தேடும் கண் பார்வை தவிக்க-5
அத்தியாயம்-5
“ஹலோ
பிரிட்டிஷ் ஏர்வேஸ்….ஐம் ப்ரீதா.. ஹௌ கேன் ஐ ஹெல்ப் யூ ?
“ என்று மென்மையாக ஒலித்த பெண் குரலை கேட்டதும்
“ஹாய்.. திஸ் இஸ் ரிஷி வர்மா..வர்மா க்ரூப் ஆப்
கம்பெனிஸ் எம்.டி ஸ்பீக்கிங்.. “ என்று கம்பீரமாக ஒலித்தது ரிஷியின் குரல்....
அவன் குரலில் இருந்த கம்பீரமும் ஆளுமையும் கூடவே அவன் யாரென்று தெரிந்ததும்
மறுமுனையில் இருந்தவள் வேகமாக எழுந்து அட்டென்டன்ஸ் பொசிஸனில் நின்றிருக்க
வேண்டும்...
அவள் குரலில் உடனே ஒரு பதட்டம் வந்து ஒட்டி
கொண்டது..
“யெஸ்
சார்.. ஹௌ கேன் ஐ ஹெல்ப் யூ....? “ என்றாள் படபடப்பாக..
“ஐ நீட் அ
டிக்கெட் டு லண்டன் அர்ஜென்ட்லி...” என்றான் அதே கம்பீரம் சிறிதும்
குறையாமல்.
“ஸ்யூர் சார்... விச் டேட் டு யூ நீட் அ
டிக்கெட்? “
“டுடே.. ஐ நீட் அ டிக்கெட் பார் டுடே..” என்றான் மிடுக்குடன்...
“ஸ்யூர் சார்.. கிவ் மி அ செகண்ட்.. செக்கிங் பார் யூ...” என்றவள்
கணினியின் கீ போர்டை வேகமாக தட்ட மறுமுனையில் இருந்தவனோ அதற்குள் தன் பொறுமையை
இழந்து நகத்தை கடிக்க ஆரம்பித்து இருந்தான்...
அவன் மீண்டும் என்ன ஆனது என்று கேட்க
ஆரம்பிக்கும் முன்னே அப்டேட் கொடுக்கும் விதமாக
“ஜஸ்ட் அ செகண்ட் சார்... ஸ்டில் செக்கிங்.....
“ என்றாள்..
“டு இட் பாஸ்ட்.. ஐ கான்ட் வெய்ட் பார் லாங்
டைம்...” என்று சிடுசிடுத்தான்..
“ஸ்யூர் சார்.... “ என்றவள் மீண்டும் கணினியின் கீ போர்டை வேகமாக தட்டியவள் சில
நொடிகளில் பதில் அளித்தாள்...
“ஐ அம் எக்ஸ்ட்ரீம்லி சாரி சார்.. பிசினஸ்
கிளாஸ் டிக்கெட்ஸ் ஆர் அல்ரெடி புக்ட்.. வீ டோன்ட் ஹேவ் எனி டிக்கெட் ! “ என்று
கையை பிசைந்தாள்..
அதைக் கேட்டவன் டென்ஷனாகி
“வாட் நான்சென்ஸ் திஸ் ? நான் யார் தெரியுமா ? இந்த ஏர்லைன் ஓட பிரிமியர் கஸ்டமர்.. என்
கம்பெனிஸ் ல இருந்து மட்டும் மன்த்லி எவ்ளோ ட்ராவல் பண்றோம் தெரியுமா? எனக்கே டிக்கெட் இல்லையா? “ என்று எகிறி குதித்தான் ரிஷி...
உடனே மறுமுனையில் இருந்தவளும் தன்மையாக குரலை
தாழ்த்தி கொண்டு
“ஐ கேன் அண்டர்ஸ்டாண்ட் சார்.. பட் இன்னைக்கு எல்லா டிக்கெட்டும் புக்காகி
விட்டது.. இஃப் யூ டோன்ட் மைன்ட் நாளைக்கு டிக்கெட் இருக்கு... நாளைக்கு புக்
பண்ணவா? “ என்றாள் தயக்கத்துடன்..
“இடியட்... நான் அட்டென்ட் பண்ண வேண்டிய கான்ஃபரன்ஸ் நாளைக்கு
காலைல.. நான் இன்னைக்கே போயாகணும்.. டிக்கெட் இல்லை என்பதற்காக நான் நாளைக்கு போக
முடியுமா? ஐ நீட் அ டிக்கெட் ஃபார் டுடே.. “ என்று மீண்டும் உறுமினான்..
மறுமுனையில் இருந்தவளோ மீண்டும் கையை பிசைய, அவனிடம் பட்டென்று எதுவும் சொல்லி
விடவும் முடியாது.. அவன் சொன்னதை போல அவன் முக்கியமான கஸ்டமர்..
அவனுடைய
வர்மா க்ரூப் ஆப் கம்பெனிஸ் ல இருந்து வாரம் இரண்டு முறை கூட பயணம்
செய்வார்கள்.. ஆனால் இப்பொழுது டிக்கெட்
இல்லையே என்ன செய்ய என்று அவசரமாக யோசிக்க,
அதற்குள் பொறுமை இழந்தவன்
“எனி அப்டேட்.... ? “ என்று மறுமுனையில் நெருக்க, என்ன செய்வது என்று குழம்பியவள்
“கிவ் மி எ செகண்ட் சார்... ஐ வில் செக் வித்
மை மேனேஜர்.. “ என்று வழக்கமான பதிலைச் சொல்லி
சமாளிக்க முயன்றாள்..
இந்த மாதிரி வாடிக்கையாளர்களிடம் பேசும்பொழுது
அவர்களால் ஹேண்டில் பண்ண முடியாதவர்களை அடுத்த நிலையில் இருக்கும் லீடரிடமோ அல்லது
மேனேஜரிடமோ எடுத்து சென்று விடுவர்..
அவர்கள் இந்த மாதிரி வாடிக்கையாளர்களிடம்
இருந்து தப்பித்து கொள்ளலாம் தான்.. அடுத்த நிலைக்கு எடுத்து சென்றுவிட்டால் அதன்
பிறகு அந்த மேனேஜர் பாடு... அந்த வாடிக்கையாளர் பாடு..
ஆனால் அவளுடைய ஹிஸ்டரியில் அவள் ஹேண்டில் பண்ண
முடியாத கேஸ் என்று பதிவாகும்... அது அவளுடைய பெர்பார்மன்ஸ் ஐ பாதிக்கும்....
அதனாலயே முடிந்த அளவு எல்லா கஸ்டர்மர்களையும் அவர்களே சமாளித்து முடிப்பர்...
ஆனால் ரிஷியை பற்றி தெரிந்து இருந்ததாலும்
இல்லாத டிக்கெட் ஐ எப்படி புக் பண்ணுவது என்று புரியாததாலும் அடுத்து அவளுடைய
மேனேஜரை அணுக திட்டமிட்டாள்..
அதை ரிஷியிடம் சொல்லி இருக்க,
“எஸ்... டு இட் ஃபாஸ்ட்...இதை முதல்லயே செய்ய
வேண்டியதுதான... “ என்று நக்கல்
அடித்து முறைத்தவன் அந்த லைன் லயே காத்து கொண்டிருக்க, பின் சில நொடிகளில் ஒரு ஆண் குரல் கேட்டது...
“ஹலோ மிஸ்டர் ரிஷிவர்மா...ஐம் ராகுல்..
ப்ரீதாஸ் மேனேஜர்... உங்களுடைய கன்சர்ன் புரியுது
சார்.. ஆனால் பிசினஸ் கிளாஸ் டிக்கெட்
எல்லாமே முடிந்து விட்டது.. யாருமே இதுவரை கேன்சல் பண்ணவும் இல்லை..
இன்கேஸ் யாராவது கேன்சல் பண்ணினால் உங்களுக்கு முன்னுரிமை கொடுத்து அந்த டிக்கெட் ஐ உங்களுக்கே ரிசர்வ் பண்ணி தர்றோம்..
“ என்று முன்பு அந்த ப்ரீதா சொன்னதையே கொஞ்சம் மாற்றி குரலையும் மாற்றி ரிஷியை கன்வின்ஸ்
பண்ண முயன்றான் அந்த மேனேஜர் ராகுல்..
ஆனால் அதைக்கேட்டு ரிஷி கன்வின்ஸ் ஆகவில்லை..
“ஹலோ மிஸ்டர் ராகுல்.. ஐ டோன்ட் வான்ட் எனி எக்ஸ்ப்ளனேசன்..! என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ தெரியாது.. நான் இன்னைக்கு லண்டன் போயாகணும்.. டூ வாட்டவர் யூ கேன்.. " என்று மீண்டும் உறுமினான்..
“சே... இப்படியெல்லாம் ஆகும் என்று தெரிந்திருந்தால்
ஐ சுட் ஹேவ் மை ஓன் ப்ளைட்.. இட்ஸ் மை மிஸ்டேக்.. லெட்ஸ் ட்ரை... நான் இன்று
லண்டன் போயே ஆகணும்... " என்று பல்லை
கடித்தான்..
அவன் சொன்னதைக் கேட்டதும் மறுமுனையில் இருந்த மேனேஜரும்
அவசரமாக யோசித்து
“சார்,.
இஃப் யூ டோன்ட் மைன்ட் ஐ ஹேவ் அ சஜஷன்...
“ என்று தயக்கத்துடன் இழுத்தான்..
“எஸ்.. கோ அகெட் மேன்.. “ என்று மிடுக்காக
சொல்ல
“வந்து.... சார்... எக்னாமிக் கிளாஸ்ல ஒரு டிக்கெட் மட்டும் ப்ரீயா
இருக்கு.. அதுவுமே எங்களோட மற்ற ஏஜென்சியில் இருந்து புக் பண்ண ட்ரை
பண்ணிக்கிட்டு இருக்காங்க.. நான் அதை ஹோல்ட் பண்ணி வச்சிருக்கேன்..
வேணும்னா எக்னாமிக் கிளாஸ் ல டிராவல் பண்ணுங்க
சார்.. வேற ஏதாவது பிசினஸ் கிளாஸ்
பேசஞ்சர் செக்கின் பண்ணலைனா ஃபர்ஸ்ட் ப்ரிபரன்ஸ் உங்களுக்குத்தான்...
உடனே அந்த சீட் ஐ உங்களுக்கு கொடுத்துடறேன்...கொஞ்சம்
அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க சார்... எக்னாமிக் கிளாஸ் ட்ரை பண்ணுங்க சார்... “ என்று தயக்கத்துடன் இழுத்தான் ராகுல்...
“வாட்?? நான் போய் எக்னாமிக் கிளாஸ்ல போவதா? ஆர் யூ கிட்டிங் ? நான் எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா?
“ என்றான் நக்கலாக சிரித்தவாறு...
“சாரி சார்... ஐ கேன் அன்டர்ஸ்டான்ட்... பட்
இப்போதைக்கு வேற எதுவும் ஆப்சன் இல்ல சார்.. வேணும்னா நீங்க வேற எதுவும் ஏர்லைன் ட்ரை பண்ணி பாருங்க.. எங்ககிட்ட இப்போ பிசினஸ் கிளாஸ் டிக்கெட்
எதுவுமில்லை..
அட்லீஸ்ட் நீங்க நேற்றே எங்களை கான்டாக்ட்
பண்ணி இருந்தீங்கனா ஐ சுட் ஹேவ் அரேஜ்ட்..
இப்ப ப்ளைட் கிளம்ப இன்னும் சில மணி நேரம்
மட்டுமே இருப்பதால் என்னால எதுவும் பண்ண முடியலை..உங்களை மாதிரியே பிசினஸ் க்ளாஸ்
புக பண்ணி இருக்கிற மற்றவர்களும் பெரிய பெரிய ஆளுங்க சார். அவங்க கிட்ட எதுவும்
பேச முடியாது.... எக்ஸ்ட்ரீம்லி சாரி சார்... “ என்று கை கழுவினான் ராகுல்..
அதைக்கேட்டு மீண்டும் யோசித்தான் ரிஷி...
அவசரமாக அவனுடைய ஐபேட் ஐ எடுத்து அதில்
மற்ற ஏர்லைன் ஐ செக் பண்ண, எல்லாமே நீண்ட பயணமாக, வழியில் ஏதாவது இடத்தில் நின்று
மீண்டும் தொடரும் கனெக்டிங் ப்ளைட் ஆக மட்டுமே இருந்தது..
நான்ஸ்டாப் ப்ளைட்ஸ் எதுவும் இல்லை... பிரிட்டிஸ் ஏர்வேஸ் மட்டுமே டைரக்ட் அன்ட்
நான்-ஸ்டாப் ஆக லண்டன் போவது.. அதுவும் பத்து மணி நேரம் மட்டுமே டிராவல் டைம்..
அவனுக்கு இன்றே லண்டன் போக வேண்டிய
கட்டாயம் இருப்பதால் மீண்டும் தன் நெற்றிப் பொட்டில் கை வைத்து யோசித்தவன் ஏதோ
முடிவு செய்தவனாக கொஞ்சம் இறங்கி வந்து
“வெல்... மிஸ்டர் ராகுல்... எனக்கு அர்ஜெண்டா லண்டன் போய் ஆகணும்.. அதனால
அந்த எக்னாமிக் கிளாஸ் டிக்கெட் ஐ யே ரிசர்வ் பண்ணிடுங்க.. “ என்று அரைமனதாக சம்மதித்தான்..
அதைக் கேட்டு ராகுலும் மகிழ்ந்து போய்
“தேங்க்யூ சார்... தேங்க்யூ சோ மச் .. தேங்க்ஸ் ஃபார்
அண்டர்ஸ்டாண்டிங் அவர் சிச்சுவேஸன்... நான் இப்பயே புக் பண்ணிடறேன் சார்.. டிக்கெட் உங்களுக்கு இமெயில் ல வந்துரும்.. தேங்க்யூ அன்ட் ஹேவ் அ குட் ஜர்னி... "
என்று சொல்லி உரையாடலை முடித்தான்...
அவனும் நன்றி சொல்லி தன் அலைபேசியை
வைத்த ரிஷி அதன் பிறகு அவசரமாக தன் வார்ட்ரோப் ஐ திறந்து அவன் ஆடைகளை அவசரமாக அள்ளி ப்ரீப் கேஸில் போட்டான்...
மேலும் பயணத்திற்கு தேவையான மற்ற
பொருட்களையும் அவசரமாக தேடி எடுத்து பெட்டியில் அடுக்கியவன் நேரம் பார்க்க விமானத்திற்கு செல்லும் நேரம் நெருங்கி
இருந்தது..
உடனே வேகமாக மாடியிலிருந்து
இரண்டிரண்டு படிகளாக தாவி இறங்கி வந்தவன் அங்கு தயாராக காத்திருந்த காரில் ஏரி அமர்ந்தான்..
உடனே அதற்காகவே காத்திருந்த அந்த கார் ஓட்டுனரும் உடனே காரை கிளப்ப ஏர்போர்ட் போங்க
என்று முன்னால் அமர்ந்திருந்த டிரைவருக்கு
கட்டளையிட்டான்...
காரின் பின் இருக்கையில் அமர்ந்து
இருந்தவன் இருக்கையின் பின்னால் சாய்ந்து அமர்ந்தவன்
“சே... எல்லாம் இந்த விஷ்ணுவால் வந்தது...
அவன் இருந்திருந்தால் இந்நேரம் டிக்கெட்டை
முன்னாடியே ரிசர்வ் பண்ணியிருப்பான்... இப்படி நான் போய் அவர்களிடம் கெஞ்சி கொண்டு இருந்திருக்க தேவை
இருந்திருக்காது... சே...எல்லாம் என் முட்டாள்தனம்.. “ என்று பல்லை கடித்தான்...
விஷ்ணு - ரிஷியின் பெர்ஷனல்
அசிஸ்டன்ட்.. அசிஸ்டன்ட் என்பதை விட ரிஷியின் இடது கை, வலது கை எல்லாம் அவன்தான்... ரிஷியின்
தினசரி அஜென்டாவை பார்த்து கொள்வது அவன்தான்..
ரிஷி எங்கு செல்ல வேண்டும் என்றாலும்
அவனே எல்லா ஏற்பாடுகளையும் பண்ணி விடுவான்.. எந்த நேரத்துக்கு கிளம்ப வேண்டும்
எந்த ஏர்லைன் என்பது முதற்கொண்டு எல்லாத்தையும் ஏற்பாடு பண்ணி ரிஷியிடம் கொடுத்து
விடுவான்..
ரிஷி அவன் சொல்லுவதை அப்படியே பாலோ
பண்ணுவான்...அதனால் அவனுக்கு இதுவரை இந்த மாதிரி டிக்கெட் புக் பண்ண வேண்டிய
அவசியம் இருந்ததில்லை...
ஆனால் இந்த கான்ப்ரென்ஸ் ஒரு முக்கியமான கான்ப்ரென்ஸ்..
உலகத்தில் இருக்கும் எல்லா
தொழிலதிபர்களும் ஒன்றாக கூடும் கான்ப்ரென்ஸ்.. அதில் கலந்து கொண்டால் பலருடைய
தொடர்பு கிடைக்கும்.. அவன் தொழிலுக்கு அது மிகவும் வேண்டியது அவசியமானது...
இந்த கான்ப்ரென்ஸ் ஐ பற்றி விஷ்ணு
சொன்னதும் முதலில் ஆர்வமானான் ரிஷி.. ஆனால் அது நடைபெறும் இடம் லண்டன் என்று
தெரிந்ததும் அதிர்ந்து போனான்..
ஏனோ லண்டன் என்ற பெயரை கேட்டாலே அவன்
உள்ளே பெரும் வலி வேதனை பரவும்... அவன் உடலின் ஒவ்வொரு செல்லும் வலியில்
துடிக்கும்...
இதற்கு அவன் வாழ்வில் பாதி நாட்களை
கழித்தது லண்டனில் தான்..
லண்டனின் ஒவ்வொரு தெருவும் ஒவ்வொரு கட்டிடமும் அவனுக்கு
அத்துபடி.. அவன் பள்ளி படிப்பு, அதன் பிறகு மேல் படிப்பு, காலேஜ் மற்றும் எம்.பி.ஏ எல்லாம் படித்தது லண்டனில் தான்..
ஏன் அவன் படித்து முடித்ததும் தொழில்
பழக ஆரம்பித்ததும் லண்டனில்தான்..
தானாகவே ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து தன்
கடின உழைப்பால் அதை வளர்த்து பெரிய நிலைக்கு கொண்டு வந்த பிறகே தன் தந்தையின்
தொழில்களில் பங்கெடுத்து கொள்ள ஆரம்பித்தான்...
அப்படி அங்கேயே சுத்தி கொண்டிருந்தவன்
இப்பொழுது லண்டனில் கால் வைக்க வேண்டும்
என்றாலே எட்டிக்காயாக கசந்து வழிந்தது அவன் மனம்..
அதனாலயே இந்த கான்ப்ரென்ஸ் க்கு போவதா?
வேண்டாமா என்று ஆசிலேஸனில் இருந்ததால் விஷ்ணுவிடம் டிக்கெட் புக் பண்ண
சொல்லவில்லை...
ஆனால் அவன் உள்ளே ஏதோ ஒன்று இந்த கான்ப்ரென்ஸ்
க்கு போய் வா.. உனக்கு நல்லது நடக்கும்...
என்று அடிக்கடி சொல்லி கொண்டே இருந்தது...
ரிஷி எப்பவுமே தன்னுடைய ஆழ்மனம், உள்மனம் சொல்லுவதை கேட்டு நடப்பவன்...
டெசிசன் எடுக்க முடியாத பல நேரங்களில் அமைதியாக அமர்ந்து ஆழ்ந்து யோசித்தாலே அவனுக்கு ஓரளவுக்கு விடை கிடைத்து விடும்..
அது சரியானதாகவும் இருக்கும்... அதன்படி நேற்று
இந்த கான்ப்ரென்ஸ் க்கு போவதா வேண்டாமா என்று ஆழ்ந்து யோசிக்க, அவன் ஆழ்மனமோ மீண்டும்
“சென்று வா... உன் வாழ்க்கையின் திருப்பு முனை அங்கே
இருக்கு...” என்று சொல்ல, அதை கேட்டு ஒரு வழியாக தன்னை தேற்றி
கொண்டவன் இந்த கான்ப்ரென்ஸ் க்கான அனுமதி சீட் ஐ நேற்றே புக் பண்ணி விட்டான்...
அடுத்து பயணத்திற்கான விமான டிக்கெட்டையும்
நேற்றே முன்பதிவு செய்து இருக்க வேண்டும்....
ஆனால் ரிஷி நேற்று முழுவதுமே பிஸியாக
இருந்ததில் டிக்கெட் புக் பண்ண மறந்து விட்டான்..
அவனுடைய உதவியாளன் விஷ்ணு அவன் குடும்பத்தில் ஒரு பர்சனல் எமர்ஜென்சி என்று
மூன்று நாட்கள் விடுமுறையில் சென்றிருந்தான்..அவன் இல்லாததால் ரிஷி க்கே ஒரு கை
உடைந்த மாதிரி ஆகிவிட்டது..
எல்லாவற்றிற்குமே விஷ்ணுவை நம்பி இருந்ததால் இப்பொழுது
அவன் இல்லாமல் போக ஒவ்வொன்றையும் அவனே பார்த்து பார்த்து செய்ய வேண்டியதாக இருந்தது..
இந்த டிக்கெட் புக் பண்ணுவதும் அதில் ஒன்று... இதை எப்படியோ மறந்திருக்க டிராவல் பண்ணும் சில மணி
நேரம் முன்புதான் டிக்கெட் புக் பண்ணாதது ஞாபகம் வந்தது..
அதனால் தான் உடனே அந்த ஏர்லைன்ஸ் உடன் தொடர்பு கொண்டு
டிக்கெட் புக் பண்ண முயன்றான்..
ஆனால் அவன் கெட்ட நேரம் டிக்கெட் எதுவும் இல்லை
என்று கையை விரித்து விட்டனர்..
“கெட்டதிலும் ஒரு நல்லதாக அட்லீஸ்ட் எக்னாமிக் கிளாஸ் டிக்கெட் ஆவது
இருந்ததே..!! ஒரு பத்து மணி நேரம் தான் பயணம்.. அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்..!! “ என்று பெருமூச்சு
விட்டவன் தன் கழுத்தில் இருந்த டை ஐ இறக்கி விட்டு காரின் பின் இருக்கையில் நன்றாக
சாய்ந்து அமர்ந்து கொண்டு கண்களை மூடிக் கொண்டான்...
எப்படி உறங்கினான் என்று தெரியவில்லை.. அடுத்து
“சார்... ஏர்போர்ட் வந்து விட்டது... “ என்று டிரைவரின் குரல் கேட்டு திடுக்கிட்டு
விழித்தான்..
ஏர்போர்ட் வந்து விட்டதை உணர்ந்ததும் தன் டை ஐ
சரி பண்ணி கொண்டு கலைந்திருந்த தன் தலைமுடியை சரி செய்து கொண்டும் தன் ஆடையை ஒரு
முறை நீவி விட்டு கொண்டு, கதவைத் திறந்து கீழே இறங்க, அந்த ட்ரைவர் அவன் சூட்கேசை எடுத்துக் கொண்டு
விமான நிலையத்தின் நுழைவாயில் வரைக்கும் வந்தான்...
உள்ளே செல்லும் நுழைவாயிலில் அவனுடைய சூட்கேசை
அவன் கையில் கொடுக்க அவனும் அதை வாங்கிக்கொண்டு ஒரு தலையசைப்புடன் ட்ரைவரிடம்
விடைபெற்று உள்ளே சென்றான்..
செக்கின் பண்ணும் இடத்தில் இவனைக் கண்டதும் ராஜ மரியாதை தான்.. மற்றவர்கள்
வரிசையில் நின்று கொண்டிருக்க, அவனை
மட்டும் வரிசையில் நிற்க வைக்காமல் உடனேயே செக்கின் முடித்து அவனை அனுப்பி
வைத்தனர்..
எல்லா ஃபார்மாலிட்டீஸ் முடிந்து அந்த விமானம்
புறப்படும் கேட்டுக்கு வரவும் அதே நேரம் போர்டிங் ஸ்டார்ட் ஆகி இருந்தது.. அவன் பிரிமியர்
கஸ்டமர் என்பதால் அவனை முதலாவதாகவே அனுப்பி வைத்தனர்..
விமானத்தில் உள்ளே நுழைய அங்கே இருந்த தலைமை
ஏர்ஹோஸ்டஸ் ரஜிதா அவனை பார்த்து புன்னகைத்து
“ஹவ் ஆர் யூ ரிஷி டார்லிங்..? இட்ஸ் லாங் டைம்.. " என்று வாயை இரண்டு கோட்டுக்கும் இழுத்து சிரித்தாள்..
ரிஷியும் மென்மையாக புன்னகைத்து அவனுடைய
போர்டிங் பாஸை நீட்ட அதை வாங்கி பார்த்தவள் அதிர்ந்து போனாள்..
“என்னாச்சு டார்லிங். ? நீங்க போய் எக்னாமிக் கிளாஸ்ல டிராவல்
பண்றீங்க? “ என்றாள் அதிர்ச்சியாக பார்த்து..
“ஹா ஹா ஹா ஏன் ரஜிதா ? நான் எல்லாம் எக்னாமிக் கிளாஸ்ல டிராவல் பண்ண கூடாதுன்னு
எதுவும் ரூல்ஸ் இருக்கா என்ன ? “ என்று குறும்பாக சிரித்து புருவத்தை உயர்த்தினான்..
“அதற்காக இல்ல ரிஷி டார்லிங்.. வந்து.....சாரி..... “ என்று இழுத்தாள்..
“இட்ஸ் ஓகே... இட்ஸ் ஜஸ்ட் பார் அ ஃபன் அன்ட்
சேன்ஜ்... ஐ அம் ஃபைன்..டேக் கேர்.. “ என்று சொல்லி குறும்பாக கண் சிமிட்டி புன்னகைத்து அவள் கன்னம்
தட்டி நகர்ந்தான்..
அவன் கை விரல் அவள் கன்னத்தில் பட்டதும் அவளும்
பூரித்து போய் மீண்டும் பெரிதாக புன்னகைத்து அவன் செல்ல வேண்டிய பகுதிக்கு கை காட்ட, அவனும் மீண்டும் கண் சிமிட்டி விட்டு அவள்
கை காட்டிய பகுதிக்கு சென்றான்...
அந்த விமானத்தில் லாவண்டரி பகுதியை ஒட்டி
இருந்த கடைசி வரிசையில் இரண்டு இருக்கைகள்
மட்டுமே இருக்க, அதில் ஒன்று அவனுடையது...
மற்ற வரிசையில் மூன்று இருக்கைகள்.. கொஞ்சம் நன்றாக இடைவெளி விட்டு இருக்கும்...
மேலும் காலை நீட்டி கொள்ள கொஞ்சம் வசதியாகவும் இருக்கும்..
ஆனால் இந்த கடைசி வரிசையில் இரு இருக்கைகள்
மற்றும் அதிகமாக இடைவெளி இல்லாமல் குறுகலாக இருக்கும்....
அவனுடைய நீண்ட கால்களை குறுக்கி அமர்ந்து அதில்
பத்து மணி நேரம் பயணம் செய்வது ரொம்பவுமே கடினம்..
எப்பொழுதும் பிசினஸ் க்ளாஸில் வசதியாக படுத்து
கொண்டே பயணம் செய்தவனுக்கு அந்த குறுகிய சீட் ஐ கண்டதும் முகம் சுளித்தான்...
அதுவும் அவனுக்கு அலாட் ஆகி இருந்தது வின்டோ
சீட்... அவனுடைய நீண்ட கால்களை அந்த இருக்கையில் மடக்கி வைத்து அமர்வது ரொம்பவுமே
கஷ்டமாகும்..
தன் முகத்தை சுளித்து திரும்பி விமான
பணிப்பெண்கள் இருக்கும் பகுதியில் பார்க்க அவன் பார்வைக்காகவே காத்துக்
கொண்டிருந்த பணிப்பெண்களில் ஒருத்தி வேகமாக அவன் அருகில் ஓடி வந்தாள்..
“சாரி சார்... இந்த சீட் தான் உங்களுக்கு அலாட் ஆகி இருக்கு.. பிசினஸ்
கிளாஸ் எல்லாமே செக்கின் ஆயாச்சு.. கேன்சலேஸன் எதுவும் இல்லை.. இப் யூ டோன்ட்
மைன்ட், கொஞ்ச நேரம் இதுல அட்ஜஸ்ட்
பண்ணிக்கோங்க..
எக்னாமிக் கிளாஸ் ல வேற நல்ல ஒரு இருக்கையாக நான் பார்த்து தருகிறேன்..
அதுவரைக்கும் நீங்க கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க...ப்ளீஸ்... “ என்று குழைந்தாள்..
அவனுக்கும் வேற வழியில்லாமல் தன் தோள்களை
குலுக்கியவன் அவனுடைய பொருட்களை மேல வைத்துவிட்டு அவனுக்கு ஒதுக்கி இருந்த அந்த ஜன்னலை
ஒட்டி இருந்த இருக்கையில் அமர்ந்தான்..
எப்பொழுதும் பிசினஸ் கிளாஸ் இருக்கையில் காலை
நீட்டி வசதியாக அமர்ந்து கொண்டு பயணம் செய்தவனுக்கு இந்த சின்ன இருக்கையில்
கால்களை குறுக்கிக்கொண்டு அமர்ந்து இருப்பது ரொம்பவே கஷ்டமாக இருந்தது
ஆனாலும் தன் கஷ்டத்தை மறைத்துக் கொண்டு இயல்பாக
கட்டிக் கொண்டான்.. அந்த பணிப்பெண் ம்
ஓடிப்போய் பிசினஸ் க்ளாஸ் பயணிகளுக்கு வந்ததும் கொடுக்கும் வெல்கம் ட்ரிங் ஐ கொண்டு
வந்து ரிஷியிடம் கொடுத்துவிட்டு
“வேறு ஏதாவது உதவி வேண்டும் என்றால் தயங்காமல்
கேளுங்கள் சார்.. என்ஜாய் யுவர் ஜர்னி... “ என்று புன்னகையை காட்டிவிட்டு மற்ற பயணிகளை
கவனிக்க சென்று விட்டாள்..
ரிஷியும் புன்னகைத்து பின் அந்த குளிர்பானத்தை
பருகியவன் அதை முன்னால் இருந்த ட்ரேயில் வைத்து விட்டு இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவன் தலையை பின் இருக்கையில் வைத்து ஓய்வாக சாய்ந்து அமர்ந்து கொண்டு கண்களை மூடிக்
கொண்டான்...
மூடிய கண்களில் அவனையும் அறியாமல் அவன் அன்னை
கஸ்தூரியும் அவன் தந்தை ரவிவர்மா முகமும் கண் முன்னே வந்தது...
கடைசியாக அவர்கள் சிரித்த முகமாக அவனிடம்
விடைபெற்று இதே விமானத்தில் தான் லண்டன்
கிளம்பிச் சென்றது ஞாபகம் வந்தது... ஆனால் அதன் பிறகு அவர்களை பார்க்க முடியாமல்
பேச முடியாமல் போய்விட்டது.
அவர்கள் முகத்தை கூட அவனால் திரும்ப பார்க்க முடியவில்லை..
அந்த நினைவு மீண்டும் அவன் இதயத்தை
கசக்கிப் பிழிந்தது.. மனதிலே பெரும் வேதனையும்
வலியும் சேர்ந்து கொள்ள இன்னும் கண்களை இறுக்க மூடிக் கொண்டான்..
மூடிய கண்கள் உள்ளேயும் அவன் பெற்றோர்களின்
முகம் வந்து சிரிக்க அவன் உடல் விரைக்க ஆரம்பித்தது.. அந்த விமானத்தின் உள்ளே
இருந்த ஏ.சி யிலும் அவன் உள்ளுக்குள் வேர்த்து கொட்ட ஆரம்பித்தது...
கைகள் நடுங்க, உதடு துடிக்க,
பெரும் வலியும் வேதனையும் அவன் இதயத்தை சூழ்ந்தது....
இந்த மாதிரி தனிமையாக இருக்கும் நேரங்களில்
மட்டும் அவன் மனம் அவன் பெற்றோர்களை நினைத்து
அமைதி இழந்து தவிக்கும்.. அதனாலேயே அவன் முடிந்தவரை
தன்னை தனிமைப்படுத்தி கொள்வதில்லை..
எப்பொழுதுமே அவனை பிஸியாக வைத்துக் கொள்வான் கடந்த ஒரு வருடமாகவே..
இரவு பகலாக சரியாக உறக்கம் கூட இல்லாமல், இல்லாத வேலை எல்லாம் இழுத்துப் போட்டு
செய்ய ஓரளவிற்கு அவன் வேதனையிலிருந்து வெளிவந்தான்...
அவன் கடின உழைப்பின பலனாக அவன் தொழிலில் நல்ல
முன்னேற்றம்.. அதுவே பிடித்துப்போக நெருப்புக் கோழியை போல எப்பொழுதுமே தன்னை
எதிலாவது நுழைத்து மறைத்துக் கொண்டு இருக்க பழகிக் கொண்டான்..
அப்படி இருந்தவன் இன்று மீண்டும் ஒரு தனிமை
கிடைக்க அதுவும் அவன் வெறுக்கும் லண்டனே செல்ல வேண்டும் என்று வந்து விட, விமானத்தில் அமர்ந்த அந்த நிமிட
நேரத்தில் அவன் எண்ணங்கள் அவன் பெற்றோரை சுற்றிவர ஆரம்பித்தது...
அதுவரை மறைந்திருந்த வலியும் வேதனையும்
மீண்டும் தலை தூக்க ஆரம்பித்தது.. எத்தனை
முயன்றும் முடியாமல் கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு கண்களை இன்னுமே இறுக்க
மூடிக் கொண்டான் ரிஷி...
அப்பொழுது எக்ஸ்க்யூஸ் மீ என்ற குரல் சற்று
தொலைவில் கேட்க அந்தக் குரல் அவன் செவி வழி சென்று அவன் மனதில் இருந்த காயத்திற்கு
மயிலிறகால் வருடுவதை போல இருந்தது அவனுக்கு...
ஆனாலும் அது ஏதோ ஒரு கற்பனை என்று இன்னுமே
கண்களை இறுக்க மூடிக்கொண்டு அப்படியே இருக்கையில் சாய்ந்திருந்தான்..
சிறிது நேரத்தில் மீண்டும் அதே குரல் சற்று
அருகில் கேட்க, இப்பொழுதும் அந்த குரல் அவன் உள்ளே சென்று அவன் இதயத்தை தீண்டியது.. கூடவே உடலெல்லாம் அந்த ஒலி ஊடுருவி சென்று
பரவியது..
அந்த இனிய தேனொழுகும் குரல் அவன் உள்ளே சென்று பல
மாற்றங்கள் நிகழ்வதை போல இருந்தது
ரிஷிக்கு...
அதுவரை அவன் மனதை கசக்கிப் பிழிந்த அந்த
வலியும் வேதனையும் உடனே மட்டுப் பட்டிருந்ததை போல இருந்தது.. கண்களை மூடியபடியே அந்த
குரலுக்காக மீண்டும் காத்துக் கொண்டிருக்க, அதன் பிறகு அந்த குரல் கேட்கவில்லை..
சற்றே ஏமாற்றத்துடன் எல்லாம் கற்பனை என்று
எண்ணியவன் முன்பு அவன் கேட்ட குரலை நினைவுபடுத்த முயல அவ்வளவு எளிதாக அதை நினைவில்
அவனால் கொண்டுவர முடியவில்லை...
மீண்டும் அந்த குரல் கேட்காதா என எதிர்பார்த்திருக்க
அவனை ஏமாற்றாமல் மீண்டும் அதே குரல் இன்னுமே சற்று அருகில் கேட்டது...
இந்த முறை அவசரமாக கண்களை திறந்து அந்த குரல் வந்த திசையில் ஆர்வத்துடன் பார்த்தான்
ரிஷி..
விமானத்தின் நுழைவாயிலில் இருந்து பின்புறமாக
வந்து கொண்டிருந்தாள் அவள்.. உள்ளுக்குள் ஏதோ ஒன்று உந்த அவள் முகத்தை உற்றுப் பார்த்தான் ரிஷி...
பால் நிலாவைப் போல வெள்ளை வெளேரென்று துடைத்து
வைத்த பளிச்சென்ற முகமும் குழந்தைத்தனமும் வெகுளித்தனம் மாறாத திராட்சை போன்ற
உருண்டு திரண்டிருந்த கருவிழிகள், காஷ்மீர் ஆப்பிள் போன்ற திரண்டு வழுவழுக்கும் கன்னங்கள்.செர்ரீ போல
திரண்ட சிவந்த இதழ்கள் என்று அவள் முகத்தின் ஒவ்வொரு பாகமாக ஆராய்ந்து பார்த்து
கொண்டிருந்தான் ரிஷி அவனையும் அறியாமல்...
கையில் ஒரு பேக்
பேக் ஐ வைத்து கொண்டு அந்த நடை பாதியின் இரு பக்கமும் இருந்த இருக்கையில்
அமர்ந்திருந்தவர்கள் மீது மோதி விடாமல் தன் மெல்லிய உடலை இன்னுமே குறுக்கி கொண்டு தயக்கத்துடன்
மெல்ல அடி எடுத்து வைத்து நடந்து வந்து கொண்டிருந்தாள் அவள்...
யாராவது
இருக்கையில் இருந்து தள்ளி நடைபாதையை ஒட்டி அமர்ந்து இருந்தால் எக்ஸ்க்யூஸ் மீ என்று
சொல்லி அவர்க்ளை கொஞ்சம் தள்ளி நகர்ந்து
அமர சொல்லி யார் மேலயும் இடித்து கொள்ளாமல் கவனத்துடன் நடந்து வந்து
கொண்டிருந்தாள்....
முன்பு அவள்
குரலை கேட்டதும் மட்டுபட்ட அவனுடைய வலியும் வேதனையும் இப்பொழுது அவளின் அந்த
குழந்தைதனமான முகத்தை காணவும் சுத்தமாக மறைந்து விட்டது....
கூடவே அவள்
குரலும் அவள் முகமும் அவன் ஆழ்மனதில் பதிந்து விட்டது...
தன் பையை ஒரு
கையில் பிடித்து மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டு மற்றொரு கையில் வைத்திருந்த போர்டிங் பாஸ் ல் இருந்த இருக்கையின் எண்ணை பார்த்து அந்த விமானத்தில் வரிசையில் இருந்த இருக்கையின் மேலே போட்டிருந்த
இருக்கையின் எண்ணையும் சரி பார்த்தவாறு வந்து கொண்டிருந்தாள்..
அவளை கண்டதும்
அவனை அறியாமலயே அவன் இறுகிய அழுத்தமான இதழ்கள் இறுக்கம் தளர்ந்து புன்னகையை தவழ
விட, முன்னால் வந்து கொண்டிருந்தவளை மீண்டும்
ஆழ்ந்து பார்த்தான் ரிஷி...
பட்டு போன்ற
பொன்னான மெல்லிய மேனி...அந்த மேனிக்கு பொருத்தமாக உடலை தழுவி இருந்தது அந்த
காட்டன் சேலை...சேலையை கண்டதும் அவன் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தன...
பொதுவாக
விமானத்தில் பயணம் செய்யும்பொழுது வசதியாக இருக்க வேண்டி யாரும் இந்த மாதிரி
சேலையை சுற்றி கொண்டு வருவதில்லை என்று கண்டிருந்தான்...
வயதான பாட்டிகள்
கூட ஃபாரின் போற குஷியில் ஒரு சல்வாரை வாங்கி மாட்டி கொண்டு பெருமையாக பூரிப்புடன்
வருவர்...ஆனால் இவளோ சிறிதும் தயங்காமல் அலட்டி கொள்ளாமல் அந்த புடவையில் கேஷுவலாக
வந்து இருந்தாள்..
கூடவே அவள்
முன்னே சரிந்து தொங்கிய நீண்ட ஜடையும் அவள் பின்னலில் நீளமாக வைத்திருந்த மல்லிகை சரம் அவள் ஜடையோடு
சேர்ந்து முன்னால் தொங்கி கொண்டிருக்க, அவளின் அந்த
தோற்றம் இன்னும் அவனை கவர்ந்தது...
மீண்டும் அவள்
முகத்தை ஆழ்ந்து ஆர்வத்துடன் பார்க்க, எந்த மேக்கப்
ம் இல்லாமல் பளிச்சென்று இருந்த முகம்..
வில்லாக
வளைந்திருந்த அடர்த்தியான நேர்த்தியான திருத்திய புருவங்கள். புருவத்தின் நடுவில்
சிறு பொட்டும் அதற்கு மேல் கீற்றாக திருநீறும் வைத்திருக்க,
அவளை கண்டவன்
விஷ்ணு அடிக்கடி
சொல்லும் குடும்ப குத்துவிளக்கு என்றது நினைவு வந்தது...
“ஓஹோ... இது
தான் குடும்ப குத்துவிளக்கு என்பதா? இந்த குத்து
விளக்கு ஏன் இந்த கெட்டப் லயே லண்டனுக்கு வருதாம் ? “
என்று மனதுக்குள் கமெண்ட் அடித்து
சிரித்தவன் தொடர்ந்து அவளையே ரசித்து பார்த்து கொண்டிருந்தான்....
அவளோ ஒவ்வொரு
வரிசையிலும் நின்று அவள் கையிலிருந்த போர்டிங் பாஸ் காட்டிய இருக்கை
எண்ணையும் அந்த வரிசையில் இருந்த இருக்கையின் எண்ணையும் சரி பார்த்தபடியே வந்து
கொண்டிருந்தாள்...
எதேச்சையாக ரிஷி
அவள் கண்களை உற்று பார்க்க, அதில் அப்பட்டமான மிரட்சி தெரிந்தது..
ஏதோ வழி தெரியாத
காட்டில் மாட்டிக் கொண்ட புள்ளிமான் குட்டியைப் போல அவ்வளவு பெரிய விமானத்தில்
அவள் வந்து தெரியாமல் மாட்டிக் கொண்டதை போல கண்களில் மிரட்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்..
அதை கண்டவனுக்கு
இன்னதென்று சொல்ல முடியாது உணர்வு தோன்றியது..
துணைக்கு யாரும்
இல்லையே என்று தவிக்கும் அவளை தோளோடு சேர்த்து தன்னோடு இறுக்க அணைத்து அவளுடைய மிரட்சியை, பயத்தை போக்க வேண்டும் போல
துடித்தது அவன் உள்ளே...
அவள் தோளோடு
தோள் சேர்த்து அணைத்துக் கொண்டு
“உனக்கு நான்
இருக்கிறேன்.. பயப்படாதே மான்குட்டி... “ என்று சொல்ல வேண்டும் போல தவித்தது
அவன் உள்ளே..
அப்பொழுதுதான்
கவனித்தான்.. அவன் அருகில் இருந்த இருக்கை இன்னும் காலியாக இருந்தது..அடுத்த நொடி
அவனையும் அறியாமல் அவள் வந்து தன் அருகில் அமர வேண்டும் என ஆசைப்பட்டது அவன்
மனம்...
அவசரமாக அவனுக்கு
முன்னால் பார்வையிட அவனுக்கு முன் சில இருக்கைகளும் காலியாக இருந்தன..
“அப்படி என்றால்
அவள் அவனுக்கு முன்னால் இருக்கும்
இருக்கையில் கூட அமரலாம்.. “ என்று அவன்
அறிவு ஒரு பக்கம் எடுத்து சொல்ல ஏனோ அதை
அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை...
எப்படியாவது அவள்
தன் அருகில் வந்து அமர வேண்டும் என்று உரு
போட ஆரம்பித்தான்.. அவன் பார்வையும் அவளையே தான் தொடர்ந்து கொண்டே இருந்தது..
இப்பொழுது அந்த பெண் ஒவ்வொரு வரிசையாக தாண்டி வரும் பொழுதும் ரிஷியின் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது..
வோர்ல்ட் கப்
பைனல் கிரிக்கெட் மேட்ச் ல் கடைசி பந்தில் நான்கு ரன் எடுத்தால் மட்டும் இந்தியா ஜெயிக்க
முடியும் என்று இருக்கும்பொழுது கடைசி
பந்தை எரிய அந்த பவுலர் ஓடி வரும்பொழுதும் அதை எதிர் கொண்டு அடிக்க காத்திருக்கும்
பேட்ஸ் மேனையும் மாறி மாறி பார்த்தே பாதி பேருக்கு இதயம் அடித்து கொள்ளும்..
ரசிகர்கள் எல்லாம்
இருக்கையின் நுனியில் வந்து அமர்ந்து
கொண்டு திக் திக் என்று அடித்து கொள்ளும்
இதயத்தை கையால் பிடித்து கொண்டு திகிலுடன் பார்த்து கொண்டிருப்பர்..
அதே போல
உணர்ந்தான் ரிஷி இப்பொழுது...
அவள், அந்த சேலை கட்டிய தேவதை ஒவ்வொரு
வரிசையையும் கடந்து வரும் பொழுது எல்லாம் அவன் இதயம் தாறுமாறாக அடித்து கொண்டது..
அவள் மறந்தும்
மற்ற இருக்கையில் அமர்ந்து விடக்கூடாது என்று அவன் இதயம் இன்னும் வேகமாக
துடித்தது...
அடுத்த நொடி அவனை
நினைத்து அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது..
எத்தனையோ பெரிய
பெரிய டீல்களையெல்லாம் கேஷுவலாக சர்வ சாதாரணமாக ஏற்றுக் கொண்டு வெற்றி கண்டிருக்கிறான்..
அப்பொழுதெல்லாம்
கூட அவன் மனம் அவன் அப்ளை பண்ணி இருந்த பெரிய பெரிய கான்ட்ராக்ட் முடிவை
எதிர்பார்த்து இப்படி அடித்துக்
கொண்டதில்லை..
“வந்தால் எனக்கு
லாபம்.. வராவிட்டால் அவர்களுக்கு நஷ்டம்.. “ என்று தோளை குலுக்கி கொண்டு இலகுவாக
எதிர்கொண்டான்...
ஆனால் இன்று யார் என்றே தெரியாத இந்த பெண் தன்னருகில் வந்து அமரவேண்டும் என்று
ஏன் அவன் மனம், அவன் இதயம் இப்படி அடித்துக் கொள்கிறது என்று
புரியவில்லை..
அவனை நினைத்தே
அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது ரிஷிக்கு..
ஆனாலும் அவன்
மனம் அதையெல்லாம் ஆராயும் மனநிலையில் இல்லை.. அவன் கண்கள் மீண்டும் அவளை ஆர்வத்துடன் தொடர, அந்த பெண்ணோ இன்னும் சற்றே
அருகில் வந்து இருந்தாள்..
அடுத்த இன்னும் இரண்டு
வரிசைகள் மட்டும்தான் அவன் இருக்கையை அடைய..
இப்பொழுதோ அவன் மனம் இன்னும் வேகமாக துடித்தது..
எப்படியாவது
அந்த இடத்தையும் தாண்டி தன் அருகில் வந்துவிடவேண்டும் என்று உள் மனம் அடித்துக் கொண்டது....
ஆனால் அவனை ஏமாற்றும்
விதமாக அந்த பெண் அவன் முன்னால் இருந்த வரிசையில் நின்று கொண்டு அந்த இருக்கையின் எண்ணை
உற்றுப் பார்த்தாள்..
அதைக் கண்டதும் அவள்
கண்கள் பளிச்சிட, மீண்டும் ஒருமுறை தன் கையில் இருந்த
போர்டிங் பாஸில் இருந்த எண்ணை சரிபார்த்தவள் அங்கயே நின்று கொண்டு அவன் முன்னால்
இருந்த அந்த இருக்கையில் அமர ஆயத்தமானாள்..
அதைக் கண்ட
ரிஷிக்கு எதுவோ உடைந்ததை போல இருந்தது... எதுலயோ தோற்று விட்டது போல ஒரு உணர்வு அவனை ஆக்ரமித்தது...
அதுவரை அவள்
உள்ளே ஆர்ப்பரித்து பொங்கி வந்த அந்த சந்தோஷ அலை, கரையை அடைந்த அலைபோல உடனே மறைந்து போனது..
அவள் தன்
அருகில் வரவில்லை என்று உணர்ந்ததும் ஏமாந்து போனவன் இருக்கையின் நுனியில் அமர்ந்து
இருந்தவன் எரிச்சலுடன் இப்பொழுது பின்னால்
நகர்ந்து தன் இருக்கையின் பின்னால்
சாய்ந்து அமர்ந்து கொண்டான்..
தன் கண்களை
மீண்டும் இறுக்கி மூடிக் கொண்டான்
தற்காலிகமாக மறைந்திருந்த வலியும் வேதனையும் மீண்டும் அவனை
தாக்க ஆரம்பித்தது இப்பொழுது...
முன்பு
இருந்ததை விட இப்ப இருக்கும் வேதனை இன்னும்
அதிகமாக இருந்தது... காரணம் தான் தெரியவில்லை.. ஆனாலும் சிறிது நேரம் கண் மூடி உடலை
விரைத்து கொண்டு அமர்ந்து இருக்க, திடீரென்று அவன் இருக்கையின் அருகில்
அரவம் கேட்டது...
கூடவே தென்றல்
வீசுவதை போல மெல்லிய தென்றல் அவன் உடலை தீண்ட, இனம்புரியாத
ஒரு வாசம் அவன் நாசியை தீண்டி சென்றது...
அந்த வாசம், நாசி வழியாக அவன் உள்ளே
சென்று அவன் வலியை வேதனையை உடனே
கட்டுப்படுத்தியது.. அவன் இதயத்தின் வலிக்கு மருந்து இட்டதை போல அந்த வாசம் அவனை அமைதி
படுத்தியது..
“என்ன இது புது
வாசம்? “ என்று மெல்ல கண்களை திறந்து பார்க்க அவனுடைய
அந்த சேலை கட்டிய தேவதை இப்பொழுது அவன் இருக்கையின் அருகே நின்று கொண்டிருந்தாள்..
அதை கண்டு அதிசயத்தில் திடுக்கிட்டவன் ஒரு வேளை இது கனவோ என்று கண்களை
கசக்கி கொண்டு மீண்டும் கண்களை ஒரு நிலைப்படுத்தி
உற்றுப் பார்க்க அவள் தான் அவளே தான்..
சற்று முன்னால் அவன்
பார்த்து ரசித்து அவள் தன் அருகில் அமரவில்லை என்று ஏமாந்து போன அதே சேலை கட்டிய
தேவதை...மான்குட்டி...
இவன் இருக்கையின்
அருகில் நின்று கொண்டு மேலே இருந்த கேபினில் அவளுடைய கையிலிருந்த பையை வைப்பதற்காக
இடம் தேடிக் கொண்டிருந்தாள்..
அதை கண்டு
தன்னையே ஒரு முறை கிள்ளி பார்த்து கொண்டவன் உள்ளுக்குள் யாஹூ....
என்று ஆர்பரித்து துள்ளி குதித்து மீண்டும் ஆர்வத்துடன் அந்த பெண்ணையே பார்த்துக் கொண்டிருந்தான்...
இவன் எதிர்பாராத விதமாக அவள் தன் கைகளை உயர்த்தி நுனிக்காலில் நின்று கொண்டு
அவள் கையில் இருந்த பையை மேலே
வைக்க முயன்று கொண்டிருந்தாள்...
அவள் இரு
கையையும் மேலே தூக்கிய விதத்தில் அவளுடைய இடையை மறைத்திருந்த புடவை விலகி அவளின்
மெல்லிய வெண்ணிற வழுவழுவென்றிருந்த இடை அவனின் பார்வைக்கு வந்தது...
அதைக்கண்டு
அப்படியே திகைத்து நின்றான் ரிஷி..
அதற்கும் மேலாக
அவள் இன்னும் கொஞ்சம் எக்கி அந்த பையை வைத்து கொண்டிருக்க இப்பொழுது அவன் பார்வை அவளின் இடை தாண்டி அதற்கு மேலே சென்றது...
அவளின் வனப்பான வரி
வடிவமான அவளின் பெண்மை மிக அருகில் காட்சி
தர, அதை கண்டவன் அப்படியே உறைந்து போனான்...
இந்த மாதிரி
அடுத்த பெண்ணை ரசித்து பார்ப்பது தவறு என்று அவன் அறிவு அவசரமாக எடுத்துரைத்தாலும்
அவன் மனம் அதை சட்டை செய்யவில்லை
அவன் உள்ளே
இதுவரை உறங்கி கொண்டிருந்த ஆண்மை விழித்து கொள்ள, இயற்கையின் விதிப்படி பெண்ணை கண்டால் மயங்கி
கிறங்கி ரசிக்கும் ஆண்களுக்கே உரித்தான அந்த பாவனை வந்து சேர்ந்தது அவன் கண்களில்...
இமைக்க மறந்து
அவளையும் அவள் தந்த காட்சியையும் ரசித்து கொண்டிருந்தான் அவனையும் மீறி..
அவள் எக்கி
கொண்டு நிற்பதை கண்ட விமான பணிப்பெண் விரைந்து வந்து அவளுக்கு உதவி செய்ய அந்த
பெண்ணும் தன் கைகளை மடக்கி கொண்டு அவளுக்கு நன்றி சொன்னாள்..
ரிஷிக்கு
அப்பொழுதும் அவன் பார்வையை அவளிடம் இருந்து விலக்கி கொள்ள முடியவில்லை.. முயன்று கட்டு படுத்தி அவன் பார்வையை அவளிடம் இருந்து
பிடித்து இழுத்து ஜன்னலின் பக்கமாக மாற்றி கொண்டான்..
அடுத்து அந்த
பெண் எங்கே அமரப் போகிறாள் என்று ஓரக்கண்ணால் பார்க்க அவளோ இருக்கையில் அமராமல்
ரிஷி அமர்ந்து இருந்த இருக்கையையே ஆசையுடன் பார்த்து கொண்டிருந்தாள்...
“எதற்காக இங்கே
பார்க்கிறாள்? “ என்று அவசரமாக யோசித்தவன் அவன் அமர்ந்து
இருப்பது ஜன்னல் ஓர இருக்கை என்பது உறைக்க,
“ஒருவேளை இந்த
சீட் வேண்டும் என்றுதான் அப்படி பார்க்கிறாளோ? அப்படி என்றால் அவளே வாய் திறந்து
கேட்கட்டும்...!! “ என்று உள்ளுக்குள் சந்தோஷமாக சிரித்து
கொண்டே சில நொடிகள் அமைதியாக இருந்தான்..
ஆனால் அந்த
பெண்ணோ இவனிடம் எதுவும் கேட்காமல் அவன் இருக்கையையே ஏக்கத்துடன் பார்த்து
கொண்டிருக்க, அதற்குமேல் பொறுக்க முடியாமல் அவள் புறம்
திரும்பியவன்
"உங்களுக்கு
இந்த சீட் வேண்டுமா? " என்றான் நேரடியாக...
அதை கேட்டதும்
அவள் கண்கள் பெரிதாக மலர்ந்தது...
ஹ்ம்ம்ம் என்று
தலையை மட்டும் ஆட்டினாள்...
"நோ
ப்ராப்ளம்.. நீங்க இங்க உட்கார்ந்துக்கங்க... " என்றவன் அவன் அமர்ந்து இருந்த
இருக்கையில் இருந்து எழுந்து மாறி முதல் இருக்கையில் அமர்ந்து கொள்ள, அவளோ இப்பொழுது அவனை தாண்டி அடுத்த இருக்கைக்கு செல்ல வேண்டும்...
அவனை எப்படி
தாண்டி செல்வது என்று அவசரமாக யோசிக்க அவனோ “பார்க்கலாம்... இந்த மான்குட்டி இப்ப எப்படி போகிறாள் என்று ? “ என்று உள்ளுக்குள்
சிரித்து கொண்டவன் இருக்கையில் இருந்து எழுந்திருக்காமல் அப்படியே அமர்ந்து
கொண்டான்...
அவளோ மீண்டும்
ஒரு பாவமான லுக் ஐ விட, அவன் அதை கண்டு கொள்ளவில்லை..
தானாகவே முன்
வந்து விண்டோ சீட் ஐ கொடுத்தவனை மீண்டும் எழுந்திருக்க சொல்ல மனம் வரவில்லை
போலும்... உடனே யோசிக்காமல் அவனை தாண்டி அடுத்த இருக்கைக்கு சென்றாள்..
அவ்வளவுதான்
ரிஷி...!!
அவளின் மெல்லிய
உடல் அவன் மீது லேசாக மோதி செல்ல, அவள் புடவை அவன் முகத்தில் மோத அந்த மெல்லிய ஸ்பரிசத்தில் இந்த
உலகையே மறந்து போனான்..
அவள் வேகமாக
அவனை தாண்டி அடுத்த இருக்கைக்கு சென்றிருந்தாலும் அவனுக்கு என்னவோ ஸ்லோ மோசனில்
இன்ச் பை இன்ச் ஆக அவள் நகர்வதை போல காட்சி மனக்கண்ணில் விரிந்தது...
அவள் மெல்ல
மெல்ல அவனை தாண்டி செல்ல அந்த ஒவ்வொரு
நொடியையும் அனுபவித்து ரசித்தான் ரிஷி..
அவள் இருக்கையை
அடைந்தவள் அந்த இருக்கையில் இருந்த பெட்ஷீட், குட்டி
தலையணை எல்லாம் எடுத்து கொண்டு அமர, அதில்
எதேச்சையாக அருகில் அமர்ந்து இருந்த ரிஷியின் மீது உரசினாள்..
அவளின் கை அவன்
கை மீது படவும் மின்சாரம் தாக்கியதை போல ஒரு உணர்வு ரிஷிக்கு.. உடல் எல்லாம் ஏதோ புது
வெள்ளம் பாய்ந்தோடுவதை போல இருந்தது...
அவளுக்கும்
அப்படித்தான் இருந்திருக்கும் போல.. உடனே தன் கையை வேகமாக நகர்த்தி கொண்டாள்..
ஓரளவுக்கு அவள்
வசதியாக அமர்ந்து கொண்டதும் அதுவரை அவளை கள்ளப் பார்வை பார்த்து வந்தவன் இப்பொழுது
அவள் புறம் திரும்பி
“ஹாய்....ஐம்
ரிஷி... " என்று மெல்ல புன்னகைத்து
கையை நீட்டினான் கை குலுக்கும் விதமாக..
Comments
Post a Comment