தேடும் கண் பார்வை தவிக்க-27

 


அத்தியாயம்-27

"நான் ஒரு க்ளாசிக்கல் டான்சர்.. ஒரு ஸ்கூல்ல டான்ஸ் டீச்சர் ஆக இருக்கிறேன்.. “  என்று ஆரம்பிக்க

விவேக் இடையில் புகுந்து

“எந்த ஸ்கூல்?  நான் எல்லா டான்ஸ் ஸ்கூல் லயும் விசாரிச்சேனே..! அப்படி விசாரித்ததில் உங்களைப் பற்றி எதுவும் தெரியவில்லையே !!”  என்றான்  சந்தேகமாக..

“அது டான்ஸ் ஸ்கூல் ல இல்ல.. ஒரு ரெகுலர் ஸ்கூல்.. அவள் பணிபுரியும்  ஸ்கூல் பெயரை சொல்லி இங்க படிக்கிற பசங்களுக்கு வீக்லி ஒரு கிளாஸ் க்ளாசிக்கல் டான்ஸ் டீச்  பண்ற டான்ஸ்  டீச்சரா இருக்கேன்.. “ என்றாள்..  

“ஓ...ஐ சி..  இதை எப்படி மிஸ் பண்ணினேன்..ரெகுலர் ஸ்கூல் லயும் டான்ஸ் சொல்லி கொடுப்பாங்கனு நோட் பண்ண மறந்துட்டேன்.. “ என்று யோசித்தவன் அடுத்த நொடி  

"ஐயோடா... சென்னையில இருக்கிற ஸ்கூல் லிஸ்ட் ஐ எடுத்து அதில டான்ஸ் டீச்சரை தேடி இருந்தா  இந்த நெட்டை ரிஷியுடைய அறுபதாவது கல்யாணத்துக்குத்தான் அவருடைய பொண்டாட்டியை கண்டு பிடித்திருக்க முடியும்..

தடுக்கி விழுந்தா ஒரு ஸ்கூல் இல்ல இருக்கு... எப்படியோ அந்த வழிக்கு போகாமல் இருந்திட்டேன்.. " என்று  தன்னைத் தானே மெச்சி கொண்டான் விவேக்..  

அதுவரை அமைதியாக அமர்ந்து இருந்த ரிஷி அவளை பார்த்து

“ஹ்ம்ம்ம் மேல  சொல்லுங்க.. “ என்று ஊக்குவிக்க,

“வீக் டேஸ்ல ஸ்கூலுக்கு போய்டுவேன்.. வீக் என்ட் ல மட்டும் அந்த டான்ஸ் ஸ்கூல்க்கு போய்ட்டு சொல்லி கொடுப்பேன்..”

"ஏங்க மிஸ் ரோஜா.. ஸ்கூல் ல வர்ற சம்பளம் பத்தலையா? இப்ப இருக்கற பொண்ணுங்க எல்லாம் எப்படா லீவ் விடுவாங்க.. ஊரை சுத்தலாம்னு காத்துகிட்டிருக்காங்க..

நீங்க சண்டேயும் வீட்ல இல்லாம இப்படி வருங்கால கணவனுக்காக இப்பயே சம்பாதிக்கறிங்களாக்கும்.. " என்று நக்கலாக சிரித்தான் விவேக்..

அதை கேட்ட ரோஜா அவனை பார்த்து முறைக்க, ரிஷியும் அவனை பார்த்து  முறைத்து

"டேய் விவா.. கொஞ்சம் நேரம் அமைதியா இரு.. அவங்களை பேச விடு.. " என்று முறைத்தான்..

"ஹீ ஹீ ஹீ கொஞ்சம் உணர்ச்சி வச பட்டுட்டேன் பாஸ்.. மிஸ் ரோஜா நீங்க கன்டின்யூ ! " என்று  அசட்டு சிரிப்பை சிரித்தான்..

ரோஜாவும் மீண்டும்  முறைத்துவிட்டு

“அந்த டான்ஸ் ஸ்கூல் ல டான்ஸ் ல விருப்பம் இருக்கிற வசதி இல்லாத ஏழை குழந்தைகளுக்கு சண்டே மட்டும் ஃப்ரியா  கிளாஸ் எடுப்பாங்க..

டான்ஸ் தெரிஞ்சவங்க வாலண்டியரா ஜாய்ன் பண்ணிகிட்டு அந்த மாதிரி பசங்களுக்கு கிளாஸ் எடுப்பாங்க.. நானும் அதுல ஒரு மெம்பர்.. சண்டே நேரம் கிடைக்கிறப்ப அங்க போய்டுவேன்..

நோட் தி பாய்ண்ட் மிஸ்டர் விவேக்..சம்பளம் இல்லாமல் ஒரு சோசியல் செர்விஸ் இது.. “ என்று  அழுத்தி சொன்னாள்..

“ஓ.. சூப்பர் ங்க... உங்களை பாராட்டறேன்.. உங்கள மாதிரி... “  என்று  விவேக் ட்ராக்கை வேற பக்கம் மாற்ற ரிஷி பொறுமை இழந்து விவேக் ஐ பார்த்து முறைக்க தான் சொல்ல வந்ததை பாதியில் நிறுத்தி கொண்டு ரோஜாவை தொடர சொன்னான்..

“அந்த டான்ஸ் ஸ்கூல் ல இன்னொரு ஸ்பெஷல் அவங்க அப்பப்ப வெளிநாடுகளில் டான்ஸ் ப்ரோக்ராம் நடத்துவது.. அதுவும் முழுக்க முழுக்க சேரிட்டிக்காக..

அங்கு பயிலும் மாணவர்களுக்கு ஒரு எக்ஸ்போசர் கிடைக்கவும்  என்னை மாதிரி நாட்டியத்தில் விருப்பம் உள்ளவர்களை எல்லாம்  ஒன்று சேர்த்து நாட்டிய விழா மாதிரி இந்தியர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில் டான்ஸ் ப்ரோக்ராம் நடத்துவது வழக்கம்..

அதில் வரும் பணத்தை அப்படியே என்.ஜி.ஓ க்கு கொடுத்திடுவாங்க..

அவங்களிடம் பயிலும் மாணவர்களுக்கு இது ஒரு வாய்ப்பாகவும் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கு நம்முடைய கலைகளை மறக்காமல் இருக்கவும் அவர்களுக்கு  ஒரு சிறந்த என்டெர்டெய்ன்மெண்ட் ஆக இருக்கவும் இது மாதிரி ப்ரோக்ராம்களை அடிக்கடி நடத்துவர்..

எனக்கும் இந்த மாதிரி வெளிநாட்டுக்கு சென்று ப்ரோக்ராம் ல் பார்ட்டிசிபேட் பண்ணுவது ரொம்ப பிடிக்கும்..

அதனாலயே அந்த நாட்டிய குழுவில் நானும் பங்கெடுத்து கொள்வேன்.. இதுவரை சிங்கப்பூர் மலேசியா, அமெரிக்காவில் கூட சில மாகாணங்களில் எங்களுடைய டான்ஸ் ப்ரோகிராம் நடந்தது.. நானும் அதில் எல்லாம் கலந்து கொண்டேன்..

அந்த வகையில் மூன்று மாதங்கள் முன்பு லண்டனில் இந்த மாதிரி ஒரு புரோக்ராம் நடத்த ஏற்பாடு செய்தனர்..

நானும் அதில் கலந்துகொள்ள ப்ராக்டிஸ் பண்ணி வந்தேன்.. “ என்று நிறுத்தினாள்..

“ஓ.. அப்ப அந்த ஹோட்டலில் நடந்த ப்ரோகிராமில் நீங்கள்தான் டான்ஸ் ஆடுவதாக இருந்ததா? என்றான் ரிஷி ஆர்வமாக

“யெஸ் சார்...”

"ஓ.. அப்புறம் ஏன் நீங்க போகலை.. உங்களுக்கு பதிலா அங்கு சென்றது யார்? " என்றான் விவேக் ஆர்வமாக..

அதைக் கேட்டவள்  மீண்டும் ஒரு முறை சுற்றி பார்த்துவிட்டு குறிப்பாக அவள் தந்தை அங்கு இல்லை என தெரிந்து கொண்டு

"அது வந்து.....நான் ஒருத்தரை இரண்டு வருடமா காதலிக்கிறேன் சார்..எங்க வீட்ல பயங்கர ஸ்ட்ரிக்ட்.. காதல் கத்தரிக்காய் என்றால் என்னை வெட்டியே போட்டு விடுவார் எங்கப்பா.. அதனால் அவருக்கு இந்த விசயம் தெரியாது..

என்னுடைய டான்ஸ் ப்ரோகிராம் லண்டனில் இருந்த பொழுது தான் என் பாய்ப்ரெண்ட் க்கு ஆபிஸ் ல்  கோவா சென்று வர  டிக்கெட் கிடைத்தது..பேமிலியுடன் இரண்டு நாட்கள் தங்கி வர டிக்கெட் கிடைத்திருக்க, அவன் என்னையும் கோவா வுக்கு அழைத்தான்...

எனக்கும் அவன் கூட டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு ஆசையா இருந்தது... ஆனால் டான்ஸ் ப்ரோகிராம் ம் அதே தேதியில் இருந்தது..

எனக்கு என்ன செய்யறதுனு குழப்பமா இருந்தது.. என் லவ்வரா , டான்ஸ் ப்ரோகிராமா? கோவா வா லண்டனா என்று பட்டிமன்றம் நடத்தி  பார்த்தேன்.. அப்பொழுது தான் சதீஸ்..  அதுதான் என் லவ்வர் கெஞ்சினான்..

இந்த டான்ஸ் ப்ரோகிராமுக்கு போகிற மாதிரி வீட்டை விட்டு வந்துட்டு கோவா போய்டலாம்.. என் வீட்லயும் யாருக்கும் சந்தேகம் வராதுனு சொல்லி என்னை கம்பெல் பண்ணினான்..

அவன் சொன்ன மாதிரி நான் கோவா போய்ட்டா அங்க டான்ஸ் டீமில் ஒரு ஆள் குறையும்.. அவர்கள் என்னையும் மெய்ன் கேரக்டரா வச்சுதான் ரிகெர்சல் பண்ணியது..

நான் போகவில்லை என்றால் ரொம்பவும் சொதப்பிடும்.. அதனால் குழப்பமாக இருந்தது.. கூடவே எனக்கு லண்டன் விசா டிலே ஆய்டுச்சு.. ஒரு நாள் லேட்டாதான் கிடைத்தது.. அதனால் என் டீம் ஒரு நாள் முன்னாடியே போய்ட்டாங்க..

எனக்கு அடுத்த நாள் விசா அந்த டான்ஸ் ஸ்கூல் அட்ரஸ்க்கே வந்திருக்க அதை வாங்கி வர அங்கு சென்றிருந்தேன்..

அதை வாங்கி கொண்டு வெளி வர அப்பொழுதுதான் சதீஸ் போன் பண்ணி மீண்டும் கோவாவுக்கு வரச் சொல்லி நச்சரிச்சான்..

அவனிடம் நான் வரமுடியாது லண்டன் போறேன் என்று ரோட்டின் ஓரமாக நின்று பேசி கொண்டிருக்க, அப்பொழுது என்னை கடந்து சென்ற ஒரு பெண் திரும்பி வந்து

நீங்க லண்டன் போகப்போறிங்களா? என்றாள் கண்கள் பளபளக்க..

அதை கேட்டு நான் திடுக்கிட்டு போனேன்.. போன்ல பேசறப்ப ரோட்ல நின்னு கத்திகிட்டு நின்னது அப்பதான் உறைத்தது..

அவளை பார்க்க ரொம்ப வெகுளியா கிராமத்து பொண்ணாட்டம் இருந்தா.. ஏனோ பார்த்த உடனே அவளை எனக்கு பிடித்து விட்டது..

சொன்னா நம்ப மாட்டிங்க.. பார்க்க என்னை போலவே இருந்தா.. ஆனால் கொஞ்சம் ஒல்லி.. முகஜாடையும் ஓரளவுக்கு என்னை போலவே இருந்தாள்..

ட்ரஸ்ட் மீ சார்.. அந்த செகண்ட் எனக்கு என் தங்கையை பார்த்த ஒரு பீல்.. அவளையே இமைக்க மறந்து பார்த்து கிட்டிருந்தேன்..

அந்த பெண் என்னிடம் வந்து

“அக்கா... நீங்க லண்டன் போறீங்களா ? என்றாள் ஆர்வத்துடன்

அவள் அக்கா என்று அழைத்தது இன்னுமே பிடித்து போய்விட நட்புடன் புன்னகைத்து ஆமாம் என்றேன்.. அவள் கண்கள் விரிய

“லண்டனுக்கு எப்படி போவது? எனக்கும் லண்டனுக்கு போகணும்னு ரொம்ப ஆசை.. “  என்றாள் கண்கள் படபடக்க சிறு பிள்ளையாக..

அவளை பார்க்க எனக்கே ஆச்சர்யமாக இருந்தது.. அவளிடம் பேசி கொண்டே இருக்க வேண்டும் போல இருந்தது..

நானும் சிரித்து கொண்டே அவளை அந்த ஸ்கூலுக்கு உள்ளே அழைத்து சென்றேன்.. அது ஒரு நாட்டிய ஸ்கூல் என்றதும் அங்கு பல மாணவர்கள் பயிற்சி பெற்று  கொண்டிருக்க, அதை கண்டவள் கண்கள் இன்னும் பெரிதாக விரிந்தன..

“அக்கா... இது டான்ஸ் ஸ்கூலா? நீங்களும் ஒரு க்ளாசிக்கல் டான்சரா?

“யெஸ்.. நீங்களும் னா அப்ப நீயும் க்ளாசிக்கல்  டான்சரா “

“ஆமாம் கா.. எனக்கு டான்ஸ் னா ரொம்ப பிடிக்கும்... சின்ன வயசுலயே கத்துகிட்டேன்..”

“ஓ.. சூப்பர்.. சரி.. நீ எதுக்கு லண்டன் பற்றி விசாரிச்ச? “ என்று துருவினாள் ரோஜா..

“அது வந்து.....  “ என்று ஏதோ சொல்ல வந்தவள் பாதியில் நிறுத்தி கொண்டு

“எனக்கு லண்டனை பார்க்கவேண்டும் என்று சின்ன வயசுல இருந்து ஆசை.. அதான் நீங்க லண்டன் என்று  சொன்னதும் அப்படியே நின்னுட்டேன்.. “ என்று  அசட்டு சிரிப்பை சிரித்தாள் அந்த பெண்..

ஓ.. அப்ப உனக்கு லண்டன் போக சான்ஸ் கிடைச்சா போவியா?

“ஓ யெஸ்.... கண்டிப்பா க்கா.. நானும் உங்ககூட வரவா? பணம் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை.. என்னையும் கூட்டிகிட்டு போறிங்களா? “ என்றாள் ஆர்வமாக..

அதே நேரம் சதிஸ் போன் பண்ணி மீண்டும் என்னை கோவா வர சொல்லி கெஞ்ச, உடனே எனக்கு ஒரு ஐடியா கிடைத்தது...

“ஹே பொண்ணே...நீ லண்டன் போக நான் ஒரு ஏற்படு பண்றேன்.. ஆனால் அது ரிஸ்க் அதிகம்.. நீ தயாரா?

“கண்டிப்பாக்கா.. ரிஸ்க் னா எனக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி.. நான் என்ன வேணாலும் செய்யறேன்.. ஆனால் அதுக்குனு இந்த மலையை புரட்டறது. ஓடற ரயில் ல நிறுத்தறது இப்படி மட்டும் எதுவும் சொல்லிடாதிங்க.. “ என்று  கன்னம் குழிய சிரித்தாள்..

அவளின் சிரிப்பில் இருந்த குழந்தைதனம் என்னை மேலும் இழுக்க, அவசரமாக என் மனதில் ஒரு திட்டத்தை போட்டேன்..

கிட்டதட்டை எங்கள் இருவர் முக ஜாடையும் உடல் அமைப்பும் ஒன்றாக இருக்க, என் பெயரில் அவளை லண்டன் அனுப்பி வைத்து விட்டு நான் சதிஸ் உடன் கோவா சென்றுவிடலாம்... என்று ஐடியா கிடைத்தது...”  

“வாட்? போர்ஜரியா? அது எவ்வளவு பெரிய தப்பு தெரியுமா? புடிச்சா லண்டன் ஜெயில்ல போட்டிடுவாங்க.. அங்க ட்ரீட்மென்ட் ஏ வேற லெவல் ல இருக்கும்.. “ என்று  முறைத்தான் விவேக்..

ஹ்ம்ம் புரியுது விவேக்.. அதையெல்லாம் நானும் அந்த பெண்ணுக்கு எடுத்து சொன்னேன்.. ஆனால் அவள் அதை எல்லாம் நான் சமாளிச்சுக்குவேன்... நீங்க சொல்ற ஐடியாவே நல்லா இருக்கு.. “ என்று குதிக்க ஆரம்பித்து விட்டாள்..

அவள் முகத்தில் இருந்த உற்சாகத்தை பார்த்ததும் எனக்கும் மறுத்து சொல்ல மனம் வரவில்லை..

உடனே அவளுக்கு நான் ஆடவேண்டிய நாட்டிய பாடலையும் அவளுடை பங்கையும் ஒரு முறை ஆடி காட்ட, அதை அப்படியே பிடித்து கொண்டாள்.. அவளும் என்னைப் போலவே ஆடி காட்ட, எனக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது..

அப்ப கன்பார்ம் ஆ இவள் அந்த ப்ரோகிராமில் நன்றாக பெர்பாம் பண்ணுவாள் என தோன்றிவிட, உடனே எங்க குழு லீடர்க்கு போன் பண்ணி எனக்கு விசா வந்து விட்டதாகவும் நானே அன்று மாலையே ப்ளைட்டில் வந்து விடுவதாகவுக் சொல்லி விட்டேன்..

அவரிடம் வேற ஒரு பெண்ணை அனுப்புவதாக சொல்லவில்லை.. நான் அங்கு வரவில்லை என்ற விசயம் தெரிந்துவிட்டால் என் வீட்டில் பெரிய பிரச்சனை ஆகிவிடும்.. அதனால் எப்படியோ அந்த பெண் அங்கே சென்று சமாளித்து கொள்ளட்டும் என்று  விட்டு விட்டேன்..

பார்க்க வெகுளியாக இருந்தாலும் கொஞ்சம் துணிச்சலான பெண்ணாக தெரிந்தாள்.. அதனால் என் பாஸ்போர்ட் ஐ அவளிடம் கொடுத்து விட்டேன்..

அவள் செல்ல வேண்டிய முகவரி மற்றும் மற்ற எல்லா டீடெய்ல்ஸ்ம் கொடுத்து அவளையே என் பெயரில் அனுப்பி விட்டு நான் கோவா சென்று  விட்டேன்.. “ என்றாள் குறும்பாக சிரித்தவாறு..

அதை கேட்டு வாயை பிளந்தான் விவேக்..

“வாவ்... பயங்கர கேடியா இருக்கீங்க ரோஜா... ரொம்பவும் தைர்யம் தான்.. அது எப்படிங்க முன்ன பின்ன தெரியாத யாரோ ஒரு பொண்ணை நம்பி உங்க பாஸ்போர்ட் ஐ கொடுத்திங்க?  " என்றான் ஆச்சர்யமாக..

"ஹீ ஹீ ஹீ .. ஒருத்தங்களை பார்த்த உடனேயே அவங்க நல்லவங்களா கெட்டவங்களானு கண்டுபிடிச்சிடுவா இந்த ரோஜா... அந்த பொண்ணை பார்த்தால் ஏமாற்றுபவளாக தெரியவில்லை.. அதனால்தான் துணிந்து கொடுத்தேன்.. "

"ஓ.... சூப்பர் பவர்தான் ரோஜா.. பேசாம நீங்க காவல் துறைக்கோ இல்லைனா என்னுடைய டிடெக்டிவ் பீல்ட் க்கு வந்திடுங்களேன்..

அக்யூஸ்ட் ஐ பார்த்த உடனேயே விசாரிக்காமலயே  உங்களால கண்டு பிடித்து விட முடியுமே..! எதுக்கு இன்வெஸ்டிகேசன் பண்ணனும்?  நீங்க தான் சூப்பர் உமன் ஆச்சே..! " என்று நக்கலடித்தான் விவேக்...

"மிஸ்டர் விவேக்.. போதும் என்னை கலாய்த்தது.. டு பி ப்ராங்..  எனக்கே அது ஆச்சர்யம்தான்.. எப்படி அந்த பொண்ணை நம்பி என் பாஸ்போர்ட் ஐ கொடுத்தென் என்று..

ஒருவேளை இந்த சதிஸ் உடன் டைம் ஸ்பென்ட் பண்ண ஒரு வாய்ப்பு என்று  கருதி எதையும் யோசிக்காமல் செய்திருக்கலாம்..இல்லை.. அந்த பெண்ணின் குழந்தைதனமான முகம் அவள் மீது எனக்கு ஒரு அட்ராக்சன் வந்து அவளுக்கு உதவுவதற்காக அப்படி செய்திருக்கலாம்..  .

பட்.. அந்த நேரத்துல அப்படித்தான் தோணுச்சு.. நான் எடுத்த ரிஸ்க் க்கு பலனாக ஐ ஹேட் அ வொன்டர்புல் டேஸ் இன் கோவா... அவ்வளவு ஜாலியாக இருந்தது... "

என்று அவள் அனுபவித்த அந்த நாட்களை மீண்டும் நினைவு படுத்தி அனுபவித்து கூறினாள் ரோஜா..

அதை கேட்ட விவேக் முகம் சுளித்தான்..

"என்னங்க இது..?  கல்யாணத்துக்கு முன்னாடியே பாய் ப்ரண்ட் உடன் வெளில சுத்தினதை பெருசா பீத்திக்கிறிங்க? உங்கள மாதிரி பொண்ணுங்களாலதான் நம் பெண்ணினத்தின் மீதான நம்பிக்கையே போய்டுது..

எல்லாமே கல்யாணத்துக்கு முன்னாடியே ஒருத்தன் கூட சுத்திகிட்டு இருந்துட்டு அப்புறம் அவனுக்கு டாட்டா காட்டிட்டு  வேற ஒருத்தனை கட்டிகிட்டு  ஜாலியா போய்டறாங்க...நம்ம கல்ச்சரே தொலஞ்சுகிட்டு இருக்கு..  " என்று விவேக் பொரிந்தான்..

“ஹலோ.. மிஸ்டர் விவேக்.. ஸ்டாப் இட்.. ஏன் ஆம்பளைங்க நீங்க மட்டும் உங்க ப்ரெண்ட்ஸ் கூட ஜாலியா கோவா பாண்டிச்சேரினு சுத்தலாம்.. சேர்ந்து தண்ணி அடிக்கலாம்.. அதே ஒரு பொண்ணும் பையனும் ஒன்னா சேர்ந்து சுத்தினா மட்டும் அது எப்படி தப்பா தோணும்..

ஓ... ஜாலியா இருந்தோம் னு  சொன்ன உடனே உங்க நினைப்பு நாங்க ரெண்டு பேரும் கட்டில்ல ஒன்னா இருந்தோம் ன்ற கற்பனைக்கு போய்டுச்சாக்கும்..

ஏன் சார்.. ஒரு ஆணும் பெண்ணும் ஒன்னா சேர்ந்து போனாலே அது வெறும் உடல் சுகத்துக்காக மட்டும்தான் இருக்குமா? அவங்க ரெண்டு பேரும் நண்பர்களா இருக்க முடியாதா..?  

இன்பேக்ட் நான் சதீஸ் ஐ லவ் பண்றேன்.. அவன் கூட கை கோர்த்து அந்த  கோவா பீச்ல கால்  புதைய புதைய நடந்தோம்.. நிறைய பேசினோம்.. எங்களை பற்றி நன்றாக தெரிந்து கொள்ள முடிந்தது..

ஆனால் நீங்கள் கற்பனை பண்ணின கட்டில் ல  கட்டிபுடிச்சு உருண்டது எல்லாம் இல்லை.. நானும் நம்ம கல்ச்சர்ல வளர்ந்தவ தான்.. மைன்ட் இட்.. " என்று  பொரிந்து தள்ளினாள் ரோஜா...!


Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

என்னுயிர் கருவாச்சி