தேடும் கண் பார்வை தவிக்க-32
அத்தியாயம்-32
அதற்கு அடுத்து
ஒரு வாரமும் கடந்து இருந்தது..மற்ற கல்லூரிகளிலும் தேடி பார்த்து விட்டனர்..
அதே போல அன்று
ரிஷி கேட்டு கொண்டதற்காக அன்று கான்ப்ரன்ஸ் நடைபெற்ற பொழுது கலந்து கொண்ட அந்த
கல்லூரியின் பெண்கள் விவரங்கள் போட்டோவுடன் அந்த அலுவலரிடம் வாங்கி அதிலும் தேடி
பார்க்க, அதிலும் அந்த பெண் இல்லை..
அடுத்த வாரமும் எந்த
முன்னேற்றமும் இல்லை..
செய்தித்தாள்
வாட்ஸ்அப் விளம்பரங்களுக்கும் பலன் இல்லை.. ரிஷியோ இவ்வளவு நாள் பொறுமையாக இருந்தவன்
இப்பொழுது விவேக் இடம் எகிற ஆரம்பித்தான்...
சீக்கிரம்
கண்டுபிடிக்க சொல்லி நெருக்கடி கொடுத்தான்..விவேக் கிற்கு அடுத்து என்ன செய்வது
என்று தெரியாமல் குழம்பி போனான்...
அன்று காலை எட்டு
மணி அளவில் மீண்டும் அண்ணா யுனிவர்சிட்டிக்கு செல்வதற்காக சென்று கொண்டிருந்தான்
விவேக்..
அப்பொழுது ஒரு
ட்ராபிக் சிக்னலில் அவனுடைய இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு சிக்னல் லைட் ஐ
பார்த்து கொண்டிருக்க அப்பொழுது அவன் அருகில் ஒரு ஸ்கூட்டி வந்து நின்றது...
கைகளுக்கு உறை
அணிந்து முகத்துக்கும் துணியை சுற்றி இருக்க,
தலையில் ஹெல்மெட் மாட்டி இருக்க, அந்த பெண்ணை கண்டதும் விவேக் ன் முகம்
மலர்ந்தது..
அவள் முகத்தை
பார்க்காமலே யாரென்று கண்டு கொள்ள, தன் தலையில் இருந்த ஹெல்மெட் ஐ கழற்றியவன்
அருகில் இருந்த ஸ்கூட்டி பெண்ணின் முன்னால் கை நீட்டி சொடக்கு போட, அவளும் விவேக் ஐ அடையாளம் கண்டு கொண்டு தன் ஹெல்மெட்டை கழற்றியவள்
“ஹலோ நாட் நாட்
செவன்.. எப்படி இருக்கீங்க? இங்க என்ன பண்றீங்க? என்றாள் ரோஜா சிரித்தவாறு..
“ஹலோ ரெட் ரோஸ்...
ஐம் பைன்.. நீங்க எப்படி இருக்கீங்க? “ என்று விசாரிக்க,
அவளும் நன்றாக இருப்பதாக பதில் சொன்னாள்..
அதற்குள் க்ரீன்
சிக்னல் வந்துவிட, அவளை சிக்னல் தாண்டி ஓரமாக நிற்குமாறு
சொல்லிவிட்டு இருவரும் வண்டியை கிளப்பி சென்றனர்..
சிக்னல் தாண்டி
கொஞ்ச தூரம் சென்றதும் சாலையின் ஓரமாக ஒரு இளநீர் கடை இருக்க, வண்டியை அதன் அருகில் நிறுத்திய விவேக் ரோஜாவையும் அங்கு நிறுத்த
சொன்னான்..
அவளும் வண்டியை
நிறுத்திவிட்டு வர,
“ரோஸ்.. வா
வெய்யிலுக்கு ஒரு இளநீர் சாப்பிடலாம்..” என்று அழைத்தான்..
அவளும்
புன்னகைத்து ஓரமாக இருந்த கடைக்கு அருகில் சென்று நின்று கொண்டவள்
“அப்புறம் எப்படி
போய் கிட்டிருக்கு உங்க இன்வெஸ்டிகேசன்? அந்த சின்ன
ரோஜா பொண்ணை கண்டுபுடிச்சிட்டிங்களா? “ என்றாள் சிரித்தவாறு..
“இந்த நக்கல் தான
வேண்டாம்கிறது.. நான்தான் டெய்லியும் உனக்கு போன் பண்ணி வேற ஏதாவது ஞாபகம் வந்ததானு
கேட்டுகிட்டிருக்கேன்..அப்ப கேஸ் எப்படி போகுதுனு தெரியாதாக்கும்.. “ என்றான்
ரோஜாவை முறைத்தவாறு
“ஹா ஹா ஹா போன
ஒரு வாரமா உங்க போனை காணோமா? அதுதான் ஒருவேளை அந்த பொண்ணை
கண்டுபுடிச்சிட்டிகளோனு நினைச்சேன்.. “ என்று சிரித்தாள் ரோஜா...
“ம்ம்ம்ஹூம்..
என்னத்த கண்டுபிடிக்கிறது? ஆங் சொல்ல மறந்துட்டனே.. இப்ப புதுசா
ஒரு க்ளு கிடைச்சிருக்கு.. அந்த பொண்ணு ஒரு ஸ்டூடண்ட்.. அண்ணா யுனிவர்சிட்டில
படிக்கலாம்.. இல்லைனா வேற காலேஜ் ல படிக்கிற அண்ணா யுனிவர்சிட்டிக்கு கான்ப்ரென்ஸ்
க்காக வந்திருக்காங்க....
அப்புறம் அவங்க
ஜடை நீளமா இருக்கும்.. நாங்களும் நீண்ட ஜடை இருக்கிற பொண்ணா வலை போட்டு
தேடிகிட்டிருக்கிறோம்..இன்னும் மாட்ட மாட்டேங்குது... “ என்று அலுத்து கொண்டான்..
“ஓ யா... நான்
கூட நோட் பண்ணி இருந்தேன்.. அந்த பொண்ணுக்கு ஜடை நீளம்தான்.. “
ஆமா இப்ப
சொல்லுங்க அன்னைக்கு கேட்டப்போ எதுவும் தெரியலைன்னு கைய விரிச்ச.. “ என்று சலித்துக் கொண்டான் விவேக்..
“சாரி யா... இதெல்லாமா
ஒரு க்ளூவா சொல்லுவாங்க.. அதைவிட அப்ப இதெல்லாம் எனக்கு ஸ்ட்ரைக் ஆகவே இல்ல.. “ என்றாள்
வருத்தமாக..
“இட்ஸ் ஓகே... அப்ப
நீங்க சொல்லியிருந்தாலும் இந்த சென்னை முழுவதும் நீளமான ஜடை இருக்கிற பொண்ணா தேடி
இருக்கணும்..
அப்படி இல்லன்னா
மிஸ் சென்னை மாதிரி மிஸ் நீண்ட ஜடை னு ஒரு போட்டி வைச்சுத்தான் கண்டுபிடிக்க முடியும்.. “ என்று மீண்டும் சலித்துக் கொண்டே சொல்ல ரோஜாவும்
வாய்விட்டு குலுங்கி சிரித்தாள்...
அதை கண்ட விவேக்
ஒரு நொடி அசந்து போய் தன்னையும் மறந்து அவளையே இமைக்க மறந்து ரசித்தான்...
அதற்குள் அவளுடைய அலைபேசி ஒலிக்க அதுவரை பொங்கி சிரித்தவள்
இப்பொழுது கன்னங்கள் சிவக்க உதட்டில்
குறுநகை தவழ உடனே அந்த அலைபேசியின் அழைப்பை ஏற்று காதில் வைத்தவள்
“சொல்லு சது.....
“ என்று கொஞ்சி பேசினாள்...
அவள் கையை
நீட்டி ஆக்சன் உடன் பேச அவள் பேசுவதற்கு
தகுந்தார் போல் அவளுடைய காதணிகள் அசைந்தாட அவளையே இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தான்
விவேக்..
அதைக் கண்டு
கொண்ட ரோஜா அலைபேசியில் பேசியவாறு தன் புருவத்தை உயர்த்தி
“என்ன லுக்கு? “ என்று
பார்வையால் வினவினாள்..
அவனும் அதற்குள்
தன்னை சமாளித்து கொண்டவன் லேசாக வெட்கப்பட்டு சிரித்து தன் பார்வையை மாற்றிக் கொண்டு
இளநீர் விற்பவரை கவனிக்க ஆரம்பித்தான்...
அவனுக்கு
முன்னால் இருந்த கஸ்டமருக்கு இளநி யை லாவகமாக வெட்டிக் கொடுத்தவர் அடுத்து நின்றிருந்த விவேக்கை பார்த்தவர்
“எத்தனை சார்
வேணும்? “ என்று கேட்டார்
விவேக் ம்
“இரண்டு கொடுங்க
ணே... நல்லா நிறைய தண்ணி இருக்கிறதா வெட்டுங்க..”
என்று சிரித்தான்..
“இது பொள்ளாச்சி
காய் சார்.. தண்ணி நிறையவே இருக்கும்... டேஸ்டாவும் இருக்கும்.. “ என்று
சிரித்தவாறு ஒரு காயை எடுத்து சீவ, அருகில் நின்று கொண்டு போன் பேசி
கொண்டிருந்த ரோஜாவின் கண்கள் விரிந்தன...
“சது.. நான்
அப்புறம் கூப்பிடறேன்.. “ என்று சொல்லி அவசரமாக தன் போனை அணைத்தவள் வேகமாக அந்த
இளநி காரரிடம் ஓடி வந்தவள்
“அண்ணே... இப்ப
என்ன ஊர் பேர் சொன்னிங்க? “ என்றாள் பதட்டமாக...
“பொள்ளாச்சினு
சொன்னேன் மா... ஏம்மா கேட்கற? “ என்றார் சந்தேகமாக...
“யெஸ்...” என்று கையை மடக்கி குதித்தவள்
“விவா.... அந்த
பொண்ணு இந்த ஊர் பெயர்தான் சொல்லுச்சு.. யெஸ்... பொள்ளாச்சி பக்கம் ஒரு கிராமம் னுதான்
சொல்லுச்சு.. கண்டிப்பா பொள்ளாச்சி பக்கம் போய் விசாரிச்சிங்கனா
கண்டுபுடிச்சிடலாம்... “ என்று துள்ளி குதித்தாள்..
விவேக் ஓ
அதிர்ச்சியில் வார்த்தை வராமல் திகைத்து நின்றவன் ஒருவாறு சமாளித்து கொண்டு
“ஆர் யூ ஸ்யூர்
ரோஜா? “ என்றான் சந்தேகமாக..
“யெஸ்.. யெஸ்
200 % ஸ்யூர்.. இந்த பெயர் எனக்கு மறந்து போச்சு.. இந்த அண்ணன் சொல்லவும் இப்ப
எனக்கு ஞாபகம் வந்திடுச்சு.. இந்த ஊர்தான்... “ என்று துள்ளி குதித்தாள்...
உடனே அவனும்
துள்ளி குதித்து அவள் கையை பற்றி குலுக்கி
“வாவ்..சூப்பர்...
உண்மையிலயே நீ ரூபலாதான்... தேங்க்யூ சோ
மச் ரூப்ஸ்.. இது போதும்.. இதை வைத்தே ஈசியா கண்டுபிடித்திடலாம்.. பொள்ளாச்சி கூட
போக தேவையில்லை.. அண்ணா யுனிவர்சிட்டியிலயே பொள்ளாச்சி பக்கம் இருந்து ஜாய்ன்
பண்ணி இருக்கிற பொண்ணுங்க லிஸ்ட் எடுத்தா போதும்..
தேங்க்யூ சோ
மச்.. “ என்று உற்சாக மிகுதியில் அவளை கட்டி அணைத்து விடுவித்தான்..
அதை கண்ட ரோஜா
விக்கித்து போய் நின்றிருக்க, அப்பொழுதுதான் அவன் செய்தது உறைக்க
“ஓ.. ரியலி சாரி
ரோஸ்.. ஏதோ உணர்ச்சி வசப்பட்டதுல நீ என் ப்ரெண்ட் னு நினைச்சு............. ஐம்
சாரி.. “ என்றான் சங்கோஜத்துடன்..
“இட்ஸ் ஓகே.
விவா... நீங்க புரசீட் பண்ணுங்க.. “ என்று சிரித்தவள் அந்த கடைக்காரர் கொடுத்த
இளநீரை வாங்கி குடிக்க ஆரம்பித்தாள்..
விவேக் ஓ ரிஷியை
உடனே அழைத்து விவரத்தை சொல்ல அவனுமே துள்ளி குதித்தான்..
உடனே அவனாகவே அண்ணா
யுனிவர்சிட்டி அலுவலகத்துக்கு போன் அடித்து வேண்டிய தகவலை எடுத்து வைக்க
சொல்லிவிட்டு விவேக் ஐ போய் நேரடியாக கலெக்ட் பண்ணிகொண்டு அவனை அழைக்க சொல்லி
வைத்தான்..
விவேக் ம் அலைபேசியை
அணைத்தவன் ரோஜாவை பார்த்து
“ஓகே ரோஸ்..
நான் அர்ஜென்ட் ஆ கிளம்பணும்.. இந்த என்னுடைய இளநீரையும் நீயே குடிச்சுக்கோ.. “
என்றவன் பர்ஸை திறந்து பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு அண்ணா யுனிவர்சிட்டியை
நோக்கி தன் பைக் ஐ விரட்டினான்..
அங்கு சென்றதும்
நேராக அலுவலகத்திற்கு செல்ல அவனுக்காகவே சில தகவல்களை எடுத்து வைத்திருந்தார் அந்த
அலுவலர்..
பொள்ளாச்சி
அருகிலிருந்து அங்கு சேர்ந்திருக்கும் அனைத்து பிரிவு மற்றும் அனைத்து வருட
மாணவிகளின் விவரங்களையும் அவர்களுடைய முகவரியையும் எடுத்து வைத்திருக்க அவசரமாக அதை
வாங்கி கொண்ட விவேக் அதில் இருந்த ஒவ்வொரு
கான்டாக்ட் எண்ணிற்கும் அழைத்து விசாரித்தான்..
அதில் டான்ஸ்
யாருக்கு தெரியும் என்று விசாரிக்க எல்லாருமே தங்களுக்கு தெரியாது என்று கையை
விரித்து விட்டனர்..
கடைசியாக இருந்த
ஒரு எண் மட்டும் நாட் ரீச்சபில் என்று வந்தது..
உடனே விவேக்
அந்த அட்ரஸ்க்கு நேராக சென்று பார்க்க, வழக்கம் போல
அந்த அட்ரஸில் இருந்து வேறு இடத்திற்கு மாறி இருந்தாள் அந்த பெண்..
அக்கம் பக்கம்
விசாரிக்க யாரும் அவ்வளவாக விவரம் சொல்லவில்லை.. எந்த அட்ரஸ்க்கு மாறினார்கள் என்ற
தகவலும் இல்லை..
உடனே மனம்
தளராமல் அடுத்த ப்ளைட் புடித்து கோயம்புத்தூர் பறந்தான் விவேக்..
கோயம்புத்தூரில்
இருந்து பொள்ளாச்சிக்கு கேப் புக் பண்ணி அந்த பெண் படித்த பள்ளிக்கு நேராக சென்று
விசாரிக்க அவனுக்கு வேண்டிய தகவல் கிடைத்தது..
அதைக் கண்டு
துள்ளி குதித்தவன் ரிஷியை அழைத்து
"பாஸ்.. இந்த
முறை மிசன் சக்சஸ்.. உங்க உயிரை
கண்டுபிடித்துவிட்டேன்.. “ என்று உற்சாகமாக கூச்சலிட்டான்..
உடனே ரிஷியும்
“விவா.. ஆர் யூ
ஸ்யூர்? .. இந்த முறையும் எதுவும் சொதப்பிடாதே? “ என்றான் நம்பிக்கை இல்லாமல்..
“சே சே.. அப்படி
எல்லாம் இல்ல பாஸ்... இந்த முறை கண்டிப்பா சக்சஸ் தான்.. “ என்றான் கான்பிடன்ட்
உடன்..
"சரி எங்கே
இருக்க? “ என்றான் ரிஷி ஆர்வமாக..
"பொள்ளாச்சியில்
இருக்கிறேன் பாஸ்.. "
"வாட்?? பொள்ளாச்சியிலா? அங்க எப்ப மேன் போன? " என்றான் ஆச்சர்யமாக
“அதெல்லாம்
அப்புறம் விவரமா சொல்றேன் பாஸ்.. இப்ப மேடம் இருக்கிற அட்ரஸ் ஐ
கண்டுபுடிச்சிட்டேன்..நான் இப்ப மேடம் படிச்ச ஸ்கூல் லதான் இருக்கிறேன்...
இந்த ஸ்கூல் ஹெட்மாஸ்டர்க்கும் மேடம் வேண்டியவங்களாம்..
சென்ற வாரம் அவர் சென்னை வந்தப்ப மேடம் வீட்டுக்கு சென்று அவங்களை பார்த்து விட்டுத்தான் வந்திருக்கிறார்....
அன்ட் மேடம்
போட்டோவை காட்டி அவங்கதான் இவங்க னு கன்பார்ம் பண்ணிகிட்டேன்..
அதனால்
கண்டிப்பா இது தான் பைனல் அட்ரஸ் பாஸ்.. " என்றான் நிம்மதியுடன்..
“வாவ்....சூப்பர்..
எக்சலன்ட் வொண்டர்புல் விவா... நீதான்
பெஸ்ட் டிடெக்டிவ்...” என்று ரிஷி துள்ளி
குதித்து சிரித்தான்...
“விவா..
அப்படீனா நாம கொடுத்த ந்யூஸ் பேப்பர் ஆட் க்கு ஏன் அவர் உன்னை தொடர்பு
கொள்ளவில்லையாம்? “ என்றான் ரிஷி சந்தேகமாக..
அவர் நேரடியாக
விவேக் ஐ அழைத்து விவரம் சொல்லி இருந்தால் இத்தனை நாட்களை விரயம் செய்திருக்க தேவை
இல்லை என்று இருந்தது ரிஷிக்கு...
“ஹ்ம்ம் நானும்
அதைத்தான் முதல்ல அவரிடம் கேட்டேன் பாஸ்.. ஆனால் அந்த புகைப்படத்தில் மேடம்
நாட்டிய உடையில் இருந்ததால் அவருக்கு அவங்கதானா என்று சந்தேகமாக இருந்ததாம்..
கூடவே நாம்
அவங்க பெயர் எதுவும் போடாததால் ஏதாவது வில்லங்கமாகி விட்டால் என்ன செய்வது என்று
யோசித்து அவர் எதுக்கு வம்பு என்று நம்மை தொடர்பு கொள்ள வில்லையாம் பாஸ்..
மேடம்கிட்டயும்
இந்த விளம்பரத்தை பத்தி எதுவும் சொல்லவில்லையாம்..
எனக்கு என்னவோ
இதே காரணத்துக்காகவே மற்றவர்களும் நம்ம விளம்பரத்தை சந்தேகமாக யூகித்து எதுக்கு
வம்பு என்று விட்டு விட்டிருப்பார்கள்..
எப்படியோ ரூபலா
உதவியினால இப்ப மேடம் ஐ கண்டு பிடித்து விட்டோம்...” என்று விவேக் சொல்லி சிரித்தான்..
“அப்புறம்
பாஸ்.. அந்த ஹச்.எம் க்கு ஏதோ அவசர வேலைனு
உடனே கிளம்பிட்டார்... அதனால மேடம் ஐ பற்றி அதிகமா அவரிடம் விசாரிக்க
முடியவில்லை..அவர் கொடுத்த அட்ரஸில் போய் பாருங்கள் என்று சொல்லிவிட்டு கிளம்பி
சென்றுவிட்டார்...
நான் இப்ப அடுத்த
ப்ளைட்லயே கிளம்பி சென்னை வர்றேன்.. நாம இரண்டு பேரும் போய் அந்த அட்ரஸில்
பார்க்கலாம்... ஓ.கே பாஸ்.. அப்ப வச்சுடறேன்.. “ என்று தன் அலைபேசியை அணைத்தவன்
உடனே அடுத்த ப்ளைட்லயே மீண்டும் சென்னை வந்து சேர்ந்தான்..
அவனை அழைத்து செல்ல
ரிஷியே ஏர்போர்ட்டிற்கு வந்திருந்தான்...
அவனை கண்டதும் திகைத்து
போன விவேக்
"பாஸ்...
நீங்க எவ்வளவு பெரிய ஆள்.. நீங்க போய் எனக்காக .. " என்று தழுதழுக்க
“ஹே கமான்
மேன்.. நீ எனக்காக எவ்வளவு கஷ்டபடற.. இதெல்லாம் ஒன்னுமில்லை.. சரி வா..சீக்கிரம்
அந்த அட்ரஸில் போய் பார்க்கலாம்.. “ என்று
அவனை காரில் ஏற்றி கொண்டு விவேக் சொன்ன முகவரியை நோக்கி பறந்தனர்...
ஒரு மணி நேரம்
பயணத்திற்கு பிறகு அந்த முகவரியை அடைந்தனர்..
அது ஒரு
அடுக்குமாடி குடியிருப்பு.. சமீபத்தில்தான் புதிதாக கட்டி முடித்திருக்க, சமீபத்தில்தான் அங்கு குடி வந்திருக்கவேண்டும்..
“அதனால்தான் புது
அட்ரஸை இன்னும் காலேஜ் ல் அப்டேட் பண்ணாமல் இருக்கலாம்...கல்லூரியில் கொடுத்திருந்த பழைய
அட்ரசில் இருந்து இங்கு வந்து விட்டனர் போல.. “ என்று எண்ணி கொண்டான் விவேக்..
ரிஷி காரை பார்க்கிங்
ல் நிறுத்திவிட்டு கீழிறங்க, விவேக் ம் கீழிறங்க இருவரும் அந்த
தலைமை ஆசிரியர் கொடுத்த முகவரியில் குறித்திருந்த தளத்தையும் அந்த வீட்டு
எண்ணையும் கண்டு பிடித்து காலிங் பெல்லை அழுத்தினர்...
முதல் முறை கதவு
திறக்காமல் போக மீண்டும் காலிங் பெல்லை அழுத்தினான் விவேக்..
இந்த முறை ஒரு
நடுத்தர வயது பெண்மணி வந்து கதவை திறக்க, வெளியில்
நின்றிருந்தவர்களை பார்த்து புன்னகைத்து பழக்க
தோசத்தில் உள்ள வாங்க என்று அழைத்து சென்றார்...
ரிஷியும் விவேக்
ம் உள்ளே சென்று வரவேற்பறையில் சென்று அமர, அப்பொழுதுதான்
ஞாபகம் வந்தவராக
“மன்னிச்சுக்குங்க..
எங்க ஊர்ல வூட்டுக்கு வர்ற எல்லாரையும் முதல்ல வாங்கனு வூட்டுக்குள்ள கூப்பிடற மாதிரி உங்களையும் உள்ள கூப்டுபுட்டேன்..
உங்களுக்கு யார் வேணும்? யாரை பார்க்கோணும்? " என்று நெளிந்தார் அந்த
பெரியவள்..
ரிஷி படபடக்கும்
இதயத்துடன் அந்த வரவேற்பறையை நோட்டமிட விவேக் தான் மெல்ல பேச ஆரம்பித்தான்..தன்
அலைபேசியில் இருந்த அந்த பெண்ணின்
புகைப்படத்தை எடுத்து காட்டி
“வணக்கம்
ஆன்ட்டி.. நாங்க இவங்களை பார்க்க வந்திருக்கிறோம்.. இவங்க இருக்காங்களா? “ என்று இழுத்தான் தயக்கத்துடன்..
அந்த பெரியவளும்
அவன் அலைபேசியை வாங்கி பார்த்துவிட்டு
“அட.... இது என்
மருமவதான் தம்பி... “ என்று சிரித்தார் வெள்ளந்தியாக.
அதை கேட்டு அவர்
சொல்லிய மருமவ என்றதை கேட்டு அதிர்ந்த விவேக்
“மருமவ னா? “ என்றான் தயக்கத்துடன்...
கிராமங்களில்
அண்ணன் மகள்., தம்பி மகள் இப்படி உறவு முறையில்
மருமகள் என்று அழைப்பது வழக்கம்.. அந்த வகையில் இந்த பெண் இவருக்கு ஏதோ உறவாக இருக்குமோ? என்று தெளிவு படுத்தி கொள்ள கேட்டான்..
“என் மவனுக்கு தான்
தமா பொண்ணை கட்டினது.. “ என்று சிரிக்க அதே நேரம் ரிஷியின்
பார்வை அங்கு சுவற்றில் மாட்டியிருந்த ஒரு புகைப்படத்தின் மீது குத்தி நின்றது...
விவேக் அந்த
பெண்மணி சொல்லியதை ஜீரணித்து கொள்ள முடியாமல் அப்படி என்றால் இந்த பெண் ஏற்கனவே
திருமணம் ஆனவளா? என்று அதிர்ந்து போய் ரிஷியை பார்த்தான்..
ரிஷியின் பார்வையோ
எதிரில் இருந்த புகைப்படத்தில் நிலைத்து நிற்க,
விவேக் ம் ரிஷியின் பார்வையை தொடர்ந்து ரிஷியின் பார்வை சென்ற இடத்தை நோக்க அந்த
புகைப்படத்தில் ஒரு புதுமண தம்பதிகள் மணக்கோலத்தில் அழகாக சிரித்து
கொண்டிருந்தனர்...
அதில் இருந்த
மணப்பெண்ணையே அதிர்ந்து போய் வெறித்து உற்று
பார்த்து கொண்டிருந்தான் ரிஷி..
விவேக் ம் அந்த
புகைப்படத்தில் இருந்த பெண்ணை உற்று பார்க்க அவன் அலைபேசியில் இருந்த
புகைப்படத்துடன் ஒத்து போனது இருவரின் முகமும்...
வீட்டுக்கு
வந்திருந்த இருவரும் அந்த புகைப்படத்தையே உற்று பார்த்து கொண்டிருக்க அதை கண்ட அந்த
பெரியவள் சிரித்தவாறு
"இவ தான் தம்பி
என்ற மருமவ..நீங்க தேடி வந்தவ... பேர் தமயந்தி...பக்கத்துல இருக்கறது அவ புருஷன், என்ற மவன் நளன்.. "
என்று பெருமையுடன் சிரித்தார்...
அதை கேட்டு
விவேக் ம் அவன் மனஸ் ம் நெஞ்சில் கை வைத்து மயக்கம் போட்டு விழுந்தனர்...
ரிஷியோ தலையில்
பெரிய இடி விழுந்ததை போல பூமியே சுற்றுவதை நிறுத்திவிட்டதை போல அதிர்ந்து போய்
அமர்ந்து இருந்தான்.........
Comments
Post a Comment