தேடும் கண் பார்வை தவிக்க-30

 


அத்தியாயம்-30

றுநாள் காலையில் சீக்கிரம் எழுந்து தன் காலை ஓட்டத்தையும் உடற்பயிற்சியையும் செய்து முடித்தவன் குளித்து, கிளம்பி நேராக அந்த டான்ஸ் ஸ்கூல் முன்பு சென்று நின்றான் விவேக்..

இன்னும் அந்த பள்ளி திறந்திருக்கவில்லை.. தன் வண்டியை நிறுத்திவிட்டு தன் நகத்தை கடித்தபடி டென்சனுடன் காத்திருந்தான்..

“எப்படியாவது அந்த ப்ரோகிராம் வீடியோ கிடைத்து விடவேண்டும்.. அதை வைத்து அந்த சின்ன ரோஜாவின் புகைப்படம் கிடைத்து விடவேண்டும்.. “ என்று மனதுக்குள் அந்த கணேசனை வேண்டி கொண்டே அந்த பள்ளியின் வாயிலையே பார்த்து கொண்டிருந்தான்...

சிறிது நேரத்தில் அந்த பள்ளியை நடத்தும் நடுத்தர வயது பெண்மணி வந்து சேர்ந்தார்.. அந்த பள்ளியின் கதவை திறந்து கொண்டு உள்ளே செல்ல சிறிது நேரம் இடைவெளி விட்டு அந்த பள்ளியின் உள்ளே சென்றான்...

அந்த பெண்மணியை சந்தித்து அந்த ப்ரோக்ராம் ல் எடுத்த வீடியோவை பற்றி விசாரிக்க அவனுக்கு அந்த கணேசன் நல்ல செய்தியையே கொடுத்தான்..

அந்த ப்ரோக்ராம் வீடியோ அந்த பள்ளியிலும் இருந்தது.. ஆனால் கெட்ட செய்தியாக அதை அவனிடம் கொடுக்க மறுத்தார் அந்த உரிமையாளர்...

அவன் எவ்வளவோ கெஞ்சி கேட்டும் அதில் பல பெண்கள் இருக்கிறார்கள்.. சம்பந்தமே இல்லாத ஒருவனிடம் அந்த வீடியோவை கொடுக்க முடியாது என்று மறுத்துவிட்டார்...

அவனும் சிறிது நேரம் கெஞ்சி பார்த்துவிட்டு பின் தொங்கி போன முகத்துடன் வெளியில் வர, அப்பொழுது ரோஜாவிடம் இருந்து அழைப்பு வந்தது..

இப்பொழுது அவளுமே இந்த கேஸில் ரொம்பவும் ஆர்வம் ஆகிவிட்டாள்..

அந்த பொண்ணை சீக்கிரம் கண்டுபிடிக்க வேண்டும் என்று அவளுமே ஆர்வம் காட்டினாள்.. அதனாலயே விவேக் சென்ற வேலை என்ன ஆனது என்று அறிந்து கொள்ள அவனை அழைத்து இருந்தாள்..

விவேக் அவளிடம் நடந்ததை சொல்ல,

“ஊப்... இவ்வளவுதானா... அதுக்கு போய் எதுக்கு இப்படி சொங்கி போன மங்கி மாதிரி டல்லடிக்கிறீங்க நாட் நாட் செவன்...  ஒரு டிடெக்டிவ் ஏஜென்ட் ஆ கெத்தா அடுத்து என்ன செய்ய என்று யோசிக்க வேண்டாமா?  “ என்று அவனை கிண்டல் அடித்தவள்

“டோன்ட் வொர்ரி விவா... நான் ஒரு வழியை கண்டு பிடித்துவிட்டேன்.. “ என்றாள் சிரித்தவாறு...

“ம்ம்ம்.. என்ன?  நான் லண்டனுக்கு போய் அந்த ஹோட்டல் ல அந்த வீடியோ வை வாங்கணுமா? இதுக்காக அவ்வளவு தூரம் லண்டன் போகணுமா? “ என்றான் யோசனையாக...

“ஹா ஹா ஹா ஞானபழத்துக்காக தன் தம்பி இந்த உலகையே சுத்தி வந்தாலும் அசராமல் தன் அப்பா அம்மாவை சுத்தி வந்து பழத்தை வாங்கி கொண்ட அந்த அறிவாளி  கணேசனுடைய பக்தன் னு வெளில சொல்லிடாதிங்க..

அந்த கணேஷ் தேடி வந்து உங்களை அடிப்பான்... “ என்று சொல்லி சிரித்தாள்..

அதில் கடுப்பானவன்

“ஹலோ.. அப்ப வேற என்ன வழி..?  அந்த பெருசுதான் வீடியோவை கொடுக்க மாட்டேனுடுச்சே...... ஒரு வேளை அங்க வேலை செய்யற யாரையாவது கரெக்ட் பண்ணி அந்த பெருசுக்கு தெரியாம அந்த வீடியோவை சுட்டுடலாமா? “ என்றான் முறைத்தவாறு...

“ஹலோ.... சரியான மக்கு யா நீ....நீயெல்லாம் விவேக் நாட் நாட் செவன் னு சொல்லிக்காத.. “ என்று கலாய்த்தாள் ரோஜா..

“அப்பனா நீதான் இதுக்கு ஒரு வழி சொல்லேன் ரூபலா மேடம்.. “ என்றான் விவேக் ம் நக்கலாக...

“ஹீ ஹீ ஹீ.. நீங்க சொல்லாட்டியும் இந்த கேஸ் ல நான்தான் ரூபலா.. “ என்று சொல்லி சிரித்தவள்

“விவா... அந்த மேடம் தெரியாதவங்க கிட்டதான அந்த வீடியோ வ தரமாட்டேனு சொன்னாங்க...ஆனால் தெரிஞ்சவங்க கிட்ட தர ஒன்னும் மறுக்க மாட்டாங்க இல்ல.. “ என்றாள் புருவத்தை உயர்த்தி..

“என்ன சொல்ற ரெட் ரோஸ்.... ? “ என்றான் புரியாமல்...

“ஐயோ.. சரியான் ட்யூப் லைட் யா நீ...மேடம் க்கு நன்றாக தெரிந்தவள் நான்.. நான் அந்த வீடியோவை கேட்டால்  அவங்க மறுக்க மாட்டாங்க தான... அதனால நான் கேட்கற மாதிரி கேட்டு அந்த வீடியோ வை வாங்கி தர்றேன்.. ப்ராப்ளம் சால்வ்ட்... எப்பூடி? “ என்று இல்லாத காலரை தூக்கி விட்டு கொண்டாள் ரோஜா...

“வாவ்.. சூப்பர் ரூப்ஸ்.. நிஜமாலுமே அந்த விவேக் க்கு ஹெல்ப் பண்ணின ரூபலா மாதிரி நீ இந்த விவேக் க்குக்கு ஹெல்ப் பண்ணும் ரூபலாவே தான்...உன் கிட்டயும் கொஞ்சம் டிடெக்டிவ் மூளை இருக்கு..  தேங்க்யூ சோ மச்... “ என்று சிரித்தான்...

“ஹீ ஹீ ஹீ ..தேங்க்யூ தேங்க்யூ.. ஆனாலும் என்னை ரொம்ப புகழாதிங்க விவா....எனக்கு வெக்க வெக்கமா வருது.. “ என்று சொல்லி சிரித்தாள்..

“விவா.. நான் இப்பவே கேட்டால் மேடம் க்கு சந்தேகம் வரலாம்... நான் கிளம்பி நேர்ல வந்து மேடம் ஐ பார்க்கிற மாதிரி பார்த்து பேசிட்டு அப்படியே அந்த ப்ரோக்ராம் வீடியோ வை வாங்கி தர்றேன்.. ஓகே வா? “ என்றாள்..

“வாவ் சூப்பர் ரூப்ஸ்.. டபுள் ஓகே... சீக்கிரம் வா.. நான் இங்க பக்கத்துலயே வெய்ட் பண்ணிகிட்டிருக்கேன்.. கம் பாஸ்ட்... “ என்று அலைபேசியை அணைத்தவன் அருகில் இருந்த ஒரு காபி ஷாப் ல் சென்று அமர்ந்து கொண்டு ரோஜாவுக்காக காத்திருக்க ஆரபித்தான்..

ரோஜாவும் உடனே கிளம்பி வந்து அவள் சொன்ன மாதிரியே அந்த பள்ளியின் உரிமையாளரை சந்தித்து பேச அவருக்கு ரோஜாவை பற்றி நன்றாக தெரியும்..

அதுவும் அவள் சம்பளம் எதுவும் வாங்காமல் அந்த  பள்ளியில் ஏழை குழந்தைகளுக்கு நடனம் சொல்லி கொடுக்க, அவளின் சேவையை கண்டு அவளை அவருக்கு  ரொம்ப பிடிக்கும்..

அதனால் ரோஜா கேட்டதும் அந்த வீடியோவை அவளுடைய வாட்ஸ்அப்புக்கு அனுப்பி வைத்தார்..

ரோஜாவும் மகிழ்ந்து போய் அவருக்கு நன்றி சொல்லி விடைபெற்று சென்றாள்...

அந்த பள்ளியை விட்டு வெளிவந்ததும் அவளை கண்டு கொண்ட விவேக் அவளை அழைத்து அருகில் இருக்கும் காபி ஷாப் பிற்கு வரச்சொன்னான்...  

அவளும் தன் ஸ்கூட்டியை ஸ்டார்ட்  பண்ணி அங்கு சென்று நிறுத்திவிட்டு விவேக் ஐ சந்திக்க துள்ளலுடன் கடைக்கு உள்ளே சென்றாள்..

ஒரு கார்னரில் இருவர் மட்டும் அமரும் இருக்கையில் விவேக் அமர்ந்து இருக்க அவனை பார்த்து புன்னகைவத்தவள் நேராக அங்கு சென்று அவன் எதிரில் அமர்ந்தாள்..

உடனே நேரத்தை கடத்தாமல் அந்த  வீடியோவை காட்ட சொன்னான் விவேக்.. அவளும் அந்த வீடியோ வை ஆன் பண்ணி இருவரும் அருகருகில் அமர்ந்து கொண்டு பார்க்க ஆரம்பித்தனர்..

முதலில் வேறு சிலரின் நடனம் வந்திருக்க, அதை பார்க்கும் பொறுமை இல்லாதவன் அதை பாஸ்ட் பார்வார்ட் பண்ண சொன்னான்.. வீடியோ பாதி முடிந்தும் அந்த சின்ன  ரோஜா வந்திருக்கவில்லை.

அவனும் நடனம் ஆடும் ஒவ்வொரு பொண்ணாக காட்டி அது அந்த பொண்ணா என்று கேட்க அவளும் இல்லை என்று மறுத்து வந்தாள்..

நேரம் ஆக ஆக விவேக் க்குக்கு நம்பிக்கை குறைந்து கொண்டே வந்தது..

அந்த பொண்ணு இதில் நடனம் ஆடாமல் இருந்திருந்தால் என்ன செய்வது என்று  வாய்விட்டு புலம்ப

“சே சே அப்படி எல்லாம் இருக்காது விவா... எங்க டான்ஸ் இந்த ப்ரோகிராமில் ரொம்ப முக்கியமானது.. கண்டிப்பா என் இடத்தில் இருந்த அந்த  பொண்ணு டான்ஸ் ஆடி இருக்கணும்.. இன்னும் எங்க டீம் ஆடின டான்ஸ் வரலை..

கொஞ்சம் பேசன்ட்ஸ் ஆ இருங்க.. “ என்று முறைத்தவாறு கொஞ்சம் ஃபார்வார்ட் பண்ணி பார்க்க, இறுதியாக அந்த ரோஜா ஆட வேண்டிய நாட்டியம் வந்தது...

அது ஆரம்பித்ததுமே அடுத்த நொடி துள்ளி குதித்தாள் ரோஜா...

“ஹே விவா..... இவதான்... இந்த பொண்ணுதான் நீ தேடும் அந்த சின்ன ரோஜா... “ என்று ஒரு பெண்ணை கை காட்டி ஆர்பரித்தாள்..

விவேக் ம் ஆர்வமாக பார்க்க, ரிஷி வர்ணித்ததை விடவே இன்னும் அழகாக இருந்தாள் அவள்..

அதுவும் நாட்டிய உடையிலும் நாட்டிய அலங்காரத்திலும் அவளை காண அவ்வளவு அம்சமாக இருந்தாள்..

தேவலோகத்து ரம்பையும் ஊர்வசியும் ஒன்றாக கலந்து நேரில் வந்ததை போலவும் அவளின் நடனமும் அவ்வளவு அற்புதமாக இருக்க இமைக்க மறந்து பார்த்து கொண்டிருந்தான் விவேக்..

அதை கண்டு கடுப்பான ரோஜா

“ஹலோ.. ஜொள்ளு விட்டது போதும்... இந்த பொண்ணு போட்டோதான வேணும்னு கேட்டிங்க... இப்ப கிடச்சிடுச்சு.. அப்புறம் எதுக்கு பட்டிகாட்டான் மிட்டாய் கடையை பார்த்த மாதிரி அந்த பொண்ணையே அப்படி லுக் விடறீங்க? “ என்று  முறைத்தாள் ரோஜா..

“ஹீ ஹீ ஹீ. முதன் முதலா ஒரு அழகான பொண்ணை பார்க்கறேனா.. அதான் கொஞ்சம் என்னை மறந்துட்டேன்.. “ என்று அசடு வழிந்தான்...

“ஹலோ. அப்ப என்னை எல்லாம் பார்த்தா அழகான பொண்ணா தெரியலையா? “ என்று மீண்டும் கையை மடக்கி அவனிடம்  சண்டைக்கு வர, அவனும் அவசரமாக சமாதான கொடியை பறக்க விட்டான்..

பின் அவள் அலைபேசியில் இருந்த வீடியோவை அவனுடையை அலைபேசிக்கு மாற்றி கொண்டான்..

அதே நேரம் ரோஜாவுக்கு சதீஸ் இடம் இருந்து அழைப்பு வர, சதூஊஊஊஊஊ என்று உற்சாகமாக அழைத்தவாறு விவேக் கிற்கு சைகை காட்டி இருக்கையில் இருந்து எழுந்து வெளியில் செல்ல விவேக் கிற்கு காதில் புகை வந்தது...

அவளை பார்த்து உதட்டை வளைத்து பழிப்பு காட்டியவன் உடனே ரிஷியை அழைத்து விசயத்தை சொன்னான்...

முக்கியமான மீட்டிங் ல் இருந்தவன் அன்று தன் பெர்சனல் அலைபேசியை அணைக்க மறந்திருக்க, மீட்டிங் நடுவில் அது ஒலிக்க, அதில் ஒளிர்ந்த விவேக் பெயரை கண்டதும் பாதியில் மீட்டிங் ஐ நிறுத்திவிட்டு தன் அலைபேசியை எடுத்து கொண்டு வெளியில் வந்தவன் விவேக் சொன்ன நல்ல செய்தியை கேட்டு துள்ளி குதித்தான்..

உடனே அந்த வீடியோவை தனக்கு அனுப்ப சொல்லி குதிக்க, விவேக் ம் சிரித்து கொண்டே அந்த வீடியோவை அவனுக்கு பார்வாட் பண்ணி வைத்தான்..

விவேக் அனுப்பின வீடியோ கிடைத்ததும்  அந்த மீட்டிங் ஐ கேன்சல் பண்ணி விட்டு தன் அறைக்கு சென்ற ரிஷி அந்த வீடியோவை ஓட விட்டு பார்க்க அதில் கடைசியாக வந்தவள் அவளேதான்...

அவன் தேடும் அதே செவ்வந்தி பூதான்.. அவளுடைய ரோஜா பொண்ணு...  அவன் உள்ளத்தை கொள்ளை அடித்து சென்ற கள்ளி அவன் மான்குட்டியேதான்...

அவளை காணாமல் இத்தனை நாள் ஏங்கி தவித்ததுக்கு அவளின் நிழல்படததை கண்டதும் விண்ணையே தொட்டுவிட்ட மகிழ்ச்சி அவன் உள்ளே..

அதுவும் அவளின் அந்த அலங்காரமும் அவள் ஆடும் நாட்டியத்தையும் காண காண திகட்டவில்லை..

அவளின் ஒவ்வொரு அசைவும் நெழிவு சுளிவும் அவனுக்குள் புரட்டி போட்டது.. அவள் காட்டிய கண் அசைவிலும், நாட்டிய பாவணையிலும் இன்னுமே கவிழ்ந்து போனான்..

அன்றைய நாள் அவனுக்கு இருந்த எல்லா ப்ரோக்ராமையும் கேன்சல் பண்ணிவிட்டு தன் அறையில் இருக்கையில் சாய்ந்து கொண்டு அந்த வீடியோவையே பல முறை பார்த்து ரசித்தான்...

கண் மூடி கலர் கலரான கற்பனைகள் வேறு..

ன்று இரவு வீடு வந்து சேர்ந்ததும் அந்த வீடியோவை தன் அறையில் இருந்த 40 இன்ச் எல்.இ.டி டீவியில் திரும்ப திரும்ப ஓடவிட்டு பார்த்து ரசித்தான்....

அங்கு விவேக் ஓ அந்த சின்ன ரோஜாவின் முகம் நன்றாக தெரியுமாறு இருந்த ஒரு காட்சியில் இருந்த முகத்தை புகைப்படமாக எடுத்துகொண்டு அவளை தேட ஆரம்பித்தான்..

அன்றே சில முக்கியமான நாளிதழ்களில் காணாமல் போனவர்கள் பக்கத்தில் விளம்பரம் கொடுத்தான்..

ரிஷியின் பெயரை இழுக்காமல் அவனுடைய அலைபேசி எண்ணையும் முகவரியையும் கொடுத்து தொடர்பு கொள்ள சொல்லி இருந்தான்....

வாட்ஸ்அப்பில் போட கொஞ்சம் தயங்கினான்..

“.அந்த புகைப்படத்தை வைத்து  ஏதாவது மிஸ் யூஸ் பண்ணிவிட்டால்?? முதலில் செய்திதாளுக்கு ஏதாவது பலன் இருக்கிறதா என்று பார்க்கலாம்..

அப்படி எதுவும் கிடைக்கவில்லை என்றால் அடுத்தகட்டமாக இணையத்தை நாடலாம்.. “  

என்று  முடிவு  செய்தவன் விளம்பரத்தை கொடுத்துவிட்டு தன் அலைபேசியை பார்த்து கொண்டிருக்கிறான் கடந்த இரண்டு வாரமாக..

ஆனால் அவன் எதிர்பார்த்த அந்த குட் நியூஸ் மட்டும் இன்னும் வந்து சேரவில்லை.. அந்த பொண்ணை பற்றி விசாரித்து யாரும் இது வரை தகவல் எதுவும் சொல்லவில்லை...

ரிஷியும் காலை, மாலை என்று இரு வேளையும் விவேக் ஐ அழைத்து ஏதாவது தகவல் கிடைத்ததா என்று நெருக்கி வருகிறான்...

இரண்டு நாட்கள் முன்புதான் விவேக் அந்த புகைப்படத்தை வாட்ஸ்அப்பிலும் போட்டு இருக்கிறான்..

ஆனால் அவன் ஆவலுடன் எதிர்பார்க்கும் எந்த ஒரு நல்ல செய்தியும் இன்னும் கிடைத்திருக்கவில்லை..

ஆனாலும் எப்படியும் கண்டுபிடித்து விடலாம் என்று விவேக் ரிஷிக்கு ஆறுதல் சொல்லி வந்தான்..

தை நினைத்து பார்த்த ரிஷி ஒரு பெருமூச்சை விட்டவன் மீண்டும்  இந்த நிலையில் இன்று ஏன் என் மனம் இப்படி ஆர்பரிக்கிறது என்று ஆராய்ந்தவாறு காரை செலுத்தி கொண்டிருந்தான்..

இந்த மாதிரி ஒரு ஃபீல் முதலும் கடைசியுமாக  அவனுக்கு அந்த மான்குட்டியை கண்ட பொழுதுதான் உண்டானது..

இப்பொழுது அதே ஃபீல் அப்படியே அச்சு பிசகாமல் மீண்டும் அவன் மனதில் தோன்ற அவனுக்கு ஏதோ ஒரு குட் சைன் தெரிவதை போல இருந்தது... மனதில் ஒரு உற்சாகமும் உதட்டில் ஒரு குறுநகையும் தானாக வந்து ஒட்டி கொண்டது..

தன்னுடைய ஃபெர்ராரி யை விசிட்டர் பார்க்கிங் ல் நிறுத்திவிட்டு இன்ஜினை அணைத்துவிட்டு சாவியை உருவியவன் தன் ப்ரீப்கேஸ் ஐ எடுத்து கொண்டு அங்கு அம்பு குறியிட்ட ஒரு கான்ப்ரன்ஸ் ஹாலை நோக்கி வேக நடையுடன் நடந்தான்..

அங்கு பயிலும் இறுதியாண்டு மாணவர்களுக்கான கேம்பஸ் செலக்சன் முதல்நாள் இன்று.. இன்னாகுரேசன் விழாவிற்கு ரிஷிதான் சிறப்பு விருந்தினர்..

தங்கள் படிப்பை முடித்ததும் சொந்தமாக தொழில் தொடங்க விருப்பம் உள்ள மாணவர்களுக்கு ஸ்டார்ட்அப் ஆரம்பிப்பது பற்றிய விளக்கமும் அதில் வரும் நன்மைகள் மற்றும் நடைமுறை சிக்கல்கள் என கலந்துரையாடலும் ஏற்பாடு பண்ணி இருந்தனர்...

அதில் ரிஷிதான் சிறப்பு பேச்சாளர்..கூடவே மாணவர்களின் மனதில் இருக்கும் சந்தேகங்களுக்கு விடை அளிக்கவும் ரிஷியை அழைத்து இருந்தனர்.. 

அதோடு வர்மா குரூப் ஆப் கம்பெனிஸ் ம் தங்களுக்கு தேவையான  திறமையுள்ள மாணவர்களை தேர்ந்தெடுத்து கொள்ள இன்று கேம்பஸ் செலக்சனில் கலந்து கொள்வதால் இன்று காலை நேரத்தை அண்ணா பல்கலைகழகத்தில் ஒதுக்கி இருந்தான்..

மதிய உணவு இடைவேளைக்கு பிறகு அவனுடைய தலைமை அலுவலகத்துக்கு செல்லவேண்டும்..

எப்பொழுதுமே கல்லூரி முடித்து வெளிவரும் மாணவர்களுடன் உரையாட ரிஷிக்கு ரொம்பவும் பிடிக்கும்.. இளரத்தம்.. இளமை வேகமும் துடிப்பும்  நிறைந்த மாணவர்களுடன்  நிறைய ஐடியாக்களை விவாதிக்க, அவனுக்கும் ரெப்ரெஸ் ஆனதை போல இருக்கும்..

அதனாலயே இந்த பல்கலைகழகத்தின் டீன் வருடம் தோறும் ரிஷியை அழைத்துவிடுவார்.. அவனும் மறுக்காமல் வந்துவிடுவான்..

இன்றும் அந்த கருத்தரங்கில் சிறப்பு உரையாற்ற வந்திருந்தான்..

ஒருவேளை அதனால்தான் மனம் உற்சாகத்தில் இருக்கிறதோ என்று  அவசரமாக ஆராய, அதுவும் இல்லை என்று  அவன் மூளை எடுத்து கூறியது..

ஏனேன்றால் இது மாதிரி எத்தனையோ கருத்தரங்கில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றியிருக்கிறான்.. அப்பல்லாம் இந்த மாதிரி அவன் மனம் துள்ளி குதித்தது இல்லை.. மனதில் ஒரு நிறைவு இருக்கும் அவ்வளவே..!

“அப்படி என்றால் சம்திங் குட் கோயிங் டு ஹேப்பன்ட் டு மி.. “ என்று தனக்குத்தானே சொல்லி கொண்டு உல்லாசமாக விசில் அடித்தபடி துள்ளலுடன் அந்த கான்ப்ரென்ஸ் ஹாலை நோக்கி நடந்தான்..

வழியில் எதிர்பட்ட புரபெசர்ஸ் எல்லாருமே அவனை பார்த்து புன்னகைத்து கை குலுக்கி வரவேற்க, அந்த பல்கலைகழகத்தின் டீன் ம் வேகமாக முன்னே வந்து அவனை கை குலுக்கி மேடைக்கு அழைத்து சென்றார்..

மாணவர்கள் முன்பே அங்கு  கூடி இருந்ததால் விரைவிலயே கருத்தரங்கை  ஆரம்பித்து ரிஷி தன் உரையை தொடர்ந்து கொண்டிருந்தான்..

அவனுடைய சுவாரசியமான பேச்சுக்கு எப்பொழுதுமே மாணவர்கள் கட்டுண்டிருப்பர்..

ரிஷி எப்பொழுதுமே  இன்றைய மாணவர்களுக்கு ஹீரோவாக இருப்பான்..அவனுடைய ட்விட்டரில் பல பேர் ஃபாலோவராக இருக்கின்றனர்.. அவன் பேசிய பல வீடியோக்கள் மில்லியன் வ்யூஸ் ஐயும் தாண்டி இருந்தது...

இன்றும் அதே போல சுவாரஸ்யமாக பேசி கொண்டிருக்க, அங்கு இருந்த மாணவர்கள் மெய் மறந்து அவன் பேச்சை கேட்டு கொண்டிருந்தனர்..

சிறிது நேரத்தில் தன் பேச்சை முடிக்கவும் அதன் பின் கேள்வி நேரம் ஆரம்பித்தது... நிறைய கேள்விகள் மாணவர்கள் முன்வைக்க அதையெல்லாம் பொறுமையாக விளக்கி முடிக்க, மதிய நேரம் வந்திருந்தது..


Comments

Post a Comment

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!