தேடும் கண் பார்வை தவிக்க-19
அத்தியாயம்-19
அது ஒரு மூன்று நட்சத்திர ஹோட்டல்...
கார் அதன் நுழைவாயிலில் சென்று நிக்க, ரிஷி மீண்டும் ஒருமுறை அந்த விக்டரை அழைத்து அந்த இடத்தை உறுதி
செய்து கொண்டவன் கதவை திறந்து முதலில் இறங்கியவன் அவள் இறங்குவதற்கு கதவை திறந்து
வைத்து கொண்டு காத்திருந்தான்..
அவளும் தன் புடவையை லேசாக சுருட்டி
கொண்டு தன் காலை முதலில் வெளியில் நீட்டி
இறங்க முயல அவள் கணுக்காலில் சென்று நின்றது அவன் பார்வை..
மெல்லிய வழுவலுப்பான காலில் வழுக்கி
கொண்டு அவனை பார்த்து கண் சிமிட்டி சிரித்தது அவள் காலில் இருந்த கொலுசு..
அவன் கணவில் வந்த திருமணத்தில் அவள்
காலை பிடித்து அவன் மெட்டியை போடும்பொழுது கவனித்த அதே கொலுசு..
அவன் இப்பொழுதுதான் அவள் காலையே
பார்க்கிறான்.. ஆனால் அவன் கனவில் இதே கொலுசும் அவளின் அதே மெல்லிய பாதங்களும்
அப்படியே இருந்தன..
“இது எப்படி சாத்தியம் ? “ என்று யோசித்து
கொண்டிருக்க, அவளோ அதற்குள் இறங்கி நின்று தன்
புடவையை சரி செய்து கொண்டு காரின் பின்னால் சென்றாள் அவள் பையை எடுப்பதற்காக..
அவனும் தன் தலையை தட்டி கொண்டு
அவளுக்கு உதவி செய்ய, அதற்குள் அவன் அழைத்து பேசியிருந்த
விக்டர் வாயிலுக்கே வந்து விட்டான்..
அவனுக்கு ரிஷியை பற்றி தெரிந்து
இருந்ததால் அவ்வளவு பெரிய தொழிலதிபர் தான்னுடன் பேசியதே அவனுக்கு பெருமையாக
போய்விட்டது..
கூடவே அவ்வளவு பெரிய மல்ட்டி மில்லினர், அந்த நாடக குழுவில் இருக்கும் ஒரு சாதாரண பெண்ணை இவ்வளவு தூரம்
கொண்டு வந்து விட்டு செல்வது அவனால் நம்பவே முடியவில்லை..
ரிஷி கையை பிடித்து குழுக்கி
“ரிஷி சார்... நீங்க எவ்வளவு பெரிய
ஆள்.. உங்களை இப்படி நேர்ல சந்திப்பேனு கனவுலயும் நினைத்ததில்லை.... ஐம் சோ
லக்கி... “ என்று அசட்டு சிரிப்பை
சிரித்து வைக்க, ரிஷியும் புன்னகைத்து
“மிஸ்டர் விக்டர். ரோஜா எனக்கு ரொம்ப வேண்டியவ.. எதாவது உதவினா என்னை கால்
பண்ணுங்க... டேக் கேர் ஹெர்.. “ என்றான் மிடுக்குடன்..
“ஸ்யூர் சார்...நீங்க ஒன்னும்
கவலைப்படாதிங்க.. அப்புறம் நீங்களும் ப்ரோக்ராமுக்கு வாங்க.. “ என்று அவனையும்
மரியாதை நிமித்தம் அழைத்து விட்டு ரோஜாவை அழைத்து கொண்டு சென்றான் விக்டர்..
அவளும் இருவருக்கும் கை அசைத்து விடை
பெற, ரிஷிக்கோ மனதை பிசைந்தது..
இதுவரை தன்னுடன் இருந்த உயிர்
இப்பொழுது தன்னை விட்டு பிரிந்து செல்வதை போல வலி இதயம் முழுவதும் பரவியது.. அவளை
விட்டு பிரிய மனம் இல்லாமல் அவளை அப்படியே இழுத்து அணைத்து கொள்ள தவித்தது அவன்
உள்ளே..
ரோஜாவும் விக்டர் உடன் நடந்தாலும்
சிறிது தூரம் சென்றதும் ஏதோ உந்த திரும்பி ரிஷியை பார்க்க அந்த பார்வையில்
இன்னுமாய் கவிழ்ந்து தொலைந்து உருகி போனான் ரிஷி..
“ரோ......ஜா..........” என்று மெல்ல
அழைத்தான் அவனுக்கே கேட்காமல்..
அந்த மெல்லிய குரலும் அவளுக்கு கேட்டு விட
மீண்டும் நின்று திரும்பி பார்த்தாள்
ரோஜா.... உடனே வேகமாக அவள் அருகில் சென்றவன் தன் விசிட்டிங் கார்டை எடுத்து கொடுத்து
“ஏதாவது உதவி என்றால் எனக்கு கால்
பண்ணு.. டேக் கேர் ... “ என்றான் தழுதழுத்தவாறு..அவளும் தலை அசைத்து செல்ல அவள்
மறையும் வரை அவளையே பார்த்து
கொண்டிருந்தான்..
பின் காருக்கு திரும்பி வர, மாணிக்கம் காரை எடுக்க
காரில் அமர்ந்தவனுக்கோ மனம் எல்லாம் பாரமாக இருந்தது... எதையோ இழந்து விட்டதை போல
அவன் இதயம் அடித்து கொண்டது...
அந்த வலி தாளாமல் கண் மூடி இருக்கையில்
சாய்ந்து கொண்டான்... அதற்குள் அவன் வீடு வந்திருக்க,
மெல்ல கண் விழித்தான் ரிஷி..
காரின் முன்புறம் பார்க்க
பிரம்மாண்டமாக நின்று கொண்டிருந்தது அந்த மாளிகை..
அவன் தந்தை அவருடைய அன்னைக்காக
பார்த்து பார்த்து கட்டிய மாளிகை அது..
அதை பார்த்ததும் இதுவரை மறைந்திருந்த அவனுடைய
பெற்றோர்களின் ஞாபகம் கண் முன்னே வர இப்பொழுது அந்த வலியும் சேர்ந்து கொண்டது..
மாணிக்கம் கார் உள்ளே இருந்த ஒரு
பட்டனை அழுத்த அந்த பிரம்மாண்டமான கேட் தானாக திறந்து கொண்டது.. அதன் உள்ளே சென்று
போர்ட்டிகோவில் காரை நிறுத்தியவர் கீழே இறங்கி டிக்கியில் இருந்த ரிஷியின் ப்ரீப்
கேஸ் ஐ எடுத்துக் கொண்டார்...
ரிஷியின் முகம் கலங்கி போய் இருக்க அவனுடைய
வேதனையை கண்டு கொண்டவர்
“சின்னய்யா... பழசை நினைச்சுக்காதீங்க..
முன்ன மாதிரி எப்பவும் சிரிச்சுக்கிட்டே
இருங்க.. அதுதான் உங்க அம்மாவுக்கும் அப்பாவுக்கும் பிடிக்கும்.. “ என்ற ஆறுதல் சொல்லி அந்த மாளிகையின் கதவை
திறந்து கொண்டு உள்ளே சென்றார்..
கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு
மேலாகிவிட்டது அவன் லண்டன் வந்ததும் இந்த வீட்டிற்கு வந்ததும்.. பெற்றோர்கள்
இழந்ததும் அவனுக்கு லண்டனே வெறுத்துவிட்டது..
எந்த ஒரு அலுவலக வேலையாக இருந்தாலும் அவனுடைய
மற்ற மேனேஜர்களையே அனுப்பி வைத்தான்.. தனிப்பட்ட அவன் சொந்த வேலை என்றால் கூட அவன்
செயலாளர் விஷ்ணு வந்து பார்த்துக் கொள்வான்..
அப்படி ஒதுங்கி இருந்தவனுக்கு இன்று
கட்டாயம் வரவேண்டிய சூழ்நிலை ஆகிவிட நீண்ட நாட்களுக்கு பிறகு அந்த இல்லத்தை
பார்க்க அவன் பெற்றோர்களின் நினைவு அடித்து கொண்டு வந்தது...
நேராக மாடி ஏறி சென்றவன் தன் ப்ரீப் கேஸ்
ஐ வைத்து விட்டு வேறு ஒரு உடைக்கு கூட மாற
பிடிக்காமல் அப்படியே படுக்கையில் சரிந்தான்...
இலவம் பஞ்சினால் ஆன அந்தப் மெத்தை அவனை
அப்படியே உள் வாங்கி கொண்டது..
அது அவன் அன்னையின் மடி போல மெது
மெதுவாக சுகமானதாக இருந்தது..
அவன் தந்தை அவனுக்கென்றே பிரத்யேகமாக
ஆர்டர் கொடுத்து தயாரித்த மெத்தை அது... அதன் மென்மையும் அதில் இருந்து வரும்
மெல்லிய நறுமணமும் அவன் அன்னை கஸ்தூரியின் அருகில் இருப்பது போலவும் அவரை கட்டி
கொண்டு உறங்குவதை போலவும் இருக்கும் அவனுக்கு..
தன் அன்னையை விட்டு பிரிந்து இருந்த பள்ளி
மற்றும் கல்லூரி காலங்களில் அடிக்கடி தன்
மெத்தையில் படுத்து கொண்டு அதன் மென்மையும் அதன் வாசத்தையும் முகர்ந்து
அனுபவிப்பான்..
இன்றும் அதெல்லாம் தன் தாயை நினைவு
படுத்த, அவனுக்குள் வலிக்க செய்தது.. உடனே அதை
தவிர்க்க எண்ணிய அவன் மனம் அந்த மான்குட்டியிடம் தாவியது....
அவளை பார்த்த அந்த நொடியில் இருந்து
மீண்டும் எல்லாம் நினைத்து பார்த்தான்..
ஒவ்வொரு நொடியும் அவள் அவனுக்கு
வித்தியாசமானவளாக தோன்றினாள்..
தன் வீட்டிற்கு அழைத்து அவள் மறுத்து
விட்டதை கண்டு ஆச்சரியமாகத்தான் இருந்தது..
இதுவரை அவன் சந்தித்த பெண்களெல்லாம் அவனை
பற்றி தெரிந்து கொண்டு அவர்களாகவே வலிய வந்து அவனுடன் தொற்றிக்கொண்டு அவன்
வீட்டிற்கு வந்திருக்கின்றனர்.. இவள்
தானாகவே அழைத்தும் மறுத்து விட்டதை
எண்ணி மீண்டும் வியந்து போனான்..
அவளைப் பற்றி எண்ணும் பொழுது அவன்
மனதில் இருந்த வலியும் வேதனையும் மறைந்து மெல்லிய தென்றல் வீசியது அவன் உள்ளே..
மீண்டும் அவளை பார்க்கவேண்டும் என்று
துடித்தது அவன் உள்ளே... நாளைக்கு
கட்டாயம் அவளை பார்க்க வேண்டும் என்று மீண்டும் உறுதி செய்து கொண்டவன் அருகில்
இருந்த தலையணையை எடுத்து அணைத்து கொண்டு
"ஐ லவ் யூ மான்குட்டி.. ஐ லவ் யூ
பொண்டட்ட்டி.. ஐ மிஸ் யூ.... " என்ரு அந்த தலையணைக்கு பல முத்தங்கள் இட்டு
கட்டி அணைத்தவாறு கண் அயர்ந்தான்...
மறுநாள் காலை அவன் அலைபேசியில்
செட் பண்ணி வைத்திருந்த அலாரம் அலற, அதைக்கேட்டு
வேகமாக எழுந்தான் ரிஷி..அது முன்பே பலமுறை அடித்து ஓய்ந்திருந்தது.. ஆனாலும் தன்
முயற்சியை விடாமல் திரும்ப திரும்ப ஒலித்து கொண்டிருந்தது...
எப்படியோ கடைசியாக அதன் அலறலை கேட்டு
விழித்து கொண்டவன் மணியை பார்க்க அப்பொழுதுதான் நேரமாகிவிட்டது புரிந்தது..
அவன் செல்ல வேண்டிய கான்ப்ரன்ஸ் எட்டு மணிக்கே
ஆரம்பித்துவிடும்.. அதுவும் முதற்பகுதி
மிகவும் முக்கியமானது.. அந்த கான்ப்ரன்ஸ் பற்றிய அறிமுக விளக்க பேச்சு அவனுடையது.. அவன்
அங்கு இருந்தாக வேண்டும்..
அதை உணர்ந்தவன் அவசரமாக எழுந்து வேகமாக
காலை கடன்களை முடித்து வேகமாக குளித்துவிட்டு அதே வேகத்தில் கிளம்பிச் சென்றான்..
அந்த கான்ப்ரன்ஸ் நடக்கும் இடத்தை அடையவும்
ஏற்கனவே கான்ப்ரன்ஸ் ஐ ஆரம்பித்திருந்தனர்..
வேக நடையுடன் ஓடி சென்று தன் உரை வரும் நேரத்தில் கலந்து கொண்டான்..
தன் அறிமுக உரையை முடித்து மேடையில்
இருந்து கீழ இறங்கி வந்தவன் அடுத்து அங்கு மேலும் பல கம்பெனிகளின் சி.இ.ஓ க்கள்
வந்திருக்க, அவர்களையெல்லாம் கண்டதும் அவன் முகம்
மலர்ந்தது..
சில பேரை,
அவன் நேரில் பார்க்க வேண்டும் என்று எண்ணியிருந்தவர்கள் எல்லாம் அங்கிருக்க அவனுடைய
தொழில் மூளை விழித்துக் கொண்டது...
மற்றதெல்லாம் மறந்து போக, உற்சாகத்துடன் அந்த கான்ப்ரன்சில்
கலந்து கொண்டான்..
அவன் இருந்த உற்சாகத்தில் ரோஜாவை
மறந்து போனான்...
மதிய உணவு இடைவேளையிம் பொழுதுதான் அவளை
பற்றி ஞாபகம் வந்தது...
உடனே அவன் மனதுக்குள் தென்றல் வீச, உதட்டில் லேசாக புன்னகை தோன்ற அவளை அழைத்து பேச வேண்டும் போல்
இருந்தது.. தன் தொலைபேசியை எடுத்து விக்டர்
எண்ணிற்கு அழைக்க, அது முழுவதும் அடித்து ஓய்ந்து போனது.. அலைபேசியை எடுக்க
வில்லை..
ஒருவேளை ப்ரோக்ராமுக்காக பிஸியாக
இருக்கிறார்கள் போல என்று எண்ணிக் கொண்டவன்
மீண்டும் அழைக்கவும் அதற்குள் மற்றொரு
நபர் ரிஷியின் அருகில் வந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு தொழில்முறை பேச்சை ஆரம்பிக்க அவனும் புன்னகைத்து
தன் அலைபேசியை அணைத்து பாக்கெட்டில் போட்டுக்கொண்டு அவருடன் கலந்து பேச ஆரம்பித்தான்..
அதன் பிறகு நேரம் றெக்கை கட்டி பறந்தது...அந்த
கான்ப்ரன்ஸ் மாலை ஏழு மணி வரைக்கும் இழுத்துக் கொண்டு சென்றது.. அதன் பின்னும் ஹேப்பி
ஹவர், பிசினஸ் டின்னர் என்று வற்புறுத்தி அவனை அங்கேயே
இருக்க வைத்து கொண்டனர் அவனுடைய தொழில்முறை நண்பர்கள்..
அவர்களுடன் கலந்து பேசி கொண்டிருந்ததில்
நேரம் ஆவதை மறந்து போனான்..ரோஜாவின் ப்ரோக்ராம் ஐந்து மணிக்கு என்பதும் மறந்து
போனது..
டின்னர் முடிய இரவு மணி 10.30 ஆகி
இருந்தது.. அப்பொழுதுதான் தான் ரோஜாவின் நாட்டியத்தை பார்க்க செல்லவில்லை என்று உறைத்தது...
அந்த ப்ரோக்ராம் ஐந்து மணியிலிருந்து எட்டு
மணி வரைக்கும்.. இந்நேரம் ப்ரோக்ராம் முடிந்து அனைவரும் உறங்க சென்றிருப்பர் என
தோன்ற, மனம் வாடிப் போனது...
“எப்படி அவளை மறந்தேன்..? : . என்று தன்னைத் தானே திட்டி கொண்டவன் காரில் திரும்பும்பொழுது
தன் அலைபேசியை எடுத்து ஆன் பண்ணி பார்க்க, அதில் விக்டர்
அவனுக்கு மெசேஜ் அனுப்பி இருந்தான்..
பிசியாக இருந்ததால் அவன் அழைப்பை
ஏற்கமுடியவில்லை என்று சொல்லி இருந்தான்.. ..
மீண்டும் விக்டரை அழைக்க, இந்தமுறையும் அது முழுவதுமாக
அழைத்து நின்று போனது.. ஒருவேளை தூங்கி விட்டார்களோ என்று யோசித்தவன் காலையில் சென்று நேரடியாகவே பார்த்துக் கொள்ளலாம்
என்று எண்ணி வீட்டிற்கு வந்து அப்படியே
கண் அயர்ந்தான்....
அவன் உறங்கி கொண்டிருக்கும் பொழுதே
அவனுடைய பர்சனல் அலைபேசி அலறியது.. இந்த நம்பரை யாருக்கும் கொடுத்ததில்லை
அவன் விஷ்ணுவைத் தவிர..
அப்படியிருக்க யாராக இருக்கும் என்ற
அவசரமாக அலைபேசியை எடுத்து பேச விஷ்ணுதான் அழைத்திருந்தான்.. அவன் சொன்ன
செய்தியைக் கேட்டு ஆடிப் போனாள் ரிஷி..
சென்னையிலிருந்த அவனுடைய பேக்டரி ஒன்று
தீ விபத்துக்குள்ளாகி விட்டது... நல்ல வேளையாக தொழிலாளர்கள் யாரும் உள்ளே இல்லை
என்றாலும் அதில் இருந்த முக்கியமான இயந்திரங்கள் அந்த பேக்டரின் கூரை மற்றும்
மற்றவைகள் எல்லாம் எரிந்து விட்டன...
காவல் துறை அதிகாரியும் இன்சூரன்ஸ்
நிறுவனமும் ரிஷியை சந்திக்க வேண்டும் என்று சொல்லி நெருக்குவதாக சொன்னான் விஷ்ணு..
அதை கேட்டு இடிந்து போன ரிஷி உடனே
அவசரமாக கிளம்பி இந்தியா வந்து விட்டான்...
நேராக தன் பேக்டரிக்கு சென்று பார்க்க,
அவன் மனம் இன்னும் துடித்து போனது.. அவன் ஆசை ஆசையாக பார்த்து
பார்த்து கட்டியது.. இப்பொழுது எதுவும் இல்லாமல் வெறும் சுவர் மட்டும் இருக்க
கண்டு மிகவும் தளர்ந்து போனான்..
ஆனால் தொழிலில் இந்த மாதிரி எதிர்பாராத
இழப்புகள் நேர்வது இயல்புதான் என தன்னைத்தானே தேற்றி கொண்டு அடுத்து ஆக வேண்டியதை
பார்க்க ஆரம்பித்தான்...
விசாரணையில் அதிகாரிகள் கேட்ட விவரங்களை
கொடுத்தவன் அவனுக்கு எதிரி என்று யாராக இருக்கிறார்களா என்று வினவ அப்படி யாரும் இல்லை என்று விட்டான்..
இது மின்சார கசிவினால் எப்படியோ தீ
விபத்து ஆகி இருக்கலாம் என்ற வகையில் விசாரணை நடந்து கொண்டிருக்க, ரிஷியோ அந்த பேக்டரியை மீண்டும் ரிபில்ட் பண்ணுவதற்கான ஏற்பாட்டை
கவனிக்க ஆரம்பித்து விட்டான்..
இரவு பகல் பாராமல் அவனுடைய மற்ற பணிகளை
கவனித்துக் கொண்டே இந்த வேலையும் சேர்ந்து
கொள்ள முழு நேரமும் பிசியாகி போனான் ரிஷி..
கிட்ட தட்ட இரண்டு மாதம் ஆனது அவனுக்கு
அனைத்தையும் பழைய நிலைக்கு கொண்டு வர..
ஓரளவுக்கு பேக்டரி தயாராகி இருக்க, அதில் அழிந்து விட்ட சில மெசின்களுக்கு பதிலாக புது மெசின்கள் வாங்கி பொருத்தி திரும்பவும் அதை
ஓட விட்ட பிறகுதான் நிம்மதி மூச்சுவிட முடிந்தது...
ஓரளவுக்கு எல்லாத்தையும் சரி பண்ணியவன்
அன்று இரவு ஒரு தொழில்முறை பார்ட்டிக்கு சென்றிருக்க அங்கேயிருந்த ஒயினை பார்த்ததும்
அதை கையில் எடுக்க அந்த நொடி அவன் மனதில்
வந்து நின்றாள் ரோஜா...
அன்று விமானத்தில் இதே மாதிரி அந்த ஒயினை
எடுக்கும் பொழுது அவள் முகத்தில் வந்து போன அந்த அருவருப்பும் முகசுளிப்பும்
இப்பொழுது ஞாபகம் வந்தது...
அதை உணர்ந்ததும் தன் வாட்சில் தேதியை
பார்க்க இரண்டு மாதம் முடிந்து போய் இருந்தது அவளை பார்த்து...
“ஓ மை காட்.. எப்படி அவளை மறந்து
போனேன்...?? என்னுடைய பிரச்சனையில் உழன்று கொண்டிருந்தால்
அவளை மறந்து விட்டனே! அவள் பத்திரமாக இந்தியா திரும்பி வந்திருப்பாளா?
சே இப்படி கேர்லெஸ் ஆக இருந்து
விட்டேனே..!! என்னதான் பிரச்சனை என்றாலும்
என் மனவியாக இருந்திருந்தால் அவளை எப்படி மறந்திருக்க முடியும்..?
அப்படி என்றால் அவள் உண்மையில் என்
மனைவி இல்லையா? அவள் மீது வந்தது வெறும் லஸ்ட் தான்
போல.. அப்படி என்றால் இதுவரை அவள் நினைவு மறைந்து மறந்து விட்டதை போல விரைவில்
அவளை மறந்து விடுவேனா இருக்கும்.. “
என்று தனக்குள்ளே சமாதானபடுத்தி கொண்டு
அந்த ஒயினை கையில் எடுத்து குடிப்பதை போல ஆக்சன் பண்ணி கொண்டு அந்த பார்ட்டியில்
கலந்து கொண்டு வீட்டிற்கு வந்துவிட்டான்...
ஆனால் அவளை மறந்து விடலாம் என்று எண்ணி
இருந்தது அவ்வளவு எளிதாக இல்லை...
பகல் நேரங்களில் அலுவலக வேலையில் பிசியாகி
விடுவதால் மறைந்திருக்கும் அவளின் நினைவுகள் அலுவலக வேலை முடிந்ததும் அடுத்த நொடி
அவன் நினைவில் வந்து குதிப்பாள் ரோஜா..
உறங்கும் பொழுதும் அந்த கனவு அடிக்கடி
வந்து இம்சிக்கும்.. ஆனாலும்
“இது சரியில்லை..! யாரோ ஒருத்தி மீது இப்படி பாசம் வைக்ககூடாது.. “
என்று தன்னை கட்டு படுத்தி கொண்டவன்
அடுத்த வாரத்தையும் எப்படியோ ஓட்டி இருக்க, அவன் மறக்க
வேண்டும் என்று எண்ணும்பொழுதுதான் அவள் ஞாபகம் அதிகமாக வந்து போனது..
அதுவும் கடந்த இரண்டு வாரமாகத்தான்
ரொம்பவும் டிஸ்டர்ப்ட் ஆக ஆரம்பித்தது...
அவன் உள்ளே அதுவரி உறங்கி கொண்டிருந்த
நிகழ்வுகளும் அன்று அவன் தனக்குள்ளே செய்து கொண்ட இவள் தான் என் மனைவி என்ற
உறுதியும் அடிக்கடி வந்து அவனை குடைய, சென்ற வாரம்
அதற்கு மேல் தாங்க முடியாமல் தன் அலைபேசியை எடுத்து அவன் சந்தித்த விக்டரை
அழைத்தான்...
ஆனால் அந்த எண் உபயோகத்தில் இல்லை
என்று வந்தது.. அதை கண்டு திடுக்கிட்டு போனான் ரிஷி...
அப்பொழுதுதான் அவனுக்கு உறைத்தது அவளை
பற்றி எந்த தகவலும் தன்னிடம் இல்லை என்று..
அவளுடைய முகவரியோ, எந்த ஊரை சேர்ந்தவள் என்பதோ அவனிடம் இல்லை... ஆழ்ந்து யோசித்து
பார்க்க அவளை பற்றி அவன் தெரிந்து கொள்ள முயன்றான் தான்..
ஆனால் ரோஜா அவளை பற்றி சொல்லாமல்
நாசுக்காக தவிர்த்து விட்டாள்.. தவிர்த்து விட்டாளா இல்லை இயல்பாகவே வேற ஒரு டாப்பிக்
க்கு சென்று விட்டாளா என்று குழப்பமாக இருந்தது..
முகவரி இருக்கட்டும்... அவள்
கான்டாக்ட் நம்பராக வாங்கி
வைத்திருக்கலாம் என்று அப்பொழுது அவனுக்கு உறைத்தது..
மீண்டும் விக்டருக்கு அழைக்க அதே
பதில்தான்.. உடனே அந்த ஹோட்டலின் எண்ணை இணையத்தில் தேடி அங்கு தொடர்பு கொண்டு
விசாரிக்க, அவர்களும் விக்டரின் அதே எண்ணைத்தான்
கொடுத்தனர்..
அவனை பற்றி மற்ற தகவல் எதுவும் இல்லை..
அப்படி இருந்தாலும் அதை தரவும் கூடாது என்று முடித்து விட்டனர்..
ரிஷிக்கோ கண்ணை கட்டி காட்டில் விட்டதை
போல இருந்தது..
அவளை எங்கு சென்று தேடுவது? அவள் புகைப்படம் கூட தன்னிடம் இல்லை என்பதும் உறைத்தது...
ஒரு வேளை நான் இந்தியா வந்த உடனேயே
தொடர்பு கொண்டு பேசியிருந்தால் அவளை பற்றிய தகவலை தெரிந்து கொண்டிருக்கலாம்..
தன் தொழிலில் பிசியாக இருக்க, இப்படி இவளை தொலைத்து விட்டேனே என்று புலம்பியது அவன் மனம்..
“நான்தான் கால் பண்ணவில்லை... அவளாவது
என்னை அழைத்திருக்கலாம்..” என்று எண்ணியவனுக்கு
“ஹ்ம்ம்ம் நான்தான் அவளை எண்ணி
கொண்டிருக்கிறேன்..அவளுக்கு என்னை பற்றிய நினைவே இருந்திருக்காது.. அவளை பொறுத்த வரை
நான் ஒரு டெம்பரரி ப்ரெண்ட்.. ஆபத்தில் உதவிய ஒரு நபர்.. அவ்வளவுதானா இருக்கும்.. அதான் அவள் என்னை அழைக்கவில்லை,
அப்படி எண்ணி இருப்பவளை நான் மட்டும்
எதுக்கு கண்டு கொள்ள வேண்டும் “ என்று
முறைத்து கொண்டவன் ஒரு நாளை அப்படியே ஓட்டினான்..
அவன் கோபம் எல்லாம் அந்த நாள்
மட்டும்தான்.. இரவு படுக்கையில் விழும்பொழுது அவள் முகமும் கூடவே வந்து அவன்
அருகில் படுத்து கொண்டு அவன் தலைமுடியை கலைத்து விளையாடும்...
அதில் திடுக்கிட்டு திகைத்து போனான்...
முதலில் கொஞ்சமாக வர ஆரம்பித்த அவள் நினைவு அவன் உடல் எங்கும் பரவ ஆரம்பித்தது..
இப்பொழுது சிறு இடைவெளி கிடைத்தாலும்
அவளின் நினைவாகவே இருந்தது..
இதை வெளியிலும் சொல்ல முடியாது.. யாரென்றே தெரியாத
ஒருத்தியை பற்றி சொல்லி தேட சொன்னால் தன்னை கிறுக்கன் என்று எண்ணுவர்.. கூடவே அது
மீடியாவுக்கும் சென்று விடும் என்று தனக்குள்ளே போட்டு கொண்டு அடுத்து என்ன
செய்வது என்று யோசித்து கொண்டிருந்தான்..
அப்படி பட்ட நிலையில்தான் இன்று பீச்
பக்கம் வந்திருந்தவன் திரும்பும்பொழுது விவேக் இன் விளம்பரத்தை பார்த்ததும் அவன்
அறிவு விழித்து கொண்டது...
இந்த மாதிரி ஒரு சின்ன டிடெக்டிவ் ஏஜென்சி
வழியாக அவளை தேடி பார்க்கலாம் என்று தோன்றியது...
விவேக் ன் பேச்சில் இருந்த நகைச்சுவை
உணர்வு அவனுக்கு பிடித்து விட, கூடவே அவனுடன் பேசி கொண்டிருப்பது
மனதுக்கு கொஞ்சம் இதத்தை தர, இவனை வைத்தே என் மான்குட்டியை தேட
வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான்.....
அதே நேரம் காரில் இருந்த ம்யூசிக்
ப்ளேயரில் இருந்து அடுத்த பாடல் ஓடியது...
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா
ரோஜா
கண்ட பின்னே உன்னிடத்தில் என்னை விட்டு வீடு
வந்தேன்
உன்னை தென்றல் தீண்டவும் விட மாட்டேன்...
அந்த திங்கள் தீண்டவும் விட மாட்டேன்...
உன்னை வேறு கைகளில் தரமாட்டேன்...
நான் தரமாட்டேன் நான் தரமாட்டேன்...
ரோஜா ரோஜா ரோஜா ரோஜா...
“என உருகி பாட,
அதை கேட்டவன் மனம் இன்னும் பிசைந்தது..
காரை சாலையின் ஓரமாக நிறுத்தி விட்டு
கண் மூடி அந்த ஸ்டியரிங் ல் தலை கவிழ்த்து சாய்ந்து கொண்டு மெல்ல முனகினான்..
“ரோ.... ஜா............. மான்குட்டி..... எங்கடி இருக்க?
ஐம் சாரி.. அப்பயே உன்னை தேடாமல் விட்டது என் தப்புதான்...... ஐ மிஸ்
யூ....சீக்கிரம் என்கிட்ட வந்துடு ரோஜா பொண்ணு.... “ என்று இதயத்தின் அடி ஆழத்தில்
இருந்து சொல்லி வேதனையில் கண்ணை மூடி கொண்டான்...
அவன் தேடும் அவன் மான்குட்டி, அவன் ரோஜா பொண்ணு அவனுக்கு கிடைப்பாளா?
வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம்..
Comments
Post a Comment