தேடும் கண் பார்வை தவிக்க-18


 

அத்தியாயம்-18

டுத்ததாக இமிக்ரேஷன் செக்சன் வந்தது.. அதை கண்டு ரோஜாவுக்கு மீண்டும் பயமாக இருந்தது..  

அவளின் முகத்தில் இருந்தே அவளின் பயத்தை கண்டவன்

"ஹே ரோஜா.. எதுக்கு இப்படி பயந்துக்கற? " என்றான்

"வந்து....  இங்க கேள்வி கேட்பாங்களாம்...!  நாம் சரியான பதில் சொல்லலைனா திருப்பி இந்தியாவுக்கே அனுப்பிச்சிடுவாங்களாம்.. எனக்கு இன்டர்வ்யூனாவே கை கால்  உதறும் ரிஷி..

இங்க அதுவும் இந்த வெள்ள பன்னிங்க கேட்கறது சுத்தமா எதுவும் புரிய மாட்டேங்குது.. நான் ஏதாவது உளறி வச்சேனா? அதான் பயமா இருக்கு... " என்று அதே மிரட்சியுடன் கையை பிசைந்தாள்...

அவள் பயத்தை புரிந்து கொண்டவன்

"நீ ஒன்னும் பயந்துக்காத ரோஜா..ஐ வில் டேக் கேர்.. நீ எதுவும் பேசாமல் நான் சொல்வதற்கு மட்டும் தலையாட்டு.." என்று சொல்லி சிரித்தவாறு அவளை சமாதானப்படுத்தினான்..

அந்த வரிசையில் அவளை முன்னால் நிக்க வைத்து அவன் பின்னால் நின்றிருந்தான்... 

வரிசை முன்னால் நகர்ந்து செல்ல அந்த இமிக்ரேஷன் ஆபீசர் முன்னாடி வந்து நின்றாள் ரோஜா..

அந்த கேபின் உள்ளே இருந்தவனை பார்த்ததும் மிண்டும் கை கால்கள் உதற ஆரம்பித்தது... அந்த ஆபிசர் அவள் பாஸ்போர்ட் ஐ கேட்க இவளும் அதை சைகையில் புரிந்து கொண்டு அவள் பாஸ்போர்ட் ஐ சிறு துவாரத்தின் வழியாக உள்ளே விட்டாள்..

அதை வாங்கி பார்த்தவன் ரோஜாவையும் அந்த பாஸ்போர்ட்டில் இருந்த புகைப்படத்தில் இருந்த அவள் முகத்தையும்  உற்று பார்த்து ஒப்பிட்டு பார்த்தான்..

அவன் புருவங்கள் யோசனையில் நெறிய, அவளுடைய விரலை பிங்கர் பிரின்ட்ஸ் எடுக்கும் கருவியில் வைக்க சொல்லி ஆங்கிலத்தில் சொன்னார்..

அவர் சொல்லியது புரியவில்லை என்றாலும் சைகையை வைத்து புரிந்து கொண்டு கைகள் நடுங்க அந்த கருவியில் தன் விரலை மெதுவாக வைத்தாள்..

அதை கண்டவர் அவளிடம் ஏதோ ஆங்கிலத்தில்  கேட்க, பயத்தில் இருந்த ரோஜாவுக்கோ சுத்தமாக எதுவும் புரியவில்லை..பே பே என்று முழித்தவள் ரிஷியின் பக்கம் திரும்பி பார்க்க,  அதற்குள்  ரிஷியும் ஒரு அடி முன்னால் எடுத்து வைத்து  அவளுடன் வந்து அவள் அருகில் இணைந்து நின்று கொண்டான்.. 

அங்கே இருந்த இமிக்ரேஷன் ஆபீசர் ஐ பார்த்தவன் அவர் முன்பே ரிஷிக்கு பழக்கம் என்பதால் அவரை பார்த்து புன்னகைத்து

"ஹாய்..  மிஸ்டர் ஜேம்ஸ்.. ஹௌ ஆர் யூ டூயிங்.. " என்று புன்னகைக்க, அவரும் ரிஷியை  அடையாளம் கண்டுகொண்டு

“ஹாய் மிஸ்டர் ரிஷி.. ஐ அம் ஃபைன். ஹவ் ஆர் யூ டூயிங்.. வெல்கம் பேக் டு லண்டன்.. "என்று  புன்னகைத்தவர்  

“இவங்களை உனக்கு தெரியுமா? “  என்று ஆங்கிலத்தில் விசாரித்தார்..

ரிஷியும்  

“எனக்கு  தெரியும்..  எனி ப்ராப்ளம்? “  என்று வினவ

“ஆமா மிஸ்டர் ரிஷி... இவங்க போட்டோ மேட்ச் ஆகல..  பாஸ்போர்ட்டில் கொஞ்சம் டிஃபரண்டா இருக்கு.. “ என்றார் யோசனையாக...

“ஓ... எங்க நாட்டுல இப்படித்தான் இருக்கும்.. ஆதார் கார்டுல இருக்கிற போட்டோவ வச்சு கண்டிப்பா யாரையும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாது..அந்த அளவுக்கு வித்தியாசமா இருக்கும்..

இது ரோஜா எய்ட்டீன் இயர்ஸ்  முடிந்ததும்  எடுத்த போட்டோ.. அதனால அப்படித்தான் இருக்கும்.. “  என்று சிரித்தான்..  

அதைக்கேட்டு யோசித்தவர்

“ஹ்ம்ம் பிங்கர் பிரிண்ட் கூட சரியா மேட்ச் ஆகலை.. “என்று யோசனையாக ரோஜாவை பார்த்தார்..

ரோஜா வோ அவர்கள் பேசுவது புரியாமல் மீண்டும் திருதிருவென்று முழித்துக் கொண்டிருந்தாள்..  அதற்குள் ரிஷியும்..   

“ஓ.. ஷி இஸ் மை வைஃப் மிஸ்டர் ஜேம்ஸ்.." என்று அவள் தோளில் உரிமையோடு கையை போட்டு மெல்ல அணைத்து கொள்ள அவர்கள் பேசுவது புரியவில்லை என்றாலும் அவளை  காட்டி வைஃப் என்றதும் அவளை அணைத்து நிற்பதையும்  கண்டு கொண்டவள் திடுக்கிட்டு  வெடுக்கென்று தலையை நிமிர்த்தி ரிஷியை  பார்க்க அவனோ கண்களால் ஜாடை காட்டி எதுவும் பேசாத என்று அவளை அடக்கினான்...    

"வி ஆர் ரீசன்ட்லி மேரிட்..பாஸ்போர்ட்ல அதை அப்டேட் பண்ண நேரமில்லை..

ஹனிமூன்க்காக லண்டன் வந்திருக்கிறோம்.. யூ நோ அபௌட் மீ.. ஐ வில் பிக்ஸ் திஸ் நெக்ஸ்ட் டைம்.. கேன் யு அலவ் ஹெர் திஸ் டைம். ப்ளீஸ்.. " என்று வெண்பற்கள் தெரிய புன்னகைத்தான்..

ரிஷி ஒரு பெரிய பிசினஸ் மேன்.. லண்டனிலும் அவனுடைய தொழில்கள் பரந்து விரிந்திருப்பதும் மேலும் அவனை பெர்ஷனலாக தெரிந்திருப்பதால் அதற்கு மேல் நோண்டாமல் அவரும் சிரித்தவாறு பாஸ்போர்ட் ல் என்ட்ரி பண்ணிவிட்டு திருப்பி கொடுத்தார்..

பின் ரிஷியுடைய பார்மாலிட்டிஸ் எல்லாம் முடித்து அவனிடம் திருப்பி கொடுத்தவர்

"ஹேவ் எ ஹேப்பி மேரீட் லைப்.. என்ஜாய் யுவர் ஹனிமூன்.. " என்று புன்னகைக்க, ரிஷியும் புன்னகைத்து நன்றி சொல்லி ரோஜாவின்  தோளின் மீது கை போட்டு அணைத்தவாறே அந்த கேபின் ல் இருந்து வெளிவந்தான்...

வெளியில் வந்ததும்தான் இருவருக்குமே நிம்மதி மூச்சு வந்தது..

அவளை பார்த்து ஏதோ கேட்க வர, அதற்குள் தன் இடுப்பில் கையை வைத்து அவனைப் பார்த்து  முறைத்துக் கொண்டிருந்தவள்

"ஹலோ... என்னை எப்படி உங்க வைஃப் னு சொல்லலாம்...?  " என்று  கோபத்துடன் முறைத்து கொண்டு நின்றிருந்தாள் ரோஜா...

அவளின் கோபத்தில் முகம் சிவந்து இருக்கவும் மூக்கு குடை மிளகாய் போன்று விடைத்து கொண்டிருக்க, காது மடல்கள் சிலிர்த்து கொண்டு நின்றது...

அவளின் அந்த தோற்றத்தை கண்டு திகைத்து போனவன் அதை அவளை அப்படியே தன் மனதிற்குள் படம் பிடித்துக் கொண்டான்..  

இதுவரை அவனிடம் எந்த பெண்ணும் இப்படி சிலிர்த்துக்கொண்டு நின்றதில்லை.. எல்லாருமே வழிய வந்து பேசுபவர்களும் தானாகவே வந்து தன்மீது விழுபவர்களாகத்தான் இருந்தனர்...

ஆனால் அவளை தன் மனைவி என்று சொன்ன காரணத்துக்காக சண்டைக்கோழி யை போல தன்னிடம் சிலிர்த்துக் கொண்டு நின்று கொண்டிருப்பவளை கண்டதும் அவளை அப்படியே அள்ளிக் கொண்டு கோபத்தில் துடிக்கும் அவள் இதழை தன் வசப்படுத்தி அடக்க துடித்தது அவன் உள்ளே...

வழக்கம் போல முயன்று தன்னை கட்டு படுத்தியவன்

“ஹே...ரோஜா பொண்ணு !! எதுக்கு இப்படி சூடான பாப்கான் மாதிரி குதிக்கிற!!  ஆக்சுவலி நீ எனக்கு நன்றி சொல்ல வேண்டும்...இப்படி எல்லாம் என்னை பார்த்து முறைக்க கூடாது.

யு நோ ஒன் திங்க்....நான் இல்லாவிட்டால் உன்னை திருப்பி இந்தியாவிற்கே  அனுப்பியிருப்பார் ஜேம்ஸ்.. ஏதோ நான் அவரிடம் கெஞ்சி கேட்க உன்னை விட்டு விட்டார்..

“ஆமா.. அது எப்படி உன் போட்டோ ஃபிங்கர் பிரின்ட்ஸ் எதுவும் மேட்ச் ஆகல? “ என்று புருவத்தை உயர்த்தி கேள்வியாக கேட்டான்.. அவளோ அதில் திடுக்கிட்டவள்  அவன் சொல்லியதை கேட்டதும் தடுமாறியவள் சூடான மூடிலிருந்து அப்பாவி மூடுக்கு உடனே மாறிவிட்டாள்...

“ஹ்ம்ம்ம் எனக்கு தெரியல ரிஷி... அந்த மெஷின் ஏன் அப்படி காட்டுச்சுனு   தெரியல.. “ என்றவள் சுற்றிலும் பார்த்துவிட்டு அவர்கள் இருவர் மட்டும் தனியாக ஓரமாக நின்று இருக்க அவன் அருகில் வந்தவள் அவனை குனிய சொல்ல அவள் உயரத்திற்கு உடலை வளைத்து அவனும் குனிய அவன் காதருகில் வந்தவள்

“ஆக்சுவலி இந்த பாஸ்போர்ட் போட்டோ என்னுடைய 17ஆவது வயதில் எடுத்தது.. நான் பிறந்த அப்போ அஞ்சு வயசுலயே  கொஞ்சம் பெரிய பொண்ணாக இருக்க எங்க வீட்ல எனக்கு ஒரு வயசு சேர்த்து சொல்லி பள்ளிக்கூடத்துல சேர்த்து விட்டுட்டாங்க...  

அப்படி பார்த்தா என் சர்டிபிகேட் ல இருக்கிற டேட் ஆப் பர்த் ஃபேக்..  என்னுடைய ஒரிஜினல் பர்த் டேட் வேற.. சர்டிபிகேட் படி எனக்கு 17 வயசிலேயே பதினெட்டு முடிந்துவிட அப்பவே பாஸ்போர்ட் வாங்கியாச்சு..

ஒருவேளை அதுக்கப்புறம் நான் கிடுகிடுனு வளர்ந்துட்டனால என் கைரேகை யும் போட்டோவும் மேட்சாகலயோ...”  என்று தன் தாடையில் கை வைத்து யோசித்தாள் அப்பாவியாக...  

ரிஷிக்கு  அவளின் அந்த குழந்தைத்தனமான பேச்சும் கேசுவலாக அவனருகில் நின்று கொண்டு  அவன் காதில் ரகசியம் போல பேசி நின்றவளின் நெருக்கமும் உள்ளுக்குள் அவனை புரட்டிப் போட்டது..

அவளின் மெல்லிய இடை அவன்மீது லேசாக உரசி நிக்க அவள் சொல்லியது பாதி மட்டுமே அவன் மண்டைக்குள் ஏறியது.. மீதி எல்லாம் நுழையாமல் அவளின் நெருக்கத்திலும்,  10 மணி நேர பயணத்திற்கு பிறகும் அவளிடமிருந்து வந்த அந்த வாசமும் அவனுக்குள் கிறக்கத்தை கூட்டியது..

“இவள் மட்டும் என் உண்மையான மனைவியாக இருந்திருக்க கூடாதா...?? பொது இடம் என்றும் பார்க்காமல் அவளை அப்படியே அள்ளி கொண்டிருக்கலாம்...” என்று பெருமூச்சு வந்தது அவனிடமிருந்து...   

அவனுக்குள் இருக்கும் மாற்றத்தை அறியாத ரோஜா இன்னும் யோசித்துக் கொண்டிருக்க அவனுக்கோ அவனை கட்டுப்படுத்துவதே பெரும்பாடாக இருக்க அவள் சொல்லி முடித்ததும் சிரித்தவாறு நிமிர்ந்தவன் அவளை விட்டு கொஞ்சம் தள்ளி நின்று கொண்டான்..

அவள் சொல்லிய விளக்கத்தை கேட்டவன்  அவள் சொல்லுவது அபத்தம்..  ஒருவரின் கைரேகை எப்பொழுதும் மாறாது என்று புரிந்தாலும் அதைச் சொல்ல மனமில்லாமல் சிரித்தவாறு

“இருக்கலாம்...  இருக்கலாம்... “  என்று புன்னகைத்தவன்

“சரி வா போகலாம்... “  என்று சொல்லி எக்ஸிட் கேட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்..

பாதி வழி சென்றதும் ஏதோ ஞாபகம் வந்தவன்

“ஆமாம் ரோஜா...  நீ எப்படி போகப் போற? “  என்று கேட்டான்..

அப்பொழுது தான் ரோஜாவுக்கும் திக்கென்றது..

“எப்படி போவது? “  என்று  மீண்டும் தன் மூளையை தட்டி யோசிக்க அவள் போக வேண்டிய இடத்திற்கு கார் வந்து அழைத்துச்செல்லும் என்று சொல்லியிருந்தது நினைவு வர

“என்னை கூட்டிட்டு போக கார் அனுப்புவாங்க ரிஷி...” என்றாள்..  

உடனே அவனும்

“ஆமா..கேட்க மறந்துவிட்டேன்.. டான்ஸ் ப்ரோக்ராம் என்றால் நிறைய பேர் சேர்ந்து தானே வருவாங்க.. நீ மட்டும் தனியா வந்திருக்க.. மற்றவர்கள் எல்லாம் எங்கே? “  என்றான் யோசனையாக..

“வந்து....எனக்கு மட்டும் விசா வந்து சேர லேட்டாயிடுச்சு... மற்றவர்களெல்லாம் நேற்றே போய்விட்டார்கள்.. எனக்கு விசா ஒரு நாள் லேட்டா வந்ததால் நான் மட்டும் இன்னைக்கு தனியாக  வரவேண்டியதா ஆய்டுச்சு...” என்று உதட்டை பிதுக்கினாள் பாவமான லுக்குடன்..

“நீங்க மட்டும் கூட வரலைனா நான் ரொம்பவும் தடுமாறி போய்ருப்பேன்... ரொம்ப தேங்க்ஸ்.. “ என்று வெண்பற்கள் தெரிய சிரித்தாள்...

அதில் தெரிந்த பளிச்சென்ற முகம் இன்னுமாய் அவனை மயக்கியது...

“யூ ஆர் வெல்கம்... இன்பேக்ட் நீ கூட வந்ததால் எனக்கும் போர் அடிக்கல...ஒவ்வொரு முறை லண்டன் வரும்பொழுதும் கடியா இருக்கும்.. பத்து மணி நேரத்தை ஓட்டறது பெரும் கஷ்டமா இருக்கும்.. பட் திஸ் டைம் ஐ என்ஜாய்ட் யுவர் கம்பெனி.. தேங்க்ஸ் பார் தட்.. “ என்று அவனும் சிரித்தான்...

அதற்குள் அவர்கள் விமான நிலையத்தில் இருந்து வெளி வந்து டாக்சி நின்றிருக்கும் இடத்தை அடைந்தனர்...

அங்கு ரிஷியின் பெயர் தாங்கி ஒரு நபர் நின்றிருக்க, ரிஷி அவரை பார்த்ததும் முகம் மலர கை அசைத்து சிரித்தான்..

அடுத்து ரோஜாவை அழைத்து செல்ல வந்திருக்கும் நபரை தேடினர் இருவரும்.. அவள் பெயர் தாங்கி யாராவது இருக்கிறார்களா என்று பார்க்க அப்படி யாரும் இல்லை..

அதைக் கண்டு லேசாக திடுக்கிட்ட ரோஜா மீண்டும்  சுற்றிலும் கண்களால் தேடி பார்த்தாள்.. யாரும் வந்திருக்கவில்லை..

அதை கண்டு திடுக்கிட்டவள்

“ஐயோ.. இவ்ளோ பெரிய லண்டனில் எப்படி தனியாக இந்த இடத்தை கண்டுபிடித்து செல்வது? பேசாமல் நான் வந்திருக்கவே கூடாதோ? இவ்வளவு ரிஸ்க் எடுத்து எதுக்கு வந்தேன்..?  “ என்று யோசித்தவள் அவள் வந்ததன் நோக்கம் உறைக்க,  இன்னும் அவள் முகம் கலக்கமடைந்தது...

அவள் முகத்தில் இருந்த பயத்தை கண்டவன் அவள் அருகில் நெருங்கி நின்று கொண்டவன்

“டோன்ட் வொர்ரி ரோஜா பொண்ணு...உன்னை இப்படியே தனியா விட்டுட்டு நான் போக மாட்டேன்.. சரி... உன்னை அழைத்து செல்ல வருபவரின் கான்டாக்ட் நம்பர் இருக்கா? “  என்றான் யோசனையாக..

உடனே அவளும் தன் ஹேன்ட் பேக் ஐ திறந்து முன்பு காட்டிய அந்த துண்டு சீட்டை திரும்பவும் எடுத்து அதில் அவள் குறித்து வைத்திருந்த முகவரியையும் அதில் அவள் தொடர்பு கொள்ளவேண்டிய லண்டன் தொலைபேசி எண்ணையும் பார்த்து உறுதி செய்து கொண்டவள்

“ஹ்ம்ம்ம் இருக்கு... “ என்று  தலை அசைத்தாள்.

“வெரி குட்... எங்கே கொடு பார்க்கலாம்.. “  என்று கை நீட்டி அந்த சீட்டை வாங்கியவன் தன் அலைபேசியை எடுத்து அதில் இருந்த எண்ணை டயல் செய்தான்...

சிறிது நேரத்திற்குப் பிறகு அவன்  அழைப்பு ஏற்கப்பட அதில் குறிப்பிட்டிருந்த நபரின் பெயரை விக்டர் என்பதை உறுதி செய்து கொண்டவன் தன்னை அறிமுக படுத்தி கொண்டு  சென்னையிலிருந்து ரோஜா வந்து இருப்பதை சொல்லி அவளை பிக்கப் பண்ண கார் அனுப்பி விட்டார்களா என்று விசாரித்தான்..  

அதைக் கேட்டதும்  மறுமுனையில் இருந்தவர்

“ஐம் சாரி மிஸ்டர் ரிஷி.. அவங்களை பிக்கப் பண்ண அனுப்பின கார் வழியில் ப்ரேக்  டவுன் ஆயிருச்சு.. இன்னும் ஏர்போர்ட் வந்து சேர அரை மணி நேரம் ஆகும்..”  என்றான் வருத்தத்துடன்..  

அதைக்கேட்டு கோபமடைந்த ரிஷி

“என்ன விக்டர்...!  இப்படி கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் இருக்கீங்க..  உங்கள நம்பி அவ்வளவு தூரத்திலிருந்து ஒரு பொண்ணு தனியா வந்து இருக்கா..  அதுவும் முன்ன பின்ன இந்த மாதிரி ஃப்ளைட்ல வந்ததில்லை..

அப்படி இருக்க,  நீங்க ப்ராப்பரா வந்து ரிசீவ் பண்றது இல்லையா?  இதுதான் நீங்க ஒரு ஃபங்ஷன் ஆர்கனைஸ் பண்ணி நடத்துற லட்சணமா? இப்படித்தான் பொறுப்பில்லாமல் நடந்துப்பீங்களா?

அவங்க பாட்டுக்கு இங்கே வந்து லண்டன் ல முழிச்சுக்கிட்டு இருந்தாலோ இல்ல எங்கேயாவது காணாமல் போயிருந்தால்  நீங்க என்ன பண்ணுவீங்க? “  என்று இன்னும் ஏதேதோ சொல்லி லெப்ட் அன்ட் ரைட் வாங்கினான் ரிஷி..

அதுவரை அவளிடம் ஜாலியாக சிரித்துப் பேசிக் கொண்டிருந்தவன்  தன்னை அழைத்துச் செல்ல ஒருத்தர் வரவில்லை என்றதும் அவன் முகத்தில் தெரிந்த கோபத்தைக் கண்டதும்  ஆச்சரியமாக இருந்தது ரோஜாவுக்கு..

யார் என்றே தெரியாத தன் மீது இவ்வளவு அக்கறை காட்டுகிறான் என்று அதிசயமாக இருந்தது..  

இதுவரை அவளுக்கு இருந்த பதற்றத்தில் அவனை முழுவதுமாக பார்க்காமல் இருந்தாள்..இப்பொழுது இவன் நல்லவன் தனக்காக பார்த்து பார்த்து செய்கிறான் என்று அவன் மீது நம்பிக்கை வந்து விட, அவள் பயம் ஓரளவுக்கு விலகி இருக்க, ஓரக்கண்ணால் அவனை  எடை போட்டாள் ரோஜா..  

ஆறடிக்கும் மேலான உயரத்தில் செதுக்கி வைத்த கிரேக்க சிலைபோல கம்பீரமாக நின்றிருந்தான் ரிஷி..கோபத்தில் அவன் முகம் இறுகி கண்கள் இடுங்க மறுமுனையில் இருந்தவனிடம் மிரட்டலாக பேசிக் கொண்டிருந்த  தோரணையை கண்டு மிரண்டு போனாள்..  

அவன் தோற்றத்திலும் அவன் பேசும் நுனி நாக்கு ஆங்கிலத்திலும்,  சாதாரணமாக இருக்கும் பொழுதெ அவனில் தெரிந்த ஒரு ஆளுமையும் கம்பீரமும் அவன் ஒரு பெரிய இடத்து ஆள் என்று புரிய அதுவரை அவனிடம் சரிக்கு சரியாக வாய் அடித்துக்கொண்டு வந்தவள்  உள்ளே கிலி பரவ ஆரம்பித்தது...

“இவ்வளவு பெரிய பணக்காரனிடமா இவ்வளவு நேரம் ஜாலியாக பேசிக் கொண்டு வந்தேன்.. “  என்று யோசித்தாள்..

ஆனால் அவன் தன்னை ஒரு பணக்காரன் என்று காட்டிக் கொள்ளாமல் மிக இயல்பாக அவளிடம் பேசியதும்  பழகியதும் கண்முன்னே வந்தது..

உடனே

“அவன்  எவ்வளவு பெரிய பணக்காரனாக இருந்தாலும் எனக்கு என்ன வந்தது? நான் எப்படியாவது பத்திரமாக நான் போக வேண்டிய இடத்துக்கு போக வேண்டும்..  அதற்கு பிறகு அவன் யாரோ நான் யாரோ !!”  என்று தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டாள்..  

மீண்டும் கலக்கத்துடன் அவன் பேசிக்கொண்டிருந்ததை கவனிக்க ஆரம்பித்தாள்.. இந்த முறை நிறுத்தி பொறுமையாக ஆங்கிலத்தில் பேச அவன் பேசுவது அவளுக்கு நன்றாகவே புரிந்தது...

எதிரில் இருந்தவனை திட்டி முடித்து தன் அலைபேசியை அணைத்தவன்  “இடியட்.. “ என்று  தன் காலை தரையில் வேகமாக உதைத்தான் கோபத்தில்...

“சே.. எப்படி பொறுப்பில்லாம இருக்காங்க... அவங்க அனுப்பின கார் வந்து சேர அரை மணி நேரம் ஆகுமாம்... தனியா வர்ற உன்னை இப்படியா கேர்லெஸ் ஆ ட்ரீட் பண்ணுவாங்க... நீ யார் தெரியுமா? “ என்று  ஏதோ சொல்ல வந்தவன் பாதியில் நிறுத்தி கொண்டான்.

அவன் மனதில் அவளை தன் மனைவியாக எண்ணி கொண்டிருந்தவன் அவளை அரை மணி நேரம் காக்க வைப்பது கூட பிடிக்காமல்தான் மறுமுனையில் இருந்தவனிடம் எகிறினான் ரிஷி..

ஆனால் உண்மையில் அவள் அவன் மனைவி இல்லையே... உடனே அந்த உண்மை புரிய முயன்று தன்னை கட்டு படுத்தி கொண்டவன், மீண்டும் அந்த நபருக்கு அழைத்து

“சாரி மிஸ்டர் விக்டர்.. இப் யூ டோன்ட் மைன்ட், நீங்க அனுப்பின காரை திரும்ப கூப்பிட்டுக்கங்க.. நான் போக வேண்டிய இடம் உங்க இடத்தை தாண்டிதான் இருக்கு.. அதனால் என் வைஃப் . .என்று சொல்ல வந்து மீண்டும் நிறுத்தி கொண்டு

“ரோஜாவை நானே உங்க அட்ரசில் ட்ராப் பண்ணிடறேன்... பட் அதுக்குமேல நீங்க பத்திரமா பார்த்துக்கங்க.. “ என்று மீண்டும் வார்ன் பண்ணி அழைப்பை அணைத்தவன் ரோஜாவை பார்த்து

“ரோஜா பொண்ணு..இந்த மாதிரி பொறுப்பில்லாதவங்களையெல்லாம் நம்பி இனிமேல் இப்படி தனியா வராத.. நான் இல்லைன்னா நீ எப்படி தடுமாறிப் போய் இருப்ப..

அதனால இனிமேல் முன்ன பின்ன பழக்கப்படாத இடத்துக்கு தனியா போகாதே..இப்போ நானே உன்னை ட்ராப் பண்ணுறேன்..  வா.. “  என்க அவளோ மிரண்டு போய் இரண்டு அடி பின்னால் தள்ளி நின்றாள்..

அதைக் கண்டவன் முகம் சுருக்கி புருவத்தை உயர்த்தி ஏன் என்னாச்சு என்று கேள்வியாக கேட்க

ரோஜாவுக்கோ முன்ன பின்ன தெரியாத அவனுடன் செல்ல மனம் வரவில்லை.. ஆனால் அந்த காரணத்தை நேரடியாக சொல்ல விரும்பாமல்

“வந்து...  உங்களுக்கு எதுக்கு சிரமம் ரிஷி... ஒரு அரை மணி நேரம் தான.. நான் இங்கயே வெய்ட் பண்றேன்.. அந்த டாக்ஸி வந்ததும் போய்க்கிறேன்..”  என்று தயக்கத்துடன் இழுத்தாள்..

அதைக்கேட்டு முகம் இறுகியவன் அவள் அவனுடன் வர தயங்குவதன் காரணம் புரிய,  

“ஓய்... உன்னை என்ன நான் கடத்திக்கிட்டா போயிடுவேன்?  இல்ல உன் மேல பாய்ஞ்சிடுவேனா.. உனக்கு அப்படி பயம் இருந்தால்,  இங்கே வந்திருக்கிறாரே என் டிரைவர் அவர் நம்ம ஊரை சேர்ந்தவர்தான்..

அவரும் காரில்தான் இருக்க போகிறார்.. உன்னை கூட்டிகிட்டு போய் நீ போக வேண்டிய இடத்தில் விடப் போகிறார்..

அப்படி எதுவும் என்னை மீறி  நான் உன் கிட்ட வந்தா, நீ அவர்கிட்டயே சொல்லு..அவரும் தமிழ்காரர் தான்.. “  என்று சிடுசிடுக்க, அதற்குமேல் ரோஜாவுக்கும் மறுக்க மனம் வரவில்லை..

சரி என்று தலையசைக்க,  அவனும் விறுவிறுவென்று அவன் பெயரை எழுதி வைத்திருந்த அந்த நபரிடம் சென்றான்.. அவன் வேகத்துக்கு ஈடு கொடுத்து நடக்க முடியாமல் அவனுடன் ஓடினாள் ரோஜா...

அவனும் நின்று அவளைக் கூட்டிச் செல்லாமல் முறைத்துக் கொண்டு நடக்க அவளும் வேறு வழியில்லாமல் அவனைப் பின்பற்றி ஓடத்தான் செய்தாள்..

அந்த பெரியவரை அடைந்ததும் அவரை பார்த்து புன்னகைத்தவன்

“என்ன மாணிக்கம் தாத்தா...  நல்லா இருக்கீங்களா? “  என்று தமிழில் நலம் விசாரித்தான்..  

அவரும் இவனைப் பார்த்து வாய் நிறைய சிரிப்புடன்

“வாங்க சின்னையா... உங்க புண்ணியத்துல நான் எப்போவும் போலதான் இருக்கேன்... உங்கள தான் பார்த்து ரொம்ப நாளாச்சு..

பெரிய அய்யாவும் அம்மாவும் அடிக்கடி வருவாங்க அவங்க போனதுக்கப்புறம் உங்கள இந்தப் பக்கமே காணமே எங்களை எல்லாம் மறந்துட்டீங்களா? “  என்று தழுதழுத்தார்..

அப்பொழுதுதான் அவனுக்கு அவர் பெற்றோர்களின் ஞாபகமே வந்தது..

அந்த விமானத்தில் ஏறி அமர்ந்த பொழுது தன் பெற்றோர்களை நினைத்துக் கொண்டு வலி வேதனையில் துடித்தது..

அதன்பிறகு ரோஜாவை பார்த்தபிறகு அவர்கள் நினைவே இல்லாமல் போனது நினைவு வர உள்ளுக்குள் வியந்து போனான்..  

“அந்த அளவுக்கா இந்த மான்குட்டி என்னை பத்து மணி நேரத்தில் மாற்றிவிட்டாள்..என் பெற்றோர்களை கூட மறக்கடித்து விட்டாளே..  கெட்டிக்காரி தான்.. “  என்று உள்ளுக்குள் மெச்சி கொண்டவன் அதுவரை இறுகியிருந்த முகம் இலக ஆரம்பித்தது..

அவரை மெல்ல கட்டி அணைத்தவன்

“இனிமேல் அடிக்கடி வருவேன் தாத்தா... “  என்று வெண்பற்கள் தெரிய சிரித்தான்..  

அவனின் சிரிப்பு அவளுக்குள் ஆறுதலை கொடுத்தது.. பின் அவளை காட்டி  இவ  என்று ஒருமையில் ஆரம்பித்தவன் அதை திருத்தி கொண்டு

“இவங்க பேரு ரோஜா...சென்னையிலிருந்து என் கூட வந்தாங்க தாத்தா.. இவங்களை அவங்க இடத்தில இறக்கி விட்டுட்டு போகலாம்.. “ என்று சொல்ல அவரும் அவளை மேலிருந்து கீழாக பார்த்து புன்னகைத்தவர்

“வணக்கம் மா... இப்படி கண் குளிர நம்ம ஊரு புள்ளைங்கள பார்த்து எத்தன நாளாச்சு... வா தாயி... நாம போலாம்... “ என்று கை குவித்து சிரிக்க, ரோஜாவும் அவரை பார்த்து கை குவித்து வணக்கம் சொல்லி புன்னகைத்தாள்..

அவள் பையை பின்னால் இருந்த டிக்கியில் வைத்து விட்டு காரின்  பின் இருக்கையில் அமர்ந்து கொள்ள, ரிஷியும் அவனுடைய ப்ரீப் கேஸ் ஐயும் டிக்கியில் வைத்துவிட்டு கேசுவலாக வந்து பின்னால் அவள் அருகில் நெருங்கி  அமர்ந்து கொண்டான்..

அவன் அருகில் நெருங்கி அமர என்னவோ போல இருக்க, மெல்ல நெளிந்தவாறு தள்ளி அமர முயல, அவனோ அவளை பார்த்து முறைத்தான்..

அவளும் பயந்து போய் அப்படியே அமர்ந்து கொள்ள, உள்ளுக்குள் சிரித்தவாறு அவளை பற்றி விசாரிக்க ஆரம்பித்தான்..சிறிது நேரம் பொதுவாக பேசி கொண்டிருந்தவன்

“ஆமா ரோஜா... என்னையெல்லாம் உன் ப்ரோகிராமிற்கு அழைக்க மாட்டியா?“  என்று குறும்பாக சிரிக்க,

“ஐயோ வாங்க ரிஷி.. கண்டிப்பா வாங்க.. நாளைக்கு மாலை 5 மணிக்கு ப்ரோகிராம். நான் கொடுத்தேனே அதே அட்ரஸ் தான்.. கண்டிப்பா வாங்க.” என்று புன்னகைத்தாள்..

அவனுக்கும் அவள் நடனத்தை பார்க்கவேண்டும் போல இருக்க, நாளை மாலை செல்ல வேண்டும் என்று மனதில் குறித்து கொண்டான்...

அவளை தன்னுடன் இன்னும் இயல்பாக பேச வைக்கவேண்டும் என்று எண்ணியவன் பரத நாட்டியத்தை பற்றி கேட்க அவளும் கண்கள் விரிய பரத நாட்டியத்தின் அருமை பெருமைகளை விளக்கினாள்..

காதில் மாட்டி இருந்த சிமிக்கி அசைந்தாட, கைகளை அசைத்து அவள் பேசிய விதம் அப்படியே அவன் மனதில் பதிந்துவிட்டது...ஏதோ யோசித்தவன்

“ஹோய்.. ரோஜா... வேணும்னா நீயும்  வாயேன்.. என் வீட்டுக்கு போய்ட்டு நாளைக்கு காலையில் நீ இருக்கற இடத்துக்கு போய்டலாம்.. “ என்றான் ஆர்வமாக..

அதை கேட்டு இன்னும் திடுக்கிட்டவள் சமாளிக்கும் விதமாக

“இல்ல ரிஷி.. நான் போனதுக்கப்புறம் எங்க டீம் கூட இன்னும் கொஞ்சம் ப்ராக்டிஸ் பண்ண வேண்டி இருக்கு.. நான் அங்க இருந்தால் வசதியா இருக்கும்.. சாரி... “ என்று நாசுக்காக மறுத்துவிட்டாள்..

அவள் மறுப்பதன் காரணம் புரிந்தாலும் உள்ளுக்குள் அவளை மெச்சி கொண்டவன் பின் அவள் குடும்பத்தை பற்றி கேட்க, அவளோ நாசுக்காக அதை தவிர்த்து அவனை பற்றி கேட்க ஆரம்பித்தாள்..

அவன் அவனை பற்றி சொல்ல ஆரம்பிக்க, அதற்குள் அவள் இறங்க வேண்டிய இடம் வந்திருந்தது...

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!