தேடும் கண் பார்வை தவிக்க-26

 


அத்தியாயம்-26

சிரித்த முகத்துடன்  துள்ளலுடன் தன் அறையில் இருந்து வெளிவந்தவளை ஆர்வத்துடன் கண்ட ரிஷி அடுத்த நொடி அதிர்ச்சியில் உறைந்து நின்றான்...

அதுவரை தன் ரோஜா பொண்ணை பார்ப்பதற்காக அவன்  உள்ளே இருந்த படபடப்பும், தவிப்பும் நொடியில் அடங்கி போனது... தன்னவளை காணப் போகும் ஆவலில் அலை கடலை  போல ஆர்பரித்த உற்சாக அலை காற்று போன பலூனாய் புஸ் என்று ஆனது...

சூரியனை கண்ட காலை நேர தாமரை போல ஆர்வமாய் மலர்ந்து பிரகாசித்திருந்த அவன் முகம் வெளியில் வந்தவளை கண்டதும் மாலை நேரத்து சூரிய காந்தியாய் சுருங்கி போனது..

ரிஷியின் முகத்தையே ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்த விவேக்  அவனருகில் நெருங்கி அமர்ந்து

"என்னாச்சு பாஸ்..?  உங்க வைஃப் ஐ பார்த்ததும்  சினிமாவில் வருவதைப் போல உடனே வேகமாக எழுந்து ஸ்லோ மோஷனில்  ஓடி அப்படியே கட்டிப் பிடித்து மேலே தூக்கி சுத்துவிங்க என்று ஒரு நல்ல ரொமான்ஸ் சீன் ஐ  எதிர்பார்த்து ஆர்வமாக காத்துகிட்டு இருக்கேன்..

நீங்க என்னடானா சொங்கி போன மங்கி மாதிரி இப்படி ஒரு ரியாக்சன் தர்றீங்க? வாட் ஹேப்பன்ட் பாஸ்? " என்றான் ரகசிய குரலில்..

அவனை ஒரு எரிக்கும் பார்வை பார்த்த ரிஷி

"டேய் விவா.. இவள் அவள் இல்லை... " என்றான் முறைத்தவாறு...

"வாட்?? என்ன பாஸ் சொல்றீங்க? இவங்கதான் உங்க கூட டிராவல் பண்ணினவங்க.. நீங்க கொடுத்த போர்டிங்  பாஸ் ல் அன்று உங்களுடன்  ட்ராவல் பண்ணினது இவங்கதான்...

எவ்வளவு கஷ்டப்பட்டு கண்டுபிடித்து இருக்கேன் தெரியுமா !! பட்டுனு இவங்க அவங்க இல்லை னு  சொல்லிட்டிங்களே..பிஞ்சு மனசு தாங்காது பாஸ்..  எதுக்கும்  இன்னொரு முறை நன்றாக உத்து பாருங்க பாஸ்.. “  என்றான் விவேக்.

“அதெல்லாம் நல்லாவே பார்த்து விட்டேன்... இந்த பொண்ணு என் ரோஜா பொண்ணு  இல்லை... “  என்றான் ரிஷி உறுதியாக..

“ஹ்ம்ம் அது எப்படி பாஸ் இவ்வளவு உறுதியா சொல்றீங்க?  அவங்க போட்டோ உங்க கிட்ட இல்ல.. நீங்க மேடம் ஐ பார்த்தது ஒரு மூணு மாசத்துக்கு முன்னாடி... அதுவும் ஒரு பத்து மணி நேரம் மட்டும்தான் பார்த்துகிட்டு  வந்திருக்கீங்க.. “  என்று யோசனையானவன் மூளையில் ஏதோ மின்னல் அடிக்க

“ஒன் செகண்ட் பாஸ்..... “   என்றவன் அவசரமாக யோசித்து

"ஐ காட் இட்... பாஸ்..  அன்னைக்கு மேடம் அவசர அவசரமா கிளம்பி வந்திருக்காங்க..சரியா மேக்கப் போட்டிருக்க மாட்டாங்க... கூடவே பத்து மணி நேரம் அசந்து தூங்கி இருந்ததால் மேக்கப் எல்லாம் கழைந்து போயிருக்கும்..

அப்ப நீங்க  ப்ளைட் ல பார்த்தது மேக்கப் இல்லாத ரோஜா பொண்ணு..  ஆனால் நீங்க இப்ப இங்க பார்க்கிறது புல் மேக்கப் ஓட இருக்கிற ரோஜா பொண்ணு...

மே மு, (மேக்கப் முன்), மே பி (மேக்கப் பின் )  க்கும்   கண்டிப்பா டிபரன்ஸ்  இருக்கும் பாஸ்.. எதுக்கும் நல்லா ஞாபகபடுத்தி பாருங்க.. கொஞ்சமாவது இவங்க மேடம் கூட செட் ஆகறாங்களானு... " என்றான் ஆர்வமாக...

"ப்ச்..... ஐ நோ ஹெர் வெரி வெல் விவா.... பத்து மணி நேரம் என்ன பத்தே செகண்ட்ஸ் அவளை  பார்த்தவுடனேயே என் மனதிற்குள் ஆணி அடித்த மாதிரி அவள் முகம் என் மனதிற்குள் பதிந்து விட்டது...

சரி முகம்  நீ சொன்ன மாதிரியே மேக்கப் இல்லாமல் பொருந்தாமல் இருக்கலாம்.. ஆனால் அவளிடமிருந்து வந்த அந்த வாசம்..!!  அதுவும் அவளுக்கே உரித்தான பிரத்யேகமான ஸ்மெல் அது..

எந்த ஒரு பெர்ஃப்யூமிலும்  இல்லாத வாசம் இயற்கையான அவளுடைய வாசம் அவளிடமிருந்து வரும்.. இந்த பொண்ணு அடிச்சுருக்கே இது ஒரு மட்டமான பெர்ஃப்யூம்..

அதுவும் மார்க்கெட்டில் என்னுடைய காஸ்மெட்டிக்ஸ் புரோடக்ட்ஸ் க்கு எதிரான  கம்பெடிட்டர் உடைய மட்டமான பெர்ஃப்யூம்.. சான்சே இல்ல.. 200% கன்பார்ம் ஆ சொல்றேன்..  இவள்  அவள்  இல்லை.. “  என்று மீண்டும் உறுதியாக சொன்னான் ரிஷி..  

அதற்குள் அந்த பெண் அவர்களை நெருங்கி இருக்க அவர்களைப் பார்த்து நட்பாக புன்னகைத்து

“ஹாய்.. ஐம் ரோஜா...என்ன விசயமா என்னை பார்க்க வந்திருக்கீங்க? “ என்றாள் யோசனையாக..

விவேக் அவள் முகத்தை உற்று பார்க்க அவள் முகத்திலும் ரிஷியை அடையாளம் கண்டு கொண்டதன் அறிகுறிகள் எதுவும் இல்லை.. அதை கண்டு தனக்குள் பரவிய  ஏமாற்றத்தை சமாளித்துக் கொண்ட விவேக்  ரோஜாவை பார்த்து

"ஹாய் மிஸ் ரோஜா..நீங்க மார்ச் இரண்டாம் தேதி இந்தியாவிலிருந்து லண்டன் சென்ற டான்ஸ் கோஸ்டியுடன் லண்டனில் டான்ஸ் புரோகிராமில் கலந்து கொள்ள லண்டன் சென்றிருந்தீர்களா? " என்றான் இடுங்கிய கண்களுடன்..

"நோ... " என்றாள் தன் தலையை இருபுறமும் ஆட்டி..

அதைக் கேட்ட ரிஷி

பாத்தியா? நான் தான் சொன்னேனே..! இவள் அவள் இல்லை என்று !“  என்று விவேக் ஐ பார்த்து தன் புருவத்தை உயர்த்த அதற்குள் ரோஜா தொடர்ந்து

“நான் அவர்களுடன் செல்ல முடியவில்லை.. ஆனால் அடுத்த நாள் தனியாக லண்டன் சென்றேன்.. “  என்றாள். தோளை  குலுக்கியவாறு..

இப்பொழுது விவேக் ரிஷியை பார்த்து ஒரு நக்கல் பார்வை பார்த்து தன் புருவத்தை உயர்த்தி பார்த்தியா ? என்றான் சிரிப்புடன்..

அதை கேட்ட ரிஷி தன் புருவத்தை நெரித்து

"ஆர் யூ ஸ்யூர்? " என்றான் கூரிய பார்வையுடன் அவளை ஆராய்ந்தவாறு..

அதை கேட்டு ஒரு  நானோ செகண்ட் அவள் முகத்தில் தடுமாற்றம் வந்து சென்றது.. ஆனாலும் சமாளித்து கொண்டு

"யா ஸ்யூர்... நான் அன்னைக்கு லண்டன் சென்றேன்.. ஆமா எதுக்கு கேட்கறீங்க? " என்றாள் சந்தேகத்துடன்..

வெளியில் வந்து அவர்களை வரவேற்று அமர வைத்த அந்த பெரியவர் சற்று தள்ளி நின்று கொண்டு அவர்கள்  பேசிக் கொண்டிருந்ததை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்  அந்த  பெரியவர்..

அவள் முகத்தில் வந்து போன நானோ செகண்ட் தடுமாற்றத்தை கண்டு கொண்டான் விவேக்.. உடனே தன் தோரணையை மாற்றி கொண்டு  

“நாங்க போலீஸ் டிபார்ட்மென்ட் ல இருந்து வர்றோம் மிஸ் ரோஜா.. அன்று ப்ளைட்ல உங்களுடன் பயணம் செய்த ஒரு பெண்ணை பற்றி தகவல் வேணும்.. அதுக்குத்தான் இந்த  என்குய்ரி பண்ணிகிட்டிருக்கோம்...

நீங்க கொஞ்சம் கோ-ஆப்பரேட் பண்ணுங்க.. " என்றான் விவேக் மிடுக்காக..

ஆனால் போலீஸ் என்றதும் அவள் முகத்தில் வியர்வை முத்து முத்தாக அரும்ப ஆரம்பித்தது.. உடலில் ஒருவித டென்சன் வந்து ஒட்டி கொண்டது. அவளையே உற்று பார்த்த விவேக்

"ஹ்ம்ம் சொல்லுங்க ரோஜா... நீங்க அன்று லண்டன் ப்ளைட்ல போனிங்களா? " என்றான் மீண்டும் கண்கள் இடுங்க..

"ஆமாம்..”  என்றாள் இப்பொழுது சுதி இறங்கி..

“சரி.. உங்க சீட் நம்பர் ஞாபகம் இருக்கா? " என்றான் அதே மிரட்டும் குரலில்..

“சீட் நம்பர்......?? அது சரியா ஞாபகம் இல்ல சார்... மூணு மாசம் முன்னாடி போன சீட் நம்பர் எப்படி ஞாபகம் வச்சிக்க முடியும்? என்று  லேசாக விவேக் ஐ பார்த்து முறைத்தாள் ரோஜா..

“சரி.. இவரை எங்கயாவது பார்த்த மாதிரி இருக்கா? "

என்று ரிஷியை கை காட்டினான் விவேக்.. அவனை உற்று பார்த்தவள் உதட்டை பிதுக்கினாள்..

இல்ல சார்.. .இவரை நான் இதுக்கு முன்னாடி பார்த்ததில்லை.. ஆமா ஏன் கேட்கறீங்க? " என்றாள் சந்தேகமாக..

"சொல்றேன் ரோஜா.. ஆனா அதுக்கு முன்னாடி நான் கேட்கிற கேள்விக்கு மறைக்காமல் பதில் சொல்லுங்க.. நீங்க நிச்சயமா அன்னைக்கு லண்டன் போனீங்களா? என்று விவேக் மீண்டும் அதே கேள்வியை கேட்க அதில் லேசாக எரிச்சலான ரோஜா

"என்ன சார் இது? நான்தான் முன்னாடியே சொல்லிட்டனே.. நான் லண்டன் போனேனு.. திரும்ப திரும்ப அதையே கேட்கறீங்க? " என்று  முறைத்தாள் எரிச்சலை வெளிகட்டி..

"சில் மிஸ் ரோஜா.. இந்த விவா ஒரு இதை காரணம் இல்லாமல் திரும்ப திரும்ப கேட்க மாட்டான்..

சரி.. ப்ளைட்ல எங்க உட்கார்ந்து இருந்தீங்க? "

"ஹ்ம்ம்ம் சீட் லதான்... " என்று  நக்கலாக சிரித்தாள் ரோஜா..

அதை கேட்டு முறைத்த விவேக்

"பின்ன?  எல்லாரும் ப்ளைட் மேலயா உட்கார்ந்துகிட்டு போவாங்க.. ஜோக்ஸ் அபார்ட் மிஸ் ரோஜா... சீரியஸா சொல்லுங்க..ப்ளைட் ல எந்த சைட் உட்கார்ந்திங்க..ஐ மீன் விண்டோ சீட், அய்ல்(Aisle) சீட் இப்படி..

உடனே அதுவும் ஞாபகம் இல்லைனு சொல்லிடாதிங்க.. நீங்க அப்படி ஒன்னும் வாரம் ஒரு முறை ப்ளைட் ஏறி இறங்கறவங்க இல்லை.. அதனால் சென்றமுறை சென்றது கண்டிப்பா ஞாபகம் இருக்கும்.. இதை மறைக்காம சொல்லுங்க.. “  என்றான் கொஞ்சம் மிரட்டும் விதமாக..

ரோஜாவும் அவசரமாக யோசித்து

"ஹ்ம்ம் பாத்வே ஐ ஒட்டி இருந்த அய்ல் சீட்.. " என்றாள் கொஞ்சம் சந்தேகமாக..

“உங்க பக்கத்துல யார் உட்கார்ந்து இருந்தாங்க?  அது எத்தன பேர் உட்காரும் வரிசை னு சொல்லுங்க? "  என்றான் மீண்டும் மிடுக்குடன்..

"சார்... இதெல்லாம் எதுக்கு கேட்கறீங்க..? “ என்றாள் கொஞ்சம் அச்சம் கொஞ்சம் பயம் கொஞ்சம் உதறல் என்று எல்லாம் கலந்த கலவையுடன்..

“ஒரு கேஸ் விசயமா இதெல்லாம் தேவையா இருக்கு மிஸ் ரோஜா... ப்ளீஸ் கோ-ஆப்பரேட்.. "

"ஹ்ம்ம்ம்ம்ம்ம் அது மூணு பேர் அமரும் வரிசை.. என் பக்கத்துல ஒரு லேடி உட்கார்ந்து இருந்தாங்க... " என்று இழுத்தாள் தயக்கத்துடன்..

"உங்க போர்டிங் பாஸ் இருக்கா? "

"ப்ச்.. இல்ல அதெல்லாம்  தூக்கி போட்டுட்டேன்.. "

"பொய்.....மிஸ் ரோஜா...  நீங்க இதுவரைக்கும் சொன்ன கதை போதும்.. நாங்க ஒண்ணும் வேலை வெட்டி இல்லாம இங்க வந்து உட்கார்ந்துகிட்டு  உங்க வெட்டி கதையை கேட்க வரலை..

உண்மையை சொல்லுங்க.. " என்று அடிக்குரலில் சீறினான் விவேக்..  

அதில் கொஞ்சம் அரண்ட ரோஜா மீண்டும் நான் சொன்னதே உண்மை உண்மையை தவிர வேறொன்றும் இல்லை என்ற மாதிரி நான் லண்டன் போனேன் என்று அதே பாட்டை  திரும்ப பாட, அதில் கடுப்பான விவேக்

"ஸ்டாப் இட் ரோஜா..இதுக்கு மேலயும் கதை சொல்லாதிங்க.. இதோ இருக்கு பாருங்க உங்க போர்டிங் பாஸ்..ரோஜா கண்ணன் னு கொட்ட எழுத்துல போட்டிருக்கிற போர்டிங் பாஸ்..

நீங்க சொன்ன மாதிரி அய்ல் சீட் இல்ல.. நீங்க உட்கார்ந்து போனது விண்டோ சீட்.. அது மூணு இருக்கை உள்ள வரிசை இல்ல.. இரண்டு பேர் மட்டுமே அமரும் லாவடரி (lavatory) பக்கம் இருந்த கடைசி வரிசை...

அப்புறம் உங்க பக்கத்துல உட்கார்ந்து இருந்தது லேடி இல்லை..ஒரு ஜென்ட்ஸ்...

நீங்க சொல்றதை வச்சு பார்த்தால் அன்றைக்கு நீங்க லண்டன் போகவே இல்லை.. ஆனால் பாஸ்போர்ட் உங்களுடையது.. நீங்க லண்டன் போனதா அதில் என்ட்ரி ஆகியிருக்கு...  இனிமேலும் மறைக்காம உண்மையை சொல்லுங்க..

அன்றைக்கு உங்க பெயரில் ட்ராவல் பண்ணியது யார்? " என்றான் விவேக் அதே அடிக்குரலில் சீறும் மிரட்டலுடன்..

அதை கேட்ட ரிஷிக்கு அப்பொழுதுதான் ஸ்ட்ரைக் ஆனது..

லண்டன் இமிக்ரேஷனில் ரோஜாவின் முகம் பாஸ்போர்ட்டில் இருந்த முகத்துடன் ஒத்து போகாததும் அவள் பிங்கர் பிரிண்ட்ஸ் மேட்ச் ஆகாமல் இருந்ததும் அதை கண்டு அவள் திருதிருவென்று விழித்து பயத்தில் நடுங்கியதும் இப்பொழுது கண் முன்னே வந்தது..

“அப்படி என்றால் ............... ?

அன்று என்னுடன் வந்தவள் ரோஜா வே இல்லையா? அவள் பெயர் ரோஜா இல்லையா ? வேற ஒருத்தி ரோஜா என்ற பெயரில் அன்று வந்தாளா? இது போர்ஜரி.. ஆள் மாற்றும் வேலை..

என் ரோஜா பொண்ணு அப்படி பட்டவளா? என் மான்குட்டி ஒரு ஏமாற்று பேர்வழியா? அவள் முகத்தை பார்த்தால் அப்படி தெரியவில்லையே !

கள்ளம் கபடமற்ற குழந்தைதனமான  முகம் அல்லவா? அவள் எப்படி இப்படி ஒரு பெரிய   போர்ஜரி யை பண்ணி இருக்க முடியும்? “ என்று அதிர்ந்து போனான் ரிஷி..

இதுவரை யாரையும் நம்பி ஏமாந்தது இல்லை அவன்.. எல்லாரையும் பார்த்த நொடியில் நல்லவர்களா இல்லை கெட்டவர்களா என்று எடை போட்டு விடுவான்.. அவர்களுக்கு தகுந்த மாதிரி காயை நகர்த்துவான்..

ஆனால் இந்த ரோஜா பொண்ணு விசயத்தில் அப்படி எதுவுமே எனக்கு தவறாகவே தோணவில்லையே..பாஸ்போர்ட் மேட்ச் ஆகாதப்ப கூட இப்படி ஒரு தில்லு முல்லு இருக்கும்னு யோசித்திருக்க வில்லையே.. இமிக்ரேஷன் ஆபிஸர் ஜேம்ஸ் இடம் ரெக்கமண்ட் பண்ணி அவன் அல்லவா அவளை அழைத்து சென்றான்..

அப்ப ஒரு   போர்ஜரி க்கா உதவி செய்திருக்கிறான்? ஒரு ஏமாற்றுக்காரியை யா மனைவியாக அவன் மனதில் பதிந்து கொண்டான்..?  அவளிடமா தன் மனம் சாய வேண்டும்...?  “ என்று உள்ளுக்குள் புலம்ப மற்றொரு மனமோ

“இல்ல ரிஷி.. உன் கணிப்பு எப்பொழுதும் தப்பாகாது... உன் ரோஜா பொண்ணு தப்பானவளா இருக்க முடியாது.. ஏதோ இருக்கு.. அவசரபட்டு எதையும் முடிவு செய்து விடாதே.. நன்றாக ஆராய்ந்து பார்.. “ என்று அவனுக்கு அறிவுறுத்த தன் தலையை உலுக்கி கொண்டு அந்த ரோஜாவையே ஆராய்ச்சியுடன் பார்த்தான் ரிஷி..

விவேக் ன் குறுக்கு விசாரணையில் தடுமாறிய ரோஜா அங்கு அவள் தந்தை இன்னும் நின்று கொண்டு அவர்களையே குருகுருவென்று பார்த்து கொண்டிருப்பதை கண்டவள்

“அப்பா....நான் இவங்களுக்கு எல்லா டீடெய்ல்ஸ் ம்  கொடுத்து அனுப்பறேன்.. நீங்க போய் ரெஸ்ட் எடுங்க... “ என்று தன் தந்தையை உள்ளே அனுப்ப முயன்றாள்..

அவரோ அவர்களை சந்தேகமாக பார்த்து

“சார்.. எதுக்கு என் பொண்ணை இப்படி குறுக்கு விசாரணை செய்யறீங்க? “ என்றார் சந்தேகமாக..

“சார்... நாங்க போலிஸ் டிபார்ட்மென்ட் ல இருந்து வந்திருக்கிறொம்...ஒரு சின்ன என்குயரி..

“நீங்க ஒன்னும் பயந்துக்காதிங்க சார்.. ஒரு 10 மினிட்ஸ் தான்.. விசாரிச்சுட்டு போய்டுவோம்... யூ கேன் கேரி ஆன்.. “ என்றான் விவேக் நட்பாக புன்னகைத்து..

“ஹ்ம்ம் சீக்கிரம் முடிச்சிட்டு போங்க சார்.. வயசு பொண்ணு இருக்கற வீட்ல இப்படி வந்து உட்கார்ந்திருந்தா பார்க்கிறவங்க தப்பா நினைப்பாங்க.. “ என்று சொல்லியவாறு தன் அறைக்கு சென்றார் ரோஜாவின் தந்தை கண்ணன்..

ஊப்..... “ என்ற நிம்மதி மூச்சு விட்டவள் விவேக் ஐ பார்த்து

“சார்... உண்மையை சொல்லுங்க.. நீங்க யார்..?  கண்டிப்பா போலிஸ் இல்லைனு தெரியுது.. எதுக்காக இப்படி என்னை நோண்டிகிட்டிருக்கீங்க? “ என்றாள் கொஞ்சம் அச்சத்துடன் கொஞ்சம் எரிச்சலுடன்..

வெல்டன் மிஸ் ரோஜா.. கரெக்ட் ஆ கண்டுபுடிச்சிட்டிங்களே !! நாங்க போலிஸ் இல்லதான்.. “ என்று புன்முறுவல் செய்தான் விவேக்..  

அவனை முறைத்த ரோஜா

“பின்ன எதுக்கு அப்படி சொன்னிங்க?

“ஹீ ஹீ ஹீ போலிஸ் னு சொன்னாதான் மக்கள் வாயவே திறக்கறாங்க.. சமிபத்தில் கூட போலிஸ் ஸ்டேசனுக்கே எஸ் . ஐ மாதிரி ட்ரெஸ் பண்ணிகிட்டு ஒரு பொண்ணு எஸ். ஐ னு சொல்லி ஒரு அக்யூஸ்ட் ஐ விடுவிக்க முயன்றுதே..

அது மாதிரி... பட் அதுக்குனு எங்களை அந்த அளவுக்கு கேவலமா நினைச்சிடாதிங்க... போலிஸ் இல்லைனாலும் போலிஸ் மாதிரி.. “ என்று  சிரித்தவன் ரோஜா அவனை பார்த்து முறைக்க

“நான் மிஸ்டர் விவேக் 007. ஒரு டிடெக்டிவ் ஏஜென்ட்.. இவர் மிஸ்டர்.. “  என்று  ரிஷியை அறிமுக படுத்த வர, ரிஷியோ கண்ணால் ஜாடை காட்டி தன்னை பற்றி சொல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை செய்ய அதில் விழித்து கொண்டவன்

“இவர் ரிஷி..  என்னுடைய அசிஸ்டெண்ட்.. “ என்றான் சிரித்தவாறு...

“அடப்பாவி..... சந்தடி சாக்குல அவ்வளவு பெரிய மல்ட்டி மில்லினரையே உனக்கு அசிஸ்டெண்ட் ஆக்கிட்டியே.. நீ பொழச்சுக்குவ ! “ என்று ரிஷியும் அவன் மனஸ் ம் சிரித்து கொண்டனர்...

“ஓ.. “ என்று  உதடு குவித்து ஆச்சர்யத்தை காட்டினாள் ரோஜா..  

“சரி... இப்ப சொல்லுங்க.. அன்னைக்கு உங்க பெயரில் லண்டன் சென்றது யார்? அந்த பொண்ணை பற்றி எங்களுக்கு தெரியணும்...

அந்த பொண்ணை கணவில்லை.. அந்த பொண்ணை கண்டு பிடித்து தர சொல்லி ஒரு கேஸ் வந்திருக்கு.. அதுக்குத்தான் இன்வெஸ்டிகேசன் பண்றோம்.. “ என்றான் குரலில் கடுமையுடன் அவளிடம் இருந்து உண்மையை வரவழைக்க..

ரோஜாவும் ஒரு முறை சுற்றி பார்த்துவிட்டு தான் அமர்ந்து இருந்த சோபாவை மெல்ல இழுத்து  இன்னும் அவர்கள் அருகில் நெருங்கி அமர்ந்து கொண்டு ரகசியமாக பேச ஆரம்பித்தாள்...

“மிஸ்டர் விவேக் அன்ட் மிஸ்டர் அசிஸ்டென்ட்... நான் இப்ப சொல்லப் போவது உங்களுக்குள்ளே இருக்கட்டும்.. இதுவரை யாருக்கும் தெரியாத ரகசியம் இது..  

குறிப்பா  எங்க வீட்டில் யாருக்கும் தெரிந்து விடக்கூடாது உங்களை நம்பி என்னை பற்றி சொல்கிறேன்..  ஹோப் யூ கீப் சீக்ரெட்.. “  என்று டிஸ்க்ளைமரை(disclaimer) போட்டு கதையை சொல்ல ஆரம்பித்தாள் ரோஜா...! 


Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!