தேடும் கண் பார்வை தவிக்க-34
அத்தியாயம்-34
ரிஷி, அவளை தயா என்று அழைக்கலாமா என்று கேட்டதுக்கு சரி என்று மீண்டும் தலை
அசைத்தாள் தமயந்தி..!
அதில் கொஞ்சம்
ஆசுவாசமடைந்தவன், அவசரமாக யோசித்து
“அண்ணா
யுனிவர்சிட்டிக்கு வந்திருந்தப்ப உன்னை... உங்களை... பார்த்தேன்...” என்று அவளை
ஒருமையில் அழைப்பதா? மரியாதையோடு அழைப்பதா? என குழம்பியவன் இரண்டையும் சேர்த்து
குழப்பினான்..
“ரிஷி சார்....
நீங்க என்னை ஒருமையிலயே கூப்பிடுங்க.. எனக்கு மரியாதை எல்லாம் வேண்டாம்... “ என்று
சிரித்தாள் தயா..!
அவனும் லேசாக
புன்னகைத்து
“உன்னை
பார்த்ததும் ப்ளைட்ல நாம் மீட் பண்ணின ஞாபகம் வந்தது.. பக்கத்துல இருந்த புரபஸரிடம்
உன்னை காட்டி விசாரிச்சேன்.. அவரும் உன் டிபார்ட்மென்ட் போல..
உன்னை
தெரிந்திருந்தது அவருக்கு.. சரி ஒரு சர்ப்ரைஸ் விசிட் கொடுக்கலாம்னு உன் அட்ரஸ் ஐ
வாங்கி வச்சேன்..
இன்று இந்த
பக்கமாக வர வேண்டிய வேலை இருந்தது... உன்
அட்ரஸ் இந்த பக்கம் என்றதும் பார்த்துவிட்டு போகலாம்னு வந்தேன்...” என்று
கோர்வையாக வாயில் வந்ததை சொல்லி சமாளித்தான் ரிஷி...
“அடப்பாவி
நெட்டை... இந்த புள்ளய தேடறதுக்கு நீ எவ்வளவு அலஞ்ச..! அதைவிட என் பாஸ் விவா
எவ்வளவு அலஞ்சான்.. தினமும் ஒவ்வொரு காலேஜ் வாசல்லயும் நின்னுகிட்டு ஒவ்வொரு பொண்ணா தேடிக் கிட்டிருந்தான்..
அவ்வளவு
கஷ்டபட்டு தேடி கண்டுபுடிச்ச புள்ளய, இப்படி பட்டுனு நீயா தெரிஞ்சுகிட்டேன் னு
சொன்னியே...ஹார்ட் அட்டாக் ஏ வந்திடுச்சு..!
அதை விட பெருசு...
சும்மா எதேச்சையா இந்த புள்ளைய பார்க்க
வந்தியா? இதுதான் இந்த வருசத்தோட க்ரேட் ப்ராடு...உலகமகா
பொய்..!
இந்த புள்ளைய
பார்க்க, உன் வேலையெல்லாம் விட்டுபோட்டு, ஏர்போர்ட் வரைக்கும் வந்து, இந்த விவா வை இழுத்துகிட்டு
ஓடி வந்ததெல்லாம் மறந்திடுச்சாக்கும்... “ என்று முறைத்தது விவா மனஸ்...
விவேக் ம்
ஆச்சர்யமாக ரிஷியை பார்த்து கொண்டிருந்தான்..
“அடேங்கப்பா...
எப்படி கொஞ்சம் கூட தயக்கமே இல்லாமல் அள்ளிவிடறான்.. இதுதான் பெரிய பிசினஸ்மேன்
போல. யாரை எப்படி சமாளிப்பது என்று தெரிந்து வைத்திருக்கிறான்... பெரிய ஆள்தான்..
ஆனாலும் இந்த நெட்டைக்கு
இப்படி ஒரு சோகம் வந்திருக்க வேண்டாம்.. “ என்று உள்ளுக்குள் புலம்பி கொண்டிருந்தான் விவேக்..!
ரிஷி சொன்னதை கேட்ட தமயந்திக்கும் யோசனையாக
இருந்தது..
“நம்மளை பத்தி
தெரிஞ்சு வச்சிருக்கிற, அதுவும் இந்த புது அட்ரஸ் ஐ யாருக்கும்
சொல்லலையே... அப்படி இருக்க என்னை பற்றி சொன்ன அந்த புரபஸர் யாரா இருக்கும்? “ என்று அவசரமாக யோசித்தாள்..
அதற்குள் ரிஷி
தொடர்ந்து
“நீ அண்ணா
யுனிவர்சிட்டில படிக்கிறியா தயா? எந்த வருஷம்? “
என்றான் ஏதாவது பேச வேண்டுமே என்று..
“பி.இ பைனல்
இயர் சார்... “ மீண்டும் வெள்ளையாய் சிரித்தாள் தயா..!
“ஓ.. அப்ப நான்
பார்ட்டிசிபேட் பண்ணின கான்ப்ரன்ஸில் நீயும் இருந்தியா? “
என்றான் ஆர்வமாக..
“ம்ஹூம் இல்ல
சார்....எனக்கு வேலைக்கு போக இன்ட்ரெஸ்ட் இல்ல.. அதனால எந்த கேம்பஸ் செலக்சன்
லயும் கலந்துக்கல.. உங்க கான்ப்ரென்ஸ் லயும் கலந்துக்கல.. “
“அப்புறம் அந்த
பக்கம் உன்னை பார்த்தேனே. ? “ என்றான் யோசனையாக..
“என் ப்ரெண்ட்
ஒருத்தி இன்னைக்கு இரண்டு மூணு கான்ப்ரென்ஸ் அட்டென்ட் பண்ணினா.. அவளை அழைத்து
கொண்டு செல்ல அந்த பக்கம் வந்தேன்..”
என்று மீண்டும்
சிரித்தாள்..
“ஓ.. அதனால்
தான் கான்ப்ரென்ஸ் அட்டென்ட் பண்ணினவங்க லிஸ்ட் ல இவ போட்டோ இல்ல...இல்லை என்றால்
அன்றே கண்டுபிடித்திருக்கலாம். இவ்வளவு அலைச்சல் தேவை இருந்திருக்காது.. ” என்று
யோசித்தவன்
“ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்
இவ்வளவு கஷ்டபட்டு தேடி என்ன புரயோஜனம்... “ என்று உள்ளுக்குள் பெருமூச்சு விட்டான் ரிஷி...!
அதுவரை அமைதியாக
இருந்த விவேக் தமயந்தியை பார்த்து
“சிஸ்டர்.. இவரை
பார்த்துட்டு நீங்க ஏன் அவர்கிட்ட பேசலை? ப்ளைட்ல
அவ்வளவு தூரம் உங்களுக்கு உதவி செஞ்சாரே.. நேர்ல பார்த்து ஒரு நன்றி சொல்றதில்லையா? “ என்றான் மனதுக்குள் இன்னும் சில சந்தேகங்கள் இருக்க..
இதுவரை ரிஷியை
மட்டுமே பார்த்து பேசி கொண்டிருந்தவள் விவேக் இடம் திரும்பி இவன் யார் என்ற தோரணையில்
லுக் விட அப்பொழுதுதான் விவேக் ஐ அறிமுக படுத்தவில்லை என்பது உறைக்க
“இவன் விவா..
விவேக்... என் ப்ரெண்ட்.. “ என்று விவேக்
ஐ அறிமுகபடுத்தினான் ரிஷி..
“ஹாய் சார்.. “
என்று புன்னகைத்தவள்
“ப்ளைட்ல
போனப்போ எனக்கு ரிஷி சார் பற்றி தெரியாது விவா சார்... போன மாசம் என் க்ளாஸ்மேட்
ஒருத்தன் கேம்பஸ் செலக்சனுக்காக பிரிப்பேர் பண்ணிகிட்டிருந்தான்..
அப்ப வர்மா
க்ரூப் ஆம் கம்பெனிஸ் ல அவனுக்கு அப்பாய்ன்ட்மென்ட் கிடைக்கணும்.. அந்த கம்பெனியோட கேம்பஸ் செலக்சன்ல
எப்படியாவது செலக்ட் ஆகிடணும்னு ரொம்ப கனவோட பேசினான்..
மற்றவர்களும்
அந்த கம்பெனியை புகழ்ந்து பேசினாங்க.. எனக்கு வேலைக்கு போக இன்ட்ரெஸ்ட் இல்லாததால்
அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.. அடுத்த நாள் எதேச்சையா என் ஹேன்ட்பாக் ஐ தேட ரிஷி சார்
ஓட விசிட்டிங் கார்ட் கிடைச்சது..
அதை எடுத்து
பார்த்தப்ப அது ரிஷி சார் கொடுத்தது னு தெரிஞ்சது.. அதை படித்து பார்த்தப்ப தான் அவர் வர்மா க்ரூப் ஆம்
கம்பெனிஸ் ஓட எம்.டி னு தெரிஞ்சது..
உடனே நெட்ல தேடி
பார்த்தேன்.. அப்பதான் அவர் எவ்வளவு பெரிய ஆள் னு தெரிஞ்சது..
அப்படிபட்டவர்கிட்டயா
அன்று ப்ளைட்ல அப்படி வாயடிச்சிகிட்டு
வந்தேனு எனக்கு உதற ஆரம்பிச்சிடுச்சு.. நல்ல வேளை ரிஷி சார் அன்று ஜோவியலா எடுத்துகிட்டார்..
அவருடையை
பேக்ரவுண்ட் தெரிஞ்சதுக்கப்புறம் பயம் ஆய்டுச்சு.. கூடவே என் போட்டோவை வாட்ஸ்அப் ல
போட்டு யாரோ என்னை தேடறாங்கனு என் ப்ரண்ட்ஸ் சொன்னாங்க...
அந்த போட்டோ
எனக்கும் வந்தது.. அது நான் லண்டன் ப்ரோக்ராம் ல
டான்ஸ் ஆடின போட்டோ.. அதை வச்சு தேடறாங்கனா?
அப்பதான் நான் ரோஜா அக்கா பேர்ல லண்டன் போனது நினைவு வந்தது..
ஒருவேளை அதை
தெரிஞ்சுதான் என்னை தேடறாங்களோனு பயந்துகிட்டு யார் கிட்டயும் என்னை பற்றி சொல்ல
வேண்டாம்னு சொல்லிட்டேன்..
அதான் அன்னைக்கு
யுனிவர்சிட்டியில சாரை பார்த்தப்ப அவரை சுத்தி எல்லாம் பெரிய பெரிய தலைங்களா
இருந்தாங்க.. நான் சாதாரண ஸ்டூடன்ட்.. நான் போய் எப்படி பேசறதுனு தயக்கம்..
கூடவே நான்
பண்ணின தில்லு முல்லு ஆள் மாறாட்டம் அவருக்கும் தெரிஞ்சிருக்குமே என்று பயந்து கீழ
குனிஞ்சுகிட்டே அவர் கண்ணுல படாம எஸ்கேப் ஆய்ட்டேன்....
ரியலி சாரி
சார்.... நான் அன்னைக்கு அப்படி பண்ணி இருக்க கூடாது.. “ என்றாள் வருத்தமாக..
“இட்ஸ் ஒகே
தயா... “ என்றான் அவள் வருத்தபடுவது தாங்காமல்..
“ஏன் சிஸ்டர்..
நீங்க ஏன் வேலைக்கு போகலைனு சொன்னிங்க.. அப்படி வேலைக்கு போக இஷ்டம் இல்லைனா
எதுக்காக அவ்வளவு பெரிய இன்ஸ்டிடியூட்ல சேரணும்..
நீங்க சேராமல் இருந்திருந்தால், அந்த சீட் வேற யாருக்காவது கிடைச்சிருக்கும்.. அவங்களுக்கு அது
உபயோகமா இருந்திருக்கும் இல்ல..
உங்கள மாதிரிதான்
நிறைய பேர்.. அடுத்தவங்களுக்கு கிடைக்க வேண்டிய ஆப்பர்சுனிட்டிய தட்டி
பறிச்சுக்கிறாங்க.. ஆனால் அதை அவங்களும் பயன்படுத்திக்கிறதில்லை.. “ என்றான் விவேக்
லேசான கோபத்துடன்...
“ஹ்ம்ம்ம் நீங்க
சொல்றது கரெக்ட்தான் விவா சார்.. எனக்கே அது கில்ட்டியாதான் இருக்கும்..
ஆனால் நான்
கம்யூட்டர் சயின்ஸ் அண்ணா யுனிவர்சிட்டியில படிக்கணும்னு என் மாமா சொன்னான்.. அதனால் சேர்ந்துட்டேன்.. “
என்றாள் குரல் இறங்கி..
“ஆனால் இப்ப
அதுல இன்ட்ரெஸ்ட் இல்லை.. படிப்பு முடிஞ்சதும் எங்க கிராமத்துக்கே போய்டலாம்னு
இருக்கேன்.. “ என்றாள் மீண்டும் அதே வலியுடன்...
அதை கண்ட விவேக்
யோசனையானவன்
“ஏன் சிஸ்டர்..
உங்க ஹஸ்பென்ட் கூட போகலையா? “ என்றான் இடுங்கிய கண்களுடன்..
அதற்குள் விழித்து
கொண்டவள்
“ஹ்ம்ம்ம் மாமா
இன்னும் ஒரு வருஷம் போனதும் என்னை வந்து கூட்டிகிட்டு போய்டுவான் சார்..
அதுவரைக்கும் எங்க ஊர்லயே இருக்கலாம்னு.. “ என்று தயக்கத்துடன் இழுத்தாள் மெதுவாக
அவள் அத்தைக்கு கேட்காதவாறு..
அப்பொழுது
கண்ணம்மா தமயந்திக்கு சிற்றுண்டி எடுத்து வந்தார்...
அதனால் கொஞ்சம்
வாடி இருந்த முகத்தையும் உடனே மாற்றி கொண்டு கலகலப்பாக பேச ஆரம்பித்தாள் தமயந்தி..
விவேக் க்கிற்கு
ஏதோ சரியில்லை போல தோன்றியது.. அவள் ஏதோ மறைக்கிறாள் என்று தோன்றியது..
அவள் கணவனை
பற்றி தெரிந்து கொள்ள சொல்லி, அவன் உள்மனம் கட்டளையிட அவள் கணவனை பற்றி மேலும்
விசாரிக்க, ஏனோ அதை கேட்க ரிஷிக்குத்தான் தவிப்பாக இருந்தது..
ஒவ்வொரு முறையும்
தமயந்தி என் மாமா என்று உரிமையோடு அழைப்பதும்... அவள் கணவனை பற்றி சொல்லும்பொழுதெல்லாம் அவள்
கண்ணில் வந்து போன ஒரு பளிச்...சந்தோஷ ஒளி அவனுக்கு வேதனையை தந்தது..
ஏற்கனவே அவள்
திருமணமானவள் என்ற உண்மையில் நொறுங்கி போனவனுக்கு, அவள் அவளுடைய கணவனை பற்றி பெருமையாக கூற அதை
அவனால் தாங்கி கொள்ள முடியவில்லை..
இதயத்தில்
கத்தியை வைத்து திருகுவதை போல வலிக்க, அதற்கு மேல் தாங்க
முடியாமல் தன் கை கடிகாரத்தை திருப்பி பார்த்தவன், நேரம் ஆவதாக விவேக்கிற்கு கண்ணால் ஜாடை
காட்டியவன்
“ஒகே தயா...
உன்னை பார்த்ததில் ரொம்ப சந்தோஷம்... உனக்கு ஏதாவது ஹெல்ப் வேணும்னா என்னை
காண்டாக்ட் பண்ணு... வேலைக்கு போவதாக இருந்தாலும் என் கம்பெனிக்கே வரலாம்... “
என்று எழுந்து நின்று பாக்கெட்டில் கையை விட்டு கொண்டான் ரிஷி...
அதை கேட்டு
வியந்தவள்
“வாவ்.. சூப்பர்
ரிஷி சார்... என் க்ளாஸ்மேட்ஸ் உங்க கம்பெனில சேருவதற்கு எவ்வளவு ஹார்ட்வொர்க்
பண்றாங்க தெரியுமா? ஆனால் நீங்க எனக்கு நான் இன்டர்வ்யூ
அட்டென்ட் பண்ணாமலயே வேலை தர்றேன்றிங்க..
நான் ரொம்ப
கொடுத்து வச்சவ...இப்படி ஒரு பெரிய ஆள் எனக்கு ப்ரெண்ட் ஆ கிடைச்சதுக்கு... ரொம்ப
தேங்க்ஸ் சார்... “ என்று அவன் கையை பற்றி குலுக்கி கன்னம் குழிய சிரித்தாள்..
அவள் கை தொட்ட
அந்த நொடி ரிஷிக்குள் ஒரு பிரளயமே நிகழ்ந்தது..
அவளின்
மென்மையான கை... அவனின் இறுகியை கையை பற்றி இருக்க,
தன் வாழ்நாள் முழுவதும் அவள் கையை பிடித்து கொண்டே இருக்கவேண்டும் போல பரவசமாக இருந்தது
அவனுக்கு...!
ஆனால் அதே நேரம், அவன் பார்வை சுவற்றில் மாட்டி
இருந்த, அந்த
புகைப்படத்திற்கு செல்ல, அதில் நளனின் சிரித்த முகத்தை
பார்த்ததும் உடனே உள்ளுக்குள் இருந்த பரவசம் காற்று போன பலூனாய் அடங்கி விட்டது..
அவளை பார்த்து
மெல்ல புன்னகைத்தான்.. விவேக் ம் எழுந்து விட,
பின் இருவரும் அவர்களிடம் விடை பெற்று கிளம்பி சென்றனர்...
காரை அடைந்ததும்
ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தவனோ ஸ்டியரிங் மீது தலை வைத்து கவிழ்ந்து கொண்டு, உள்ளுக்குள் குலுங்கினான்
ரிஷி..
அவன் அருகில்
அமர்ந்த விவேக் க்கும் அவன் நிலைமை புரிந்தது..
என்ன சொல்லி ஆறுதல்
சொல்வது என்று தெரியாமல் சற்று நேரம் அமைதியாக இருந்தவன் மெல்ல ரிஷியின் கையை
அழுத்தி கொடுத்தவன்
“ரொம்ப சாரி பாஸ்..
இப்படி ஆகும்னு யோசிக்கவே இல்லை.. உங்களுக்கு மேடம் மேரேஜ் ஆனவங்கனு முன்னரே
தெரியாதா? “ என்றான் கவலையுடன்..
அதற்குள் தன்னை
சமாளித்து கொண்டவன் தலை நிமிர, அவனை கண்ட விவேக் அதிர்ந்து போனான் ..
கண்கள் இரண்டும்
செக்க செவேல் என்று கோவைப்பழம் போல சிவந்து இருந்தது..
தன்னுடைய
ஏமாற்றம், ஆற்றாமை,
வலி, வேதனை
எல்லாம் அடக்கி கொள்ள முயன்றதால் அவை எல்லாம் இதயத்தில் இருந்து கண்ணுக்கு இடம் பெயர்ந்ததை போல அத்தனை வலி வேதனை அவன்
கண்களில்...
அடுத்த நொடி
எதுவும் யோசிக்காமல் காரை ஸ்டார்ட்
பண்ணியவன் என்றும் இல்லாத வேகத்தில் புயலென பறந்தான்..
முன்னால்
அமர்ந்து இருந்த விவேக் சாலையை பார்க்க முடியாமல் கண்களை மூடி கொண்டான்...
சற்று நேரம்
கழித்து கார் நிற்க,
“அப்பாடா...
எப்படியோ.. இந்த ஜென்மத்து மீதி நாட்களையும் கழிக்க மற்றொரு வாய்ப்பு கிடைத்து
விட்டது..
இந்த நெட்டை
ஓட்டற ஸ்பீட் ஐ பார்த்தால், நேரா மேல சொர்க்கலோகத்துலதான் போய் நிறுத்துவான்
னு நினைச்சேன்..
யார் செய்த புண்ணியமோ? கார் எதன்மீதும் மோதி
இருக்கவில்லை.. அதற்கே பெரிய கின்னஸ் அவார்ட் கொடுக்க வேண்டும் இந்த நெட்டைக்கு..
“ என்று எண்ணி கொண்டே கண்களை திறக்க, கார் நின்ற இடத்தை கண்டதும்
தூக்கி வாரி போட்டது விவேக்கிற்கு..
அது ஒரு உயர்தர
மக்கள் வந்து போகும் பார்..
ரிஷிக்கு குடிபழக்கம்
இல்லை என்று தெரியும்..
அப்படி இருக்க இங்க
ஏன் வந்தான் என்று சந்தேகமாக பார்க்க, அவனை யோசிக்க விடாமல்
கீழறங்கியவன் கார் சாவியை வாலட் பார்க்கிங் பணியாளரிடம் தூக்கி போட்டுவிட்டு
விவேக் ஐ கை பிடித்து அந்த பார் உள்ளே இழுத்து சென்றான்..
அங்கு ப்ரைவேட் பகுதியை
தேர்ந்தெடுத்து அமர்ந்தவன்... அங்கு தயாராக வைத்திருந்த உயர்தர சரக்கை எடுத்து
ராவாக தொண்டையில் சரித்தான்..
விவெக்
அதிர்ச்சியோடு நடப்பதை பார்த்து கொண்டிருந்தான்...அவனால் ரிஷியை தடுக்க
முடியவில்லை..
நடப்பது
நடக்கட்டும் என்று விவேக் வேடிக்கை பார்த்து கொண்டிருக்க மற்றொரு கோப்பையில் ஊற்றி
விவேக் ஐயும் குடிக்க சொல்ல, விவேக் அதை கையில் வாங்கி கொண்டு குடிப்பதை போல ஆக்சன் பண்ணி
கொண்டிருந்தான்..
தன் வலி வேதனை
ஓரளவுக்கு குறையும் வரை குடித்த ரிஷி விவேக் ஐ பார்த்து
“டேய் விவா....
நீ யாரையாவது லவ் பண்ணி இருக்கியா? “ என்றான் உளறலுடன்..
அதை கேட்டதும்
விவேக் மனம் தானாக ரோஜாவிடம் சென்றது..
அவளின் சிரித்த முகம்
கண் முன்னே வர அதில் திடுக்கிட்டவன்
அடுத்த நொடி தன் தலையை தட்டி கொண்டு
இல்லை என்று
தலையாட்டினான்...
“குட்... வெரி
குட்... வெரி வெரி குட்... அந்த தப்பை மட்டும் பண்ணிடாத... வாழ்க்கையில் நான் ஒரு
சக்சஸ்புல் பிசினஸ் மேன்.. பட் நான் பண்ணின ஒரே ஒரு தப்பு முன்ன பின்ன தெரியாதவளை
பார்த்ததும் காதலித்து தொலைத்ததுதான்...
இந்த வலி
இருக்கே... இது மரண வலி விவா.. அப்படியே ஹார்ட்ல கத்தியை விட்டு திருகுவதை போல
வலி... தயவு செய்து நீ அந்த தப்பை பண்ணிடாத... “ என்று இன்னும் உளறினான்....
“ஹ்ம்ம்ம்ம்
அப்படி சொல்லுங்க நெட்ட பாஸ்... இந்த விவா
இருக்கானே கொஞ்ச நாளா சரியில்லை... கிட்டதட்ட அவனும் உன்னை மாதிரியேதான்... ம்ஹூம்
நீயும் அவனும் ஒரே மாதிரிதான்.. இரண்டும் ஒன்னுதானோ??
நீ என்னடான்னா
ஏற்கனவே கல்யாணம் ஆன புள்ளைய லவ் பண்ற... இவரு ஏற்கனவே கமிட் ஆய்ட்ட புள்ள பக்கமா
சாய்ஞ்சுகிட்டு இருக்கார்... நல்லா ஆணி அடிச்ச மாதிரி நச்சுனு எடுத்து சொல்லு
இவனுக்கு..
இதெல்லாம்
வேலைக்கு ஆகாது.. அந்த ரோஜா புள்ள பக்கம் மனச தொலைக்க வேண்டாம்னு...
அப்புறம்
கடைசியில இந்த விவாவும் இந்த மாதிரி ஒரு பாட்டில் சரக்கை ராவா அடிச்சுட்டு, லவ் பண்ணாதிங்கனு
அடுத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ற மாதிரி ஆகிடும்...
வருமுன்
காப்போம் மாதிரி இந்த காதல் நோய் இந்த விவாவை தாக்கறதுக்கு முன்னாடியே இவன்
முழிச்சுக்கற மாதிரி நல்லா தெளிவா கொஞ்சம்
எடுத்து சொல்லுங்க பாஸ்... “ என்று நக்கலாக சிரித்தது விவா மனஸ்..
விவேக் கடுப்புடன்
அதை முறைத்தவன்
“பாஸ்....
போதும்.. ஏற்கனவே ரொம்ப குடிச்சிட்டிங்க.. இதுக்கு மேல போனா ஓவரா ஆய்டும்... “ என்று
ரிஷியை தடுக்க முயன்றான்..
“ப்ச்....
போகட்டும் மேன்.. ஓவரா போகட்டும்.. அப்படியாவது அவளை மறக்க முடியுதானு
பார்க்கறேன்... கண்ணை மூடினா அவ தான் நிக்கறா... அவ சிரிப்புதான் வந்து நிக்குது
விவா... வாட் டு டூ?
அவள் என்னவள்
இல்லை என்று என்னால் நினைத்து கூட பார்க்க
முடியவில்லை.. எப்படி இனி லைப் முழுவதும் அவள் இல்லாமல் இருக்க போகிறேன்... “
என்று இன்னும் ஏதேதோ சொல்லி அரற்றினான்...
“பாஸ்.... இவங்க
பாதியில் வந்தவங்கதான... அவங்களுக்காக உங்களை இப்படி வதைச்சுக்கலாமா? உங்களை நம்பி எத்தனையோ குடும்பங்கள் இருக்கின்றன.. அவங்களை பாருங்க
பாஸ்..
இந்த பொண்ணு
இல்லை என்றால் என்ன?
இதை விட வேற ஒரு சூப்பரான பொண்ணு கிடைப்பாங்க பாஸ்.. உங்க அழகுக்கும்
அறிவுக்கும் வசதிக்கும் ரதி மாதிரி பொண்ணுங்க வந்து க்யூல நிப்பாங்க பாஸ்....
இவங்களை விட்டு தள்ளுங்க... “ என்று சமாதானம் படுத்த முயன்றான்...
“டேய்... ஆயிரம்
, லட்சம் இல்ல கோடி பொண்ணுங்க வந்தாலும் அவளுங்க
எல்லாம் என் ரோஜா பொண்ணாக முடியாது டா.. என் மான்குட்டி ஆக முடியாது மேன்...
அவ மட்டும்தான்..
அவளால மட்டும்தான் என் உள்ளே இருந்த காதலை தட்டி எழுப்ப முடிந்தது... அவளின் அந்த
வாசம் மட்டுமே என்னை சிலிர்க்க வைத்தது..
அவள் குரம்
மட்டுமே என் உயிர் வரை சென்று எனக்கு
உயிர்ப்பூட்டியது.. அவளுக்கு பதில் யாரும் வர முடியாது... நோ வே.... அவள்
மட்டும்தான் என் வாழ்வில்..
அவள்
மட்டும்தான் என் மனதில்... அவள் மட்டும்தான் என் பொண்டாட்டி... “ என்று இன்னும் குடி போதையிலும், காதல் போதையிலும் உளற விவேக்
ஓ அவன் சொன்னதை கேட்டு திடுக்கிட்டான்..
“பாஸ்.. நீங்க
சொல்றது எல்லாம் கரெக்ட் தான்.. ஆனால் இப்ப அவங்களுக்கு கல்யாணம் ஆய்டுச்சே...
அவங்க வேற ஒருத்தனுக்கு சொந்தம்.. அப்படி இருக்க,
நீங்க எப்படி………..? ப்ளீஸ் பாஸ்.... அவங்களை
மறந்துடுங்க.... “ என்றான் கவலையுடன்......
“நோ..................
அது மட்டும் என்னால முடியாது விவா.....நான் இப்பவும் அவளை காதலிக்கிறேன்... என்
மனதுக்குள் அவளை காதலிக்கிறேன்..
இப்பவும்
எப்பவும் அவளை நான் காதலித்துக் கொண்டுதான்
இருப்பேன்..
அவள் அந்த
நளனுக்கே சொந்தமாக இருக்கட்டும்.. எனக்கு
என் ரோஜா பொண்ணு...
என் பொண்டாட்டியா என் மனசுக்குள்ளயே இருப்பா... எனக்கும் அவளுக்கும் ஏற்கனவே
கல்யாணம் ஆகிடுச்சு....
ஷி இஸ் மை
வைப்.. ஷி இஸ் மை லவ்.. ஷி இஸ் மை லைப்.... “ என்று கண்ணை மூடி அனுபவித்து சொல்ல, அதை கண்டு தலையில் அடித்து
கொண்டான் விவேக்...
“அட கணேசா..
இதுதான் காதல் பைத்தியம் என்பதா ? காதல் இப்படி எல்லாம் ஒருத்தனை பிதற்ற
வைக்குமா? ஒரு பொண்ணுக்காக ஒரு மல்ட்டி மில்லினரையே
சாய்த்து விட்டதே இந்த காதல்..
வாழ்க்கையையே தொலைத்து
விட்டதை போல இப்படி அரற்றுகிறானே இந்த நெட்டை..
அப்படி என்றால்
இந்த காதல் எனக்கு வேண்டாம்.. வேண்டவே வேண்டாம்.. அது பக்கம் கூட தலை வைத்து
படுக்க மாட்டேன்..
எனக்குனு ஒரு
கனிமொழி... தேன்மொழி...மலர்விழி எங்கயாச்சும் பொறந்திருப்பா... அவளை கல்யாணம் பண்ணிகிட்டு
அப்புறம் காதலிச்சுக்கலாம்... “ என்று உள்ளுக்குள் புலம்பினான் விவேக்..
“இத இத இதத்தான்
எதிர்பார்த்தேன் விவா... எங்கடா அந்த ரோஜா புள்ள பின்னாடி நீயும் சுத்திட்டு அந்த புள்ள
ஒரு நாள் அந்த சது பையன கல்யாணம் பண்ணிகிட்டு வந்து நிக்க, அத பார்த்து உன் ஹார்ட் ப்ரேக் ஆகி இப்படி புலம்பிடுவியோனு பயந்தேன்...
இப்பதான் நீ
குட் பாய்.. ஐ லவ் யூ..” என்று அவன்
கன்னத்தில் முத்தமிட்டது மனஸ்....
இந்த முறை அதை
முறைக்காமல் அதுக்கு ஹை-பை கொடுத்து சிரித்தான் விவேக்...
ஆனால் விவா முடிவு செய்த கொள்கையை கடைசிவரை காப்பாற்றுவானா? அந்த கணேஷ் ஜி அவனை காப்பாற்ற விடுவானா? பார்க்கலாம்...!
Comments
Post a Comment