தேடும் கண் பார்வை தவிக்க-29

 


அத்தியாயம்-29

ண்ணா பல்கலைக்கழகம் என்று பெயரிட்டிருந்த அந்த பல்கலைக்கழகத்துக்குள் தன் காரை லாவகமாக செலுத்தி கொண்டிருந்தான் ரிஷி..

அவன் மனம் எல்லாம் இனம் புரியாத ஒரு பரவசம் ஆட்கொண்டிருந்தது.. இன்று காலையில் எழுந்ததில் இருந்தே அப்படி ஒரு பரவசம் அவன் உள்ளே..

ஏன் என்ற காரணம்தான்  புரியவில்லை..

தொழிலில் ஏதாவது பெரிய அளவில் லாபம் வந்திருக்கிறதா என்று யோசித்தான்..

நிறைய வெற்றிகள்தான்.. சமீபத்தில் வெளிவந்த காலாண்டு அறிக்கையில் அவனுடைய எல்லா தொழில்களுமே நல்ல முன்னேற்றத்தில் இருந்தன.. ஆனால் அது ஒவ்வொரு காலாண்டிலும் பார்ப்பதுதான்..

ஆனால் தன் லாபத்தை கண்டு இவ்வளவு பெரிய சந்தோஷம் பரவசம் அடைந்ததில்லை என்றும்.. ஜஸ்ட் ஒரு ஸ்மைல்.. தொழில் வட்டத்தில் நெருங்கியவர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் அந்த வெற்றியை, லாபத்தை கொண்டாடும் வகையில் ஒரு பார்ட்டி....

அந்த பார்ட்டியில் கூட ஒரு இயந்திரதனம் இருக்கும்.. மனம் தானாக பொங்கி பெருகாது. கோடிக்கணக்கில் லாபம் வந்திருக்கிறதே என்ற ஒரு மனநிறைவு இருக்காது..

அடுத்து இதை எப்படி அடுத்த லெவலுக்கு எடுத்து செல்வது என்றுதான் மனம் கணக்கிட்டு கொண்டிருக்கும்..இன்றைய மகிழ்ச்சி சந்தோஷம் போல மனதில் ஒரு மகிழ்ச்சி, நிறைவு,  பரவசம் என்றும் இருந்ததில்லை...

அப்படி என்றால் இன்றைய மகிழ்ச்சிக்கு காரணம் வேற என்னவாக இருக்கும் என்று யோசிக்க, அடுத்த நொடியே அவன் கண் முன்னே வந்தாள் அவள்... அவனுடைய ரோஜா பொண்ணு என்று எண்ணி இருந்தவள்..

இப்பொழுது அவள் பெயர் ரோஜா இல்லை என்று தெரிந்திருந்தாலும் இன்னும் அவள் அவனுக்கு ரோஜா பொண்ணுதான்..அவனுடைய மான்குட்டிதான்..   

இன்றோடு  இரண்டு வாரம் முடிந்து விட்டது அந்த 420 ப்ராடு ரோஜாவை சந்தித்துவிட்டு வந்து..

அன்று நம்பிக்கையோடு அந்த ரோஜாவின் முகவரியை தேடி சென்று ஆவலுடன் அவன் மான்குட்டியை பார்க்க காத்திருக்க, கடைசியில் அதுவும் பொய்த்து போய்விட அடுத்து என்ன செய்வது என்று குழம்பத்துடன் கிளம்பி சென்றனர் ரிஷியும் விவேக் ம்..

ன்று இரவு தன் இரவு உணவை முடித்து விட்டு படுக்கையில் படுத்தவாறு அவன் அறையில் இருந்த தொலைக்காட்சியை பார்த்து கொண்டிருந்தான் விவேக்..

மனம் எந்த நிகழ்ச்சியிலும் ஒன்றவில்லை.. எல்லா சேனலிலும் அழுது வடியும் சீரியல்களாக ஓடி கொண்டிருந்தது.. நியூஸ் சேனல் பக்கம் திருப்பினாலும் ஒரே நியூசை திரும்ப திரும்ப போட்டு ஓட்டி கொண்டிருந்தனர்..

மற்ற சில சேனல்களில் டிபெட் என்ற பெயரில் ஒருவருக்கொருவர் கத்தி கொண்டும் கெட்ட வார்த்தையில் திட்டி கொண்டும் இருந்தனர்...

அவன் கை தானாக அந்த ரிமோட்டின் பட்டணை தட்டி கொண்டே இருந்தது.. ஆனால் மனம் மட்டும் எதிலும் ஒன்றவில்லை.. அவன் மனதில் தன்னுடைய கேஸ் பற்றியே ஓடி கொண்டிருந்தது...

இது அவனுக்கு கிடைத்திருக்கும் முதல் கேஸ்..தான் ஒரு சிறந்த டிடெக்டிவ் ஏஜென்ட் ஆக வேண்டும் என்ற தன் கனவை நிறைவேற்றி கொள்ள அவனுக்கு கிடைத்திருக்கும் நல்ல ஒரு வாய்ப்பு...   

சிறு வயதில் இருந்தே அவனுக்கு துப்பறிவதில் மிகவும் ஆர்வம்.. அதனாலயே எப்பொழுதும் ஓடி ஒளிந்து விளையாடும் விளையாட்டுக்களையே விரும்பி விளையாடுவான்...

உறவினர்கள் பக்கத்து வீட்டு பிள்ளைகள் எல்லாம் கூட்டி வைத்து அவர்களை ஒளிந்து கொள்ள சொல்லி கண்டு பிடிப்பதும் அவனாகவே அவர்களை கண்டுபிடிக்க ஏதுவாக ஏதாவது க்ளு வைத்து விட்டு செல்லுமாறு சொல்லி அதை வைத்து அவனே ஒளிந்திருப்பவர்களை கண்டுபிடிப்பதில் அலாதி பிரியம்...

அவனுடைய ஆர்வத்தை புரிந்து கொண்டு அவனுடைய ஆறாம் வகுப்பில்  அவன் படித்து  சிரிக்குமாறு துப்பறியும் சாம்பு புத்தகத்தை வாங்கி கொடுத்தார் அவன் தந்தை...

அதை படிக்க ஆரம்பித்ததும் கதை புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் வந்துவிட்டது.. அதில் இருந்து துப்பறியும் நாவலாக தேடி படிக்க ஆரம்பித்தான்..

ராஜேஷ்குமார், சுபா போன்ற தமிழ் டிடெக்டிவ் எழுத்தாளர்களின் நாவல்களை எல்லாம் தேடி பிடித்து படித்தவன் வளர்ந்ததும் ஆங்கில புத்தகங்களையும் படிக்க ஆரம்பித்தான்..

செர்லாக் ஹோம்ஸ், அகதா க்ரிஸ்டி ( agatha Christie) ன் அனைத்து நாவல்களையும்  பல முறை படித்து விட்டான்..

அதில் இருந்தே அவனுக்கு தானும் ஒரு டிடெக்டிவ் ஏஜென்ட் ஆக ஆகவேண்டும் என்ற ஆவல்.. அதனாலயே கல்லூரியிலும் டிடெக்டிவ் சம்பந்தமான துறையை தேர்ந்தெடுத்து படித்தான்...

இறுதியாண்டில் இருக்கும் பொழுது ஒரு திருமணத்திற்கு சென்றிருந்த அவன் பெற்றோர்கள்  சாலை விபத்தில் அதே இடத்தில் இறந்து விட்டனர்..

ஒரே மகனான விவேக் அதிர்ந்து போனான்... அதுவரை வெளி உலகம் தெரியாமல் இருந்தவனுக்கு திடீரென்று தன் பெற்றோர்கள் மறைந்துவிட தனித்துவிட்டவனாக தவித்து போனான்....

ஆனாலும் சில நாட்களில் தன்னை தேற்றி கொண்டு கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்தான்...

சொந்தமாக ஒரு அடுக்கு மாடி குடியிருப்பை முன்பே அவன் தந்தை வாங்கி இருந்தார்... கூடவே வங்கியில் இருந்த கொஞ்ச சேமிப்பும் அவருடைய பென்சனும் வர, அதை வைத்து வாழ்க்கை வண்டியை ஓட்டி கொண்டிருந்தான்..

கல்லூரி படிப்பை முடித்ததும் ஏனோ மற்றவர்களை போல சாதாரண ஒரு வேலைக்கு செல்ல அவன் மனம் ஒத்து கொள்ளவில்லை..அவன் மனஸ் அவன்  ஒரு டிடெக்டிவ் ஏஜென்ட் ஆக ஆகியே தீர வேண்டும் என்று கொம்பு சீவிவிட அதற்கான வழிகளை தேடினான்....

எப்படியோ இருக்க இடமும் வயிற்றுக்கு சாப்பிட வழியும் இருந்ததால் தனக்கு பிடித்த துறையிலயே நிலைக்க வேண்டும் என்று திட்டமிட்டு அதற்கான வழிகளை ஆராய்ந்தான்...

முதலில் தனியார் டிடெக்டிவ் ஏஜென்ட் ஒருவரிடம் அசிஸ்டன்ட் ஆக வேலைக்கு சேர்ந்தான்..

இப்பொழுது ட்ரெண்டில் இருக்கும் முக்கிய கேஸ்களான ஒருத்தரை பற்றி தகவல் திரட்டி தருவதும் நிறைய ஏமாற்று திருமணம் நடப்பதால் இப்பொழுதெல்லாம் திருமணத்திற்கு முன்பே பையனை பற்றியும் பொண்ணை பற்றியும் விசாரித்து சொல்ல சொல்லி பல கேஸ்கள் வந்து குவிந்தன....

கூடவே காணாமல் போனவர்களை கண்டுபிடித்து தருவதுமாய் நிறைய கேஸ்கள் வந்தன...

முதலில் கிரிமினல் கேஸ்களாக எதிர்பார்த்தவனுக்கு இந்த மாதிரி ஒருத்தரை பற்றி விசாரிப்பதை கண்டு சப்பென்றாகி விட்டது..

ஆனாலும் தன் மனதை தேற்றி கொண்டு அந்த வேலையில் ஈடுபட்டான்.. ஒரு சில காணாமல் போனவர்களை கண்டு பிடிக்க முயல அதில் ஆர்வம் வந்துவிட்டது..

அதனால் முழுமனதுடன் அந்த வேலையில் ஈடுபட்டான்..

இதற்கிடையில் அவன் வேலை செய்த இடத்தில் அவன் வேலைக்கு அந்த டிடெக்டிவ் ஏஜென்ட் ன் மனைவி வழி சொந்தக்கார பையன் ஒருவன் வந்துவிட, தன் மனைவியை எதிர்க்க முடியாமல்  விவேக் ஐ நிறுத்திவிட்டு அந்த பையனை அசிஸ்டன்ட் ஆக சேர்த்து கொண்டார் அந்த நிறுவனத்தின் உரிமையாளர்..

விவேக் க்கு அடுத்து என்ன செய்வது என்று புரியவில்லை...யோசித்த பொழுதுதான் தானே சொந்தமாக இதை நடத்தினால் என்ன என்ற ஐடியா வந்தது...

ஆனால் எடுத்த உடனே தனியாக அலுவலகம் என்று பெரிய அளவில்  ஆரம்பிக்க அவனுக்கு விருப்பம் இல்லை.. இந்த துறையை பற்றி இன்னும் நன்றாக தெரியாது..  

அப்பொழுதுதான் ஆன்லைன் விளம்பரம் பற்றி தெரிய வந்தது..

இப்பொழுதெல்லாம் மக்கள் இணையத்தில் தான் அதிகம் உலாவுகிறார்கள்.. டிவி சீரியலை கூட நேரடியாக டிவி யில் பார்க்காமல் விளம்பரம் இல்லாமல் ஆன்லைனில் பார்த்து கொள்கின்றனர்...

பக்கத்து வீடு எதிர்த்த வீட்டில் நடக்கும் சம்பவங்களை கூட பேஸ்புக்கிலும் வாட்ஸ்அப்பிலும் பார்த்து தெரிந்து கொள்கின்றனர்...

மக்களின் இந்த டிஜிட்டல் மோகத்தை முன்னரே கணித்துத்தான் ஆன்லைன் வர்த்தகத்தையும் முன்னதாகவே ஆரம்பித்து விட்டனர்..

ஆன்லைன் வர்த்தகம் மூலம் வளர்ச்சி அடைந்த ப்ளிப்கார்ட், அமேசான், ஓலா போன்ற நிறுவனங்களின் சக்ஸஸ் ஸ்டோரியை புரட்டி பார்க்க சொந்தமாக ஒரு அலுவலகம் கூட இல்லாமலயே இந்த நிறுவனங்கள் ஆன்லைன் மூலமாக பெரும் வளர்ச்சியை அடைந்தது பற்றி தெரிய வந்தது...

அதனால் தானும் அதே மாதிரி ஆன்லைன் மூலமாக தன் தொழிலையும் தொடங்கலாம் என்று திட்டமிட்டு  தன்னை பற்றி இணையத்தில் விளம்பரம் செய்து இருந்தான்..

முதல் இரண்டு மாதம் எந்த ஒரு அழைப்பும் வரவில்லை..மனம் கொஞ்சம் சுணங்கினாலும் தன் நம்பிக்கையை கை விடாமல் வாய்ப்புக்காக காத்திருந்தான். இடைப்பட்ட நேரத்தில் வாலண்டியராக சில கேஸ்களில் நுழைந்து காவலர்களுக்கு உதவி வந்தான்...

இப்படிபட்ட நிலையில்தான் ரிஷியின் அழைப்பு வந்தது...

ரிஷி சொல்லிய கதையை கேட்டதும் அவனுக்கும் ஆர்வம் வந்துவிட அதுவும் வெட்டியா ஊரை சுத்திகிட்டு இருந்தவனுக்கு  தானாகவே வாய்ப்பு வந்து கதவை தட்ட அதை கெட்டியாக பிடித்து கொண்டான்....

அந்த கேஸில் ஒவ்வொன்றாக ஆராய்ந்து ரிஷி சொன்ன அந்த பொண்ணை தேடி வருகிறான்...

ன்று அந்த பொண்ணை கண்டுபிடித்துவிட்டதாக ஆர்வத்துடன் ரோஜா வீட்டிற்கு சென்றிருக்க ரிஷியோ இவள் அவள் இல்லை என்று சொல்லிவிட விவேக் க்கும் பெரும் ஏமாற்றமாக இருந்தது...

ஆனாலும் மனம் தளர்ந்து விடாமல் அடுத்து என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருந்தான்....

கைகள் மீண்டும் தொலைக்காட்சியில் ஒவ்வொரு சேனலாக மாற்றி கொண்டு வர, மனதில் அவன் சிந்தனைகள் எல்லாம் ரிஷி கேஸ் ஐ பற்றியே எண்ணி கொண்டிருந்தது..

ரிஷி இதுவரை அந்த பொண்ணை பற்றி சொல்லிய செய்திகளை எல்லாம் திரும்ப மனதில் ஓட்டி பார்த்து கொண்டிருந்தான்...

அடுத்து எப்படி காயை நகர்த்துவது? எங்கிருந்து ஆரம்பிப்பது என்று யோசித்து கொண்டிருந்தான்..   

அப்பொழுது ஒரு லோக்கல் நியூஸ் சேனலில் ஒரு பள்ளியில் நடந்த ஆண்டுவிழாவை பற்றிய செய்தி ஓடி கொண்டிருந்தது...

அதில் அந்த விழாவில் நடைபெற்ற அந்த  பள்ளி மாணவர்களின் பரத நாட்டிய நிகழ்ச்சியை காட்டி கொண்டிருந்தனர்..

அதை கண்டதும் விவேக் ன் கண்கள் பெரிதாக விரிந்தன.. மூளையில் மின்னல் வெட்டியது...உடனே துள்ளி குதித்து எழுந்தவன் தன் அலைபேசியை எடுத்து ரோஜாவை அழைத்தான்...

அவள் அழைப்பை ஏற்றதும்

“ஹாய் ரெட் ரோஸ்..... “ என்று சிரித்தான் விவேக்...

“ஹாய் நாட் நாட் செவன்...என்ன குரல் ல சந்தோஷம் பொங்கி வழியுது... அதுக்குள்ள அந்த பொண்ணை கண்டுபிடித்து விட்டீர்களா? “ என்றாள் அவளும் சிரித்தவாறு...

காலையில் அவளை சந்தித்து விட்டு அவள் வீட்டில் இருந்து வந்த பிறகு சில முறை அவளை அழைத்து சில தகவல்களை கேட்டிருந்தான் விவேக்.. அதனால் அவர்களுக்குள் நட்பு முளை விட ஆரம்பித்து இருந்தது..

இருவருமே சகஜமாக பேச ஆரம்பித்து இருந்தனர்.. ஒருவரை ஒருவர் கலாய்த்து கொள்ளும் அளவிலும் ஜாலியாக பேச ஆரம்பித்து இருந்தனர்...

ரோஜாவின் நக்கலை கண்டு கொள்ளாமல்

“ஹீ ஹீ ஹீ கண்டுபிடித்த மாதிரிதான்.. சீக்கிரம் கண்டு பிடிச்சிடுவேன்.. சரி... உங்க டான்ஸ் கோஸ்டி டான்ஸ் ஆடப் போகிற பங்சனில் வீடியோ எடுப்பாங்களா? “ என்றான் ஆர்வமாக....

“ஹலோ... அது என்ன டான்ஸ் கோஸ்டி..? நாங்க என்னவோ தெருகூத்து ஆடப்போற மாதிரி டான்ஸ் கோஸ்டி னு நக்கலா சொல்றீங்க..காலையிலும் அப்படிதான் சொன்னிங்க.. அப்பயே நல்லா திட்டணும் னு நினைத்தேன்..

சரி நீங்க  போலிஸ் னு சொல்லவும் வாயை மூடி கொண்டேன்... “ என்று இன்னும் திட்டி பொரிந்து தள்ளினாள் ரோஜா..

“அட கணேசா.. ஒரு வார்த்தை மாத்தி சொன்னதுக்கா இப்படி காதுல ரத்தம் வர்ற அளவுக்கு திட்டுதே இந்த பொண்ணு.. இனிமேல் பொண்ணுங்க கிட்ட பேசறப்ப ஜாக்கிரதையா பேசணும்.. “ என்று தனக்குத்தானே சொல்லி கொண்டவன்

“ஓ... சாரி ரோஸ்.. ஏதோ ஒரு ப்ளோல வந்திருச்சு... லீவ் இட்.. மேட்டர்க்கு வாங்க... உங்க க்ரூப் டான்ஸ் ஆடுவதை வீடியோ எடுப்பாங்களா? “ என்றான் ஆர்வமாக...

“இது என்ன ஸ்டுப்பிட் க்வஸ்டின் விவா...?  எந்த ப்ரோக்ராமில் வீடியோ இல்லாமல் இருக்கும்..? இது கூட தெரியாமல் என்னத்த டிடெக்டிவ் வேலை  பார்க்கறீங்களோ ? “ என்று நக்கலாக சிரித்தாள்....

அதை கேட்டு அவன் மனஸ் ம் வாயில் கையை வைத்து குலுங்கி குலுங்கி சிரித்தது... அதை முறைத்தவன்  

“ஹலோ... அதெல்லாம் எங்களுக்கும் தெரியும்.. எதுக்கும் கன்பார்ம் பண்ணிக்கலாம்னு கேட்டேன்.. “ என்று முறைத்தான்...

“ஹா ஹா ஹா.. நம்பிட்டேன்... சரி சரி.. எதுக்கு இப்ப அதை பத்தி கேட்கறீங்க? “ என்றாள் ரோஜா ஆர்வமாக....

“ஹ்ம்ம்ம் லண்டனில் நடந்த  ப்ரோகிராமை வீடியோ எடுத்து இருந்தால் அதில் உங்க ப்ராக்சி(proxy) டான்ஸ் ஆடினதும் இருக்கும் இல்ல.. “

“என்னது ப்ராக்சி யா? அது யாரு?

“ஹீ ஹீ ஹீ உங்களுக்கு பதிலா உங்க பெயர்ல லண்டன் போய் டான்ஸ் ஆடினாங்களே அந்த ரோஜா...அவங்கதான் உங்க ப்ராக்சி ரோஜா..  ம்ஹூம் ரோஜானு சொல்ல முடியாது.. வேணா சின்ன ரோஜா னு வச்சுக்கலாம்..” என்று சிரித்தான்..

அவளும் இணைந்து சிரித்தவள்

“சரி... அத வச்சு என்ன செய்வீங்க? “ என்றாள் ஆர்வமாக...

“ஹ்ம்ம்ம்  அந்த வீடியோ கிடைத்துவிட்டால் அதை வச்சு அவங்களுடைய போட்டோ கிடைச்சிடும்...

போட்டோ கிடைத்துவிட்டால் அப்புறம் அவங்களை ஈஸியா கண்டுபுடிச்சிடலாம்.. எப்பூடி? “ என்று காலரை தூக்கி விட்டு கொண்டான்...

“வாவ்... சூப்பர் விவா....இந்த ஐடியா ஏன் முன்னயே வரலையாம்? “ என்றாள் சிரித்தவாறு...

“ஆங்.. நான்தான் வேற வழியில்  நிஜ ரோஜாவையே கண்டுபிடித்து விட்டேனே..அதனால் இந்த வழியெல்லாம் அப்ப தேவையில்லை... ஆனால் நான் கண்டுபிடித்த ரோஜா ஒர் போர்ஜரி  ரோஜானு இன்னைக்குதான தெரிஞ்சது.. “ என்று முடிக்கும் முன்னே

“ஹோய்..... “ என்று  மறுமுனையில் கையை மடக்கி கொண்டு சண்டைக்கு வந்தாள் ரோஜா...

ஹீ ஹீ ஹீ சாரி ரெட் ரோஸ்.. டங் ஸ்லிப்பிங்... “ என்று அசடு வழிந்தான்....

“அது.. அந்த பயம் இருக்கட்டும்.. நான் ஒன்னும் போர்ஜரி இல்ல... ஒரு சின்ன பொண்ணோட ஆசையை  நிறைவேற்றி வைத்த பெரிய மனசுக்காரி ரொம்ப நல்ல பொண்ணாக்கும்... “ என்று சிரித்தாள் ரோஜா..

“ஆமாமாமாமாமாமா... ரொம்பவும் பெரிய மனசுதான்.. வீட்டுல பெத்தவங்களை ஏமாத்திட்டு பாய் ப்ரெண்ட் கூட ஊர சுத்த போன ரொம்ம்ம்ம்ம்பபபபப நல்லலலலலவ... “ என்று முனகினான் விவேக் ...

அவன் முனகியது கொஞ்சமாக மறுமுனையில் இருந்தவள் காதில் விழ,

“ஹலோ... அங்க என்ன முனகல்..?  எதுனாலும் தைர்யமா சத்தமா சொல்லுங்க சார்..... “ என்றாள் முறைத்தவாறு...

“ஹீ ஹீ ஹீ நத்திங்... லீவ் இட் ரெட் ரோஸ்... “ என்று மீண்டும் அசடு வழிந்தான்...

“ஹ்ம்ம்ம்ம் ஆமா அது என்ன ரெட் ரோஸ்..?. என் பெயர் ரோஜா... ரோஜானே கூப்பிடுங்க... “ என்றாள் முறைத்தவாறு

“ரோஜா என்றதன் ஆங்கில பெயர் தான் ரோஸ்..அதான் கொஞ்சம் மாடர்ன் ஆ ஸ்டைலா இருக்கட்டும் னு கூப்பிடறேன்.. ஏன் பிடிக்கலையா?  “ என்றான் சிரித்தவாறு...  

“ஹ்ம்ம் ரோஸ் ஓகே... அது என்ன ரெட் ரோஸ்? “ என்றாள் சந்தேகமாக..

“ஹீ ஹீ ஹீ அது வந்து எனக்கு ரெட் ரோஸ் னா ரொம்ப பிடிக்கும்.. அதுதான் சும்மா ரோஸ் னு கூப்பிடாம அடைமொழியா எனக்கு பிடித்த ரெட் ரோஸ் னு சேர்த்துகிட்டேன்...“ என்று சிரித்தான்...  

“ஹலோ... என் பெயரை எப்படி வேணாலும் கூப்பிட உங்களுக்கு யார் ரைட்ஸ் கொடுத்தா...?  “ என்று சிரித்து கொண்டே அவனிடம் சண்டை போட அப்பொழுது அவளுக்கு மற்றொரு அழைப்பு வந்தது....

அதன் திரையில் ஒளிர்ந்த பெயரை கண்டதும் அவள் உதடுகளில் புன்னகை பூக்க,

“ஹே விவா.... சது கால் பண்றான்... நான் அப்புறமா உன்கிட்ட பேசறேன்... நீ நாளைக்கு அந்த டான்ஸ் ஸ்கூலுக்கு போய் அந்த ப்ரோக்ராமிற்கான வீடியோவை வாங்கி பார்..

அங்க ஏதாவது ஹெல்ப் வேணும்னா உடனே எனக்கு கால் பண்ணு டோன்ட் ஹெசிடேட்.. எனக்கும் அந்த சின்ன ரோஜாவை பார்க்கணும் போல இருக்கு... “ என்று சொல்லி அவன் பதிலுக்கு கூட காத்திருக்காமல் அழைப்பை துண்டித்தாள்..

அதுவரை அவனுடன் ஜாலியாக சிரித்து பேசி கொண்டிருந்தவள் அவளுடைய பாய் ப்ரண்ட் அழைத்ததும் அவள் குரலில் வந்திருந்த ஒரு குதூகலத்தை கண்டவனுக்கு ஏனோ எரிச்சலாக இருந்தது..

முகம் தெரியாத அந்த சதிஸ் ன் மீது அவனுக்கு பொறாமையாக இருந்தது...

ஒரு பெருமூச்சை இழுத்து விட்டு நாளைக்கு செய்ய வேண்டியதை திட்டமிட்டு படுக்கையில் படுத்து கண் அயர்ந்தான் விவேக்....


Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!