தேடும் கண் பார்வை தவிக்க-6



 அத்தியாயம்-6

ழக்கமாக இந்த மாதிரி பிரயாணத்தின் பொழுது அருகில் அமர்பவர்கள் கூட ஒரு சிநேக புன்னகையில் ஆரம்பித்து தன்னை அறிமுகபடுத்தி கொண்டு அவர்களை பற்றியும் கேட்டு தெரிந்து கொள்வான் ரிஷி...

முதலில் தன்னை  அறிமுக படுத்தி கொண்டு அந்த பயணம் முழுவதுமே அருகில் இருப்பவர்களுடன் ஏதாவது பேசி கொண்டு வருவான்..

அந்த வழக்கத்திலும் இன்று அவனுள் ஏற்பட்ட ஸ்பெஷல் பீல் லிலும் தானாக முன் வந்து அவனை அறிமுக படுத்தி கொள்ள, அதை கண்டவளோ  திடுக்கிட்டு விழித்தவள் மலங்க மலங்க முழித்தாள்...

அவளின் அந்த பெரிய விழிகளும் மிரட்சியில் இங்கும் அங்கும் ஓடிய கரு விழிகளும் காண கொள்ளை அழகாக இருந்தது...

அவளையே அப்படியே அள்ளி கொள்ள அவன் கைகள் பரபரத்தன..

முயன்று தன்னை கட்டு படுத்தி கொண்டவன் அவள் முன்னே நீட்டிய தன் கையை மடக்கி கொண்டு

“ஓ.. இங்கிலீஷ் தெரியாதா? உங்க பெயர் என்ன? “ என்றான் தமிழில்..

அதை கேட்டு அவளோ மீண்டும் விழிகளை உருட்ட,

“போச்சுடா... தமிழும் தெரியாதா? அப்ப ஹிந்தி? “ என்றவன் அவளை மேலும் கீழும் பார்த்து விட்டு

“ம்ஹூம் கண்டிப்பா ஹிந்தி இல்லை.. வேற என்ன ? ஓ தெலுங்கா? அப்ப தெலுங்கிலயே கேட்கறேன்.. மீ பேரு எமிதி? “ என்று  உன் பெயர் என்ன என்பதை தெலுங்கில் கேட்டான்..

அதை கேட்டு அவசரமாக

“இல்ல.. இல்ல... நான் தமிழ்தான்.... “ என்றாள் படபடப்புடன்...

அவள் வாயில் இருந்து வந்த முதல் வாக்கியம்...

அவள் குரல் ரொம்பவுமே இனிமையாக இருந்தது.. முதலில் அவன் கேட்ட எக்ஸ்க்யூஸ் மீ யை போலவே அதை விட இந்த குரல் மீண்டும் அவன் உள்ளே சென்று அவன் நரம்புகளை மீட்டியது...

அதற்குள் தன் தலையை உலுக்கி கொண்டவன்

“தேங் காட்... நான் தப்பிச்சேன்... “ என்று குறும்பாக சிரித்தான்..

அதை கேட்டு அவள் புரியாமல் முழிக்க,

“ஐ மீன் இன்னும் 10 மணி நேரம் நீங்கதான் என் பக்கத்துல இருக்க போறீங்க... நீங்க பாட்டுக்கு எனக்கு தெரியாத பாஷையா இருந்தீங்கனா ரொம்ப கஷ்டம்.. அதான்.... “ என்று அசடு வழிந்தான்...

அவளும் மெல்ல புன்னகைத்தாள்..

அந்த மெல்லிய புன்னகை இன்னுமே அவனை கட்டி இழுத்தது..

“சரி சொல்லுங்க... உங்க பேர் என்ன? “ என்றான் விடாமல்..

அவளும் சற்று  தயங்கியவாறே

“ரோ....  ரோ....  ரோஜா..... “  என்றாள் தயக்கத்துடன்..

அதைக் கேட்டு

“இது என்னங்க பெயர்?  ரோ ரோ ரோஜா !! வித்தியாசமா இருக்கே... “  என்றான்..

அதைக்கேட்டு முதலில் ஒன்றும் புரியாமல் முழித்தாலும் பிறகு அவன் சொல்வதின்  அர்த்தம் புரிந்து கொண்டவள் தன்னையும் மறந்து களுக் என்று கிளுக்கி  சிரித்தாள்...  

அவளின் அந்த மலர்ந்த சிரிப்பை கண்டதும் ரிஷி அவன்  இதயத்தில் கையை வைத்துக் கொண்டு அப்படியே பின்னால் சரிந்தான் மானசீகமாக..

அவளின் அந்த கலகல சிரிப்பு அவ்வளவு அழகாக,  மனதை வருடுவதாக இருந்தது..  அவளையே ரசித்து பார்த்தவன்  தன் தலையை தட்டிக் கொண்டு

“எதுக்கு சிரிக்கிறீங்க?  நான் என்ன ஜோக்கா சொன்னேன்? “  என்றான் அவனும் புன்னகைத்தவாறு...

தன் சிரிப்பை முயன்று  ஒருவாறு அடக்கி கொண்டவள்

“வந்து....  என் பெயர் ரோ ரோ ரோஜா இல்ல...  வெறும் ரோஜாதான்.. “  என்றாள் மீண்டும் பொங்கி வந்த தன் சிரிப்பை கஷ்டபட்டு அடக்கிக் கொண்டு...

அவள் சொல்வதன்  அர்த்தம் புரிந்தாலும் வேண்டுமென்றே பேச்சை வளர்ப்பதற்காக

“என்னது வெறும் ரோஜாவா?  அது என்னங்க வெறும் ரோஜா னு பேர்...? கருப்பு ரோஜா,  சிவப்பு ரோஜா னு கேள்வி பட்டிருக்கேன்... வெறும் ரோஜா -  இதுவரைக்கும் நான் கேள்விப்படாத பேரா இருக்கே”  என்று தன் சிரிப்பை அடக்கிக் கொண்டு தீவிரமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்க அவளோ இந்த முறை அவன்  எதிர்பார்த்ததை போல கிளுக்கி சிரிக்காமல் அவனை பார்த்து முறைத்தாள்...  

அதைக்கண்டு இன்னும் அசந்து போனான் ரிஷி...

இதுவரை அவளை மிரட்சியுடனும் பயத்துடனும் சந்தோஷத்துடனும் பார்த்தவன் இப்பொழுது லேசாக கோபமாக முறைப்பதை காண அது கூட அவளுக்கு அவ்வளவு க்யூட் ஆக இருந்தது..

முறைக்கும் பொழுது அவள்  புருவங்கள் ஏறி இருக்க மூக்கு லேசாக விடைத்திருக்க வேண்டும் என்றே அவனை வம்புக்கு இழுத்தது வளைந்து திரண்டிருந்த அவளின் செர்ரி மாதிரி சிவந்து  இருந்த இதழ்கள்..

அவளின் அந்த முறைத்த இதழை சுண்டி விட  துடித்தது அவன் கரங்கள்.. அதற்குள்  கன்ட்ரோல் யுவர்செல்ப் ரிஷி கன்ட்ரோல் யுவர்செல்ப் என்று பலமுறை தன் உள்ளுக்கு சொல்லி கொண்டு   தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முயன்று அதில் வெற்றியும் கண்டான்...

பின் அவளை பார்த்தவன்

“எதுக்குங்க  முறைக்கிறீங்க? “  என்ற பாவமாக கேட்க அவளும் கொஞ்சம் இறங்கி வந்து

“என் பெயர் ஒன்னும் வெறும் ரோஜா இல்ல.. ரோ....  ஜா.... “  என்று ஒவ்வொரு எழுத்தாக இழுத்து சொன்னாள்...

“ஹா ஹா ஹா சாரிங்க... “ என்று வாய் விட்டு சிரித்தவன்

“ரோ ஜா...  நைஸ் நேம் அன்ட் ஸ்வீட் நேம்... “  என்று அவனும் ஒவ்வொரு எழுத்தாக இழுத்து சொல்லி கண்களால் சிரித்தான்..  

அவளும் தேங்க்ஸ் என்று சொல்லி புன்னகைக்க,  அடுத்து எங்க போறீங்க என்று ஆரம்பித்தான் ரிஷி..

“டேய் லூசு பயலே...  லண்டன் பிளைட் ல ஏறிட்டு லண்டனுக்கு போகாமல் துபாய்க்கா  போகும்?  அது என்ன எங்க போறீங்க னு  ஒரு முட்டாள் தனமான கேள்வி??

எப்படித்தான் இப்படி ஒரு அழகான பொண்ண பார்த்ததும் அறிவாளி எல்லாம் கூட அடி முட்டாள் ஆகிடறானுங்க.. கோடீஸ்வரன் எல்லாம் கூட  கோமாளி ஆகிடறானுங்க ளோ !! “  என்று தலையில் அடித்துக்கொண்டது அவன் மனஸ்..

ரிஷி அதை  முறைத்தவன் ரோஜாவை பார்த்து

“வந்து..  ட்ரான்சிட்  க்காக கூட லண்டன் போகலாம்... அதனால்தான் நீங்க எங்க போறீங்க ன்னு கேட்டேன்.. “  என்று அவனுடைய அறிவாளி மனஸ்க்கும் சேர்த்து விளக்கமளித்தான்..

அதைக் கேட்டவளோ இன்னும் முழித்து “ட்ரான்சிட் னா ? “ என்றாள் புரியாதவளாக..

“என்னது? ட்ரான்சிட் னா தெரியாதா?  அதாவது கனெக்டிங் ப்ளைட்.. இப்ப சென்னையில் இருந்து  US   போகணும்னா நேரடியா போக முடியாது..  நடுவுல துபாய்க்கோ லண்டனுக்கோ  வந்து வேற ப்ளைட் மாறி போகணும்..

அப்படி மாறி போற இடத்துக்கு பெயர் தான் ட்ரான்சிட்.. “ என்று விளக்கினான்..  அதைக்கேட்டு ஓ என்று தன் உதட்டை குவித்தாள் ரோஜா... 

அதில் இன்னும் கவிழ்ந்தவன் குவிந்திருந்த அவளின் இதழ்களை தாபத்துடன் பார்த்தான் ரிஷி..  ஆனாலும் நொடியில் அவன் பார்வையை மாற்றிக் கொண்டவன்

“சரி சொல்லுங்க ரோஜா? எங்க போறீங்க ? “  என்றான் விடாமல்..

உடனே அவளும் லண்டன் தான் போகிறேன் என்றாள்..

"ஓ.. வெரி குட்..  லண்டன் ல எந்த இடம்? “  என்று விடாமல் நோண்டினான்..

அதெல்லாம் உனக்கு எதுக்கு என்று முறுக்கிக் கொள்ளாமல் ஹேண்ட் பேக்கை திறந்து அதிலிருந்து ஒரு துண்டு சீட்டை எடுத்து அவனிடம் கொடுத்தாள் ரோஜா..

“இந்த அட்ரஸ்க்கு தான் நான் போகணும்.. “  என்றாள் தயக்கத்துடன்..

அதை வாங்கிப் பார்த்தவன்

“ஓ... இந்த இடம் எனக்கு தெரியும் !!  ஆமா அங்க போய் என்ன பண்ண போறீங்க? “  என்றான் ஆர்வமாக..

“வந்து...  எங்க டான்ஸ் ப்ரோக்ராம் இருக்கு..  அதுல நான் பார்ட்டிசிபேட் பண்ண போறேன்.. “  என்றாள் தயக்கத்துடன்..

அதைக் கேட்டவன் வியந்து

“ஓ... நீங்க கிளாசிக்கல் டான்சரா? என்றான் ஆர்வமாக..

அவளும் ஆமாம் என்று தலை அசைக்க, அப்பொழுது அவள் காதில் அணிந்திருந்த ஜிமிக்கியும் அசைந்தாடியது...

அதை கண்டவன் இன்னுமே கவிழ்ந்து போனான்...

மீண்டும் தன் தலையை தட்டிக்கொண்டு

“பார்த்தாலே தெரியுது.... “  என்றவன்  பார்வை அவளின் இடையை தழுவி சென்றது...

பொதுவாக கிளாசிக்கல் டான்ஸர் அவர்களுடைய இடையை  மெல்லிதாக வைத்திருப்பது ரொம்பவுமே முக்கியம்..  நடனத்தின் பொழுது  பலவகையான நெளிவு சுளிவுகளுக்கு தகுந்த மாதிரி இடையை வளைத்து ஆடுவது மிகவும் முக்கியம்..

“ஒரு வேளை அதனால்தான் இவள் தன் உடலை ஒல்லியாக வைத்து பராமரிக்கிறாளோ? “  என்று அவசரமாக ஆராய்ந்தான்..  பின் ஆராய்ச்சியை நிறுத்தி  கொண்டவன்  மீண்டும் அவளிடம் ஏதோ கேட்க வர அதற்குள்

“லேடிஸ் அன்ட் ஜென்டில்மென், ப்ளீஸ்...ஃபாஸன் யுவர் சீட் பெல்ட்.. “  என்று மைக்கில் அனௌன்ஸ் பண்ண,  அதைக் கேட்டதும் ரிஷி தன்னுடைய சீட் பெல்ட் ஐ எடுத்து அணிந்து கொண்டு ஓரக் கண்ணால் அவளைப் பார்க்க அவளோ அவனை விட்டு பார்வையை திருப்பி கொண்டு ஜன்னல் வழியாக வெளியில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்...  

உடனே அவளைப் பார்த்தவன்

“:ரோஜா...  ஃபாஸன் யுவர் சீட் பெல்ட்... “  என்றான்

அதைக்கேட்டு அவள் புரியாமல் முழிக்க,  அவன் தமிழில்

“ப்ளைட் டேக் ஆப் ஆகப் போகுது.. உங்களுடைய சீட் பெல்ட் ஐ போட்டுக்கோங்க.. “  என்றான் குறும்பாக சிரித்தவாறு...   

உடனே அவளும் ஒரு அசட்டு சிரிப்பை சிரித்து அவளுடைய இருக்கையின் சீட் பெல்ட் ஐ தேடினாள்.. சீட் பெல்ட்டின் ஒருபக்கம் இருக்க,  இன்னொரு பக்கத்தில்  இருந்து வரும் மற்றொரு பாகத்தை காணவில்லை..

மேலேயும் கீழேயும் முன்னேயும் பின்னேயும்  தேட அவளுக்கு கிடைக்கவில்லை..

“உடனே உங்க அடியில பாருங்க..  அதன் மீது எதுவும் உட்கார்ந்திருக்க போறீங்க.. “  என்றான் ரிஷி..

உடனே அவளும் தன் இருக்கையிலிருந்து மெல்ல எழுந்து தேட அவன் சொன்ன மாதிரியே இன்னொரு பகுதி அந்த இருக்கை மேலேயே இருந்தது...  

“சே.. ஆட்டை தன் தோள் மீது போட்டுக் கொண்டு ஆட்டைக் காணோம் என்று தேடினானாம் ஒருத்தன்..  அதுபோல இதை சீட்லயே வச்சுகிட்டு காணோம்னு தேடினேனே..!!  மானம் போச்சு !! “ இன்று தன் நாக்கை கடித்துக் கொண்டாள் ரோஜா..

கண்கள் படபடக்க, கன்னங்கள் வெட்கத்தை பூசிக் கொள்ள,  எந்த ஒரு செயற்கையான அழகு சாதனத்தின் உதவியும் இல்லாமல் அவள் கன்னங்கள்  சிவந்ததையும் கண்கள் வெட்கத்தில் சிரித்ததையும் கண்டவன்  ஆச்சரியமாகி இன்னுமே சொக்கி போனான்..

பெண்கள் வெட்கப் படுவார்கள் என்று கேள்வி பட்டு இருக்கிறான்..  ஆனால் அவன் பழகிய வரை  இதுவரை அந்த மாதிரி பெண்கள் யாரையும் பார்த்ததில்லை..

முதன் முதலாக ஒரு பெண்ணின்  இயற்கையான வெட்கத்தையும் அதனால் மிளிரும் அவள் கன்னங்களையும் கண்டவனுக்கு இன்னுமே ஆச்சர்யமாக இருந்தது..

ரிஷி அவளையே  ரசித்து பார்த்துக் கொண்டிருக்க அவளும் அந்த சீட் பெல்ட்டை எடுத்து இரு முனையையும் இணைக்க முயன்று கொண்டிருந்தாள்..

கள்ள  பார்வையால் அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன்  அவள்  சீட் பெல்ட்டை போட முடியாமல் தடுமாறுவதை  கண்டதும் அவளை நேராகப் பார்த்து

“இஃப் யூ டோன்ட் மைன்ட்...நான் வேணா போட்டு விடவா? “  என்றான் தயக்கத்துடன்..  உடனே அவளும் சரி என்று தலையசைத்தாள்..  

அந்த சீட் பெல்ட்டை எடுத்து ஒரு முனையையும் பிடித்து  ஒன்றுக்குள் ஒன்று பொருத்தி அவளின் உருவ சைஸ்க்கு தகுந்த மாதிரி அதை இறுக்கி விட்டான்..

அதை மாட்டி முடித்த அந்த நொடி எதேச்சையாக அவன் கைகள் அவள் இடையில் பட, அடுத்த நொடி அவன் உடல் எல்லாம் மின்சாரம் பாய்ந்ததை போல தடுமாறி போனான்...

அவள் இடை தொட்ட அந்த நொடி  அவன் உள்ளே ஏதோ புது ரத்தம் பாய்ந்தோடுவதை போல இருந்தது..  அவளின் மெல்லிய இடையில் லேசாக தழுவிய அவன் கைகள் அந்த மெல்லிய ஸ்பரிசத்தில் அப்படியே மெய்மறந்து போனான்..  

லேசாக பட்ட அவன் கைகளோ அதோடு விட்டு விட மனமின்றி இன்னும் அவள் இடையை அழுத்திப் பிடிக்க திமிறி கொண்டு இருக்க,  முயன்று அதை அடக்கிக் கொண்டிருந்தான் ரிஷி...

அதற்குள் அவன் அருகாமை என்னவோ செய்ய, அவளும் லேசாக நெளிய ஆரம்பித்தாள்...

அதில் சுதாரித்துக் கொண்டவன்  அவசரமாக தன் கையை இழுத்துக் கொண்டான்..  அவன்  முகத்திலும் இப்பொழுது வெட்கப் புன்னகை அவனையும் அறியாமல்..

அவனுக்குமே அது ஒரு புதுவிதமான அனுபவமாக இருக்க அவன் கையை எடுத்து முன்னால் இருந்த கலையாத தன் கேசத்தை சரி செய்வதை போல கைகளால் கோதி கொண்டான்....

ஏனோ அவளை  நிமிர்ந்து பார்க்கவே வெட்கமாக இருந்தது அவனுக்கு..

“சே... என்ன இது? ஊர் பேர் தெரியாத... “  என்று எண்ண ஆரம்பிக்க உடனே அவன் மனஸ்

“இல்ல இல்ல இப்பொழுது அந்த மான்குட்டி பேர் தெரியும்....அவள் பெயர் ரோ ரோ ரோஜா... “ என்று கண் சிமிட்டி குறும்பாக சிரிக்க, அதை செல்லமாக முறைத்தவன்

“சரி..  பேர் இப்ப தெரியும்.... என்ன ஊர் என்று தெரியாத யாரோ ஒருத்தியிடம் அவள் நல்லவளா கெட்டவளா என்று கூட தெரியாது... அப்படிபட்டவளிடம் இப்படி தடுமாறி போகிறேனே !!

எந்த பொண்ணையும் ஒரு நொடிக்கு மேல் ரசித்து பார்த்திராத என்னை இப்படி அவளையே பார்க்க சொல்லி இழுக்கிறாளே...” என்று அவன் எண்ணும் பொழுதே 

“ஹீ ஹீ ஹீ பார்க்க இல்ல பாஸ்... சைட் அடிக்க... இதைத்தான் எங்க ஊர்ல சைட் அடிக்கிறது னு சொல்லுவாங்க.... அதுவும் திருட்டுத்தனமா சைட் அடிக்கிறது.. நீ அந்த மான் குட்டி குரலை கேட்டதில் இருந்தே திருட்டுத்தனமாதான் சைட் அடிக்கிற பாஸ்.... “ என்று கண் சிமிட்டி நமட்டு சிரிப்பை சிரித்தது மனஸ்...

இந்த முறை அதை முறைக்காமல் தன் மனஸ் சொல்வது 100% கரெக்ட் ஆக இருக்க,

“சே.... இந்த மான்குட்டி என்னையவே திருட்டுதனமா சைட் அடிக்க வச்சுட்டாளே...” என்று எண்ண,

“ஹீ ஹீ ஹீ.. சைட் மட்டுமா அடிச்சீங்க  பாஸ்..?  கையெல்லாம் கூட எங்கயோ போச்சே...!! “ என்று மீண்டும் குறும்பாக சிரிக்க, இப்பொழுது இன்னுமே அவன் முகத்தில் வெட்க புன்னகை.....

“பாஸ்... வாட் அ சர்ப்ரைஸ்.... உங்க கன்னம் கூட அந்த மான்குட்டி கன்னத்தை போல பிங் ஆ ரெட்டிஸ் ஆ மாறுது... யூ ஆர் லுக்கிங் சோ க்யூட் பாஸ்...

இந்த நிலையில எந்த பொண்ணாவது பார்த்தாளுங்க உடனே ப்ளாட் ஆகிடுவாளுங்க... சீக்கிரம் மூஞ்சை மாத்திக்குங்க....அந்த ரஜிதா ஒருத்தியே போதும்.. அவ பார்த்தா நீங்க செத்திங்க...  “ என்று சிரிக்க, அவனோ இன்னுமே வெட்க பட்டு புன்னகைத்தான்....

அவனுக்கே ஆச்சர்யம்... இந்த மாதிரியெல்லாம் அவன் எப்பொழுதும் சிரித்ததில்லை... தொழிலில் அலுவலகத்தில் சிரிப்பதற்கு வாய்ப்பே இல்லை... எப்பயாவது விஷ்ணு ஏதாவது காமெடி சொல்லுவான்... அதற்கு கூட வெறும் உதட்டை லேசாக விரித்து புன்னகைப்பான்...

தொழிலை  தாண்டி பெர்சனல் லைப் லயும்  அவன் பெற்றோர்களிடம் பேசி வம்பு இழுத்து சிரிப்பான்... நெருங்கிய நண்பர்கள் என்று அவ்வளவாக யாரும் இல்லை...

அப்படியும் கூட படித்தவர்கள் பழகியவர்கள்  என்று பார்க்கும் வட்டத்திலும் சில நேரம் கலாட்டா செய்து சிரித்தாலும் இந்த மாதிரி வெட்க பட்டெல்லாம் எப்பொழுதும் சிரித்ததே இல்லை....

கூடவே இப்பொழுதும் அவன் மனம் எல்லாம் லேசாகிவிட, முன்பு இருந்த வலி வேதனை எள்ளளவும் இல்லாமல் உல்லாசமாக இருந்தான்...

மீண்டும் தன் தலையை பின்னால் தடவி கொண்டும் முன்னால் இருந்த கேசத்தை கலைத்து மீண்டும் அதை படிய வைத்தவன் ஓரக் கண்ணால் மீண்டும் அவளை கள்ள பார்வை பார்த்தான்...

அவளோ  இப்பொழுது முழுவதுமாக மறுபக்கம் திரும்பி அமர்ந்து கொண்டு ஜன்னலின் வழியாக வெளியில் வேடிக்கை பார்க்க ஆரம்பித்து இருந்தாள்..அதை கண்டவன்

“ஒருவேளை என் விரல் பட்டதும் அவள் எதுவும் என்னை தப்பாக எடுத்துக் கொண்டாளோ ? என்னிடம் பேசப் பிடிக்காமல் தான் மறுபக்கம் திரும்பிக் கொண்டாளோ ? “  என்று அவன் மனம் தவிக்க ஆரம்பித்தது...

ஆனாலும் நேரடியாக அவளிடம் பேச அவனுக்கு தயக்கமாக இருந்தது..

“ரொம்ப வழியறான் என்று அவள் எண்ணி விட்டால்? “ என்று நினைத்தவனுக்கு அதற்குமேல் அவளிடம் அவனாக பேச தயக்கமாக இருந்தது...

அது அவன் வழக்கமும் கிடையாது....

அவனை பார்க்கும்  பெண்கள் தானாக அவனிடம் வந்து வழிந்து நிற்பதை பார்க்கும் பொழுதெல்லாம் அவனுக்கே அருவருப்பாக இருக்கும்...

அவர்களிடம் இருந்து தப்பித்தால் போதும் என்று தோன்றும்..

அதே மாதிரி தன் அருகில் அமர்ந்து இருப்பவளிடம் இன்னும் சற்று நேரம் குறும்பாக பேசி கொண்டிருக்க அவன் உள்ளே ஏங்கினாலும் முகத்தை திருப்பி கொண்டு அமர்ந்து இருப்பவளை தானாக வழிய சென்று பேச மனம் வரவில்லை....

ஆனாலும் அவன் கண்கள் அவனையும் மீறி அவளிடம் தாவி சென்றது.. அவள் அறியாமல் ஓரப்பார்வை பார்த்தான்...

அவளோ இவன் ஒருத்தன் அருகில் இருப்பதையே மறந்து வெளியில் வேடிக்கை பார்த்து கண்கள் பளபளக்க வெளி அழகை ரசித்து பார்த்து கொண்டிருந்தாள்..

அதற்கு மேல் அவளை தொந்தரவு செய்ய மனம் வரவில்லை அவனுக்கு..

அமைதியாக அமர்ந்து கொண்டு அவளையே இன்னமும் ஆழ பார்த்து ரசித்து கொண்டிருந்தான்... அவளின் ஒவ்வொரு அசைவையும் ரசித்து தன் மனதில் பத்திரபடுத்தி கொண்டான் அந்த மில்லினர் தொழிலதிபன்..   

டுத்த சில நிமிடங்களில் விமானம் நகர ஆரம்பிக்க அதை இன்னும் ஆவலுடன் ரசித்துப் பார்க்க ஆரம்பித்தாள் ரோஜா...

சிறிது தூரம் ஊர்ந்து சென்ற விமானம் பின் தரையில் வேகமாக ஓட ஆரம்பிக்கவும் அதில் கொஞ்சம் பயந்தவள் அனிச்சையாக  அருகில் இருந்த ரிஷியின் கையை தானாகவே பிடித்துக் கொண்டாள்....

கண்களில் முன்பு தோன்றிய  அதே மிரட்சி பயம்...எதிரிகளை கண்டு நடுங்கும் மான் குட்டியை போல மிரட்சியுடன் லேசாக நடுங்க ஆரம்பித்தாள் ரோஜா...

அவள் முகத்தில் இருந்தே அவள் பயத்தை புரிந்து கொண்டவன்  

“ஒன்னும் பயந்துக்காத ரோஜா... முதலில் கொஞ்சம் வேகமாக ஓடும் அதற்குப் பிறகு மேலே பறக்க ஆரம்பித்து விடும்.. மேல பறந்து விட்டால் அதன் பிறகு ஒன்னும் தெரியாது... டோன்ட் ஸ்கேர்... “  என்று அவளுக்கு விளக்கிச் சொல்ல,  அவளோ  அவன் கையை இன்னும் இறுக்கி பிடித்துக் கொண்டாள்...

அதில் கொஞ்சம் தைர்யம் வரப்பெற்றவள் அவன் கையை விட்டு விடாமல் பிடித்து கொண்டே மீண்டும் வெளியில் வேடிக்கை பார்க்க இப்பொழுது வெளியே வேகமாக நகர்ந்து கொண்டிருக்கும் மரம் செடிகளை கொஞ்சம் ஆர்வத்துடன் பார்த்து ரசிக்க  ஆரம்பித்தாள்...

ஓரளவுக்கு ஓடி முடித்ததும் விமானம் பறப்பதற்கான கேப்டனின் அறிவிப்பு வரவும்

“இப்பொழுது டேக் ஆப் ஆகப்போகுது... “ என்று தமிழில் அவளுக்கு சொல்ல, மீண்டும் அதே மிரட்சி அவள் கண்களில்...

அந்த நேரம்  விமானமும் மேல பறக்க ஆரம்பிக்க, உடனே உடல் லேசாக நடுங்க,  கண்களை இறுக்க மூடிக் கொண்டாள்..

கண்களை இறுக்க மூடிக் கொண்டதோடு பக்க வாட்டில் திரும்பி அவள் அருகில்   அமர்ந்திருந்த ரிஷியின் தோளில் முகம் புதைத்துக் கொண்டாள்..  

அதைக் கண்ட ரிஷியோ  ஆச்சரியமாகி  போனான்.. ஜாக்பட் அடித்ததை போல துள்ளி குதித்தான்...  ஆனாலும் தன்னை வெளி காட்டி கொள்ளாமல்  அவள் சாய்ந்து கொள்ள தோளை கொடுத்து அவன்   கையை பிடித்து இருந்த அவள் கையை தன் மற்றொரு கையால் மெல்ல அழுத்தி கொடுத்தான் அவள் பயத்தை போக்க...

சிறிது நேரத்தில் விமானம் மேல பறந்ததும் சீட் பெல்ட் ஐ தளர்த்தி கொள்ள அறிவிப்பு வரவும் அதில் விழித்து கொண்டவள் அவசரமாக தன் முகத்தை ரிஷியின் தோளில் இருந்து எடுத்து கொண்டாள்...

ரிஷியோ  குறும்பாக சிரித்தவன்

“இனிமேல் ப்ளைட் நேராக பறக்கும்.... நீ பயம் இல்லாமல் வேடிக்கை பார்... " என்றான் குறும்பாக சிரித்தவாறு...

அவளோ இப்பொழுது பயம் விலகி இருக்க, ஆனால் வெட்கம் வந்து சேர்ந்து கொள்ள, தன் வெட்கத்தை மறைத்தவாறு ஒரு அசட்டு சிரிப்பை சிரித்து

"சாரி..........." என்றாள் தயக்கத்துடன்..

"ஹே... இட்ஸ் ஓகே... இதுல என்ன இருக்கு...!!  " என்று  சொன்னாலும் உள் மனமோ

“இதுக்காக நான் காத்து கொண்டிருக்கிறேன் பேபி... " என்று சொல்லி கண் சிமிட்டி சிரித்து கொண்டான்..  

அதன் பிறகு ரோஜா ஜன்னலில் மீண்டும் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்...  ரிஷியும் அவளை  தொந்தரவு செய்யாமல் தன் ஐபேட் ஐ எடுத்து ஆன் பண்ணி முன்னால் இருந்த ட்ரேயை இழுத்து  அதன் மீது வாகாக வைத்து கொண்டு  நாளைக்கு நடக்க இருக்கும் கான்ப்ரன்ஸ்க்காக பிரிப்பேர் பண்ண ஆரம்பித்தான்..

இதுவரை அந்த கான்ப்ரன்ஸ்க்கு மனமே இல்லாமல் போக இருந்தவன் இப்பொழுது மனம் எல்லாம் ஒரு வித உற்சாகம் சூழ்ந்திருக்க, அந்த கான்ப்ரன்ஸ்க்கு உற்சாகத்துடன் பங்கெடுத்து கொள்ள பிரிப்பேர் பண்ண ஆரம்பித்தான்..

கைகள் அதன் வேலையை செய்தாலும் கண்களும் மனமும் அவள் பக்கமே இருந்தது...

அவளோ வெளியில் தெரியும் மேகத்தை ஆர்வத்துடன் பார்த்து வந்தாள்.. தன் அலைபேசியை எடுத்து பல புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருந்தாள்..

குவியலாக நகர்ந்து செல்லும் அந்த மேகத்தை பார்த்ததும் குழந்தையாக அவள் முகம் பிரகாசித்தது.. அதை கண்டதும் அந்த குழந்தையை ரசிக்கும் தாயாக, தந்தையாக மாறிப் போனான் ரிஷி..

எத்தனை நாட்கள் பயணம் செய்திருக்கிறான்.. இதே மேகங்கள் தான் அன்றும் வந்தன.. ஆனால் இந்த மேகங்கள் அவனுக்கு எதுவும் வித்தியாசமாக தெரியவில்லை..

ஆனால் அவள் ரசித்து வியந்து பார்க்கவும் அவனும் ஜன்னல் வழியாக அதை ஆவலுடன் காண அவனுக்கும் அதெல்லாம் இப்பொழுது அழகாக தெரிந்தது...

இப்பொழுது அவன் பார்வையில் எல்லாம் அழகாக மாறியதை போல இருந்தது...

எதேச்சையாக அவளை பார்க்க இப்பொழுது அவள் கண்களில் நீர் திரண்டு இருந்ததை போல இருந்தது..

அதை கண்டதும் அவன் மனம் பதைத்தது..

“அழுகிறாளா? இல்லை ஆனந்த கண்ணீரா? முதன்  முறை விமானத்தில் வருகிறாள் போல.. அதான் இவ்வளவு ஆர்பரித்து இதை ரசித்து வேடிக்கை பார்க்கிறாள்.. கூடவே அந்த கண்ணீர் ?? “  அது ஏன் என்று அவனுக்கு புரியவில்லை...

அவளிடம் கேட்கவும் தயக்கமாக இருந்தது.. அவளுடைய ப்ரைவசியில் மூக்கை நுழைக்க கூடாது என்று தன்னை கட்டு படுத்தியவன் அவளிடம் எதுவும் கேட்காமல் தொடர்ந்து அவளை ரசித்த வண்ணம் தன் வேலையை தொடர்ந்தான்...

டுத்து ஒரு இரண்டு  மணி நேரம் ஓடியிருக்க தன் வேலையில் மூழ்கி இருந்ததால்  அருகிலிருந்த ரோஜா வை சிறிது நேரம் மறந்திருந்தான் ரிஷி..  

வேலை முடியவும் தன் ஐபேட் ஐ அணைத்தவன் தன் கழுத்தை இரு பக்கமும் ஆட்டி நெட்டி முறித்தவன் அடுத்து கையையும்  நீட்டி நெட்டி முறித்தவாறு அவன் அருகில் பார்க்க, அருகில் அமர்ந்து இருந்தவளும் அப்பொழுது வேடிக்கை பார்த்த முடித்து தன் இருக்கையில்  சாய்ந்தபடி உறங்கி கொண்டிருந்தாள்...

அவன் மீது உரசி விடாமல் தன் உடலை குறுக்கி கொண்டு பின்னால் இருக்கையில் தலை சாய்த்து இருக்க,  அவள் தலை அவன்புறமாக அவள் இருக்கையையும் தாண்டி சரிந்து சாய்ந்து இருக்க, அசந்து உறங்கி கொண்டிருந்தாள்...

குழந்தைதனமான வெகுளியான அவள் முகத்தையும் செல்லமாக சிணுங்கியவாறு அசந்து உறங்குபவளை கண்டதும் அவன் மனம் உருகி போனது...  

அடுத்த நொடி எதுவும் யோசிக்காமல் அவள் புறமாக நகர்ந்து அவளை ஒட்டி  அமர்ந்தவன் தொங்கி கொண்டிருந்த அவள் தலையை எடுத்து அவன் தோளின் மீது வைத்து கொண்டான்...

அந்த நொடி அவனுக்கு உரிமையானவள் உரிமையுடன் அவன் தோள் சாய்ந்து கொண்டதை போல உள்ளுக்குள் ஒரு பரவசம்....

அது ஒரு புதுவிதமான சுகமாக இருக்க, கண்களை மூடி அவள் அருகாமையை அவள் அருகாமை தந்த சுகத்தை அணு அணுவாக ரசித்து அனுபவித்தான் ரிஷி... 

அப்பொழுது உணவு பரிமாற வந்த விமான பணிப்பெண் அவனை அழைத்து அவனுடைய உணவை கொடுத்தவள் அடுத்த இருக்கையில் அமர்ந்து அவன் தோள் மீது சாய்ந்து அசந்து உறங்கும் ரோஜா வை கண்டதும்  

“சார்....  உங்க வைஃப் வெஜ் ஆர் நான் வெஜ்? " என்றாள்.. அதை கேட்டு ஒரு நொடி திகைத்து போனான் ரிஷி..

“வைஃப்?? “ என்று கேள்வியாக புருவத்தை உயர்த்தியவன்

அப்பொழுதுதான் தன் தோள் மீது உரிமையாக சாய்ந்து உறங்குபவளை  கண்டான்...

அந்த பணிப்பெண் ரோஜா வைத்தான் தன் மனைவி என்று அழைக்கிறாள்  என்று எண்ணி உள்ளுக்குள் சிரித்து கொண்டவன்

அதை மாற்றாமல் அவள் சொன்னதை திருத்தாமல் அவசரமாக யோசித்து  வெஜ் என்றான் சிறு புன்னகையுடன்..

அந்த பணிப்பெண் ம் புன்னகைத்து ஒரு வெஜ் உணவை எடுத்து அவனிடம்  கொடுத்து விட்டு முன்னால் நகர்ந்தாள்..

ரிஷிக்கோ மனம் எல்லாம் ஒருவித சந்தோஷத்தில் நிறைந்து இருந்தது....

“வைஃப் மை வைஃப் ?  “ என்று தனக்குள்ளே கேள்வியாக கேட்டு கொண்டவன் பக்கவாட்டில் திரும்பி பார்க்க அவளோ இப்பொழுது தானாக அவள் புறமாக இருந்த அவன் ஒரு கை விலாக்குள் தன் கையை விட்டு அவன் கையை தன்னோடு சேர்த்து பிடித்து கொண்டு அவன் தோள் மீது தன் முகத்தை புதைத்து கொண்டு குழந்தையாக உறங்கி கொண்டிருந்தாள்..

அதை கண்டவன் திகைத்து விழித்தவன் அந்த நொடி முடிவு செய்தான்...

“யெஸ்.. ஷி இஸ் மை வைஃப்.. ஷி இஸ் மை லைப் பார்ட்னர்.. ஷி இஸ் மை பெட்டர் ஹாப்.... ஷி இஸ் மை லைப்...  இவள் யாராக  இருந்தாலும்,  எப்படி பட்டவளாக  இருந்தாலும் இந்த நொடியில் இருந்து இவள் என் மனைவி.... இவளை என் மனைவியாக்கி காட்டுவேன்...  " என்று உள்ளுக்குள் உறுதி செய்து கொண்டான் ரிஷி வர்மா...

இதுவரை எத்தனையோ பெரிய பெரிய தொழில் சவால்களை எல்லாம் சேலஞ்சாக எதிர்கொண்டு ஜெயித்து இன்று தொழில் சாம்ராஜ்ஜியத்தில் தனக்கென்று ஒரு தனி  இடத்தை பிடித்திருந்ததால் அவனுள் ஒரு அசட்டுதனமான நம்பிக்கை...

தன்னால் எதையும் ஜெயித்து விட முடியும் என்ற அசட்டுதனமான நம்பிக்கை..

அது மாதிரி பல முறை தொழிலில் பல கடுமையான போட்டிகளையும் எதிர்கொண்டு  ஜெயித்தும் காட்டி இருக்கிறான் ரிஷி.. அந்த அசட்டுதனமான நம்பிக்கையில் ஓவர் கான்பிடன்சியலில் தன் தொழில் வாழ்க்கையை போல சொந்த வாழ்க்கையிலும் தான் நினைத்ததை  ஜெயித்து விடலாம் என்று அவசரமாக  கணக்கிட்டான்..

ஆனால் அவன் அறியவில்லை.. தொழில் என்பது வேறு.. சொந்த , குடும்ப வாழ்க்கை என்பது வேறு..

தொழிலில் பணம் புகழ் செல்வாக்கு இதுதான் பிரதானமாக இருக்கும்.. வெற்றி தோழ்வி எல்லாம் அந்த அஃறிணை பொருட்களை சுற்றியே இருக்கும்..

ஆனால் குடும்ப வாழ்க்கை என்பது மனம் சம்பந்தமானது... உணர்வுகள் சம்பந்தமானது... காசு, பணம், செல்வாக்கை கொண்டு யாரையும் இதில் ஜெயிக்க முடியாது என அறிய மறந்திருந்தான்...

அவன் கணக்கிட்ட படி அவன் சொந்த வாழ்வில் வெற்றி பெறுவானா? பார்த்த உடன் காதல் கொண்டு மனதால் மனைவியாக்கி கொண்ட தன்னவளுடன் தன் வாழ்க்கையை பிணைத்து கொள்வானா?

இல்லை அவளை ஜெயிக்க முடியாமல் தோற்க போகிறானா? இவர்களை வைத்து அந்த விதி ஆடப்போகும் ஆட்டத்தை வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம்.... 

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!