தேடும் கண் பார்வை தவிக்க-24
அத்தியாயம்-24
ரிஷி தன் அறைக்கு
உள்ளே வர, அதன் பிரம்மாண்டத்தை கண்டு மிரண்டு போனான்
விவேக்...இப்படி ஒரு எம்.டி யின் அறையை அவன் கற்பனையில் கூட எண்ணி
பார்த்திருக்கவில்லை..
எல்லாமே
லண்டனில் இருந்து இறக்குமதி செய்ய பட்டிருந்த பர்னிச்சர்ஸ்,
அழகு பொருட்கள் என அறை கண்ணை பறித்தது.. அடுத்து அவன்
அமரும் இருக்கையை கண்டு வாயை பிளந்தான்...
முதலாளி அமரும்
இருக்கை மட்டும் அல்ல.. அவனை சந்திக்க வரும் வாடிக்கையாளர்கள், பார்வையாளர்கள் அமரும் இருக்கைகள் கூட பல லட்சங்களை முழுங்கி இருக்கும்..
ஒவ்வொரு
பொருளும் ஒரு ராயல் லுக்குடன் மிக
நேர்த்தியாக சுத்தமாக துடைத்த பளிங்கு போல மின்னின..
“பொருட்கள்
மட்டுமா? அந்த பொருட்களுக்கு சொந்தக்காரன், அந்த அறைக்கு உரிமையாளன்
இந்த நெட்ட ரிஷியும் தான்..
எவ்வளவு
கம்பீரமாக இருக்கிறான்...! ராஜ தர்பார் ல்
நடுநாயகமாக கம்பீரமாக அமர்ந்திருக்கும் அந்த ராஜகுமாரனை போல அவ்வளவு பெரிய அறையில்
அவனுடைய பிரம்மாண்டமான இருக்கையில் அமர்ந்திருந்தான் ரிஷி..
அவனின்
தோற்றத்தை கண்ட விவேக் ஓ வாயை பிளந்து
“நான் மட்டும்
பெண்ணாக பிறந்திருந்தால் இவனை தொரத்தி தொரத்தி லவ் பண்ணி இருப்பேன்.. இப்படி
ஒருத்தனை கரெக்ட் பண்ணுவதுதான் வாழ்நாள் லட்சியமா இருந்திருக்கும்.. “ என்று பெருமூச்சு விட்டான் இப்பொழுது புரிந்தது
மற்ற பெண்கள் எல்லாம் ஏன் ரிஷியை டார்கெட்
பண்ணுகிறார்கள் என்று...
பெண்கள் மட்டுமா
? அந்த
பெண்களை பெற்ற அப்பன்கள் கூடவும் தான் இவனை மருமகனாக ஆக்கிக் கொள்ள போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர்..
சமீபத்தில் வந்த
செய்தி படி தமிழ்நாடு அமைச்சர்கள் இருவரும் மத்திய அமைச்சர் ஒருத்தரும் கூட ரிஷியை
மருமகன் ஆக்கிக் கொள்ள முயன்று வருகிறார்கள் என்று படித்தது ஞாபகம் வந்தது..
ஆனால் ரிஷி
அவர்கள் புரபோசலை எல்லாம் ஏற்றுக் கொள்ளாமல்
தவிர்க்கிறான் என்ற கொசுறு செய்தியும் வந்து தான் இருந்தது
“அவ்வளவு பெரிய
ஆள்... அவனிடம் நான் நேரடியாக பேசுகிறேன்.. “ என்பதே கனவு போல இருந்தது
விவேக்கிர்கு...
அவனை அறியாமலேயே
ஒரு முறை கிள்ளிப் பார்த்துக் கொண்டான்..
“இப்படி
ஒருத்தனை கணவனாக அடைய யாருக்கு கொடுத்து வைத்திருக்கிறதோ..! ‘ என்ற பெருமூச்சு விட்டவன் அப்பொழுது தான் அவன் வந்த வேலை ஞாபகம் வந்தது…
“ஐயய்யோ இந்த ஹீரோக்குத்தான்
ஏற்கனவே ஒரு ஹீரோயினை பிடித்திருக்கிறதே... அந்த ஹீரோயினை கண்டுபிடிக்க தானே நான்
வந்திருக்கிறேன்.. அத கூட மறந்து போயிட்டேன்.. “ என்று தன் தலையில் தட்டி கொண்டான்
மானசீகமாக..
தன் இருக்கையில்
அமர்ந்த ரிஷி இன்னும் நின்று கொண்டே தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் விவேக்கை
கண்டவன்
“ப்ளீஸ் டேக்
யுவர் சீட்... “ என்றான் புன்னகைத்தவாறு
எதிரில் இருந்த இருக்கையை காட்டி..
விவேக் ம் ஒரு
அசட்டு சிரிப்பை சிரித்தவாறு ரிஷியின் எதிரில் அமர அவனைப் பார்த்தவன்
“என்ன
குடிக்கிறீங்க? ஹாட் ஆர் கோல்ட்? “ என்று புருவம் உயர்த்தி கேட்டான்..
“ஹலோ நெட்ட
பாஸ்... ஓசில எது கொடுத்தாலும் வெக்கப் படாம குடிப்பான் இந்த விவா..” என நக்கலடித்து
சிரித்தது அவனுடைய மனஸ்..
விவேக் அதை
உள்ளுக்குள் முறைத்து கொண்டே
“எனிதிங்
பைன் பாஸ்.. “ என்று புன்னகைத்தான்....
“என்னது பாஸ் ஆ?
“ என்றான் ரிஷி தன் புருவத்தை நெறித்து
"யெஸ்
பாஸ்... நீங்க என்னோட க்ளைன்ட்.. அப்ப பாஸ் னுதான சொல்லணும்? " என்று சிரித்தான் விவேக்...
"ஹா ஹா ஹா
நான் இன்னும் என் வேலையை உங்ககிட்ட தரவே இல்லை மிஸ்டர் விவேக்.. இது ஜஸ்ட்
என்கொய்ரி தான்.. இந்த வேலைக்கு நீங்க
செட் ஆவிங்களானு டெஸ்ட் பண்ணிட்டுத்தான் நான் கன்பார்ம் பண்ணனும்.. "
என்றான் இடுங்கிய கண்களுடன்..
“ஹீ ஹீ ஹீ நீங்க
எப்படியும் என்னை கன்பார்ம் பண்ணிடுவீங்க
பாஸ் அப்படி இல்லன்னா இன்று உங்களை பார்க்க என்னை வர சொல்லி இருக்க மாட்டீங்க..
அப்படியே வர
சொல்லி இருந்தாலும் வரவேற்பறையில் நான் காத்துக் கொண்டிருக்கும் பொழுது நீங்களாகவே
வந்து என்னிடம் பேசி இருக்க மாட்டீங்க..
இத வச்சி உங்க
மனசு எனக்கு புரிஞ்சு போச்சு.. ஏனென்றால் நீங்க என்னை ட்ரஸ்ட் பண்ண ஆரம்பிச்சுட்டீங்க.. அதனாலதான் உங்க ரூம்க்கே
கூட்டிக்கிட்டு வந்திருக்கீங்க... கரெக்டா? “ என்று சிரித்தான்..
“வாவ்.. வெரி
குட் விவேக்..நீங்க ஒரு டிடெக்டிவ் மூளைனு ப்ரூப் பண்ணிட்டீங்க.... “ என்று சொல்லி
குறும்பாக சிரித்தான் ரிஷி..
அதைக் கேட்ட
விவேக் மனஸ்
“அடப்பாவி.. இத சொல்றதுக்கு பெரிய டிடெக்டிவ் மூளை தேவையா? இதெல்லாம் வெறும்
கால்குலேஷன் தான்.. இது கூட இந்த நெட்டைக்கு தெரியலையே.. இவன் எல்லாம் என்னத்த
பிசினஸ் பண்றானோ!!” என்று தலையில் அடித்துக் கொண்டது...
அதுவரை இலகுவாக
பேசிக் கொண்டிருந்த ரிஷி உடனே முகத்தை இறுக்கிக் கொண்டு சீரியஸ் மோட்க்கு
வந்தான்..
“மிஸ்டர் விவேக்..
கம் டு தி பாயிண்ட் நான் யெஸ்டர்டே சொன்ன விஷயம் புரிஞ்சுதா? எனக்கு பத்து நிமிஷம் டைம் இருக்கு.. அதுக்குள்ள
உங்களுக்கு என்ன மாதிரியான டீடெயில்ஸ் வேணும் கேளுங்க ஃபாஸ்ட்.. “ என்று விவேக்கை பார்த்தான்..
“பாஸ்...
ஃபர்ஸ்ட் ஒரு சின்ன ரிக்வெஸ்ட்.. என்னை விவேக் னே கூப்பிடுங்க.. மிஸ்டர் போட்டு
மரியாதையா கூப்பிட்டா எனக்கே என்னவோ பெரிய ஆள் ஆன மாதிரி இருக்கு..விவேக் னு
கூப்பிட நீளமா இருந்தா என் மனஸ் கூப்பிடற மாதிரி விவா னு கூப்பிடுங்க.. "
என்று அசட்டு சிரிப்பை சிரித்தான் விவேக்...
“என்னது மனஸ் ஆ?
அது யாரு? " என்றான் ரிஷி யோசனையுடன்..
“ஹீ ஹீ ஹீ.. சாரி
பாஸ் .. அது சும்மா... லீவ் இட்..நம்ம மேட்டர்க்கு வரலாம்..
மேடம் ஐ எங்க
எப்படி எப்போ சந்திச்சீங்க..? என்று விலாவரியாக சொல்ல முடியுமா? “ என்று கேட்டவன் தன் பேக் ஐ திறந்து அதில்
இருந்த லெட்டர் பேடை எடுத்து வைத்து கொண்டு ரிஷி சொல்லுவதை குறித்து கொள்ள தயாராக
இருந்தான்..
ரிஷியும் ஒரு
ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டுகொண்டு நடந்ததை சொல்ல ஆரம்பித்தான்..
அவன் ரோஜாவை முதன் முதலாக விமானத்தில்
சந்தித்ததையும் அவளுக்கு உதவியதையும் கடைசியாக லண்டனில் அவளை ஒரு ஹோட்டலில் விட்டு
விட்டு சென்றதையும் சுருக்கமாக எடுத்துக் கூறினான்..
கூடவே
அவளை கண்டுபிடிக்க அவன் செய்த முயற்சிகளையும் விளக்கினான்..
அவனிடமிருந்த விக்டரின் கான்டாக்ட் நம்பரும் இப்பொழுது வேலை செய்யவில்லை..
அந்த
நாட்டிய குழு பற்றியும் அவனுக்கு தெரியாது..
அந்த விக்டரை பற்றியும் எந்த தகவலும்
இல்லை.. என்று சொல்லி வேதனையுடன் கண்ணை மூடிக்கொண்டான்..
அவன்
மனசுக்குள்ளே வேதனை படுவது அவன் இமைகள்
சுருங்கியும் லேசாக துடிப்பதிலயே தெரிந்தது..
ரிஷியின்
கதையை கேட்ட விவேக் ஓ ஆச்சரியமானான்..
“இவ்வளவு
பெரிய மல்டி மில்லினர் ஒரு பத்து மணி நேரம் கூட பயணம் செய்து வந்த ஒரு பொண்ணுக்காக இவ்வளவு தூரம் ஏங்குவானா?
அந்தப்
பெண்ணுக்காக இவ்வளவு தூரம் வேதனைப் படுகிறானே !! “ என்று ஆச்சரியமாக இருந்தது..
அதையே
அவன் வாய்விட்டு ரிஷியிடம் கேட்க அதுவரை
இறுகி இருந்த ரிஷியின் இதழ்கள் இலகி அதில் மென்னகை படர ஆரம்பித்தது..
“நீங்க லவ் பண்ணி இருக்கீங்களா விவேக் ? “ என்று சிறு வெட்கத்துடன்
விவேக் ஐ கேட்டான் ரிஷி....
“நல்லவேளை பாஸ்... அப்படி ஒரு
துரதிஷ்டம் எனக்கு வாய்க்காமல் போய்விட்டது...” என்று சிரித்தான் விவேக்....
“ஹ்ம்ம்ம் நீங்க லவ் பண்ணி இருந்தா
என்னுடைய பீலிங்ஸ் உங்களுக்கு புரியும்.. “ என்று சிரித்தான் ரிஷி..
“அது எப்படி பாஸ்? பார்த்த பத்து மணி நேரத்திலேயே மேடம் ஐ இவ்வளவு டீப் ஆ லவ் பண்ண
ஆரம்பிச்சீங்க? “ என்றான் விவேக் மீண்டும் ஆச்சரியமாக...
“ஹா ஹா ஹா பத்து மணி நேரம் தேவை இல்லை
விவேக்... ஜஸ்ட் ஒரு செகண்ட் போதும் மனதில் காதல் மலர்வதற்கு...
ஆச்சர்யமா இருக்கா? எனக்கும் அப்படித்தான் இருந்தது.. நானும் காதல் ல எல்லாம் பெருசா நம்பிக்கை
இல்லாமல் தான் இருந்தேன்... ஆனால் அப்படி
இருந்த என்னையும் மாற்றி விட்டாள் ஏன் ரோஜா பொண்ணு....!! “ என்று கண்ணை மூடி ரோஜாவின் நினைவில் ஆழ்ந்தான்...
பின் கண்ணை திறந்தவன்
“என் மாம் சொல்லியிருக்காங்க..இங்க இன்டியன்
கல்ச்சர் படி மேரேஜ்க்கு முன்னாடி பொண்ணு பார்க்க போவாங்களாம்...அந்த பொண்ணும் பையனும் ஒரு ஃபைவ் மினிட்ஸ் மட்டுமே பார்த்துப்பாங்களாம்..
அந்த ஃபைவ் மினிட்ஸ் லயே ஒருத்தரோட
லைஃப் பார்ட்னர் ஐ டிசைட் பண்ணிப்பாங்களாம்..நம்முடைய லைஃப் பார்ட்னர் ஐ கண்டு கொள்ள அந்த ஃபைவ்
மினிட்ஸ் போதும் என்று அந்த காலத்தில் இருந்தே சொல்லி வச்சிருக்காங்க..
எனக்கு ஃபைவ் மினிட்ஸ் கூட தேவை இருக்கவில்லை
விவேக்.. அதுவும் அவ முகத்தை நான் பார்க்க கூட இல்லை.. அவளுடைய குரலை, எக்ஸ்யூஸ் மீ என்ற அந்த
குரல் ஒன்றே போதும்.. நான் என்னவளை கண்டு கொள்ள...
அந்த குரல் அப்படியே என் உள்ளே சென்று
ஒவ்வொரு அணுவிலும் சிலிர்க்க வைத்தது..
அந்த நொடியே என்னுள் வந்துவிட்டாள் என் மான்குட்டி..
என் ரோஜா பொண்ணு.. " என்று கண்ணை மூடி மீண்டும் அவன் ரோஜாவை சந்தித்த அந்த
நொடியை மனதில் கொண்டு வந்து அந்த நொடியை உள்ளுக்குள் அனுபவித்தான் ரிஷி..
அவனின் ஏகாந்த நிலையை கண்ட விவேக்
"ஆஹா... நான் இந்த கேஸ் ஐ
கண்டுபுடிக்கிறனோ இல்லையோ? நல்ல பீலிங்ஸ் ஓட லவ் ஸ்டோரிய
கேட்கலாம் போல..கூடவே இப்படி அடிக்கடி இந்த நெட்டை புலம்பறதையும் சகிச்சுக்கணும்..
" என்று உள்ளுக்குள் சொல்லி சிரித்தவன் ரிஷி கொடுத்திருந்த பத்து நிமிடம்
நினைவு வர,
“பாஸ்... நீங்க சொன்னத வச்சு பார்த்தா,
உங்க அட்ரஸ் மேடம் கிட்ட இருந்திருக்குமே.. அதுக்கு பிறகு அவங்க
உங்களை கான்டாக்ட் பண்ணலையா? " என்று ரிஷியை ரோஜாவின் நினைப்பில் இருந்து வெளியில்
கொண்டு வந்தான் விவேக்..
ரிஷியும் தலையை உலுக்கி கொண்டு தன் நினைவுகளிலிருந்து
வெளி வந்தவன் உதட்டை பிதுக்கி இல்லை என்று
தலையசைத்தான்..
“உனக்கு ஒன்னு தெரியுமா விவேக்... எனக்குத்தான் அவளை பிடித்திருந்தது.. அவளுக்கு என்னை
பிடிச்சிருக்கானு தெரியலையே..
கூடவே என்னுடைய கெஸ் கரெக்டா இருந்தா
என் விசிட்டிங் கார்டை பார்த்ததும் நான்
பெரிய ஆளு னு தெரிந்து கொண்டு என்னை
தொடர்பு கொள்ளாமல் இருந்திருக்கலாம்.. “ என்று விளக்கத்தை சொன்னான் ரிஷி..
"ஹ்ம்ம்ம் போங்க பாஸ்.. மேடம் கூட
பத்து மணி நேரம் கடலை போட்டுகிட்டு வந்திருக்கீங்க.. அவங்க போன் நம்பராவது வாங்கி
வச்சிருக்க மாட்டிங்க?
அவன் அவன் ஒரு பொண்ண பார்த்த அடுத்த
அஞ்சு நிமிசத்துலயே போன் நம்பரை வாங்கி
வாட்ஸ்அப் ல ஆட் பண்ணி கடலை வறுக்க ஆரம்பிச்சிடறானுங்க..
இவ்வளவு பெரிய பிசினஸ் மேன்.. அதுவும்
மனசுக்குள்ளயே கல்யாணம் பண்ணின வைப் ஐ உடைய போன் நம்பர் ஐ வாங்கி வைக்காம கோட்டை
விட்டுட்டீங்களே.. " என்றான் விவேக் அலுத்தவாறு..
அவனை முறைத்த ரிஷி,
“கடலை போடறதுனா ? " என்றான் புரியாமல்..
"அட கணேசா .. கடலை போடறதுனா
தெரியாதா? நீங்க எல்லாம் தமிழ்நாட்டுல இருக்கறதே
வேஸ்ட் பாஸ்.. அத பத்தி இன்னொரு நாள் டீடெய்லா சொல்றேன்.. இப்ப நம்ம மேட்டரை
பார்க்கலாம்.
சரி மேடம் ஐ பத்தி வேற ஏதாவது டீடெய்ல்ஸ் கொடுங்க...ஒரு சின்ன
குறிப்பு கூட போதும்..அதுக்குனு அவங்க தலையில வச்சிருந்த பூ, அவங்க வாய் துடைத்த நாப்கின், சாப்பிட்டு
தூக்கி போட்ட சாக்லெட் பேப்பர்..என்று எதையாவது கொடுத்துடாதிங்க பாஸ்..
அதை எல்லாம் வைத்து எந்த பொண்ணையும்
கண்டுபிடிக்க முடியாது...
வேணும்னா மோப்ப நாய் கிட்ட கொடுத்து
கண்டுபிடிக்க சொல்லலாம்... அது கூட இத்தன பொண்ணுங்களில் எந்த பொண்ணை கண்டுபிடிக்கும்..
எல்லாரும் ஒரே பர்ப்யூம்.. ஒரே
லிப்ஸ்டிக் தான் யூஸ் பண்றாங்க.. " என்று அலுத்து கொண்டான்...
அவன் பூ என்றதும் அன்று ரோஜா அவன் தோள்
சாய்ந்து உறங்கும் பொழுது அவன் மடியில் விழுந்திருந்த அந்த மல்லிகை பூவை எடுத்து
அவன் பத்திரபடுத்தி வைத்திருந்தது நினைவு வந்தது.. அதில் இன்னுமே அவன் புன்னகை
விரிந்தது...
“என்ன பாஸ்..? எதுவும் ஞாபகம் வந்திடுச்சா? " என்றான்
விவேக் ஆர்வமாக
“ஹீ ஹீ ஹீ.. நீ பூ பற்றி சொன்னதும் என் ரோஜா பொண்ணு தலையில்
இருந்து விழுந்த அந்த பூ.. அது என்ன பூ னு தெரியலை விவேக்... அவ்வளவு வாசம்.. வைட்
கலர்ல குண்டு குண்டா அழகா இருந்தது.. அதோட ஸ்மெல் ஆளை தூக்கிச்சு.. " என்று அவன் ரோஜா தலையில் வைத்திருந்த பூவை பற்றி
வர்ணிக்க,
விவேக் மானசீகமாக தலையில் அடித்து
கொண்டான்...
“இந்த நெட்டைக்கு காதல் பைத்தியம்
முத்திடுச்சு போல.. சீக்கிரம் அந்த பொண்ணை கண்டுபுடிக்கணும்.. " என்று உள்ளுக்குள் புலம்பியவன்
"பாஸ்.. அது மல்லிப்பூவாதான்
இருக்கும். சாயந்திரம் பீச் பக்கம் போனிங்கனா எல்லா பொண்ணுங்க தலையிலும் இருக்கும் பாருங்க.. "
"யெஸ்.. யூ ஆர் கரெக்ட் விவேக்..
நேற்று பீச் ல அந்த பூ வச்சிருந்த ஒரு பொண்ணை பார்த்ததும் ஓடிப்போய் பார்த்தேன்...
ப்ச்..பூ அந்த பூதான்.. ஆனால் பொண்ணு
என் ரோஜா பொண்ணு இல்ல... " என்றான் சோகமாக..
"ஆஹா... கன்பார்ம் ஆ காதல்
பைத்தியம் முத்திடுச்சு..கணேசா... சீக்கிரம் இந்த நெட்டையுடைய ஆளை கண்டுபுடிச்சு
கொடுத்துடு.. " என்று மானசீகமாக வேண்டி கொண்டவன்
"பாஸ்... மேடம் போட்டோவும்
இல்ல..போன் நம்பரும் இல்ல.. அட்ரஸ் ம் இல்ல..எப்படி பாஸ் கண்டுபுடிக்கிறது?
" என்றான் யோசனையுடன்..
"அதுக்குத்தான நீ வந்திருக்க...
" என்று ரிஷியும் விவா மனஸ் ம் ஒரே நேரத்தில் சொல்ல, அதை
கண்ட மனஸ் விழி விரித்து ரிஷியை பார்த்து கை பை கொடுத்து கொண்டது...
ரிஷியின் வார்த்தையை கேட்டதும் உடனே
வீறு கொண்டு எழுந்து நிமிர்ந்து நேராக அமர்ந்தவன்
"யெஸ் பாஸ்.. இந்த விவேக் 007
இருக்க கவலையேன்? எந்த க்ளுவுமே இல்லாமலயே இந்த விவேக் உங்க
ஆளை கண்டுபுடிச்சு கொண்டு வந்து நிறுத்துவான்..” என்று வீர வசனம் பேசியவன் மீண்டும் ரிஷி சொன்னதையெல்லாம் மனதில் ஓட்டி
பார்த்தவன் யாஹூஹூஹூ என்று உற்சாகத்தில் கத்தினான்....
அதை கண்ட ரிஷி
“என்னாச்சு விவேக்? என்ன? என் ரோஜா பொண்ணை கண்டுபிடிச்சிட்டியா?” என்று ஆர்வமானான்..
“பாஸ்...உட்கார்ந்த இடத்திலேயே
கண்டுபிடித்து சொல்ல நான் என்ன வெத்தலையில்
மை வைத்து பார்க்கிற ஆளா?
டிடெக்டிவ் பாஸ்... எல்லாம் க்ளூ
வச்சுதான் கண்டுபுடிக்கனும்ம்ம்ம்..
நீங்க மேடம் ஐ பற்றி சொல்லியதில்
எனக்கு ஒரு க்ளு கிடைச்சிருக்கு... என்னது அது னு உங்களுக்கு ஆர்வமா இருக்குமே..!!
அது என்னனா அவங்க ஒரு க்ளாசிக்கல்
டான்சர்... " என்றான் விவேக்...
இதுதான் எனக்கே தெரியுமே... அத வச்சு
என்னத்த செய்ய? " என்று ரிஷியும் மனஸ் ம் விவேக் ஐ நக்கலாக
பார்த்தனர்...
“பாஸ்..நீங்க சொன்ன தேதியில்
சென்னையில் இருந்து லண்டன் சென்ற டான்ஸ் கோஸ்டி
எதுனு தேடினா ஈசியா உங்க ஆள்
இருக்கிற அந்த டான்ஸ் கோஸ்டிய கண்டுபுடிச்சிடலாம்..
அப்படியும் இல்லைனா சென்னையில்
இருக்கிற எல்லா டான்ஸ் ஸ்கூல் , நாட்டிய சபா என்று எல்லா இடத்துலயும்
ரோஜா னு யாராவது இருக்காங்களானு சல்லடை போட்டு சலிச்சிடறேன் பாஸ்..
அதுல உங்க ரோஜா கண்டிப்பா
மாட்டிடுவாங்க? எப்பூடி?
" என்று காலரை தூக்கி விட்டு கொண்டான் விவேக்..
அதை கேட்ட ரிஷியும் ஆச்சரியமாய்
“சூப்பர் விவேக்.... நீயும் ஒரு
டிடெக்டிவ் தான் னு மீண்டும் நிரூபிச்சிட்டீங்க..எனக்கு இது தோணவே இல்லையே..
" என்று சிரித்தான் முகம் மலர...
“ஹீ ஹீ ஹீ.. அதான் நீங்களே
சொல்லிட்டீங்களே பாஸ்.. இதெல்லாம் டிடெக்டிவ் மூளைக்கு மட்டும்தான் தெரியும்
பாஸ்..
ஓகே பாஸ்... அப்ப இப்பயே களத்துல
இறங்குறேன்... சீக்கிரம் உங்களுக்கு ஒரு குட் நியூஸ் சொல்றேன்.. அப்புறம் அதுக்கு
கொஞ்சம் செலவு ஆகும் பாஸ்.. அட்வான்ஸ் பேமன்ட் கொஞ்சம் கொடுத்தீங்கனா உதவியா
இருக்கும்... " என்று தலையை
சொரிந்தான்...
"ஓ.. ஸ்யூர்... ஜஸ்ட் அ செகண்ட்..
" என்றவன் தன் செக் புக்கை எடுத்து அதில் ஒரு லட்சத்துக்கான செக் ஐ எழுதி
கையெழுத்து இட்டு விவேக் இடம் நீட்ட, அதை வாங்கி
பார்த்தவன் தலை சுத்தி போனான்..
அவன் மனஸ் ஓ ஒரு படி மேல போய் மயக்கம்
போட்டே விழுந்தது...
"பா..... பாஸ்...... ஒரு சைபர்
எதுவும் சேர்த்து போட்டுட்டிங்களா? நாலு சைபர் போடறதுக்கு பதிலா அஞ்சு
சைபர் போட்டுட்டிங்களா? " என்றான் சந்தேகமாக...
"ஹா ஹா ஹா.. இல்ல விவேக்... நான்
கரெக்ட் ஆ தான் போட்டிருக்கேன்.. நான் சொன்ன மாதிரி என் வைப் ஐ தவிர இப்ப எனக்கு
எதுவும் முக்கியம் இல்லை னு தோணிடுச்சு..
அவள கண்டுபுடிக்க நான் எவ்வளவு
வேணாலும் செலவு பண்ண தயார்.. ஐ வான்ட் மை லவ்...மை பெட்டர் ஹாப்..
இது அட்வான்ஸ் தான்.. அவள மட்டும் கண்டுபுடிச்சிட்டீங்கனா உங்களுக்கு ஒரு டிடெக்டிவ் ஆபீசை அரேஞ் பண்ணி தர்றேன்...” என்று
சொல்லி சிரித்தான்... அதை கேட்டு இன்ப அதிர்ச்சி அடைந்த விவேக்
“மெய்யாலுமா பாஸ்? “ என்றான் விவேக் இன்னும் ஆச்சரியம் விலகாமல்..
“யெஸ் விவேக்.. உங்கள பார்த்தவுடனேயே
நீங்க இந்த பீல்ட் ல பெரிய ஆளா வருவனு தோணிச்சு..
உங்கள மாதிரி இளைஞர்களுக்கு உதவுவது என்னுடைய குறிக்கோள்..
அதனாலேயே சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்று துடிப்புடன்
இருக்கும் நிறைய இளைஞர்களுக்கு ஸ்டார்ட்
அப் ஆரம்பிக்க நான் உதவி செய்கிறேன்..
ஓரளவுக்கு அவர்கள் அதில் சக்ஸஸ் ஆகிற பொழுது
என்னுடைய இன்வெஸ்ட்மென்ட் டபுள் ஆகும்... சிலநேரம் பெயிலியர் ஆகிறவர்களுக்கும்
அவர்களை தட்டி கொடுத்து மோட்டிவேட் பண்ணுவதும் இல்லையென்றால் என் கம்பெனிகளிலயே
வேலை கொடுத்து விடுவேன்..
அது போல உங்க தொழில் ஆரம்பிக்க,
நான் உதவி செய்கிறேன்.. நீ என் வைப் ஐ மட்டும் கண்டுபிடித்து கொடுத்துடு..
" என்றான் ரிஷி அதே புன்னகையுடன்..
அதை கேட்டு
“டேய் விவா..! உனக்கெல்லாம் டிடெக்டிவ்
ஆபிஸ் ஆ? " என்று மீண்டும் மயங்கி விழுந்தது
விவேக் மனஸ்..
விவேக் ம் கிட்டதட்ட மயங்கி விழும் நிலைதான்.. கீழ விழாமல்
இருக்க அருகில் இருந்த டேபிலை கெட்டியாக பிடித்து கொண்டான்...
பெரிய பெரிய மூச்சுகள் இழுத்து விட,
ரிஷி அவன் நிலையை புரிந்து கொண்டு தண்ணிரை எடுத்து நீட்ட,
அவனும் அதை குடித்து அசுவாசபடுத்தி
கொண்டு ரிஷியை பார்த்து அசட்டு சிரிப்பை சிரித்தான் விவேக்..
"சாரி. பாஸ்.. திடீர்னு இவ்வ்ளவு
பெரிய தொகையை பார்த்ததும் அதிர்ச்சியா
இருந்தது.. "
"இட்ஸ் ஓகே விவேக்.. ஐ கேன் அன்டர்ஸ்டான்ட்...நானும்
இந்த நிலையை கடந்து வந்தவன் தான்... என்னதான் என் டாட் பெரிய பிசினஸ் மேன்
என்றாலும் நான் ஆரம்பத்தில் சின்ன பிசினஸ் ஐ என் சொந்த உழைப்புல தான்
ஆரம்பித்தேன்..
அப்படி நம்ம சொந்த உழைப்புல ஆரம்பித்த
பிசினஸ் ல் இருந்து வரும் முதல் ஏர்னிங் அது நூறு ரூபாய் ஆ இருந்தா கூட எவ்வளவு பெரிய
சந்தோஷத்தை கொடுக்கும் னு நானும் அனுபவிச்சிருக்கேன்..
டெபனைட்லி ஐ வில் ஹெல்ப் யூ டு க்ரோ..
பைன்ட் மை ஏஞ்சல் சூன்.. அன்ட் திஸ் சுட்
பி ஹைலி கான்பிடென்சியல்.." என்றான் தீர்க்கமான பார்வையில்...
அதே நேரம் அவன் இன்டர்காம் ஒலிக்க, அதை எடுத்தவன் அவனுடைய் அப்பாய்ன்ட்மெட் அடுத்த நிமிடம் ஆரம்பிக்க போவதை நினைவு படுத்த
"ஆல் ரைட்..விவேக்..மை டே
ஸ்டார்ட்ஸ் நௌ.. உனக்கு எந்த தகவல் கிடைத்தாலும் என்னுடைய பெர்சனல் எண்ணுக்கு
மெசேஜ் பண்ணு.. எனக்கு நேரம் கிடைக்கும் பொழுது நான் பார்த்துவிட்டு ரிப்ளை
பண்றேன்..
எனிதிங் இம்பார்ட்டன்ட் கால் மி இம்மீடியட்லி.." என்று கை குலுக்க, விவேக் ம் எழுந்து கை குலுக்கி விடை பெற்று சென்றான்....!
Comments
Post a Comment