தேடும் கண் பார்வை தவிக்க-15
அத்தியாயம்-15
அடுத்து இரண்டு
வருடங்கள் ஓடிவிட்டன...
நளன் இப்பொழுது
பன்னிரண்டாம் வகுப்பில் அடி எடுத்து வைத்திருந்தான்..
அந்த வருடம்
அவன் வாழ்வில் முக்கியமான வருடம்.. பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் ஐ வைத்துதான்
அவன் அடுத்து என்ன படிக்க முடியும் என்று முடிவு செய்ய முடியும்...
அவனை பார்க்கும்
பொழுதெல்லாம் தங்கம் அவனை நன்றாக படித்து பெரிய வேலைக்கு போய் கை நிறைய சம்பாதிக்க
வேண்டும்.. அப்பதான் அவள் மாமியார் தன் பேத்தியை கட்டி தருவார் என்று சொல்லி
சொல்லி உருவேற்றி இருக்க, அவன் தமயந்திக்காகவே படித்தான்..
அவன் ஐந்தாம்
வகுப்பில் தன் ஆசியரிடம் அவன் லட்சியம் குறிக்கோள் எல்லாம் தன் அத்தை மகளை
மணப்பதுதான் என்று சொல்லியது பசுமரத்தாணி போல அவன் மனதில் அப்படியே இன்னும்
பதிந்து இருந்தது...
மற்ற சிறுவர்களை
போல சிறு வயதில் டாக்டராகணும் இஞ்சியராகணும் என்று சொல்லுவர்.. அவர்கள் வளர்ந்த
பிறகு அவர்களின் விருப்பம் ஆர்வம் எல்லாம் வேறாக இருக்கும்..தங்கள்
குறிக்கோளையும் மாற்றி கொள்வர்..
ஆனால் நளன் அவன்
குறிக்கோளில் இருந்து மாறிவிடாமல்
இன்னும் தன் அத்தை மகளை மணப்பது ஒன்றே தன் வாழ்க்கையின் லட்சியம் என்று
உறுதியாக இருந்தான்.. அதற்காக தன் தகுதியை வளர்த்து கொள்வது ஒன்றே தன் குறிக்கோளை, லட்சியத்தை அடைய வழி என
புரிந்து கொண்டு அதற்காக பாடுபட்டான்.....
அதுவும்
இப்பொழுது அவனுக்கு பதினெட்டு வயதாகி இருக்க,
அந்த பருவத்தில் வரும் உணர்வுகளும் அவன் குறிக்கோளுக்கு தூபமிட்டன...
அவன் வகுப்பு
நண்பர்கள் எல்லாரும் அந்த வயதிற்கே உரிய மாதிரி
பெண்களை சைட் அடிப்பதும் பெண்கள் பின்னால் சுத்தி வருவதும் சிலர் காதல்
கொண்டு லவ் லெட்டரை தூக்கி கொண்டு அலைவதும் ஆசிரியர் வராத நேரங்களில் பெண்களை
பற்றியும் காதலை பற்றியும் அலசி ஆராய, அவர்கள்
பேசுவதெல்லாம் செவி வழி நளன் மனதையும் தாக்கும்...
காதலின்
உணர்வுகளை பற்றியும் தலைவன் தலைவி காதல் கொண்டு கழித்த அந்த காதல் வாழ்க்கையை
பற்றியும் தமிழ் ஆசிரியர் தமிழ்
இலக்கியங்களை நடத்தும் பொழுது எல்லாம் அவனுக்கு காதல் பற்றி இன்னுமாய் புரிய
ஆரம்பித்தது....
சிறுவயதில்
இருந்தே தன் அத்தை மகள் தான் தனக்கு மனைவி
என்று பெயருக்கு மனதில் பதிய வைத்தவன் இப்பொழுது அவள் மீத தானாகவே காதலையும்
வளர்த்து கொண்டான்..
இப்பொழுது அவளை
காணும்பொழுதெல்லாம் அந்த பருவத்திற்கே உரிய அவன் காதலும் பொங்கி
பெருகும்..உள்ளுக்குள் ஏதேதோ உணர்வுகள் பொங்கி வழியும்..
ஆனால் அவன்தான்
வளர்ந்து விட்டான்... அவள், அவன் அத்தை மகள் தமயந்தி இன்னும் சிறு பிள்ளைதானே.. அவளும்
இப்பொழுது எட்டாம் வகுப்பில் அடி எடுத்து வைத்து விட்டாள் தான்..
ஆனால்
இன்னும் வெளி உலகம் தெரியாத சிறு
பிள்ளையாக கள்ளம் கபடமற்ற சிரிப்புடன் வளைய வருபவள்..
தன் மாமன் மகன்
வளர்ந்து பெரியவனாக,
மீசை நன்றாக முளைத்து ஆண்மகனாக நின்ற பொழுதும் அவள் கண்ணுக்கு இன்னும் அவள்
சீண்டி விளையாடும் அவள் மாமன் மகன் ஒட்டடகுச்சி நளனாகத்தான் தெரிந்தான்..
அதனாலயே அவள்
பேச்சிலும் பழக்கத்திலும் எந்த மாற்றமும் இல்லை.. இன்னும் குழந்தையாய் அவனுடன்
வம்பு இழுத்து சீண்டி விளையாடுவாள்..
ஆனால் அவள்
அப்படி சீண்டி விளையாடும் பொழுதும் அதுவும் அவன் முகத்தருகில் வந்து குருகுறுப்பு
மூட்டும் பொழுதும் அவன் மீசையை பிடித்து இழுத்து விளையாடும் பொழுதும் அவன் வயதின்
ஹார்மோன்கள் மாற்றத்தால் ரொம்பவும் தடுமாறி போனான் நளன்...
தன் உணர்வுகளை
வெளிக்காட்டாமல் அடக்கி வைக்க படாத பாடு படவேண்டி இருந்தது..
அதுவும்
இப்பொழுது அவன் முக்கியமான கட்டத்தில் இருக்கிறான்.. இந்த வருடம் நல்ல மதிப்பெண்
வாங்க வேண்டும் என்ற பொறுப்பு இருந்ததால் தன் உள்ளே அலை அலையாக பொங்கி பெருகும்
காதலை எல்லாம் அணை போட்டு தடுத்தவன் முயன்று தன்னை கட்டுபடுத்தி கொண்டு அவளுடன்
இயல்பாக பேச முயன்றான்....
ஆனால் ஒரு
கட்டத்தில் அவளிடம் இயல்பாக பேச வராமல் தடுமாறிப் போக,
அடுத்த வழியாக அவளை பார்ப்பதை தவிர்க்க ஆரம்பித்தான்...
இப்பொழுதெல்லாம்
மதிய உணவை அவளை அவள் தோழிகளுடன் சாப்பிட சொல்லி விட்டான்.. அவள் அவன் வீட்டிற்கு
வரும் நேரங்களில் புத்தகத்தை எடுத்து கொண்டு வயல் பக்கம் சென்று விடுவான்..
கேட்டால் வயலில்
நெற்கதிர்களை குருவி கொத்தாமல் விரட்டி கொண்டே படிப்பதாக சாக்கு சொல்லி விட்டு
சென்று விடுவான்..
அவனிின் இந்த
ஒதுக்கத்தை கண்டு தமயந்தி குழம்பி போனாள்..
பள்ளியில் ஒரு
நாள் மதிய உணவு இடைவேளையின் பொழுது அவன் வகுப்பிற்கே வந்து அவன் சட்டையை பிடித்து
அவன் கன்னத்தில் பளார் என்று அறைந்தவள்
“ஏன் டா மாமா...
என்னை பார்த்து ஓடி ஒளியற? அப்படி என்ன தப்பு பண்ணினேன்? ஏன் என்னை உனக்கு புடிக்கலையா? “
என்று கோபமாக ஆரம்பித்து அழுகையில் முடிக்க நளனுக்கோ கஷ்டமாகி போனது..
அத்தனை பேர்
முன்னிலையில் அவள் அவனை அடித்தது கூட பெரிதாக தெரியவில்லை.. அவள் கண்ணை கசக்கி
அழவும் அவனால் தாங்க முடியவில்லை..
உடனே பதறியவன்
“ஹே தயா..
அழுவாத டீ.. எல்லாரும் பார்க்கறாங்க பார்... “ என்று சொல்லியவாறு அவள் கை பிடித்து அவளை
வகுப்பறையில் இருந்து அழைத்து வந்தவன் அருகில் இருந்த ஒரு மரத்தடிக்கு அழைத்து
சென்று அவளை அமர வைத்து அவள் கண்ணை துடைத்து விட்டான்....
“தயா... நான்
இப்ப ப்ளஸ் டூ படிக்கறேன் இல்ல.. நிறைய படிக்கணும் டீ.. அதனாலதான் உன்னை பார்க்க
நேரம் இல்ல.. அதுக்கு போய் ஏன் இப்படி அழுவற?
அதோட அடுத்த
வருஷம் நான் காலேஜ்க்கு போய்டுவேன்..அப்ப நான் இல்லாம நீ கஷ்ட படுவ இல்ல..
அதுக்குத்தான் உன்னை இப்ப இருந்தே பழக்க படுத்தணும்...
அதனாலதான் நான்
உன்னை விட்டு தள்ளி இருந்தது.... அதுக்கு போய் இப்படி அழுவலாமா....?
என் அழுமூஞ்சி
பொண்டாட்டி... உன் மூஞ்ச இப்படி பார்க்கவே சகிக்கலடி... இங்க பார்.. நீ அழுவாம
இருந்தா உனக்கு ஒன்னு தருவேன்.. “ என்று அவன் பேன்ட் பாக்கெட்டில் கை விட்டு எதையோ
எடுப்பதை போல ஆக்சன் பண்ண, உடனே அவளும் தன் அழுகைய நிறுத்தி
விட்டு
“என்னது அது? டேய் கொடுடா மாமா.. “ என்றாள் ஆர்வமாக ...
“ஹா ஹா ஹா நீ
சிரி.. அப்பதான் தருவேன்... “ என்று
சிரிக்க, அவளும் கண்ணீருக்கு நடுவே தன்
வெண்பற்கள் தெரிய அழகாக புன்னகைத்தாள்...
“ஹா ஹா ஹா அழுத
புள்ள சிரிச்சுதாம்.. கழுத பால குடிச்சுதாம்.... “ என்று ராகமாக இழுத்து பாட்டு
பாடி
“இப்படி
சிரிச்சா எவ்வளவு அழகா இருக்கு... இனிமேல் எதுக்கும் நீ அழக்கூடாது டீ... நான்
உனக்காகத்தான் கஷ்டபட்டு படிக்கிறேன்...உன்னை
கட்டிக்கத்தான் இம்புட்டு கஷ்டபடறேன்...உன்னைய எப்படி புடிக்காம போகும்...
“என்று சொல்லியவாறு அவன் பாக்கெட்டில்
இருந்த பைவ் ஸ்டார் சாக்லெட் ஐ எடுத்து அவள் முன்னே நீட்டினான்..
அந்த சாக்லெட் ஐ
கண்டதும் அவன் கடைசியாக சொன்னதெல்லாம் காதில் ஏறவில்லை அவளுக்கு.....
“ஐ சாக்லெட்.. “
என்று எட்டி அவன் கையில் இருந்த சாக்லெட் ஐ புடுங்கியவள் அப்பொழுது வகுப்பிற்கு
செல்ல மணி அடிக்க,
“நீ தான்டா என்
செல்ல மாமா...தங்க மாமா...தங்கமயிலு.. “ என்று
அவன் தாடையை பிடித்து செல்லம் கொஞ்சியவள் எக்கி அவன் கன்னத்தில்
முத்தமிட்டு சிட்டாக பறந்து இருந்தாள் அவள் வகுப்பறையை நோக்கி...
நளனோ பேயறைந்த மாதிரி சிலையாக நின்றான்....
அவள் கொடுத்த
முத்தம் அவனுள் புரட்டி போட்டது.. அவள் சிறுபிள்ளையாக முத்தமிட்டு சென்றதோ அவனுள்
பெரும் தாக்கத்தை ஏற்படுத்த தன்னை சமாளித்து கொண்டவன் அவள் முத்தமிட்டு சென்ற
இடத்தை கைகளால் மென்மையாக தடவி கொண்டு மெல்ல வெட்கபட்டு சிரித்தவாறு தன்
வகுப்பறையை நோக்கி சென்றான்....
அதன் பிறகு
தமயந்தியை முழுவதும் விலக்கிவிடாமல்
அப்பப்ப அவளை பார்த்து அவளுடன் சிறிது
நேரம் சிரித்து பேசிவிட்டு செல்வான்..
தன்
குறிக்கோளில் கண்ணும் கருத்துமாக இருக்க அந்த இறுதி ஆண்டில் அவனின் கடின உழைப்பால்
நன்றாகவே மதிப்பெண்கள் பெற்று தேர்வாகி இருந்தான்...
அதற்கு அடுத்து
என்ன படிப்பது என்று வரும்பொழுது தமயந்தியின் அப்பத்தா அடிக்கடி சொல்லும் என்
பேத்தியை கட்டிக்க சீமையிலிருந்து மாப்பிள்ளை வருவான் என்றது மனதில் வந்து போனது..
அவனுக்கும்
தானும் படித்துவிட்டு வெளிநாட்டில் வேலை பார்க்கவேண்டும்.. கை நிறைய சம்பாதிக்க
வேண்டும்.. அந்த கிழவி வாயை அடைக்கவேண்டும் என்று உத்வேகம் வந்தது...
அதனால் எளிதாக
வெளிநாட்டில் வேலை வாய்ப்பு கிடைக்கும் படிப்பாக அலசி ஆராய்ந்தான்...
அப்படி
ஆராய்ந்ததில் வெளிநாடுகளில் இருக்கும் இந்திய உணவகத்தில் பணிபுரிய நிறைய தேவை இருப்பதாக
தெரிந்து கொண்டவன் கூடவே அவன் பெயருக்கு தகுந்த மாதிரி அவனுக்கு சமையலிலும் ஆர்வம்
இருப்பதால் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பை தேர்ந்தெடுத்தான்..
சென்னையில்
புகழ்பெற்ற கல்லூரியில் அவன் மதிப்பெண் அடிப்படையில் சீட் கிடைக்கவும் அதில்
சேர்ந்துவிட்டான்..
தமயந்திக்கு
தான் அவனை பிரிந்து இருக்க கஷ்டமாக
இருந்தது..
அவளும் ஒன்பதாம்
வகுப்பில் நுழைந்திருக்க ஏதோ அவளுடைய மாமா இல்லாத அந்த பள்ளிக்கூடமே வெறிச்சென்று
இருப்பதை போல இருந்தது..
அவள் திரும்பும்
இடமெல்லாம் அவன் முகமாகவே தெரிந்தது.. அப்பொழுதுதான் சென்ற வருடம் இந்த மாதிரி அவள்
கஷ்டப்படக்கூடாது என்று நளன் அவளை விட்டு விலகி இருந்து அவளுக்கு பயிற்சி
கொடுத்தது நினைவு வந்தது...
“பாவம்.. மாமா
எனக்காகத்தான் பார்த்திருக்கிறான்...அவனைப் போய் அன்னைக்கு அப்படி அடித்து
விட்டேனே ! “ என்ற
புரிய அவளுக்கு தன் மாமனை நினைத்து பெருமையாக இருந்தது...
விரைவிலேயே அவளை
கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொண்டு தன் தோழிகளுடன் கலந்து பேச ஆரம்பித்தாள்..
கல்லூரியில்
சேர்ந்த நளனுக்கும் தமயந்தியை பார்க்காமல் ஏக்கமாக இருந்தது...
ஆனாலும் தன் ஏக்கத்தை
உள்ளுக்குள் மறைத்துக் கொண்டு தன் படிப்பில் கவனத்தை செலுத்தினான்..கல்லூரியில் முதல் செமஸ்டர் முடிந்தது...
செமஸ்டர் லீவுக்காக
வீட்டிற்கு வந்திருந்தான்...
முதல் நாள் இரவு
வீட்டிற்கு வந்தவன் அடுத்த நாள் நன்றாக தூங்கி எழுந்ததும் காலை பத்து மணி அளவில் எழுந்து குளித்துவிட்டு தன் அன்னை ஆசையாக சமைத்ததை சாப்பிட்டுவிட்டு
அத்தையை பார்த்து வருகிறேன் என்று தன் அத்தை வீட்டை நோக்கி கிளம்பி விட்டான்...
கூடவே
சென்னையிலிருந்து அவன் வாங்கி வந்திருந்த பொருட்களையெல்லாம் எடுத்துச் சென்றான்..
தங்கராசு அவன்
கல்லூரி செல்ல ஆரம்பித்ததும் அவன் ஊருக்கு வரும்பொழுது ஓட்டுவதற்காக அவனுக்கு
மோட்டார் பைக் ஐ வாங்கி கொடுத்திருந்தான்..
அந்த பைக்கில்
ஏறி அமர்ந்தவன் அதன் முன்னால் தான் வாங்கி வந்திருந்த பைகளை வைத்து விட்டு அந்த
பைக் ஐ ஸ்டார் பண்ணி ஓட்ட, அந்த கிராமத்து காற்று ஓடி வந்து அவன்
முன் உச்சி முடியை செல்லமாக கலைத்து விளையாடியது...
அதன் தீண்டல்
தன் அத்தை மகளின் தீண்டலை நினைவு படுத்த, உதட்டில் தானாக
புன்னகை அரும்ப அவளை பார்க்கு ஆவல் இன்னும் அதிகமானது...
“இப்பொழுது
இன்னும் வளர்ந்திருப்பாளோ? என்னை பார்த்ததும் வெட்க படுவாளோ? “ என்று ஏதேதோ எண்ணியவாறு தன் அத்தை வீட்டை நோக்கி பைக் ஐ
விரட்டினான்...
தன் அத்தை
வீட்டை அடைந்ததும் பைக் ஐ நிறுத்திவிட்டு இறங்கியவன் வீட்டின் முன் வாயில்
திறந்திருக்க நேராக உள்ளே சென்றான்..
வீட்டுக்குள்
யாரும் இல்லாததால் அழைத்து பார்த்தவன் அத்தையின் குரல் எங்கயும் கேட்காமல் போக அத்தை என்று அழைத்தவாறு
ஒவ்வொரு அறையாக பார்த்து வந்தான்...
அங்கிருந்த ஒரு
அறையில் பாட்டு சத்தம் கேட்க அந்த அறையை மெல்ல எட்டிப்பார்த்தான்..
அங்கு தன்
இடுப்பில் துப்பட்டாவை மடித்து கட்டிக் கொண்டு அங்கிருந்த டேப் ரெக்கார்டில் ஒலித்துக்
கொண்டிருந்த பரதநாட்டிய பாடல் ஒன்றுக்கு நடனமாடிக் கொண்டிருந்தாள் தமயந்தி...
அந்த பாடலின்
தாளத்திற்கு ஏற்ப தன் உடலை வளைத்து நெளித்து அழகாக ஆடிக்கொண்டிருக்க நளனோ அப்படியே
அசந்து போய் நின்றான்...
அவன் உள்ளே அதுவரை
போட்டு பூட்டி வைத்திருந்த காதல் மனம் வீறுகொண்டு எழுந்து வெளிவர அது அவன் கண்களில் தெரிய காதலுடன் அவளையே
ரசித்து பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்..
சிறிது நேரம் தன்னை
மறந்து ஆடிக் கொண்டிருந்தவள் தன்னை யாரோ பார்ப்பது போல் இருக்க ஆடியபடியே அந்த
அறையின் வாயிலை பார்த்தாள்..
அங்கு அவள்
மாமன் மகன் நளன் நின்றிருந்தான்...
அவனைக் கண்டதும்
எப்பவும் போல அவள் முகம் பூவாக மலர அவனைப் பார்த்து சிரித்தவள் பார்வை அவன்
கண்களுக்கு செல்ல அவன் கண்கள் எப்பொழுதும் போல் இல்லாமல் ஏதோ ஒரு மாதிரியாக
பார்த்துக் கொண்டு இருப்பதை கண்டதும் அவள் வயிற்றுக்குள் படபடக்க ஆரம்பித்தது...
அவனை, அவனின் அந்த பார்வை அவளுள்
சென்று ஏதோ மாற்றத்தை ஏற்படுத்த அடுத்த நொடி தன் வயிற்றை பிடித்துக் கொண்டு
ஆவென்று அலறி காலை மடக்கி தரையில்
அமர்ந்தாள்...
தன்னைக்
கண்டதும் பூவாக மலர்ந்த அவள் முகத்தையே
ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தவன் திடீரென்று அவள் அலறவும் அதில் திடுக்கிட்டு போனான்..
தன் கைகளில்
இருந்த பைகளை அப்படியே போட்டுவிட்டு
“தயா... “ என்று கத்தியபடி ஓடிச் சென்று அவள் அருகில்
அமர்ந்தான்..
“என்ன ஆச்சுடி? ஏன் இப்படி கத்துற? “ என்று பதற்றத்துடன் விசாரித்தான்..
அவளோ
“தெரியல டா மாமா...
திடீர்னு வயிறு ரொம்ப வலிக்குது.. “ என்று
கதற ஆரம்பித்தாள்..
அவனுக்கோ என்ன
செய்வது என்று தெரியாமல்
“அத்தை எங்க? “ என்று விசாரித்தான்..
“வீட்ல
எல்லாரும் வயிலுக்கு போயிருக்காங்க.. அறுவடை நடந்துகிட்டு இருக்குனால எல்லாரும்
அங்க போய் இருக்காங்க.. நான் தான் தனியா இருக்கேன் னு பாட்டை போட்டு ஆடிக்கிட்டு
இருந்தேன்.. திடீர்னு இப்படி வலிக்குது.. “ என்று வேதனையுடன் முனகினாள்..
“சரி டி.. நீ
கொஞ்சம் பொறுத்துக்க.. நான் பக்கத்து வீட்டு அக்கா இருக்காங்களான்னு பார்த்துட்டு
வர்றேன்.. “ என்றவன் அவசரமாக வெளியில் ஓடி
பக்கத்து வீட்டிலிருந்த ஒரு பெண்மணியை அழைத்து வந்தான்..
அவளும் உள்ளே
வந்து தமயந்தியை பார்த்துவிட்டு ஏதோ விசாரிக்க அவளும் பதில் சொல்ல அவள் வயிற்றை
சிறிது நேரம் நீவி விட்டவள் பின் வெளியில் வந்து
“நளா தம்பி... நீ
போய் உன் அத்தைய கூட்டிகிட்டு வா.. “ என்றார் சிரித்தவாறு.
அவள் சிரிப்பதை கண்டதும் கொஞ்சம் நிம்மதி அடைந்தவன்
“அக்கா..
தயாவுக்கு என்னாச்சு? ஏன் இப்படி கத்தினா? “ என்றான் இன்னும் பதற்றத்துடன்..
அவரோ வெட்கப்பட்டு
“எல்லாம் நல்ல
விஷயம் தான் தம்பி... உன் அத்த மவ பெரிய மனுஷி ஆயிட்டா.. நீ போய் உன் அத்தை கிட்ட
நான் சொன்ன மாதிரி சொல்லி சீக்கிரம் கூட்டிகிட்டு வா.. “ என்று சிரித்தார்..
அதை கேட்டு
புரியாமல் முழித்தவன்
“அக்கா.. பெரிய மனுஷி னா என்ன? “ என்று புரியாமல் கேட்க அவரோ என்ன சொல்வது என்று வெட்கப்பட்டு
சிரித்து
“நீ அதெல்லாம் உன்ற
அத்தகிட்டயே கேட்டுக்கோ..இப்ப சீக்கிரம் போய் அவங்களை கூட்டிகிட்டு வா... “ என்று விரட்டி விட்டவள் சிரித்து கொண்டே தமயந்தியை பார்க்க சென்றாள்..
வெளியில் ஓடி
வந்த நளன் அவன் வந்திருந்த பைக்கை எடுத்துக்கொண்டு வயலை நோக்கி வேகமாக ஓட்டினான்..
அங்கு தங்கராசு
மற்றும் சிங்காரம் இருவர் வயல்களிலும் அறுவடை நடந்து கொண்டிருக்க கன்னியம்மா ஒரு
கட்டிலை போட்டு அமர்ந்துகொண்டு அறுவடை செய்யும் ஆட்களை விரட்டி கொண்டிருந்தார்...
பக்கத்து வயலில்
தங்கராசு மற்றும் கண்ணம்மாவும் அவர்களுடைய வயலில் வேலை செய்து கொண்டிருந்தனர்..
நளன் வழக்கமாக
கன்னியம்மாவை கண்டாலே ஒதுங்கி சென்றுவிடுவான்.. அவனை ஏதாவது சொல்லி திட்டி
கொண்டே இருப்பார் என்று..
இன்று அவன்
இருந்த பதற்றத்தில் அவரை கூட கண்டுகொள்ளாமல் வேகமாக தன் அத்தையிடம் ஓடியவன் தங்கம்
வயலில் நெற்கதிர்களை அறுத்து கொண்டிருக்க, அவளுக்கு
கேட்கும் விதமாக
“அத்தை.... தயா பெரிய மனுஷி ஆகிட்டாளாம்... வயிறு
வலிக்குதுனு வயித்த புடிச்சிகிட்டு அழுவறா.. பக்கத்து வீட்டு அக்கா உங்கள
கூட்டிக்கிட்டு வரச் சொன்னாங்க... சீக்கிரம் வாங்க...”
என உரக்க கத்தி
சொல்ல அது அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர் அனைவர் காதிலும் விழ, எல்லாருமே
நிமிர்ந்து பார்த்து அவர்கள் அறுத்துக் கொண்டிருந்த நெற்கதிர்களை போட்டு விட்டு நளனை
பார்த்து சிரித்தனர்...
தங்கத்திற்கு
அவன் சொன்னதை கேட்டதும் ரொம்பவும்
மகிழ்ச்சியாக இருக்க, வயலில் இருந்து வேகமாக மேல ஏறி
வரப்பில் நின்று கொண்டிருந்தவன் அருகில் வந்தவர்
“நிஜமாதான் சொல்றியா
கண்ணா? “ என்று
சந்தேகமாக கேட்க
“ஆமா அத்தை... உங்கள்
பார்ப்பதறக்காக வீட்டுக்கு போயிருந்தேன்.. அப்பதான் தயா வயித்த புடிச்சுகிட்டு அழுது
கிட்டிருந்தா... “ என்று அவள் டான்ஸ் ஆடியதை
சொல்லாமல் மற்றதை மட்டும் சொன்னான்..
அதைக் கேட்ட
தங்கம் மகிழ்ந்து போய்
“என் ராசா...என்
ஆசை மருமவனே.. இப்படி ஒரு நல்ல செய்தியை
சொல்லியிருக்கிற.. உன் வாய்க்கு சர்க்கரை தான் போடணும்.. “ என்று சிரித்தவாறு தன் தலையில் கட்டியிருந்த மண்டக்காட்டு
துணியை அவுத்து உதறிவிட்டு மற்றவர்களை வேலையைப் பார்க்கச் சொல்லிவிட்டு வீட்டிற்கு
கிளம்பினாள்..
அங்கு
அமர்ந்திருந்த கன்னியம்மா வுக்கும் அந்த செய்தி காதில் விழுந்தது.. அதை கேட்டதும்
உள்ளுக்குள் சந்தோஷபட்டாலும் நளனை பார்த்ததும் முகத்தை திருப்பி கொண்டு அவனை ஏதோ
சொல்லி திட்டிக் கொண்டு இருந்தார்..
தங்கம் அதையெல்லாம்
காதில் வாங்காமல் பக்கத்து வயலில் இருந்த தன் அண்ணனையும் அண்ணியையும் அழைத்து
விசயத்தை சொல்லிவிட்டு நலன் உடனே பைக் ல் கிளம்பி விட்டாள்...
வரும் வழியில் நளனும்
“அத்தை... பெரிய மனுஷி ஆவறதுனா என்ன? “ என்று தன் சந்தேகத்தை விடாமல் கேட்டான்...
அதைக் கேட்ட
தங்கம் திகைத்துப்போய் என்ன சொல்வது என்று யோசித்தார்...
“அதான் மருமகனே...
நீ பெரிய மனுஷன் ஆயிட்ட ன உடனே உனக்கு மீசை
முளச்சது இல்ல...அது மாதிரி ஒரு பொண்ணு பெரிய மனுஷி ஆய்ட்டதுக்கு அவ உடம்புலயும்
சில மாற்றம் வரும்..அப்படி பெரிய மனுஷி ஆயிட்டா தான் அவ கல்யாணம் பண்றதுக்கு ரெடி ஆயிட்டான்னு அர்த்தம்..
“ இன்று மறைமுகமாக விளக்கினார்
அதைக் கேட்டதும்
ஏதோ புரிந்தது போல இருக்க
“அத்தை...அப்ப
நான் இப்பவே தயா வ கல்யாணம் பண்ணிக்கலாமா? கல்யாணம்
பண்ணிகிட்டு என் வீட்டுக்கு கூட்டிகிட்டு போய்டவா? “ என்றான் ஆர்வத்துடன்..
அதைக்கேட்டு
தங்கமும் இன்னும் மகிழ்ந்து போய்
“ஹ்ம்ம்ம் பண்ணிக்கலாம்
கண்ணா... ஆனா நீ இன்னும் படிச்சு பெரிய ஆளா ஆவோணும்.. தமாவும் இன்னும் படிக்கோணும்..அதுவுமில்லாமல்
அவளுக்கு பதினெட்டு வயசு ஆனாதான் கல்யாணம் பண்ண முடியும்..
நீ அதுக்குள்ள
உன் படிப்பு முடிச்சு பெரிய வேலைக்கு போயிடணும்..என் அண்ணன்,
உன் அப்பா எப்படி சம்பாரிச்சு குடும்பத்தை காப்பாத்தறாரோ அதே மாதிரி நீயும்
சம்பாதிச்சு உனக்கு வர்ற பொண்டாட்டிய காப்பாத்தோணும்..
அதுக்கு இன்னும்
நீ பெரிய ஆளா ஆவோணும்...பொறவுதான் உனக்கு கல்யாணம் பண்ண முடியும்.. “ என்று
இன்னும் ஏதேதோ எடுத்துச் சொல்லி அவனுக்கு புரிய வைத்தார்
சிறு வயதிலிருந்தே
அவன் அன்னையை விட அத்தை தங்கம் தான் அவனுக்கு ஒவ்வொன்றையும் சொல்லிக் கொடுத்து
வளர்த்தது... சிறுவயதில் இருந்தே தன் அத்தையிடம் எந்த தயக்கமும் இல்லாமல் மனம் விட்டு
பேசுவான்
அதனாலேயே தன்
மனதில் இருந்த சந்தேகத்தை அப்படியே தன் அத்தையிடம் கேட்க தங்கமும் அவனுக்கு
புரியும் விதத்தில் எடுத்து கூறினாள்...
இருவரும்
பேசிக்கொண்டே வீட்டை அடைந்ததும் நேராக தன் மகளை காணச் சென்றாள் தங்கம்..
அவளும் தன் அன்னையை
கண்டதும் அவரை கட்டிக் கொண்டு அழ , அவளை சமாதானப்படுத்தி சில அறிவுரைகளை வழங்கினார்...
அதற்குள்
சிங்காரமும் வந்துவிட அன்று நாள் நன்றாக இருப்பதாக சொல்லி அவளுக்கு குடிசு கட்ட
ஏற்பாடு செய்தனர்..
தங்கராசு
கண்ணம்மாவும் அவர்கள் பக்கமிருந்து சொந்தக்காரர்களை எல்லாம் அழைத்துக் கொண்டு
வந்திருக்க தமயந்திக்கு தலைக்கு தண்ணி ஊற்றி கண்ணம்மா வாங்கி வந்திருந்த தாவணி
பாவாடை அணிய வைத்தனர்..
கூடவே அவள்
கன்னத்தில் மஞ்சள் பூசி இருக்க, தாவணி பாவாடையில் திடீரென்று
பெரியவளாயிட்ட மாதிரி இருந்தது நளனுக்கு..
ஏற்கனவே அவள்
நடனத்தை பார்த்து கவிழ்ந்து போயிருந்தவன் அவளை இப்படி மஞ்சள் பூசி தாவணி பாவாடை
அணிந்து பார்க்க இன்னுமே அவனுக்குள் புரண்டது...
யாரும்
பார்க்காதவாறு ஓரக்கண்ணால் அடிக்கடி அவளை பார்த்து சைட் அடித்து கொண்டிருந்தான்...
கூடவே குடிசு
கட்டுவதற்காக தென்னை மட்டையை வெட்டி போட்டிருக்க, அங்கு
வந்திருந்த உறவினர்கள் எல்லாம் அந்த மட்டையை வைத்து கீத்து முடைந்து
கொண்டிருந்தனர்...
நளனும் தென்னை
மட்டையில் கீத்து முடைவதை கற்று வைத்திருக்க,
ஆர்வத்துடன் மற்றவர்களுடன் சேர்ந்து கொண்டு தன் அத்தை மகளுக்காக கீத்து
முடைந்தான்...
அதை கண்டு சொந்தக்காரர்கள்
எல்லாம் அவனை கேலி பேசி சிரித்தாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாம்ல் அவளுக்காக அதை
செய்வதில் அவனுக்கு பெருமையாக இருந்தது..
லேசாக
வெட்கபட்டு சிரித்தவாறு அவர்களுடன் இவனும் பதிலுக்கு திருப்பி கொடுத்தவாறு
கலகலப்புடன் கீத்துகளை முடிந்து முடித்தனர்..
அதை கொண்டு வீட்டு
பக்கத்திலேயே குடிசு கட்டினர்..
மாமன் மகன்தான்
அதை செய்யவேண்டும் என்பதால் நளனை அந்த கீத்துகளை வரிசையாக வைத்து குடிசு கட்ட
சொல்ல, பெரியவர்கள் சொல்லி கொடுத்த மாதிரி அவனும்
செய்தான்..
ஒவ்வொரு
கீத்தையும் எடுத்து வைக்கும்பொழுதும் அவனுள் ஏதோ பொங்கி பெருகியது...
அவளுக்கு, தன் செல்ல அத்தை மகளுக்கு, தன் மனதில் குடி இருப்பவளுக்கு, தனக்கு மனைவி ஆக போகிறவளுக்கு வசந்த மாளிகையே கட்டுவதை போல
உள்ளுக்குள் சிலாகித்து சிலிர்த்து போனான்...
பெரியவர்களும்
உதவி செய்ய, விரைவிலையே அழகான குடிசு ரெடியானது...
கண்ணம்மா தன்
மருமகளை அழைத்து வந்து குடிசுக்குள் விட அங்கு நடந்த ஒவ்வொரு நிகழ்வையும்
மனதுக்குள் பத்திர படுத்திக் கொண்டான் நளன்...
Comments
Post a Comment