தேடும் கண் பார்வை தவிக்க-28


 அத்தியாயம்-28

டபடவென்று ஊசி பட்டாசாய் ரோஜா பொரிந்து தள்ள,  விவேக் ஓ அசந்து போய் அவள் முகத்தில் தெரிந்த கோபத்தை ரசித்து பார்த்தான் அவனையும் அறியாமல்...

அவளின் கோபத்தை கண்ட ரிஷி திரும்பி விவேக் ஐ முறைத்தவன்

"சாரி மிஸ் ரோஜா.. இந்த விவா.. எப்பவும் இப்படித்தான்..எதாவது தேவை இல்லாததை பேசி அவுட் ஆப் சிலபஸ் இழுத்துகிட்டு போய்டுவான்.. உங்க லைப் ஐ பற்றி விமர்சனம் செய்ய நாங்க வரலை..

எனக்கு என் ரோஜா பொண்ணு பற்றி... " என்று  சொல்ல வந்தவன் நாக்கை கடித்து கொண்டு

"ஹே ரோஜா... அந்த பொண்ணு அந்த பொண்ணு னு சொன்னிங்களெ.. அந்த பொண்ணு பேர் என்ன? " என்றான் ஆர்வமாக

அன்று அவள் அவனிடம் சொல்லியது ரோஜா என்று  இந்த ரோஜா பெயரைத்தானே..அப்ப அவ பெயர் என்னவாக இருக்கும் என்று உள்ளுக்குள் படபடப்பாக இருந்தது.. .

"ஹ்ம்ம்ம் என்னவோ சொன்னாளே.. " என்று  தாடையில் கைவைத்து யோசித்தாள் ரோஜா..

"வாட்? அந்த பொண்ணு பேர் கூட தெரியலையா? " என்றான் விவேக் நக்கலாக..

"அப்ப தெரிஞ்சது விவேக்.. ஆனால் இப்ப மறந்திடுச்சு.. ஏதோ ஒரு வித்தியாசமான பெயரா சொன்னா.. "

"சரி அவங்க போன் நம்பர் இருக்கா? " என்றான் ரிஷி மீண்டும் ஆர்வமாக..

"ப்ச்... போனமாசம் என்னுடைய ஹேன்ட்பேக் ஐ ஒருத்தன் அடிச்சிட்டான் சார்... அதுல இருந்த என்னுடைய மொபைல் ம் போய்டுச்சு.. அந்த மொபைல் ல இருந்த எல்லா கான்டாக்ட்ஸ்ம் போய்ருச்சு.. " என்று  உதட்டை பிதுக்கினாள்..

"ஓ... அதனால் என்ன.. கூகுல் கான்டாக்ட்ஸ் ல தான் எல்லாம் இருக்குமே.. அதுல இருந்து எடுத்துக்கலாம் இல்ல.. " என்று மீண்டும் நக்கலாக பார்த்தான் விவேக்

"ஹ்ம்ம்ம் நீங்க அறிவாளிதான்.. எனக்கு மட்டும் இந்த யோசனை வராதா என்ன? ஆனால் ஏதோ ப்ராப்ளத்தால அந்த கான்டாக்டல கொஞ்சம் நம்பர் ஸ்டோர் ஆகல.. அதுல அந்த பொண்ணோடதும் இருக்கலாம்..

நானே ஒருமுறை அந்த பொண்ணு ஞாபகம்  வந்து பேசலாம் னு அவ நம்பரை தேடி பார்த்தேன்.. அப்பதான் அவ நம்பர் மிஸ் ஆனது தெரிந்தது..” என்றாள் பாவமாக...  

"அட கணேசா.. இப்படி என்னை சுத்த விடறியே...!  ஒருவேளை இந்த கேஸ் ஐ நான் சீக்கிரம் கண்டுபிடிச்சிட கூடாதுனு சதி பண்ணிதான் எல்லா  க்ளுவையும் அழிச்சிடறியா? தி இஸ் நாட் ஃபேர்.. " என்று  மனதுக்குள் அந்த கணேசனை திட்டி கொண்டான் விவேக்..

"சரி ரோஜா.. அப்புறம் எப்படி உங்க பாஸ்போர்ட் ஐ திரும்ப  வாங்கினிங்க..? . திரும்பவும் அந்த பொண்ணை பார்த்திங்களா? " என்றான் ரிஷி அதே ஆர்வத்துடன்..

"எஸ் சார்.. அவ லண்டன்ல இருந்து திரும்பி வந்ததும் உடனே எனக்கு போன் பண்ணினா... நானும் அந்த பொண்ணு சொன்ன இடத்துக்கு போய்ட்டு என் பாஸ்போர்ட் ஐ வாங்கிகிட்டேன்..ஸச் அ இன்ட்ரெஸ்டிங் கேர்ள்..

அப்ப அவளை பார்க்கிறப்ப அவ முகத்துல் ஒரு திருப்தி, நிம்மதி தெரிந்தது.. டான்ஸ் மேலயோ இல்ல லண்டன் மேலயோ க்ரஸ் ஆ இருந்திருப்பா போல.. அது நிறைவேறின ஒரு திருப்தி அவ முகத்துல டாலடித்தது..” என்றாள் ரோஜா ரசித்து சிரித்தவாறு..  

“வேற ஏதாவது சொன்னாங்களா? “ என்றான் ரிஷி மீண்டும் ஆர்வமாக.. அவனை பற்றி எதுவும் சொல்லி இருப்பாளோ என்று சிறு நப்பாசை அவன் உள்ளே..

"ப்ச்.. எல்லாம் நல்லபடியா முடிந்தது..சமாளிச்சிட்டேன்.. ரொம்ப தேங்க்ஸ் கா.. " என்று  என்னை கட்டி பிடித்து என் கன்னத்தில் முத்தம் கொடுத்தாள்..

எனக்கே தலை சுத்தி போச்சு சார்.. அவ்வளவு ஸ்வீட் ஆ இருந்தது அவள் கொடுத்த முத்தம்..

நான் மட்டும் ஆம்பளையா இருந்தால் அவளையே தேடி பிடித்து கல்யாணம் பண்ணிக்குவேன்.. அவளுக்கு வரப் போகிற ஹஸ்பன்ட் சோ லக்கி... ஸச் அ ப்யூட்டிபுல் அன்ட் இன்னசென்ட் கேர்ள்.. " என்று  அந்த பொண்ணை பற்றி  புகழ்ந்து கூற இங்கு ரிஷிக்கோ பெருமையாக இருந்தது..

அதுவும் அவள் இந்த ரோஜாவுக்கு முத்தமிட்டாள் என்று  கேட்டதும் அவன் கற்பனை விரிந்தது.. அவள் தனக்கு முத்தமிட்டால்  எப்படி இருக்கும் என்று கற்பனை பண்ணி பார்த்தான்..

அவளின் திரண்ட இதழ்கள் அவனின் கன்னத்தில் அழுந்த பதிந்ததை போல இருக்க, அவளின் அந்த மென்மையான திரண்ட இதழின் ஸ்பரிசத்தில் அவன் உடல் சிலிர்த்தது..

அவளின் அந்த சில்லிட்ட எச்சில் முத்தம் அவனுள் பரவசத்தை கூட்ட கண் மூடி அந்த சுகத்தை அனுபவித்தான் ரிஷி..

"பாஸ்.... பாஸ்..... என்னாச்சு?  அதுக்குள்ள தூங்கிட்டிங்களா? " என்று  அவனை பிடித்து உலுக்கினான் ரிஷி..

அதில் திடுக்கிட்டு விழித்தவன்  சுற்றிலும் பார்த்து ஒரு அசட்டு சிரிப்பை சிரிக்க, சற்று முன் அவன் அமைதியானதும் அவன் முகத்தில் வந்து போன பரவச நிலையையும் கண்டு கொண்ட விவேக்

"என்ன பாஸ்... மேடம் வந்து உங்க கன்னத்தில் கிஸ் பண்ணினாங்களாக்கும்..." என்று  கண் சிமிட்டி சிரிக்க அவனோ ஒரு வெக்க புன்னகையை உதிர்த்தான் ரிஷி..

“பாஸ்.. இந்த சிரிப்புல  செம க்யூட் ஆ இருக்கிங்க பாஸ்.. " என்று  ரிஷியை கிண்டல் அடிக்க,

“என்ன? ரெண்டு பேரும் ரகசியம் பேசறீங்க? " என்றாள் ரோஜா ஆர்வமாக

அதில் சமாளித்து கொண்டவர்கள்

"ரோஜா...அந்த பொண்ணோட அட்ரஸ்..இப்படி வேற ஏதாவது ஞாபகம் இருக்கா? " என்றான் ரிஷி ஆர்வமாக..

"ஹ்ம்ம்ம்ம் அட்ரஸ்..??  அவ ஏதோ ஒரு கிராமத்தை சேர்ந்தவ னு சொன்னா சார்... ஆனால் அந்த கிராமத்து பெயரும் சரியா ஞாபகம் இல்ல.. " என்று இழுத்தாள் ரோஜா..

"ஹ்ம்ம் பாத்துமா.. இப்படி மூணு மாசத்துல எல்லாத்தையும் மறந்துட்டா வாழ்க்கையில ரொம்ப கஷ்டம்.. இனிமேல் எல்லாத்தையும்  ரெக்கார் பண்ணி வச்சுக்க.. " என்றான் விவேக் ஒருமையில்

"ஹ்ம்ம்ம் தேங்க்ஸ் பார் யுவர் அட்வைஸ்... " என்று முகத்தை நொடித்தாள்..

ரிஷி மீண்டும் விவேக் ஐ முறைத்தவன்

“சாரி ரோஜா.. வேற ஏதாவது ? எப்படியாவது அந்த பொண்ணை கண்டுபிடிக்க வேண்டும்.. அதுக்கு உதவற மாதிரி வேற ஏதாவது ஞாபகம் இருக்கா? “ என்றான் தவிப்புடன்..

அவளும் யோசித்து பார்த்துவிட்டு

“ப்ச்... எதுவும் ஞாபகம் வரலையே சார்.. நாங்க பழகினது ஒரே ஒரு நாள் மட்டும்தான்.. அதுவும் அவசர அவசரமா அவளுக்கு டான்ஸ் ஆடி காமிக்க, அந்த பொண்ணு ஆடியதில் கரெக்சன் சொல்ல என நேரம் ஓடிப் போனது...

மறுமுறை சந்தித்த பொழுதும் என் பாஸ்போர்ட் ஐ கொடுத்து விட்டு சென்றவள் தான்.. அதற்கு பிறகு பார்க்கவே முடியவில்லை..

நாங்களும் வீடு மாறி இங்க வந்திட்டோம்.. ஆமா மிஸ்டர் விவேக்.. இந்த அட்ரஸ் ஐ எப்படி கண்டுபுடிச்சீங்க? “ என்றாள் ரோஜா ஆர்வமாக

“ஹீ ஹீ ஹீ நான் ஒரு டிடெக்டிவ் மா.. இதெல்லாம் கண்டு புடிக்கிறது ஜுஜுபி.. நீ ஏழு மலை ஏழு கடல் தாண்டி இருந்தாலும் ஒரு சின்ன க்ளுவை வைத்து  கண்டு பிடித்து விடுவான் இந்த விவேக்..

ஆப்டர் ஆல் இந்த சென்னையில இருக்கிற உன்னை கண்டு புடிக்க முடியாதா? “ என்று  தன் காலரை தூக்கி விட்டு கொண்டான் விவேக்..

டேய் விவா.. இப்ப எதுக்கு ஒவர் பில்டப் கொடுக்கற..!  அந்த புள்ள வேற ஒருத்தனுக்கு ஏற்கனவே கமிட் ஆய்டுச்சு.. “ என்று நக்கலாக சிரித்தது அவன் மனஸ்..

“ஹீ ஹீ ஹீ கமிட் தான ஆகியிருக்கு.. இன்னும் கல்யாணம் ஆகலையே.. “ என்று கண் சிமிட்டி குறும்பாக சிரித்தான் விவேக்...

ஆங்.. என்னடா சொல்ற? “ என்று அதிர்ச்சியுடன் நெஞ்சில் கை வைத்தது மனஸ்..

“ஹீ ஹீ ஹீ நீயெல்லாம் பொடிப்பயன். உனக்கு பெரிய பசங்க மேட்டர் எல்லாம் புரியாது..கம்முனு கிட.. “ என்று சிரித்தான் விவேக்..

விவேக் சொன்னதை கேட்ட ரோஜா

“ஐய.. ரொம்பத்தான்.. சும்மா சொல்லுங்க விவேக்.. எனக்கும் இந்த டிடெக்டிவ் ஸ்டோரிஸ் னா ரொம்ப பிடிக்கும்.. சின்ன வயசுலயே ராஜேஸ்குமார் ஸ்டோரிஸ் நிறைய படிச்சிருக்கேன்...

அதுல வர்ற ரூபலா கேரக்டர் மாதிரி என்னை கற்பனை பண்ணி கொள்வேன்.. “ என்றவள் பாதியில் நிறுத்தி கொண்டு நாக்கை கடித்து கொண்டாள்..

“ஓ சாரி... உங்க பேர் விவேக் இல்ல.. நான் சும்மா ஒரு பேச்சுக்கு என்னை ரூபலானு சொல்லிட்டேன்.. தப்பா எடுத்துக்காதிங்க.. “ என்று அசட்டு சிரிப்பை சிரித்தாள்..

“ஹீ ஹீ ஹீ இதுல தப்பா ஒன்னும் இல்ல ரூபலா...."

"ஆங்.... " என்று  ரோஜா முறைக்க

"சாரி.. டங் ஸ்லிப்பிங்... தப்பா ஒன்னும் இல்ல ரோஜா... யார் வேணா எப்படி வேணா கற்பனை பண்ணி கொள்ளலாம்..நான் கூடத்தான் என்னை ஜேம்ஸ்பாண்ட் 007 அப்படீனு அப்பப்ப கற்பனை பண்ணிப்பேன்...  

நான் எப்படி உங்க அட்ரசை  கண்டுபிடித்தேன் என்றால் உங்களுடைய போர்டிங் பாஸ் ஐமீன் உங்க பெயரில் பயணம் செய்த அந்த பெண்ணின் போர்டிங் பாஸ் எனக்கு கிடைத்தது..

அதை வைத்து உங்களுடைய பழைய அட்ரெஸ் ஐ கண்டுபிடித்து விட்டேன்..அங்க போனால் நீங்கள் வீட்டை காலி பண்ணி விட்டு சென்று விட்டதாக சொன்னார்கள்..

அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்த பொழுது தான் உங்களுடைய பாஸ்போர்ட் டிடெய்ல்ஸ் ஞாபகம் வந்தது..

சரி அட்ரஸ் மாறிவிட்டதால் எப்படியும் பாஸ்போர்ட் ல் புது அட்ரஸ் ஐ மாற்ற அப்ளை பண்ணுவீர்கள் என்று  யோசித்து பாஸ்போர்ட் ஆபிஸில் எனக்கு தெரிந்தவனிடம் சொல்லி வைத்திருந்தேன்..

ரோஜா என்ற பெயரில் உங்க பாஸ்போர்ட் நம்பரை கொடுத்து இந்த பாஸ்போர்ட்க்கு அட்ரஸ் சேஞ்னு ஏதாவது புது அப்ளிகேசன் வந்தால் என்னிடம் சொல்ல சொல்லி...

கரெக்ட் ஆ நேற்று நீங்க அப்ளை பண்ணி இருக்கிங்க போல.. அதில் இருந்த புது அட்ரஸ் ஐ கொடுத்தான்.. அதை வைத்துத் தான் உங்களை கண்டுபிடிக்க முடிந்தது.. எப்பூடி? “ என்று காலரை தூக்கி விட்டு கொண்டான் விவேக்..

“வாவ்... சூப்பர் விவேக்... நிஜமாலுமே நீங்க விவேக் 007 தான்.. “ என்று ரோஜா  கை தட்டி ஆர்பரித்தாள்.. 

“தேங்க்யூ தேங்க்யூ... “ என்று  இடை வரை குனிந்து அவளின் பாராட்டை ஏற்று கொள்ள 

ரிஷியோ விவேக் ஐ பார்த்து என்னடா நடக்குது இங்க என்ற லுக் ஐ விட, விவேக் ஓ அவனுக்கு கண்ணால் ஜாடை சொல்லி சிரிக்க, அவனை பார்த்து முறைத்தான் ரிஷி..

பின் தனக்கு நேரம் ஆவதை உணர்ந்து இருக்கையில் இருந்து எழுந்த ரிஷி

"ஓகே ரோஜா.. உங்களுக்கு ஏதாவது ஞாபகம் வந்தால்  மறக்காமல் சொல்லுங்க.. “ என்று சொல்லி கை குலுக்கினான்..

அவன் முகத்தில் இருந்த தவிப்பும் சிறு ஏக்கமும் அவளுக்கு  ஆச்சரியத்தை கொடுத்தது..ரிஷியை ஆராய்ச்சியுடன் பார்க்க,  அதற்குள்  விவேக் தன் அலைபேசியை எடுத்து

“ரோஜா உங்க போன் நம்பர் சொல்லுங்க.. நான் நோட் பண்ணிக்கிறேன் ஏதாவது ஞாபகம் வந்தால் எனக்கு கால் பண்ணுங்க.. “  என்று சொல்ல அவளும் தன் அலைபேசி எண்ணை சொல்ல, அதை தன் அலைபேசியில் பதிவு செய்து கொண்டான்..

பின் அவளுக்கு ஒரு மிஸ்டு கால் கொடுத்தவன்

“என்னோட நம்பர் உங்க கிட்ட இருக்கு...அதை சேவ் பண்ணி வச்சுக்கோங்க..  ஞாபகம் வர்றப்போ மறக்காம எனக்கு போன் அடிங்க.. “ என்று சொல்லி சிரித்தவாறு கையை நீட்ட அவளும் சகஜமாக அவனிடம் கை குலுக்கினாள்..

ஆனால் விவேக்குக்குத்தான் ஷாக் அடித்ததை போல இருக்க, உடனே தன் கையை இழுத்து கொண்டான்..

“என்னங்க ரோஜா.. இப்படி உங்க கை ஷாக் அடிக்குது? ரோஜா னா சில்லுனு  இருக்கும் னு சொல்லுவாங்க.. உங்க கை இப்படி ஷாக் அடிக்குதே.. “  என கண் சிமிட்டி சிரிக்க, ரோஜா அவனை பார்த்து முறைக்க, ரிஷியோ அவனை கையை பிடித்து இழுத்து சென்றான்..

விவேக் ஒரு வெட்க புன்னகையை சிந்தி அவளிடம் கை அசைத்து விடை பெற அவளோ தன் ஆட்காட்டி விரலை நீட்டி கொன்னுடுவேன் ஜாக்கிரதை என்று செல்லமாக முறைத்து சிரித்தாள்..

ரோஜாவின் வீட்டை விட்டு வெளியில் வந்த இருவரும் தங்கள் வாகனங்களை எடுத்துக் கொண்டு கிளம்பி அருகிலிருந்த காபி  ஷாப் ஐ அடைந்தனர்..

ஆளுக்கொரு  காபியை வாங்கிக் கொண்டு காலியாக இருந்த டேபிலில் அமர, கவலையாக விவேக் ஐ பார்த்த ரிஷி

"வாட் நெக்ஸ்ட் விவா.... " என்றான் ஆதங்கத்துடன்..

அவன் எவ்வளவு ஆர்வமாக வந்தான் தன் ரோஜா பொண்ணை பார்த்துவிடும் ஆசையில்..உள்ளதும் போச்சுடா நொள்ளகண்ணா என்று சொல்வதை போல பார்த்தால் இப்ப அவ பெயர் கூட தெரியாமல் போய் விட்டது..

ரோஜா பொண்ணும் இல்லை என்றாகிவிட்டது? இப்ப அவ பெயரில் இருந்து கண்டு பிடிக்க வேண்டும்.. “  என்று  உள்ளுக்குள் புலம்ப, விவேக் அதையேதான் வாய் விட்டு சொன்னான்..

“சே.. என்ன பாஸ் இது..?  ஆரம்பித்த இடத்துலயே வந்து நின்னுட்டோம்.. ம்ஹூம் அது கூட இல்ல.. இன்னும் கீழ போய்ட்டோம்.. முன்பாவது மேடம் உடைய பெயர் தெரிந்தது.. எல்லா இடத்துலயும் அதை சொல்லி விசாரிக்க முடிந்தது..

இப்ப பெயரும் தெரியாமல் எப்படி விசாரிக்கிறது? எப்படி கண்டுபுடிக்கிறது? “ என்றான் யோசனையாக..

உடனே அவன் மனஸ் மீண்டும்

“டேய் மிஸ்டர் டிடெக்டிவ்.. அதுக்குத்தான் நீ இருக்க.. எல்லா விவரத்தையும் கொடுத்து தேட சொல்றதுக்கு நீ எதுக்கு? “ என்று நக்கலாக சிரித்தது..

அதை முறைத்து அடக்கியவன்

“பாஸ்.. இந்த சின்ட்ரெல்லா கதையில கூட அந்த பிரின்சஸ் தன்னை  தேடி கண்டுபிடிக்க வசதியா,  காலில் அணிந்திருந்த ஒரு கால் செருப்பை விட்டுவிட்டு  சென்றிருப்பாள்..

ஆனால் உங்க லவ் ஸ்டோரியில அப்படி கூட எதுவும் இல்லையே.. “ என்றான் வருத்தமாக..

“ஏன் இல்லை.. அதுதான் இந்த நெட்டை ரிஷி போர்டிங் பாஸ் ஐ கொடுத்தார் இல்ல.. “ என்று  முறைத்தது மனஸ்..

“ப்ச்.. அத வச்சுத்தான் இந்த 420 ரோஜா வ கண்டுபுடிச்சேன்.. இந்த நெட்ட ரிஷி ஒரு லவ் ஸ்டோரி சொன்னா,  அந்த ரெட் ரோஸ் இன்னொரு லவ் ஸ்டோரிய சொல்றா...

கடைசியில இந்த கேஸ் முடியறதுக்குள்ள எல்லா லவ் ஸ்டோரியும் கேட்டு நானும் எந்த புள்ளையாவது லவ் பண்ண போறது தான் மிச்சம்.. “ என்று  நொந்து கொண்டான்..

ரிஷியோ காபியை உறிஞ்சி கொண்டே ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தான்..

அவனின் முகத்தில் தெரிந்த சிந்தனை ரேகைகள்...  கண்களை அப்பப்ப இறுக்கி மூடி திறந்ததில் தெரிந்த வலி,  வேதனையை கண்ட விவேக் அவன் கையை மெல்ல அழுத்தி கொடுத்து

“டோன்ட் வொர்ரி பாஸ்... சீக்கிரம் மேடம் ஐ கண்டுபுடிச்சிடலாம்..வேற ஏதாவது க்ளூ இருக்கா?  கொஞ்சம் யோசிச்சு பாருங்களேன்.. “ என்று ஆறுதல் சொன்னான் விவேக்..

“விவா... ரோஜா,  அவ கிராமத்தை சேர்ந்தவனு தான சொன்னா.. அப்ப எல்லா வில்லேஜ் லயும் போய் தேடி பார்த்தா என்ன? “ என்றான் யோசனையாக..

“ஐயயோ... பாஸ்.. அந்த டஃப் ஆன டாஸ்க் ஐ மட்டும் கொடுத்திடாதிங்க...

தமிழ்நாட்டுல எத்தனை வில்லேஜ் இருக்கு தெரியுமா? அந்த பட்டி இந்த பட்டி னு பட்டியில மட்டுமே பல ஆயிரம் கிராமங்கள்  இருக்கும்.. அப்புறம் , சூளமேடு, பாலமேடு, பீளமேடு னு மேட்டுல ஒரு பல ஆயிரம் ஊர் வரும்.. புரம் னு முடியற ஊர் மட்டும் பல பல ஆயிரம்..

ஒவ்வொரு ஊரா போய் பேர் தெரியாத பொண்ண தேடறது பீச் மணல் ல போய் தங்க பொடியை தேடறது மாதிரி.. அந்த மணலை கயிறா திரிக்கிற மாதிரி..

ம்ஹூம் அத கூட திரிச்சிடலாம்.. இந்த கிராமங்களை அலசி ஆராய்ந்து அதில் உங்க மனசுல மட்டுமே இருக்கற அந்த மஹாராணியை கண்டுபிடிக்கிறது... “ என்றான் அவசரமாக மறுத்து.. 

“ப்ச்.. அப்ப எப்படித்தான் கண்டுபிடிக்கிறது? “ என்றான் ரிஷி சலிப்புடன்..

“ஹ்ம்ம்ம் ஏதாவது ஒரு  க்ளூ வேணும் பாஸ்.. அத வச்சு ஈசியா ட்ராக் பண்ணிடலாம்.. இந்த ரெட் ரோஸ் ஐ கண்டுபுடிச்ச மாதிரி.. “

“என்னது ரெட் ரோஸ் ஆ? அது யார்? “ என்றான் ரிஷி கண்கள் இடுங்க..

ஹீ ஹீ ஹீ நத்திங்.. லீவ் இட் பாஸ்.. வேற வேற வேற ஏதாவது தோணுதா? “ என்று ரிஷியை மீண்டும் ஆராய வைத்தான்..

“ஹ்ம்ம்ம்ம் ஹே விவா... அவ தூக்கத்துல மாமா னு உளறினா.. அத வச்சு எந்த வில்லேஜ் ல மாமானு கூப்பிடறாங்கனு கண்டுபுடிக்க முடியுமா? “ என்றான் ஆர்வமாக..

“அட போங்க பாஸ்.. இது முன்ன சொன்னத விட மிகப்பெரிய டஃப் ஆன டாஸ்க்... எல்லா வில்லேஜ்லயும் பொண்ணுங்க முறைப்பையனையோ வூட்டுக் காரனையோ மாமானு தான் கூப்பிடுதுங்க..

அத விட இப்ப சிட்டிலயும் ஸ்டைலா கட்டின புருஷனை எல்லாம் மாமா னுதான் கூப்பிட்டுகிட்டு சுத்துதுங்க..

மாமானு கூப்பிடற பொண்ணுங்களை அலசி ஆராய்ந்து உங்க வைப் ஐ கண்டு பிடிக்கிறதுக்குள்ள உங்களுக்கு நேரா  அறுபதாம் கல்யாணம்தான்.. அது கூட கஷ்டம்தான். “ என்று சிரித்தான் விவேக்..

அவனை முறைத்த ரிஷி

“அப்ப என்னதான் வழி? “ என்றான் மீண்டும் ஆற்றாமையுடன்..

“ஹ்ம்ம்ம்ம் பாஸ்.. அட்லீஸ்ட் மேடம் போட்டோ இருந்தாலாவது அதை பேப்பர்ல , வாட்ஸ்அப் லயோ போட்டு ஈசியா கண்டுபுடிச்சிருக்கலாம்.. அதுக்கும் வழி இல்லாம ஒரு போட்டோ கூட எடுக்காம விட்டுட்டிங்களே..

பாஸ்.... கார்ல ஒன்னா உட்கார்ந்து வர்றப்ப கூட செல்பி எடுக்கணும்னு தோணலை? “ என்றான் ஆச்சர்யமாக

“ப்ச்.. எனக்கு அவ என்னை விட்டு பிரிந்து செல்ற ஒரு பீல் ஏ இல்ல விவா... மை வைப்.. வெளில போறா.. வேலை முடிந்ததும் என் வீட்டுக்கே வந்திடுவா ன்ற பீல்தான்..

என் கூடவே இருக்கிறவளை எதுக்கு போட்டோ எடுக்கணும் னு தான் தோணுச்சு.. ஐ மீன் இப்படி போட்டோ எடுக்கவெல்லாம் தோணலை..

பட் ஐ க்ளிக்ட் ஹெர் இன் மை ஹார்ட்.. “ என்று மீண்டும் கண் மூடி அவளின் முகத்தை நினைவுக்கு கொண்டு வர, விவேக்

“போச்சுடா.. இந்த ரிஷி சாமியார் மீண்டும் ஏகாந்த நிலைக்கு போய்ட்டார்.. இனி நாம மலை இறக்கி கூட்டி வந்தால்தான் உண்டு.. “ என்று உள்ளுக்குள் புலம்பி கொண்டே ரிஷியை மீண்டும் நினைவுக்கு கொண்டு வந்தவன்

“பாஸ் ஒரு ஐடியா..உங்களுக்கு இந்த ஸ்கெட்ச் பண்ண தெரியுமா? “ என்றான் ஆர்வமாக

“ப்ச்.. தெரியாதே.. ஏன் கேட்கற?

“போங்க பாஸ்.. இதுலயும் ஊத்திகிடுச்சு.. அட்லீஸ்ட் உங்களுக்கு ஸ்கெட்ச் பண்ண தெரிஞ்சிருந்தால் அதை வைத்து மனதில் இருக்கும் உங்க வைப் ஐ நீங்க ஸ்கெட்ச் பண்ணி இருக்கலாம்.. அதை வைத்து குத்து மதிப்பா ஒரு போட்டோவை உருவாக்கி அதை வைத்து தேடி இருக்கலாம்..

இப்ப அதுக்கும் வழி இல்லை.. ஆல்ரைட் பாஸ்... நானும் வேற என்ன வழியில் கண்டு பிடிப்பது என்று யோசிக்கிறேன்.. நீங்களும் யோசித்து வைங்க.. சீக்கிரம் கண்டு புடிச்சிடலாம்.. “

என்று காபியை குடித்து முடித்தவன் மீண்டும் ரிஷியிடம் கை குலுக்கி விடை பெற, அடுத்து என்ன செய்ய என்ற யோசனையுடன் கிளம்பி சென்றனர் இருவரும்..... 

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!