தேடும் கண் பார்வை தவிக்க-25
அதன் பிறகு ரிஷியின் நேரம் ஜெட் வேகத்தில் பறந்தது..
நன்றாக மூச்சு விட கூட முடியாமல்
இருந்த தன் வேலையை எல்லாம் ஓரளவுக்கு முடித்தவன் மாலை ஆறு மணி அளவில் தன் டையை தளர்த்தி விட்டு கொண்டு இருக்கையின் பின்னால் சாய்ந்து கொண்டு கண்ணை மூட கண்ணுக்குள்
வந்து குதித்தாள் ரோஜா..
அவளின் அந்த மருண்ட விழிகளை
கண்டவனுக்கு அடுத்த நொடி அவன் உள்ளே இருந்த அவளை காணாத ஏக்கமும் வலியும் வேதனையும்
மீண்டும் தலை தூக்க, உடனே விவேக் ன் நினைவு வந்தது.
அவனுடைய பெர்சனல் அலைபேசியை ஆன் பண்ணி
விவேக் இடமிருந்து ஏதாவது மெசேஜ் வந்திருக்கா
என்று பார்க்க, அதில் விவேக் அவனிடம் பேசம் வேண்டும்
என்று மெசேஜ் பண்ணி இருந்தான்..
அதை கண்டதும் அடுத்த நொடி விவேக் ஐ
அழைத்திருந்தான் ரிஷி..
ரிஷியின் அழைப்பை ஏற்ற விவேக்
“பாஸ்... உங்களுக்கு ஒரு குட் நியூஸ் ஒரு
பேட் நியூஸ்.. எது முதல்ல சொல்லட்டும்? “ என்று உற்சாகத்துடன்
ஆரம்பித்தான் விவேக்..
அதைக் கேட்ட ரிஷியும் கொஞ்சமும்
யோசிக்காமல்
"ஐ ஆல்வேஸ் வான்ட் குட் அன்ட்
பாசிட்டிவ் நியூஸ்.. கே அகெட் மேன் ஃபாஸ்ட்..என்ன? என் வைஃப் ஐ கண்டுபுடிச்சிட்டியா? "
என்றான் ஆர்வமாக..
"ஒகே பாஸ்.. குட் நியூஸ் என்னன்னா
உங்க வைஃப் லண்டன் போன அந்த டான்ஸ் கோஸ்டியை கண்டு பிடித்து விட்டேன்.. “ என்றான் வெற்றி கழிப்புடன்...
அதைக் கேட்ட ரிஷி துள்ளி குதித்தான்...
"வாவ்.. ரியலி? யூ ஆர் சோ கிரேட் விவா... ஐ வான்னா ஹக் அன்ட் கிஸ் யூ.." என்று ஆர்பரித்தான்...
"டேய்.. நெட்ட.. அதுக்குள்ள
துள்ளி குதிக்காதா...இந்த விவா சொல்ல போற அடுத்த செய்தியும் கேட்டுட்டு அப்புறமேல்
இவன பாராட்ட மனம் இருந்தால் பாராட்டு.. " என்று நக்கலாக சிரித்தது மனஸ்..
"சொல்லு விவா.. எங்க இருக்கா என் ரோஜா பொண்ணு..? நான் இப்பயே பார்க்கணும்.. நீ அட்ரசை
சொல்லு.. நான் இப்பயே கிளம்பி வர்றேன்.." என்று பரபரத்தான்...
"பாஸ்..... அது
வந்து.................. " என்று இழுத்தான்..
"என்னாச்சு விவேக்? எதுக்கு தயங்கறீங்க? "
"பாஸ்.. நான் சொன்னேனே.. பேட்
நியூஸ்.... அது என்னனா? .........." என்று மீண்டும் இழுத்தான்..
இங்க ரிஷியோ பொறுமை இழந்து
கொண்டிருந்தான்..
விவேக் இழுக்கறதில் டென்ஷன் ஆக
ஆரம்பித்தவன்
"சொல்லித்தொல டா... இப்படி கம்
மாதிரி இழுக்காத..." என்றான் ஆர்வம் பரபரப்பு எரிச்சல் எல்லாம் கலந்த குரலில்..
சற்றுமுன் கிடைத்த மரியாதை எல்லாம் காற்றில்
போனதை உணர்ந்தாலும் விவேக் அதற்கு மேல் தாமதிக்காமல்
"அது வந்து பாஸ்..... மேடம் அந்த
டான்ஸ் கோஸ்டியுடன் இரண்டு நாள் கழித்து லண்டன் ல இருந்து சென்னைக்கு திரும்பி
வந்திட்டாங்க... " என்று ஒரு புல் ஸ்டாப் வைக்க,,
அதிலயே ரிஷிக்கு பெரும் நிம்மதியாக
இருந்தது.. எப்படியோ அவள் எந்த குறையும் இல்லாமல் இந்தியா வந்து விட்டாள். என்று
நிம்மதியாக இருந்தது..
“அப்புறம் என்னாச்சு? சீக்கிரம் சொல்லுடா.. எனக்கு
பிபி எகிறுது? “ என்று
கத்தினான் ரிஷி..
“வந்து பாஸ்... இந்தியா வந்ததுக்கு
பிறகு அடுத்த வாரத்தில் இருந்து மேடம் அந்த டான்ஸ் ஸ்கூலுக்கு வர்றதில்லையாம்...
" என்றான் இழுத்தவாறு..
"சோ வாட்...? அவ அட்ரஸ் ஐ வாங்கி போய்
பார்க்க வேண்டியதுதான? " என்று சிடுசிடுத்தான்...
"ஹ்ம்ம்ம் பார்த்தேனே.. போய் அந்த
அட்ரஸில் பார்த்தேனே... " என்றான்
"அப்புறம் என்னாச்சு?
" என்றான் முழு டென்சனுடன்..
“அது வந்து பாஸ்... அப்படி ஒரு அட்ரஸ்
ஏ இல்ல... “ என்றான் பாவமாக..
“வாட் நான்சென்ஸ்? என்ன உளர்ற? அட்ரஸ் எப்படி இல்லாமல் போகும்.. “
என்றான் அதே எரிச்சலுடன்..
“யெஸ் பாஸ்...மேடம் அங்கதான் பார்ட்
டைம் டான்ஸ் டீச்சரா இருந்திருக்காங்க..சும்மா வார விடுமுறையில் மட்டும் வந்து
டான்ஸ் சொல்லி கொடுப்பாங்களாம்...
அவங்களுடைய விவரங்களை எழுதி இருந்த
குறிப்பேட்டில் அட்ரஸ் கட்டத்தில் ஏதோ ஒரு
அட்ரஸ் ஐ கிறுக்கி வச்சிருக்காங்க..
நம்ம வடிவேல் காமெடியில வருமே..
நம்பர் 6, விவேகானந்தர்
தெரு, துபாய் குறுக்கு சந்து,
துபாய் மெய்ன் ரோட், துபாய் னு .. அப்படித்தான் ஏதோ கைக்கு
வந்த அட்ரஸ் ஐ பில் பண்ணி வச்சிருக்காங்க..
பாஸ்.. வடிவேல் காமெடியில் வந்த அந்த
அட்ரஸ் கூட உண்மையான அட்ரஸ் ஆம்.. அதையும் ஒரு கிறுக்கன் கண்டுபுடிச்சு அந்த
அட்ரஸ் பக்கத்துல நின்னு போட்டோ எடுத்து வாட்ஸ்அப் ல போட்டிருந்தான்...
ஆனால் மேடம் எழுதி வச்சிருந்த
அட்ரஸ்....... சான்சே இல்ல... அப்படி ஒரு அட்ரஸ் சென்னையிலயே இல்ல... இல்ல இல்ல இந்தியாவிலயே ம்ஹூம் இந்த உலகத்துலயே இல்ல பாஸ்...ஒருவேளை வேற கேலக்சியில் எதுவும்
இருக்குமோ என்னவோ ?? “ என்றான் சோகமாக.. .
அதை கேட்டு கடுப்பான ரிஷி
"ஷிட்... இதுக்குத்தான் இப்படி
சுத்தி வளச்சு வந்தியா...சரி போன் நம்பராவது கிடச்சுதா? " என்று எரிஞ்சு விழுந்தான் ரிஷி..
விவேக் குட் நியூஸ் என்று சொல்லி
ஆரம்பித்ததை வைத்து தன்னவளை பார்த்துவிடலாம் என்று ஒரு நொடி சந்தோஷத்தில் திளைத்த
அவன் மனம் வாயில் வைத்த மிட்டாய் வாய்க்கு உள்ளே போகும் ஒரு நொடிக்கு முன்னே
வாயில் இருந்து நழுவி கீழ விழுந்ததை கண்டு பதறி துடித்த குழந்தையை போல தன்னவளை பார்க்க முடியாமல் போனதை நினைத்து
சிணுங்கியது அவன் மனம்..
தொப்பென்று தன் இருக்கையில் தளர்ந்து
போய் அமர்ந்தான்.. உடனே விவேக்
“போன் நம்பரும் நாட் ரீச்சபுல்
பாஸ்..எனிவே டோன்ட் வொர்ரி பாஸ்..எப்படியும் கண்டுபிடித்து விடலாம்..இப்பதான
ஆரம்பிச்சிருக்கேன்.. கண்டிப்பா சீக்கிரம் கண்டுபுடித்து விடுவேன்.. எனக்கு வேற
ஏதாவது ஒரு க்ளு கொடுங்க பாஸ்..
சின்னதா ஏதாவது யூஸ்புல்லா
இருக்கிற மாதிரி க்ளூ கிடைச்சாலே போதும்.. நல்லா யோசிச்சு பாருங்க பாஸ்..மேடம் ஐ
பற்றி வேற ஏதாவது ஞாபகம் இருக்கா? "என்றான் ரிஷியை சமாதான
படுத்தியவாறு...
"ஹ்ம்ம்ம் வேற எதுவும் இல்லையே !!
“ என்று சுழல் நாற்காலியில் சுத்தி கொண்டே யோசித்தவன்
“ஹே விவேக்.. அவளுடைய போர்டிங் பாஸ்
என்கிட்ட இருக்கு...ஏர்போர்ட் ல இருந்து கார்ல வர்றப்ப எப்படியோ கீழ
விழுந்துட்டது..
அத நான் பத்திரமா எடுத்து
வச்சிருக்கேன்.. வில் தட் பி ஹெல்ப்புல்? "
"வாவ்.. சூப்பர் பாஸ்.. இது
போதும்.. இத வச்சு அந்த ஏர்லைன்ல விசாரிச்சா அவங்க அட்ரஸ் ஐ கண்டு புடிச்சிடலாம்..
சூப்பர் பாஸ்.. நீங்க அந்த போர்டிங் பாஸ் ஐ உடனே வாட்ஸ்அப்பில் அனுப்பி வைங்க..
சீக்கிரம் கண்டு புடிச்சிடலாம்.. " என்றான் உற்சாகத்துடன்..
ரிஷியும் தன் வாலட் ல் பத்திரமாக
வைத்திருந்த அந்த போர்டிங் பாஸ் ஐ போட்டோ எடுத்து அதை வாட்ஸ்அப்பில் அனுப்பி வைத்துவிட்டு ஆவலுடன் விவேக் ன் பதிலுக்காக
காத்திருந்தான்..
அடுத்த நாள் அதே ஆறு மணி அளவில் விவேக் ரிஷிக்கு கால் பண்ணி
"பாஸ்.. ஒரு குட் ந்யூஸ், ஒரு பேட் ந்யூஸ்.. எது முதல்ல
சொல்லணும்? " என்றான் சிரித்தவாறு ..
"டேய் விவா... நீ அடி வாங்க போற..
ரெண்டையும் சேர்த்து சொல்லு.. இரு இரு.. நீ கொடுக்கற பில்டப் ஐ பார்த்தா இரு நானே
கெஸ் பண்றேன்..
BA ( British Airways ) ல இருக்கிற ஆள வச்சு என் ரோஜா பொண்ணோட அட்ரசை கண்டுபுடிச்சிட்ட..
ஆனால் அங்க போனா அந்த அட்ரசில் அவள் இல்லை.. வீட்டை காலி பண்ணிகிட்டு போய்ட்டா..
இதான.. " என்றான் ரிஷி சலிப்புடன்..
"வாவாவாவாவ்... சூப்பர் பாஸ்..
டிடெக்டிவ் மூள பாஸ் உங்களுது.. பேசாம இந்த பீல்ட் க்கு வந்திடுங்க.. " என்று
சிரித்தான் விவேக்..
"சிரிக்காத டா... டிடெக்டிவ் மூள இல்ல.. பிசினஸ் மூளை.. எதிரில்
இருப்பவர் ஒரு வார்த்தை சொன்னாலே அவங்க மனசுல இருக்கறத கண்டுபுடிச்சிடுவான் இந்த
ரிஷி..
நீ இழுக்கறத வச்சே கால்குலேட்
பண்ணிட்டேன்.. சோ இதுலயும் ஊத்திகிடுச்சா? வாட்ஸ் நெக்ஸ்ட்? " என்றான்
ஒரு தொழிலதிபனாக..
காலம் நேரம் ரொம்ப முக்கியம் தொழிலில்
இருப்பவர்களுக்கு..
எவ்வரி மினிட்ஸ் கவுண்ட்ஸ் என்பது
போல.. நொடியும் சோம்பி இருக்காமல் அடுத்து என்ன என்று கீப் திங்கிங்.. அதுதான்
தொழிலில் வெற்றியை சாதிக்க முடியும் என்ற பாடத்தை கற்று இருந்த ரிஷி விவேக்
சொல்லிய செய்தியை கேட்டு உடைந்து போகாமல் அடுத்து என்ன என்று யோசிக்க
ஆரம்பித்தான்..
"ஹ்ம்ம்ம்ம் ஏதாவது வழி இருக்கும்
பாஸ்... எப்படியும் கண்டு புடிச்சிடலாம்...எப்படியோ மேடம் சென்னையில தான் இருக்கறாங்கனு
கண்டுபுடிச்சாச்சு..
எப்படியும் வேற ஏதாவது டான்ஸ் ஸ்கூல் ல
சேர்ந்திருக்கலாம். இல்ல ஏதாவது சாப்ட்வேர் கம்பெனில வேலை செஞ்சுட்டு பொழுது
போக்குக்காக டான்ஸரா வந்திருக்கலாம்
சென்னையில் இருக்கிற எல்லா டான்ஸ்
ஸ்கூல் லயும் சாப்ட்வேர் கம்பெனியிலயும்
தேடி பார்க்கறேன் பாஸ்.. " என்று சமாதானம் செய்தான்...
"ஹ்ம்ம் குட் ஐடியா... சீக்கிரம்
கண்டுபுடி மேன்... ஐ கான்ட் வெய்ட் எனிமோர்... " என்றான் வேதனையுடன்..
ஸ்யூர் பாஸ்....சீக்கிரம் நல்ல
செய்தியுடன் வர்றேன்... " என்று சொல்லி அலைபேசியை அணைத்தவன் இரவு பகலாக அந்த
சென்னையையே சல்லடை போட்டு சலித்தான் விவேக்...
கிட்டதட்ட இரண்டு வாரம்
கழித்து சனிக்கிழமை மாலை ரிஷியை அழைத்தான் விவேக்...
கண்டேன் சீதையை என்பது போல, இந்த முறை குட் ந்யூஸ் பேட் ந்யூஸ் னு இழுத்து ரிஷிக்கு பிபியை
ஏத்தாமல்
"பாஸ்... உங்க உயிரை
கண்டுபுடிச்சிட்டேன்... " என்றான் உற்சாகத்துடன்...
அதை கேட்டு ரிஷி நம்பாமல்
"அடுத்து சொல்ல வேண்டிய கெட்ட
செய்தியையும் சொல்லி முடி மேன்.. அப்புறம் நான் அதை செலபரேட் பண்றதா இல்லையானு
முடிவு பண்றேன்.. " என்றான் நக்கலாக...
"பாஸ்.. ரொம்பவும்
கலாய்க்கறீங்க..இதுக்குனே நான் சொல்ல மாட்டேன்.. “ என்று சிணுங்கினான் விவேக்..
“ஹா ஹா ஹா.. ஓ சாரி விவா... நீ வழக்கமா
சொதப்புவியா.. அதே போல இந்த முறையும் சொதப்பிட்டியோனு யோசிச்சேன்.. அப்ப நிஜமாகவே
என் ரோஜாவை கண்டுபுடிச்சிட்டியா? “ என்றான் ஆர்வமாக
“யெஸ் பாஸ்.. அவங்க வீட்டுக்கு முன்னாடி
நின்னுகிட்டுதான் பேசி கிட்டிருக்கேன்...” என்றான் வெற்றி சிரிப்புடன்...
“வாவ்.... கிரேட்... யூ ஆர் தி பெஸ்ட்
டிடெக்டிவ் விவா... எப்படி கண்டுபுடிச்ச? “ என்றான்
ஆர்வமாக..
“அத ஏன் கேட்கறீங்க பாஸ்.. எல்லா டான்ஸ்
க்ளாஸ், டான்ஸ் ஸ்கூல் ஏன் வீட்ல யாராவது டான்ஸ்
சொல்லி கொடுக்கிறாங்களானு ஒன்னு விடாம எல்லாரையும் தேடி பார்த்தேன்.
அப்புறம் இங்கே டான்ஸ் சொல்லி
கொடுக்கபடும்னு நெட்ல வந்த ஆட் இப்படி
எல்லாம் சல்லடை போட்டு தேடி பார்த்து ரோஜாவை கண்டு புடிச்சு அவங்க லண்டன்
போனாங்களானு விசாரிச்சா எல்லாருமே இல்லை னு கையை விரிச்சுட்டாங்க...
அப்புறம் சாப்ட்வேர் கம்பெனில தேட
ஆரம்பிச்சேன்.. ஆரம்பத்துல ஈசி டாஸ்க் னு களத்துல குதிச்சிட்டேன் பாஸ்....
அதுக்கப்புறம் தான் தெரிஞ்சது அது எவ்வளவு பெரிய டப் ஆன டாஸ்க் னு !!! “
“ஏன்..? அதுல என்ன அவ்வளவு பெரிய கஷ்டம்? “ என்றான் ரிஷி
“பாஸ்... திருப்பதியில போய் மொட்டய
தேடற மாதிரி சாப்ட்வேர் கம்பெனில போய் ரோஜாவை ஐ மீன் ரோஜா ன்ற பேர் இருக்கற பொண்ணை தேடறதுனு புரிஞ்சுகிட்டேன்..
சென்னைல தடுக்கி விழுந்தா சாப்ட்வேர்
கம்பெனியா இருக்கு பாஸ்.. பெரிய பெரிய எம்.என்.சி ல இருந்து குட்டி குட்டி
ஸ்டார்ட்அப்னு அத்தனை இருக்கு..
ஆனாலும் முன் வச்ச கால பின் வைக்காம
எல்லா கம்பெனிலயும் தேடி பார்த்தேன்.. ரோஜா னு பேர் மட்டும் அத்தன பொண்ணுங்க
வச்சிருக்குதுங்க..
எல்லாத்தையும் ஒன்னு விடாம கால் பண்ணி விசாரிச்சுட்டேன்..
ஆனா ரிசல்ட் தான் பெய்லியர்... யாருமே
நீங்க சொன்ன டான்சர் ரோஜா வா இல்ல...
பாக்சிங் ரோஜா, சிங்கர் ரோஜா,
டீச்சர் ரோஜா, போலிஸ் ரோஜா னு தான் மாட்டுச்சுங்களே தவிர
டான்ஸர் ரோஜா அதுவும் லண்டன் போன டான்ஸ் கோஸ்டியில் இருக்கிற ரோஜா மட்டும்
மிஸ்ஸிங்... “ என்று கையை விரித்தான்...
“ஓ...... அப்புறம் என்னாச்சு? எப்படி கண்டுபுடிச்ச? “ என்றான் ரிஷி ஆர்வமாக
“ஹ்ம்ம்ம்ம் கஜினி முகம்மது மாதிரி
விடாமல் சில பல வழிகளில் முயன்று கடைசியாக இரண்டு வாரம் கழித்து இப்பதான் ஜஸ்ட்
கண்டு புடிச்சிட்டேன்...
அவங்க வீட்டுக்கு வந்து பக்கத்துல
விசாரிச்சு ரோஜா, நீங்க சொன்ன தேதியில் லண்டன் போனவங்க..
அதே ஹோட்டல் ல டான்ஸ் ஆடினாங்கன்ற எல்லா விவரத்தையும் கன்பார்ம் பண்ணிகிட்டேன் பாஸ்...
ஆனா இன்னும் வீட்டுக்குள்ள போகல.. நீங்க
ஃபிரியா இருந்தீங்கனா நேர்ல வர முடியுமா? நீங்க வந்து மேடம்
ஐ நேர்ல பார்த்து கன்பார்ம் பண்ணிகிட்டிங்கனா இந்த கேஸ் ஐ முடிச்சிடலாம்... “
என்றான் விவேக் பெருமையாக..
“ஓ.. ஸ்யூர்.. இதோ இப்பவே
கிளம்பிட்டேன்..எனக்கு அந்த லொகேசன் மேப் ஐ வாட்ஸ்அப் ல் அனுப்பி வை “ என்று
அலைபேசியை அணைத்தவன் அவன் அணிந்திருந்த
த்ரீ போர்த் ட்ராயரும் கையில்லாத டீ சர்ட்ம் உடனே அடுத்த நொடி அவனுடைய பெர்ராரியை
எடுத்து கொண்டு பறந்திருந்தான் ரிஷி..
அடுத்த அரை மணி நேரத்தில் விவேக் அனுப்பி இருந்த அட்ரஸ் க்கு
பறந்திருந்தவன் காரை நிறுத்திவிட்டு சாவியை எடுத்து கையில் சுழற்றியபடி துள்ளலுடன்
நடந்தான் ரிஷி..
அங்கு சாலையின் ஓரமாக நின்று கொண்டிருந்த விவேக் ரிஷியை பார்த்து ஷாக் ஆகி போனான்... அலுவலகத்தில் கோட் சூட்டுடன் சிங்கமாக கர்ஜித்து
கொண்டு உலா வரும் அந்த ரிஷியா என்று ஆச்சர்யமாக இருந்தது...
தன் ஆச்சர்யத்தை மறைத்து கொண்டு
முன்னால் சென்று ரிஷியின் கை பற்றி குலுக்கி மேலும் தாமதிக்காமல் இருவரும் இணைந்து
அந்த வீட்டிற்குள் சென்றனர்...
ஒரு பெரியவர் வந்து கதவை திறக்க, தங்களை பற்றி அறிமுக படுத்தி கொண்டு ரோஜாவை பார்க்க வந்திருப்பதாக
கூற, அவரும் யோசனையாக அவர்களை ஏற இறங்க பார்த்து
உள்ளே அழைத்து சென்றார்...
அவர்களை வரவேற்பறையில் அமர வைத்து தன்
மகள் இருந்த அறை பக்கம் பார்த்து குரல் கொடுத்து அவளை அழைத்தார் அந்த பெரியவர்..
வரவேற்பறையில் அமர்ந்து கொண்டு
ரோஜாவுக்காக காத்திருந்த ரிஷியின் மனமோ வேகமாக அடித்து கொண்டது..உள்ளுக்குள்
படபடப்பாக இருந்தது.. இதெல்லாம் புதிதாகவும் ரொம்பவுமே பிடித்தும் இருந்தது
அவனுக்கு....
இத்தனை நாட்களுக்கு பிறகு தன் ரோஜா
பொண்ணை பார்க்க போகும் சந்தோஷம் ஆர்வம் மகிழ்ச்சி எல்லாம் கலந்து ஒரு வித
படபடப்பில் நிறைந்து நின்றான்...
தன் தந்தையின் குரலை கேட்டு சிரித்த
முகத்துடன் துள்ளலுடன் தன் அறையில்
இருந்து வெளிவந்தவளை கண்டதும் அதிர்ச்சியில் உறைந்து நின்றான் ரிஷி..........
Comments
Post a Comment