராசுவும்
தன் மகனை பொத்தி வளர்க்காமல் விவசாயி மகனுக்கு அந்த விவசாயத்தை பற்றியும்
எல்லா தெரிந்திருக்க வேண்டும்.. பின்னாளில் ஏதாவது கஷ்டம் நேர்ந்தாலும் உழவு கை விடாது...
நம்மாழ்வார்
சொல்கிற மாதிரி நமக்கான உணவை நாமே தயாரித்து கொள்ளவேண்டும் என்ற கருத்தை தன்
மகனின் மனதில் பதிய வைக்க எண்ணி அவனையும் அழைத்து சென்று விடுவான்...
மடை கட்டுதல், களை பறித்தல் ஏர் உழுதல் என்று எல்லா வேலைகளையும் தன் மகனுக்கு
பழக்கினான் தங்கராசு.. நளனும் முகம் சுளிக்காமல் தன் தந்தை சொல்லியதை எல்லாம்
விருப்பத்துடன் செய்தான்..
அப்படி
சிறுவயதில் இருந்தே உழைத்ததாலும் கண்ணம்மா சத்தான உணவை போட்டு வளர்த்ததாலும்
அவனும் கிடுகிடுவென்று வளர்ந்து
பனைமரத்தில் பாதியாக நின்றான்....
உருண்டு
திரண்டிருந்த கால்களும் சிறு வயதிலயே ஏர் கலப்பையும் மம்முட்டி கம்பையும் புடித்த கைகள்
உடற்பயிற்ஸி செய்யாமலே இறுகி போய் திரண்டிருந்தன...
பதினாறு வயதிலயே பெரிய ஆண்மகனாக வளர்ந்திருந்தான் நளன்...!
Comments
Post a Comment