தேடும் கண் பார்வை தவிக்க-35

 


அத்தியாயம்-35

டுத்து ஒரு மணி நேரம் விவேக் ரிஷியின் புலம்பலை கேட்டு சகித்து கொண்டே ஏதேதோ சமாதானம் சொல்ல அதையெல்லாம் ரிஷி காதுலயே போட்டு கொள்ளாமல் தேய்ஞ்ச ரெக்கார்ட் மாதிரி திரும்ப திரும்ப ரோஜா பொண்ணை பத்தி பேச, விவேக் வேற வழி இல்லாமல் பல்லை கடித்து அதை எல்லாம் பொறுத்து கொண்டிருந்தான்..

கடைசியில் அந்த டேபிலின் மீது மட்டையாகி விட, அதை கண்ட விவேக் திடுக்கிட்டான்..

அங்கு வேலை செய்யும் பணியாளரை அழைத்து நிலைமையை சொல்லி தயக்கத்துடன் உதவி கேட்க அவனோ

“இதெல்லாம் சகஜம் சார்.. இந்த மாதிரி மட்டை ஆகிற ஆளுங்களை கொண்டு சேர்க்க என்றே தனியாக ஆட்கள் இருக்கிறார்கள்..இதுக்கு தனியா பே பண்ணிடுங்க.. “

என்று சொல்லி திடகாத்திரமான ஒரு நபரை அழைத்து ஏதோ சொல்லி விட்டு செல்ல, அவனும் ரிஷியை ஒரு கையால் தூக்கி நிமிர்த்தி தன் மீது சாய்த்து கொண்டு பார்க்கிங் வரை அழைத்து வந்து காரில் பின் இருக்கையில் படுக்கை வைத்தான்..

விவேக் அவனுக்கு நன்றி சொல்லி அவனுக்கான பணத்தை கொடுத்தவன் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து அந்த காரை உயிர்பித்து ரிஷியின் வீட்டை நோக்கி ஓட்டினான்..

ரிஷியின் வீடு முன்பே தெரிந்து இருந்ததால் வீட்டை அடைந்ததும் காரை உள்ளே விட்டு நிறுத்தி விட்டு செக்யூரிட்டியை துணைக்கு அழைத்து ரிஷியை தூக்கி வந்து அவன் அறையில் சேர்த்து விட்டு சென்றான்...

டுத்த நாள் கண் விழித்த ரிஷிக்கு எல்லாம் கனவு போல இருந்தது... முதலில் நான் எங்க இருக்கிறேன் என்று யோசிக்க நேற்று தமயந்தியை பார்த்தது நினைவு வந்தது...

அதை தொடர்ந்து நடந்ததும் நினைவு வந்தது.. நேற்று அடித்த சரக்கு இன்னும் வேலை செய்ய, அவனுடைய உதவியாளன் விஷ்ணு வை அழைத்து  தன்னுடைய அனைத்து ப்ரோக்ராமையும் கேன்சல் பண்ண சொல்லி விட்டு படுக்கையிலயே சுருண்டு படுத்து கொண்டான்..

கண்ணை மூடினால்  அவள் முகம் திரும்ப திரும்ப வர, அதிலும் எதேச்சையாக கை பட்டு  எதிரில் இருந்த தொலைகாட்சியில் தமயந்தியின் நடனம் வர, அது இன்னும் அவன் உயிர் வரை வலித்தது...

அந்த வலியை தாங்க முடியாமல் உடனே விருந்தினர்களுக்கு கொடுப்பதற்காக வாங்கி வைத்திருந்த மது பாட்டிலை நாடி சென்றான்...

அப்பொழுது அவன் அன்னையின் புகைப்படம் கண்ணில பட,

“ஸாரி மாம்... ஐம் ரியலி ஸாரி. இன்னைக்கு ஒரு நாள் உங்களுக்கு ப்ராமிஸ் பண்ணியதை வாபஸ் வாங்கிக்கறேன்... என்னால முடியல.. உன் மருமகளை மறக்க என்னால முடியல..

நீதான எனக்கு அவளை காண்பித்தாய்.. நீயே இப்ப அவளை என்னிடம் இருந்து பறித்து கொண்டாயே.. பேட் மாம்.. “ என்று புலம்பியவாறு விருந்தினர் அறைக்கு சென்று அங்கு இருந்த மது பாட்டிலை எடுத்து கொண்டு வந்து தன் அறையில் அமர்ந்து மீண்டும் குடிக்க ஆரம்பித்தான்...

அவளின் நினைவு வரும்பொழுதெல்லாம் அந்த பாட்டிலை எடுத்து தொண்டையில் சரித்து கொண்டான்.. அதன் போதையில் அவளின் முகம் கொஞ்சம் மறைந்தது..

அவன் வலி வேதனையும் கொஞ்சம் மட்டுபட்டதை போல இருந்தது..

மது எப்பொழுதும் ஒருவனை வலி வேதனையில் இருந்து அப்பொழுது மட்டுமே விடுவிக்கும்.. அந்த போதை தெளிந்தால் வலி வேதனை கவலை பிரச்சனை எல்லாமே அப்படியேதான் மீண்டும் ஒருத்தனை வருத்தும்..

அதில் இருந்து வெளிவருவது எப்படி என்று யோசிக்காமல் அந்த வலியில் இருந்து தப்பித்து கொள்ள முயல்வது மடத்தனம் என்ற உண்மையை அந்த தொழிலதிபன்,  மல்ட்டி மில்லினர் உணர மறந்திருந்தான்....

நேற்று முழுவதும் அந்த மதுவின் துணையால் தன் அறையிலயே சுருண்டு விட்டவன் இன்று  காலையில் கண் விழிக்க, மீண்டும் அவள் நினைவுகள் எல்லாம் ஓடி வந்து அவனை ஆக்ரமித்தது..  

வழக்கமாக செல்லும் ஜாக்கிங் கூட பிடிக்காமல், படுக்கையில் இருந்து எழ பிடிக்காமல், சோம்பலுடன் கண்ணை இறுக்க மூடி கொண்டு படுக்கையில் படுத்திருக்க, அவனை அப்படி இருக்க விடாமல் அவன் அலைபேசி ஒலித்தது..

ஏனோ அதை எடுக்க கூட அவனுக்கு மனம் வரவில்லை.. அதுவோ திரும்ப திரும்ப ஒலிக்க, கடைசியில் அதை எடுத்து காதில் வைத்தான்..

விவேக் தான் அழைத்திருந்தான்...

“குட்மார்னிங் பாஸ்... “ என்று உற்சாகத்துடன் ஆரம்பித்தான்...

“ஹ்ம்ம்ம்ம் பேட் மார்னிங் விவா.... .” என்று வேதனையுடன் உரைத்தவன் ஏதோ ஞாபகம் வர,

“சாரி.. விவா.. உனக்கு இன்னும் செட்டில்மென்ட் முடிக்கல இல்லை... என் அசிஸ்டன்ட் விஷ்ணு கிட்ட சொல்றேன்.. நீ என் ஆபிஸ்க்கு போய்ட்டு உன்னுடையை செட்டில்மென்ட் ஐ முடிச்சுக்கோ,… எனிவே தேங்க்யூ பார் ஆல் யுவர் ஹெல்ப்.. பை.... “ என்று அலைபேசியை அணைக்க போக,

“பாஸ்.... பாஸ்...... பாஸ்....... அதுக்குள்ள போனை வச்சிடாதிங்க.. நானும் ஒரு நூறு முறை உங்களுக்கு போன் அடிச்சிட்டேன்.. இப்பதான் உங்களை புடிக்க முடிந்தது.... “ என்றான் விவேக் அவசரமாக....

“ஹ்ம்ம் சொல்லு மேன்...செட்டில்மென்ட் இல்லை என்றால் வேற என்ன வேணும்? ஓ.. நான் சொன்ன டிடெக்டிவ் ஆபிஸ்..? அதுக்கான ஏற்பாட்டையும் பண்ணிடலாம்.. கிவ் மி சம் டைம்... “ என்றான் யோசனையுடன்

“ஐயோ பாஸ்.. அதெல்லாம் இருக்கட்டும்.... என்னுடைய கேஸ் இன்னும் முடியல பாஸ்... எல்லாம் சுபமா முடிஞ்ச பிறகு என் செட்டில்மென்ட் பத்தி பேசலாம்... “ என்று அவசரமாக பதில் அளித்தான் விவேக்..

“வாட்? என்ன மேன் உளரற? உன் கேஸ் இன்னும் முடியலையா? அதான் நீ என் ரோஜா பொண்ணை கண்டுபுடிச்சிட்டியே.. அப்புறம் இன்னும் என்ன இருக்கு இந்த கேஸ்ல? “ என்றான் குழப்பமாக...

“ஹ்ம்ம்ம்ம் இன்னும் ஏதோ  இருக்கு பாஸ்.. எனக்கு இன்னும் சமாதானம் ஆகலை...அவங்க தமயந்தி மேடம் நம்ம கிட்ட ஏதோ மறைக்கிற மாதிரி இருக்கு பாஸ்.. “ என்றான் யோசனையுடன்..

“என்ன மறைக்கணும்? ஏன் மறைக்கணும்? எதுக்கு மறைக்கணும்? “ என்று கேள்விகளை அடுக்கினான் ரிஷி..

“ஹ்ம்ம்ம்ம் அதெல்லாம் தெரியல பாஸ். ஆனால் என்னுடைய இன்ட்யூசன் சொல்லுது.. சம்திங் நாட் வெல்... “

“அதெல்லாம் ஒன்னும் இல்ல விவா.. அவ ஹேப்பியா இருக்கா.. அதுதான் அப்படி சிரிச்சு சிரிச்சு பேசினாளே !... அதுவும் அவ மாமனை பத்தி சொல்றப்ப அவ கண்ணுல ஒரு ஒளி தெரிஞ்சுது பார்...அதுதான் என்னை இன்னும் வதைக்கிது விவா... இந்த மேட்டரை இதோட விட்டுடு....

அவள் என்னவள் இல்லை.. இதை இனிமேலும் நோண்ட வேண்டாம்.. நோண்டி என் மனதை ரணபடுத்த விரும்பவில்லை... ப்ளீஸ் லீவ் இட்.. “ என்றான் வேதனையுடன்..

“பாஸ்.. பாஸ்.. பாஸ்.. அப்படி டக்குனு கேஸ் ஐ மூடிட முடியாது பாஸ்.. என்னுடைய முதல் கேஸ் நீங்க. உங்களை இப்படி வலி வேதனையோடு விட்டுட முடியாது பாஸ்...

அதோடு நான் ஏன் சொல்றேனா எனக்கு இரண்டு பாய்ன்ட் மனசில் உறுத்திகிட்டு இருக்கு...

ஒன்னு..தமயந்தி மேடம் உடைய ஹஸ்பன்ட் லண்டனில் இருந்தால் அதை ஏன் ப்ளைட்ல உங்க கிட்ட சொல்லலை... அவங்க ஹஸ்பன்ட் ஏன் அவங்களை கூட்டி கிட்டு போக ஏர்போர்ட் வரலை?

நீங்க அவங்ககிட்ட லண்டன்ல தெரிஞ்சவங்க யாராவது இருக்காங்களானு கேட்டதுக்கு எதுக்கு அவங்க இல்லைனு பதில் சொல்லனும்? “ என்றான் சந்தேகமாக

“இது என்ன ஸ்டுப்பிட் க்வஸ்டின் விவா..?  அவ தான் அவ மாமனுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காக அவரிடம் சொல்லாமல் சென்றாள் என்றாளே... சர்ப்ரைஸ் கொடுக்கறவங்க அவங்க கிட்ட எப்படி சொல்ல முடியும்? இடியட்.. “ என்று முறைத்தான் ரிஷி..

“ஹ்ம்ம் அவர் கிட்ட சொல்ல வேண்டாம் பாஸ்.. பட் உங்ககிட்ட சொல்லி இருக்கலாம் இல்ல..

அவங்க கதையை.. உடனே நீங்க அவங்களுக்கு தெரியாதவர் உங்ககிட்ட எப்படி அவங்க கதையை சொல்லுவாங்க னு சொல்லி அவங்க பக்கம் பேச வேண்டாம் பாஸ்.

அவங்களை பார்த்தால் கலகலனு பேசறவங்க போலத்தான் தெரியுது.. கண்டிப்பா இந்த மாதிரி சர்ப்ரைஸ் , இன்ட்ரெஸ்டிங்  விசயம் எல்லாம் மனசுக்குள்ள வச்சுக்க முடியாது பாஸ்..

கண்டிப்பா யார்கிட்டயாவது சொல்ல தோணும்.. உங்க கிட்ட கண்டிப்பா சொல்லி இருப்பாங்க.. அப்படி சொல்லலை என்றால் அது சர்ப்ரைஸ் இல்ல.. வேற என்னவோ  இருக்கு.. “ என்றான் தன் டிடெக்டிவ் மூளையை தட்டி விட்டு யோசித்து...

“சரி... நீ இப்ப அதை தோண்டி துருவி அவ எதுக்கு லண்டன் போனா னு கண்டுபிடித்து என்ன பண்ண போறியாம்? “ என்றான் நக்கலுடன் கூடவே வெற்று சிரிப்புடன்..

“என்ன பாஸ் இப்படி பட்டுனு சொல்லிட்டிங்க.. அவங்க நீங்க காதலிச்சவங்க பாஸ்..

நாம காதலித்த பொண்ணு நம்மை காதலிக்கலைனாலும்  நமக்கு கிடைக்கலைனாலும் அவங்கள அம்போனு விட்டுட கூடாதுனு எத்தனை தமிழ் படங்கள் ல சொல்லி இருக்காங்க..

அதுதான் காதலின் இலக்கணம் பாஸ்..

அதனால் உங்க காதலிக்கு ஏதாவது ப்ராப்ளம் இருக்குமானு பார்த்து அதை சரி பண்ணனும் பாஸ்..

இன்கேஸ் அவங்களுக்கு ஏதாவது பினான்சியலா ப்ராப்ளம் இருந்தா சரி பண்றது இப்படி..அதனால உங்க மனசுக்கு ஒரு அமைதி கிடைக்கலாம்..  “ என்று இழுத்தான் விவேக்..

அதை கேட்டு யோசனையான ரிஷி

“டேய் விவா.. அப்படி எதுவும் இருக்குமா? ஆனால் வெளில நல்லாதான்  சிரிச்சு பேசினாளே.. “

“ஹ்ம்ம்ம் பொண்ணுங்க மனசு உலகிலயே முதலாவது பெரிய கடலான அந்த பசிபிக் ஓசனை விட ஆழமானாதாம் பாஸ்..

அவங்க மனசுல இருக்கறத யாராலயும் கண்டுபிடிக்க முடியாதாம்.. அதில்லாம இன்பத்தை மற்றவங்க கிட்ட பகிர்ந்துக்கணும்.. துன்பத்தை மனசுக்குள்ளயே போட்டு வச்சுக்கணும் னு  சொல்லுவாங்க..

மேடம் அந்த மாதிரி டைப் ஆ இருக்கலாம்..

அப்புறம் நான் இவ்வளவு தூரம் உறுதியாக சொல்கிறேன் என்றால் அதற்கு  இன்னொரு காரணம் இருக்கிறது பாஸ்.. அது என்னவென்றால் ? “ என்று நிறுத்தியவன் தன் தொண்டையை செருமிக் கொண்டு மீண்டும் ஆரம்பித்தான்..

“அன்று சிஸ்டர் கூட நீங்க பேசிக் கொண்டிருந்த பொழுது கிச்சனில் இருந்த அந்த ஆண்டியை நான் கவனித்தேன் பாஸ்..

ஒவ்வொரு முறையும் தமயந்தி மேடம் அவங்களுடைய ஹஸ்பண்ட் பற்றி பேசும்போதெல்லாம் , அவங்க முகத்தில் சிரிப்பு இருந்தாலும் அந்த ஆன்ட்டியின் முகம் வேதனையில் சுருங்கியது..

சமையல் அறையில் இருந்தாலும் ஹாலில் இருந்தே அந்த ஆன்ட்டியின் முகத்தை நன்றாக பார்க்க முடிந்தது..

அவங்க முகத்தை உத்து பார்த்ததும் எனக்கு என்னவோ சம்திங் ராங் என்று தோன்றியது..

அதனாலேயே அந்த ஆன்ட்டியை இன்னும் நல்லா உத்து கவனித்துக் கொண்டிருந்தேன்.. நாம கிளம்பும் பொழுது அந்த ஆன்ட்டி எதையோ சொல்ல துடிச்சாங்க..  

ஆனால் அவங்க மருமகளை பார்த்ததும் சொல்ல தயங்கினார்கள்.. அவங்க கண்ணை பார்த்து மனதை தெரிந்து கொண்ட நான் வேண்டும் என்றே கிளம்பும்பொழுது  என் மொபைலை விட்டு விட்டு வந்துவிட்டேன்..

வெளியில் வந்ததும் நீங்கள் காருக்கு செல்ல, நான் என் மொபைலை   எடுப்பதற்காக திரும்ப அவங்க வீட்டிற்கு சென்ற பொழுது மீண்டும் அந்த ஆன்ட்டி என்னிடம் ஏதோ சொல்ல வந்தாங்க..

அதற்குள்  தமயந்தி மேடம் வந்துவிட  எதுவும் சொல்லாமல் அமைதி ஆயிட்டாங்க..

நான் உடனே என் மொபைலை எடுத்துக் கொண்டு என்னுடைய வாலட்டில் இருந்த விசிட்டிங் கார்டை எடுத்து அந்த ஆன்ட்டியிடம் கொடுத்து ஏதாவது உதவி வேண்டுமென்றால் என்னை கூப்பிட சொல்லி கொடுத்துவிட்டு வந்தேன்..  

எப்படியும்  அவங்க என்னை அழைப்பார்கள் என்று எதிர்பார்த்தேன்..  ஆனால் அப்படி நேற்று எந்த அழைப்பும் வரவில்லை.. ஆனால் இன்று காலையில் அவர்கள் அழைத்திருந்தார்கள்.. “  என்று நிறுத்தினான் விவேக்..

“வாட்? என்ன விவா சொல்ற? அவங்க எதுக்கு உன்னை அழைத்தார்கள்? “ என்றான் ஆச்சர்யத்துடன்..

"ம்ம்ம் தெரியலை பாஸ்.. ஆனால் என்னை அழைத்தவர்கள் என்னிடம் நேரில் பேச வேண்டும் என்று சொன்னார்கள்.. .அதற்காகத்தான் நாம் இரண்டு பேரும் அவங்களை போய் பார்த்துவிட்டு வரலாம் பாஸ்.” என்று இழுத்தான் விவேக்..

அதை கேட்டு சிறிது நேரம் யோசித்த ரிஷி

“இல்ல விவா....நீ போய் என்ன னு கேட்டுட்டு வா...என்னால இன்னொரு தரம் என் ரோஜா பொண்ணை பார்த்து மனசு துடிக்க முடியாது... “ என்றான் வேதனையுடன்..

“பாஸ்.. அவங்க பேசணும்னு சொன்னது உங்க கிட்ட.. உங்க நம்பர் அவங்ககிட்ட இல்லாததால் என்னை அழைத்து இருந்தார்கள்..

நானும் நீங்க பிசியா இருப்பீங்கனு சொல்லி நான் மட்டும் வருகிறேன் என்று தான் சொன்னேன்..

ஆனால் அவர்கள் உங்களிடம் தான் முக்கியமாக பேச வேண்டும் என்று உங்களை வரச் சொன்னார்கள்.. அதனால்தான் நான்   காலையிலிருந்து உங்களுக்கு கால் பண்ணி கிட்டிருந்தேன்..

நீங்க என் அழைப்பை ஏற்கவே இல்லை.. இந்த முறையும் எடுக்கவில்லை என்றால் நேரிலயே வரலாம் என்று இருந்தேன்.. பாஸ்.. நான் இப்ப கிளம்பி உங்க வீட்டுக்கு வர்றேன்.. நீங்க ரெடியா இருங்க..

இரண்டு பேரும் போய் அந்த ஆன்ட்டியை பார்த்துவிட்டு வந்திடலாம்.. ப்ளீஸ் பாஸ்.. எனக்காக கொஞ்ச நேரம் ஒதுக்குங்க.. “ என்று முடித்தான் கெஞ்சலாக..

“ஏன்டா விவா.. இதை முதல்லயே சொல்றதில்லையா? இதை விட்டுட்டு வேற ஏதோ உன் கற்பனை கதையெல்லாம் சொல்லிகிட்டிருந்த?

சரி.. கம் பாஸ்ட்... ஐ வில் கெட் ரெடி சூன்.. “ என்றவன் போனை அணைத்து யோசனையுடன் குளியல் அறைக்குள் சென்றான் ரிஷி..

டுத்த அரை மணி நேரத்தில் விவேக் ரிஷி வீட்டிற்கு வந்துவிட்டான் ரிஷியும் தயாராகி  மாடியில் இருந்து இறங்கி வந்தான்..

அவனைக் கண்டதும் திடுக்கிட்டுப் போனாள் விவேக்..

இரண்டு நாட்களில் கண்கள் இடுங்கி முகம் களை இழந்து காணப்பட்டான் ரிஷி..

கம்பீரமாக வளம் வருபவன் தான் விரும்பிய பெண் கிடைக்கவில்லை என்றதும் இப்படி ஒடுங்கி போய்விட்டானே என்று வேதனையாக இருந்தது விவேக்கிற்கு..

“எல்லாம் இந்த காதல் படுத்தும் பாடு.. இப்படி பட்ட காதல் நமக்கு வேண்டவே வேண்டாம் கணேசா...” என்று மனதுக்குள் மீண்டும் உறுதி எடுத்து கொண்டவன் ஆனாலும் ரிஷியிடம் எதுவும் கேட்கவில்லை..

ரிஷி தன்  காரை ஸ்டார்ட் பண்ணி இருவரும் தமயந்தி வீட்டை நோக்கி சென்றனர்...

*******

வீட்டை அடைந்ததும்,  அழைப்பு மணியை அழுத்த,  கண்ணம்மா வேகமாக வந்து கதவை திறந்தார்..

வெளியில் நின்றவர்களை கண்டதும் அடையாளம் கண்டு கொண்டவர் ரிஷியை பார்த்ததும் அதிர்ந்து போனார்...

உள்ள வாங்க என்று அழைத்தவர்

“என்னாச்சு தம்பி.. இரண்டே நாளில் இப்படி மாறிட்டிங்க.. உடம்பு எதுவும் சுகமில்லையா ? என்று அக்கறையாக விசாரித்தார்..

“அதெல்லாம் ஒன்னும் இல்ல ஆன்ட்டி.. ஐம் பைன்.. கொஞ்சம் ஆபிஸ் வேலை அதிகம்.. “ என்று சொல்லி சமாளித்தான்..

வரவேற்பறையில் இருந்த சோபாவில் சென்று அமர்ந்தவன் கண்கள் எதேச்சையாக அந்த புகைப்படத்துக்கு செல்ல,  கொஞ்சம் மட்டு பட்டிருந்த அவன் வலியும் வேதனையும் மீண்டும் தலை தூக்கியது..

உடனே பார்வையை மாற்றி கொண்டு தமயந்தியை தேட, அப்பொழுது சமையலறையில் இருந்து சிற்றுண்டியையும் காபியையும் கொண்டு வந்து அவர்களுக்கு கொடுத்த கண்ணம்மா ரிஷியின் பார்வையை கண்டு கொண்டவர்

“தமா காலேஜ் போய்ருக்கா தம்பி.. அவ வர்றதுக்குள்ள உங்ககிட்ட சில விசயம் பேசணும்னுதான் உங்களை வரசொன்னேன்.. தொந்தரவு கொடுத்திருந்தால் மன்னிச்சுக்கோங்க.. “ என்றார் தயக்கமாக.

“அச்சோ.. அப்படி எல்லாம் எதுவும் இல்ல ஆன்ட்டி. சொல்லுங்க.. என்ன பேசணும்னு சொன்னிங்க.. எதுனாலும் தயங்காம சொல்லுங்க.. எந்த உதவினாலும் நான் செய்யறேன்.. “ என்றான் ரிஷி...

கண்ணம்மாவும் தயக்கத்துடன் இருவரையும் மாறி மாறி பார்த்தவர் எப்படி கேட்பது என்று தயங்கி வேற வழியில்லை கேட்டுத்தான் ஆகணும் என்று தன்னைத் தானே தேற்றி கொண்டு மெல்ல பேச ஆரம்பித்தார்...

“வந்து...... ரிஷி தம்பி... நான் ஒன்னு உங்ககிட்ட கேட்பேன்.. நீங்க மறைக்காம உண்மையை சொல்லோனும்.. “ என்று பீடிகையுடன் ஆரம்பித்தார்...

“ஸ்யூர்.. கண்டிப்பா. சொல்லுங்க ஆன்ட்டி.. “ என்றான் தன் வேதனையை மறைத்து கொண்டு கொஞ்சம் ஆர்வமாக..

“வந்து..... நீங்க என் மருமவ.. அதாவது தமா பொண்ணை விரும்பறீங்களா?  “ என்றார் மெல்ல வார்த்தைகளை தேடி பிடித்து கோர்த்து தயக்கத்துடன்..

அதை கேட்ட ஆண்கள் இருவருக்கும் தூக்கி வாரி போட்டது... அதிர்ச்சியுடன் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள,

“தயங்காம சொல்லுங்க தம்பி.. நான் எதுவும் தப்பா நினைச்சுகிட மாட்டேன்... நீங்க உண்மையை மறைக்காம சொன்னால்தன் நான் சில உண்மைகளை  சொல்ல முடியும் தம்பி.. அதனால மறைக்காம சொல்லுங்க.. “ என்று  ஊக்கபடுத்தினார்..

அதற்குள் தன்னை சமாளித்து கொண்ட ரிஷி கண்ணம்மாவை ஒரு வித குற்ற உணர்வுடன் பார்த்தவன்

“ஸாரி ஆன்ட்டி.. நான் சொல்றதை எதுவும் தப்பா எடுத்துக்காதிங்க.. நீங்க சொன்னது உண்மைதான்.. ஆனால் எனக்கு தயா கல்யாணம் ஆனவங்க னு தெரியாது..

அவங்களை முதன்முதலில் ப்ளைட்ல பார்த்தப்ப எனக்குள் பெரும் தடுமாற்றம்.. என்னை அறியாமலேயே நான் அவங்களை விரும்ப ஆரம்பித்து விட்டேன்..

பார்க்க சின்ன பொண்ணா துடுக்கு தனமா இருந்தாங்க.. சத்தியமா எனக்கு அவங்களுக்கு கல்யாணம் ஆகி இருக்கும் என்று யோசித்திருக்க வில்லை நீங்க எதுவும் தப்பா எடுத்துக்காதீங்க.. “

என்று தயக்கத்துடன் வார்த்தைகளை தேடிப்பிடித்து பதில் சொன்னான் தரையை  பார்த்தவாறு..

“அப்புறம் நான் விரும்புவது அவர்களுக்கு தெரியாது...  நீங்க தயா வ எதுவும்  தப்பா எடுத்துக்காதீங்க.. “  என்று அவசரமாக சேர்த்து கூறினான்..

“ஹ்ம்ம்ம் தப்பா எடுத்துக்க இதுல என்ன தம்பி இருக்கு.. உங்களுக்கு உண்மையிலேயே என் மருமவளை புடிச்சிருந்தா எனக்கு ரொம்பவும் சந்தோசம் தான்.. “  என்றார் வெறித்த பார்வையுடன்...

அதைக் கேட்டு அதிர்ந்த இருவரும்

“என்ன ஆன்ட்டி சொல்றீங்க? என்று ஒரே நேரத்தில் அதிர்ச்சியுடன்  கேட்டனர் இருவரும்..

“ப்ச்.. ஒன்னுமில்லப்பா.. " என்றார் அதற்குள் தன்னை சமாளித்துக்கொண்டு..

விவேக் அவரை உற்று பார்த்தவன்

“உங்களுக்கு எப்படி ஆன்ட்டி தெரிந்தது? என்றான் யோசனையுடன்

"ஹ்ம்ம்ம் நான் நாலு எழுத்து எழுத படிக்க தெரியாத பட்டிகாடா இருந்தாலும்,  மனுஷங்க மனசை படிக்க கொஞ்சம் தெரியும் தம்பி...

என்ற மருமவ லண்டன் போய்ட்டு வந்த பொறவு ரிஷி தம்பிய பத்திதான் பேசிகிட்டிருதா... அவர் ஏரோப்ளான்ல அவளுக்கு உதவி செஞ்சத சொல்லி சொல்லி சிரிப்பா...

என்ற மவனுக்கு பொறவு அவ அதிகமா அடுத்தவங்கள பத்தி பேசுனதுனா அது ரிஷி தம்பிய பத்திதான்...

எனக்கு அப்பயே கொஞ்சம் மனசுக்குள்ள ஒரு மாதிரி பட்டது..

அப்புறம் நீங்க அவளை தேடி வந்ததும் என்ற மவன் கல்யாண போட்டோவை பார்த்து அதிர்ச்சியாகி நின்றதும் என் கண்ணுல இருந்து தப்பலை தம்பி..

அதுவும் என்ற மருமவளை பார்த்ததும் ரிஷி தம்பி கண்ணுல வந்த ஒளியும் உடனே அவளுக்கு கல்யாணம் ஆனது தெரிந்ததும் வந்த வேதனையும் நான் கண்டுகிட்டேன்..

அவர்  மனசுல என் மருமவ இருக்கப் போய்தானே பொள்ளாச்சி வரைக்கும் அவள தேடிகிட்டு போய்ருக்கீங்க... " என்று  முடிக்கும் முன்னே பலமாக அதிர்ந்தவர்கள்

“ஆன்ட்டி... அது வந்து தப்பா எல்லாம் எதுவும் இல்லை.. நான் முன்பு சொன்ன மாதிரி அவங்களுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆனது எனக்கு தெரியாது..

லண்டன் ல இருந்து திரும்பி வந்ததும் எப்படியாவது மீண்டும் ஒரு முறை பார்த்து விட வேண்டும் என்றுதான் அவளை...  அவங்களை தேடினேன்..

மற்றபடி எந்த ஒரு தப்பான எண்ணமும் இல்லை.. “  என்று அவசரமாக சமாதானம் சொன்னான் ரிஷி...  

“தெரியுது தம்பி... நான் உங்களை எதுவும் தப்பு சொல்லல.. நேற்று அந்த ஸ்கூல் பெரிய வாத்தியார் எனக்கு போன் பண்ணியிருந்தார்.. அவர் எங்களுக்கு தூரத்து சொந்தம்.. தமா பொண்ணு மேல அவருக்கு பாசம் அதிகம்..

அவர் போன் பண்ணினப்பதான் விவரம் சொன்னார்.. இங்க மெட்ராசில் இருந்து ஒருத்தர் தமா பொண்ணை பற்றி விசாரிச்சு வந்ததாகவும் அவர் அட்ரஸ் கொடுத்து அனுப்பிச்சதாகவும் சொன்னார்...

அவர் சொன்னதும் அது நீங்கதான் னு கண்டுகிட்டேன்..

எல்லாம் கூட்டி கழிச்சு பார்த்தப்பதான் ரிஷி தம்பி தமா வை விரும்புவது தெரிந்தது... " என்றார் பெருமூச்சுடன்..

"ஐயொ.. ஆன்ட்டி.. நீங்க தப்பா எடுத்துக்காதிங்க.. நான்... " என்று ரிஷி மீண்டும் ஏதோ சொல்ல வர,

“இருங்க தம்பி.. நான் பேசி முடிச்சிடறேன்.. “  என்றவர் தொடர்ந்தார்

“உங்களுக்கு தமாவை புடிச்சிருக்கறது கண்டு எனக்கு சந்தோஷம் தான் தம்பி.. " என்று நிறுத்தினார்..பின் ஒரு ஆழ மூச்சை இழுத்துவிட்டு கொண்டு

“நானும் சுத்தி வளைக்காமல் நேரடியாகவே கேட்கிறேன் தம்பி.. என்ற மருமவளை கல்யாணம் பண்ணிக்கிறீங்களா? என்றார் அடிபட்ட பாவத்துடன்.. 

அதைக் கேட்டதும் ஆண்கள் இருவரும் இன்னும் பலமாக அதிர்ந்து போக, இருவரும் பேச்சிழந்து அதிர்ந்து அமர்ந்து இருந்தனர்...

அவர்கள் முகத்தில் அதிர்ச்சியை கண்ட கண்ணம்மா  

மன்னிச்சுக்கங்க தம்பி.. திடீர்னு இப்படி கேட்டது தப்புதான்.. நான் கிராமத்துக்காரி.. எனக்கு வெளில எப்படி பேசி பழகறதுனு தெரியாது. மனசுல பட்டத கேட்டுபுட்டேன்..

தமா எனக்கு மருமவனாலும் முதல்ல எனக்கு அவ மவ தான்.. அவளுக்கு ஒரு நல்லது நடக்குதுனா அதுக்கு முதல்ல சந்தோஷபடறது நான்தான்.. " என்றார் அதே விரக்தி புன்னகையுடன்...

அவர் சொல்றதையெல்லாம் புரியாமல் ரிஷி முழித்து கொண்டிருக்க, ஓரளவுக்கு தன்னை சமாளித்துக் கொண்ட விவேக்

“ஆன்ட்டி... நீங்க சொன்னது எதுவும் எங்களுக்கு புரியல?  தமயந்தி சிஸ்டருக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு இல்ல.. அப்புறம் ஏன் எப்படி கேட்கிறீங்க ? என்றான் சந்தேகமாக

“என்ற மவன் தமா பொண்ணு மேல உசுரையே வச்சிருந்தான் தம்பி..ஆசை ஆசையா... என் மாமியார் கடைசி ஆசையை நிறைவேத்தணும் னு அவசர அவசரமா கண்ணாலமும் கட்டினான்..

எந்த அவசரத்துல கண்ணாலம் கட்டினானோ அதே அவசரத்திலயே போய் சேர்ந்துட்டான்.. “  என்றார் சொல்ல முடியாத வேதனையுடன்..

“என்ன ஆன்ட்டி சொல்றீங்க..?  உங்க பையன் லண்டன் தானே போயிருக்கார் அடுத்த வருஷம் வந்ததும் சிஸ்டரை  கூட்டிக்கிட்டு போய்ட போறார்.  அதுக்குள்ள ஏன் எவ்வளவு விரக்தியாக பேசறிங்க.. “  என்றான் விவேக் இன்னும் சந்தேகத்துடன்

“ஹ்ம்ம்...  அவன் லண்டன் போய் இருந்தால் தான் இந்த வருஷம் இல்லைனாலும்  அடுத்த வருஷம் வந்து என்ற மருமவளையும் கூட்டிக்கிட்டு போய்டுவானு நான் நிம்மதியா இருப்பேனே..

ஆனால் அவன் திரும்பி வர முடியாத இடத்துக்கு இல்ல போயிட்டான்..  அவன் எங்க வந்து அவள கூட்டிக்கிட்டு போகப் போறான்..?   என்றார் முகத்தில் வேதனையுடன்..

அதைக்கேட்டு ஓரளவுக்கு புரிந்தாலும் என்னும் தெளிவு படுத்திக் கொள்ள வேண்டி

“ஆன்ட்டி நீங்க என்ன சொல்றீங்க?  உங்க பையன் நளன் நல்லா தானே இருக்கார்.. “ என்று விவேக் தயக்கத்துடன் இழுக்க

“ஹ்ம்ம் அவனுக்கு என்ன?  அந்த நள மகாராஜா மாதிரி...  ராஜா மாதிரி சிரிச்சுகிட்டே நிம்மதியாகத்தான் இருக்கான்.. எங்க நிம்மதியைத்தான் பறிச்சுகிட்டான்..” என்றார் இன்னும் வேதனையுடன்..

"அச்சோ.. கவலை படாதிங்க ஆன்ட்டி.. எந்த பிரச்சனைனாலும் சீக்கிரம் தீர்ந்து விடும்.. சீக்கிரம் நளன் வந்துவிடுவார்... " என்றான் விவேக் ஆறுதலாக..

"ப்ச்.. இல்ல தம்பி.. எங்களை எல்லாம் நட்டாத்துல தவிக்க விட்டுபோட்டு அவன் திரும்பி வரமுடியாத இடத்துக்கு போய் சேர்ந்துட்டான்.."

என்றவர் முழுவதுமாக சொல்லி முடிக்கும் முன்னரே அதுவரை அடக்கி வைத்திருந்த துக்கம் தொண்டையை அடைக்க.  அதற்கு மேல் சமாளிக்க முடியாமல் புடவை முந்தானையை எடுத்து வாயில் வைத்து கொண்டவர்

"என்ற மவன்... அந்த மகராசன்..  என்ற குல வாரிசு...  நளன் இப்ப உசுரோட இல்ல தம்பி......" என்று சொல்லி கேவலுடன் குலுங்கி அழ ஆரம்பித்தார் கண்ணம்மா..

அதை கேட்ட ரிஷியும் விவேக் ம் அந்த வானமே இடிந்து தலையில்   விழுந்ததை போல அதிர்ந்தவர்கள்  

“வாட்?? " என்று கத்தியவாறு இருக்கையில் இருந்து,  வேகமாக எழுந்தனர் அதிர்ந்த முகத்துடன்......


Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!