தேடும் கண் பார்வை தவிக்க-31

 


அத்தியாயம்-31

வனுடைய நிகழ்ச்சி நிரலும் அத்தோடு முடிந்திருக்க, சிறப்பு விருந்தினர்க்காக ஏற்பாடு செய்திருந்த டைனிங் ஹாலுக்கு ரிஷியை அழைத்து சென்றார் டீன்..

அந்த அறைக்கு சென்றவன் பப்பே முறையில் இருந்த உணவுகளை எடுத்து ஒரு தட்டில் வைத்து கொண்டு அங்கிருந்த சில புரபெசர்களிடம் பேசி கொண்டிருக்க, திடீரென்று எங்கிருந்தோ வந்த ஒரு ஸ்பெஷல் மணம் அவன் நாசியை தீண்டி சென்றது...

அடுத்த நொடி அது என்ன மணம் என்று புரிந்தது.. உடனே பின்னால்  திரும்பியவன்  அந்த ஹாலை அவசரமாக ஆராய்ந்தான்...

ஆனால் அவன் தேடியவள்  மட்டும் காணவில்லை.. நிறைய மாணவிகள், சில பெண் விரிவுரையாளர்கள் என  அந்த ஹாலில் நிறைந்து இருந்தனர்..அவளை காணவில்லை..

ஆனால் எப்படி அப்படி ஒரு வாசம் வீசியது?

கண்டிப்பாக அது என்னவளுடைய வாசம்தான் என மனம் அடித்து கூற அவசரமாக தன் கையில் வைத்திருந்த உணவை உண்டு முடித்தவன் ஒரு அவசர வேலை இருப்பதாக சொல்லி அனைவரிடமும் விடைபெற்று வேகமாக அங்கிருந்து வெளி வந்தான்..

வேக நடையுடன் அந்த ஹாலின் வெளியில் இரண்டு முறை சுற்றி வந்தான்..ஆனால் வித்தியாசமாக எதுவும் யாரும் அவன் கண்ணில் படவில்லை..

அப்பொழுது திடீரென்று

“ஏய் மாமா...” என்று ஒரு பெண்ணின் குரல் கேட்க வேகமாக அந்த பகுதிக்கு ஓடினான்..

அங்கு சென்று பார்க்க ஏமாற்றமே.. வேற ஒரு மாணவி ஒரு மாணவனை மாமா என்று சொல்லி கலாய்த்து கொண்டிருந்தாள்..

முகத்தில் ஏமாற்றம் பரவ மீண்டும் தளர்ந்த நடையுடன் தன் காரை நோக்கி நடந்தான் ரிஷி..

அவன் கார் பார்க்கிங் ஐ அடையும் முன் மீண்டும் அதே வாசம் அவன் நாசியை தீண்டி சென்றது... இந்த முறை இன்னும் வெகு அருகில் இருப்பதை போல இருக்க, மீண்டும் வேகமாக ஓடி சுற்றிலும் தேடி பார்த்தான்..

அவனை நினைத்து அவனுக்கே வெட்கமாகவும் அவமானமாகவும் இருந்தது..

ஒரு மல்ட்டி மில்லினர் ஊர் பேர் தெரியாத ஒரு பொண்ணுக்காக இப்படி அலைகிறான் என்று தெரிந்தால் சிரிப்பார்கள் என்று வெட்கமாக இருக்க,

“வெட்கத்தை பார்த்தால் அதெல்லாம் நடக்காது.. எனக்கு என் மான்குட்டி வேண்டும்.. என் ரோஜா பொண்ணு வேண்டும்... “  என்று தன் மனதை அடக்கியவன் சுற்றிலும் ஓடி சென்று தேடிபார்க்க மீண்டும் ஏமாற்றமே...!

“சே... இங்கேதான் எங்கயோ இருக்கிறாள்..! ஆனால் கண்ணுக்கு தென்பட மாட்டேங்கிறாள்.. “  என்று  மட்டும் புரிந்தது..

மீண்டும் அங்கும் இங்கும் சுற்றி பார்த்தவன் அவளை காணாமல் துவண்டவன்

“சே...எங்க இருக்கிறாள்? இவ்வளவு பெரிய பிசினஸ் சாம்ராஜ்ஜியத்தை கட்டி ஆள்கிறவன் ஐந்தடிக்குகும் குறைவான என்னவளை கண்டுபிடிக்க முடியவில்லையே...” என்று உள்ளுக்குள் புலம்பினான்..

அருகில் இருந்த ஒரு கட்டிடத்தின் பக்கவாட்டில் சுவற்றில் ஒரு காலை மடக்கி முட்டு கொடுத்து சுவற்றில் வைத்து கொண்டு சுவற்றின் மீது சாய்ந்து நின்று கொண்டு வேதனையில் கண்ணை இறுக்க மூடி கொண்டிருந்தான்.. 

இத்தனை நாட்கள் ஆகியும் அவளை கண்டுபிடிக்க முடியாத தன் இயலாமையை எண்ணி அவன் கை முஷ்டி இறுக, தன் கை முஷ்டியை இன்னும் இறுக்கி அந்த சுவற்றின் மீது குத்தினான்..

அந்த நேரம் அவன் அன்னையின் நினைவு வந்தது.. உடனே தன் அன்னையிடம் மானசீகமாக பேச ஆரம்பித்தான்..

“மாம்.... என் மனம் உங்களுக்குத்தான் நன்றாக தெரியும்.. எனக்கு என்னவோ நீங்கதான் என்னவளை காட்டி கொடுத்தீங்க னு தோனுது.. நீங்கதான் அன்று என்னை லண்டனுக்கு அனுப்பி வைத்தது..

உங்க விருப்பப்படி நானும் கண்டுகொண்டேன் என்னவளை.. ஆனால் ஏன் உடனே அவளை என்னிடம் இருந்து பிரித்து விட்டீர்கள்? என்னதான் சொல்ல வருகிறீர்கள்..?

அவ தான் நம் வீட்டு மருமகள்,  என் மனைவி என்று நீங்கள்  விரும்பினால்  அவளை என்னிடம் கொண்டு வந்து சேர்த்துவிடுங்கள்.. என்னால் அவள் இல்லாமல் இருக்க முடியவில்லை மாம்.. ஐ லவ் ஹெர் வெரி மச்..

ஐ வான்ட் டு சி ஹெர்.. ப்ளீஸ் ஹெல்ப் மீ.. அவளை என்னிடம் கொண்டு வந்து சேர்த்துவிடுங்கள்.. “ என்று கண்களை  மூடி மானசீகமாக தன் அன்னையிடம் மருக, அதே நேரம் அவன் தோளில் ஏதோ ஒன்று பொத்தென்று வந்து விழுந்தது..  

அதில் திடுக்கிட்டவன் கண் விழித்து  தன் தோளில் விழுந்ததை அவசரமாக எடுத்து பார்க்க,  அது ஒரு மல்லிகை சரம்..!  

காலையில் பறித்து தொடுத்து இருந்தாலும், அந்த மதிய நேரம் ஆகியும், கொஞ்சமும் வாடாமல், மலர்ந்து அவனை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது.

அந்த மல்லிகை சரத்தை தன் கரங்களால் வருட, அடுத்த கணம் அவன்  விழிகள் உடனே  பெரிதாக விரிந்தன..

“அதே பூ.. இது அன்று அவள் வைத்திருந்த அதே பூ..  “ என்று உறைக்க,  அப்படி என்றால் இது அவளுடையது தான் என்று புரிந்துவிட, விலுக்கென்று தலையை நிமிர்த்தி  அந்த கட்டிடத்தின் மேலே அண்ணாந்து பார்த்தான்..

அங்கு சில பெண்கள் கிளுக்கி சிரித்தபடி படிகட்டுகளில் இறங்கி கொண்டிருந்தது அவர்களின் சிரிப்பில் இருந்தே தெரிந்தது..

அந்த சிரிப்பில் தனியாக அவனவளின் சிரிப்பும் கலந்து வந்து அவன் காதை தீண்டியது.. அத்தனை பெண்களின் சிரிப்பிலும் அவளுடையதை மட்டும் தனியாக கண்டு கொண்டான் அந்த காதல் மன்னன்..

கூடவே அவளின் அந்த வாசமும் அவன் நாசியை தீண்டி சென்றது.. அதில் இன்னுமாய் சிலிர்த்தவன்

“அப்படி என்றால் அவளே தான்..! என்னவளே தான்...!  இங்கேதான் இருக்கிறாள்..!”  என்று உணர்ந்து கொண்டவன் அவன் நின்றிருந்த அந்த கட்டிடத்தின் பின் பகுதியில் இருந்து வேகமாக முன்பகுதிக்கு ஓடி வந்தான்..

ஆனால் அதற்குள் அந்த பெண்கள் கூட்டம் கீழிறங்கி வெவ்வேறு பாதைகளில் சென்று கொண்டிருந்தனர்..

அவர்களின் பின்புறம் மட்டுமே தெரிய டக்கென்று அவளின் பின்புறமும் அவளின் நீண்ட ஜடையும் ஞாபகம் வந்தது...

உடனே முன்னே சென்று கொண்டிருந்த பெண்களில் நீண்ட ஜடையுள்ள பெண்ணை தேடினான்...

இரண்டு பெண்கள் அதே மாதிரி நீண்ட ஜடையுடன் சென்று கொண்டிருக்க, அவசரமாக அவர்கள் செல்லும் திசையை கணித்து வேகமாக மாற்றுவழியில் சென்று அவர்கள் எதிரில் வர, அந்த இரண்டு பெண்களில் ஒருத்தியுமே அவனவள் இல்லை..

முகத்தில் ஏமாற்றம் தவழ, ஒரு கையை பாக்கெட்டில் விட்டவாறு மற்றொரு கையை தன் தலையை பின்னால் கோதியவாறு அந்த பெண்களை கடந்து செல்ல, அந்த பெண்களில் ஒருத்தி இவனை அடையாளம் கண்டு கொண்டு

“ஹலோ ரிஷி சார்... “ என்று கீச்சிட்டாள் ஒருத்தி...

ரிஷியும் தன் நடையை நிறுத்தி கொண்டு திரும்பி அவர்களை பார்த்து புன்னகைக்க அந்த பெண்களோ மயங்கி விழாத குறைதான்..

வேகமாக அவனிடம் ஓடி வந்தவர்கள்

“ரிஷி சார்.... நாங்க உங்களுடைய ஃபேன்.. காலையில் உங்களுடை ஸ்பீச் செம சார்... எங்களுக்கே சொந்தமா ஒரு ஸ்டார்ட்அப் ஐ ஆரம்பிக்க வேண்டும் போல இருந்தது...

ப்ளீஸ் சார்.. இதுல ஒரு ஆட்டோக்ராப் போடுங்க.... “ என்று அவசரமாக கையில் வைத்திருந்த நோட்புக் ஐ நீட்ட, ரிஷியும் திகைத்து விழித்து அதெல்லாம் வேண்டாம் என்று சொல்லி மறுத்து புன்னகைக்க, அவர்களோ விடாமல் கெஞ்ச, அவனும் சிரித்தவாறு அவர்களுக்கு ஆட்டோக்ராப்  ஐ போட்டவன்

“உங்களுக்கு என்ன ஹெல்ப் வேணும்னாலும் என்னை கான்டாக்ட் பண்ணுங்க....ஆல் தி பெஸ்ட்.. “ என்று பளீரென்று வெண் பற்கள் பளிச்சிட புன்னகைத்தவன் அவர்களிடம் இருந்து நழுவி சென்றான்..

அந்த பெண்களோ இமைக்க மறந்து அவன் செல்வதையே பார்த்து கொண்டிருந்தனர்_..

“வாவ்..! செம ஹேண்ட்சம் டீ... என்ன ஒரு சார்மிங்..! நம்ம சினிமால வர்ற ஹீரோ எல்லாம் இவர் முன்னாடி ஜீரோதான்.. இவருக்கு  பொண்டாட்டியா வரப்போறவ கொடுத்து வச்சிருக்கணும்.. ஹ்ம்ம்ம் யாருக்கு கொடுத்து வச்சிருக்க்கோ... “ என்று  பெருமூச்சை விட்டு நகர்ந்து சென்றனர்..

******

ங்கிருந்து வேகமாக  நடந்தவன் நேராக அந்த பல்கலைகழகத்தின்  அலுவலகத்தை அடைந்தான்...

அந்த கட்டிடத்தின் பெயரை சொல்லி

“அங்கு யாரெல்லாம் வருவார்கள்...?  எந்த டிபார்ட்மெண்ட் உடையது அந்த பில்டிங்.? லேடி புரபெசர்ஸ் யாராவது அங்கு வருவார்களா?   என்று அவசரமாக விசாரித்தான்..

“இல்ல சார்.. அது பொதுவா கான்ப்ரன்ஸ் நடைபெறும் கட்டிடம்..பல கான்ப்ரென்ஸ் ரூம்கள் இருக்கின்றன... எந்த டிபார்ட்மெண்ட்க்குனு ஸ்பெசிபிக் ஆ இல்ல..  இன்று  மட்டுமே அந்த பில்டிங் ல் நிறைய கான்ப்ரென்ஸ் நடந்தது.. “ என்றார் அந்த அலுவலர்..

“அதில் கலந்து கொண்டவர்களின் டீடெய்ல்ஸ் வித் போட்டோ கிடைக்குமா? “ என்றான் ஆர்வமாக..

ரிஷியை பற்றி தெரிந்திருந்தவர் அந்த அலுவலர்..பெரிய பிசினஸ் மேன் தானாக வந்து சில விவரங்களை கேட்க அதில் வியப்படைந்தவர்

“சார்... நீங்க என்ன விசயமா இந்த டீடெய்ல்ஸ் கேட்கறீங்கனு தெரிந்தால் உங்களுக்கு உதவ வசதியா இருக்கும்... “ என்று இழுத்தார் தயக்கத்துடன்..

“அது வந்து.... எனக்கு தெரிந்த பொண்ணு அந்த பில்டிங் பக்கத்துல பார்த்தேன்... ஆனால் அவளை சந்திக்கும் முன் மறைந்துவிட்டாள்.. ரொம்ப வேண்டபட்ட பெண்.. அதான் அவளை பற்றிய தகவல் தெரியுமானு விசாரிக்கிறேன்..” என்றான் மிடுக்குடன்..

“சார் அந்த பொண்ணு பெயர் தெரியுமா? “ என்றார் யோசனையுடன்...

“ம்ஹூம்  தெரியாது.. சும்மா ஒரு பிசினஸ் கான்ப்ரென்ஸில் பார்த்தேன்.. மீண்டும் இப்பொழுது பார்க்கிறேன்.. “ என்றான் கொஞ்சம் தயக்கத்துடன்..

“ஹ்ம்ம்ம் அப்ப கொஞ்சம் கஷ்டம் சார்.. நம்ம கேம்பஸ் பொண்ணா இருந்தால் அங்கு நடைபெற்ற கான்ப்ரன்ஸில் கலந்து கொண்ட பெண்களின் விவரத்தை போட்டோ உடன் கொடுக்க முடியும்..

ஆனால் நீங்க  தேடும்  பெண் வேற ஒரு கல்லூரியை சேர்ந்தவளாக இருந்து இன்று கான்ப்ரென்ஸ்க்காக வந்திருந்தால் தேடுவது கஷ்டம் சார்..

அட்லீஸ்ட் அவங்க பெயராவது தெரிந்தால் கல்லூரியில் ஸ்டூடண்ட்ஸ் லிஸ்ட் ல் தேடி பார்க்கலாம்..இன்று அந்த பில்டிங் ல் நடந்த கான்ப்ரென்களில் கலந்து கொண்ட பெண்களில் நீங்கள் தேடும் பெண்ணின் பெயரை வைத்து தேடி பார்க்கலாம்..

ஆனால் பெயர் தெரியாமல் தேடுவது கஷ்டம் சார்..வேணும்னா அதில் கலந்து கொண்ட நம்ம கல்லூரி பெண்களின் விவரத்தை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.. அதில் தேடி பாருங்கள் சார்.. “  என்று கையை விரித்தார்..   

ரிஷிக்கோ கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலை ஆகிப் போனது..

கெட்டதுலயும் ஒரு நல்லது அவள் இந்த காலேஜ்ல் தான் இருக்கிறாள் என்று மனம் அடித்து சொல்லியது....

அலுவலகத்தில் இருந்து கிளம்பி தன் காரை அடைந்தவன் கதவை திறந்து கொண்டு ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தவன் தன் தோளின் மீது வந்து விழுந்திருந்த அந்த சிறிய மல்லிகை சரத்தை பத்திரமாக தன் பேன்ட் பாக்கெட்டில் வைத்திருக்க,  அதை எடுத்து இப்பொழுது முகர்ந்து பார்த்தான்...

அந்த மல்லிகையின் வாசத்தோடு அவனவளின் வாசமும் கலந்தே அந்த பூவில் இருந்து வந்தது..

கன்பார்ம் ஆ இது அவளுடையதுதான் என துள்ளி குதித்தது அவன் மனம்..

மீண்டும் அந்த கட்டிடத்தில் சிரித்த படி வந்த பெண்களின் நினைவு வர, அந்த கும்பலில் ஒருத்திதான் அவனவள்.. அதெல்லாம் காலேஜ் ஸ்டூடன்ட்ஸ் ஆச்சே... என்று அவசரமாக யோசித்தவன்

“அப்படி என்றால் என்னவள் ஒரு காலேஜ் கோயிங் கேர்ள் ஆ? கன்பார்ம் ஆ அந்த கும்பலில் வந்த பெண்கள் எல்லாமே மாணவிகள்..அப்படி இருக்க அவளும் மாணவிதான்.. அச்சோ அவ்வளவு சின்னவளா?

இந்த விவா அவள் ஒரு எம்ப்ளாயி என்றல்லவா எல்லா அலுவலகத்திலும், டான்ஸ் ஸ்கூல் டீச்சர் லிஸ்டிலும்  தேடி கொண்டிருக்கிறான்..

பார்த்தால் கல்லூரியில் மாணவியாக இருக்கிறாளே...!

ஒரு சின்ன பெண்ணிடமா நான் காதல் வயபட்டிருக்கிறேன்..? என்று  யோசிக்க அவனை நினைத்து அவனுக்கே வெட்கமாக இருந்தது..

அவசரமாக இருவருக்குமான வயது வித்தியாசத்தை  கணக்கிட்டு பார்த்தான்.. அவளுக்கு எப்படியும் ஒரு 22 வயது இருக்கும்..அவனுக்கு இப்பொழுது 29.. அப்படி என்றால் வயது வித்தியாசம் ஏழு வருசம்தான்.. பரவாயில்லை அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்.. “ என்று தன்னைத்தானே சமாதானம் படுத்தி கொண்டவன்

“ஆனாலும் ரிஷி..  நீ ரொம்ப மோசம்டா... இப்படி ஒரு குட்டிப் பொண்ணை போய் லவ் பண்ணி தொலச்சிருக்கியே...! “  என்று வெட்கத்துடன் சிரித்து கொண்டு தன் அலைபேசியை எடுத்து விவேக் ஐ அழைத்தான்..

ஹாய் விவா.. " என்று  உற்சாகத்துடன் ஆரம்பிக்க, அவன் குரலில் இருந்த உற்சாகத்தை கண்டு கொண்ட விவேக்

"பாஸ்..! என்ன செம மூட்ல இருக்கிங்க போல.!. எனக்கு வேலை வைக்காமல் நீங்களே மேடம் ஐ கண்டுபுடிச்சிட்டிங்களா? அது தப்பாச்சே..!! " என்று உற்சாகமாக ஆர்மபித்தான் விவேக்..

“ஹா ஹா ஹா.. கிட்டதட்ட கண்டுபுடிச்ச மாதிரிதான்... அவள் இருக்கும் இடம் தெரிந்துவிட்டது விவா.. " என்று துள்ளி குதித்தான் ரிஷி..

“வாவ்..! சூப்பர் பாஸ்.. எங்க இருக்காங்க...? எப்படி கண்டுபுடிச்சீங்க? " என்றான் ஆர்வமாக..

"ஹா ஹா ஹா வெய்ட் வெய்ட் மேன்... அவள் இருக்கும் இடம் தெரிந்து விட்டது என்றுதான் சொல்லி இருக்கிறேன்.. இன்னும் அவளை கண்டுபிடிக்கவில்லை..”  

"ப்ச்.. போங்க பாஸ்.. அதுக்குள்ள ஆசைய காட்டி மோசம் பண்ணிட்டிங்களே.. சரி சொல்லுங்க.. எங்க இருக்காங்க? " என்றான் ஆர்வமாக

“அண்ணா யுனிவர்சிட்டியில... "

"வாட்?   அண்ணா யுனிவர்சிட்டியிலயா? அங்க டான்ஸ் டீச்சரா இருக்காங்களா? அங்க டான்ஸ் சொல்லித்தர்ற மாதிரி தெரியலையே !!”  என்று தன் தாடையில் கை வைத்து யோசித்தான் விவேக்..

“ஹா ஹா ஹா அவ ஒன்னும் டான்ஸ் டீச்சர் இல்ல விவா.. “.

"பின்ன?  புரபெசரா? "

"ம்ஹும் அதுவும் இல்ல... அவ ஒரு ஸ்டூடண்ட்... " என்றான் வெட்க பட்டு சிரித்தவாறு

"வாட்..?  என்ன பாஸ் சொல்றீங்க? அவ்வளவு சின்ன பொண்ணா? " என்றான் ஆச்சர்யத்துடன்..

"ஆமாம் விவா..எனக்கே இப்பதான் தெரிஞ்சது.. அதுவும் ஒரு கெஸ்தான்.. பட் என் கெஸ் 200% கரெக்ட் ஆதான் இருக்கும்..

நாமளும் காலேஜ் ல தேடாம வேற எங்கயோ தேடிகிட்டிருக்கிறோம்..” என்று சிரித்தான் ரிஷி..

“ஹ்ம்ம் கரெக்ட் பாஸ்.. சரி மேடம் ஐ எங்க பார்த்திங்க.. எப்படி கண்டுபுடிச்சிங்கனு சொல்லுங்க.. ஏதாவது க்ளு கிடைக்குதானு பார்க்கறேன்.. “ என்று கேட்க, ரிஷியும் சற்றுமுன் நடந்ததை அப்படியே சொன்னான்...

அதை கேட்ட விவேக் ஒரு மல்ட்டி மில்லினர் ஒரு பொண்ணுக்காக இப்படி அலைந்து இருக்கிறானே என்று அசந்து போனவன்..

“பாஸ்... நீங்க இங்கும்  அங்கும் ஓடி தேடினத கேட்கறப்ப, மெல்ல திறந்தது கதவு படத்துல மோகன் அமலா வை தேடி அலைஞ்ச மாதிரி இருக்கு பாஸ்... இருங்க ச்விட்சுவேசன் சாங் பாடிக்கறேன் என்றவன்

தேடும் கண் பார்வை தவிக்க...  துடிக்க

சொன்ன வார்த்தை காற்றில் போனதோ

வெறும் மாயமானதோ...

:

:

காண வேண்டும் சீக்கிரம்...  என் காதல் ஓவியம்

வாராமலே என்னாவதோ...  என் ஆசை காவியம்.....

 

என்று அந்த பாடலை ராகமாக பாடினான்..

அதை கேட்டு கடுப்பான ரிஷி

“ஹலோ விவா.. என்னை பார்த்தா உனக்கு காமெடியா இருக்கா? போதும் ஸ்டாப் இட் மேன்..” என்று முறைத்தவன்

“சரி உடனே  நீ எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும்.. இப்ப நேரா இங்க அண்ணா யுனிவர்சிட்டிக்கு வர்ற...

எப்படியும் இங்க இருக்கிற ஸ்டூடன்ட்ஸ் காலேஜ் முடிச்சதும் வெளில வருவாங்கதான.. அதனால் காலேஜ் கேட் ல நின்னுகிட்டு வெளில வர்ற பொண்ணுங்களை எல்லாம் நோட் பண்ணி என் வைஃப் ஐ கண்டுபுடி..

இப்பதான் உன்கிட்ட போட்டோ இருக்கே. அத வச்சு கம்பேர் பண்ணு.. அப்புறம் இன்னொரு க்ளு.. அவ தலைமுடி நீளமா இருக்கும்..

வெளில வர்ற பொண்ணுங்களில் தலை முடி நீளமா ஜடை போட்டுகிட்டு போற பொண்ணுங்களை எல்லாம் பாலோ பண்ணி அதுல யார் போட்டோ மேட்ச் ஆகுது பார்த்து என்னவளை கண்டுபுடி..

என்னால இங்க நின்னு ஒவ்வொரு பொண்ணா பார்த்துகிட்டிருக்க முடியாது..சோ கம் பாஸ்ட்.. அட்லீஸ்ட் டார்கெட் பார் லாங் ஹேர் கேர்ள்.. " என்றான் சிரித்தவாறு...

"அட கணேசா.. இது என்ன சோதனை... ஒவ்வொரு பொண்ணு  பின்னாடி பார்த்து ஜடை நீளமா இருக்கானு பார்த்து சொல்ற வேலையா ஒரு டிடெக்டிவ் செய்யற வேலை..

ஹ்ம்ம்ம் இந்த நெட்டை பாஸ்க்காக,  அவர் காதல் காவியம் அரங்கேற இதை செய்யலாம்.. தப்பில்ல..”  என்று தன்னை தேற்றி கொண்டவன்

“யெஸ் பாஸ்... இப்பயே வர்றேன்.. ஒவ்வொரு பொண்ணா சல்லடை போட்டு சலிச்சு உங்க ரோஜா பொண்ணை கண்டுபுடிச்சிடறேன்..”  என்று சொல்லி போனை அணைத்தவன் அண்ணா யுனிவர்சிட்டியை நோக்கி தன் வண்டியை முறுக்கினான்....

ரிஷியும் எப்படியும் அவளை சீக்கிரம் கண்டுபிடித்து விடலாம் என்ற நம்பிக்கை வந்து விட, ஒரு வித உற்சாகத்துடன் தன் காரை ஸ்டார்ட் பண்ணி உல்லாசமாக விசில் அடித்தபடி தன் அலுவலகத்தை நோக்கி காரை ஓட்டி சென்றான்..

ன்று மாலை எல்லா அலுவலக வேலைகளையும் முடித்துவிட்டு விவேக் ஐ அழைத்தான் ரிஷி..

“பாஸ்... நீங்க சொன்ன மாதிரியே கேட் ல நின்னுகிட்டு உள்ள இருந்து வெளில வந்த பொண்ணுங்களை எல்லாம் அலசி பார்த்துட்டேன் பாஸ்.. ஆனால் யாருமே போட்டோல இருக்கிற மாதிரி இல்லை...

சில பொண்ணுங்க கொஞ்சம் ஒத்து வந்த மாதிரி இருந்தது.. அவங்களை மறித்து லண்டன் போனிங்களானு கேட்டா லண்டனா அது எங்க இருக்கு அப்படீங்குதுங்க !   

பாஸ்..ஒரு வேளை இந்த போட்டோல மேடம் புல் மேக்கப் ல இருக்காங்க..அதனால் என்னால சரியா கண்டு பிடிக்க முடியலையா? இதுக்கும் நீங்க சொன்ன மாதிரி நீள ஜடை பொண்ணுங்களா தேடி பார்த்தேன் பாஸ்..

ஒருவேளை நான் விசாரிக்கிறது தெரிந்து மேடம் ஆள்மாறி லண்டன் போய்ட்டு வந்த  பயத்துல  வேணும்னே உண்மையை சொல்லாமல் மறைத்து விட்டால் ? “ என்றான் சந்தேகமாக..

“டேய் விவா.. அப்படி அவள்தான் என்று உண்மையை ஒத்துக்கொள்ளாமல் மறைத்தால் அவள் மறைக்க  தடுமாறுவதிலயே நீ கண்டு கொள்ளலாம்.. என் பொண்டாட்டிக்கு அப்படி எல்லாம் பொய் சொல்ல வராது..

போட்டோவுடன் ஒத்து போவதில் எந்த பெண் தடுமாறுகிறாளோ அவளை புடி முதல்ல..நாளைக்கு காலையிலயும் போய் அங்க நில்.. கரெக்ட் ஆ வாட்ச்  பண்ணனும்..  “ என்று கட்டளை இட்டு போனை வைத்தான் ரிஷி...

விவேக் ம் அடுத்து வந்த ஒரு வாரம் காலையிலும் மாலையிலும் அந்த கல்லூரியின் வாசலில் நின்று போகும் வரும் பெண்களை எல்லாம் நோட்டம் விட்டு கொண்டிருக்க, சில பெண்களை சந்தேகித்து மறித்து விசாரிக்க பலன்தான் பூச்சியமாக இருந்தது.. .

“பாஸ்.. இது சுத்த வேஸ்ட் பாஸ்.. “ என்று புலம்பினான் விவேக்..

“எனக்கு என்னவோ அவங்க வேற காலேஜ்ல இருந்து இங்கு வந்தவங்களா இருக்கும் பாஸ்..”  என்று வாய் தவறி உளறி விட,

“அப்படி என்றால் அன்று எந்தெந்த கல்லூரியில் இருந்து அண்ணா யுனிவர்சிட்டிக்கு ஸ்டூடண்ட்ஸ் வந்தார்களோ அந்த லிஸ்ட் ஐ எடுத்து அந்த காலேஜ் க்கு நேரா போய் அங்க வாட்ச் பண்ணு..

வேணும்னா உனக்கு துணைக்கு வேற அசிஸ்டென்ட்களை வைத்து கொள்..எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை.. ஒவ்வொரு காலேஜ்லயும் ஒருத்தனை நிக்க வைத்து அந்த போட்டோவை கொடுத்து வாட்ச் பண்ண சொல்.. 

எனக்கு என் ரோஜாபொண்ணை சீக்கிரம் கண்டுபிடிக்கவேண்டும்.. ஐ கான்ட் வெய்ட் எனி மோர்..என்ன புரிஞ்சுதா ? “ என்று கடுமையாக சொல்லி வைத்தான் ரிஷி..

விவேக் ம் அதில் கடுப்பானவன்

“சே.... ஒவ்வொரு காலேஜ் ஆ போய் ஒவ்வொரு பொம்பள புள்ளையா பார்த்து தேடணும்...! இப்படி ஒரு பொழப்பு தேவையா? என் நல்ல காலம் இதுவரைக்கும் அந்த செக்யூரிட்டி என்னை சந்தேகமா பார்க்கல.. இனிமேலும் போய் நின்னா என்னை நிஜ போலிஸ்கிட்டயே புடிச்சு கொடுத்துவாங்க...

இவ்வளவு தூரம் வந்து இன்னும் அந்த பொண்ணை கண்டுபிடிக்க முடியலையே... எங்க மிஸ் பண்றேன் ? என்று புலம்பி கொண்டே தனக்கு தெரிந்த இன்னும் ரெண்டு நண்பர்களை அழைத்து கொண்டு மற்ற கல்லூரிகளின் வாசலிலும் தவம் இருந்து நீண்ட ஜடை உள்ளே பெண்களை தேடி பிடித்து போட்டோவை மேட்ச் பண்ணி பார்த்து விசாரித்து வந்தனர்..

கிடைத்து விடுவாளா அவன் ரோஜா பொண்ணு ..?


Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!